தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

தெ 08 உலகில் பல்வேறு வகையான பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் நிலவி வருகின்றன. அவற்றுள் தனிப்பெரும் சிறப்பாக திகழ்வது தமிழ்ப் பண்பாடாகும். தமக்கென சிறப்பான வழிபாட்டு பின்பற்றி சிவத்திரு. முறைகளைப் வந்திருக்கின்றனர் தமிழர்கள். பா.சிவமாதவன் எனினும் இடையில் வந்து |புதுக்கோட்டை நுழைந்த ஆரியப்பரவல் தமிழ் நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது அது வரை ஒற்றுமையாக இருந்த தமிழ் மக்களை, சாதி என்னும் கொடிய விடமேற்றி பிரிவினையைக் கொண்டு சீர்குலைத்திருக்கின்றனர். ஆனால் சைவர்களாகிய தமிழர்களோகுல பேதமற்ற, எல்லா உயிர்களுக்கும் தனிப்பெரும் தலைவனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் பேறு பெற்றவர்கள். சைவத்தில் வேறுபாடு என்பதே கிடையாது. யாரெல்லாம் சாதியச் சிந்தனையோடு சங்கரனை அணுகுகிறார்களோ அவர்களுக்கு எவ்விதப் பயனையும் அருள மாட்டான். மக்களிடம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாத்திர வெறியர்களை, அப்பர் பெருமான் பின்வருமாறு விளாசுகிறார்... “சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே" எனவே கோத்திரமும் குலமும் இறைவனுக்கு கிடையாது. உயர்ந்த பிறப்பு, தாழ்ந்த பிறப்பு என்பது என்றுமே கிடையாது. அன்பொன்றே சிவனையடைவதற்கான சிறந்த வழி. இதனை அறுபான் மும்மை நாயன்மார்களின் வரலாற்றின் வாயிலாக பெரியபுராணம் தெளிவுபடுத்துகிறது. மக்கள் குழுக்களாக பிரிந்து, பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். அதனைக் குறிப்பிட்டு பெயர்களும் உருவாகின. வருணாசிரம வாதிகளோ, அப்பெயர்களைச் சாதிப்பெயர்களாக்கினர். தங்களை மேலானவர்களென் றும், ஏனையோரை தாழ்த்தியும் வரைமுறை செய்தனர். அதில் சிக்கித் தமிழினம் பிரிவினையாலும், ஏற்றத் தாழ்வுகளாலும், அடிமைத் தனத்தாலும் அலைக் கழிக்கப்பட்டது. இதனை வரலாறும் உறுதிசெய்யும். இறைவனை வழிபடுவதற்கானத் தகுதியும், பெருமையும் தங்களுக்கு மட்டுமே உள்ளதெனக்கூறி, இழி குலத்தாரெனப் பலரை ஒதுக்கினர். ஊருக்குள் சிவத்திரு. திருவம்பலம் தென்னவன் தென்னாடு அப்படியென்றால், இங்கு மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றனவே. அது உண்மை இல்லையா? என கேட்டால், அக்கேள்விக்கு வள்ளுவன் வடிவாக பதில் தருகிறான். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒன்றுதான். செயல்பாடுகள்தான் மாறுபட்டிருக்கும். அதுமட்டுமின்றி, அந்த எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையும் சிவபெருமான்தான் என சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடுகிறார். அப்பாடல் நடந்து செல்லக்கூட அனுமதிக்கவில்லை. காயும் புலியி னதளுடையர் கண்டர் எண்டோட் கடவூரர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார் பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே - 7.5.3 வள்ளுவப் பெருமான் மற்றுமொரு குறளில் பெருமையும், சிறுமையும் அவரவர்களின் செயல்பாட்டினால் விளைவதென பின்வருமாறு விளக்குகிறார். இந்த கீழான எண்ணங்களைத் தகர்த்தெறியும் வகையில் சேக்கிழார் பெருமான், அதனை அப்படியே எடுத்துக் கொள்வார் போன்று அடியார்களின் குலப்பெயர்களைக் குறிப்பிட்டார். ஏன்? குலப்பெயர்களை பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்கலாம். அப்படிப் பதிவு செய்யாதிருந்தால் அத்தனை அடியார்களையும் மேல் சாதியினராகவே காட்டியிருப்பர் என்பதை நாம் அறிவோம். