தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தெ 04 immer தென்னாடு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 தென்னாடு வடக்கில் சைவ மாங்கையர்களை உருவாக்கும் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org திங்கள் ஒரு பள்ளி சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org எங்கே போகிறது, எமது வழிபாடு? சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே - திருமந்திரம் நீண்ட நெடிய வரலாறும், உலகின் தலை சிறந்த பண்பாடும் கொண்டு முகிழ்த்த தமிழ் குடிகள், காலம் காலமாகத் தம்மை பத்தி நெறியில் இணைத்து, ஆன்ம ஈடேற்றத்தையும், மறுமை வாழ்வின் நிலைபேற்றையும் அடையத் தம்மையும் தம் அடுத்த தலை முறையையும் தயார் செய்தே வந்துள்ளனர். எந்த எதிர்ப்புக்கள் தடை செய்த போதும், அவற்றைத் தகர்த்து சைவ வழியிலும் சிவ நெறியிலும் தம்மை ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். சமணமும் பௌத்தமும் தம்மால் இயன்றளவும் முயற்சித்தும் சிவ நெறியை தழுவியவர்களை தம்பால் ஈர்க்க முடியாதே போனது. இந்த வரலாற்று உண்மையைக் கூறி நிமிரும் எமக்குள் இன்று சில நெருடல்கள் தோன்றியிருப்பதை கண்ணூடாகவே காண்கின்றோம்! "விந்திய மலைக்கு கீழே, தென்னகம் எங்கும் சைவம் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு, சிறப்புறச் செழித்தது” என்று காரணாகமம் பதிவு செய்கின்றது. இந்தப் பெருந் சமயத்தை தம் கருத்தியல்களால், மறைத்து, "இந்து" என்ற போர்வையால் முடிய சிலர் இன்று மேற்கொள்ளும் சில வழிபாடுகளும், அதன்பால் கவரப்படும் மக்களும் அறியாமையால் அவதியுறுகின்றனர் எனலாம். மனிதராய் பிறந்தவர்கள் வழிகாட்டிகளாகலாம். ஆனால் கடவுள் நிலையை பெற முடியாது, அவர்களை வழிபடும் முறைகள் வேறு இருக்கின்றன என்பதை அறியாமல், சிவ வழிபாட்டுக்கு ஒப்பான, பெருந்திருவிழாக்களுடன் கூடிய வழிபாட்டு நடைமுறைகளை "பாபா" என்று வழங்கும் சிலருக்கு மேற்கொள்வதன் பிரதிபலிப்புக்கள் நாட்டுக்கு நன்மை தராது என்பதை நாம் அறிய வேண்டும்! சிவபூமி என்று திருமூலர் சிறப்பித்த, சைவ சித்தாந்திகளும், நிதமும் சிவனைத் தொட்டு பூசை செய்யும் சிவாச்சாரியார்களும் நிறைந்த நமது மண்ணில் அவ்வாறு இடம் பெறுவதைக் கண்டு “காலத்தின் கோலம்” என்று கடந்து செல்ல முடியாது! மனிதர்களை தெய்வமாக்கி வழிபடும் நடைமுறைகளையும் அவர்களுக்கான தனியான பூசை முறைகளும் எமது சமய நெறியில் உண்டு! சித்தர் வழிபாடும், தென்புலத்தார் வழிபாடும் அத்தகையனவே! இந்த மண்ணில் நம்மோடு வாழ்ந்த ஏராளம் சித்தர்களின் சமாதிகள் புதர் மண்டிக்கிடக்கிறன! சிவனோடு கலந்த எம் நாயன்மார்களின் வரலாறு இளைய பிள்ளைகளுக்கு தெரியாமல், புத்தகங்களாகவே கிடக்கிறது! அவற்றை வெளிக்கொணரவும், வழிபடவும் துணை செய்வார் யாருமிலர்! ஆனால் வெளிக் கவர்ச்சிகளைக் கண்டு மயக்கமுற்று, சில மாறுபாடான வழிபாடுகளை சைவத் தமிழர்கள் மேற்கொள்வது கவலை தருகின்றது! காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த சிவத்தை வணங்காது சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் தம்மை நிலைப்படுத்திய "சாமியார்களை” வழிபடுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்? தம்மைத் தாமே அவதாரங்களாக அறிவிக்கும் போலிகளை நம்பியும், அவர்களின் வார்த்தைகளில் மயங்கியும் பல குடும்பங்கள் தடுமாறுவதைப் பார்க்கின்றோம். தெளிவு தரும் தேவாரங்களும், புராணங்களும் நிறைந்த நெறியில் பிறந்து இப்படி மாழ்வது பெருந்துயரம்! உண்மை நெறியாம், சைவத்தின் உயர் பண்புகளை ஓதி உணர்வோம்! அல்லது, உணர்ந்தவர் தம்மைச் சேர்ந்து கேட்டேனும் தெளிவோம்! அற்ப மானிடர் சிலர் தொடக்கும், நுட்ப வலைகளில் சிக்கி பொருளையும் இறை அருளையும் இழக்காதிருப்போமாக! ‘எப்பொருட்டும் தனே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் அப் பொருளாம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்” வாழும்போது வாழ்த்துவோம் மணிவிழாக் காணும் துணைவேந்தர் பங்குனி 12ம் நாள் (மார்ச் 25) அன்று மணிவிழாக் காணும் துணைவேந்தர் பேராசிரியர். சிவத்திரு. சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்கள், தென்னாடு அருள்மிகு மனோன்மணி அம்பாள் உடனுறை ஐம்பூதநாதரின் அருளாசிகளுடன் சீரும் சிறப்பும் பொருந்தி, நோய் நொடிகளின்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். பெயரும் பதவியும் வந்தாலும், அன்பும் குணமும் அகலாத குணவான். உயர உயரப் பறந்தாலும் அடையாளம் அழியாமல் சிவ சின்னங்களுடன் நிமிர்ந்து நிற்கும் ஆளுமை. வாழ்க பல்லாண்டு வாழ்க வளத்துடன். AL யாழ்ப்பாண மாநகரிலே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கந்தர்மடத்திலே, சைவத்தமிழ்ச் சிறுமியரின் நலம் பேணி, அறிவாற்றலிலே உயர்ந்து நிற்கின்ற பெண்கள் கல்லூரி தான், யாழ் இந்து மகளிர் கல்லூரி. சைவத் தமிழ் நிலத்தில் சைவம் நலிவுறத் தொடங்கிய காலத்தில், அழகுத் தமிழும், செழுமைச் சைவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுவதற்காக 1888 இல் சைவ பரிபாலன சபை தோற்றுவிக்கப் பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகம் இச்சபையிடம் கையளிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திற்கென சைவபரிபாலன சபை நியமிக் கப்பட்டது. இந்த நிர்வாக சபைக்கு இலங்கை அரசினால் யாழ் இந்துக் கல்லூரி அதிகாரசபை என அங்கீகாரம் வழங்கப்பட்டது. இச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய யாழ் இந்துக் கல்லூ ரியின் கண்ணியம் மிக்க அதிபரான திரு.அ.குமார சுவாமி அவர்களின் பரந்த மனப்பான்மை காரணமாக 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்பதை நிலைநிறுத்தி பெண்களும் யாழ் இந்துவில் கற்க வாய்ப்பளிக்கப்பட்டது. யாழ் நீராவியடியைச் சேர்ந்த விசாலாட்சி சிவகுருநாதர் என்பவர் சமூக நலன்சார்சிந்தையுடன் அரசடி வீதியில் தமக்குச் சொந்தமாக இருந்த 24 பரப்புக் காணியை நன்கொடையாக நல்கினார். 