தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

தெ 06 எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்தர்களில், யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர். செல்லாச்சியம்மையாரின் ஈமக் கிரியைகளுக்கும், சடையம்மாவின் சமாதிக் கிரியைகளுக்கும் யோகர் சுவாமிகள் பொறுப்பாக முன்னின்று நடாத்திவைத் தார்கள். கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமியாவார். செல்லப்பா சுவாமிகள் உலகத்திற்குத் தன்னைக் காட்டிக் கொள்ளாது, உலகத்தோர் வாழ்த்து கண்ணுக்குப் பைத்தியகாரன் போன்றே காட்சி அளித்தார். அதனால் உலகம் அவரை விசர்ச் செல்லப்பா என்றே பெயர் சூட்டி அழைத்தது செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகளுக்கு நான்கு மகாவாக்கியங்களை உபதேசித்தார். இந்த நான்கு வாக்கியங்களும் சகல சாத்திரங்களினதும் சாரம் கொண்டவை. ஆதலின் இவை மகா வாக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன. அவை பின்வருமாறு ஒரு பொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்த காரியம் நாம் அறியோம் முழுதும் உண்மை. மாவிட்டபுரம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதோர் தலம். மாருதப் புரவீகவல்லி என்னும் சோழ அரசகுமாரி குதிரை முகம் உடையவளாகவே பிறந்து வளர்ந்தாள். தன்னுடைய குதிரை முகம் நீங்கி மனித முகம் அமையவேண்டும் என்று கருதி தலயாத்திரை செய்தாள். கீரிமலை நீரூற்றில் குளித்தபோது குதிரை முகம் நீங்கி மனித முகம் பெற்றாள். அச்செய்தியை நினைவூட்டுவதே மாவிட்ட புரம் என்ற பெயர் இவ்வூரில் அம்பலவாணர் என்னும் சைவப் பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது இல்லாள் சின்னாச்சி அம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவர்களது பூர்வ புண்ணிய பலனால் 29-5-1872இல் அவிட்ட விண்மீனில் ஓர் ஆண் மகவு பிறந்தது. பெற்றார் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று பெயர் சூட்டினர். அம்பலவாணரின் சகோதரர் சின்னையா என்பவர் கொழும்புத் துறையைச் சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து, தமது பெயரை யோசேப்பு என்றும் மாற்றிக் கொண்டார். அம்பலவாணர் மலையகத்தில் மஸ்கெலியா என்னும் நகரில் கடை ஒன்று நடத்திவந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யோசேப்பு கவனித்துவந்தார். அதனால் யோகநாதன் மாவிட்ட புரத்தைவிட்டுக் கொழும்புத்துறை யில் வாழவேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப் பாடசாலைகள் மிகமிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்க பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடைய வராகவும் புத்தி யுத்தி உள்ளவராகவும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு எட்டு வயதாகும்போது தாயார் இறந்துவிட்டார். சிறிய தந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக் கல்வி கற்கும் பொருட்டு சம்பத்திரிசியார் கல்லூரியில் (சென்ற்.