தென்னாடு பங்குனித் திங்கள் இதழ் - 06

தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி மட்டுநகர் மாமாங்கேச்சரம் இராமர் வழிபட்ட சிவன்கோயில் மீனம் நல்லோரை பங்குனித் திங்கள், 2021 கிழக்கிலங்கையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலிய சிறப்புக்களையும் பண்டைய வரலாற்றுச் சிறப்பினையும் தாங்கி நிற்கும் சிவாலயங்களுள், மட்டக்களப்பு மாமாங்கேச்சரமும் ஒன்று. 'பட்டினப்பாங்கர்ப் பரந்த தோணாமுகமாய் ஐங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய்." என்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் தனது யாழ் நூலில் ஓதியதற்கிணங்க, மட்டு நகரிலிருந்து வடக்குப் பக்கமாக 5 மைல் தூரமளவில் அமிர்தகழி எனும் பழம் ஊரில் ஐங்கரன் எனும் திருமேனியில் உள்ளுறை சிவலிங்கமாக உறைந்து அருள்பாலித்து வருகின்றார். புராதன காலம் தொட்டு இவ்விடம் சிவ வழிபாட்டுக்குரிய பிரதேசமாக இருந்தமையால் மாமாங்க 4 ஈச்சரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கருவறையில் இலிங்கம் இருந்துள்ளமை உறுதியாகின்றது. இதற்கேற்றால் போல் இந்த கோயிலின் கருவறை அமைக்கும் போது, அவ் இடத்திலிருந்த இலிங்கம் நீர் மட்டத்தின் கீழும் நீண்டு செல்வதாக இருந்ததென்று இவ்வூர்ப் பொதுமக்கள் கூறுகின்றனர், நாளடைவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு விநாயகர் திருமேனி அங்கி பொருத்தப்பட்டு மாமாங்கப் பிள்ளையாராகவும், ஈசுவரனாகவும் வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு மூர்த்தி சிவனாகவும், அவரின் அருள்ஞான வடிவான ஐங்கரனாகவும் கீர்த்தி பெற்று விளங்குவதனை நோக்கலாம். தல மரம் அமிர்தகழி கிராமத்தைச் சூழ அந்நாளில் கொக்கொட்டி, புன்னை, தாழை, குருந்தை, நாவல், பாலை, ஈச்சை, காரை போன்ற மரங்கள் அடர்த்தியாக செழித்திருந்த காட்டினுள்ளே தான் ஈசுவரன் குடி புகுந்தான். நாளடைவில் குடியேற்றத்தினாலும், சேனைப் பயிர்ச் செய்கையினாலும், இக் காடுகள் அழிக்கப்பட்டாலும் இவ் ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக நிழற் பரப்பி நிற்கும் குருந்தை மரமே தல மரமாக அமைந்திருப்பது பெரும் சிறப்பாகும். காரணம் மாணிக்கவாசகப் பெருமான் திருப் பெருந் துறையில் இருந்த மர நிழலின் கீழிலிருந்த சிவபெருமானால் குருவடிவம் கொண்டு ஆட்கொள்ளப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே ஈழத்துச் சிவ பூமியில் குருந்தை மரத்தை தல மரமாகக்கொண்ட ஒரே ஒரு கோயில் இப்பதியென்று சிறப்பித்துக் கூறலாம். திருக்குளம் இக்கோயிலின் மூர்த்தியைப் பற்றியும், தீர்த்தத்தினைப் பற்றியும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்ட கதைகள் பல இப்பிரதேசத்தாரிடையேயும் இங்குள்ள எழுத்தாக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது. அவற்றுள் ஒன்று, இராமபிரான் தம் கோதண்டம் ஊன்றியதால் இத் திருக்குளம் தோன்றியது என்பது நம்பிக்கை. இராமருடைய பூசைக்காக காலம் தாழ்த்தி அனுமரால் கொண்டு வரப்பட்ட