1943 செப்ரெம்பர் 10ஆம் நாள் இந்துக் கல்லூரி அதிகார சபையினால், சைவ மகளிருக்கான ஒரேயொரு கல்லூரியாக யாழ் இந்து மகளிர் கல்லூரியை, 'பொன்னாலயம்' என்று அழைக்கப்படும் சிவகுருநாதர் பொன்னுச்சாமி அவர்களது அழகிய இல்லத்தில் ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து 1945 செப்ரெம்பர் 7இல் அரசடி வீதியில் அமைந்த நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, சிறிய கட்டடங்களில் இப்பாடசாலை இயங்கி வந்தது. அந்த நிலத்தில் ஏற்கனவே சித்தியைத் தரும் இராஜவரோதய விநாயகர் ஆலயம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 1979இல் தென்கிழக்கு மூலையிலே 80 பேர்ச் நிலப் பரப்பில் அமைந்த சிறிய கட்டடத்தில் ஒருபுறம் மனையியல் அறை, கைப்பணி அறையும் மறுபுறம் ஆரம்ப வகுப்புக்களும் நடைபெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்து வந்தது. ஆரம்ப வகுப்புக்களின் நிர்வாகப் பொறுப்பை 1979.01.01 அன்று திருமதி. யோகம்மா ஸ்ரீவிக்னேஸ்வரா அவர்கள் ஏற்றுக் கொண்டார். யாழ் மாவட்டத்திலே சைவச் சிறமியருக்கான YOHAN RAH SHIVICKNESCO BLOCK ஆரம்பப் பாடசாலையாக இது இயங்கத் தொடங்கியது. பற்பல இன்னல்கள், தடைகள் தொடர்ந்த போதும் திருமதி யோகம்மா ஸ்ரீவிக்னேஸ் வரா அவர்களின் தன்னலமற்ற சேவை மூலம் தனித்துவமாகப் பிரகாசித்தது. இந்து மகளிர் கல்லுரி வளாகத்திலே சேர்ந்தியங்கி வந்த இக்கல்லூரிக்குத் தனியாகப் பெயர் சூட்ட வேண்டும் என்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பெருவிருப்புக்கு, வட்டாரக் கல்வி அதிகாரி திரு.கு. சோமசுந்தரம் அவர்கள் பரிந்துரை செய்ய, இப்பாடசாலையானது யா/ இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை என மிளிரத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் அதிபரின் அயராத முயற்சியோடு 980 மாணவிகள் கல்வி கற்றதற்கான சான்றுகள் உள்ளன. ஆதிபர், ஆசிரியரின் முயற்சியால் முதன்முறை யாகப் பாடசாலைக்கென தனித்துவமான கழுத்துப் பட்டி 1983.05.11 அன்று அணிவிக்கப்பட்டது. மேலும் நவாலியூர் குழந்தைக் கவிஞர் அமரர். பா.சத்தியசீலன் அவர்களால் இயற்றி வழங்கப்பட்ட பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது. பாடசாலைக்கென இலச்சினையொன்றை திரு.மு.இராதாகிருஸ்ணன் அவர்கள் வரைந்து, 1994.10.06இல் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள், பௌதிகவள அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பவற்றிலே யாழ் மாவட்டப் பாடசாலைகளுகளுக்கு இணையாக இப்பாடசாலை வளர்ந்து வந்தமை வியப்பிற்குரியதாகும். தொடர்ந்து திருமதி தனரஞ்சினி அல்பேட் துரைசிங்கம் அவர்கள் 1996.07.10இல்கடமையேற் றார். இக்காலப்பகுதியில் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய இப்பாடசாலை மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி கண்டது. எனினும் அதிபர் திருமதி தனரஞ்சினியின் தளராத முயற்சியும், ஊக்கமும், துடிப்பும், கல்வி இணைப்பாடவிதானச் செயற்பாடு களில் மாணவர் வெற்றியடைய உதவியது. தேசிய மட்டத் தமிழ்த்திறன் போட்டிகளிலே இப்பாடசாலை முதலாமிடங்களை பெற்றுக் கொள்ள அதிபர் முன்னின்று உழைத்தமை அனைவரும் அறிந்ததே. அத்துடன் சிறுவர் நாடகப் போட்டிகளிலும் மாணவர் வெற்றியீட்டினர். பல மணி நேரங்கள் பாடசாலையிலே மேலதிகமாக நின்று ஆசிரியர் குழுவினரின் உதவியுடன் இப்பாடசாலையைக் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தமை பாராட்டுக்குரியதாகும். (11ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org
