தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

தெ 02 விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 உலகுய்ய அழுத தவமுதல்வர் சம்பந்தர் புகட்டி பின் நோயை அகற்ற திருநீற்றுப்பதிகம் பாடி தீர்த்தருளியதுடன் அனல்வாதம், புனல்வாதம் போன்றவற்றில் வென்று, சைவத்தைப் பாண்டிய நாட்டில் தழைக்கச் செய்தார். அவ்விதம் அனல்வாதத்திலே சமணர்கள் தத்தமது உண்மைகளை எழுதிய ஏட்டையும், சம்மந்தர் "தளிரிளவளரொளி" எனும் பதிகம்பாடி ஆலவாய் அமுதன் சைவம் நலிவுற்ற காலத்தில், இறைவனால் அனுப்பப்பட்ட தவமுதல்வர் சம்பந்தர் தரணியிலே மீண்டும் சைவத்தினையும், தமிழினையும் வேரூன்றச் செய்தது மட்டுமல்ல, தமிழின் பெருமையையும், மந்திரத் தன்மையினையும் ஆணையாக அடித்துக்கூறி வெளிப்படுத்தியுள்ளார். "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே." அவனியில் தோன்றும் அனைத்துக் குழந்தைகளும் பல காரணங்களுக்காக அழும். பாலிற்காகவோ, பயத்தாலோ என பல விடயங்களை வெளிப்படுத்தவும், தம் தேவையைப் பூர்த்தி செய்யவுமே அழும். ஆனால் அதற்கு ஒரு குழந்தை மட்டும் விதிவிலக்காய் உலகத்தின் உய்வுக்காக அழுதது. சேக்கிழார் சுவாமிகள், "எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்" அக்குழந்தை அழுததால் உலகமே மகிழ்ந்ததாய் பாடியுள்ளார். இவ்விதம் பாடியமைக்கு காரணம் உண்மையான தவத்தை பின்நாளில் அக்குழந்தை ஆற்றியமையேயாகும். அத்தவக் குழந்தை வேறுயாருமிலர். உலகம் உய்யும்படியாக முதல் மூன்று திருமுறைகளை அருளி, தான் பெற்ற இன்பத்தை உலகம் பெறச் செய்த திருஞானசம்பந்தரேயாவார். இதையன்றோ “தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்" எனும் அடி உணர்த்துகின்றது. சிவபாதவிருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் ஆளுடையபிள்ளையாக உதித்த இச்சுடர் பிறந்த இடமும் பிறந்த காரணமும் அளப்பரியவை என்பதை பெரியபுராணம், "தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்" எனப் போற்றுகின்றது. முக்கண்ணியிடம் திருமுலைப்பாலுண்டு, முத்தாக மூன்று திருமுறைகளும்பாடி சைவம் பரந்திடவே முனைப்புடன் செயலாற்றியவர் ஞானசம்பந்தர். காழிமன்னன், புகலியர்கோன், தோணிபுரத்தென்றல், பாலறாவாயர், ஆளுடையபிள்ளை, முத்தமிழ்வித்தகர் என பல நாமம் பெற்றதுடன் மட்டுமன்றி, ஈசனிடம் முத்துச்சின்னங்கள், பொற்றாளம்பெற்றதுடன், தந்தையின் யாகத்திற்காக பொன்னார் மேனியனிடத்துப் பொற்கிளியும் பெற்றவர். தென்னாடு திருஞானசம்பந்தரை ஈன்ற பகவதி அம்மையார் அவதரித்த பாலைநிலமான திருநனிப்பள்ளியை நெய்தல் நிலமாக மாற்ற இறைவனை வேண்டி dine "காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்." எனும் பதிகத்தை பாடினார். இவ்விதம் ஆளுடையபிள்ளை செய்த அற்புதங்கள் அளப்பரியவை. திருவோத்தூரில் வாழ்ந்த சிவபத்தரின் ஆண்பனைகளை “பூத்தேர்ந்தாயன" எனும் பதிகத்தைப்பாடி ஆண்பனைகளை குரும்பைகளுடன்கூடிய பெண்பனைகளாக மாற்றுவித்தார். பாம்பு தீண்டி திருமருகலில் உயிர் நீத்த வணிகனை உயிர்பெறச் செய்ய உமைபங்கனிடம் வேண்டி "சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே." எனும் பதிகம் பாடியருளினார். ஆலவாய் பெருநகரில் சமணம் பரவி