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” எனவே பொதுமறையும் சரி, திருமுறையும் சரி ஒருபோதும் பிறப்பின் அடிப்படையில் கூறும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்பதில்லை என்பது உண்மை. இப்படியாக வள்ளுவனின் வாக்கையும், திருமுறையின் உயிர்ப்பையும் உள்வாங்கி குன்றத்தூர் கோமகனார் தெய்வச்சேக்கிழார் பெருமான் சிவபரம்பொருளின் ஆணையை நிறைவேற்றினார். அதென்ன ஆணை? என்றால், யாரையெல்லாம் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தி ஒடுக்கினார்களோ, அவ்வழி வந்த அடியார் பெருமக்களுக்குக் கோயிலினுள்ளே சிலை வைத்து வணங்க வைத்த அருஞ்செயலை சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலம் செய்திருக்கிறார். இது இறைவனின் விருப்பமுமாகும். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போன்று அதனை சாதித்து இருக்கிறார். அந்த வகையில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றி இறைவனுக்கு மிகவும் பிடித்தவர்கள் அடியார் நாம் பார்ப்போம். திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணர் பெருமக்கள். அடியார் புகழை பாட வேண்டும் என்பதே அந்த ஆணை. அதற்காக இறைவனே “உலகெலாம்" என அடியெடுத்தும் கொடுத்தான். குலத்தைச் சேர்ந்தவர். அதாவது, பறையர் குலம் என்பர். ஆளுடைய பிள்ளையாரின் பெருமைகளையறிந்து அவரைக் காண பாணரும், அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் கழுமல வளநகரிற்கு வருகின்றனர். ஆளுடைய பிள்ளையார் அவ்விருவரையும் சரி வள்ளுவனின் வாக்கை உள்வாங்கியதன் விளைவைப் பற்றி கூறுங்களென, நினைப்பது புரிகிறது. இனி நாம் பெரியபுராணம் எப்படி ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய இரும்புக் கட்டமைப்புகளையும் தகர்த்தெறிந்தது என்பதை காண்போம். வரவேற்றச் செய்தியினை சேக்கிழார்ப் பின்வருமாறு காட்டுகிறார். சிவனை வழிபடுபவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வு கிடையாது யாவரும் சிவனடியார்களே சிவத்திரு. சிவ செந்தமிழாதன் அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் சிவத்திரு. ஆறுமுகம் சிவநாதன் கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 சிவத்திரு. யாழவன் சிவவேதன் யாழ்ப்பாணரைப் பார்த்து “ஐயர்” எனக் குறிப்பிடுகிறார். அதுவும் மகிழ்ச்சியுடன் அழைக்கிறார். எனவே இறைவனுக்கு முன் யாவரும் சமம். பேதங்களைக் கொண்ட வேதங்களில் சிவம் இருப்பதுமில்லை. அவற்றிற்கு அருள் கொடுப்பதும் இல்லை என்பது திண்ணம். அதற்குப் பிறகு ஞானசம்பந்தர் எப்போதுமே, நீலகண்ட யாழ்ப்பாணரை, அவருடைய