இலிங்கமும் பூசை செய்யப் பெற்று இத் திருக்குளத்தில் புதைத்து விடப்பட்டதனால், அப்புனித சிவலிங்கத்தால் இத் திருக்குளமும் அதில் உள்ள சேற்று கழிநீரும் திருவருட்சக்தி படிந்த அமுத தீர்த்தமாகியது என்றும் இத் தீர்த்தத்தின் மகிமை புகழப்படுகின்றது. காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற் கொண்டு வந்த கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, காவேரி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கை தீர்த்தங்களையும் இத் திருக்குளத்தில் கலந்து நீராடி இராமலிங்கத்தை வழிபட்டு பலன் பெற்றார் என்றும், எல்லா மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப் பெற்றதனால் மாமங்கைத் தீர்த்தம் எனப் பெயர் பெற்று, நாளடைவில் ‘மாமாங்கத் தீர்த்தம்’ எனப் பேசப்பட்டது என்பர். ஆடி மறைமதித் (அமாவாசைத்) தீர்த்தத்திற்குப் பெயர் பெற்ற ஈழத்து சிவன் கோயில்கள் இரண்டு என் ன்று பேசப்படுகின்றது. ஒன்று நகுலேசுவர கீரிமலைத் தீர்த்தம், மற்றையது மாமாங்கேச்சர அமிர்தகழித் தீர்த்தம், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் ஆடி மறைமதி (அமாவாசை) அன்று இத் திருத்தலத்தில் இறந்த பிதிரர்களுக்கு தங்களது கடன்களை நிறைவேற்றி சிவனதும், முன்னோர்களதும் அருளாசிகளை வருடா வருடம் பெற்றேகுகின்றனர். மட்டக்களப்பு மான்மியத் தகவல் படி, ஆடகசவுந்தரி என்ற இளவரசி மூன்று முலைகளை உடையவளாகவும் பல ஆண்டுகள் கன்னிப்பருவம் அடையாதவளாகவும் இருந்தாள். பின்பு இக் குளத்தின் மகிமையை அறிந்து வந்து நீராடி மூன்றாவது முலைத்தடம் நீங்கப் பெற்றும், கன்னிமையும் பேரழகும் பெற்று குளக்கோட்டராசாவை மணந்தாள் என்று கூறப்படுவதிலிருந்து இத் தீர்த்தத்தின் மகிமை பேசப்படுகின்றது. திருக்கோயில் வரலாறும், நிர்வாகமும் இந்தக் கோயிலின் ஆரம்பத்தினை அறிந்து கொள்வதற்கு எவ்விதமான தொல்பொருட் சின்னங்களோ, பட்டயங்களோ கிட்டவில்லை. இருப்பினும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டதாக இருப்பதற்குரிய கர்ண பரம்பரைக்கதைகள் உட்பட மட்டக்காப்பு மான்மிய நூலும் சான்றாக அமைகின்றது. இராமர் வழிபட்ட இலிங்கமே தற்போது இத் தலத்தில் உள்ளது என்பது நம்பிக்கை. இந்த இலிங்கத்தை இப் பகுதியில் வேட்டையாடும் வேடன் ஒருவன் கனவில் கண்டு வணங்கி பின் விழித்த போது இலிங்க அருட்காட்சி கண்டு காடு அகற்றி, தூசு நீக்கி தனது இனத்தவர்களைக் கூட்டி வந்து 09 ஸ்ரீமாமா ஸ்ேவரர் ஆலய தல பிட்ேசம் தெ சிறு கொத்துப் பந்தல் கட்டி பூசை செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது. 1837ஆம் ஆண்டு மட்டக்களப்பு நில வரைபடத்தில் இக்கோயில் களி மண்ணால் அமைக்கப்பட்டிருப்பதாகப் பதியப்பட்டுள்ளது. 1880 ஆம் ஆண்டு கோயில் அறங்காவல் சபை உருவாக்கப்பட்டு பின்பு 1888 ஆம் ஆண்டு இக் கோயிலுக்கு உறுதி வரையப்பட்டது. 