தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07
மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021
Or
aACKGUN
யார் சதுரர்
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா
ஆனந்தமாய தேனினைச் சொரியும் தீந்தமிழ் ஏடு திருவாசகம்.
தொல்லை இரும் பிறவி சூளும் தளை நீக்கி அல்லல் அறுக்க
திருவாசகத்தை அருளிய திருவாதவூரடிகள் கோயிற்
திருப்பதிகத்தில் ஒரு அறிவுடைக் கேள்வி எழுப்புகின்றார்.
"தந்ததுன் தன்னை கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே"
என் சிந்தையைக் கோயிலாய்க்கொண்டு எழுந்தருளிய
சிவபெருமானே, என் தந்தையே, திருப்பெருந்துறையினை
நீங்காது உறையும் சிவனே, ஈசனே என்னுடலை இடமாய்
கொண்டவனே, சங்கரனே எனக்காய் நீ உன்னை
ஈந்திருப்பினும் நீ அதற்கீடாய் என்னிடம் என்ன பெற்றாய்.
உன்னிடம் நான் முடிவற்ற பேரன்பு பெற்றேன். எனவே
நம்மிருவரில் யார் சதுரர் (திறமைசாலி) என்பதே வாதவூரரின்
கேள்வி. இது மாதொருபாகனும் மாணிக்கவாசகரும்
கொண்டும் கொடுத்தும் வணிகம் செய்துள்ளனர் என்பதை
உரைக்கிறது. அமைச்சராய் உலகியலில் உழன்ற
மாணிக்கவாசகனாரை தன்பால் கவர்ந்திழுத்து அவரின்
சிந்தையிலே கோயில் கொண்ட கருணைக் கடலை திருமூலர்
"முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போகத்தானே”
தென்னாடு
மும்மூர்த்தியரில் முதல்வனாய் ஒப்புவமையற்ற
தனிப்பெரும் தெய்வமான ஈசனை அப்பனென
அழைக்கின்றார். அப்பனாக இருந்து அருள்பவன் என
கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்ப்பவன் ஈசனென திருமூலர்
கூற, மணிவாசகர் இல்லையில்லை செவிசாய்த்தவன்
செவ்வனே என்னுள் புகுந்தான் என பல இடங்களில்
சுட்டுகிறார். எத்தனையோ கற்றளி மாடக்கோவில்கள்
ஒப்பற்ற சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைந்திருப்பினும்
இறைவன் வேண்டுவது தூய மனக் கோயிலையே பல்லவ
மன்னனான காடவர் கோமானின் கற்கோயிலில் எழுந்தருளாது
ஆலவாய்
அமுதன்
பூசலார் பெருமானின் மனப்பொற் கோயிலிலே
நிலைபெற்றருளினார். சுவாமி விபுலானந்தரும் அதனையே
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ள லடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவூமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
www
உலகின் முதற் சிவன்கோயில்
இராமநாதபுரம்-உத்தரகோசமங்கை
W
05
''கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் றென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை
வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லைவிடையானைப் பாடுதுங்காணம்மானாய்”
தன்மனமாகிய கல்லை இறைவன் பிசைந்து கனியாய்
மாற்றி அது கெடாமல் இருக்க கருணை வெள்ளமாந் தேனில்
அமிழ்த்தியுள்ளான் எனப் போற்றுகின்றார். இத்துணை
பெரிய செயலுக்கு எப்படி வாதவூரரால் கைம்மாறு செய்ய
முடியும்? தேடற்கரிய வேதவித்தே நிறைத்து அருளும்
உடலல்லவா அத்தகு பேறு புண்ணியத்திலும் கோடி
புண்ணியம் அல்லவா! சிவம் தானாய் புகுந்து ஊறிநின்று
எழுபரஞ்சோதியாய் ஒளிர்வதற்கு ஏது கைம்மாறு?
