தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 ஆக்கம்: சிவத்திரு.க.சி. குலரத்தினம் தொகுப்பு: சிவத்திரு.வ. கங்காளன் என்னை என்னறிவித்த எங்கள் குருநாதன் - இந்தப் பாடல் இலங்கை நாடு முழுவதும் சைவ மக்கள் மத்தியில் ஒலித்த காலம் இருந்தது. இந்தப் பாடலை அருளிச் செய்தவர் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள். அந்த யோகர் சுவாமிகளுடைய குருநாதன் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பர் ஒரு சீவன் முத்தர். சீவன் முத்தர் என்றால் உடலில் உயிர் தங்கி இருக்கும் போதே முத்தி அடைந்தவர் என்பது கருத்து. சீவன் முத்தருடைய இலக்கணத்தை பின்வரும் பாடல் மூலம் பார்ப்போம். காம மாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனதிற்பற்றார் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் தாமரை இலைத் தண்ணீர்போல் சகத்தொடும் கூடிவாழ்வார் ஊமருமாவார் உள்ளத்துவகையாம் சீவன் முத்தர். இந்தப் பாடலில் உள்ள இலக்கணங்களோடு யாழ்ப் பாண மண்ணில் நடமாடியவர்தான் செல்லப்பா சுவாமிகள். ஆனால் மக்கள் அவருக்கு மக்கள் இட்ட பெயரோ விசர்ச் செல்லப்பா. மக்களின் தவக் குறைவை நோகாமல் இருக்க முடியவில்லை. இன்றைய மக்களும் தவ வாழ்வையும், அறம் சார்ந்த வாழ்வையும் வாழ முன்வரவேண்டும். அதுவே எம் துன்பங்களுக்கெல்லாம் முடிவைத் தரும் என்பது திண்ணம். இனி செல்லப்பா சுவாமிகளின் திருக்கதையை, அற்புதங்களை ஓரளவு அறியப் புகுவோம். நல்லூர்த் தேரடிக்குத் தென்புறத்தில் வயல் நிலங்கள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளன், நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்னும் பொன்னாரை மணந்து, வயலோரத்தில் சிறு வீடு அமைத்து வேளாண்மை செய்து வாழ்ந்துவந்தார். அவர்களுக்கு ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமாகப் பிள்ளைகள் நால்வர் பிறந்தனர். ஆண்களுள் ஒருவரின் பெயர் செல்லப்பா, பெண்களுள் ஒருத்தியின் பெயர் செல்லாச்சி. செல்லப்பா இளமையில் கந்தமடத்துச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்தி, வேலை பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி யாளராக வேலை பெற்று, வெகு திறமையாகக் கடமை யாற்றிய காலத்தில் அதிகாரிகளின் விருப்புக்குள்ளாகி களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் இரு வேலைகள் பார்த்து வந்தார்.ஆங்கிலேயர்கள் பாராட்டும் அளவு மதிப்புடன் வேலை பார்த்து வந்த செல்லப்பரின் போக்கு, எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்து வந்தது. செல்லப்பர் தனது வேளையில் கண்ணும் கருதுமாகவும், நேர்மையாகவும், திறமையாகவும், ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகையில் பார்த்து வந்த காலத்தில், அரச வேலையின் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது வாழ்ந்து வந்தார். ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனை களில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. நல்லூரானை "பிதாவே பிதாவே" என்று பிதற்றியும் வந்தார். உள்ளே ஊறிவந்த ஞானப் பெருக்கு வெளியே வழியத் தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், பேய் பிடித்தவர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், "ஓமோம்' என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப் பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார். அவர் தமக்கு அண்மையிற் சென்றோரைத் துரத்தத் தொடங்கிய காலத்திலேயே தமது வேலையை கணக்கில் எடுக்காது, கச்சேரித் தொடர்பையும் துண்டித்துக் கொட்டிலின் மூலையில் குந்தியிருக்கத் தொடங்கினார். முத்தியானந்தர் என்று சொல்லப்படும் கடையிற் சுவாமிகளே செல்லப்பா சுவாமிகளுடைய குரு என்று அறிவோம். செல்லப்பருடைய வாழ்க்கை இரவு பகலாக