மனைவி யாரையும் தான் செல்லுமிடமெங்கும் அழைத்துக் கொண்டுப் போனார் என்பதை நாம் அறிவோம். ஒருமுறை சிவம்பெருக்கும் பிள்ளையார் சாத்தமங்கை நீல நக்க நாயனார் இல்லத்திற்கு அடியார்களுடன் எழுந்தருளினார். நாயனாரும் கூசி மிகக் குதுகுதுத்துக் கொண்டாடி உள்ளும் புறத்தும் முதிரன்பினால் வரவேற்று அமுது செய்விக்கச் செய்தார். அதன்பிறகு சம்பந்தப்பெருமான் நீலநக்கரிடம் எல்லோரையும் போலவே, பாணருக்கும் இந்த இல்லத்திலேயே பள்ளிகொள்ள ஓரிடம் அருள வேண்டுமென்று வேண்டுகிறார். அப்பாடல் "நின்றஅன்பரை நீலகண்டப் பெரும்பாணர்க்கு இன்று தங்கஓர் இடங்கொடுத்து அருளுவீர் என்ன நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க்கு இடங்கொடுத் தனர்திருமறையோர்.” மிக அற்புதமானச் செய்தியை நமக்கு இப்பாடல் விளக்குகிறது. நீலநக்கர் சிவஅந்தணர், நாளும் அயவந்தி நாதரை பூசனை செய்பவர். தம் இல்லத்திலேயே வேள்வி ஆற்றுபவர். வேள்வி செய்கின்ற இடத்தை மிகவும் தூய்மையானதெனக் கருதுவர். வேள்வியாற்றுப வர்கள் கூட அங்கு உறங்க மாட்டார்கள். அந்த இடத்தில்தான் நீலகண்ட யாழ்ப்பாணருக்கும், மதங்க சூளாமணியாருக்கும் மிகவும் இன்புற்று இடமளித்தார் நீல நக்க நாயனார். “அளவிலா மகிழ்ச்சியினார் தமைநோக்கி ஐயர்நீர் உளம்மகிழ இங்ணைந்த உறுதியுடை யோமென்றே இளநிலா நகைமுகிழ்ப்ப இசைத்தவரை உடன்கொண்டு களம்நிலவு நஞ்சணிந்தார் பாலணையவும் கவுணியனார். 2036” ஆளுடைய பிள்ளையார் நீலகண்டப்பாணரை 'ஐயர்' என அழைக்கிறார். இந்த இடத்தில்தான் சேக்கிழார் பெருமான், அக்காலகட்டத்தில் நிலவிய தீண்டாமையை காழிப் பிள்ளையார் ஆதரிக்காமல் சைவ நல்நெறியில் நின்றதைப் படமெடுத்துக் காட்டுகிறார். சீர்காழிப் பதியில் ஞானசம்பந்தருடைய சுற்றங்கள் யாவரும் சூழ்ந்திருக்கையில் தான், தாழ்த்தப்பட்ட குலமாகக் கருதப்பட்டு வந்த நீலகண்ட தென்னாட்டு ஆசிரியர் திண்ணை கவுணியர் குலத் தோன்றலோ ஐயர் என்கிறார். நீலநக்கரோ நடுமனை வேதியில் பள்ளிக்கொள்ள இடமளிக்கிறார். தீண்டாமை என்னும் பாவத்தை, எந்த அளவிற்கு இவ்விரு அடியார் பெருமக்களும் சுக்குநூறாக உடைய செய்திருக்கின்றனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்கும்போது, உள்ளம் உவகை கொள்கிறது. யாரிடமும் தீண்டாமையை பாராட்டக்கூடாது. முக்கியமாக அடியார் பெருமக்கள் அந்த பாவச் செயலை செய்யக் கூடாது என்பதை இதன் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றனர். அதன்பிறகு அங்கு நடந்த அற்புதத்தை சேக்கிழார் கூறுகிறார். அப்பாடல் "ஆங்கு வேதியில் அறாதசெந்தீ வலம்சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒருபடித் தன்றியே ஒளிரத் தாங்கு நூலவர் மகிழ்வுறச் சடோக யாழ்த்தலைவர் பாங்கு பாணியா ருடன்அரு ளால்பள்ளிக் கொண்டார். “ நடுமனை வேதியிலவர்கள் உறங்குகையில் வேள்விக் குண்டத்தில் முழுவதும் அணையாத செந்தீயானது ஓங்கி, வலப்புறமாக சுழித்து முன்னை விடவும் மிகச் சிறப்பாக ஒளிர்ந்தது. செந்தழல் போல்திரு மேனி உடையவர் சிவபெருமான். "செந்தழல் போல்திரு மேனித் தேவர்பிரான் வரக் கூவாய்” திருவாசகம் இங்கு