சைவம் குன்றிப்போனது, மங்கையற்கரசியார், குலச்சிறையாரின் வேண்டுதலால் பாண்டிநாடு சென்றதோடு சமணர் தாம் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்ததால் அத்தீயைப் பாண்டிய மன்னனுக்கே வெப்பு நோயாக மாற்றுவதற்காக "அமணர் கொளுவும் சுடர்பையவே சென்று பாண்டியற்காகவே" எனும் பதிகம்பாடி நோயை மன்னனுக்கு அளித்து, புத்தி "போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே” எனும் பதிகம் எழுதப்பட்டுள்ள ஏட்டையும் இட்டார். சமணர்கள் இட்ட ஏடு கருகிப்போய்விட சம்பந்தர் இட்ட ஏடு வெம்மையிலும் பசுமையாய் இருந்தது. கொடிமாடசெங்குன்றுருக்கு சம்பந்தர் அடியவர்களுடன் சென்றிருந்த வேளையில் அங்கு பனிகாலம் நிலவியமையினால் அடியவர்கள் பலர் குளிர்சுர நோயினால் துன்பமுற்றனர். இதையறிந்து இறைவனிடம் அடியவர்களிற்கு மட்டுமன்றி அவ் ஊரிலிருப்பவர்கள் எவருக்கும் அந்நோய் வராதிருக்கும்படியாக "அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம்." எனும் திருப்பதிகத்தை பாடியருளினார். மயிலாக உமையவள் மகேசனை பூசித்த மயிலாப்பூரில் பாம்பு தீண்டி உயிர்நீத்த மங்கையாம் பூம்பாவையின் சாம்பலை மீண்டும் பாவையாய் உயிர்த்தெழச் செய்யும் பொருட்டு "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" எனும் பதிகம்பாடி பூம்பாவையை இறையருளால் உயிர்ப்பித்தார். சம்பந்தர், அப்பர் சுவாமிகளுடன் இணைந்து கொடும்பஞ்சத்தால் வருந்திய திருவீழிமிழலையில் அடியவர்க்கு அன்னமிட படிக்காசு பெற்று அன்னதானமளித்ததோடு, திருமறைக் காட்டிலுள்ள முதன்மை வாசற்கதவு வேதங்களால் மூடப்பட்டு இருந்தமையால் அப்பர் சுவாமிகள் அக்கதவைத் திறக்கவும், சம்பந்தமூர்த்தி அதைப் பூட்டவும் பாடி அற்புதம் செய்தனர். இத்தகு அற்புதங்களாற்றி சிவநெறியையும், சைவத்தையும் தழைத்தோங்கச் செய்து, சிறப்புற சித்திரக் கவிபாடி, சிவனை மகிழ்வித்த சம்பந்தமூர்த்திக்கு நம்பியாண்டார்நம்பியின் புதல்வியான தோத்திரப்பூரணையுடன் திருமணத்தை நிச்சயித்து, பெரியோர்கள் திருமணஞ்செய்வித்தனர் தோணிபுரக்கோயிலில் இறைவன் முன்னிலையில் தம்மனையாளைக் கைப்பிடித்த அடிகள் அவனியில் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து தம்மை விடுவிக்கும்படி இறைவனிடம் "நல்லூர்ப் பெருமணம்” எனும் பதிகம் பாட இறைவன் சோதியை தோற்றுவித்து, அச்சோதியில் திருமணத்திற்கு வந்த அனைவரும் கலக்கும்படி ஈசன் ஆணையிட்டதால் அனைவரும் அச்சோதியின் நடுவிலுள்ள சிறுவாயில் வழியாய் சோதியுட்புகுந்தனர். சம்மந்தர் தன் மனைவியின் கைத்தலம் பற்றி "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிப் புய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே" எனும் பதிகம் பாடி சோதியுட் போய் சிவத்துடன் இரண்டறக் கலந்தார். . மூன்று வயதிலிருந்து பதினாறு வயதுவரை நலிவுற்ற மெய்ச் சமயமான சைவத்தை வேரூன்றச் செய்ய பதிகங்களைப்பாடி அதிசயங்களாற்றிய திருஞானசம்பந்தர் என்றும் போற்றப்பட வேண்டிய சிவக்கொழுந்தாவார். "பயனாகும் நல்லான் பனைக்கு விடத்திற்கு மயிலாகும் நோய்க்கு மருந்தாகும்- உயிராகும் சிந்தும் எலும்பிற்குச் சிரபுரத்து நாவலன்சம் பந்தன் இயம்புதிருப் பாட்டு " திருச்சிற்றம்பலம்