பற்றிக்ஸ்) சேர்க்கப்பட்டார். கல்லூ ரிப் பதிவேட்டில் "யோன்" என்ற பெயர் யோகநாதனுக்கு எழுதப்பட்டது. பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மாலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள தந்தை வழி மாமியாராகிய முத்துப் பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள். மாமியார் வீட்டில் "மோகன்" என்று அழைப்பார்கள். பாடசாலை யில் யோன் என்று அழைப்பார்கள். பாட சாலையில் கிறித்தவ சமயத்தையும், மாமியார் வீட்டில் சைவ சமயத்தையும் படித்து வந்தார். இயேசு நாதரின் மலைப்பிர சங்கம் இவரது தென்னாடு மனத்தைக் கவர்ந்தது. எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் கற்றார். மேற்படிப்புக்குப் போகாத காரணம் தாயில் லாப் பிள்ளை. தகப்பன் மஸ்கெலியாவில் வியாபாரம். மாமியாருக்கு, யோகன் கிருத்தவ பாடசாலையில் படிப்பது விருப்பம் இல்லை. ஆகையால் படிப்புக் குழம்பியது. அம்பலவாணர் யோகனை அழைப்பித்து தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தினர். மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின் மனதைக் கவர்ந்தது. யோகநாதன் சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் ஒரு நாள் காட்சியினைக் கண்டு மகிழ்ந்துவந்தார். சிவனொளிபாதம் சென்று வந்த யோகநாதன் இயற்கையின் சூழலிலே தமது மனதைப் பறி கொடுத்து விட்டார். அதனால் தன் பாட்டிலேயே பேசத் தொடங்கினார். இது எல்லாம் உண்மை. எனது உடம்பு சிவன் சொத்து. சிவனுக்கே அது சொந்தம். அவனையே தேடிப்போனேன். இந்த விபரீத எண்ணங்களைக் கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார். யோகர் சும்மா இருக்க மாட்டார். வேலை தேடித் திரிவார். 'உத்தியோகம் புருசலட் சணம்" என்று சொல்லும் சுவாமிகள், உத்தி யோகம் பார்க்க எண்ணினார் என்பது சாலவும் பொருத்தமானதே. இரணைமடுக்குள கட்டிட வேலை நடைபெற்ற காலம். அங்கு சென்ற போது 'பிறவுண்' என்ற பொறியிய லாளர் பண்டகசாலைப் பாதுகாவலர் என்ற உத்தியோகத்தை இவருக்கு அளித்தார். "உங்கள் கடமையை மறவாதீர்கள்” என்று எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் தமது கடமையை மறப்பாரா? நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை பார்த்தார். பொறியியலாளரிடம் ஒரு நன் மதிப்பைப் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 கூட்டம் கூடும். திருமுறைகள் பாராயணம் நடைபெறும். எல்லாத் தரங்களிலும் உள்ள மக்களும் ஒன்று கூடுவார்கள். ஆன்மீக தாகம் கொண்டவர்களும் வருவார்கள். தங்கள் இட்டல் இடைஞ்சல்களைத்,தீர்த்துக் சுவாமிகளின் பார்வை இவரைக் காந்தமெனக் கவர்ந்தது. குருநாதனைத் தரிசித்த அநுபவத்தை அவரே கூறுகின்றார். பெற்றுக் கொண்டார் . யோகநாதன் கிளிநொச்சியை விட்டு மாவிட்டபுரம் திரும்பினார். அவருக்கு அப்போது வயது 32. தந்தையும் இறந்து விட்டார். தாயை எட்டு வயதில் இழந்தார். தந்தையை வாலிப வயதில் இழந்தார். ஆனால் மாவிட்டபுரம் கந்தன் கருணையை இழக்கவில்லை. கீரிமலையிலும் மாவிட்ட புரத்திலும் மாறி மாறி வசித்தார். கீரிமலை யிலிருந்து நடையிலேயே நல்லூருக்கு வருவார். ஆத்மீக தாகம் மேலிட்ட காலம் குரு ஒருவரைத் தேடி அலைந்த காலம், பற்றுக்கோடாக இருந்த இரு முதுகுரவரையும் இழந்தபோது பற்றுக்கோடு ஒன்றை நாடினார். நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளைச் சந்தித்தார். செல்லப்பா "கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல் - திருத்தலத்தில் தேரடியில் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் ஆரடாநீ என்றான் அவன்." விசர்ச் செல்லப்பா என்று மக்களால் ஏசப்பட்ட செல்லப்பா சுவாமிகளைச் சூழ ஒரு கூட்டம் கூட தொடங்கி இருந்த காலம். செல்லப்பா சுவாமியின் அரிய சீடர்கள் கதிரவேலுச்சாமியும் யோகநாதனும் ஆவர். ஈழத்து சித்தர்கள்: யோகர சுவாமி தவத்திரு யோகர் சுவாமிகள் பெரும்பாலும் மூவரும் ஒன்றுகூடித் திரிவர் சண்டை