தீண்டாமையை ஏற்காது, அன்பையேற்று நடைபெற்ற அற்புத செயல்களைச் சிவபெருமானே ஏற்றும், வாழ்த்தியும் அருள் செய்திருக்கிறார், என்பது இதனூடாக நமக்குத் தெரிகிறது. நிறைவாக திருஞானசம்பந்தப் பெருமான் முத்தி அடையும் சமயத்தில், தன்னுடைய திருமணத்திற்கு வந்த அத்தனை மக்களையும் வேள்வித்தீ வாயிலாக முத்திபெற செய்தார். அதில் நீலகண்ட யாழ்ப்பாணரும் அடங்குவார். எனவே சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடியார் பெருமைகள் வாயிலாக அறிவித்து, அதனை அடியார்களைக் கொண்டே முறியடித்தப் பெருமை பெரிய புராணத்தையே சாரும். சிவபெருமானை அடையத் தேவையானது, அன்பே தவிர சாதிகள் இல்லை. என்னதான் இவர்கள் அதனை மறைத்து, வேறு விதமாக போலி பிம்பத்தை உருவாக்கினாலும் அது நிற்காது. உண்மையே என்றும் நிற்கும். எனவே அன்பே வடிவான சிவத்தை அன்பாலடைந்த அடியார் பெருமக்கள் வாயிலாக மிக அற்புதமான செய்திகளை பெரியபுராணம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதிலிந்த சாதிய முறியடிப்பும் அடங்கும். நாமும் அன்பு வழியில் நின்றால், நிச்சயம் இறையருள் கிட்டும். வேற்றுமை என்றுமே பார்க்கக்கூடாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செய்தியின் வாயிலாக மொத்த உயிர் கூட்டங்களுக்கும், ஒரே தலைவன் இறைவனே. எனவே ஏற்றத்தாழ்வுகள் அற்று இன்பமாக வாழ்வோம்! இறைவனை அடைவோம்! "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” சிவத்திரு.வடிவேலு கங்காளான் HD சிவத்திரு.பாலுசாமி சிவமாதவன்
தெ 08 உலகில் பல்வேறு வகையான பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் நிலவி வருகின்றன . அவற்றுள் தனிப்பெரும் சிறப்பாக திகழ்வது தமிழ்ப் பண்பாடாகும் . தமக்கென சிறப்பான வழிபாட்டு பின்பற்றி சிவத்திரு . முறைகளைப் வந்திருக்கின்றனர் தமிழர்கள் . பா.சிவமாதவன் எனினும் இடையில் வந்து | புதுக்கோட்டை நுழைந்த ஆரியப்பரவல் தமிழ் நிலத்தின் மீதும் தமிழ் மக்களின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது . அதாவது அது வரை ஒற்றுமையாக இருந்த தமிழ் மக்களை சாதி என்னும் கொடிய விடமேற்றி பிரிவினையைக் கொண்டு சீர்குலைத்திருக்கின்றனர் . ஆனால் சைவர்களாகிய தமிழர்களோகுல பேதமற்ற எல்லா உயிர்களுக்கும் தனிப்பெரும் தலைவனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் பேறு பெற்றவர்கள் . சைவத்தில் வேறுபாடு என்பதே கிடையாது . யாரெல்லாம் சாதியச் சிந்தனையோடு சங்கரனை அணுகுகிறார்களோ அவர்களுக்கு எவ்விதப் பயனையும் அருள மாட்டான் . மக்களிடம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாத்திர வெறியர்களை அப்பர் பெருமான் பின்வருமாறு விளாசுகிறார் ... சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே எனவே கோத்திரமும் குலமும் இறைவனுக்கு கிடையாது . உயர்ந்த பிறப்பு தாழ்ந்த பிறப்பு என்பது என்றுமே கிடையாது . அன்பொன்றே சிவனையடைவதற்கான சிறந்த வழி . இதனை அறுபான் மும்மை நாயன்மார்களின் வரலாற்றின் வாயிலாக பெரியபுராணம் தெளிவுபடுத்துகிறது . மக்கள் குழுக்களாக பிரிந்து