தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

தெ 10 மட்டுதேசத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களுள் மாமாங்கேசுவரப் பிள்ளையாரின் அருளை ஒத்த, ஈசுவரப்பிள்ளையாராக, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புக்களாலும், அற்புதங்களாலும், அருளாட்சியாலும் இப்பிரதேசத்தாரின் கலையிலும், நலனிலும் கலந்து புகழ் பெற்று விளங்குகின்றது. இயற்கைச் சூழலும் ஆலய அமைவிடமும் களுதாவளைக் கிராமம் வெற்றிலைத் தோட்டத்திற்கும், பொன்முருங்கைக் கீரை, கத்தரிக்காய் போன்ற இலைகறி காய்க்கும், கமத்தொழிலுக்கும் புகழ் பெற்றது. கிழக்கே நெய்தல் நிலமும், மேற்கே மட்டுவாவியாலும் நடுவே மருத நிலமும் ஒன்றிணைந்த நிலங்களையும் வரிசையாக நிழல் பரப்பி நிற்கும் மருதமரங்களையும், தாமரை மலர்களால் நிறைந்த குளத்துப் பின்னணியிலும் கிழக்குத் திசைநோக்கிய தாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் அமைவிடம் மட்டு நகரிலிருந்து தெற்கே 24 கிலோமீற்றர் தூரத்திலும், கல்முனையிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலும் களுதாவளை என்னும் பழைமையான ஊரின் கண் அமைந்துள்ளது. பிரதான வீதியிலே அலங்காரங்களுடன் தோரணவாயில் அமைக்கப் பட்டுள்ளது. இத்தலம் குடியிருப்புக்கள் அற்ற இயற்கைச் சூழலில் அமைதியாக அமைந்துளளது. திருத்தல வரலாறு பொதுவாக மட்டுதேசத்திலுள்ள பழம்பெரும் கோயில்களுள் வரலாறெல்லாம் கதிர்காம நடைபவனியோடு (யாத்திரையோடு) தொடர்புபட்டதும், அதனோடு இணைந்த கர்ணபரம்பரைக் கதைகளுடன் தொடர்புபட்டதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோயிலும் அத்தகையதொன்றாகவே நோக்க முடிகின்றது. "களுதேவாலயக் கல்வெட்டு" என்ற ஆவணத்தில் இத்திருத்தலத்தின் வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. இங்கு யே நமஹ கல்வெட்டு என்று குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை. மாறாக பனை ஓலைச்சுவடியில் பொறிக்கப்பட்டதாகவே உள்ளது. இலங்கை இந்துக் கலாசாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட "இலங்கையில் இந்து கோயில்கள்" என்ற நூலில் வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் ஓலைச்சுவடியில் உள்ளவற்றை தெளிவுற அச்சு வாகனம் ஏற்றி இத்திருத்தல வரலாற்றைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, "கலியுகம் பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடபமாதமதில் இரண்டாம் திகதிகளில் திருக்கோயிலாய் நிச்சயம் இட்டு வணங்கப்பட்டது” என்ற குறிப்பு இக்கோயிலின் உற்பத்தியை உறுதிசெய்கின்றது. ஓலைச்சுவடியிலிருந்த பாடல்வரிகளின் படி இத்தலத்தின் வரலாறு ஓதப்பட்டுள்ளது. "விற்பரமாம் குரு லிங்க சங்கமக் குருவொடு பண்டாரம் இரு வருமாய் கதிரை நகர் நடந்தவாறே செல்லும் வழிதனிலே அன்று தாழிகை ஒன்பதிலே களுவை நகர் களுதேவ ஆலயமாம் வெள்ளிலைச் சடங்கு செய்யுமிடம் இதுதானென்று கண்டு இன்றிதில் நாம் கடமையைக் கருதி அங்கு தங்கினரே........ 