தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 அமைவிடம் : இராமநாதபுரம், தமிழ்நாடு உத்தரகோச மங்கை எனும் பெருந்தலம் சைவத்தமிழ்ப் பண்பாட்டில் பழமையான தலம் என்று சொல்லலாம். உலகின் முதல் சிவன் கோயில் என்றும் இது புகழப்படுகின்றது. இந்தக்கோயில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டிலே அமையப்பெற்றுள்ளது. இந்தத் தலத்தின் பழமையை உணர்த்தும் வண்ணம் மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது எனும் வழக்காறு நிலவி வருகின்றது. சங்க இலக்கியத்தில் இவ்வாலயம் இலவந்திகைப் பள்ளி என்று அழைக்கப்பட்டதாக தமிழியல் அறிஞர்கள் சொல்கின்றனர். இவ்வாலய வரலாற்றிலும் ஆலயத்தில் உள்ள மதில் கல்வெட்டுகளிலும் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாலயத்தின் பழமையை மேலும் பறைசாற்றி நிற்கின்றது. மேற்குறித்த கல்வெட்டில் "இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்" என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இறைவன் - மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர் இறைவி - மங்களேசுவரி, மங்களாம்பிகை, மங்களநாயகி கோயில் மரம் - இலந்தை (3000 வருடம் பழமையான மரம்) தீர்த்தம்- அக்கினி தீர்த்தம் வழிபட்டோர் - மாணிக்கவாசகர், வேதவியாசர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், காகபூசண்டர் ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்- உலகின் முதற் சிவன்கோயில் உத்தரகோசமங்கை (மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிகொடுத்த சிறப்புத்தலம்) மகிழ்ந்தார். இராவணனின் திருக்கரம் பட்டதும் உத்தர கோச மங்கைக்குளத்தில் தீப்பிழம்பு தோன்றியது. உடனே தம்மை அறியாமல் அங்கிருந்த முனிவர்கள் அதற்குள் வீழ்ந்து மறைந்தார்கள். ஆயிரத்தில் ஒருவர் மட்டும் சுய நினைவுக்கு மீண்டு அதிலிருந்து தப்பித்தார். பின்னர் அந்த உயிர் நீத்த 999 பேருக்கும் தப்பித்த ஒருவருக்கும் சேர்த்து உமை அம்மையுடன் விடை மீது அமர்ந்து காட்சி வழங்கினார் இறைவன். இதனால் காட்சி கொடுத்த நாயகன் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகின்றான். இவ்வாறு காட்சி பெற்ற ஆயிரம் பேரும் இலிங்க வடிவாக இறைவனுடன் இணைந்தனர். இன்றும் இத்தல அக்கினி தீர்த்த இலத்தை மரத்தடியில் இருக்கும் சிறிய கோயிலில் உள்ள இலிங்கத்திருஉருவில் ஆயிரம் இலிங்கங்கள் காணப்படுகின்றன. இலங்கையைச் சேர்ந்த கண்டி அரசராலும் மேலும் பலராலும் இவ்வாலய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வரை பழமை மாறாது இக்கோயில் காட்சி அளிக்கின்றது. கட்டட அமைப்பில் உச்சம் தொடும் இத்தலம் தட்சிண கயிலாயம், இலந்தைவனம்(பத்ரிகாரண்யம்) வியாக்ரபுரம்,ஆதி சிதம்பரம், பிரமபுரம், நால்வேதபுரி (சதுர்வேதபுரி), மங்களபுரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ஆலயச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. சிவனின் பூசைக்கே பயன்படுத்தப்படாத தாழம்பூ இத்தலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. தலத்தின் மீது பாடப்பட்ட பாமாலைகள் வாதவூராரின் நீத்தல் விண்ணப்பம் "கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின்தோல் உடையவனே மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே.” எனும் நீத்தல் விண்ணப்பப் பாடல் இத்தலத்தின் பெருமை, அருமை, பழமை பறை சாற்றி நிற்கிறது. முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட அருணகிரிநாதரும் இத்தலத்தில் அருளும் முருகப் பெருமான் மீது முத்தான செந்தமிழில் திருப்புகழ் பாடி நெகிழ்ந்துள்ளார். ''உட்பொருள் ஞானக் குறமகளும் பற் சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்றுத்தர