பல்வேறு தொழில்களை செய்து வந்தனர் . அதனைக் குறிப்பிட்டு பெயர்களும் உருவாகின . வருணாசிரம வாதிகளோ அப்பெயர்களைச் சாதிப்பெயர்களாக்கினர் . தங்களை மேலானவர்களென் றும் ஏனையோரை தாழ்த்தியும் வரைமுறை செய்தனர் . அதில் சிக்கித் தமிழினம் பிரிவினையாலும் ஏற்றத் தாழ்வுகளாலும் அடிமைத் தனத்தாலும் அலைக் கழிக்கப்பட்டது . இதனை வரலாறும் உறுதிசெய்யும் . இறைவனை வழிபடுவதற்கானத் தகுதியும் பெருமையும் தங்களுக்கு மட்டுமே உள்ளதெனக்கூறி இழி குலத்தாரெனப் பலரை ஒதுக்கினர் . ஊருக்குள் சிவத்திரு . திருவம்பலம் தென்னவன் தென்னாடு அப்படியென்றால் இங்கு மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றனவே . அது உண்மை இல்லையா ? என கேட்டால் அக்கேள்விக்கு வள்ளுவன் வடிவாக பதில் தருகிறான் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் . எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒன்றுதான் . செயல்பாடுகள்தான் மாறுபட்டிருக்கும் . அதுமட்டுமின்றி அந்த எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் சிவபெருமான்தான் என சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடுகிறார் . அப்பாடல் நடந்து செல்லக்கூட அனுமதிக்கவில்லை . காயும் புலியி னதளுடையர் கண்டர் எண்டோட் கடவூரர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார் பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே - 7.5.3 வள்ளுவப் பெருமான் மற்றுமொரு குறளில் பெருமையும் சிறுமையும் அவரவர்களின் செயல்பாட்டினால் விளைவதென பின்வருமாறு விளக்குகிறார் . இந்த கீழான எண்ணங்களைத் தகர்த்தெறியும் வகையில் சேக்கிழார் பெருமான் அதனை அப்படியே எடுத்துக் கொள்வார் போன்று அடியார்களின் குலப்பெயர்களைக் குறிப்பிட்டார் . ஏன் ? குலப்பெயர்களை பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்கலாம் . அப்படிப் பதிவு செய்யாதிருந்தால் அத்தனை அடியார்களையும் மேல் சாதியினராகவே காட்டியிருப்பர் என்பதை நாம் அறிவோம் . பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் எனவே பொதுமறையும் சரி திருமுறையும் சரி ஒருபோதும் பிறப்பின் அடிப்படையில் கூறும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்பதில்லை என்பது உண்மை . இப்படியாக வள்ளுவனின் வாக்கையும் திருமுறையின் உயிர்ப்பையும் உள்வாங்கி குன்றத்தூர் கோமகனார் தெய்வச்சேக்கிழார் பெருமான் சிவபரம்பொருளின் ஆணையை நிறைவேற்றினார் . அதென்ன ஆணை ? என்றால் யாரையெல்லாம் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தி ஒடுக்கினார்களோ அவ்வழி வந்த அடியார் பெருமக்களுக்குக் கோயிலினுள்ளே சிலை வைத்து வணங்க வைத்த அருஞ்செயலை சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலம் செய்திருக்கிறார் . இது இறைவனின் விருப்பமுமாகும் . அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போன்று அதனை சாதித்து இருக்கிறார் . அந்த வகையில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றி இறைவனுக்கு