99 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோயில் ஓம் மகா கணபதியே போற்றி இப்பாடலின் படி வீரசைவ மரபைத் (இலிங்கதாரிகள்) தழுவியவர்களே இங்கு வழிபாடு செய்தார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னர் இவ்விடத்தில் வாழ்ந்த ஆதிவாசிகளான வேடுவர்கள் வெள்ளிலைச்சடங்கு (வெற்றிலைச் சடங்கு) செய்து வரும் காலத்தில், கதிர்காம நடைபவனி செல்லவந்த இலிங்கதாரிகள் இருவர் இவ்விடத்தில் தங்கி, இலிங்க பூசை செய்துவந்தனர். இவ்வரலாற்றின் படி வேடர் தலைவனான களுவன் வழிபாடு இயற்றிய இடமே "களு தேவாலயம்" என அழைக்கப்பட்டது. பின்னர் இச்சொல் மருவி களுதாவளை என அழைக்கப் படலாயிற்று. 66 '......... குளத்தில் இறங்கிப் பின் தோய்ந்து உலர்ந்து சிவலிங்க பூசை செய்வதென தெட்சைக்கட்டுத் திறக்கலானார்....." "....இலிங்க பூமி மேல் சலம் பொறுக்கப் வோனவாறு விளக்கலுள்ளார்....” மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 சுயம்புலிங்கப் பிள்ளையார் எனப் பெயர்பெற்று புகழடைந்தது. திருக்கோயில் அமைப்பு என்கின்ற இரு பாடல்களின் செய்திப்படி இவ்விடத்தில் முதலில் நடைபெற்றது சிவலிங்க வழிபாடு என்பது உறுதியாகின்றது. இலிங்க பூசை புரிந்த பின் இலிங்கதாரிகள் இருவரும் இலிங்கத்தை அசைக்க முயன்றபோது அது மண்ணினுள் மறைந்து சுயம்பாக நீர்மட்டம் வரை நீண்டு கொண்டு செல்வதைக் கண்ணுற்று வியந்ததாகக் கூறப்படுகின்றது. 66 "....... எல்லை நாள் இவர் வந்தகாலம் கேளீர் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை பின் வளர அச் சாதியரும் வரு வரவு காணே..." " மணியாள் பூபால வன்னிமைதான் பார்க்கும் போது இட லிங்கம் என வணங்கி இலங்கை தன்னிடத்தில் ஈசனிட ஆலயஙக்ள் உண்டு பாரும் மூல சக்தி விநாயகர் ஆலயந்தான் பிள்ளையார் கோயிலிது அதுவாக சிவ பிரானைப் பணியும் என்னும் இயம்பினார் வன்னிமையும் இயம்பினாரே.." என்கின்ற மேல்வரும் இரு பாடல்கள் தரும் செய்தி சிவலிங்க மூர்த்தி ஐங்கரன் கோயிலான வரலாறு கூறப்படுகின்றது. இலிங்கதாரிகள் இலிங்கம் கிட்டாமல் சென்றபின், அவ்வூர் கிராமவாசிகள் கொத்துப் பந்தல் கட்டி வழிபாடு இயற்றி வரும் காலத்தில் இவ் இலிங்க மகிமையை கேள்வியுற்ற பூபால வன்னிமை என்பவன் அவ் இலிங்கத்தை தரிசித்து அதில் பிள்ளையாரின் அம்சம் உறைந்திருப்பதாக உரைத்து அதனை பிள்ளையாராக வழிபடும்படி வேண்டியதால் அதிலிருந்து களுதாவளை இத்தலம் மடாலயக் கோயிலாக அமைந்துளள்து. கருவறையிலுள்ள சுயம்பு இலிங்கத்தை மறைத்து பீடத்தில் ஐங்கரனது திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் மரமாய் வில்வம் விளங்குகின்றது. சைவப்புலவர் கருவறை, பலிபீடம், பெரு மண்டம், வசந்த மண்டபம், யாகசாலை, வாகனசாலை, மணித்தூ ண், மடங்கள் என்பவையும், முருகன், நாகதம்பிரான், வைரவர், ஒன்பான் கோள்கள் என்பன பரிவார தேவர்களாக