தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தென்னாடு தெ 08 அன்பே உருவான அந்தச் சோதி யாரையும் சோதிப்பதில்லை அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்குபவன் இறைவன். எத்தனையோ வழிபாட்டு முறைகள் உலகத்தில் பரவி இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுவது சைவம். அதாவது சிவ வழிபாடு. சைவத்தில் இறைவனை தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும் இன்னும் நாம் எப்படி விரும்புகிறோமோ அதேபோல் வணங்கக்கூடிய ஒரு மாபெரும் சுதந்திரத்தை நமக்கு வழங்குகிறது. இதனை நாவுக்கரசப் பெருமான் ”ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்" எனக் குறிப்பிடுகிறார். மேலும் அடியார் பெருமக்கள் சிவபெருமானை மிகவும் அன்புடன், தன் மனதில் வைத்து வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர். இத்தகைய புரிதல் எல்லா இடங்களிலும் இருக்கின்றதா என கேட்டால், இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கிறது. பொதுமக்களிடம் சிவன் என்று கூறியவுடன் அவர்கள் கூறுவது, "சிவன் அழிக்கும் கடவுள். சுடுகாட்டில் வாழ்பவர். சிவனை வணங்கினால் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்கு ஆகாது” என்றெல்லாம் கூறுவர். இது எப்படி என்றால் தானும் அஞ்சி, பிறரையும் அச்சமடைய செய்வதாகும். து, "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவரின் குறளைக் கூட செவிசாய்ப்பதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், இவர்கள் சொல்வது உண்மையாயின் ஏன் சிவபெருமானுக்கு விண்ணளக்கும் கோபுரங்கள், ஏன் அவரைப் போற்றிப் புகழ இவ்வளவு திருமுறைப் பாடல்கள், ஏன் இவ்வளவு அடியார் பெருமக்கள் இருக்க வேண்டும். இதில் மிகப்பெரிய பண்பாட்டுப் போர் அடங்கியுள்ளது. தமிழர்கள் சைவம், தமிழ் சிவம் என்ற கொள்கையோடு, இறைவனோடு ஒன்றிய வாழ்க்கை முறையை பின்பற்றி வந்திருக்கின்றனர். அதனை பொறுக்க முடியாத பலர் எப்படியாவது இதனை சீர்குலைக்க வேண்டும் என எண்ணி பல்வேறு வகையான கட்டுக் கதைகளை சிவபெருமானுக்கெதிராகப் பரப்பியிருக்கின்றனர். அதற்குப் பிறசமய பரவல்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதற்குச் சான்றாக சைவ நாடான பாண்டிய நாட்டில் சமணம் சூழ்ந்து சைவத்தை மங்கச் செய்தது என்பதை வரலாற்றின் வாயிலாக அறிய கிறது. அதுமட்டுமின்றி அடியார்களில் மிகப்பழமையானவரும், இசைத்தமிழில் வல்லவருமான காரைக்கால் அம்மையார் காலத்தில் கூட, பொருளுணரமாட்டாதவர்கள் சிவபெருமானை இகழ்ந்து பேசியிருக்கின்றனர், என்பதை அவருடைய அற்புதத் திருவந்தாதி வாயிலாக காணமுடிகிறது. அப்பாடல் வரிகள் இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர் எனவே இத்தகைய அறியாமை என்பது பன்னெடுங் காலமாகவே பரவி இருந்திருக்கிறது என்பதை நாம் இதனூ டாக அறியமுடிகிறது. மேலும் சிவபெருமான் தன்னை வணங்கிய அடியார்களை மிகவும் கடுமையாக சோதிப்பார், நாயன்மார்களை சிவபெருமான் சோதித்தார், என்று கூறுவதெல்லாம் உண்மையா என்பதை தொண்டர் தம் பெருமையை சொல்லவந்த பெரியபுராணத்தை நோக்கினால் தான் உண்மை விளங்கும். ஆம் முதலில் அடியார்களின் இலக்கணத்தை தெய்வ சேக்கிழார் பெருமான் திருக்கூட்டச் சிறப்பிலே இவ்வாறு குறிப்பிடுகிறார். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் எவ்வளவு அற்புதமான பாடல் அல்லவா! இறை வழிபாடு செய்வதன் நோக்கம் பிறப்பு அறுக்கப்பட வேண்டும். வாழ்க்கையின் நோக்கம் என்பது, மீண்டும் இந்த பிறவி சுழற்சியில் சிக்குண்டு சிதையாமல் இறைவனின் திருவடி நீழலை அடைவதுதான். ஆனால் அடியார் பெருமக்கள் வீடுபேறு கூட வேண்டாம், கூடும் அன்பினால் பெருமானே! உன்னை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும், என்பதை வாழ்வாக வாழ்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள். இதனை அழுது அடியடைந்த அன்பர் ஆகிய மணிவாசகப் பெருமான் "வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே.." எனப் பாடுகிறார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சிவத்தொண்டே உயிர் மூச்சாய் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுயர புகழ் பெற்றவர்கள் நம் அடியார்கள். இப்படிப்பட்ட அடியார் பெருமக்களை சிவபெருமான் எங்ஙனம் சோதித்திருப்பார். அப்படி சோதித்திருந்தாலும் அவர்களுக்கு அது பெரிதாகவும் தெரிந்திருக்காது. உண்மையாகவே சிவபெருமான் அடியார்களை சோதிக்கவில்லை என்பதை, அவர்களின் வரலாற்றின் வாயிலாகவே விளங்கிக்கொள்ளலாம். முதலில் திருநீலகண்ட குயவனார் வரலாற்றைக் காண்போம். நாயனாருடைய இல்லத்திற்கு பெருமான் மண் ஓட்டைக் கொண்டு சோதிக்க வந்த இடமாக நாம் நினைப்பதை, சேக்கிழார் பெருமான் மிக அற்புதமான பாடலைக் கொண்டு நம்மை தெளிவுபடுத்துகிறார். அப்பாடல் சிவத்திரு. பா.சிவமாதவன் புதுக்கோட்டை ஆயினும் கேதீச்சரநாதரைக் காண, பல பாகங்களில் இருந்தும் சிவனடியார்கள் வருகை தந்திருந்தனர். 11-03-2021 காலை தொடக்கம் 12-03-2021 காலை வரையுள்ள 24 மணி நேரத்தில் சுமார் ஒரு இலட்சம் தொடக்கம் ஒன்றரை இலட்சம் அடியவர்கள் வந்து வழிபாடாற்றிச் சென்றிருந்தனர். கடந்த வருடம் சுமார் 6 தொடக்கம் 7 இலட்சம் அடியவர்கள் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில், மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் இந்நெறி ஒழுகும் நாளில் எரிதளிர்த் தென்ன நீண்ட மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் அந்நெறி காட்டும் ஆற்றல் அருட்சிவயோகியாகி. சிவபெருமான் தன் அடியவரின் தொண்டினை, உலகம் அறிய வேண்டும் என்பதற்காகத் தான் வருகிறார். அதன் மூலமாக உலகத்தவர்க்கும் பயன் கிடைக்கும். அதாவது ” நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் ” என்ற மணிவாசகர் கூற்று போல, பக்குவம் அடைந்த தன் தொண்டரைக் கொண்டு, மக்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறார் சிவபெருமான். இதைத் தான் நாம் சோதனை என்கிறோம். அடுத்ததாக இயற்பகை நாயனார் வரலாற்றில் பாடல் ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம் தூய நீறு பொன்மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் மாய வண்ணமே காட்டுந்தன் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார். இப்பாடலில் நாம் நுணுகிப் பார்க்க வேண்டிய வரிகள் "மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் ” அதாவது தன் தொண்டரின் மாறாத நிலையையும், உறுதிப்பாட்டையும் காட்டுவதற்காக வந்தார். மேலான பரம்பொருள் தூர்த்த வேடத்தில் வருகிறாரென்றால் சிவம் எந்த அளவிற்கு எளிமையானவர் என்பதை நினைக்கும்போதே விழிகளில் திருக்கேதீச்சரநாதர் மகாசிவனிரவு (முதலாம் பக்கத் தொடர்ச்சி) ஆனால் இவ்வருடம் (11-03-2021) மகாசிவனிரவு, உலகினில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையான தீநுண்மிப் பரவல் காரணமாக இலங்கை அரசின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது. அதன்படி (ஈழத்தில்) இலங்கையில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்ட அடியவர்கள் வருகை தருவது தவிர்க்கப்பட மகாசிவனிரவு தின நிகழ்வானது, அரசின் வர்த்தமானி அறிவித்தல் கொண்ட ஒரு நிகழ்வாகும். இதன டிப்படையில் இந்நிகழ்வு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், அரச அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்திலும், இறுதிக் கலந்துரையாடல் கள் ஆலய முன்றலில் உள்ள சம்பந்தர் மற்றும் சுந்தரர் திருமடத்திலும் இடம்பெற்றன. சிவனிரவு தினமன்று, மகாசிவனிரவு மட வேண்டும் என்றும் திருக்குளத்தில் நீராடி புனிதநீர் அறங்காவல் சபையின் ஏற்பாட்டிலும், அன்னபூரணி எடுத்தல் மற்றும் அன்னதான மடத்தில் அருகருகே அமர்ந்து உணவு உண்பது தவிர்க்கப்படவேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அன்னதான தொண்டர் சபை மற்றும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையின் ஆதரவுடன் சிவனடியார்களுக்கு திருவமுது வழங்கப்பட்டது. அத்துடன் பாலாவி சேவையாளர் சங்கம், மன்னார் மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், இலங்கை அரச போக்குவரத்துக் கழகம் மற்றும் இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் வருகை தந்த அடியவர்களுக்காக தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து மகிழ்ந்தனர். தென்னாட்டுச் செய்தியிதழுக்காக மாந்தையில் இருந்து சிவத்திரு.ம.நடேசானந்தன். மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 உலகின் முதற் சிவன் கோயில் மங்களநாதர் - உத்தரகோசமங்கை நீர் பெருகுகிறது. இவ்வளவு எளிமையும் அன்பும் உடைய சிவத்தைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப மனம் எப்படி இசைகிறதென்றே புரியவில்லை. நிறைவாக சிவனின் அளப்பெரும் கருணைக்குச் சான்றாக அவர் நடத்திய திருவளையாடலே போதும். ஒருமுறை காட்டில் அம்பு பட்டு இறக்கும் தருவாயில் இரண்டு பன்றிகள் தன் குட்டிகளை நினைத்து இறைவனிடம் விண்ணப்பித்து இறந்துவிட்டது. சிவபெருமான் அவை பன்றிகளென ஒதுக்க வில்லை. தனக்குக் கீழ் பணிசெய்ய மூவரும், முப்பத்து தேவரும், மற்றுமுள்ள தேவர்களும், காத்துக்கிடக்கையில் தானே அருள்செய்ய நினைக்கிறார். அதுவும் ஒரு தாய்ப்பன்றியாக வந்து பன்றிக்குட்டிகளுக்கு மிகவும் அன்புடன் பால் கொடுத்திருக்கிறார். இதனை மணிவாசகர் திருவாசகத்தில் 43வது திருப்பதிகத்தில் பின்வருமாறு உருகுகிறார், வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன் ஆய், கடி நாய்கள் சூழ, ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான், இயங்கு காட்டில் ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே. இவ்வளவு கருணையுடையவனா நம்மை துன்பப்படுத்தப் போகிறான். எனவே காழ்ப்புணர்ச்சியில் கட்டமைக்கப்பட்ட பொய்க்கதைகளை நம்பி, அன்பே உருவான அரனை தவிர்ப்பது அல்லது அவனைக் கண்டு அஞ்சுவது அர்த்தமற்ற செயலாகும். அல்லற் பிறவிதனை அறுக்கவல்லானை வனை புடன் தொழுவோம். தோன்றாத் துணையாயிரு தொழுதுய்வோம். அன்பே உருவான அந்தச் சோதி யாரையும் சோதிப்பதில்லை. அவனை நினையாமல், தொழாமல், பாடிப்பரவாமல் நாங்கள் தான் எங்களைச் சோதனைகளுக்கு உள்ளாக்குகிறோம். ஈபவன் என்ற வேர்ச்சொல்லியில் இருந்து வந்ததே ”ஈசன்” மற்றும் ”ஈச்சரம்”. அப்படியான ஈச்சரங்களில் உறையும் ஈசன் ஈயாமல் இந்த மண்ணுலகிலும் சரி, விண்ணுலகிலும் சரி உங்களுக்கு ஈவது வேறு யார். இம்மைக்கும் மறுமைக்கும் துணையானவனை துணிந்து பிடியுங்கள், அவ்வுலகுக்கு அருள் மட்டுமல்ல, பாவவினைகளை அறுத்து இவ்வுலகுக்கு பொருளும் தருவான் எங்கள் ”ஈசன்”. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே - திருமந்திரம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருச்சோற்றுத்துறைநாதர்... (முதலாம் பக்கத் தொடர்ச்சி) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்று பங்குனி உத்தரவிழாவின் பெருமை பேசுகிறார் ஞானசம்பந்தர் சுவாமிகள். - தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது தஞ்சா வூர். இதன் அருகே திருச்சோற்றுத்துறை என்னும் தலத்தில் வீற்றி ருக்கும் ஈசன் ‘சோற்றுத்துறைநாதர்' என்றும், அம்பாள் 'அன்ன பூரணி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தல இறைவனுக்கு ஓதனவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இது. திருவையாறை மையமாகக் கொண்ட ஏழுர் தலங்களில் (சப்த ஸ்தானத் தலங்கள்), திருச்சோற்றுத்துறை ஆலயம் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழப்பாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு, திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் உணவுக்கு குறை இருக்காது என்பது நம்பிக்கை.
தென்னாடு தெ 08 அன்பே உருவான அந்தச் சோதி யாரையும் சோதிப்பதில்லை அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்குபவன் இறைவன் . எத்தனையோ வழிபாட்டு முறைகள் உலகத்தில் பரவி இருந்தாலும் அதில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுவது சைவம் . அதாவது சிவ வழிபாடு . சைவத்தில் இறைவனை தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் இன்னும் நாம் எப்படி விரும்புகிறோமோ அதேபோல் வணங்கக்கூடிய ஒரு மாபெரும் சுதந்திரத்தை நமக்கு வழங்குகிறது . இதனை நாவுக்கரசப் பெருமான் ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் எனக் குறிப்பிடுகிறார் . மேலும் அடியார் பெருமக்கள் சிவபெருமானை மிகவும் அன்புடன் தன் மனதில் வைத்து வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர் . இத்தகைய புரிதல் எல்லா இடங்களிலும் இருக்கின்றதா என கேட்டால் இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கிறது . பொதுமக்களிடம் சிவன் என்று கூறியவுடன் அவர்கள் கூறுவது சிவன் அழிக்கும் கடவுள் . சுடுகாட்டில் வாழ்பவர் . சிவனை வணங்கினால் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்க நேரிடும் . குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறுவர் . இது எப்படி என்றால் தானும் அஞ்சி பிறரையும் அச்சமடைய செய்வதாகும் . து எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் குறளைக் கூட செவிசாய்ப்பதில்லை என்றே தோன்றுகிறது . ஏனெனில் இவர்கள் சொல்வது உண்மையாயின் ஏன் சிவபெருமானுக்கு விண்ணளக்கும் கோபுரங்கள் ஏன் அவரைப் போற்றிப் புகழ இவ்வளவு திருமுறைப் பாடல்கள் ஏன் இவ்வளவு அடியார் பெருமக்கள் இருக்க வேண்டும் . இதில் மிகப்பெரிய பண்பாட்டுப் போர் அடங்கியுள்ளது . தமிழர்கள் சைவம் தமிழ் சிவம் என்ற