தெ 04 immer தென்னாடு மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 தென்னாடு வடக்கில் சைவ மாங்கையர்களை உருவாக்கும் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை செந்தமிழாகம சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org திங்கள் ஒரு பள்ளி சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org எங்கே போகிறது எமது வழிபாடு ? சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே - திருமந்திரம் நீண்ட நெடிய வரலாறும் உலகின் தலை சிறந்த பண்பாடும் கொண்டு முகிழ்த்த தமிழ் குடிகள் காலம் காலமாகத் தம்மை பத்தி நெறியில் இணைத்து ஆன்ம ஈடேற்றத்தையும் மறுமை வாழ்வின் நிலைபேற்றையும் அடையத் தம்மையும் தம் அடுத்த தலை முறையையும் தயார் செய்தே வந்துள்ளனர் . எந்த எதிர்ப்புக்கள் தடை செய்த போதும் அவற்றைத் தகர்த்து சைவ வழியிலும் சிவ நெறியிலும் தம்மை ஈடுபடுத்தி மகிழ்ந்தனர் . சமணமும் பௌத்தமும் தம்மால் இயன்றளவும் முயற்சித்தும் சிவ நெறியை தழுவியவர்களை தம்பால் ஈர்க்க முடியாதே போனது . இந்த வரலாற்று உண்மையைக் கூறி நிமிரும் எமக்குள் இன்று சில நெருடல்கள் தோன்றியிருப்பதை கண்ணூடாகவே காண்கின்றோம் ! விந்திய மலைக்கு கீழே தென்னகம் எங்கும் சைவம் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு சிறப்புறச் செழித்தது என்று காரணாகமம் பதிவு செய்கின்றது . இந்தப் பெருந் சமயத்தை தம் கருத்தியல்களால் மறைத்து இந்து என்ற போர்வையால் முடிய சிலர் இன்று மேற்கொள்ளும் சில வழிபாடுகளும் அதன்பால் கவரப்படும் மக்களும் அறியாமையால் அவதியுறுகின்றனர் எனலாம் . மனிதராய் பிறந்தவர்கள் வழிகாட்டிகளாகலாம் . ஆனால் கடவுள் நிலையை பெற முடியாது அவர்களை வழிபடும் முறைகள் வேறு இருக்கின்றன என்பதை அறியாமல் சிவ வழிபாட்டுக்கு ஒப்பான பெருந்திருவிழாக்களுடன் கூடிய வழிபாட்டு நடைமுறைகளை பாபா என்று வழங்கும் சிலருக்கு மேற்கொள்வதன் பிரதிபலிப்புக்கள் நாட்டுக்கு நன்மை தராது என்பதை நாம் அறிய வேண்டும் ! சிவபூமி என்று திருமூலர் சிறப்பித்த சைவ சித்தாந்திகளும் நிதமும் சிவனைத் தொட்டு பூசை செய்யும் சிவாச்சாரியார்களும் நிறைந்த நமது மண்ணில் அவ்வாறு இடம் பெறுவதைக் கண்டு காலத்தின் கோலம் என்று கடந்து செல்ல முடியாது ! மனிதர்களை தெய்வமாக்கி வழிபடும் நடைமுறைகளையும் அவர்களுக்கான தனியான பூசை முறைகளும் எமது சமய நெறியில் உண்டு ! சித்தர் வழிபாடும் தென்புலத்தார் வழிபாடும் அத்தகையனவே ! இந்த மண்ணில் நம்மோடு வாழ்ந்த ஏராளம் சித்தர்களின் சமாதிகள் புதர் மண்டிக்கிடக்கிறன ! சிவனோடு கலந்த எம் நாயன்மார்களின் வரலாறு இளைய பிள்ளைகளுக்கு தெரியாமல் புத்தகங்களாகவே கிடக்கிறது ! அவற்றை வெளிக்கொணரவும் வழிபடவும் துணை செய்வார் யாருமிலர் ! ஆனால் வெளிக் கவர்ச்சிகளைக் கண்டு மயக்கமுற்று சில மாறுபாடான வழிபாடுகளை சைவத் தமிழர்கள் மேற்கொள்வது கவலை தருகின்றது ! காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த சிவத்தை வணங்காது சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் தம்மை