அமைந்துளள்ளது. மண்டபங்களைத் தாங்கும் தூண்களும் அதன் அலங்காரங்களும், சிற்பங்களும் தென்னிந்திய கலைப்பாணியைத் தழுவியதாக அமைந்துள்ளது. கோயில் முன்றலில் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. பூசைகளும் விழாகக்ளும் நாள்தோறும் பூசைகள் இடம்பெறுவதோடு, வாரப்பூசையாகிய வெள்ளிக்கிழமையில் சிறப்பு மிகுந்த பூசைகள், பொதுமக்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் மோதக பூசைகள், அன்னதானம் என்பன முக்கியத்துவம் பெற்றவை. வருடாவருடம் பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெற்று, ஆனி உத்திரத்தில் தீர்த்த உச்சவம் நடைபெறும். இத்தீர்த்த மகிமையை உணர்ந்து பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து பெருமானது அருளையும், ஐங்கரனது அருளையும் ஒருங்கே பெறுவர். மற்றும் ஒன்பதாம் நாள் நடைபெறும் மாம்பழத் திருவிழா மிகவும் சிறப்புடையது. இது பத்தி பூர்வமான நாடகமாக நடித்து காட்டப்படும். அத்தோடு பிள்ளையார் சதுர்த்தி, பிள்ளையார் கதை படித்தல், மகாசிவனிரவு, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய விரதங்களும் தை, சித்திரை மாத விழாக்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் வருடங்களுக்கு ஒருமுறை சங்குநீராட்டும், பல வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பு நீராட்டும், சிவநீராட்டு முதலிய காமியக் கிரிகைகளும் நடைபெறுகின்றன. வெற்றிலைச் சடங்கின் தொடர்ச்சியாக இன்றும் கருவறையில் வெற்றிலையும் பாக்கும் சேர்த்து பெரிய வட்டாவில் மடைபோடும் வழக்கமும் இருந்துவருகின்றது. பிள்ளை விற்று வாங்குதல், காது குத்துதல், முடிமழித்தல், திருவமுது ஊட்டுதல், திருமணங்கள் ஆகிய நற்காரியங்களும் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், கும்மி அடித்தல் ஆகிய நேர்த்திக்கடன்களும் நடைபெறுகின்றது. இறைவனின் அற்புதங்கள் 1978ம் ஆண்டு வீசிய சூறாவளியில் இக்கிராமம் முழுவதும் அழிவுற, இத்தலம் மட்டும் அழியாத ஆற்றலைப் பெற்றிருந்தது. பேசமுடியாதவர்களை பேசவைக்கும் மகிமை பெற்ற தலமாகவும்,வாதம்,மலடு, குருடு, செவிடு முதலிய குறைகளைப் போக்கி தன்னை நாடிவரும் பத்தர்களுக்கு அற்புதங்கள் புரிந்து அருள் புரியும் மூர்த்தியாக புகழ்பெற்று விளங்குகின்றார. இதனாலேயே அடியவர்கள் நேர்கடன்கள் அதிகரித்துக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இத்தலத்தின் வரலாறு பற்றி அறிய உதவும் இலங்கியங்களுள் "களுவை நகர் களுதேவாலயக் கல்வெட்டு" முதன்மையானதாக விளங்குகின்றது. அத்தோடு இப்பிரதேச அடியவர்களும் பல பத்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் கழுதாவளை சுயம்பு பிள்ளையார், திருப்பொன்னூ ஞ்சல், காவடிப்பாடல்கள், அருள்பாமாலைகள், என்பன குறிப்பிடத்தக்கனவாகும். இத்தலம் கிராமியக் கலையின் வளர்ச்சிக்கும், சமூக அபிவிருத்திப் பணிக்கும் முக்கிய பங்காற்றிவரும் சமூக நிறுவனமாகவும் செயற்பட்டு வருகின்றது.