நல்லூர்த் தேரடியிலேயே நிகழ்ந்தது. இரவு பத்து மணியானதும் அதாவது ஊர் அடங்கிய பின்பு மெல்ல எழுந்து முருகன் சந்நிதிக்குச் செல்வார். தந்தையே, தந்தையே என்று முருகனிடம் பேசுவார். இப்பேச்சு அதிகாலை நான்குமணி வரை நிகழும் சுவாமி முத்தியா னந்தர் (கடையிற் சுவாமிகள்) தினமும் நல்லூர் முருகனுடைய வீதியால் ஓடிச் சென்று மறைவதை இவர் பார்த்துள்ளார், இவர் தன்னுடைய குருநாதராக இருக்க வேண்டுமென மனதில் தீர்மானித்தார். தான் அவரைப் பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு போகக் கூடாது என்று ஒரு வெள்ளி ரூபாவை தேடிப் பாதுகாத்து வந்தார். ஒருநாள் கடையிற் சுவாமிகள் வீதியால் ஓடி வாசலில் வரும்போது செல்லப்பர் கண்டுவிட்டார். சுவாமியை நோக்கி ஓடிச் சென்றார். கடையிற் சுவாமி ஓடி மறைந்து விட்டார். கவலையுடன் சென்று பார்த்தார். குரு வந்த இடத்தில் தான் சந்திப்பது சரியல்ல. குருவைத் தேடிச் சென்று தரிசிப்பது தான் முறை என்று மனத்தைத் தேற்றி கொண்டார். ஒருநாள் கடையிற் சுவாமிகளைத் தரிசிப்பதற்காகச் செல்லப்பர் புறப்பட்டார். செல்லப்பர் தூரத்தே வருவதைக் கடையிற் சுவாமிகள் பார்த்து விட்டார்கள். கடையிற் சுவாமிகள் பக்கத்திலிருந்த கடலைக்காரியிடம் ஒரு முழு ரூபாய் வாங்கி வெற்றிலையில் மடித்து வைத்துக் கொண்டார். செல்லப்பர் கடையிற் சாமியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கடையிற் சுவாமிகள் செல்லப்பரை எழுப்பி அவரது கையில் வெற்றிலை மடிப்பில் இருந்த முழு ரூபாவை வைத்தார். தனது கையிலிருந்த குடையை செல்லப்பருடைய தலையில் வைத்தார். செல்லப்பருக்கு வானம் பூமி எல்லாம் சுழல்வது போல இருந்தது. கடையிற் சுவாமிகள் செல்லப்பரைப் பார்த்து ஓட்டா என்று கூறி தென்னாடு னார். செல்லப்பர் வந்து நல்லூர் தேரடியில் பதினைந்து நாட்கள் ஆடாமல் அசையாமல் இருந்தார். இப்பொழுது செல்லப்பர் செல்லப்பா சுவாமிகளாகவே ஆகிவிட்டார். செல்லப்பரைப் பொதுமக்கள் செல்லமாக விசர்ச் செல்லப்பர் என்றுதான் அழைத்து வந்தனர். அதற்குக் காரணம் அவர் தன்னை விசரன் போல் காட்டிக் கொண்டமை தான். குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்தக் கரணசுத்தி பெற்று, பசுகரணங்கள் பதி கரணங்களாக மலரப் பெற்றார். முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர், குருவருள் ஒளியினால் முச்சந்திக்கு வந்தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து வருகின்ற அனைவரும் வணங்கக் கூடியவராயிருந்தார். தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சத்தியுண்டு என்று அவரைச் சூழ்ந்து மொய்க்கத் தொடங்கினார்கள். அதேவேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப் பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள், விசரன் என்று கூறிக் கல்லெறியவுந் தொடங்கினர்.அதனால் உறவினர் அவரை விலங்கில் மாட்டி வைத்ததும் உண்டு. உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள், வெளியுலகத்தவருக்கு விசரனாகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியக் கோலத்தை மிகைப்படுத்தி வந்தார். தலைமுடியைப் பரட்டையாகத் தொங்கவிட்டு, நீராடுதலை வெகுவாகக் குறைத்து, தண்ணீர் படாத கந்தைத் துணிகளை அழுக்கோடு அலங்கோலமாக அணிந்து, கண்ட படி கையுயர்த்திச் சிரித்து, ஒட்டியுலர்ந்த உடம்பின் மெலிந்த ஈழத்துச் சித்தர்கள்: நல்லூர் செல்லப்பா சுவாமிகள் (தேரடிச் சித்தர் - விசர்ச் செல்லப்பர்) முகம் மலர, உதட்டை விட்டு வெளியே மிதந்து தோன்றிய பற்கள் புறந்தெரிய செல்லப்பா சுவாமிகள் காட்சியளித்தார். இவ்வாறாக உடன்பிறந்த சகோதரி செல்லாச்சி சகோதர பாசத்தால் ஈர்க்கப் பெற்று உரிய வேளைகளில் உணவுகளை கொண்டு சென்று, கூவியழைத்தால், "போ! போ! கொண்டு போ, நீ நஞ்சு போட்டுக் கொண்டு வந்தாய்" என்று தட்டிக் கலைத்துவிட்டு, எழுந்து