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ வுலகு"
தெ
மாரி எமக்கு பொழிவதற்கு நம்மால் மாரிக்கு கைம்மாறு
செய்ய முடியுமா? அம்மாரியிலும் மேலின்பம் நல்கிய ஈசற்கு
கைம்மாறு செய்ய முடியாவிடினும் நன்றியும் சொல்ல
முடியாதவனென
"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்க்கு
பள்ளந்தா முறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெலாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே"
உடம்பெலாம் கண்ணாகக் கொண்டு உருகுகிறார்
மணிவாசகர். இவ்வாணிபத்தில் மணிவாசகருக்கு தன்னையே
ஈந்த சந்திரமௌலிக்கு மணிவாசகர்பால் என்ன
கிட்டியது? எதுவுமேயில்லை என்பதால் இறைவன்
சதுரப்பாடற்றவன் என்பது பொதுக்கண்ணோட்டம்.
ஆயினும் அஃது உண்மையன்று சதுரப்பாடுடையவன்
சிவபெருமானே!
எத்தனையோ மெய்யடியார்கள் இருக்கத்தக்கதாக
அமைச்சராயிருந்தவரை ஆட்கொண்டு, இவர்பால்
குதிரைச்சேவகனுமாகி, பிட்டிற்கு மண்சுமந்து அதற்கு
பரிசாய் பிரம்படியும் பெற்று ஆதியுமந்தமுமில்லா
அரும்பெருஞ்சோதியின் உடல் புண்ணாகியதை
வாதவூரடிகளே
இறைவன் விரும்புவது தூய உள்ளத்தையே எனக்
கூறுகின்றார். மனக் கோயிலில் எழுந்தருளியவன் அருளும்
பாலிக்க வேண்டுமன்றோ? அம்மனிதனை பக்குவப்படுத்தி
கடைத்தேற்றி அங்கேயே இரண்டறக் கலந்து நிலைப்பான்.
இவ்வாறு வாதவூரர் மனதுட் பிரவேசித்து அவருடலை
அம்மம்ம! மாணிக்கவாசகர்க்காய் மாதிடங்கொண்டவன்
பட்டபாடு பெரும்பாடே. இத்துணைதுன்பத்திலும் ஈசன்
மணிவாசகரை ஆட்கொண்டதன் காரணம் தானளித்த
இடமாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்பாலிக்கின்றான் அந்தமொன்றில்லா ஆனந்தத்தை பாடவைத்து
என பறைசாற்றி செல்கின்றார். அதனை அம்மானையிலே
மொழிவடிவாக்கிடவே. அதற்கு மாணிக்கவாசகரை
கருவியாக்கி ஆரா வேட்கையில் ஈசனே தேனினைச் சொரியும்
திருவாசகத்தை படியெடுத்தனன். இனிவருங்காலத்தில்,
அடியார் தம்மை வந்தடைவதற்காக திருவாசகத்தை தனக்கு
நிகராக்கி, ஞானந்தரும் திருவாசகத்தை ஓதுவோர்,
பூசிப்போரைதிருவாசகமே ஆட்கொண்டருளும் என்பதால்,
திரும்ப திரும்பப் பிட்டிற்கு மண்சுமந்தும், பிரம்படியும்
பெறுதலில் இருந்து சிவபெருமான்தப்பித்தார். மணிவாசக(ம்)
ர் ஈசனாரை காத்தது. கடையூழியில் தனித்து தாண்டவமாடும்
துன்பத்தைத் தீர்க்க படிப்பதற்காய் வாதவூரரிடம்
திருவாசகத்தை அம்பலவாணர் பிரதி எடுத்ததை
மனோன்மணியம்
"பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வயன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்"
"கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றே அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே"
இப்போது யார் சதுரர்? மாணிக்கவாசகர் பெற்றது
அந்தமொன்றில்லா ஆனந்தம் எனின் இறைவன் பெற்றது
பெருந்தனிமையில் இருந்து உயிர்களைக் கடைத்தேற்ற
வல்ல பண்சுமந்த பாடல்களை அல்லவா அப்படியாயின்
எல்லாம் வல்ல ஈசனே சதுரர்.
திருச்சிற்றம்பலம்
''கல் நார் உரித்து என்னையும் தன் கருணையினால்
பொன் ஆர் கழல் பணித்து ஆண்ட பிரான் கழல் பாடி
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர்
தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ'
மேழம்
நல்லோரை
சித்திரைத்
திங்கள்
2021
Or
aACKGUN
யார்
சதுரர்
ஊனினை
உருக்கி
உள்ளொளி
பெருக்கி
உலப்பிலா
ஆனந்தமாய
தேனினைச்
சொரியும்
தீந்தமிழ்
ஏடு
திருவாசகம்
.