தெ 10 மட்டுதேசத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களுள் மாமாங்கேசுவரப் பிள்ளையாரின் அருளை ஒத்த ஈசுவரப்பிள்ளையாராக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது . இவ்வாலயம் மூர்த்தி தலம் தீர்த்த சிறப்புக்களாலும் அற்புதங்களாலும் அருளாட்சியாலும் இப்பிரதேசத்தாரின் கலையிலும் நலனிலும் கலந்து புகழ் பெற்று விளங்குகின்றது . இயற்கைச் சூழலும் ஆலய அமைவிடமும் களுதாவளைக் கிராமம் வெற்றிலைத் தோட்டத்திற்கும் பொன்முருங்கைக் கீரை கத்தரிக்காய் போன்ற இலைகறி காய்க்கும் கமத்தொழிலுக்கும் புகழ் பெற்றது . கிழக்கே நெய்தல் நிலமும் மேற்கே மட்டுவாவியாலும் நடுவே மருத நிலமும் ஒன்றிணைந்த நிலங்களையும் வரிசையாக நிழல் பரப்பி நிற்கும் மருதமரங்களையும் தாமரை மலர்களால் நிறைந்த குளத்துப் பின்னணியிலும் கிழக்குத் திசைநோக்கிய தாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது . திருக்கோயில் அமைவிடம் மட்டு நகரிலிருந்து தெற்கே 24 கிலோமீற்றர் தூரத்திலும் கல்முனையிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலும் களுதாவளை என்னும் பழைமையான ஊரின் கண் அமைந்துள்ளது . பிரதான வீதியிலே அலங்காரங்களுடன் தோரணவாயில் அமைக்கப் பட்டுள்ளது . இத்தலம் குடியிருப்புக்கள் அற்ற இயற்கைச் சூழலில் அமைதியாக அமைந்துளளது . திருத்தல வரலாறு பொதுவாக மட்டுதேசத்திலுள்ள பழம்பெரும் கோயில்களுள் வரலாறெல்லாம் கதிர்காம நடைபவனியோடு ( யாத்திரையோடு ) தொடர்புபட்டதும் அதனோடு இணைந்த கர்ணபரம்பரைக் கதைகளுடன் தொடர்புபட்டதாகவும் கூறப்படுகின்றது . அந்தவகையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோயிலும் அத்தகையதொன்றாகவே நோக்க முடிகின்றது . களுதேவாலயக் கல்வெட்டு என்ற ஆவணத்தில் இத்திருத்தலத்தின் வரலாறு கூறப்பட்டிருக்கின்றது . இங்கு யே நமஹ கல்வெட்டு என்று குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை . மாறாக பனை ஓலைச்சுவடியில் பொறிக்கப்பட்டதாகவே உள்ளது . இலங்கை இந்துக் கலாசாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இலங்கையில் இந்து கோயில்கள் என்ற நூலில் வரலாற்றுப் பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் ஓலைச்சுவடியில் உள்ளவற்றை தெளிவுற அச்சு வாகனம் ஏற்றி இத்திருத்தல வரலாற்றைத் தெளிவுபடுத்தியுள்ளார் . இதன்படி கலியுகம் பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடபமாதமதில் இரண்டாம் திகதிகளில் திருக்கோயிலாய் நிச்சயம் இட்டு வணங்கப்பட்டது என்ற குறிப்பு இக்கோயிலின் உற்பத்தியை உறுதிசெய்கின்றது . ஓலைச்சுவடியிலிருந்த பாடல்வரிகளின் படி இத்தலத்தின் வரலாறு ஓதப்பட்டுள்ளது . விற்பரமாம் குரு லிங்க சங்கமக் குருவொடு பண்டாரம் இரு வருமாய் கதிரை நகர் நடந்தவாறே செல்லும் வழிதனிலே அன்று தாழிகை ஒன்பதிலே களுவை நகர் களுதேவ ஆலயமாம் வெள்ளிலைச் சடங்கு செய்யுமிடம் இதுதானென்று கண்டு இன்றிதில் நாம் கடமையைக் கருதி அங்கு தங்கினரே ........ 