தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடுத் தலம் இருக்கிறது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. ஒன்பது கிரகத் தலங்களில் திருவெண்காடு புதன் தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் வீசுகிறார். கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி கோயில் உள்ளது. ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் பிள்ளைச்செல்வம் தரும் திருவெண்காடு தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரை சிவபுரங்களில் பதினொராவது திருக்கோயில் அமைவிடம்: (நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு) தலத்தின் சிறப்புக்கள் கயாவில் பெருமாள் பாதம் உள்ளது போல, இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் உருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி வழிபாடுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இருபத்தொரு தலைமுறையில் வருகின்ற பிதிர் சாபங்கள் நீங்கும். இது உருத்திரகயா என்றும் அழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு. இங்குள்ள இறைவனை வழிபட்டால் நரம்பு சம்பந்தமான பிணிகள் குணமாகும். சிவனின் 64 வடிவங்களுள் ஒன்றான (43வது வடிவம்) அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று வெண்காட்டுநாதர், நடராசர் மற்றும் அகோரமூர்த்தி. இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று பண்மொய்த்த இன்மொழியாள், காளிதேவி மற்றும் துர்க்கை. இத்தலத்தில் உள்ள திருக்குளங்களும் மூன்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் மற்றும் அக்கினி தீர்த்தம். இத்தலத்தில் உள்ள கோவில் மரங்கள் மூன்று வடவால், வில்வம், மற்றும் கொன்றை. என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. ஏழு விடங்கர் தலங்களில் திருவெண்காடும் ஒன்றாகும். வால்மீகி இராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கை திருமுன்னும், காளி திருமுன்னும் மிகவும் முக்கியமானவை. இறைவன் திருப்பெயர்: வெண்காட்டுநாதர், வெண்காட்டப்பர் (சுவேதாரணியேசுவரர்) இறைவியார் திருப்பெயர் : பண்மொய்த்த இன்மொழியாள், வேயனைய தோளுமை, (பிரமவித்யாம்பிகை, பிரம்மவித்யா நாயகி) கோவில்மரம் : வடவால், கொன்றை, வில்வம் திருக்குளம் : முக்குளம் (சூரியன், சந்திரன், அக்கினி) பாமாலை : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தலத்தின் மீது பாடப்பட்ட தேவாரமுலிகளின் பதிகங்கள் திருஞானசம்பந்தர் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. திருநாவுக்கரசர் பண் காட்டிப் படி ஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே! சுந்தரமூர்த்திநாயனார் படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி, அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர் மடங்கலானைச் செற்று உகந்தீர் மனைகள் தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! தென்னாடு கோவில் வரலாறு காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. மயிலாடுதுறை என்பன அவை. சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். பிரம்மனிடம் பெற்ற வரத்தால் சலந்தரன் மகன் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலமாக திருவெண்காடு மிளிர்கின்றது. இங்கு நடராச சபையும், இரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராசருக்கு அருகில் பெருமாளுக்கும் தனித் திருமுன் உண்டு. இந்திரன், ஐராவதம், பெருமாள், சூரியன், சந்திரன், அக்கினி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அத்துடன் பட்டினத்தார் சிவதீக்கை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான். திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இங்குள்ள நடராசரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இங்கும் சிதம்பரம் போன்றே நடராசர் சபை, படிக இலிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. படிக இலிங்கத்திற்கு தினமும் நான்கு முறை அபிசேகமும் நடராசருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிசேகம் நடைபெறுகின்றன. இக்கோவிலின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 விதமான உருவங்களில் காட்சியளித்து வருகிறார். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. இது நாற்பத்தி மூன்றாவது உருவமாகும். பெயரில் சற்று கடுமையாக இருந்தாலும் அருள் நிலையில் சிறந்த மூர்த்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வழிபாட்டு முறைகள் திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பூசைகள் மேற்கொள்ள வேண்டும். 09 இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு பத்து மணிக்குமேல் (இரண்டாம் கால முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, இத்திருக்கோயிலில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைப் பார்ப்பது சிறப்பு. இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி திருமுன்னுக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே. இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி பண்மொய்த்த இன்மொழியாள். திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் வெண்காட்டுநாதரை நோக்கித் தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க, மாணவர்கள் அம்பாளை தெ தினசரி வழிபாடு செய்தால் பெரும் பயன் கிட்டும் என்பது யாவரும் அறிந்ததே. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும். பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவபுரமாகவும், மண் எல்லாம் சிவலிங்கங்களாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் கால் வைக்கப் பயந்து "அம்மா" என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோவிலின் சந்நிதியில் காட்சியளிக்கின்றது. புதனுக்குத் தனிச் சந்நதி கல்விக்கு குருவான புதபகவான் அன்னை அறிவுடைநாயகி அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அன்னையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் 'அலி' குற்றம் நீங்கி ஒன்பது கோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. திருவெண்காடு ஒன்பது கோள்த் தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர். ஒன்பது கோள்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, சோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தரவல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி திருமுன் உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் திருமுன், சந்திர தீர்த்தமும், புதன் திருமுன்னுக்கு எதிரில் அமைந்துள்ளது. சாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் பிள்ளைப்பலன் இருக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் இவ்வகையான குறைகள் நீங்கி பலன்களைப் பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக் கலைஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். இது புதன் சிவபெருமானை பூசித்து பேறு பெற்ற தலம். கோவில் அமைப்பு சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளேயும் நான்கு வீதிகள் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு கிழக்கிலும் மேற்கிலும் வானுயர்ந்த கோபுரங்கள் உள்ளன. வெளிவீதியில் இருந்து உள்ளே செல்ல இரு கூடக் கோபுரங்கள் இருக்கின்றன. இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், இராசஇராச சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. இங்குள்ள நடராச மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராசர் சபைக்கு அருகில் திருமாலுக்கு சந்நிதி இருக்கிறது. மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணக் கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம். சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in
கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடுத் தலம் இருக்கிறது . இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது . சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு . ஒன்பது கிரகத் தலங்களில் திருவெண்காடு புதன் தலமாக விளங்குகிறது . இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் வீசுகிறார் . கல்வி தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி கோயில் உள்ளது . ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் பிள்ளைச்செல்வம் தரும் திருவெண்காடு தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரை சிவபுரங்களில் பதினொராவது திருக்கோயில் அமைவிடம் : ( நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு ) தலத்தின் சிறப்புக்கள் கயாவில் பெருமாள் பாதம் உள்ளது போல இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் உருத்ரபாதம் இருக்கிறது . இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன . இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி வழிபாடுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் . இருபத்தொரு தலைமுறையில் வருகின்ற பிதிர் சாபங்கள் நீங்கும் . இது உருத்திரகயா என்றும் அழைக்கப்படுகிறது . 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு . இங்குள்ள இறைவனை வழிபட்டால் நரம்பு சம்பந்தமான பிணிகள் குணமாகும் . சிவனின் 64 வடிவங்களுள் ஒன்றான ( 43 வது வடிவம் ) அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம் . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது . அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும் . இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று வெண்காட்டுநாதர் நடராசர் மற்றும் அகோரமூர்த்தி . இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று பண்மொய்த்த இன்மொழியாள் காளிதேவி மற்றும் துர்க்கை . இத்தலத்தில் உள்ள திருக்குளங்களும் மூன்று சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் மற்றும் அக்கினி தீர்த்தம் . இத்தலத்தில் உள்ள கோவில் மரங்கள் மூன்று வடவால் வில்வம் மற்றும் கொன்றை . என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது . ஏழு விடங்கர் தலங்களில் திருவெண்காடும் ஒன்றாகும் . வால்மீகி இராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது . இத்தலத்தில் உள்ள துர்க்கை திருமுன்னும் காளி திருமுன்னும் மிகவும் முக்கியமானவை . இறைவன் திருப்பெயர் : வெண்காட்டுநாதர் வெண்காட்டப்பர் ( சுவேதாரணியேசுவரர் ) இறைவியார் திருப்பெயர் : பண்மொய்த்த இன்மொழியாள் வேயனைய தோளுமை ( பிரமவித்யாம்பிகை பிரம்மவித்யா நாயகி ) கோவில்மரம் : வடவால் கொன்றை வில்வம் திருக்குளம் : முக்குளம் ( சூரியன் சந்திரன் அக்கினி ) பாமாலை : திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் தலத்தின் மீது பாடப்பட்ட தேவாரமுலிகளின் பதிகங்கள் திருஞானசம்பந்தர் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே . திருநாவுக்கரசர் பண் காட்டிப் படி ஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய் ( ம் ) மட நெஞ்சமே ! சுந்தரமூர்த்திநாயனார் படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலித்தோல் அரையில் வீக்கி அடங்கலார் ஊர் எரியச் சீறி அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர் மடங்கலானைச் செற்று உகந்தீர் மனைகள் தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே ? வேலை சூழ் வெண்காடனீரே ! தென்னாடு கோவில் வரலாறு காசிக்கு சமமான தலங்கள் ஆறு . அதில் ஒன்று திருவெண்காடு . மற்றவை 1. திருவையாறு 2 . திருசாய்க்காடு ( சாயாவனம் ) 3. திருவிடைமருதூர் 4. திருவாஞ்சியம் 5. மயிலாடுதுறை என்பன அவை . சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம் . பிரம்மனிடம் பெற்ற வரத்தால் சலந்தரன் மகன் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான் . சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர் . அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான் . அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான் . தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார் . அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார் . இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான் . தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலமாக திருவெண்காடு மிளிர்கின்றது . இங்கு நடராச சபையும் இரகசியமும் உண்டு . சிதம்பரத்தை போல நடராசருக்கு அருகில் பெருமாளுக்கும் தனித் திருமுன் உண்டு . இந்திரன் ஐராவதம் பெருமாள் சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள் . அத்துடன் பட்டினத்தார் சிவதீக்கை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான் . திருவெண்காடர் திருவெண்காட்டுத் தேவர் திருவெண்காடையார் திருவெண்காடுடைய நாயனார் திருவெண்காட்டுப் பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு . இங்குள்ள நடராசரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது . இங்கும் சிதம்பரம் போன்றே நடராசர் சபை படிக இலிங்கம் ரகசியம் அமைந்துள்ளது . படிக இலிங்கத்திற்கு தினமும் நான்கு முறை அபிசேகமும் நடராசருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிசேகம் நடைபெறுகின்றன . இக்கோவிலின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி . சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 விதமான உருவங்களில் காட்சியளித்து வருகிறார் . இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது . இது நாற்பத்தி மூன்றாவது உருவமாகும் . பெயரில் சற்று கடுமையாக இருந்தாலும் அருள் நிலையில் சிறந்த மூர்த்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . சிறப்பு வழிபாட்டு முறைகள் திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள் . இது தவறு . முதலில் சுவாமியையும் பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பூசைகள் மேற்கொள்ள வேண்டும் . 09 இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு பத்து மணிக்குமேல் ( இரண்டாம் கால முடிவில் ) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . திருவெண்காடு வருவோர் ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி இத்திருக்கோயிலில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைப் பார்ப்பது சிறப்பு . இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி திருமுன்னுக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம் . சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே . இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி பண்மொய்த்த இன்மொழியாள் . திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள் . மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் வெண்காட்டுநாதரை நோக்கித் தவம் இருந்து தன் கணவனாக பெற்றார் . கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் அம்பாளை தெ தினசரி வழிபாடு செய்தால் பெரும் பயன் கிட்டும் என்பது யாவரும் அறிந்ததே . நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ ( செல்வச் செழிப்பு ) வலது மேற்கரத்தில் அக்கமாலை ( யோகம் ) அணி செய்வதைக் காணலாம் . கீழ்க்கரம் அபய கரம் . இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும் . பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும் . பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றாகும் . திருஞானசம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவபுரமாகவும் மண் எல்லாம் சிவலிங்கங்களாகவும் தோன்றின . எனவே இத்தலத்தில் கால் வைக்கப் பயந்து அம்மா என்றழைத்தார் . இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வந்தார் . சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோவிலின் சந்நிதியில் காட்சியளிக்கின்றது . புதனுக்குத் தனிச் சந்நதி கல்விக்கு குருவான புதபகவான் அன்னை அறிவுடைநாயகி அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அன்னையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார் . இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் ' அலி ' குற்றம் நீங்கி ஒன்பது கோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு . திருவெண்காடு ஒன்பது கோள்த் தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர் . ஒன்பது கோள்களில் புதன் பகவான் கல்வி அறிவு பேச்சுத்திறமை இசை சோதிடம் கணிதம் சிற்பம் மருத்துவம் மொழிகளில் புலமை ஆகியவற்றை தரவல்லவர் . இவருக்கு இத்தலத்தில் தனி திருமுன் உள்ளது . புதனின் தந்தையான சந்திரனின் திருமுன் சந்திர தீர்த்தமும் புதன் திருமுன்னுக்கு எதிரில் அமைந்துள்ளது . சாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் பிள்ளைப்பலன் இருக்காது . அத்துடன் அறிவுக்குறைபாடும் நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும் . இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் இவ்வகையான குறைகள் நீங்கி பலன்களைப் பெறலாம் . இசைக்கு அதிபதியான புதனை இசைக் கலைஞர்களும் திரைப்படக் கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர் . இது புதன் சிவபெருமானை பூசித்து பேறு பெற்ற தலம் . கோவில் அமைப்பு சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது . கோயிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன . கோவில் உள்ளேயும் நான்கு வீதிகள் இருக்கின்றன . இந்தக் கோயிலுக்கு கிழக்கிலும் மேற்கிலும் வானுயர்ந்த கோபுரங்கள் உள்ளன . வெளிவீதியில் இருந்து உள்ளே செல்ல இரு கூடக் கோபுரங்கள் இருக்கின்றன . இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன் இராசஇராச சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது . இங்குள்ள நடராச மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது . சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராசர் சபைக்கு அருகில் திருமாலுக்கு சந்நிதி இருக்கிறது . மூலவரைப் போலவே உற்சவரும் நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு . கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணக் கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் . சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in