கொள்கையோடு இறைவனோடு ஒன்றிய வாழ்க்கை முறையை பின்பற்றி வந்திருக்கின்றனர் . அதனை பொறுக்க முடியாத பலர் எப்படியாவது இதனை சீர்குலைக்க வேண்டும் என எண்ணி பல்வேறு வகையான கட்டுக் கதைகளை சிவபெருமானுக்கெதிராகப் பரப்பியிருக்கின்றனர் . அதற்குப் பிறசமய பரவல்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றன . இதற்குச் சான்றாக சைவ நாடான பாண்டிய நாட்டில் சமணம் சூழ்ந்து சைவத்தை மங்கச் செய்தது என்பதை வரலாற்றின் வாயிலாக அறிய கிறது . அதுமட்டுமின்றி அடியார்களில் மிகப்பழமையானவரும் இசைத்தமிழில் வல்லவருமான காரைக்கால் அம்மையார் காலத்தில் கூட பொருளுணரமாட்டாதவர்கள் சிவபெருமானை இகழ்ந்து பேசியிருக்கின்றனர் என்பதை அவருடைய அற்புதத் திருவந்தாதி வாயிலாக காணமுடிகிறது . அப்பாடல் வரிகள் இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர் எனவே இத்தகைய அறியாமை என்பது பன்னெடுங் காலமாகவே பரவி இருந்திருக்கிறது என்பதை நாம் இதனூ டாக அறியமுடிகிறது . மேலும் சிவபெருமான் தன்னை வணங்கிய அடியார்களை மிகவும் கடுமையாக சோதிப்பார் நாயன்மார்களை சிவபெருமான் சோதித்தார் என்று கூறுவதெல்லாம் உண்மையா என்பதை தொண்டர் தம் பெருமையை சொல்லவந்த பெரியபுராணத்தை நோக்கினால் தான் உண்மை விளங்கும் . ஆம் முதலில் அடியார்களின் இலக்கணத்தை தெய்வ சேக்கிழார் பெருமான் திருக்கூட்டச் சிறப்பிலே இவ்வாறு குறிப்பிடுகிறார் . கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் எவ்வளவு அற்புதமான பாடல் அல்லவா ! இறை வழிபாடு செய்வதன் நோக்கம் பிறப்பு அறுக்கப்பட வேண்டும் . வாழ்க்கையின் நோக்கம் என்பது மீண்டும் இந்த பிறவி சுழற்சியில் சிக்குண்டு சிதையாமல் இறைவனின் திருவடி நீழலை அடைவதுதான் . ஆனால் அடியார் பெருமக்கள் வீடுபேறு கூட வேண்டாம் கூடும் அன்பினால் பெருமானே ! உன்னை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வாழ்வாக வாழ்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள் . இதனை அழுது அடியடைந்த அன்பர் ஆகிய மணிவாசகப் பெருமான் வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே .. எனப் பாடுகிறார் . இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சிவத்தொண்டே உயிர் மூச்சாய் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுயர புகழ் பெற்றவர்கள் நம் அடியார்கள் . இப்படிப்பட்ட அடியார் பெருமக்களை சிவபெருமான் எங்ஙனம் சோதித்திருப்பார் . அப்படி சோதித்திருந்தாலும் அவர்களுக்கு அது பெரிதாகவும் தெரிந்திருக்காது . உண்மையாகவே சிவபெருமான் அடியார்களை சோதிக்கவில்லை என்பதை அவர்களின் வரலாற்றின் வாயிலாகவே விளங்கிக்கொள்ளலாம் . முதலில் திருநீலகண்ட குயவனார் வரலாற்றைக் காண்போம் . நாயனாருடைய இல்லத்திற்கு பெருமான் மண் ஓட்டைக் கொண்டு சோதிக்க வந்த இடமாக நாம் நினைப்பதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமான பாடலைக் கொண்டு நம்மை தெளிவுபடுத்துகிறார் . அப்பாடல் சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை ஆயினும் கேதீச்சரநாதரைக் காண பல பாகங்களில் இருந்தும் சிவனடியார்கள் வருகை தந்திருந்தனர் . 