தொல்லை
இரும்
பிறவி
சூளும்
தளை
நீக்கி
அல்லல்
அறுக்க
திருவாசகத்தை
அருளிய
திருவாதவூரடிகள்
கோயிற்
திருப்பதிகத்தில்
ஒரு
அறிவுடைக்
கேள்வி
எழுப்புகின்றார்
.
தந்ததுன்
தன்னை
கொண்டதென்
தன்னைச்
சங்கரா
ஆர்கொலோ
சதுரர்
அந்தமொன்று
இல்லா
ஆனந்தம்
பெற்றேன்
யாது
நீ
பெற்றதொன்று
என்பால்
சிந்தையே
கோயில்
கொண்ட
எம்பெருமான்
திருப்பெருந்துறை
உறை
சிவனே
எந்தையே
ஈசா
உடலிடங்
கொண்டாய்
யானிதற்
கிலன்
ஓர்
கைம்
மாறே
என்
சிந்தையைக்
கோயிலாய்க்கொண்டு
எழுந்தருளிய
சிவபெருமானே
என்
தந்தையே
திருப்பெருந்துறையினை
நீங்காது
உறையும்
சிவனே
ஈசனே
என்னுடலை
இடமாய்
கொண்டவனே
சங்கரனே
எனக்காய்
நீ
உன்னை
ஈந்திருப்பினும்
நீ
அதற்கீடாய்
என்னிடம்
என்ன
பெற்றாய்
.
உன்னிடம்
நான்
முடிவற்ற
பேரன்பு
பெற்றேன்
.
எனவே
நம்மிருவரில்
யார்
சதுரர்
(
திறமைசாலி
)
என்பதே
வாதவூரரின்
கேள்வி
.
இது
மாதொருபாகனும்
மாணிக்கவாசகரும்
கொண்டும்
கொடுத்தும்
வணிகம்
செய்துள்ளனர்
என்பதை
உரைக்கிறது
.
அமைச்சராய்
உலகியலில்
உழன்ற
மாணிக்கவாசகனாரை
தன்பால்
கவர்ந்திழுத்து
அவரின்
சிந்தையிலே
கோயில்
கொண்ட
கருணைக்
கடலை
திருமூலர்
முன்னை
ஒப்பாய்
உள்ள
மூவர்க்கும்
மூத்தவன்
தன்னை
ஒப்பாய்
ஒன்றும்
இல்லாத்
தலைமகன்
தன்னை
அப்பா
எனில்
அப்பனுமாய்
உளன்
பொன்னை
ஒப்பு
ஆகின்ற
போகத்தானே
”
தென்னாடு
மும்மூர்த்தியரில்
முதல்வனாய்
ஒப்புவமையற்ற
தனிப்பெரும்
தெய்வமான
ஈசனை
அப்பனென
அழைக்கின்றார்
.
அப்பனாக
இருந்து
அருள்பவன்
என
கூப்பிட்ட
குரலுக்கு
செவிசாய்ப்பவன்
ஈசனென
திருமூலர்
கூற
மணிவாசகர்
இல்லையில்லை
செவிசாய்த்தவன்
செவ்வனே
என்னுள்
புகுந்தான்
என
பல
இடங்களில்
சுட்டுகிறார்
.
எத்தனையோ
கற்றளி
மாடக்கோவில்கள்
ஒப்பற்ற
சிற்ப
வேலைப்பாடுகளுடன்
நிறைந்திருப்பினும்
இறைவன்
வேண்டுவது
தூய
மனக்
கோயிலையே
பல்லவ
மன்னனான
காடவர்
கோமானின்
கற்கோயிலில்
எழுந்தருளாது
ஆலவாய்
அமுதன்
பூசலார்
பெருமானின்
மனப்பொற்
கோயிலிலே
நிலைபெற்றருளினார்
.