1880 ஆம் ஆண்டு முதற் குடமுழுக்கை இக் கோயில் கண்டது. ஆரம்பத்தில் கொடியேற்றத்துடன் ஐந்து நாள் திருவிழாக்கள் நடைபெற்றன. தற்போது ஆடி மறைமதியை (அமாவாசையை) தீர்த்தமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆலய நிர்வாகம் கோட்டமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும் அமிர்தகழி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்கும் உரித்துடையது என்றும் யாப்பில் வரையப்பட்டடுள்ளது. கோயில் பற்றிய நூல்கள் மாமாங்கேச்சரரின் புகழைப் பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களையும், நூல்களையும் அருளியுள்ளனர். வித்துவான் சரவணமுத்தன் அவர்களால் மாமாங்கேச்சுரர் கீர்த்தனை மற்றும் மாமாங்கர் பதிகம் என்னும் நூல்கள் பாடப்பட்டுள்ளன. பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்கள் மாமாங்கேசுவர் பதிகம் எனும் விருத்தப்பாவை அருளியுள்ளார். புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் மாமாங்கேச்சுமப்பதிகம் அருள, மண்டூர் பூ. சின்னையா அவர்கள் மாமாங்கப் பிள்ளையார் விருத்தம் எனும் நூலை அருளியுள்ளார், இவையெல்லாம் பக்தி ததும்பிய பணுவல்கள் ஆகும். இக் கோயிலின் வரலாறு பற்றி இன்று எமக்கு இரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை மாமாங்கப் பிள்ளையார் வரலாறு, மாமாங்கப் பிள்ளையார் மான்மியம் என்பனவாகும். கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டு தேசத்தில் கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றக் கூடிய சிவன் கோயில் மாமாங்கேச்சரம் ஆகும். சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாஜி, பிரான்சு
தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி மட்டுநகர் மாமாங்கேச்சரம் இராமர் வழிபட்ட சிவன்கோயில் மீனம் நல்லோரை பங்குனித் திங்கள் 2021 கிழக்கிலங்கையில் மூர்த்தி தலம் தீர்த்தம் முதலிய சிறப்புக்களையும் பண்டைய வரலாற்றுச் சிறப்பினையும் தாங்கி நிற்கும் சிவாலயங்களுள் மட்டக்களப்பு மாமாங்கேச்சரமும் ஒன்று . ' பட்டினப்பாங்கர்ப் பரந்த தோணாமுகமாய் ஐங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய் . என்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் தனது யாழ் நூலில் ஓதியதற்கிணங்க மட்டு நகரிலிருந்து வடக்குப் பக்கமாக 5 மைல் தூரமளவில் அமிர்தகழி எனும் பழம் ஊரில் ஐங்கரன் எனும் திருமேனியில் உள்ளுறை சிவலிங்கமாக உறைந்து அருள்பாலித்து வருகின்றார் . புராதன காலம் தொட்டு இவ்விடம் சிவ வழிபாட்டுக்குரிய பிரதேசமாக இருந்தமையால் மாமாங்க 4 ஈச்சரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது . இதனால் கருவறையில் இலிங்கம் இருந்துள்ளமை உறுதியாகின்றது . இதற்கேற்றால் போல் இந்த கோயிலின் கருவறை அமைக்கும் போது அவ் இடத்திலிருந்த இலிங்கம் நீர் மட்டத்தின் கீழும் நீண்டு செல்வதாக இருந்ததென்று இவ்வூர்ப் பொதுமக்கள் கூறுகின்றனர் நாளடைவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு விநாயகர் திருமேனி அங்கி பொருத்தப்பட்டு மாமாங்கப் பிள்ளையாராகவும் ஈசுவரனாகவும் வழிபட்டு