மிகவும் பிடித்தவர்கள் அடியார் நாம் பார்ப்போம் . திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் பெருமக்கள் . அடியார் புகழை பாட வேண்டும் என்பதே அந்த ஆணை . அதற்காக இறைவனே உலகெலாம் என அடியெடுத்தும் கொடுத்தான் . குலத்தைச் சேர்ந்தவர் . அதாவது பறையர் குலம் என்பர் . ஆளுடைய பிள்ளையாரின் பெருமைகளையறிந்து அவரைக் காண பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் கழுமல வளநகரிற்கு வருகின்றனர் . ஆளுடைய பிள்ளையார் அவ்விருவரையும் சரி வள்ளுவனின் வாக்கை உள்வாங்கியதன் விளைவைப் பற்றி கூறுங்களென நினைப்பது புரிகிறது . இனி நாம் பெரியபுராணம் எப்படி ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய இரும்புக் கட்டமைப்புகளையும் தகர்த்தெறிந்தது என்பதை காண்போம் . வரவேற்றச் செய்தியினை சேக்கிழார்ப் பின்வருமாறு காட்டுகிறார் . சிவனை வழிபடுபவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வு கிடையாது யாவரும் சிவனடியார்களே சிவத்திரு . சிவ செந்தமிழாதன் அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் சிவத்திரு . ஆறுமுகம் சிவநாதன் கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 சிவத்திரு . யாழவன் சிவவேதன் யாழ்ப்பாணரைப் பார்த்து ஐயர் எனக் குறிப்பிடுகிறார் . அதுவும் மகிழ்ச்சியுடன் அழைக்கிறார் . எனவே இறைவனுக்கு முன் யாவரும் சமம் . பேதங்களைக் கொண்ட வேதங்களில் சிவம் இருப்பதுமில்லை . அவற்றிற்கு அருள் கொடுப்பதும் இல்லை என்பது திண்ணம் . அதற்குப் பிறகு ஞானசம்பந்தர் எப்போதுமே நீலகண்ட யாழ்ப்பாணரை அவருடைய மனைவி யாரையும் தான் செல்லுமிடமெங்கும் அழைத்துக் கொண்டுப் போனார் என்பதை நாம் அறிவோம் . ஒருமுறை சிவம்பெருக்கும் பிள்ளையார் சாத்தமங்கை நீல நக்க நாயனார் இல்லத்திற்கு அடியார்களுடன் எழுந்தருளினார் . நாயனாரும் கூசி மிகக் குதுகுதுத்துக் கொண்டாடி உள்ளும் புறத்தும் முதிரன்பினால் வரவேற்று அமுது செய்விக்கச் செய்தார் . அதன்பிறகு சம்பந்தப்பெருமான் நீலநக்கரிடம் எல்லோரையும் போலவே பாணருக்கும் இந்த இல்லத்திலேயே பள்ளிகொள்ள ஓரிடம் அருள வேண்டுமென்று வேண்டுகிறார் . அப்பாடல் நின்றஅன்பரை நீலகண்டப் பெரும்பாணர்க்கு இன்று தங்கஓர் இடங்கொடுத்து அருளுவீர் என்ன நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க்கு இடங்கொடுத் தனர்திருமறையோர் . மிக அற்புதமானச் செய்தியை நமக்கு இப்பாடல் விளக்குகிறது . நீலநக்கர் சிவஅந்தணர் நாளும் அயவந்தி நாதரை பூசனை செய்பவர் . தம் இல்லத்திலேயே வேள்வி ஆற்றுபவர் . வேள்வி செய்கின்ற இடத்தை மிகவும் தூய்மையானதெனக் கருதுவர் . வேள்வியாற்றுப வர்கள் கூட அங்கு உறங்க மாட்டார்கள் . அந்த இடத்தில்தான் நீலகண்ட யாழ்ப்பாணருக்கும் மதங்க சூளாமணியாருக்கும் மிகவும் இன்புற்று இடமளித்தார் நீல நக்க நாயனார் . அளவிலா மகிழ்ச்சியினார் தமைநோக்கி ஐயர்நீர் உளம்மகிழ இங்ணைந்த உறுதியுடை யோமென்றே இளநிலா நகைமுகிழ்ப்ப இசைத்தவரை உடன்கொண்டு களம்நிலவு நஞ்சணிந்தார் பாலணையவும் கவுணியனார் . 