சுவாமி
விபுலானந்தரும்
அதனையே
வெள்ளை
நிற
மல்லிகையோ
வேறெந்த
மாமலரோ
வள்ள
லடியிணைக்கு
வாய்த்த
மலரெதுவோ
வெள்ளை
நிறப்
பூவூமல்ல
வேறெந்த
மலருமல்ல
உள்ளக்
கமலமடி
உத்தமனார்
வேண்டுவது
www
உலகின்
முதற்
சிவன்கோயில்
இராமநாதபுரம்
-
உத்தரகோசமங்கை
W
05
'
'
கல்லா
மனத்துக்
கடைப்பட்ட
நாயேனை
வல்லாளன்
றென்னன்
பெருந்துறையான்
பிச்சேற்றிக்
கல்லைப்
பிசைந்து
கனியாக்கி
தன்
கருணை
வெள்ளத்தழுத்தி
வினைகடிந்த
வேதியனைத்
தில்லை
நகர்புக்குச்
சிற்றம்பலம்
மன்னும்
ஒல்லைவிடையானைப்
பாடுதுங்காணம்மானாய்
”
தன்மனமாகிய
கல்லை
இறைவன்
பிசைந்து
கனியாய்
மாற்றி
அது
கெடாமல்
இருக்க
கருணை
வெள்ளமாந்
தேனில்
அமிழ்த்தியுள்ளான்
எனப்
போற்றுகின்றார்
.
இத்துணை
பெரிய
செயலுக்கு
எப்படி
வாதவூரரால்
கைம்மாறு
செய்ய
முடியும்
?
தேடற்கரிய
வேதவித்தே
நிறைத்து
அருளும்
உடலல்லவா
அத்தகு
பேறு
புண்ணியத்திலும்
கோடி
புண்ணியம்
அல்லவா
!
சிவம்
தானாய்
புகுந்து
ஊறிநின்று
எழுபரஞ்சோதியாய்
ஒளிர்வதற்கு
ஏது
கைம்மாறு
?
கைம்மாறு
வேண்டா
கடப்பாடு
மாரிமாட்டு
என்னாற்றுங்
கொல்லோ
வுலகு
தெ
மாரி
எமக்கு
பொழிவதற்கு
நம்மால்
மாரிக்கு
கைம்மாறு
செய்ய
முடியுமா
?
அம்மாரியிலும்
மேலின்பம்
நல்கிய
ஈசற்கு
கைம்மாறு
செய்ய
முடியாவிடினும்
நன்றியும்
சொல்ல
முடியாதவனென
வெள்ளந்தாழ்
விரிசடையாய்
விடையாய்
விண்ணோர்
பெருமானே
எனக்கேட்டு
வேட்ட
நெஞ்சாய்க்கு
பள்ளந்தா
முறுபுனலிற்
கீழ்மே
லாகப்
பதைத்துருகு
மவர்நிற்க
என்னை
யாண்டாய்க்கு
உள்ளந்தாள்
நின்றுச்சி
யளவும்
நெஞ்சாய்
உருகாதால்
உடம்பெலாங்
கண்ணாய்
அண்ணா
வெள்ளந்தான்
பாயாதால்
நெஞ்சங்
கல்லாம்
கண்ணிணையும்
மரமாந்தீ
வினையி
னேற்கே
உடம்பெலாம்
கண்ணாகக்
கொண்டு
உருகுகிறார்
மணிவாசகர்
.
இவ்வாணிபத்தில்
மணிவாசகருக்கு
தன்னையே
ஈந்த
சந்திரமௌலிக்கு
மணிவாசகர்பால்
என்ன
கிட்டியது
?
எதுவுமேயில்லை
என்பதால்
இறைவன்
சதுரப்பாடற்றவன்
என்பது
பொதுக்கண்ணோட்டம்
.
ஆயினும்
அஃது
உண்மையன்று
சதுரப்பாடுடையவன்
சிவபெருமானே
!
எத்தனையோ
மெய்யடியார்கள்
இருக்கத்தக்கதாக
அமைச்சராயிருந்தவரை
ஆட்கொண்டு
இவர்பால்
குதிரைச்சேவகனுமாகி
பிட்டிற்கு
மண்சுமந்து
அதற்கு
பரிசாய்
பிரம்படியும்
பெற்று
ஆதியுமந்தமுமில்லா
அரும்பெருஞ்சோதியின்
உடல்
புண்ணாகியதை
வாதவூரடிகளே
இறைவன்
விரும்புவது
தூய
உள்ளத்தையே
எனக்
கூறுகின்றார்
.