தெ 02 விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 உலகுய்ய அழுத தவமுதல்வர் சம்பந்தர் புகட்டி பின் நோயை அகற்ற திருநீற்றுப்பதிகம் பாடி தீர்த்தருளியதுடன் அனல்வாதம் புனல்வாதம் போன்றவற்றில் வென்று சைவத்தைப் பாண்டிய நாட்டில் தழைக்கச் செய்தார் . அவ்விதம் அனல்வாதத்திலே சமணர்கள் தத்தமது உண்மைகளை எழுதிய ஏட்டையும் சம்மந்தர் தளிரிளவளரொளி எனும் பதிகம்பாடி ஆலவாய் அமுதன் சைவம் நலிவுற்ற காலத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட தவமுதல்வர் சம்பந்தர் தரணியிலே மீண்டும் சைவத்தினையும் தமிழினையும் வேரூன்றச் செய்தது மட்டுமல்ல தமிழின் பெருமையையும் மந்திரத் தன்மையினையும் ஆணையாக அடித்துக்கூறி வெளிப்படுத்தியுள்ளார் . தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே . அவனியில் தோன்றும் அனைத்துக் குழந்தைகளும் பல காரணங்களுக்காக அழும் . பாலிற்காகவோ பயத்தாலோ என பல விடயங்களை வெளிப்படுத்தவும் தம் தேவையைப் பூர்த்தி செய்யவுமே அழும் . ஆனால் அதற்கு ஒரு குழந்தை மட்டும் விதிவிலக்காய் உலகத்தின் உய்வுக்காக அழுதது . சேக்கிழார் சுவாமிகள் எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார் அக்குழந்தை அழுததால் உலகமே மகிழ்ந்ததாய் பாடியுள்ளார் . இவ்விதம் பாடியமைக்கு காரணம் உண்மையான தவத்தை பின்நாளில் அக்குழந்தை ஆற்றியமையேயாகும் . அத்தவக் குழந்தை வேறுயாருமிலர் . உலகம் உய்யும்படியாக முதல் மூன்று திருமுறைகளை அருளி தான் பெற்ற இன்பத்தை உலகம் பெறச் செய்த திருஞானசம்பந்தரேயாவார் . இதையன்றோ தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில் எனும் அடி உணர்த்துகின்றது . சிவபாதவிருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் ஆளுடையபிள்ளையாக உதித்த இச்சுடர் பிறந்த இடமும் பிறந்த காரணமும் அளப்பரியவை என்பதை பெரியபுராணம் தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் எனப் போற்றுகின்றது . முக்கண்ணியிடம் திருமுலைப்பாலுண்டு முத்தாக மூன்று திருமுறைகளும்பாடி சைவம் பரந்திடவே முனைப்புடன் செயலாற்றியவர் ஞானசம்பந்தர் . காழிமன்னன் புகலியர்கோன் தோணிபுரத்தென்றல் பாலறாவாயர் ஆளுடையபிள்ளை முத்தமிழ்வித்தகர் என பல நாமம் பெற்றதுடன் மட்டுமன்றி ஈசனிடம் முத்துச்சின்னங்கள் பொற்றாளம்பெற்றதுடன் தந்தையின் யாகத்திற்காக பொன்னார் மேனியனிடத்துப் பொற்கிளியும் பெற்றவர் . தென்னாடு திருஞானசம்பந்தரை ஈன்ற பகவதி அம்மையார் அவதரித்த பாலைநிலமான திருநனிப்பள்ளியை நெய்தல் நிலமாக மாற்ற இறைவனை வேண்டி dine காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் . எனும் பதிகத்தை பாடினார் . இவ்விதம் ஆளுடையபிள்ளை செய்த அற்புதங்கள் அளப்பரியவை . திருவோத்தூரில் வாழ்ந்த சிவபத்தரின் ஆண்பனைகளை பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைப்பாடி ஆண்பனைகளை குரும்பைகளுடன்கூடிய பெண்பனைகளாக மாற்றுவித்தார் . பாம்பு தீண்டி திருமருகலில் உயிர் நீத்த வணிகனை உயிர்பெறச் செய்ய உமைபங்கனிடம் வேண்டி சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே . எனும் பதிகம் பாடியருளினார் . ஆலவாய் பெருநகரில் சமணம் பரவி