கோசத் தலமுறை கந்தப் பெருமானே!” கோயில் சிறப்பும் மகிமையும் உத்தரம் என்றால் அறிவுரை. கோசம் என்பதன் பொருள் இரகசியம். மங்கை என்பது சக்தியை குறித்து நிற்கின்றது. இறைவன் இறைவிக்கு இரகசியமாக வேத ஆகமங்களை கூறியதால் இக்கோயில் உத்தர கோச மங்கை என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இத்தலம் மாணிக்கவாசகரால் தென்னாடு அருள்மிகு மரகத ஆடல்வல்லான் AAMBHE வழிபடப்பட்ட தலம். இங்கு திருவாசக ஏடு இல்லாத மாணிக்கவாசகராக அடிகளார் காட்சி தருகின்றார். இது அவரின் முற்பிறப்பு என்றும் கருதப்படுகின்றது. இங்கு மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி கொடுத்துள்ளார். "உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தாக வேடம் காட்டிய இயல்பும்" என்று அவரே கீர்த்தித்திரு அகவலில் சான்று பகிர்கின்றார். நீத்தல் விண்ணப்பம் உள்ளடங்கலாக 38 இடங்களில் இக்கோவிலைப் பற்றி வாதவூரர் சொல்லிச் செல்கின்றார். 03 மங்கை எனும் பெயர் உடைய இத்தலம் சக்திக்கு முக்கியத்துவம் வழங்கும் தலமாகக் காணப்படுகின்றது. இத்தலத்து இறைவனை சக்தி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகின்றது. பரதவர் மகளாக பிறந்த அம்பாளை கொக்கலிங்கப் பெருமான் திருமணம் புரிந்து இத்தலத்தில் வைத்து வேத அறிவுரை வழங்கி பின் மதுரையை அடைந்ததாக மதுரைப்புராணம் சொல்கின்றது. மற்றொரு மங்கையாகிய இராவணனின் மனைவி மண்டோதரியின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் அங்கிருந்த ஆயிரம் முனிவர்களைப்பார்த்து மண்டோதரியின் வழிபாட்டில் மகிழ்ந்து அவளுக்கு அருள் புரிய இலங்கை மூதூர் செல்கின்றோம். அதுவரை இங்கேயே இருந்து வேதாகம சுவடிகளை காத்து வாருங்கள். எப்பொழுது எம் திருமேனி இலங்கை அரசன் இராவணனால் தொடப்படுகின்றதோ அப்பொழுது இந்தக்குளத்தில் தீப்பிழம்பு உருவாகும் என்று வானொலியாக கூறி மறைந்தார். இலங்கை அரசி மண்டோதரியின் கைகளில் பச்சிளம் குழந்தையாக ஈசன் தவழ்ந்தார். அதைப்பார்த்த இராவணன் திருஉத்தரகோசமங்கை. தந்தையின் இடத்தில் இருந்து அந்தக்குழந்தையை அணைத்து அருள்மிகு மங்களநாதப் பெருமான் தெ இறைவன் தீப்பிழம்பாக தோன்றிய குளம் அக்கினி தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது. இது தவிர பிரம்ம தீர்த்தம், மொய்யார் தடப்பொய்கை, வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்பனவும் உள்ளன. இங்குள்ள ஆடல் வல்லான், ஆதி சிதம்பரேசர் என்று அழைக்கப்படுகின்றார். இங்குள்ள ஆடல் சபை, இரத்தின சபை என்று அழைக்கப்படுகின்றது. இங்கு விலை மதிக்க முடியாத ஆறு அடி உயர மரகத ஆடல் வல்லான் காட்சி அளிக்கின்றான். "உமை காண இங்குள்ள அறை போன்ற அமைப்பில் ஆடிய சிவன் பிறகு யாவரும் காண அம்பலத்தில் ஆடினான்" என்று சொல்வார்கள். இதை நினைவில் கொண்டு தான் அறையில் ஆடித்தான் அம்பலம் ஏற வேண்டும் எனும் பழமொழி நிலவி வருகின்றது. மிகச்சிறிய அணுவில் இறைவன் ஆடும் ஆட்டத்தை இத்தலமும் மிகப்பெரிய அண்டத்தில் ஈசன் ஆடும் ஆட்டத்தை தில்லையம்பலமும் குறிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாலயத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலந்தை மரமே இவ்வாலயத் செதுக்கப்பட்ட குருந்த மரமும் அதன் கீழ் உறையும் தலமரமாக காணப்படுகின்றது. இங்கு கருங்கல்லால் தென்முகக் கடவுளும் அவரிடம் அறிவுரை கேட்கும் மாணிக்க வாசகர் சிலையும் காண்போரை இறைவன் பால் இழுத்துச்செல்லும். உத்தரகோச மங்கைக்கு அரசே போற்றி. உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தால் முத்தி. வாழ்நாளில் சைவர்கள் பார்க்கவேண்டிய அற்புதத்தலம் திருச்சிற்றம்பலம் அருள்மிகு மங்களநாயகிஅம்மை
விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 அமைவிடம் : இராமநாதபுரம் தமிழ்நாடு உத்தரகோச மங்கை எனும் பெருந்தலம் சைவத்தமிழ்ப் பண்பாட்டில் பழமையான தலம் என்று சொல்லலாம் . உலகின் முதல் சிவன் கோயில் என்றும் இது புகழப்படுகின்றது . இந்தக்கோயில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டிலே அமையப்பெற்றுள்ளது . இந்தத் தலத்தின் பழமையை உணர்த்தும் வண்ணம் மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது எனும் வழக்காறு நிலவி வருகின்றது . சங்க இலக்கியத்தில் இவ்வாலயம் இலவந்திகைப் பள்ளி என்று அழைக்கப்பட்டதாக தமிழியல் அறிஞர்கள் சொல்கின்றனர் . இவ்வாலய வரலாற்றிலும் ஆலயத்தில் உள்ள மதில் கல்வெட்டுகளிலும் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . இது இவ்வாலயத்தின் பழமையை மேலும் பறைசாற்றி நிற்கின்றது . மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது . இறைவன் - மங்களேசுவரர் மங்களநாதர் காட்சி கொடுத்தநாயகர் பிரளயாகேசுவரர் இறைவி - மங்களேசுவரி மங்களாம்பிகை மங்களநாயகி கோயில் மரம் - இலந்தை ( 3000 வருடம் பழமையான மரம் ) தீர்த்தம்- அக்கினி தீர்த்தம் வழிபட்டோர் - மாணிக்கவாசகர் வேதவியாசர் மிருகண்டு முனிவர் வாணாசுரன் காகபூசண்டர் ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் உலகின் முதற் சிவன்கோயில் உத்தரகோசமங்கை ( மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிகொடுத்த சிறப்புத்தலம் ) மகிழ்ந்தார் . இராவணனின் திருக்கரம் பட்டதும் உத்தர கோச மங்கைக்குளத்தில் தீப்பிழம்பு தோன்றியது . உடனே தம்மை அறியாமல் அங்கிருந்த முனிவர்கள் அதற்குள் வீழ்ந்து மறைந்தார்கள் . ஆயிரத்தில் ஒருவர் மட்டும் சுய நினைவுக்கு மீண்டு அதிலிருந்து தப்பித்தார் . பின்னர் அந்த உயிர் நீத்த 999 பேருக்கும் தப்பித்த ஒருவருக்கும் சேர்த்து உமை அம்மையுடன் விடை மீது அமர்ந்து காட்சி வழங்கினார் இறைவன் . இதனால் காட்சி கொடுத்த நாயகன் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகின்றான் . இவ்வாறு காட்சி பெற்ற ஆயிரம் பேரும் இலிங்க வடிவாக இறைவனுடன் இணைந்தனர் . இன்றும் இத்தல அக்கினி தீர்த்த இலத்தை மரத்தடியில் இருக்கும் சிறிய கோயிலில் உள்ள இலிங்கத்திருஉருவில் ஆயிரம் இலிங்கங்கள் காணப்படுகின்றன . இலங்கையைச் சேர்ந்த கண்டி அரசராலும் மேலும் பலராலும் இவ்வாலய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன . தற்போது வரை பழமை மாறாது இக்கோயில் காட்சி அளிக்கின்றது . கட்டட அமைப்பில் உச்சம் தொடும் இத்தலம் தட்சிண கயிலாயம் இலந்தைவனம் ( பத்ரிகாரண்யம் ) வியாக்ரபுரம் ஆதி சிதம்பரம் பிரமபுரம் நால்வேதபுரி ( சதுர்வேதபுரி ) மங்களபுரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது . ஆலயச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல் நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன . சிவனின் பூசைக்கே பயன்படுத்தப்படாத தாழம்பூ இத்தலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது . தலத்தின் மீது பாடப்பட்ட பாமாலைகள் வாதவூராரின் நீத்தல் விண்ணப்பம் கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின்தோல் உடையவனே மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே . எனும் நீத்தல் விண்ணப்பப் பாடல் இத்தலத்தின் பெருமை அருமை பழமை பறை சாற்றி நிற்கிறது . முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட அருணகிரிநாதரும் இத்தலத்தில் அருளும் முருகப் பெருமான் மீது முத்தான செந்தமிழில் திருப்புகழ் பாடி நெகிழ்ந்துள்ளார் . ' ' உட்பொருள் ஞானக் குறமகளும் பற் சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்றுத்தர