மனக்
கோயிலில்
எழுந்தருளியவன்
அருளும்
பாலிக்க
வேண்டுமன்றோ
?
அம்மனிதனை
பக்குவப்படுத்தி
கடைத்தேற்றி
அங்கேயே
இரண்டறக்
கலந்து
நிலைப்பான்
.
இவ்வாறு
வாதவூரர்
மனதுட்
பிரவேசித்து
அவருடலை
அம்மம்ம
!
மாணிக்கவாசகர்க்காய்
மாதிடங்கொண்டவன்
பட்டபாடு
பெரும்பாடே
.
இத்துணைதுன்பத்திலும்
ஈசன்
மணிவாசகரை
ஆட்கொண்டதன்
காரணம்
தானளித்த
இடமாகக்
கொண்டு
இறைவன்
எழுந்தருள்பாலிக்கின்றான்
அந்தமொன்றில்லா
ஆனந்தத்தை
பாடவைத்து
என
பறைசாற்றி
செல்கின்றார்
.
அதனை
அம்மானையிலே
மொழிவடிவாக்கிடவே
.
அதற்கு
மாணிக்கவாசகரை
கருவியாக்கி
ஆரா
வேட்கையில்
ஈசனே
தேனினைச்
சொரியும்
திருவாசகத்தை
படியெடுத்தனன்
.
இனிவருங்காலத்தில்
அடியார்
தம்மை
வந்தடைவதற்காக
திருவாசகத்தை
தனக்கு
நிகராக்கி
ஞானந்தரும்
திருவாசகத்தை
ஓதுவோர்
பூசிப்போரைதிருவாசகமே
ஆட்கொண்டருளும்
என்பதால்
திரும்ப
திரும்பப்
பிட்டிற்கு
மண்சுமந்தும்
பிரம்படியும்
பெறுதலில்
இருந்து
சிவபெருமான்தப்பித்தார்
.
மணிவாசக
(
ம்
)
ர்
ஈசனாரை
காத்தது
.
கடையூழியில்
தனித்து
தாண்டவமாடும்
துன்பத்தைத்
தீர்க்க
படிப்பதற்காய்
வாதவூரரிடம்
திருவாசகத்தை
அம்பலவாணர்
பிரதி
எடுத்ததை
மனோன்மணியம்
பண்
சுமந்த
பாடற்
பரிசு
படைத்தருளும்
பெண்
சுமந்த
பாகத்தன்
பெம்மான்
பெருந்துறையான்
விண்
சுமந்த
கீர்த்தி
வயன்
மண்டலத்து
ஈசன்
கண்
சுமந்த
நெற்றிக்
கடவள்
கலி
மதுரை
மண்
சுமந்து
கூலி
கொண்டு
அக்கோவால்
மொத்துண்டு
புண்
சுமந்த
பொன்
மேனி
பாடுதும்
காண்
அம்மானாய்
கடையூழி
வருந்தனிமை
கழிக்கவன்றே
அம்பலத்துள்
உடையாருன்
வாசகத்தில்
ஒரு
பிரதி
கருதினதே
இப்போது
யார்
சதுரர்
?
மாணிக்கவாசகர்
பெற்றது
அந்தமொன்றில்லா
ஆனந்தம்
எனின்
இறைவன்
பெற்றது
பெருந்தனிமையில்
இருந்து
உயிர்களைக்
கடைத்தேற்ற
வல்ல
பண்சுமந்த
பாடல்களை
அல்லவா
அப்படியாயின்
எல்லாம்
வல்ல
ஈசனே
சதுரர்
.
திருச்சிற்றம்பலம்
'
'
கல்
நார்
உரித்து
என்னையும்
தன்
கருணையினால்
பொன்
ஆர்
கழல்
பணித்து
ஆண்ட
பிரான்
கழல்
பாடி
மின்
நேர்
நுடங்கு
இடை
செம்
துவர்
வாய்
வெள்
நகையீர்
தென்னா
தென்னா
என்று
தெள்ளேணம்
கொட்டாமோ
'