சைவம் குன்றிப்போனது மங்கையற்கரசியார் குலச்சிறையாரின் வேண்டுதலால் பாண்டிநாடு சென்றதோடு சமணர் தாம் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்ததால் அத்தீயைப் பாண்டிய மன்னனுக்கே வெப்பு நோயாக மாற்றுவதற்காக அமணர் கொளுவும் சுடர்பையவே சென்று பாண்டியற்காகவே எனும் பதிகம்பாடி நோயை மன்னனுக்கு அளித்து புத்தி போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே எனும் பதிகம் எழுதப்பட்டுள்ள ஏட்டையும் இட்டார் . சமணர்கள் இட்ட ஏடு கருகிப்போய்விட சம்பந்தர் இட்ட ஏடு வெம்மையிலும் பசுமையாய் இருந்தது . கொடிமாடசெங்குன்றுருக்கு சம்பந்தர் அடியவர்களுடன் சென்றிருந்த வேளையில் அங்கு பனிகாலம் நிலவியமையினால் அடியவர்கள் பலர் குளிர்சுர நோயினால் துன்பமுற்றனர் . இதையறிந்து இறைவனிடம் அடியவர்களிற்கு மட்டுமன்றி அவ் ஊரிலிருப்பவர்கள் எவருக்கும் அந்நோய் வராதிருக்கும்படியாக அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம் . எனும் திருப்பதிகத்தை பாடியருளினார் . மயிலாக உமையவள் மகேசனை பூசித்த மயிலாப்பூரில் பாம்பு தீண்டி உயிர்நீத்த மங்கையாம் பூம்பாவையின் சாம்பலை மீண்டும் பாவையாய் உயிர்த்தெழச் செய்யும் பொருட்டு மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் எனும் பதிகம்பாடி பூம்பாவையை இறையருளால் உயிர்ப்பித்தார் . சம்பந்தர் அப்பர் சுவாமிகளுடன் இணைந்து கொடும்பஞ்சத்தால் வருந்திய திருவீழிமிழலையில் அடியவர்க்கு அன்னமிட படிக்காசு பெற்று அன்னதானமளித்ததோடு திருமறைக் காட்டிலுள்ள முதன்மை வாசற்கதவு வேதங்களால் மூடப்பட்டு இருந்தமையால் அப்பர் சுவாமிகள் அக்கதவைத் திறக்கவும் சம்பந்தமூர்த்தி அதைப் பூட்டவும் பாடி அற்புதம் செய்தனர் . இத்தகு அற்புதங்களாற்றி சிவநெறியையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்து சிறப்புற சித்திரக் கவிபாடி சிவனை மகிழ்வித்த சம்பந்தமூர்த்திக்கு நம்பியாண்டார்நம்பியின் புதல்வியான தோத்திரப்பூரணையுடன் திருமணத்தை நிச்சயித்து பெரியோர்கள் திருமணஞ்செய்வித்தனர் தோணிபுரக்கோயிலில் இறைவன் முன்னிலையில் தம்மனையாளைக் கைப்பிடித்த அடிகள் அவனியில் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து தம்மை விடுவிக்கும்படி இறைவனிடம் நல்லூர்ப் பெருமணம் எனும் பதிகம் பாட இறைவன் சோதியை தோற்றுவித்து அச்சோதியில் திருமணத்திற்கு வந்த அனைவரும் கலக்கும்படி ஈசன் ஆணையிட்டதால் அனைவரும் அச்சோதியின் நடுவிலுள்ள சிறுவாயில் வழியாய் சோதியுட்புகுந்தனர் . சம்மந்தர் தன் மனைவியின் கைத்தலம் பற்றி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிப் புய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே எனும் பதிகம் பாடி சோதியுட் போய் சிவத்துடன் இரண்டறக் கலந்தார் . . மூன்று வயதிலிருந்து பதினாறு வயதுவரை நலிவுற்ற மெய்ச் சமயமான சைவத்தை வேரூன்றச் செய்ய பதிகங்களைப்பாடி அதிசயங்களாற்றிய திருஞானசம்பந்தர் என்றும் போற்றப்பட வேண்டிய சிவக்கொழுந்தாவார் . பயனாகும் நல்லான் பனைக்கு விடத்திற்கு மயிலாகும் நோய்க்கு மருந்தாகும்- உயிராகும் சிந்தும் எலும்பிற்குச் சிரபுரத்து நாவலன்சம் பந்தன் இயம்புதிருப் பாட்டு திருச்சிற்றம்பலம்