கோசத் தலமுறை கந்தப் பெருமானே ! கோயில் சிறப்பும் மகிமையும் உத்தரம் என்றால் அறிவுரை . கோசம் என்பதன் பொருள் இரகசியம் . மங்கை என்பது சக்தியை குறித்து நிற்கின்றது . இறைவன் இறைவிக்கு இரகசியமாக வேத ஆகமங்களை கூறியதால் இக்கோயில் உத்தர கோச மங்கை என்று பெயர் பெற்றதாகக் கூறுவர் . இத்தலம் மாணிக்கவாசகரால் தென்னாடு அருள்மிகு மரகத ஆடல்வல்லான் AAMBHE வழிபடப்பட்ட தலம் . இங்கு திருவாசக ஏடு இல்லாத மாணிக்கவாசகராக அடிகளார் காட்சி தருகின்றார் . இது அவரின் முற்பிறப்பு என்றும் கருதப்படுகின்றது . இங்கு மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி கொடுத்துள்ளார் . உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தாக வேடம் காட்டிய இயல்பும் என்று அவரே கீர்த்தித்திரு அகவலில் சான்று பகிர்கின்றார் . நீத்தல் விண்ணப்பம் உள்ளடங்கலாக 38 இடங்களில் இக்கோவிலைப் பற்றி வாதவூரர் சொல்லிச் செல்கின்றார் . 03 மங்கை எனும் பெயர் உடைய இத்தலம் சக்திக்கு முக்கியத்துவம் வழங்கும் தலமாகக் காணப்படுகின்றது . இத்தலத்து இறைவனை சக்தி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகின்றது . பரதவர் மகளாக பிறந்த அம்பாளை கொக்கலிங்கப் பெருமான் திருமணம் புரிந்து இத்தலத்தில் வைத்து வேத அறிவுரை வழங்கி பின் மதுரையை அடைந்ததாக மதுரைப்புராணம் சொல்கின்றது . மற்றொரு மங்கையாகிய இராவணனின் மனைவி மண்டோதரியின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் அங்கிருந்த ஆயிரம் முனிவர்களைப்பார்த்து மண்டோதரியின் வழிபாட்டில் மகிழ்ந்து அவளுக்கு அருள் புரிய இலங்கை மூதூர் செல்கின்றோம் . அதுவரை இங்கேயே இருந்து வேதாகம சுவடிகளை காத்து வாருங்கள் . எப்பொழுது எம் திருமேனி இலங்கை அரசன் இராவணனால் தொடப்படுகின்றதோ அப்பொழுது இந்தக்குளத்தில் தீப்பிழம்பு உருவாகும் என்று வானொலியாக கூறி மறைந்தார் . இலங்கை அரசி மண்டோதரியின் கைகளில் பச்சிளம் குழந்தையாக ஈசன் தவழ்ந்தார் . அதைப்பார்த்த இராவணன் திருஉத்தரகோசமங்கை . தந்தையின் இடத்தில் இருந்து அந்தக்குழந்தையை அணைத்து அருள்மிகு மங்களநாதப் பெருமான் தெ இறைவன் தீப்பிழம்பாக தோன்றிய குளம் அக்கினி தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது . இது தவிர பிரம்ம தீர்த்தம் மொய்யார் தடப்பொய்கை வியாச தீர்த்தம் சீதள தீர்த்தம் மங்கள தீர்த்தம் என்பனவும் உள்ளன . இங்குள்ள ஆடல் வல்லான் ஆதி சிதம்பரேசர் என்று அழைக்கப்படுகின்றார் . இங்குள்ள ஆடல் சபை இரத்தின சபை என்று அழைக்கப்படுகின்றது . இங்கு விலை மதிக்க முடியாத ஆறு அடி உயர மரகத ஆடல் வல்லான் காட்சி அளிக்கின்றான் . உமை காண இங்குள்ள அறை போன்ற அமைப்பில் ஆடிய சிவன் பிறகு யாவரும் காண அம்பலத்தில் ஆடினான் என்று சொல்வார்கள் . இதை நினைவில் கொண்டு தான் அறையில் ஆடித்தான் அம்பலம் ஏற வேண்டும் எனும் பழமொழி நிலவி வருகின்றது . மிகச்சிறிய அணுவில் இறைவன் ஆடும் ஆட்டத்தை இத்தலமும் மிகப்பெரிய அண்டத்தில் ஈசன் ஆடும் ஆட்டத்தை தில்லையம்பலமும் குறிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர் . இவ்வாலயத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலந்தை மரமே இவ்வாலயத் செதுக்கப்பட்ட குருந்த மரமும் அதன் கீழ் உறையும் தலமரமாக காணப்படுகின்றது . இங்கு கருங்கல்லால் தென்முகக் கடவுளும் அவரிடம் அறிவுரை கேட்கும் மாணிக்க வாசகர் சிலையும் காண்போரை இறைவன் பால் இழுத்துச்செல்லும் . உத்தரகோச மங்கைக்கு அரசே போற்றி . உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தால் முத்தி . வாழ்நாளில் சைவர்கள் பார்க்கவேண்டிய அற்புதத்தலம் திருச்சிற்றம்பலம் அருள்மிகு மங்களநாயகிஅம்மை