எட்டி எட்டி நடந்து நெடுந்தூரம் சென்று, மீண்டும் வந்து குந்தியிருப்பார். தமக்கு விருப்ப முள்ளபோது ஏதாவது உண்டு, பெரும் பகுதியைக் காகம், கோழி, நாய் உண்ணுமாறு வைத்து வேடிக்கை பார்ப்பார். உயிரினங்களோடு உறவு கொண்டாடியும் வந்தார். பகல் முழுவதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள், இரவில் இரவுப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்றபின், மெதுவாக இருக்கை விட்டெழுந்து, கோபுரவாசற் பக்கம் சென்று, முருகனைத் தேடுவார். "பிதாவே! பிதாவே!!" என்று முருகனைக் கூவியழைத்து, அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறாமலும் உரையாடி வந்தார். அவரின் உள்ளத்தில் முத்துப்போன்ற சிந்தனை வாக்கியங்கள் உருண்டு திரண்டு வெளிவரக் காத்திருந்தன. பக்குவமுள்ள சீடன் ஒருவன் வருவான் அவன் காதில் இந்த மகா வாக்கியங்களை வார்த்துவிடலாம், அவன் மூலம் இவ்வாக்கியங்கள் சுருதியென எல்லோருக்கும் கேட்கும், எங்கும் கேட்கும் எனக், கருதிச் சீடன் வரவுக்குக் காத்திருந்தார். சுவாமிகளின் முகத்தில் ஒளிவட்டம் வீசுவதையும் அவரின் அழுக்கேறிய உடம்பில் கந்தையாடை அலங்கோல மாகக் கிடந்ததையும் கண்டு, மெய்யடியார் ஒருவர் தாம் புதிதாக வாங்கி வந்த வேட்டியையும் சால்வையையும் எடுத்துச் சென்று, சுவாமிகளைத் தொழுது, பணிந்து ஏற்றருள் செய்தல் வேண்டும் என்று இரந்தார். சுவாமிகள் அவர் மீது இரங்கி அவற்றை வாங்கிக் கிழித்து அமு குப் படுத்தி அலங்கோலமாக அணிந்து "சரி நீ போகலாம்" என்று விடைகொடுத்தனுப்பினார். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் இறையருளாலும் மனித சத்திக்கு அப்பாற்பட்ட சித்து விளையாட்டுக் காட்டுவதும் உண்டு. அத்தகைய சித்துக்கள் சுவாமியிடம் வந்ததும், அவர் வெளி வெளியாக, "செல்லப்பன் சாமி காட்டமாட்டான் விசரன் என்று பெயர் வாங்கிப் போவான்" என்று கூறியதும் உண்டு. எப்படிப்பட்ட சித்தர்களுக்கும் சில சமயம் அவர்களை அறியாமலே சித்துக்கள் தலை காட்டிப் போவதுமுண்டு. செல்லப்பா சுவாமிகளிடம் அன்பு கொண்டிருந்த குருக்கள் ஒருவர், திருநெல்வேலியிலிருந்து இறைவனுக்கு படைத்த அமுதினை பக்குவமாகக் கொண்டு வந்து 07 தெ நீட்டியபோது அவரின் பத்தியை மெச்சிய போதிலும், அதனை வாங்கியுண்ண விரும்பாமல் "கொண்டு போங்கள் உது எச்சிற்படுத்தப்பட்ட அமுது எனக்கு வேண்டாம்." என்று கூறினார். குருக்கள் ஏமாற்றமும் வியப்பும் அடைந்து வெட்கித் தலை குனிந்தவாறு வீடு சென்று, அமுது எச்சிற் படுத்தப் பட்டதா? என விசாரித்தபோது, அங்கே குழந்தை கள் அதை அசூசிப்படுத்தியதாக அறிந்து வியந்துபோனார். சுவாமிகள் நல்லூருக்கு மேற்கில் உள்ள வைமன் வீதி வழியாகப் போனபோது, எதிர்ப் பக்கமாக இளைஞன் ஒருவன் நன்றாக முறுகி வளர்ந்த காளை மாட்டுடன் மிடுக்காக வந்து கொண்டிருந்தான். காளையின் போக்கைக் கவனித்த சுவாமிகள் "குத்தவல்லவோ போகிறது மெத்தக் கவனம்" என்றார். இளைஞன் விசரன் பேச்சு என்று உதாசீனமாகப் போனபோது, காளை மிரண்டு திரும்பி எதிர்த்து அவனைத் தாக்கி வீழ்த்தியது. சுவாமிகளின் சகோதரியார் குடும்பத்தில் குழந்தை யொன்றுக்குக் கடும் சுகவீனமானபோது, அயலில் பெயர் பெற்றிருந்த மருத்துவரிடம் காட்டி, உயர்ந்த மருந்து எடுத்துப் பருக்க முயன்றபோது, குழந்தை மருந்துண்ண மறுத்து, ஓடிச் சென்று சுவாமிகளின் மடியில் வீழ்ந்து கிடந்தது. சுவாமிகள் குழந்தையைத் தேற்றி, தமது கொட்டிலின் முற்றத்தில் வளர்ந்த தோடையில் கனி பறித்துக் கரைத்துப் பருக்கியதும், குழந்தையின் கடுமை யான நோய் உடனடியாகத் தணிந்து, அடுத்த நாள் பூரணமாகக் குணமாயிற்று. செல்லப்பா சுவாமிகள் உண்பதற்கு உணவை எடுத்துக் கொண்டு நடந்தபோது, நாய்க்குட்டியொன்று அவரின் காலடியை நக்கியவாறு பின்தொடர்ந்தது. அதன் வினைப் பலனை உடனடியாக உணர்ந்த சுவாமிகள், தாம் கொண்டு சென்ற