போடுவர். சமையல் செய்வர். சமையல் முடியும் சமயத்தில் சட்டிபானையை உடைப்பர். இச்செயலைக் கண்டால் யார் தான் இவர்களைப் பைத்தியம் என்று கூற மாட்டார்கள்? கொழும்புத்துறையில் சிற்றம்பலம் சம்பந்தர் என்னும் சைவப்பெரியார் வளவினுள் வீதிப்பக்கமாக ஒரு இலுப்பை மரம். இந்த இலுப்பை மரத்தின் கீழேதான் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நடைபெற்றது. இந்த இலுப்பை மரத்திற்கு அருகில் அரியாலை-நன்னியர் என்பவர் ஒரு கடை கட்டி, வியாபாரம் செய்து வந்தார். நன்னியருக்கு இந்தச் சுவாமிமாரைக் கண்டால் பிடிக்காதாம். நன்னியர் நல்லூர் செல்லப்பா சுவாமியை ஒரு நாள் நிந்தித்தாராம். அவர் ஒன்றுமே பேசாமல் சென்றதற்காக கடைக்குள் அவரைக் கட்டியும் வைத்தாராம். அயலவர்கள் அடுத்த நாளே நன்னியரைக் கடையைவிட்டுத் துரத்தி விட்டார்கள். இந்தக் கடை வெறுமனே கிடந்தபடியினால் யோகர் சுவாமிகள், தமது குருநாதனைக் கட்டிவைத்த அதே கடைக்குள் நித்திரை செய்வாராம். விடியுமுன் எழுந்து நல் லூர்ப் பக்கமாகச் சென்று விடுவாராம். கொழும்புத்துறை வளவில் இருந்த கடையைத் திருநாவுக்கரசு என்பவர் திருத்தி அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக்கொடுத்து, சுவாமிகளை அதில் தங்குமாறு அவரும் அவரது தாயாரும் அன்புடன் வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்ட சுவாமிகள் பூதஉடலைவிட்டு உயிர் பிரியும் வரை அக்குடிசையிலேயே வாழ்ந்து வந்தார்கள். சுவாமிகளை நாடி நாள்தோறும் கூட்டம் கூடத் தொடங்கியது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெருங் கொள்வதற்காகவும் வருவார்கள். சுவாமிகளைச் சோதித்துப் பார்ப்பவர்களும் வருவார்கள். சுவாமிகளும் தம்மை நாடி வந்தவர்களு டைய உள்ளப் பாங்கை அறிந்து அவர்களுக் கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார்கள். சிலரை ஏசியும் துரத்துவார். அதைப் பொருட்படுத்தாமல் தம்மை மேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அணைத்து அருளுரை வழங்குவார்கள். அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகளைச் சுவாமிகள் தொலைத்துவிடுகிறார். இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமிகளின் மறமயக்கருணையை நினைந்து நினைந்து ஆனந்தக் கண்ணீர் சொரிவார்கள். "எல்லாரும் ஒருகுலம் எல்லாரும் ஒரு இனம்" என்பது சுவாமிகள் தம்மை நாடி வருபவர்களுக்கு அடிக்கடி கூறும் உபதேசமாகும். "எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம், எல்லாரும் சமம்" என்றும் கூறுவார்கள். "நீயும் மனிதன் நானும் மனிதன் உங்கள் கடமையைப் போய்ச் செய்யுங்கள். இங்கே ஏன் வருகிறீர்கள்? நாங்கள் பிச்சைக் காரர்கள் நாங்கள் சும்மா இருக்கிறோம். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று ஏசிக் கலைப்பதும் உண்டு. "பிறவிப்பயானால் எங்களுக்கு இப்பிறவி வந்தது.நாம் ஒன்றும் அறியோம், நாம் ஏன் இங்கு பிறந்தோம்? இப்பிறவியால் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதனால் பாதகமும் இல்லை. பிறப்பு வர இருந்ததுவந்துவிட்டது. நாங்கள் பிறவிப்பயனை நல்லாய்த் தேடிக்கொள்ளலாம்." என்று உபதேசம் செய்தார்கள். சுவாமிகள் எல்லாமத உண்மைகளையும் அறிந்தவர்கள். அவர் ஒரு சமரச ஞானி. அதனால் எல்லாச் சமயத்தவர்களும் அவரை நாடி வந்தார்கள். அவரவருக்கேற்ற உபதேசம் கிடைத்து வந்தது. ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு சிவதொண்டன் என்றே கூறிக் கொள்வார்கள். சுவாமிகளுடைய சந்நிதியில் ஒரு சில நிமிடங்கள் இருந்தாலும் மனச் சாந்தி ஏற்படுவதை யாரும் உணரலாம். எந்த நேரமும் சாந்தி அலைகளையே வீசிக்கொண் டிருந்தார்கள். சுவாமிகளைச் சூழ எந்த நேரத்திலும் ஒரு உயிர் அலை வீசிக்கொண்டே இருக்கும். அந்த உயிர் அலைக்குள் இருந்து ஆனந்தம் பெறத் தம்மைத் தகுதியாக்கி கொண்டவர்கள் நாட்கணக்காக உணவையும் நேரத்தையும் தாகத்தையும் மறந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பர். அப்படிப்பட்ட மனோபக்குவம் அற்றவர்களால் ஐந்து நிமிட நேரந்தானும் அங்கு இருக்க முடிவதில்லை. அத்தகையோரின் பரபரப்பை உணர்ந்த சுவாமிகள் "வந்து வெகு நேரமாகி விட்டது, ஓடிப்போய் உங்கள் கடமைகளைக் கவனியுங்கள்" என்று கூறி அவர்களைப் போகச் செய்து விடுவார்கள். "மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். எப்போதான் இவனுடைய ஓட்டம் ஓயுமோ" என்று கூறுவார்கள் "உலகமெல்லாம் இறைவன் சந்நிதானம், உலகெல்லாம் இறைவன் சந்நிதானம்” என்று அடிக்கடி கூறுவார்கள். இதனை உணராத வர்கள் கடவுளைத் தேடித்தேடி அலைகிறார் கள் கடவுளை அறியவேண்டும் என்று கவலைப் படுபவர்கள் இல்லை. அவர்களு டைய கவலை எல்லாம் நிலையில்லாத பொருள்களைப் பற்றியனவாகவே இருக்கிறது. கடவுள் உங்களை வளர்க்கிறார் நீங்கள் கடவுளை வளருங்கள்'' என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிப்பார்கள். சுவாமிகள் ஒரு சமரச ஞானி. சைவசித்தாந்த வேதாந்த சண்டைகள், சைவ வைணவ சண்டைகள், சைவ கிறித்தவ பௌத்த இசுலாமிய சண்டைகள் சுவாமிகளுக்குப் பிடிக்காதவைகள். சுவாமிகள் இவைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். (07ஆம் பக்கம் பார்க்க)
தெ 06 எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்தர்களில் யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர் . செல்லாச்சியம்மையாரின் ஈமக் கிரியைகளுக்கும் சடையம்மாவின் சமாதிக் கிரியைகளுக்கும் யோகர் சுவாமிகள் பொறுப்பாக முன்னின்று நடாத்திவைத் தார்கள் . கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள் . செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமியாவார் . செல்லப்பா சுவாமிகள் உலகத்திற்குத் தன்னைக் காட்டிக் கொள்ளாது உலகத்தோர் வாழ்த்து கண்ணுக்குப் பைத்தியகாரன் போன்றே காட்சி அளித்தார் . அதனால் உலகம் அவரை விசர்ச் செல்லப்பா என்றே பெயர் சூட்டி அழைத்தது செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளுக்கு நான்கு மகாவாக்கியங்களை உபதேசித்தார் . இந்த நான்கு வாக்கியங்களும் சகல சாத்திரங்களினதும் சாரம் கொண்டவை . ஆதலின் இவை மகா வாக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன . அவை பின்வருமாறு ஒரு பொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்த காரியம் நாம் அறியோம் முழுதும் உண்மை . மாவிட்டபுரம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதோர் தலம் . மாருதப் புரவீகவல்லி என்னும் சோழ அரசகுமாரி குதிரை முகம் உடையவளாகவே பிறந்து வளர்ந்தாள் . தன்னுடைய குதிரை முகம் நீங்கி மனித முகம் அமையவேண்டும் என்று கருதி தலயாத்திரை செய்தாள் . கீரிமலை நீரூற்றில் குளித்தபோது குதிரை முகம் நீங்கி மனித முகம் பெற்றாள் . அச்செய்தியை நினைவூட்டுவதே மாவிட்ட புரம் என்ற பெயர் இவ்வூரில் அம்பலவாணர் என்னும் சைவப் பெரியார் ஒருவர் வாழ்ந்தார் . இவரது இல்லாள் சின்னாச்சி அம்மையார் என்று