99 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோயில் ஓம் மகா கணபதியே போற்றி இப்பாடலின் படி வீரசைவ மரபைத் ( இலிங்கதாரிகள் ) தழுவியவர்களே இங்கு வழிபாடு செய்தார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது . முன்னர் இவ்விடத்தில் வாழ்ந்த ஆதிவாசிகளான வேடுவர்கள் வெள்ளிலைச்சடங்கு ( வெற்றிலைச் சடங்கு ) செய்து வரும் காலத்தில் கதிர்காம நடைபவனி செல்லவந்த இலிங்கதாரிகள் இருவர் இவ்விடத்தில் தங்கி இலிங்க பூசை செய்துவந்தனர் . இவ்வரலாற்றின் படி வேடர் தலைவனான களுவன் வழிபாடு இயற்றிய இடமே களு தேவாலயம் என அழைக்கப்பட்டது . பின்னர் இச்சொல் மருவி களுதாவளை என அழைக்கப் படலாயிற்று . 66 ' ......... குளத்தில் இறங்கிப் பின் தோய்ந்து உலர்ந்து சிவலிங்க பூசை செய்வதென தெட்சைக்கட்டுத் திறக்கலானார் ..... .... இலிங்க பூமி மேல் சலம் பொறுக்கப் வோனவாறு விளக்கலுள்ளார் .... மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 சுயம்புலிங்கப் பிள்ளையார் எனப் பெயர்பெற்று புகழடைந்தது . திருக்கோயில் அமைப்பு என்கின்ற இரு பாடல்களின் செய்திப்படி இவ்விடத்தில் முதலில் நடைபெற்றது சிவலிங்க வழிபாடு என்பது உறுதியாகின்றது . இலிங்க பூசை புரிந்த பின் இலிங்கதாரிகள் இருவரும் இலிங்கத்தை அசைக்க முயன்றபோது அது மண்ணினுள் மறைந்து சுயம்பாக நீர்மட்டம் வரை நீண்டு கொண்டு செல்வதைக் கண்ணுற்று வியந்ததாகக் கூறப்படுகின்றது . 66 ....... எல்லை நாள் இவர் வந்தகாலம் கேளீர் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை பின் வளர அச் சாதியரும் வரு வரவு காணே ... மணியாள் பூபால வன்னிமைதான் பார்க்கும் போது இட லிங்கம் என வணங்கி இலங்கை தன்னிடத்தில் ஈசனிட ஆலயஙக்ள் உண்டு பாரும் மூல சக்தி விநாயகர் ஆலயந்தான் பிள்ளையார் கோயிலிது அதுவாக சிவ பிரானைப் பணியும் என்னும் இயம்பினார் வன்னிமையும் இயம்பினாரே .. என்கின்ற மேல்வரும் இரு பாடல்கள் தரும் செய்தி சிவலிங்க மூர்த்தி ஐங்கரன் கோயிலான வரலாறு கூறப்படுகின்றது . இலிங்கதாரிகள் இலிங்கம் கிட்டாமல் சென்றபின் அவ்வூர் கிராமவாசிகள் கொத்துப் பந்தல் கட்டி வழிபாடு இயற்றி வரும் காலத்தில் இவ் இலிங்க மகிமையை கேள்வியுற்ற பூபால வன்னிமை என்பவன் அவ் இலிங்கத்தை தரிசித்து அதில் பிள்ளையாரின் அம்சம் உறைந்திருப்பதாக உரைத்து அதனை பிள்ளையாராக வழிபடும்படி வேண்டியதால் அதிலிருந்து களுதாவளை இத்தலம் மடாலயக் கோயிலாக அமைந்துளள்து . கருவறையிலுள்ள சுயம்பு இலிங்கத்தை மறைத்து பீடத்தில் ஐங்கரனது திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது . இத்தலத்தின் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் மரமாய் வில்வம் விளங்குகின்றது . சைவப்புலவர் கருவறை பலிபீடம் பெரு மண்டம் வசந்த மண்டபம் யாகசாலை வாகனசாலை மணித்தூ ண் மடங்கள் என்பவையும் முருகன் நாகதம்பிரான் வைரவர் ஒன்பான் கோள்கள் என்பன