உணவில் ஒருபகுதியை எடுத்து நாய்க்குட்டிக்கு குனிந்து வைத்துவிட்டு, "நீ உண்டபின் உன் வழியே போ' என்று விடைகொடுத்தார். நாய்க்குட்டி உண்ட பின் நடந்து போன வழியில் வண்டி நெரித்து உடனடியாக இறந்து போயிற்று. செல்லையாப்பிள்ளை என்பவர் ஐந்து பெண் பிள்ளை களுக்குத் தந்தை. தனக்கு இறுதிக்கடன் செய்வதற்கு ஆண் பிள்ளை இல்லையே என்ற கவலையால் வருந்தி, செல்லப்பா சுவாமிகளிடம் வந்து அவரை இறுகக் கட்டிப்பிடித்து சுவாமி! எனக்கு ஆண் குழந்தையொன்று வேண்டும். அருள் செய்த பின்னரே இந்தப் பிடியை விடுவேன்" என்று கூறினார். "செல்லையா உனக்கு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்கும். விடு விடு" என்று விடுவித்துக் கொண்டார். செல்லையருக்கு அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சுவாமிகள் ஒரு நாள் அவசரம் அவசரமாக உலை வைத்துக் காற்படி அரிசி கொண்டு சோறாக்கி, ஒரு கறியும் காச்சியபின், தென்னங் கிடுகுகளை மணல் தரையின் மேல் பாய் போல் பரப்பியபின், ஐந்து வாழையிலைகளில் சமைத்த உணவை படைத்து தயார் செய்த வேளையில் நான்கு பேர்கள் அவரைத் தேடி வந்தார்கள். "உங்களை எதிர்பார்த்து தான் உணவு படைத்தேன்" என்று கூறி ஐவருமாகக் காற்படியரிசிச் சோற்றை வயிறு நிரம்ப உண்டு மகிழ்ந்தார்கள். காற்படி அரிசியில் ஐவர் வயிராற உண்டதும் சுவாமியின் அற்புதமே. நன்னியர் என்பார் சுவாமிகள் மீது கொண்ட பத்தி மிகுதியால் அவரை இறுகப் பிடித்து மரத்திற் கட்டி வைத்து நல்ல முறையில் நீராட்டினார். “எட எட நீ நல்லூ ரானுக்கு அபிடேகஞ் செய்தது போதும் போதும் அவிழ்த்து விடு" என்று மன்றாடி விடுவித்துக் கொண்டு ஓடினார். செல்லப்பன் சாமி காட்டமாட்டான் என்று அவர் வெளி வெளியாகக் கூறியதையும் பொருட்படுத்தாமல் அடியவர்கள் கூட்டம் அவரை மொய்த்துச் சூழத்தொடங்கி யது. நெடுந்தூரத்திலிருந்தும் அடியவர்கள் வரத் தலைப் பட்டனர். கொழும்புத்துறை, திருஞானசம்பந்தர், இராமலிங்கர் துரையப்பர், பொன்னையர், கந்தமடத்து ஆறுமுகம், இளைய தம்பி, தாமோதரம்பிள்ளை, கம்பந்தறை முருகேசு முதலானோர் சுவாமிகளை மொய்க்கத் தொடங்கினர். தமது அன்பர்கள் எனவுணர்ந்து அவர்களோடு அன்பாகப் பேசிய அவர், சீடருள் சிலர் உலகத்தைத் துறந்து சந்நியாசி யாகப் போவதாகக் கூறினால், ” உனக்கும் அதற்கும் வெகு தூரம் ஓடிப்போய் கலியாணம் முடி” என்று துரத்துவார். சிலர் சுவாமி என்னைக் கலியாணம் முடிக்குமாறு உறவினர் நெருக்குகிறார்கள் என்று அனுமதி கேட்டாற்போல விண்ணப்பித்தால், “ஏன் என்னைக்கேட்டோ நீ கலியாணம் முடிக்க வேண்டும். ஓடு ஓடு” என்று துரத்துவார். முல்லைத்தீவில் வாழ்ந்த பெருங்கமக்காரன் ஒருவர் செல்லப்பா சுவாமிகளின் சிறந்த சீடர்களில் ஒருவராக ஒழுகியவர். அவர் சுவாமிகளிடம் சோறு பெற்றுண்பதைப் பெரும் பேறாகக் கருதி வருபவர். ஒருமுறை அவர் சுவாமிகளுக்கு அருகிலமர்ந்து உண்ணும் பாக்கியம் பெற்ற போது, இடையிடை சுவாமிகள் உண்ட இலையை உற்று நோக்கினார். சுவாமிகள் உண்டபின் இலையை வழித்து உச்சிட்டதை உண்ணவேண்டும் என்று உள்ளத்தெழுந்த உணர்ச்சிவயப்பட்டிருந்தார். அவரின் கருத்தைக் குறிப்பாலுணர்ந்த சுவாமிகள், தாம் உண்ட பின் இலையை மடித்து எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி, செம்மணிவரை நடந்து அங்கே ஒரு பாழ்ங் கிணற்றில் இலையை எறிந்தார். சுவாமிகள் கண்ணிற் படாமல் அவரைப் பின்தொடர்ந்த சீடர், கிணற்றில் குதித்து இலையை வழித்துத் தாம் நக்கிய பின், கைகால் கழுவி, விபூதி பூசி, ஒரு பூவரச மரத்தின்கீழ் தியானஞ் செய்ய அமர்ந்தார். அவர் இருந்தவாறே அங்கே சமாதியான செய்தி ஊரறிந்த உண்மை. அவரின் சமாதி இன்றும் செம்மணியருகில் வயல் வெளியில் மிகச் சிறிதாகக் கட்டப்பெற்றுள்ளது. தொடரும்...
கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 ஆக்கம் : சிவத்திரு.க.சி . குலரத்தினம் தொகுப்பு : சிவத்திரு.வ . கங்காளன் என்னை என்னறிவித்த எங்கள் குருநாதன் - இந்தப் பாடல் இலங்கை நாடு முழுவதும் சைவ மக்கள் மத்தியில் ஒலித்த காலம் இருந்தது . இந்தப் பாடலை அருளிச் செய்தவர் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் . அந்த யோகர் சுவாமிகளுடைய குருநாதன் செல்லப்பா சுவாமிகள் . செல்லப்பர் ஒரு சீவன் முத்தர் . சீவன் முத்தர் என்றால் உடலில் உயிர் தங்கி இருக்கும் போதே முத்தி அடைந்தவர் என்பது கருத்து . சீவன் முத்தருடைய இலக்கணத்தை பின்வரும் பாடல் மூலம் பார்ப்போம் . காம மாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனதிற்பற்றார் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் தாமரை இலைத் தண்ணீர்போல் சகத்தொடும் கூடிவாழ்வார் ஊமருமாவார் உள்ளத்துவகையாம் சீவன் முத்தர் . இந்தப் பாடலில் உள்ள இலக்கணங்களோடு யாழ்ப் பாண மண்ணில் நடமாடியவர்தான் செல்லப்பா சுவாமிகள் . ஆனால் மக்கள் அவருக்கு மக்கள் இட்ட பெயரோ விசர்ச் செல்லப்பா . மக்களின் தவக் குறைவை நோகாமல் இருக்க முடியவில்லை . இன்றைய மக்களும் தவ வாழ்வையும் அறம் சார்ந்த வாழ்வையும் வாழ முன்வரவேண்டும் . அதுவே எம் துன்பங்களுக்கெல்லாம் முடிவைத் தரும் என்பது திண்ணம் . இனி செல்லப்பா சுவாமிகளின் திருக்கதையை அற்புதங்களை ஓரளவு அறியப் புகுவோம் . நல்லூர்த் தேரடிக்குத் தென்புறத்தில் வயல் நிலங்கள் இருந்தன . பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளன் நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்னும் பொன்னாரை மணந்து வயலோரத்தில் சிறு வீடு அமைத்து வேளாண்மை செய்து வாழ்ந்துவந்தார் . அவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாகப் பிள்ளைகள் நால்வர் பிறந்தனர் . ஆண்களுள் ஒருவரின் பெயர் செல்லப்பா பெண்களுள் ஒருத்தியின் பெயர் செல்லாச்சி . செல்லப்பா இளமையில் கந்தமடத்துச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார் . ஓரளவு கல்வி கற்றபின் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்தி வேலை பார்க்க வேண்டியவரானார் . யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி யாளராக வேலை பெற்று வெகு திறமையாகக் கடமை யாற்றிய காலத்தில் அதிகாரிகளின் விருப்புக்குள்ளாகி களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் இரு வேலைகள் பார்த்து வந்தார்.ஆங்கிலேயர்கள் பாராட்டும் அளவு மதிப்புடன் வேலை பார்த்து வந்த செல்லப்பரின் போக்கு எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்து வந்தது . செல்லப்பர் தனது வேளையில் கண்ணும் கருதுமாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகையில் பார்த்து வந்த காலத்தில் அரச வேலையின் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது வாழ்ந்து வந்தார் . ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனை களில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின . நல்லூரானை பிதாவே பிதாவே என்று பிதற்றியும் வந்தார் . உள்ளே ஊறிவந்த ஞானப் பெருக்கு வெளியே வழியத் தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும் பேய் பிடித்தவர் போலவும் குழந்தை போலவும் இருந்தது . தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல் ஓமோம் ' என்று தலையசைத்தல் வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப் பேசி வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார் . அவர் தமக்கு அண்மையிற் சென்றோரைத் துரத்தத் தொடங்கிய காலத்திலேயே தமது வேலையை கணக்கில் எடுக்காது கச்சேரித் தொடர்பையும் துண்டித்துக் கொட்டிலின் மூலையில் குந்தியிருக்கத் தொடங்கினார் . முத்தியானந்தர் என்று சொல்லப்படும் கடையிற் சுவாமிகளே செல்லப்பா சுவாமிகளுடைய குரு என்று அறிவோம் . செல்லப்பருடைய வாழ்க்கை