தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 MA KIDS செங்கல்பட்டைத் தாண்டி சென்னையை நோக்கி மகிழுந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. பின்னிருக்கை 70 அகவையினார் உடனலக் குறைவால், படுத்துக்கொண்டு வருகிறார். ஓட்டுநருக்கு முன்னிருக்கையில் ஒருவரமரும் இருக்கையில் இருவர் அமர்ந்து வருகிறார். முதியவர் படுத்து ஓய்வாக பயணிக்க வேண்டும் என்றே இந்த ஏற்பாடு. பரனூர் பகுதியைத் தாண்டியிருப்பர், வண்டியை நிறுத்தி விட்டு, அம் முதுமகனார் வாந்தி எடுத்துவிட்டார். உடல் உண்மையில் மிகவும் சரியில்லாத நிலைதான். எனினும் ஏதோ காரணம் பற்றிப் பயணிக்கின்றனர். மகிழுந்து மெதுவாக குரோம்பேட்டை பகுதியை அடைந்தது. அப்பெரியவர் முன்பமர்ந்திருப்பவரை "பல்லாவரம் வந்துவிட்டதா?" என்று வினவினார். "இல்லை குரோம்பேட்டையிலுள்ளோம் சாமி" என்று சொல்ல, அவர்கள் முடியாமல் படுத்திருக்கும் தன்னை அமர வைக்கச் சொன்னார். பல்லாவரம் பகுதி கடந்த பின், ஒரு சில மணித்துளிகளில் மீண்டும் மகிழுந்தை நிறுத்தி தன்னை முன்புபோல் படுக்க வைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்கள். உடன் வந்த அன்பர்களும் அவ்வாறே செய்தனர். இந்நிகழ்வு 1980களில் நிகழ்ந்தது. வாசகர்களே, இந்நிகழ்வு இயல்பான நிகழ்வுபோல இருக்கலாம். ஆனால், அம்மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த ஒருவருக்கு இந்நிகழ்வின் சொல்லொணா மேன்மை சில பல ஆண்டுகள் கழித்தே தெரியவந்தது. மகிழுந்தில் படுத்து வந்தவர், தனித்தமிழ் இயக்கத் தந்தை, முனைந்த நல்கொள்கை வீரர் மும்மொழிப் புலமை வேந்தர், மனித்தருள் தெய்வம் போன்ற அருட் குருநாதர் மறைத்திரு. மறைமலை அடி களாரின் தலைமை மாணாக்கரும், திருக்குறள் பீடம், குருபழநி ஆதீனத்தின் முதற்குரவர் அருட்குருநாதர் தவத்திரு. அழகரடிகளார் ஆவார்கள். "பல்லாவரம் மறைமலையடிகள் வாழ்ந்த பகுதி ஆகையால் அவரை வணங்கும் பொருட்டு, தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்தமர விழைந்த, அடிகளாரின் குருபத்திமையை நாம் என்னென்று சொல்வது!" என்று அடிகளாரின் மாணவர் ஒளியகம் ந.ரா. ஆடலரசு (அருள்நெறி தீக்கை அம்பலவாண தேசிகர்) சொன்னபொழுது தான், மகிழுந்தில் முன்னிருக்கையில் அடிகளாரோடு வந்தவருக்கு அந்நிகழ்வின் மேன்மை விளங்கலாயிற்று. அவர்தாம், வாழையடி வாழை என வந்த, தமிழ்ச்சைவ ஞான மரபின் ஐந்தாம் அருட்குரவர். சிவத்திரு. ஞான வொளியடிகளார் (ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்கள்). 1846ம் ஆண்டு சைவ சித்தாந்த சண்டமாருதம் அருட்குருநாதர் சூளை சோமசுந்தர நாயகரை முதற்குரவராக கொண்டு சைவத்தமிழ் மரபும் அதன் மாணாக்கர் திரளும் பேரியக்கமாக இயங்கினர். அன்னாரையடுத்து அருட்குருநாதர் மறைமலையடிகளாரும், அவருடைய மாணவர் திருக்குறள்பீடம், குருகுலம், குருபழநி ஆதீனம் தவத்திரு. அழகரடிகளாரும், அவரை அடுத்து நான்காம் குரவராக திருக்கேதாரச் செல்வர், சிவநெறிச்செம்மல், அருள்நெறித்தீக்கை அம்பலவாண தேசகிர் சிவத்திரு ஒளியகம் ந.ரா. ஆடலரசு ஐயா அவர்களும் வழிவழி இவ்வருந்தமிழ் ஞானமரபை தலைமையேற்று நடத்தினார்கள். இவ்வருள்மரபில் ஐந்தாம் தென்னாடு அருட்குரவராக விளங்கி வருபவர், ஒளியகம் ந.