தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

தெ 04 தென்னாடு செந்தமிழாகம் சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org என்று தெளியும் இந்த ஆரியக் குழப்பம்? ஓர் இனம் தான் சார்ந்த தொன்மைகளையும், வரலாற்றையும் முறைப்படி தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் போனால், எதிர்காலச் சந்ததியினர் எவ்வளவு குழப்பங்களை எதிர்கொள்வார்கள் என்பதை தமிழினத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். ஆனாலும், காலத்துக்குக்காலம் ஏற்பட்ட கடல்கோள்களால், அழிந்தவை போக, நிலைத்தவையை வைத்து, வாழ்க்கையையும், வரலாற்றையும் ஒருசேரத் தலைமுறை தாண்டியும் கடத்துவதற்கு, எம் மூதாதை யர்கள் எவ்வளவு கடினங்களை சுமந்திருப்பார்கள் என்பதை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம்! அண்மையில் கடந்துபோன தமிழர் புத்தாண்டாகிய சித்திரைத் திருநாளிலும், எமக்கிடையே இத்தகு பெருங்குழப்பம் ஒன்றை அவதானித்தோம். சிலர் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு எனவும் தம் வாதத்தர்க்கங்களை முன்வைத்திருந்தனர்! கைபர் கணவாயூடாக பாரதநாடு வந்து சேர்ந்த ஆரியர், தெளிந்து கிடந்த ஒரு தேசத்தின் அகக்கூறுகளைக் குழப்பியும், உயர்ந் திருந்த அவர்களின் அறிவியலைத் திருடித் திரித்தும், தமக்கான சுயலாபத்தைத் தேடிக்கொண்டனர். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களல்லவா அவர்கள்? விண்ணாய்வுச் சித்தர்களும், வானியல் அறிஞர்களும் ஆய்ந்து அறிந்து, மேலைத்தேய விஞ்ஞானிகள் பிழையான புவி மையக் கொள்கையை முன் வைத்துப் பின்னர் தெளிவு காண்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் சூரிய மையக் கொள்கையை அறிந்து கோயில்களில் எல்லாம் சூரியனை சுற்றி ஏனைய கோள்களை அமைத்துத் தம் உயர்த்த வானியல் அறிவைத் தக்கவைத்தனர் ஆயினும் சரிவர அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கத் தவறினர்..! அறுபது சுழல் ஆண்டுகளின் அமைப்பும் அத்தகைய தமிழர் கணிப்பே! அதைத் திருடிய ஆரியர், திருமாலிற்கும், நாரதருக்கும் பிறந்த குழந்தைகளே அறுபது ஆண்டுகள் என்று திரித்து, அவற்றுக்கு வடமொழியில் பெயர்களைச் சூட்டி அபத்தமான கதைகளைக் கட்டி எம்மையும் குழம்பினர். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள், பிராமண எதிர்ப்பு கொள்கைகளோடு வளர்ச்சி பெற்று வந்த காலத்தில், இந்த அபத்தமான கட்டுக்கதையை மறுதலிப்பதற்காக மட்டுமே, அதை பகுத்தறிவுக்கு எதிரானதாக எடுத்துக் கொண்டு, அதன் பின்னுள்ள ஆரியத்திருட்டை அறியாமல், சித்திரை வருட பிறப்பைக் கைவிட்டுத் தமிழர் புத்தாண்டாகத் தை முதல் நாளாகிய, தைப்பொங்கலை முன்மொழிந்தனர். இதனால் புதிதாய் மேலும் ஒரு குழப்பம் தோன்றியதே தவிர பழைய குழப்பம் தீர்ந்தாயும் இல்லை! ஆடாகிய, மேடராசியில் பிறக்கும் 'வருடம்’, ஆட்டைக் குறித்த 'வருடை' என்ற சொல்லில் இருந்தே முகிழ்த்தது! பழந்தமிழ் சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையும் இதனையே, “திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக” என்று பதிவு செய்கிறது! "நித்திரையில் இருக்கும் தமிழா... சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு..." என்று தனியே ஆரிய எதிர்ப்புக்காக மட்டுமே பாவேந்தர் பாரதிதாசனால் சரியான ஆய்வும் தெளிவும் இன்றி எழுதப்பட்ட வரிகளை மட்டுமே கொண்டு நம்மில் சில இளையோர் வாதிடுவது வருந்தத்தக்கதே! அறிவுசார்ந்த தமிழினம் உணர்வு சார்ந்தும் பலவீனமாக இருப்பதால், எளிதில் சில