இரவு பகலாக நல்லூர்த் தேரடியிலேயே நிகழ்ந்தது . இரவு பத்து மணியானதும் அதாவது ஊர் அடங்கிய பின்பு மெல்ல எழுந்து முருகன் சந்நிதிக்குச் செல்வார் . தந்தையே தந்தையே என்று முருகனிடம் பேசுவார் . இப்பேச்சு அதிகாலை நான்குமணி வரை நிகழும் சுவாமி முத்தியா னந்தர் ( கடையிற் சுவாமிகள் ) தினமும் நல்லூர் முருகனுடைய வீதியால் ஓடிச் சென்று மறைவதை இவர் பார்த்துள்ளார் இவர் தன்னுடைய குருநாதராக இருக்க வேண்டுமென மனதில் தீர்மானித்தார் . தான் அவரைப் பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு போகக் கூடாது என்று ஒரு வெள்ளி ரூபாவை தேடிப் பாதுகாத்து வந்தார் . ஒருநாள் கடையிற் சுவாமிகள் வீதியால் ஓடி வாசலில் வரும்போது செல்லப்பர் கண்டுவிட்டார் . சுவாமியை நோக்கி ஓடிச் சென்றார் . கடையிற் சுவாமி ஓடி மறைந்து விட்டார் . கவலையுடன் சென்று பார்த்தார் . குரு வந்த இடத்தில் தான் சந்திப்பது சரியல்ல . குருவைத் தேடிச் சென்று தரிசிப்பது தான் முறை என்று மனத்தைத் தேற்றி கொண்டார் . ஒருநாள் கடையிற் சுவாமிகளைத் தரிசிப்பதற்காகச் செல்லப்பர் புறப்பட்டார் . செல்லப்பர் தூரத்தே வருவதைக் கடையிற் சுவாமிகள் பார்த்து விட்டார்கள் . கடையிற் சுவாமிகள் பக்கத்திலிருந்த கடலைக்காரியிடம் ஒரு முழு ரூபாய் வாங்கி வெற்றிலையில் மடித்து வைத்துக் கொண்டார் . செல்லப்பர் கடையிற் சாமியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் . கடையிற் சுவாமிகள் செல்லப்பரை எழுப்பி அவரது கையில் வெற்றிலை மடிப்பில் இருந்த முழு ரூபாவை வைத்தார் . தனது கையிலிருந்த குடையை செல்லப்பருடைய தலையில் வைத்தார் . செல்லப்பருக்கு வானம் பூமி எல்லாம் சுழல்வது போல இருந்தது . கடையிற் சுவாமிகள் செல்லப்பரைப் பார்த்து ஓட்டா என்று கூறி தென்னாடு னார் . செல்லப்பர் வந்து நல்லூர் தேரடியில் பதினைந்து நாட்கள் ஆடாமல் அசையாமல் இருந்தார் . இப்பொழுது செல்லப்பர் செல்லப்பா சுவாமிகளாகவே ஆகிவிட்டார் . செல்லப்பரைப் பொதுமக்கள் செல்லமாக விசர்ச் செல்லப்பர் என்றுதான் அழைத்து வந்தனர் . அதற்குக் காரணம் அவர் தன்னை விசரன் போல் காட்டிக் கொண்டமை தான் . குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்தக் கரணசுத்தி பெற்று பசுகரணங்கள் பதி கரணங்களாக மலரப் பெற்றார் . முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர் குருவருள் ஒளியினால் முச்சந்திக்கு வந்தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து வருகின்ற அனைவரும் வணங்கக் கூடியவராயிருந்தார் . தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சத்தியுண்டு என்று அவரைச் சூழ்ந்து மொய்க்கத் தொடங்கினார்கள் . அதேவேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப் பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள் விசரன் என்று கூறிக் கல்லெறியவுந் தொடங்கினர்.அதனால் உறவினர் அவரை விலங்கில் மாட்டி வைத்ததும் உண்டு . உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள் வெளியுலகத்தவருக்கு விசரனாகவும் ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார் . அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியக் கோலத்தை மிகைப்படுத்தி வந்தார் . தலைமுடியைப் பரட்டையாகத் தொங்கவிட்டு நீராடுதலை வெகுவாகக் குறைத்து தண்ணீர் படாத கந்தைத் துணிகளை அழுக்கோடு அலங்கோலமாக அணிந்து கண்ட படி கையுயர்த்திச் சிரித்து ஒட்டியுலர்ந்த உடம்பின் மெலிந்த ஈழத்துச் சித்தர்கள் : நல்லூர் செல்லப்பா சுவாமிகள் ( தேரடிச் சித்தர் - விசர்ச் செல்லப்பர் ) முகம் மலர உதட்டை விட்டு வெளியே மிதந்து தோன்றிய பற்கள் புறந்தெரிய செல்லப்பா சுவாமிகள் காட்சியளித்தார் . இவ்வாறாக உடன்பிறந்த சகோதரி செல்லாச்சி சகோதர பாசத்தால் ஈர்க்கப் பெற்று உரிய வேளைகளில் உணவுகளை கொண்டு