அழைக்கப்பட்டார் . இவர்களது பூர்வ புண்ணிய பலனால் 29-5-1872இல் அவிட்ட விண்மீனில் ஓர் ஆண் மகவு பிறந்தது . பெற்றார் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று பெயர் சூட்டினர் . அம்பலவாணரின் சகோதரர் சின்னையா என்பவர் கொழும்புத் துறையைச் சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து தமது பெயரை யோசேப்பு என்றும் மாற்றிக் கொண்டார் . அம்பலவாணர் மலையகத்தில் மஸ்கெலியா என்னும் நகரில் கடை ஒன்று நடத்திவந்தார் . யோகநாதனுடைய கல்வி விடயத்தை யோசேப்பு கவனித்துவந்தார் . அதனால் யோகநாதன் மாவிட்ட புரத்தைவிட்டுக் கொழும்புத்துறை யில் வாழவேண்டிய சூழ்நிலை உருவானது . அக்காலத்தில் சைவப் பாடசாலைகள் மிகமிகக் குறைவு . அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்க பாடசாலையிலேயே ஆரம்பமானது . இளமையில் துடுக்குடைய வராகவும் புத்தி யுத்தி உள்ளவராகவும் வாழ்ந்து வந்தார் . யோகநாதனுக்கு எட்டு வயதாகும்போது தாயார் இறந்துவிட்டார் . சிறிய தந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார் . ஆங்கிலக் கல்வி கற்கும் பொருட்டு சம்பத்திரிசியார் கல்லூரியில் ( சென்ற்.பற்றிக்ஸ் ) சேர்க்கப்பட்டார் . கல்லூ ரிப் பதிவேட்டில் யோன் என்ற பெயர் யோகநாதனுக்கு எழுதப்பட்டது . பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும் மாலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள தந்தை வழி மாமியாராகிய முத்துப் பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள் . மாமியார் வீட்டில் மோகன் என்று அழைப்பார்கள் . பாடசாலை யில் யோன் என்று அழைப்பார்கள் . பாட சாலையில் கிறித்தவ சமயத்தையும் மாமியார் வீட்டில் சைவ சமயத்தையும் படித்து வந்தார் . இயேசு நாதரின் மலைப்பிர சங்கம் இவரது தென்னாடு மனத்தைக் கவர்ந்தது . எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் கற்றார் . மேற்படிப்புக்குப் போகாத காரணம் தாயில் லாப் பிள்ளை . தகப்பன் மஸ்கெலியாவில் வியாபாரம் . மாமியாருக்கு யோகன் கிருத்தவ பாடசாலையில் படிப்பது விருப்பம் இல்லை . ஆகையால் படிப்புக் குழம்பியது . அம்பலவாணர் யோகனை அழைப்பித்து தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தினர் . மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின் மனதைக் கவர்ந்தது . யோகநாதன் சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் ஒரு நாள் காட்சியினைக் கண்டு மகிழ்ந்துவந்தார் . சிவனொளிபாதம் சென்று வந்த யோகநாதன் இயற்கையின் சூழலிலே தமது மனதைப் பறி கொடுத்து விட்டார் . அதனால் தன் பாட்டிலேயே பேசத் தொடங்கினார் . இது எல்லாம் உண்மை . எனது உடம்பு சிவன் சொத்து . சிவனுக்கே அது சொந்தம் . அவனையே தேடிப்போனேன் . இந்த விபரீத எண்ணங்களைக் கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார் . யோகர் சும்மா இருக்க மாட்டார் . வேலை தேடித் திரிவார் . ' உத்தியோகம் புருசலட் சணம் என்று சொல்லும் சுவாமிகள் உத்தி யோகம் பார்க்க எண்ணினார் என்பது சாலவும் பொருத்தமானதே . இரணைமடுக்குள கட்டிட வேலை நடைபெற்ற காலம் . அங்கு சென்ற போது ' பிறவுண் ' என்ற பொறியிய லாளர் பண்டகசாலைப் பாதுகாவலர் என்ற உத்தியோகத்தை இவருக்கு அளித்தார் . உங்கள் கடமையை மறவாதீர்கள் என்று எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் தமது கடமையை மறப்பாரா ? நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை பார்த்தார் . பொறியியலாளரிடம் ஒரு நன் மதிப்பைப் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 கூட்டம் கூடும் . திருமுறைகள் பாராயணம் நடைபெறும் . எல்லாத் தரங்களிலும் உள்ள மக்களும் ஒன்று கூடுவார்கள் . ஆன்மீக தாகம் கொண்டவர்களும் வருவார்கள் . தங்கள் இட்டல் இடைஞ்சல்களைத் தீர்த்துக் சுவாமிகளின் பார்வை இவரைக் காந்தமெனக் கவர்ந்தது . குருநாதனைத் தரிசித்த அநுபவத்தை அவரே கூறுகின்றார் . பெற்றுக் கொண்டார் . யோகநாதன் கிளிநொச்சியை விட்டு மாவிட்டபுரம் திரும்பினார் . அவருக்கு அப்போது வயது 32. தந்தையும் இறந்து விட்டார் . தாயை எட்டு வயதில் இழந்தார் . தந்தையை வாலிப வயதில் இழந்தார் . ஆனால் மாவிட்டபுரம் கந்தன் கருணையை இழக்கவில்லை . கீரிமலையிலும் மாவிட்ட புரத்திலும் மாறி மாறி வசித்தார் . கீரிமலை யிலிருந்து நடையிலேயே நல்லூருக்கு வருவார் . ஆத்மீக தாகம் மேலிட்ட காலம் குரு ஒருவரைத் தேடி அலைந்த காலம் பற்றுக்கோடாக இருந்த இரு முதுகுரவரையும் இழந்தபோது பற்றுக்கோடு ஒன்றை நாடினார் . நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளைச் சந்தித்தார் . செல்லப்பா கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல் - திருத்தலத்தில் தேரடியில் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் ஆரடாநீ என்றான் அவன் . விசர்ச் செல்லப்பா என்று மக்களால் ஏசப்பட்ட செல்லப்பா சுவாமிகளைச் சூழ ஒரு கூட்டம் கூட தொடங்கி இருந்த காலம் . செல்லப்பா சுவாமியின் அரிய சீடர்கள் கதிரவேலுச்சாமியும் யோகநாதனும் ஆவர் . ஈழத்து சித்தர்கள் : யோகர சுவாமி தவத்திரு யோகர் சுவாமிகள் பெரும்பாலும் மூவரும் ஒன்றுகூடித் திரிவர் சண்டை போடுவர் . சமையல் செய்வர் . சமையல் முடியும் சமயத்தில் சட்டிபானையை உடைப்பர் . இச்செயலைக் கண்டால் யார் தான் இவர்களைப் பைத்தியம் என்று கூற மாட்டார்கள் ? கொழும்புத்துறையில் சிற்றம்பலம் சம்பந்தர் என்னும் சைவப்பெரியார் வளவினுள் வீதிப்பக்கமாக ஒரு இலுப்பை மரம் . இந்த இலுப்பை மரத்தின் கீழேதான் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நடைபெற்றது . இந்த இலுப்பை மரத்திற்கு அருகில் அரியாலை - நன்னியர் என்பவர் ஒரு கடை கட்டி வியாபாரம் செய்து வந்தார் . நன்னியருக்கு இந்தச் சுவாமிமாரைக் கண்டால் பிடிக்காதாம் . நன்னியர் நல்லூர் செல்லப்பா சுவாமியை ஒரு நாள் நிந்தித்தாராம் . அவர் ஒன்றுமே பேசாமல் சென்றதற்காக கடைக்குள் அவரைக் கட்டியும் வைத்தாராம் . அயலவர்கள் அடுத்த நாளே நன்னியரைக் கடையைவிட்டுத் துரத்தி விட்டார்கள் . இந்தக் கடை வெறுமனே கிடந்தபடியினால் யோகர் சுவாமிகள் தமது குருநாதனைக் கட்டிவைத்த அதே கடைக்குள் நித்திரை செய்வாராம் . விடியுமுன் எழுந்து நல் லூர்ப் பக்கமாகச் சென்று விடுவாராம் . கொழும்புத்துறை வளவில் இருந்த கடையைத் திருநாவுக்கரசு என்பவர் திருத்தி அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக்கொடுத்து சுவாமிகளை அதில் தங்குமாறு அவரும் அவரது தாயாரும் அன்புடன் வேண்டிக் கொண்டார்கள் . அவர்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்ட சுவாமிகள் பூதஉடலைவிட்டு உயிர் பிரியும் வரை அக்குடிசையிலேயே வாழ்ந்து வந்தார்கள் . சுவாமிகளை நாடி நாள்தோறும் கூட்டம் கூடத் தொடங்கியது . செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெருங் கொள்வதற்காகவும் வருவார்கள் . சுவாமிகளைச் சோதித்துப் பார்ப்பவர்களும் வருவார்கள் . சுவாமிகளும் தம்மை