வருகின்றனர் . இவ்வாறு மூர்த்தி சிவனாகவும் அவரின் அருள்ஞான வடிவான ஐங்கரனாகவும் கீர்த்தி பெற்று விளங்குவதனை நோக்கலாம் . தல மரம் அமிர்தகழி கிராமத்தைச் சூழ அந்நாளில் கொக்கொட்டி புன்னை தாழை குருந்தை நாவல் பாலை ஈச்சை காரை போன்ற மரங்கள் அடர்த்தியாக செழித்திருந்த காட்டினுள்ளே தான் ஈசுவரன் குடி புகுந்தான் . நாளடைவில் குடியேற்றத்தினாலும் சேனைப் பயிர்ச் செய்கையினாலும் இக் காடுகள் அழிக்கப்பட்டாலும் இவ் ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக நிழற் பரப்பி நிற்கும் குருந்தை மரமே தல மரமாக அமைந்திருப்பது பெரும் சிறப்பாகும் . காரணம் மாணிக்கவாசகப் பெருமான் திருப் பெருந் துறையில் இருந்த மர நிழலின் கீழிலிருந்த சிவபெருமானால் குருவடிவம் கொண்டு ஆட்கொள்ளப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் . ஆகவே ஈழத்துச் சிவ பூமியில் குருந்தை மரத்தை தல மரமாகக்கொண்ட ஒரே ஒரு கோயில் இப்பதியென்று சிறப்பித்துக் கூறலாம் . திருக்குளம் இக்கோயிலின் மூர்த்தியைப் பற்றியும் தீர்த்தத்தினைப் பற்றியும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்ட கதைகள் பல இப்பிரதேசத்தாரிடையேயும் இங்குள்ள எழுத்தாக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது . அவற்றுள் ஒன்று இராமபிரான் தம் கோதண்டம் ஊன்றியதால் இத் திருக்குளம் தோன்றியது என்பது நம்பிக்கை . இராமருடைய பூசைக்காக காலம் தாழ்த்தி அனுமரால் கொண்டு வரப்பட்ட இலிங்கமும் பூசை செய்யப் பெற்று இத் திருக்குளத்தில் புதைத்து விடப்பட்டதனால் அப்புனித சிவலிங்கத்தால் இத் திருக்குளமும் அதில் உள்ள சேற்று கழிநீரும் திருவருட்சக்தி படிந்த அமுத தீர்த்தமாகியது என்றும் இத் தீர்த்தத்தின் மகிமை புகழப்படுகின்றது . காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற் கொண்டு வந்த கங்கை யமுனை சரசுவதி கோதாவரி துங்கபத்திரை பவானி காவேரி தாமிரபரணி சேது முதலான ஒன்பது மங்கை தீர்த்தங்களையும் இத் திருக்குளத்தில் கலந்து நீராடி இராமலிங்கத்தை வழிபட்டு பலன் பெற்றார் என்றும் எல்லா மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப் பெற்றதனால் மாமங்கைத் தீர்த்தம் எனப் பெயர் பெற்று நாளடைவில் மாமாங்கத் தீர்த்தம் எனப் பேசப்பட்டது என்பர் . ஆடி மறைமதித் ( அமாவாசைத் ) தீர்த்தத்திற்குப் பெயர் பெற்ற ஈழத்து சிவன் கோயில்கள் இரண்டு என் ன்று பேசப்படுகின்றது . ஒன்று நகுலேசுவர கீரிமலைத் தீர்த்தம் மற்றையது மாமாங்கேச்சர அமிர்தகழித் தீர்த்தம் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் ஆடி மறைமதி ( அமாவாசை ) அன்று இத் திருத்தலத்தில் இறந்த பிதிரர்களுக்கு தங்களது கடன்களை நிறைவேற்றி சிவனதும் முன்னோர்களதும் அருளாசிகளை வருடா வருடம் பெற்றேகுகின்றனர் . மட்டக்களப்பு மான்மியத் தகவல் படி ஆடகசவுந்தரி என்ற இளவரசி மூன்று முலைகளை உடையவளாகவும் பல ஆண்டுகள் கன்னிப்பருவம் அடையாதவளாகவும் இருந்தாள் . பின்பு இக் குளத்தின் மகிமையை அறிந்து வந்து நீராடி