சென்று கூவியழைத்தால் போ ! போ ! கொண்டு போ நீ நஞ்சு போட்டுக் கொண்டு வந்தாய் என்று தட்டிக் கலைத்துவிட்டு எழுந்து எட்டி எட்டி நடந்து நெடுந்தூரம் சென்று மீண்டும் வந்து குந்தியிருப்பார் . தமக்கு விருப்ப முள்ளபோது ஏதாவது உண்டு பெரும் பகுதியைக் காகம் கோழி நாய் உண்ணுமாறு வைத்து வேடிக்கை பார்ப்பார் . உயிரினங்களோடு உறவு கொண்டாடியும் வந்தார் . பகல் முழுவதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள் இரவில் இரவுப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்றபின் மெதுவாக இருக்கை விட்டெழுந்து கோபுரவாசற் பக்கம் சென்று முருகனைத் தேடுவார் . பிதாவே ! பிதாவே !! என்று முருகனைக் கூவியழைத்து அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறாமலும் உரையாடி வந்தார் . அவரின் உள்ளத்தில் முத்துப்போன்ற சிந்தனை வாக்கியங்கள் உருண்டு திரண்டு வெளிவரக் காத்திருந்தன . பக்குவமுள்ள சீடன் ஒருவன் வருவான் அவன் காதில் இந்த மகா வாக்கியங்களை வார்த்துவிடலாம் அவன் மூலம் இவ்வாக்கியங்கள் சுருதியென எல்லோருக்கும் கேட்கும் எங்கும் கேட்கும் எனக் கருதிச் சீடன் வரவுக்குக் காத்திருந்தார் . சுவாமிகளின் முகத்தில் ஒளிவட்டம் வீசுவதையும் அவரின் அழுக்கேறிய உடம்பில் கந்தையாடை அலங்கோல மாகக் கிடந்ததையும் கண்டு மெய்யடியார் ஒருவர் தாம் புதிதாக வாங்கி வந்த வேட்டியையும் சால்வையையும் எடுத்துச் சென்று சுவாமிகளைத் தொழுது பணிந்து ஏற்றருள் செய்தல் வேண்டும் என்று இரந்தார் . சுவாமிகள் அவர் மீது இரங்கி அவற்றை வாங்கிக் கிழித்து அமு குப் படுத்தி அலங்கோலமாக அணிந்து சரி நீ போகலாம் என்று விடைகொடுத்தனுப்பினார் . சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள் . அவர்கள் இறையருளாலும் மனித சத்திக்கு அப்பாற்பட்ட சித்து விளையாட்டுக் காட்டுவதும் உண்டு . அத்தகைய சித்துக்கள் சுவாமியிடம் வந்ததும் அவர் வெளி வெளியாக செல்லப்பன் சாமி காட்டமாட்டான் விசரன் என்று பெயர் வாங்கிப் போவான் என்று கூறியதும் உண்டு . எப்படிப்பட்ட சித்தர்களுக்கும் சில சமயம் அவர்களை அறியாமலே சித்துக்கள் தலை காட்டிப் போவதுமுண்டு . செல்லப்பா சுவாமிகளிடம் அன்பு கொண்டிருந்த குருக்கள் ஒருவர் திருநெல்வேலியிலிருந்து இறைவனுக்கு படைத்த அமுதினை பக்குவமாகக் கொண்டு வந்து 07 தெ நீட்டியபோது அவரின் பத்தியை மெச்சிய போதிலும் அதனை வாங்கியுண்ண விரும்பாமல் கொண்டு போங்கள் உது எச்சிற்படுத்தப்பட்ட அமுது எனக்கு வேண்டாம் . என்று கூறினார் . குருக்கள் ஏமாற்றமும் வியப்பும் அடைந்து வெட்கித் தலை குனிந்தவாறு வீடு சென்று அமுது எச்சிற் படுத்தப் பட்டதா ? என விசாரித்தபோது அங்கே குழந்தை கள் அதை அசூசிப்படுத்தியதாக அறிந்து வியந்துபோனார் . சுவாமிகள் நல்லூருக்கு மேற்கில் உள்ள வைமன் வீதி வழியாகப் போனபோது எதிர்ப் பக்கமாக இளைஞன் ஒருவன் நன்றாக முறுகி வளர்ந்த காளை மாட்டுடன் மிடுக்காக வந்து கொண்டிருந்தான் . காளையின் போக்கைக் கவனித்த சுவாமிகள் குத்தவல்லவோ போகிறது மெத்தக் கவனம் என்றார் . இளைஞன் விசரன் பேச்சு என்று உதாசீனமாகப் போனபோது காளை மிரண்டு திரும்பி எதிர்த்து அவனைத் தாக்கி வீழ்த்தியது . சுவாமிகளின் சகோதரியார் குடும்பத்தில் குழந்தை யொன்றுக்குக் கடும் சுகவீனமானபோது அயலில் பெயர் பெற்றிருந்த மருத்துவரிடம் காட்டி உயர்ந்த மருந்து எடுத்துப் பருக்க முயன்றபோது குழந்தை மருந்துண்ண மறுத்து ஓடிச் சென்று சுவாமிகளின் மடியில் வீழ்ந்து கிடந்தது . சுவாமிகள் குழந்தையைத் தேற்றி தமது கொட்டிலின் முற்றத்தில் வளர்ந்த தோடையில் கனி பறித்துக் கரைத்துப் பருக்கியதும் குழந்தையின் கடுமை யான நோய் உடனடியாகத் தணிந்து அடுத்த நாள் பூரணமாகக் குணமாயிற்று . செல்லப்பா சுவாமிகள் உண்பதற்கு உணவை எடுத்துக் கொண்டு நடந்தபோது நாய்க்குட்டியொன்று அவரின் காலடியை