திணிப்புக்களையும் திரிபுகளையும் எம்மீது சுமத்த எதிரியால் முடிகிறது என்பதை உணர்வதே உத்தமமாகும்! சினிமா என்ற கொடிய மோகத்திலும், போதை என்ற வலையிலும் சிக்கிக்கிடக்கும் வரை, தேடல்களுக்கான கதவுகள் திறக்காது என்பதே திண்ணம்! குழம்பிப்போயுள்ள, தெளிந்த பேராறாகிய தமிழர் வரலாற்றில் சாக்கடைகள் கலக்காது காப்பதற்கு இளைய கரங்கள் அணையமைக்க வேண்டும்! எனவே நாம் சரியான ஆய்வுகளை அறிவிக்கண்ணோடு மேற்கொண்டு புதிய ஆண்டிலாவது இந்த ஆரியக் குழப்பங்கள் நீங்கி அறிவும் தெளிவும் பெறுவோமாக! "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" தென்னாடு பண்பாட்டு மண்ணுக்கு பாவையரை உருவாக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி திங்கள் ஒரு பள்ளி மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 AFFNA HINDU LADIES COLLEGE யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது தமிழர் பண்பாட்டுச் சூழலில் சைவசமய விழுமியங் களைப் பேணும் வகையில் யாழ்ப்பாணப் பெண் பிள்ளைகள் ஆங்கில மொழி மூலக் கல்வியைப் பெறும் பொருட்டு உருவாக்கப்பட்ட கல்லூரி ஆகும். சைவசமயத்தின் காவலரான ஆறுமுகநாவலரின் தோற்றத்தோடு யாழ்ப்பாணத்தின் கல்வி மரபிலே ஏற்பட்ட திருப்புமுனைகளின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிறுவப்பட்டது. அக்கல்லூரியில் 1935ஆம் ஆண்டு முதல் சைவத்தமிழ்ப் பெண்களும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பின் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பெண்களுக்கென தனியானதொரு பாடசாலை அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, திருவாளர் சிவகுருநாதர் பொன்னுச்சாமி என்பவரின் "பொன்னாலயம்” என்னும் வீட்டில் 10.09.1943 முதல் பெண்பிள்ளைகளுக்கான பாடசாலை தனியாக இயங்கத் தொடங்கியது. பின் தார்மீக வள்ளல் விசாலாட்சி சிவகுருநாதர் அவர்களின் பெருந்தன்மையால் 07.09.1947இல் கிடைத்த நாற்பது பரப்பு காணியில் கல்லூரி இயங்கத் தொடங்கியது. யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டமையின் விளைவாக மாணவிகளின் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து 1954இல் தரம் 4 - வரை 1100 மாணவர்களை கொண்டிருந்ததன் காரணமாக கல்லூரியானது தரம் - II இற்கு உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 1952 1954இல் கல்லூரியின் இலட்சினை, மகுடவாசகம், கல்லூரிக்கீதம் என்பன இயற்றப்பட்டன. அத்துடன் கல்லூரிக்கொடி, கழுத்துப்பட்டி என்பவற்றிக்குரிய நிறங்களாக பச்சை வெள்ளை நிறங்கள் தெரிவு செய்யப்பட்டன. 1956இல் பாடசாலை தரம்- I இற்கு தரம் உயர்த்தப்பட்டதோடு 1960 இல் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நான்காம் வகுப்பிலிருந்து தொடங்கிய முறைமை 1968 இல் முதலாம் வகுப்பு ஆரம்ப வகுப்பாக வகுக்கப்பட்டது. இக்காலத்திலேயே வெள்ளிவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1978 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்ப வகுப்புக்கள் தனியாக்கப்பட்டு யாஃ யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் தனியாக ஒரு அதிபரின் கீழ் இயங்கத்தொடங்கியது. அதன்பின் அனுமதிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவிகளே தரம் 6 இல் அனுமதிக்கப்பட்டனர். அப்போது 1790 மாணவிகள் கல்விகற்றனர். இக்காலகட்டத்தில் அதிபர் அலுவலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், வகுப்பறைகள் கொண்ட மாடிக் கட்டடங்கள் என்பன அமைக்கப்பட்டன. 1986 இல் கல்லூரி வளாகத்தில் நடுத்தோட்ட இராசவரோதயப் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டது. 