மூன்றாவது முலைத்தடம் நீங்கப் பெற்றும் கன்னிமையும் பேரழகும் பெற்று குளக்கோட்டராசாவை மணந்தாள் என்று கூறப்படுவதிலிருந்து இத் தீர்த்தத்தின் மகிமை பேசப்படுகின்றது . திருக்கோயில் வரலாறும் நிர்வாகமும் இந்தக் கோயிலின் ஆரம்பத்தினை அறிந்து கொள்வதற்கு எவ்விதமான தொல்பொருட் சின்னங்களோ பட்டயங்களோ கிட்டவில்லை . இருப்பினும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டதாக இருப்பதற்குரிய கர்ண பரம்பரைக்கதைகள் உட்பட மட்டக்காப்பு மான்மிய நூலும் சான்றாக அமைகின்றது . இராமர் வழிபட்ட இலிங்கமே தற்போது இத் தலத்தில் உள்ளது என்பது நம்பிக்கை . இந்த இலிங்கத்தை இப் பகுதியில் வேட்டையாடும் வேடன் ஒருவன் கனவில் கண்டு வணங்கி பின் விழித்த போது இலிங்க அருட்காட்சி கண்டு காடு அகற்றி தூசு நீக்கி தனது இனத்தவர்களைக் கூட்டி வந்து 09 ஸ்ரீமாமா ஸ்ேவரர் ஆலய தல பிட்ேசம் தெ சிறு கொத்துப் பந்தல் கட்டி பூசை செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது . 1837 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நில வரைபடத்தில் இக்கோயில் களி மண்ணால் அமைக்கப்பட்டிருப்பதாகப் பதியப்பட்டுள்ளது . 1880 ஆம் ஆண்டு கோயில் அறங்காவல் சபை உருவாக்கப்பட்டு பின்பு 1888 ஆம் ஆண்டு இக் கோயிலுக்கு உறுதி வரையப்பட்டது . 1880 ஆம் ஆண்டு முதற் குடமுழுக்கை இக் கோயில் கண்டது . ஆரம்பத்தில் கொடியேற்றத்துடன் ஐந்து நாள் திருவிழாக்கள் நடைபெற்றன . தற்போது ஆடி மறைமதியை ( அமாவாசையை ) தீர்த்தமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன . ஆலய நிர்வாகம் கோட்டமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும் அமிர்தகழி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்கும் உரித்துடையது என்றும் யாப்பில் வரையப்பட்டடுள்ளது . கோயில் பற்றிய நூல்கள் மாமாங்கேச்சரரின் புகழைப் பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களையும் நூல்களையும் அருளியுள்ளனர் . வித்துவான் சரவணமுத்தன் அவர்களால் மாமாங்கேச்சுரர் கீர்த்தனை மற்றும் மாமாங்கர் பதிகம் என்னும் நூல்கள் பாடப்பட்டுள்ளன . பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்கள் மாமாங்கேசுவர் பதிகம் எனும் விருத்தப்பாவை அருளியுள்ளார் . புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் மாமாங்கேச்சுமப்பதிகம் அருள மண்டூர் பூ . சின்னையா அவர்கள் மாமாங்கப் பிள்ளையார் விருத்தம் எனும் நூலை அருளியுள்ளார் இவையெல்லாம் பக்தி ததும்பிய பணுவல்கள் ஆகும் . இக் கோயிலின் வரலாறு பற்றி இன்று எமக்கு இரு நூல்கள் கிடைத்துள்ளன . அவை மாமாங்கப் பிள்ளையார் வரலாறு மாமாங்கப் பிள்ளையார் மான்மியம் என்பனவாகும் . கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டு தேசத்தில் கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றக் கூடிய சிவன் கோயில் மாமாங்கேச்சரம் ஆகும் . சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாஜி பிரான்சு