நக்கியவாறு பின்தொடர்ந்தது . அதன் வினைப் பலனை உடனடியாக உணர்ந்த சுவாமிகள் தாம் கொண்டு சென்ற உணவில் ஒருபகுதியை எடுத்து நாய்க்குட்டிக்கு குனிந்து வைத்துவிட்டு நீ உண்டபின் உன் வழியே போ ' என்று விடைகொடுத்தார் . நாய்க்குட்டி உண்ட பின் நடந்து போன வழியில் வண்டி நெரித்து உடனடியாக இறந்து போயிற்று . செல்லையாப்பிள்ளை என்பவர் ஐந்து பெண் பிள்ளை களுக்குத் தந்தை . தனக்கு இறுதிக்கடன் செய்வதற்கு ஆண் பிள்ளை இல்லையே என்ற கவலையால் வருந்தி செல்லப்பா சுவாமிகளிடம் வந்து அவரை இறுகக் கட்டிப்பிடித்து சுவாமி ! எனக்கு ஆண் குழந்தையொன்று வேண்டும் . அருள் செய்த பின்னரே இந்தப் பிடியை விடுவேன் என்று கூறினார் . செல்லையா உனக்கு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்கும் . விடு விடு என்று விடுவித்துக் கொண்டார் . செல்லையருக்கு அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது . சுவாமிகள் ஒரு நாள் அவசரம் அவசரமாக உலை வைத்துக் காற்படி அரிசி கொண்டு சோறாக்கி ஒரு கறியும் காச்சியபின் தென்னங் கிடுகுகளை மணல் தரையின் மேல் பாய் போல் பரப்பியபின் ஐந்து வாழையிலைகளில் சமைத்த உணவை படைத்து தயார் செய்த வேளையில் நான்கு பேர்கள் அவரைத் தேடி வந்தார்கள் . உங்களை எதிர்பார்த்து தான் உணவு படைத்தேன் என்று கூறி ஐவருமாகக் காற்படியரிசிச் சோற்றை வயிறு நிரம்ப உண்டு மகிழ்ந்தார்கள் . காற்படி அரிசியில் ஐவர் வயிராற உண்டதும் சுவாமியின் அற்புதமே . நன்னியர் என்பார் சுவாமிகள் மீது கொண்ட பத்தி மிகுதியால் அவரை இறுகப் பிடித்து மரத்திற் கட்டி வைத்து நல்ல முறையில் நீராட்டினார் . எட எட நீ நல்லூ ரானுக்கு அபிடேகஞ் செய்தது போதும் போதும் அவிழ்த்து விடு என்று மன்றாடி விடுவித்துக் கொண்டு ஓடினார் . செல்லப்பன் சாமி காட்டமாட்டான் என்று அவர் வெளி வெளியாகக் கூறியதையும் பொருட்படுத்தாமல் அடியவர்கள் கூட்டம் அவரை மொய்த்துச் சூழத்தொடங்கி யது . நெடுந்தூரத்திலிருந்தும் அடியவர்கள் வரத் தலைப் பட்டனர் . கொழும்புத்துறை திருஞானசம்பந்தர் இராமலிங்கர் துரையப்பர் பொன்னையர் கந்தமடத்து ஆறுமுகம் இளைய தம்பி தாமோதரம்பிள்ளை கம்பந்தறை முருகேசு முதலானோர் சுவாமிகளை மொய்க்கத் தொடங்கினர் . தமது அன்பர்கள் எனவுணர்ந்து அவர்களோடு அன்பாகப் பேசிய அவர் சீடருள் சிலர் உலகத்தைத் துறந்து சந்நியாசி யாகப் போவதாகக் கூறினால் உனக்கும் அதற்கும் வெகு தூரம் ஓடிப்போய் கலியாணம் முடி என்று துரத்துவார் . சிலர் சுவாமி என்னைக் கலியாணம் முடிக்குமாறு உறவினர் நெருக்குகிறார்கள் என்று அனுமதி கேட்டாற்போல விண்ணப்பித்தால் ஏன் என்னைக்கேட்டோ நீ கலியாணம் முடிக்க வேண்டும் . ஓடு ஓடு என்று துரத்துவார் . முல்லைத்தீவில் வாழ்ந்த பெருங்கமக்காரன் ஒருவர் செல்லப்பா சுவாமிகளின் சிறந்த சீடர்களில் ஒருவராக ஒழுகியவர் . அவர் சுவாமிகளிடம் சோறு பெற்றுண்பதைப் பெரும் பேறாகக் கருதி வருபவர் . ஒருமுறை அவர் சுவாமிகளுக்கு அருகிலமர்ந்து உண்ணும் பாக்கியம் பெற்ற போது இடையிடை சுவாமிகள் உண்ட இலையை உற்று நோக்கினார் . சுவாமிகள் உண்டபின் இலையை வழித்து உச்சிட்டதை உண்ணவேண்டும் என்று உள்ளத்தெழுந்த உணர்ச்சிவயப்பட்டிருந்தார் . அவரின் கருத்தைக் குறிப்பாலுணர்ந்த சுவாமிகள் தாம் உண்ட பின் இலையை மடித்து எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி செம்மணிவரை நடந்து அங்கே ஒரு பாழ்ங் கிணற்றில் இலையை எறிந்தார் . சுவாமிகள் கண்ணிற் படாமல் அவரைப் பின்தொடர்ந்த சீடர் கிணற்றில் குதித்து இலையை வழித்துத் தாம் நக்கிய பின் கைகால் கழுவி விபூதி பூசி ஒரு பூவரச மரத்தின்கீழ் தியானஞ் செய்ய அமர்ந்தார் . அவர் இருந்தவாறே அங்கே சமாதியான செய்தி ஊரறிந்த உண்மை . அவரின் சமாதி இன்றும் செம்மணியருகில் வயல் வெளியில் மிகச் சிறிதாகக் கட்டப்பெற்றுள்ளது . தொடரும் ...