1987இல் இந்திய அமைதிப்படையினர் யாழ் நகரைக் கைப்பற்றிய வேளையில், எமது கல்லூரி அகதிமுகாமாக்கப்பட்டது. பின் 1995 ஒக்டோபரில் பௌதீக வளங்கள் யாவற்றையும் கைவிட்ட நிலையில் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் 1996ல் பாடசாலை மீண்டும் இதே இடத்தில் சிறுதிருத்த வேலைகளுடன் இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட பௌதீகவள மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக 2009 இல் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது. 2010இல் ஒசுத்திரேலியா பழைய மாணவிகளால் பாடசாலைக்கென சிற்றுண்டிச்சாலை அமைத்துக்கொடுக்கப்பட்டது. 2011இல் கனடா பழைய மாணவிகளின் நிதிப்பங்களிப்போடு 20 கணிணிகளைக் கொண்ட, கணினி அறைவசதி செய்துகொடுக்கப்பட்டது. தொடர்ந்து 1000 பாடசாலை அபிவருத்தித் திட்டத்தின் கீழ் 2014இல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிறுவப்பட்டது. அத்துடன் 2015 இல் இலங்கை வங்கி உதவியுடன் நூலகம் புனரமைப்புச் செய்யப்பட்டது. மேலும் கல்லூரியின் பழைய மாணவிகள் பலரும் ஒன்றிணைந்து பவளவிழாக் காலத்தில் மண்டபத் துடன் கூடிய வகுப்பறைக் கட்டடத்தொகுதிகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டடமான "பவளவிழா மண்டபம்" அமைக்கப்பட்டது. மேலும் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடத்தின் நிதிப்பங்களிப் புடன் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி மற்றும் மலசலகூடங்களும் அமைத்து 2017இல் கையளிக்கப்பட்டது. அண்மைக்காலமாக கல்லூரி அன்னை பலவழிகளிலும் மெருகூட்டப்பட்டு அழகொளிர மிளிர்கின்றாள். கல்லூரி நுழைவாயில், பிரதான மண்டபம், விளையாட்டு மைதானம், அலுவலகம், அலுவலக மேல்தளம், கல்லூரியின் உள்வீதிகள் என்பன புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்வாங்கும் பொருட்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன் பாடசாலையின் பெரும்பாலான பாகங்களுக்கு இணைய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக் கருதி மறைகாணிகள் (கமராக்கள்) வளாகத்தினுள் பொருத் தப்பட்டுள்ளன. அடுத்து விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பல செயற்பாடுகள் இடம்பெற்று வருவதோடு மைதானப் பார்வையாளர் அரங்குக்கான நிதி அபிவிருத்தி யுத்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு இவ்வாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவரு கின்றன. இவ்வாறு கல்லூரியின் புதுப்புது வளர்ச்சிகள் பலமுறைகளிலும் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கின்ற இக்கல்லூரி இனிவரும் காலங்களில் மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை யாழ்ப்பாண மக்களிடையே வலுப்பெற்றுள்ளது. காலத்தைக் கடந்து கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பல சாதனைகளைப் படைத்து உயர எல்லாம் வல்ல ஐம்பூதநாதரின் வல்லமை மிகு தாள்களை மனம், மொழி, மெய்களினாலே பணிவேற்றி இறைஞ்சு கின்றோம். "திருமிகு மெங்கள் யாழ்நகர்க் கணியாய்த் திகழ்ந்திடுங் கல்லூரி எங்கள் பெருவருமிந்துப் பெண்களுக் கொளியாய் பிறங்கிடும் கல்லூரி உயர் மருவுறு கலைகள் யாவையு மின்பாய் வழங்கிடுங் கல்லூரி" இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org
