தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்- அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் திருக்கோயில் - திருவேதிகுடி தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரை சிவபுரங்களில் பதினான்காவது திருக்கோயில் அமைவிடம்: (தஞ்சாவூர் மாவட்டம் - தமிழ் நாடு) திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வீரசிங்கன் பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் திருவேதிகுடி திருக்கோயில் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் இருக்கிறது. வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். "விழுதிகுடி" என்பது மருவி "வேதிகுடி" ஆயிற்று என்பர் ஒருசாரார். சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் "வாழைமடு நாதர்" என்றும் அழைக்கப்படுகிறார். முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர்" என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்" என்றும் குறிக்கப்படுகிறார். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது. இறைவன் திருப்பெயர் : வேதபுரீசுவரர், வாழைமடுநாதர் இறைவியார் திருப்பெயர் : மங்கையர்க்கரசி கோவில் மரம் : வில்வம் திருக்குளம் : வேத தீர்த்தம், வைத தீர்த்தம் பாமாலை : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் தலத்தின் மீது சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள். திருஞானசம்பந்தர் நீறுவரி யாடரவொ டாமைமன வென்பு நிரை பூண்ப ரிடபம் ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்த விடமாம் தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளை மடுவில் வேறுபிரி யாதுவிளை யாடவள மாரு(ம்)வயல் வேதி குடியே. தென்னாடு திருநாவுக்கரசர் கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே. தலத்தின் மகிமைகள், திருமணத் தடைகள் நீங்கும் தலம்) திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனை யும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை, மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என் பது நம்பிக்கை. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி யாக அருள்பாலிக்கிறார். சிவ னின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்த நாரீசுவர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. (11ஆம் பக்கம் பார்க்க) கவ லன24) DEITO சிவ: 03 திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கப் பாடவேண்டிய திருவேதிகுடிப் பதிகம் நீண்ட நாளாக திருமணமாகாமல், திருமணத் தடைகள், இடையூறுகள், இழுபறிகள் நிலவிவந்தால் தஞ்சாவூர் வேதிகுடியில் இருக்கும் மங்கையற்கரசி அம்பாளுடனுறை வேதிகுடி வேதபுரீசுவரப் பெரு மானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த முன்றாம் திருமுறை (பதிகம் 3-78, திருவேதிகுடி) "நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு" என்ற பதிகத்தினை, காலை மாலை இருவேளையும் வேதிகுடி அரசின் திருவடியை நீள நினைந்து, உளமுருகி மெய்யன் போடு பாடுவது திருமணத்தடைகளை தகர்க்கும். உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும் இப்படி இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற் றோரோ, உறவினர்களோ பாடுதலும் பலன்தரும். இறைவன்: வேதபுரீசுவரர் இறைவி: மங்கையர்க்கரசி பண் : சாதாரி இராகம்: பந்துவராளி திருவேதிகுடி மாதேவர் -வேதபுரீசுவரர் (1) நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் இடபம் ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம் தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் வேறுபிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே (2) சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆணை உரிவை மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழத் துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர் வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு வேதிகுடியே (3) போழும்மதி பூண்அரவு கொன்றை மலர் துன்றுசடை வென்றி புகமேல் வாழும்நதி தாழும் அருளாளர் இருள் ஆர்மிடறர் மாதர் இமையோர் சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோலர் உடைமேல் வேழஉரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுடியே (4) காடர்கரி காலர்கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் தோடர் தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை மேவுதிரு வேதிகுடியே (5) சொக்கர் துணை மிக்க எயில் உக்க அற முனிந்து தொழு மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம் மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே (6) செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அண்ணல் இடமாம் வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கி இழிவு இலாதவகையார் வெய்ய மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே தெ (7) உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்கு அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் இக மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே (8) உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக்குழல் மிகக் கமழ விண்ணி இசை உலாவுதிரு வேதிகுடியே (9) பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரியாய்த் தேவுமிவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது ஆறாத கொடையாளர் பயில்வாம் மேவு அரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுடியே (10) வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து அறிவிலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம் அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுஇசைக் கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே (11) கந்தம்மலி தண்பொழில் நல்மாடம் இடை காழி வளர் ஞானம் உணர்சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இயிமையோர் அந்தஉலகு எய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே - திருக்கடைக் காப்பு திருவேதிகுடி செல்லுங்கள் : திருமணத் தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெற்றவர்கள் இயலு மாயின் திருவேதிகுடி சென்று வேதபுரீசுவரர் மற்றும் மங்கையர்க்கரசி அம்மனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல திருவருள் கைகூடட்டும்.
மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் திருக்கோயில் - திருவேதிகுடி தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரை சிவபுரங்களில் பதினான்காவது திருக்கோயில் அமைவிடம் : ( தஞ்சாவூர் மாவட்டம் - தமிழ் நாடு ) திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வீரசிங்கன் பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் திருவேதிகுடி திருக்கோயில் அமைந்துள்ளது . திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் இருக்கிறது . வேதி - பிரமன் . பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது . வேதம் வழிபட்டதாகவும் கூறுவர் . விழுதிகுடி என்பது மருவி வேதிகுடி ஆயிற்று என்பர் ஒருசாரார் . சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் வாழைமடு நாதர் என்றும் அழைக்கப்படுகிறார் . முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில் சுவாமி வேதிகுடி மகாதேவர் என்றும் பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறார் . திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது . இறைவன் திருப்பெயர் : வேதபுரீசுவரர் வாழைமடுநாதர் இறைவியார் திருப்பெயர் : மங்கையர்க்கரசி கோவில் மரம் : வில்வம் திருக்குளம் : வேத தீர்த்தம் வைத தீர்த்தம் பாமாலை : திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் தலத்தின் மீது சம்பந்தர் நாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் . திருஞானசம்பந்தர் நீறுவரி யாடரவொ டாமைமன வென்பு நிரை பூண்ப ரிடபம் ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்த விடமாம் தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளை மடுவில் வேறுபிரி யாதுவிளை யாடவள மாரு ( ம் ) வயல் வேதி குடியே . தென்னாடு திருநாவுக்கரசர் கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே . தலத்தின் மகிமைகள் திருமணத் தடைகள் நீங்கும் தலம் ) திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் அம்மனை யும் வழிபட்டு சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என் பது நம்பிக்கை . இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி யாக அருள்பாலிக்கிறார் . சிவ னின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்த நாரீசுவர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது . இது பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது . ( 11 ஆம் பக்கம் பார்க்க ) கவ லன 24 ) DEITO சிவ : 03 திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கப் பாடவேண்டிய திருவேதிகுடிப் பதிகம் நீண்ட நாளாக திருமணமாகாமல் திருமணத் தடைகள் இடையூறுகள் இழுபறிகள் நிலவிவந்தால் தஞ்சாவூர் வேதிகுடியில் இருக்கும் மங்கையற்கரசி அம்பாளுடனுறை வேதிகுடி வேதபுரீசுவரப் பெரு மானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த முன்றாம் திருமுறை ( பதிகம் 3-78 திருவேதிகுடி ) நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்ற பதிகத்தினை காலை மாலை இருவேளையும் வேதிகுடி அரசின் திருவடியை நீள நினைந்து உளமுருகி மெய்யன் போடு பாடுவது திருமணத்தடைகளை தகர்க்கும் . உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும் இப்படி இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற் றோரோ உறவினர்களோ பாடுதலும் பலன்தரும் . இறைவன் : வேதபுரீசுவரர் இறைவி : மங்கையர்க்கரசி பண் : சாதாரி இராகம் : பந்துவராளி திருவேதிகுடி மாதேவர் -வேதபுரீசுவரர் ( 1 ) நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் இடபம் ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம் தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் வேறுபிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே ( 2 ) சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆணை உரிவை மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழத் துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர் வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு வேதிகுடியே ( 3 ) போழும்மதி பூண்அரவு கொன்றை மலர் துன்றுசடை வென்றி புகமேல் வாழும்நதி தாழும் அருளாளர் இருள் ஆர்மிடறர் மாதர் இமையோர் சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோலர் உடைமேல் வேழஉரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுடியே ( 4 ) காடர்கரி காலர்கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் தோடர் தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை மேவுதிரு வேதிகுடியே ( 5 ) சொக்கர் துணை மிக்க எயில் உக்க அற முனிந்து தொழு மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம் மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே ( 6 ) செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அண்ணல் இடமாம் வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கி இழிவு இலாதவகையார் வெய்ய மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே தெ ( 7 ) உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்கு அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் இக மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே ( 8 ) உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக்குழல் மிகக் கமழ விண்ணி இசை உலாவுதிரு வேதிகுடியே ( 9 ) பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரியாய்த் தேவுமிவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது ஆறாத கொடையாளர் பயில்வாம் மேவு அரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுடியே ( 10 ) வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து அறிவிலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம் அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுஇசைக் கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே ( 11 ) கந்தம்மலி தண்பொழில் நல்மாடம் இடை காழி வளர் ஞானம் உணர்சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இயிமையோர் அந்தஉலகு எய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே - திருக்கடைக் காப்பு திருவேதிகுடி செல்லுங்கள் : திருமணத் தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெற்றவர்கள் இயலு மாயின் திருவேதிகுடி சென்று வேதபுரீசுவரர் மற்றும் மங்கையர்க்கரசி அம்மனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல திருவருள் கைகூடட்டும் .