2036 ஆளுடைய பிள்ளையார் நீலகண்டப்பாணரை ' ஐயர் ' என அழைக்கிறார் . இந்த இடத்தில்தான் சேக்கிழார் பெருமான் அக்காலகட்டத்தில் நிலவிய தீண்டாமையை காழிப் பிள்ளையார் ஆதரிக்காமல் சைவ நல்நெறியில் நின்றதைப் படமெடுத்துக் காட்டுகிறார் . சீர்காழிப் பதியில் ஞானசம்பந்தருடைய சுற்றங்கள் யாவரும் சூழ்ந்திருக்கையில் தான் தாழ்த்தப்பட்ட குலமாகக் கருதப்பட்டு வந்த நீலகண்ட தென்னாட்டு ஆசிரியர் திண்ணை கவுணியர் குலத் தோன்றலோ ஐயர் என்கிறார் . நீலநக்கரோ நடுமனை வேதியில் பள்ளிக்கொள்ள இடமளிக்கிறார் . தீண்டாமை என்னும் பாவத்தை எந்த அளவிற்கு இவ்விரு அடியார் பெருமக்களும் சுக்குநூறாக உடைய செய்திருக்கின்றனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்கும்போது உள்ளம் உவகை கொள்கிறது . யாரிடமும் தீண்டாமையை பாராட்டக்கூடாது . முக்கியமாக அடியார் பெருமக்கள் அந்த பாவச் செயலை செய்யக் கூடாது என்பதை இதன் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றனர் . அதன்பிறகு அங்கு நடந்த அற்புதத்தை சேக்கிழார் கூறுகிறார் . அப்பாடல் ஆங்கு வேதியில் அறாதசெந்தீ வலம்சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒருபடித் தன்றியே ஒளிரத் தாங்கு நூலவர் மகிழ்வுறச் சடோக யாழ்த்தலைவர் பாங்கு பாணியா ருடன்அரு ளால்பள்ளிக் கொண்டார் . நடுமனை வேதியிலவர்கள் உறங்குகையில் வேள்விக் குண்டத்தில் முழுவதும் அணையாத செந்தீயானது ஓங்கி வலப்புறமாக சுழித்து முன்னை விடவும் மிகச் சிறப்பாக ஒளிர்ந்தது . செந்தழல் போல்திரு மேனி உடையவர் சிவபெருமான் . செந்தழல் போல்திரு மேனித் தேவர்பிரான் வரக் கூவாய் திருவாசகம் இங்கு தீண்டாமையை ஏற்காது அன்பையேற்று நடைபெற்ற அற்புத செயல்களைச் சிவபெருமானே ஏற்றும் வாழ்த்தியும் அருள் செய்திருக்கிறார் என்பது இதனூடாக நமக்குத் தெரிகிறது . நிறைவாக திருஞானசம்பந்தப் பெருமான் முத்தி அடையும் சமயத்தில் தன்னுடைய திருமணத்திற்கு வந்த அத்தனை மக்களையும் வேள்வித்தீ வாயிலாக முத்திபெற செய்தார் . அதில் நீலகண்ட யாழ்ப்பாணரும் அடங்குவார் . எனவே சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடியார் பெருமைகள் வாயிலாக அறிவித்து அதனை அடியார்களைக் கொண்டே முறியடித்தப் பெருமை பெரிய புராணத்தையே சாரும் . சிவபெருமானை அடையத் தேவையானது அன்பே தவிர சாதிகள் இல்லை . என்னதான் இவர்கள் அதனை மறைத்து வேறு விதமாக போலி பிம்பத்தை உருவாக்கினாலும் அது நிற்காது . உண்மையே என்றும் நிற்கும் . எனவே அன்பே வடிவான சிவத்தை அன்பாலடைந்த அடியார் பெருமக்கள் வாயிலாக மிக அற்புதமான செய்திகளை பெரியபுராணம் நமக்கு வழங்கியிருக்கிறது . அதிலிந்த சாதிய முறியடிப்பும் அடங்கும் . நாமும் அன்பு வழியில் நின்றால் நிச்சயம் இறையருள் கிட்டும் . வேற்றுமை என்றுமே பார்க்கக்கூடாது . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செய்தியின் வாயிலாக மொத்த உயிர் கூட்டங்களுக்கும் ஒரே தலைவன் இறைவனே . எனவே ஏற்றத்தாழ்வுகள் அற்று இன்பமாக வாழ்வோம் ! இறைவனை அடைவோம் ! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவத்திரு.வடிவேலு கங்காளான் HD சிவத்திரு.பாலுசாமி சிவமாதவன்