தெ 04 தென்னாடு செந்தமிழாகம் சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org என்று தெளியும் இந்த ஆரியக் குழப்பம் ? ஓர் இனம் தான் சார்ந்த தொன்மைகளையும் வரலாற்றையும் முறைப்படி தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் போனால் எதிர்காலச் சந்ததியினர் எவ்வளவு குழப்பங்களை எதிர்கொள்வார்கள் என்பதை தமிழினத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் . ஆனாலும் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட கடல்கோள்களால் அழிந்தவை போக நிலைத்தவையை வைத்து வாழ்க்கையையும் வரலாற்றையும் ஒருசேரத் தலைமுறை தாண்டியும் கடத்துவதற்கு எம் மூதாதை யர்கள் எவ்வளவு கடினங்களை சுமந்திருப்பார்கள் என்பதை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம் ! அண்மையில் கடந்துபோன தமிழர் புத்தாண்டாகிய சித்திரைத் திருநாளிலும் எமக்கிடையே இத்தகு பெருங்குழப்பம் ஒன்றை அவதானித்தோம் . சிலர் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு எனவும் தம் வாதத்தர்க்கங்களை முன்வைத்திருந்தனர் ! கைபர் கணவாயூடாக பாரதநாடு வந்து சேர்ந்த ஆரியர் தெளிந்து கிடந்த ஒரு தேசத்தின் அகக்கூறுகளைக் குழப்பியும் உயர்ந் திருந்த அவர்களின் அறிவியலைத் திருடித் திரித்தும் தமக்கான சுயலாபத்தைத் தேடிக்கொண்டனர் . குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களல்லவா அவர்கள் ? விண்ணாய்வுச் சித்தர்களும் வானியல் அறிஞர்களும் ஆய்ந்து அறிந்து மேலைத்தேய விஞ்ஞானிகள் பிழையான புவி மையக் கொள்கையை முன் வைத்துப் பின்னர் தெளிவு காண்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சூரிய மையக் கொள்கையை அறிந்து கோயில்களில் எல்லாம் சூரியனை சுற்றி ஏனைய கோள்களை அமைத்துத் தம் உயர்த்த வானியல் அறிவைத் தக்கவைத்தனர் ஆயினும் சரிவர அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கத் தவறினர் .. ! அறுபது சுழல் ஆண்டுகளின் அமைப்பும் அத்தகைய தமிழர் கணிப்பே ! அதைத் திருடிய ஆரியர் திருமாலிற்கும் நாரதருக்கும் பிறந்த குழந்தைகளே அறுபது ஆண்டுகள் என்று திரித்து அவற்றுக்கு வடமொழியில் பெயர்களைச் சூட்டி அபத்தமான கதைகளைக் கட்டி எம்மையும் குழம்பினர் . தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் பிராமண எதிர்ப்பு கொள்கைகளோடு வளர்ச்சி பெற்று வந்த காலத்தில் இந்த அபத்தமான கட்டுக்கதையை மறுதலிப்பதற்காக மட்டுமே அதை பகுத்தறிவுக்கு எதிரானதாக எடுத்துக் கொண்டு அதன் பின்னுள்ள ஆரியத்திருட்டை அறியாமல் சித்திரை வருட பிறப்பைக் கைவிட்டுத் தமிழர் புத்தாண்டாகத் தை முதல் நாளாகிய தைப்பொங்கலை முன்மொழிந்தனர் . இதனால் புதிதாய் மேலும் ஒரு குழப்பம் தோன்றியதே தவிர பழைய குழப்பம் தீர்ந்தாயும் இல்லை ! ஆடாகிய மேடராசியில் பிறக்கும் ' வருடம் ஆட்டைக் குறித்த ' வருடை ' என்ற சொல்லில் இருந்தே முகிழ்த்தது ! பழந்தமிழ் சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையும் இதனையே திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக என்று பதிவு செய்கிறது ! நித்திரையில் இருக்கும் தமிழா ... சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு ... என்று தனியே ஆரிய எதிர்ப்புக்காக மட்டுமே பாவேந்தர் பாரதிதாசனால் சரியான ஆய்வும் தெளிவும் இன்றி எழுதப்பட்ட வரிகளை மட்டுமே கொண்டு நம்மில் சில இளையோர் வாதிடுவது வருந்தத்தக்கதே ! அறிவுசார்ந்த தமிழினம் உணர்வு சார்ந்தும் பலவீனமாக இருப்பதால் எளிதில் சில திணிப்புக்களையும் திரிபுகளையும் எம்மீது சுமத்த எதிரியால் முடிகிறது என்பதை உணர்வதே உத்தமமாகும் ! சினிமா என்ற கொடிய மோகத்திலும் போதை என்ற வலையிலும் சிக்கிக்கிடக்கும் வரை தேடல்களுக்கான கதவுகள் திறக்காது என்பதே திண்ணம் ! குழம்பிப்போயுள்ள தெளிந்த பேராறாகிய தமிழர் வரலாற்றில் சாக்கடைகள் கலக்காது காப்பதற்கு இளைய கரங்கள் அணையமைக்க வேண்டும் ! எனவே நாம் சரியான ஆய்வுகளை அறிவிக்கண்ணோடு மேற்கொண்டு புதிய ஆண்டிலாவது இந்த ஆரியக் குழப்பங்கள் நீங்கி அறிவும் தெளிவும் பெறுவோமாக ! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு தென்னாடு பண்பாட்டு மண்ணுக்கு பாவையரை உருவாக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி திங்கள் ஒரு பள்ளி மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 AFFNA HINDU LADIES COLLEGE யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது தமிழர் பண்பாட்டுச் சூழலில் சைவசமய விழுமியங் களைப் பேணும் வகையில் யாழ்ப்பாணப் பெண் பிள்ளைகள் ஆங்கில மொழி மூலக் கல்வியைப் பெறும் பொருட்டு உருவாக்கப்பட்ட கல்லூரி ஆகும் . சைவசமயத்தின் காவலரான ஆறுமுகநாவலரின் தோற்றத்தோடு யாழ்ப்பாணத்தின் கல்வி மரபிலே ஏற்பட்ட திருப்புமுனைகளின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிறுவப்பட்டது . அக்கல்லூரியில் 1935 ஆம் ஆண்டு முதல் சைவத்தமிழ்ப் பெண்களும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது . அதன் பின் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பெண்களுக்கென தனியானதொரு பாடசாலை அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து திருவாளர் சிவகுருநாதர் பொன்னுச்சாமி என்பவரின் பொன்னாலயம் என்னும் வீட்டில் 10.09.1943 முதல் பெண்பிள்ளைகளுக்கான பாடசாலை தனியாக இயங்கத் தொடங்கியது . பின் தார்மீக வள்ளல் விசாலாட்சி சிவகுருநாதர் அவர்களின் பெருந்தன்மையால் 07.09.1947 இல் கிடைத்த நாற்பது பரப்பு காணியில் கல்லூரி இயங்கத் தொடங்கியது . யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டமையின் விளைவாக மாணவிகளின் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து 1954 இல் தரம் 4 - வரை 1100 மாணவர்களை கொண்டிருந்ததன் காரணமாக கல்லூரியானது தரம் - II இற்கு உயர்த்தப்பட்டது . அதன்பின்னர் 1952 1954 இல் கல்லூரியின் இலட்சினை மகுடவாசகம் கல்லூரிக்கீதம் என்பன இயற்றப்பட்டன . அத்துடன் கல்லூரிக்கொடி கழுத்துப்பட்டி என்பவற்றிக்குரிய நிறங்களாக பச்சை வெள்ளை நிறங்கள் தெரிவு செய்யப்பட்டன . 1956 இல் பாடசாலை தரம்- I இற்கு தரம் உயர்த்தப்பட்டதோடு 1960 இல் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது . கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நான்காம் வகுப்பிலிருந்து தொடங்கிய முறைமை 1968 இல் முதலாம் வகுப்பு ஆரம்ப வகுப்பாக வகுக்கப்பட்டது . இக்காலத்திலேயே வெள்ளிவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . 1978 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்ப வகுப்புக்கள் தனியாக்கப்பட்டு யாஃ யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் தனியாக ஒரு அதிபரின் கீழ் இயங்கத்தொடங்கியது . அதன்பின் அனுமதிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவிகளே தரம் 6 இல் அனுமதிக்கப்பட்டனர் . அப்போது 1790 மாணவிகள் கல்விகற்றனர் . இக்காலகட்டத்தில் அதிபர் அலுவலகம் விஞ்ஞான ஆய்வுகூடம் வகுப்பறைகள் கொண்ட மாடிக் கட்டடங்கள் என்பன அமைக்கப்பட்டன . 1986 இல் கல்லூரி வளாகத்தில் நடுத்தோட்ட இராசவரோதயப் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டது . 