11-03-2021 காலை தொடக்கம் 12-03-2021 காலை வரையுள்ள 24 மணி நேரத்தில் சுமார் ஒரு இலட்சம் தொடக்கம் ஒன்றரை இலட்சம் அடியவர்கள் வந்து வழிபாடாற்றிச் சென்றிருந்தனர் . கடந்த வருடம் சுமார் 6 தொடக்கம் 7 இலட்சம் அடியவர்கள் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இலங்கையில் மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் இந்நெறி ஒழுகும் நாளில் எரிதளிர்த் தென்ன நீண்ட மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் அந்நெறி காட்டும் ஆற்றல் அருட்சிவயோகியாகி . சிவபெருமான் தன் அடியவரின் தொண்டினை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகத் தான் வருகிறார் . அதன் மூலமாக உலகத்தவர்க்கும் பயன் கிடைக்கும் . அதாவது நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் என்ற மணிவாசகர் கூற்று போல பக்குவம் அடைந்த தன் தொண்டரைக் கொண்டு மக்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறார் சிவபெருமான் . இதைத் தான் நாம் சோதனை என்கிறோம் . அடுத்ததாக இயற்பகை நாயனார் வரலாற்றில் பாடல் ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ ? பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம் தூய நீறு பொன்மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் மாய வண்ணமே காட்டுந்தன் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் . இப்பாடலில் நாம் நுணுகிப் பார்க்க வேண்டிய வரிகள் மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் அதாவது தன் தொண்டரின் மாறாத நிலையையும் உறுதிப்பாட்டையும் காட்டுவதற்காக வந்தார் . மேலான பரம்பொருள் தூர்த்த வேடத்தில் வருகிறாரென்றால் சிவம் எந்த அளவிற்கு எளிமையானவர் என்பதை நினைக்கும்போதே விழிகளில் திருக்கேதீச்சரநாதர் மகாசிவனிரவு ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) ஆனால் இவ்வருடம் ( 11-03-2021 ) மகாசிவனிரவு உலகினில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையான தீநுண்மிப் பரவல் காரணமாக இலங்கை அரசின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது . அதன்படி ( ஈழத்தில் ) இலங்கையில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்ட அடியவர்கள் வருகை தருவது தவிர்க்கப்பட மகாசிவனிரவு தின நிகழ்வானது அரசின் வர்த்தமானி அறிவித்தல் கொண்ட ஒரு நிகழ்வாகும் . இதன டிப்படையில் இந்நிகழ்வு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அரச அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்திலும் இறுதிக் கலந்துரையாடல் கள் ஆலய முன்றலில் உள்ள சம்பந்தர் மற்றும் சுந்தரர் திருமடத்திலும் இடம்பெற்றன . சிவனிரவு தினமன்று மகாசிவனிரவு மட வேண்டும் என்றும் திருக்குளத்தில் நீராடி புனிதநீர் அறங்காவல் சபையின் ஏற்பாட்டிலும் அன்னபூரணி எடுத்தல் மற்றும் அன்னதான மடத்தில் அருகருகே அமர்ந்து உணவு உண்பது தவிர்க்கப்படவேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன . அன்னதான தொண்டர் சபை மற்றும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையின் ஆதரவுடன் சிவனடியார்களுக்கு திருவமுது வழங்கப்பட்டது . அத்துடன் பாலாவி சேவையாளர் சங்கம் மன்னார் மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இலங்கை அரச போக்குவரத்துக் கழகம் மற்றும் இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் வருகை தந்த அடியவர்களுக்காக தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து மகிழ்ந்தனர் . தென்னாட்டுச் செய்தியிதழுக்காக மாந்தையில் இருந்து சிவத்திரு.ம.