நாடி வந்தவர்களு டைய உள்ளப் பாங்கை அறிந்து அவர்களுக் கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார்கள் . சிலரை ஏசியும் துரத்துவார் . அதைப் பொருட்படுத்தாமல் தம்மை மேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அணைத்து அருளுரை வழங்குவார்கள் . அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகளைச் சுவாமிகள் தொலைத்துவிடுகிறார் . இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமிகளின் மறமயக்கருணையை நினைந்து நினைந்து ஆனந்தக் கண்ணீர் சொரிவார்கள் . எல்லாரும் ஒருகுலம் எல்லாரும் ஒரு இனம் என்பது சுவாமிகள் தம்மை நாடி வருபவர்களுக்கு அடிக்கடி கூறும் உபதேசமாகும் . எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் எல்லாரும் சமம் என்றும் கூறுவார்கள் . நீயும் மனிதன் நானும் மனிதன் உங்கள் கடமையைப் போய்ச் செய்யுங்கள் . இங்கே ஏன் வருகிறீர்கள் ? நாங்கள் பிச்சைக் காரர்கள் நாங்கள் சும்மா இருக்கிறோம் . எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் ! என்று ஏசிக் கலைப்பதும் உண்டு . பிறவிப்பயானால் எங்களுக்கு இப்பிறவி வந்தது.நாம் ஒன்றும் அறியோம் நாம் ஏன் இங்கு பிறந்தோம் ? இப்பிறவியால் ஒரு பொல்லாப்பும் இல்லை . அதனால் பாதகமும் இல்லை . பிறப்பு வர இருந்ததுவந்துவிட்டது . நாங்கள் பிறவிப்பயனை நல்லாய்த் தேடிக்கொள்ளலாம் . என்று உபதேசம் செய்தார்கள் . சுவாமிகள் எல்லாமத உண்மைகளையும் அறிந்தவர்கள் . அவர் ஒரு சமரச ஞானி . அதனால் எல்லாச் சமயத்தவர்களும் அவரை நாடி வந்தார்கள் . அவரவருக்கேற்ற உபதேசம் கிடைத்து வந்தது . ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு சிவதொண்டன் என்றே கூறிக் கொள்வார்கள் . சுவாமிகளுடைய சந்நிதியில் ஒரு சில நிமிடங்கள் இருந்தாலும் மனச் சாந்தி ஏற்படுவதை யாரும் உணரலாம் . எந்த நேரமும் சாந்தி அலைகளையே வீசிக்கொண் டிருந்தார்கள் . சுவாமிகளைச் சூழ எந்த நேரத்திலும் ஒரு உயிர் அலை வீசிக்கொண்டே இருக்கும் . அந்த உயிர் அலைக்குள் இருந்து ஆனந்தம் பெறத் தம்மைத் தகுதியாக்கி கொண்டவர்கள் நாட்கணக்காக உணவையும் நேரத்தையும் தாகத்தையும் மறந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பர் . அப்படிப்பட்ட மனோபக்குவம் அற்றவர்களால் ஐந்து நிமிட நேரந்தானும் அங்கு இருக்க முடிவதில்லை . அத்தகையோரின் பரபரப்பை உணர்ந்த சுவாமிகள் வந்து வெகு நேரமாகி விட்டது ஓடிப்போய் உங்கள் கடமைகளைக் கவனியுங்கள் என்று கூறி அவர்களைப் போகச் செய்து விடுவார்கள் . மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான் . எப்போதான் இவனுடைய ஓட்டம் ஓயுமோ என்று கூறுவார்கள் உலகமெல்லாம் இறைவன் சந்நிதானம் உலகெல்லாம் இறைவன் சந்நிதானம் என்று அடிக்கடி கூறுவார்கள் . இதனை உணராத வர்கள் கடவுளைத் தேடித்தேடி அலைகிறார் கள் கடவுளை அறியவேண்டும் என்று கவலைப் படுபவர்கள் இல்லை . அவர்களு டைய கவலை எல்லாம் நிலையில்லாத பொருள்களைப் பற்றியனவாகவே இருக்கிறது . கடவுள் உங்களை வளர்க்கிறார் நீங்கள் கடவுளை வளருங்கள் ' ' என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிப்பார்கள் . சுவாமிகள் ஒரு சமரச ஞானி . சைவசித்தாந்த வேதாந்த சண்டைகள் சைவ வைணவ சண்டைகள் சைவ கிறித்தவ பௌத்த இசுலாமிய சண்டைகள் சுவாமிகளுக்குப் பிடிக்காதவைகள் . சுவாமிகள் இவைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் . ( 07 ஆம் பக்கம் பார்க்க )