1987 இல் இந்திய அமைதிப்படையினர் யாழ் நகரைக் கைப்பற்றிய வேளையில் எமது கல்லூரி அகதிமுகாமாக்கப்பட்டது . பின் 1995 ஒக்டோபரில் பௌதீக வளங்கள் யாவற்றையும் கைவிட்ட நிலையில் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது . பின் 1996 ல் பாடசாலை மீண்டும் இதே இடத்தில் சிறுதிருத்த வேலைகளுடன் இயங்கத் தொடங்கியது . தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட பௌதீகவள மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக 2009 இல் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது . 2010 இல் ஒசுத்திரேலியா பழைய மாணவிகளால் பாடசாலைக்கென சிற்றுண்டிச்சாலை அமைத்துக்கொடுக்கப்பட்டது . 2011 இல் கனடா பழைய மாணவிகளின் நிதிப்பங்களிப்போடு 20 கணிணிகளைக் கொண்ட கணினி அறைவசதி செய்துகொடுக்கப்பட்டது . தொடர்ந்து 1000 பாடசாலை அபிவருத்தித் திட்டத்தின் கீழ் 2014 இல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிறுவப்பட்டது . அத்துடன் 2015 இல் இலங்கை வங்கி உதவியுடன் நூலகம் புனரமைப்புச் செய்யப்பட்டது . மேலும் கல்லூரியின் பழைய மாணவிகள் பலரும் ஒன்றிணைந்து பவளவிழாக் காலத்தில் மண்டபத் துடன் கூடிய வகுப்பறைக் கட்டடத்தொகுதிகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டடமான பவளவிழா மண்டபம் அமைக்கப்பட்டது . மேலும் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடத்தின் நிதிப்பங்களிப் புடன் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி மற்றும் மலசலகூடங்களும் அமைத்து 2017 இல் கையளிக்கப்பட்டது . அண்மைக்காலமாக கல்லூரி அன்னை பலவழிகளிலும் மெருகூட்டப்பட்டு அழகொளிர மிளிர்கின்றாள் . கல்லூரி நுழைவாயில் பிரதான மண்டபம் விளையாட்டு மைதானம் அலுவலகம் அலுவலக மேல்தளம் கல்லூரியின் உள்வீதிகள் என்பன புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன . மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்வாங்கும் பொருட்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன் பாடசாலையின் பெரும்பாலான பாகங்களுக்கு இணைய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன . அத்துடன் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக் கருதி மறைகாணிகள் ( கமராக்கள் ) வளாகத்தினுள் பொருத் தப்பட்டுள்ளன . அடுத்து விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பல செயற்பாடுகள் இடம்பெற்று வருவதோடு மைதானப் பார்வையாளர் அரங்குக்கான நிதி அபிவிருத்தி யுத்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு இவ்வாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவரு கின்றன . இவ்வாறு கல்லூரியின் புதுப்புது வளர்ச்சிகள் பலமுறைகளிலும் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன . யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கின்ற இக்கல்லூரி இனிவரும் காலங்களில் மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை யாழ்ப்பாண மக்களிடையே வலுப்பெற்றுள்ளது . காலத்தைக் கடந்து கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பல சாதனைகளைப் படைத்து உயர எல்லாம் வல்ல ஐம்பூதநாதரின் வல்லமை மிகு தாள்களை மனம் மொழி மெய்களினாலே பணிவேற்றி இறைஞ்சு கின்றோம் . திருமிகு மெங்கள் யாழ்நகர்க் கணியாய்த் திகழ்ந்திடுங் கல்லூரி எங்கள் பெருவருமிந்துப் பெண்களுக் கொளியாய் பிறங்கிடும் கல்லூரி உயர் மருவுறு கலைகள் யாவையு மின்பாய் வழங்கிடுங் கல்லூரி இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org