நிலைப்படுத்திய சாமியார்களை வழிபடுவது எவ்வளவு பெரிய மூடத்தனம் ? தம்மைத் தாமே அவதாரங்களாக அறிவிக்கும் போலிகளை நம்பியும் அவர்களின் வார்த்தைகளில் மயங்கியும் பல குடும்பங்கள் தடுமாறுவதைப் பார்க்கின்றோம் . தெளிவு தரும் தேவாரங்களும் புராணங்களும் நிறைந்த நெறியில் பிறந்து இப்படி மாழ்வது பெருந்துயரம் ! உண்மை நெறியாம் சைவத்தின் உயர் பண்புகளை ஓதி உணர்வோம் ! அல்லது உணர்ந்தவர் தம்மைச் சேர்ந்து கேட்டேனும் தெளிவோம் ! அற்ப மானிடர் சிலர் தொடக்கும் நுட்ப வலைகளில் சிக்கி பொருளையும் இறை அருளையும் இழக்காதிருப்போமாக ! எப்பொருட்டும் தனே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் அப் பொருளாம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய் வாழும்போது வாழ்த்துவோம் மணிவிழாக் காணும் துணைவேந்தர் பங்குனி 12 ம் நாள் ( மார்ச் 25 ) அன்று மணிவிழாக் காணும் துணைவேந்தர் பேராசிரியர் . சிவத்திரு . சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்கள் தென்னாடு அருள்மிகு மனோன்மணி அம்பாள் உடனுறை ஐம்பூதநாதரின் அருளாசிகளுடன் சீரும் சிறப்பும் பொருந்தி நோய் நொடிகளின்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் . பெயரும் பதவியும் வந்தாலும் அன்பும் குணமும் அகலாத குணவான் . உயர உயரப் பறந்தாலும் அடையாளம் அழியாமல் சிவ சின்னங்களுடன் நிமிர்ந்து நிற்கும் ஆளுமை . வாழ்க பல்லாண்டு வாழ்க வளத்துடன் . AL யாழ்ப்பாண மாநகரிலே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கந்தர்மடத்திலே சைவத்தமிழ்ச் சிறுமியரின் நலம் பேணி அறிவாற்றலிலே உயர்ந்து நிற்கின்ற பெண்கள் கல்லூரி தான் யாழ் இந்து மகளிர் கல்லூரி . சைவத் தமிழ் நிலத்தில் சைவம் நலிவுறத் தொடங்கிய காலத்தில் அழகுத் தமிழும் செழுமைச் சைவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுவதற்காக 1888 இல் சைவ பரிபாலன சபை தோற்றுவிக்கப் பட்டது . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகம் இச்சபையிடம் கையளிக்கப்பட்டது . கல்லூரி நிர்வாகத்திற்கென சைவபரிபாலன சபை நியமிக் கப்பட்டது . இந்த நிர்வாக சபைக்கு இலங்கை அரசினால் யாழ் இந்துக் கல்லூரி அதிகாரசபை என அங்கீகாரம் வழங்கப்பட்டது . இச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய யாழ் இந்துக் கல்லூ ரியின் கண்ணியம் மிக்க அதிபரான திரு.அ.குமார சுவாமி அவர்களின் பரந்த மனப்பான்மை காரணமாக ' ஆணுக்குப் பெண் இளைப்பில்லை ' என்பதை நிலைநிறுத்தி பெண்களும் யாழ் இந்துவில் கற்க வாய்ப்பளிக்கப்பட்டது . யாழ் நீராவியடியைச் சேர்ந்த விசாலாட்சி சிவகுருநாதர் என்பவர் சமூக நலன்சார்சிந்தையுடன் அரசடி வீதியில் தமக்குச் சொந்தமாக இருந்த 24 பரப்புக் காணியை நன்கொடையாக நல்கினார் . 1943 செப்ரெம்பர் 10 ஆம் நாள் இந்துக் கல்லூரி அதிகார சபையினால் சைவ மகளிருக்கான ஒரேயொரு கல்லூரியாக யாழ் இந்து மகளிர் கல்லூரியை ' பொன்னாலயம் ' என்று அழைக்கப்படும் சிவகுருநாதர் பொன்னுச்சாமி அவர்களது அழகிய இல்லத்தில் ஆரம்பித்து வைத்தனர் . தொடர்ந்து 1945 செப்ரெம்பர் 7 இல் அரசடி வீதியில் அமைந்த நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய கட்டடங்களில் இப்பாடசாலை இயங்கி வந்தது . அந்த நிலத்தில் ஏற்கனவே சித்தியைத் தரும் இராஜவரோதய விநாயகர் ஆலயம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் . 