பரிவார தேவர்களாக அமைந்துளள்ளது . மண்டபங்களைத் தாங்கும் தூண்களும் அதன் அலங்காரங்களும் சிற்பங்களும் தென்னிந்திய கலைப்பாணியைத் தழுவியதாக அமைந்துள்ளது . கோயில் முன்றலில் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது . பூசைகளும் விழாகக்ளும் நாள்தோறும் பூசைகள் இடம்பெறுவதோடு வாரப்பூசையாகிய வெள்ளிக்கிழமையில் சிறப்பு மிகுந்த பூசைகள் பொதுமக்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் மோதக பூசைகள் அன்னதானம் என்பன முக்கியத்துவம் பெற்றவை . வருடாவருடம் பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெற்று ஆனி உத்திரத்தில் தீர்த்த உச்சவம் நடைபெறும் . இத்தீர்த்த மகிமையை உணர்ந்து பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து பெருமானது அருளையும் ஐங்கரனது அருளையும் ஒருங்கே பெறுவர் . மற்றும் ஒன்பதாம் நாள் நடைபெறும் மாம்பழத் திருவிழா மிகவும் சிறப்புடையது . இது பத்தி பூர்வமான நாடகமாக நடித்து காட்டப்படும் . அத்தோடு பிள்ளையார் சதுர்த்தி பிள்ளையார் கதை படித்தல் மகாசிவனிரவு திருக்கார்த்திகை திருவாதிரை ஆகிய விரதங்களும் தை சித்திரை மாத விழாக்களும் நடைபெற்று வருகின்றன . மேலும் வருடங்களுக்கு ஒருமுறை சங்குநீராட்டும் பல வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பு நீராட்டும் சிவநீராட்டு முதலிய காமியக் கிரிகைகளும் நடைபெறுகின்றன . வெற்றிலைச் சடங்கின் தொடர்ச்சியாக இன்றும் கருவறையில் வெற்றிலையும் பாக்கும் சேர்த்து பெரிய வட்டாவில் மடைபோடும் வழக்கமும் இருந்துவருகின்றது . பிள்ளை விற்று வாங்குதல் காது குத்துதல் முடிமழித்தல் திருவமுது ஊட்டுதல் திருமணங்கள் ஆகிய நற்காரியங்களும் காவடி எடுத்தல் கற்பூரச்சட்டி எடுத்தல் கும்மி அடித்தல் ஆகிய நேர்த்திக்கடன்களும் நடைபெறுகின்றது . இறைவனின் அற்புதங்கள் 1978 ம் ஆண்டு வீசிய சூறாவளியில் இக்கிராமம் முழுவதும் அழிவுற இத்தலம் மட்டும் அழியாத ஆற்றலைப் பெற்றிருந்தது . பேசமுடியாதவர்களை பேசவைக்கும் மகிமை பெற்ற தலமாகவும் வாதம் மலடு குருடு செவிடு முதலிய குறைகளைப் போக்கி தன்னை நாடிவரும் பத்தர்களுக்கு அற்புதங்கள் புரிந்து அருள் புரியும் மூர்த்தியாக புகழ்பெற்று விளங்குகின்றார . இதனாலேயே அடியவர்கள் நேர்கடன்கள் அதிகரித்துக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது . இத்தலத்தின் வரலாறு பற்றி அறிய உதவும் இலங்கியங்களுள் களுவை நகர் களுதேவாலயக் கல்வெட்டு முதன்மையானதாக விளங்குகின்றது . அத்தோடு இப்பிரதேச அடியவர்களும் பல பத்திப் பாடல்களைப் பாடியுள்ளனர் . அவற்றுள் கழுதாவளை சுயம்பு பிள்ளையார் திருப்பொன்னூ ஞ்சல் காவடிப்பாடல்கள் அருள்பாமாலைகள் என்பன குறிப்பிடத்தக்கனவாகும் . இத்தலம் கிராமியக் கலையின் வளர்ச்சிக்கும் சமூக அபிவிருத்திப் பணிக்கும் முக்கிய பங்காற்றிவரும் சமூக நிறுவனமாகவும் செயற்பட்டு வருகின்றது .