நடேசானந்தன் . மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 உலகின் முதற் சிவன் கோயில் மங்களநாதர் - உத்தரகோசமங்கை நீர் பெருகுகிறது . இவ்வளவு எளிமையும் அன்பும் உடைய சிவத்தைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப மனம் எப்படி இசைகிறதென்றே புரியவில்லை . நிறைவாக சிவனின் அளப்பெரும் கருணைக்குச் சான்றாக அவர் நடத்திய திருவளையாடலே போதும் . ஒருமுறை காட்டில் அம்பு பட்டு இறக்கும் தருவாயில் இரண்டு பன்றிகள் தன் குட்டிகளை நினைத்து இறைவனிடம் விண்ணப்பித்து இறந்துவிட்டது . சிவபெருமான் அவை பன்றிகளென ஒதுக்க வில்லை . தனக்குக் கீழ் பணிசெய்ய மூவரும் முப்பத்து தேவரும் மற்றுமுள்ள தேவர்களும் காத்துக்கிடக்கையில் தானே அருள்செய்ய நினைக்கிறார் . அதுவும் ஒரு தாய்ப்பன்றியாக வந்து பன்றிக்குட்டிகளுக்கு மிகவும் அன்புடன் பால் கொடுத்திருக்கிறார் . இதனை மணிவாசகர் திருவாசகத்தில் 43 வது திருப்பதிகத்தில் பின்வருமாறு உருகுகிறார் வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான் இயங்கு காட்டில் உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே . இவ்வளவு கருணையுடையவனா நம்மை துன்பப்படுத்தப் போகிறான் . எனவே காழ்ப்புணர்ச்சியில் கட்டமைக்கப்பட்ட பொய்க்கதைகளை நம்பி அன்பே உருவான அரனை தவிர்ப்பது அல்லது அவனைக் கண்டு அஞ்சுவது அர்த்தமற்ற செயலாகும் . அல்லற் பிறவிதனை அறுக்கவல்லானை வனை புடன் தொழுவோம் . தோன்றாத் துணையாயிரு தொழுதுய்வோம் . அன்பே உருவான அந்தச் சோதி யாரையும் சோதிப்பதில்லை . அவனை நினையாமல் தொழாமல் பாடிப்பரவாமல் நாங்கள் தான் எங்களைச் சோதனைகளுக்கு உள்ளாக்குகிறோம் . ஈபவன் என்ற வேர்ச்சொல்லியில் இருந்து வந்ததே ஈசன் மற்றும் ஈச்சரம் . அப்படியான ஈச்சரங்களில் உறையும் ஈசன் ஈயாமல் இந்த மண்ணுலகிலும் சரி விண்ணுலகிலும் சரி உங்களுக்கு ஈவது வேறு யார் . இம்மைக்கும் மறுமைக்கும் துணையானவனை துணிந்து பிடியுங்கள் அவ்வுலகுக்கு அருள் மட்டுமல்ல பாவவினைகளை அறுத்து இவ்வுலகுக்கு பொருளும் தருவான் எங்கள் ஈசன் . அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே - திருமந்திரம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருச்சோற்றுத்துறைநாதர் ... ( முதலாம் பக்கத் தொடர்ச்சி ) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்று பங்குனி உத்தரவிழாவின் பெருமை பேசுகிறார் ஞானசம்பந்தர் சுவாமிகள் . - தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது தஞ்சா வூர் . இதன் அருகே திருச்சோற்றுத்துறை என்னும் தலத்தில் வீற்றி ருக்கும் ஈசன் சோற்றுத்துறைநாதர் ' என்றும் அம்பாள் ' அன்ன பூரணி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள் . இத்தல இறைவனுக்கு ஓதனவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு . திருஞானசம்பந்தர் அப்பர் மற்றும் சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இது . திருவையாறை மையமாகக் கொண்ட ஏழுர் தலங்களில் ( சப்த ஸ்தானத் தலங்கள் ) திருச்சோற்றுத்துறை ஆலயம் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது . இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழப்பாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது . எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் உணவுக்கு குறை இருக்காது என்பது நம்பிக்கை .