1979 இல் தென்கிழக்கு மூலையிலே 80 பேர்ச் நிலப் பரப்பில் அமைந்த சிறிய கட்டடத்தில் ஒருபுறம் மனையியல் அறை கைப்பணி அறையும் மறுபுறம் ஆரம்ப வகுப்புக்களும் நடைபெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்து வந்தது . ஆரம்ப வகுப்புக்களின் நிர்வாகப் பொறுப்பை 1979.01.01 அன்று திருமதி . யோகம்மா ஸ்ரீவிக்னேஸ்வரா அவர்கள் ஏற்றுக் கொண்டார் . யாழ் மாவட்டத்திலே சைவச் சிறமியருக்கான YOHAN RAH SHIVICKNESCO BLOCK ஆரம்பப் பாடசாலையாக இது இயங்கத் தொடங்கியது . பற்பல இன்னல்கள் தடைகள் தொடர்ந்த போதும் திருமதி யோகம்மா ஸ்ரீவிக்னேஸ் வரா அவர்களின் தன்னலமற்ற சேவை மூலம் தனித்துவமாகப் பிரகாசித்தது . இந்து மகளிர் கல்லுரி வளாகத்திலே சேர்ந்தியங்கி வந்த இக்கல்லூரிக்குத் தனியாகப் பெயர் சூட்ட வேண்டும் என்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பெருவிருப்புக்கு வட்டாரக் கல்வி அதிகாரி திரு.கு. சோமசுந்தரம் அவர்கள் பரிந்துரை செய்ய இப்பாடசாலையானது யா / இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை என மிளிரத் தொடங்கியது . இக்காலப் பகுதியில் அதிபரின் அயராத முயற்சியோடு 980 மாணவிகள் கல்வி கற்றதற்கான சான்றுகள் உள்ளன . ஆதிபர் ஆசிரியரின் முயற்சியால் முதன்முறை யாகப் பாடசாலைக்கென தனித்துவமான கழுத்துப் பட்டி 1983.05.11 அன்று அணிவிக்கப்பட்டது . மேலும் நவாலியூர் குழந்தைக் கவிஞர் அமரர் . பா.சத்தியசீலன் அவர்களால் இயற்றி வழங்கப்பட்ட பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது . பாடசாலைக்கென இலச்சினையொன்றை திரு.மு.இராதாகிருஸ்ணன் அவர்கள் வரைந்து 1994.10.06 இல் அதிபரிடம் கையளிக்கப்பட்டது . அடிப்படை வசதிகள் பௌதிகவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி என்பவற்றிலே யாழ் மாவட்டப் பாடசாலைகளுகளுக்கு இணையாக இப்பாடசாலை வளர்ந்து வந்தமை வியப்பிற்குரியதாகும் . தொடர்ந்து திருமதி தனரஞ்சினி அல்பேட் துரைசிங்கம் அவர்கள் 1996.07.10 இல்கடமையேற் றார் . இக்காலப்பகுதியில் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய இப்பாடசாலை மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி கண்டது . எனினும் அதிபர் திருமதி தனரஞ்சினியின் தளராத முயற்சியும் ஊக்கமும் துடிப்பும் கல்வி இணைப்பாடவிதானச் செயற்பாடு களில் மாணவர் வெற்றியடைய உதவியது . தேசிய மட்டத் தமிழ்த்திறன் போட்டிகளிலே இப்பாடசாலை முதலாமிடங்களை பெற்றுக் கொள்ள அதிபர் முன்னின்று உழைத்தமை அனைவரும் அறிந்ததே . அத்துடன் சிறுவர் நாடகப் போட்டிகளிலும் மாணவர் வெற்றியீட்டினர் . பல மணி நேரங்கள் பாடசாலையிலே மேலதிகமாக நின்று ஆசிரியர் குழுவினரின் உதவியுடன் இப்பாடசாலையைக் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தமை பாராட்டுக்குரியதாகும் . ( 11 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org