ரா. ஆடலரசு ஐயா அவர்களின் திருமகனார் சிவத்திரு. ஞானவொளியடிகளார் (ஒளியகம் ந.ஒளியரசு ஐயா) அவர்கள் ஆவார்கள். நம் காலத்து வாழும் இத்தமிழ்நெறி வேள்விச் செம்மலின் வரலாற்று மாட்சி ஈண்டு கட்டுரைக்கலாவோம். சிமசிவி 01.12.1952, கார்த்திகை திங்கள் சகடு (ரோகிணி) நாண்மீனன்று, சிவத்திரு ஒளியகம் ந.ரா. ஆடலரசு - திருவாட்டி சரசுவதி இணையருக்கு நான்காம் மகவாக செங்குந்த மரபில் தோன்றினார் ஒளியரசு அவர்கள். தமிழகம் எங்கும் ஞானவிழுதுகளை பரப்பி நிற்கும் ஆலமரம் சிவத்திரு. ஞானவொளியடிகள் [ஒளியகம் ௩. ஒளியரசு] அவர்களின் வரலாற்று மாட்சி "பிறவியில் வருவோர் எல்லார்க்கும், பிறப்பின் நிகழ்ச்சிகளாக வரலாறுகள் உண்டு. குழந்தையாகத் தோன்றுவது, பெற்றோர் உடன் பிறந்தார் இன்னார் என்பது, பொருள் இயற்கையாக அமையும் பிறவி நிகழ்ச்சிகளில், வாழ்க்கை செய்கையாக அங்ஙனம் மாட்சிகள் நிகழ்வதானால், எழுதுவதற்கும் அவை சிறப்பாக உதவும்” என்று மறைமலையடிகள் வரலாற்று மாட்சி முன்னுரையில் அழ கரடிகளார் அருளியுள்ளார்கள். சேர்த்து எளிதாக வாழ்ந்து வரும் உலகியல் முறைகள், மறைவு முதலியன யார்க்கு இல்லை? வரும் காலத்திலேயே எதிர் பாராமல் ஒரு சிவனிரா நாளில் (மாசி மகாசிவராத்திரி) திருக் குறள் பீடம் அருட்குருநாதர் சிவத்திரு. அழகரடிகள் அவர் கள் அவராகவே எழுந்தருளி சமய தீக்கை அளித்தார்கள். வாழ்க்கைத் துணைநலம்:- அவற்றைத் தெரிவித்தல் வரலாறு ஆகாது. அவை எல்லார்க்கும் பொது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புகள் எவையேனும் வாழ்க்கை யில் அமையுமானால், அத் தனிச் சிறப்புகளே 1978ஆம் ஆண்டு, அருட் குருநாதர் அழகரடிகளாரே திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயில் குடமுழுக்கு சிவத்திரு. ‘வரலாறு’ என்று குறிப்ப கோதின் மொழிக் கொற்றவன் விழாவில் முவில் மானாம்பதி தற்கு வாய்ப்புடையவை! திருக்கழுக்குன்றம் திருவாளர். டி. தனபால் முதலி யார், திருவாட்டி பாலாமணி அம்மை ஆகியோரின் மகள் த. மல்லிகா அம்மையாரை திருமணம் செய்து வைக்கும் பேறு பெற்றவர். பணி:- அவ்வகையில் வாழ்க்கையே தனிச் சிறப்பாக அமைந்தள்ளது ஐந்தாம் குரவர்க்கு! பெரிய தந்தையார் வித்துவான் புலவர் 07 ந.ரா. தேவராசனார், சிறிய தந்தையார் புலவரேறு திருக்கோயிலிதழாசிரியர் ந.ரா. முருகவேளனார், தமிழும் சைவமும் தம்மிரு கண்ணென பேணும் நற்குடும்பத்தில் பிறந்த பெருமகனார், அருளுடன் பெருட்டிற முமறிய, இளங்கலைப் பொருளாதாரமும் (பி.ஏ.) இளவணிகவியலும் (பி.காம்) பயின்றார். இவர் சைதாப்பேட்டை, சென்னை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயின்று தெ விழுப்புரம் உஷா குழந்தைகள் பள்ளியில் (நர்சரி பள்ளி) மேலாளராகி தன் பணியைத் தொடங்கியவர். கெல் கம்பொனெண்ட்ஸ் நிறுவனத்தில் காசாளர், தமிழக அரசின் புள்ளியியல் துறையில் உதவிப் புள்ளியியல் ஆய்வாளர், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் என பல பரிணாமங்களுடன், 2010 இல் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாளராய் இருந்து ஓய்வு பெற்றார்கள். தொழில்சார்ந்த இப்பணிகளேயன்றி தொண்டாக, சைவ சித்தாந்த பெருமன்றத்தில் மாத தணிக்கையாளர், செயற்குழு உறுப்பினர் (1985-1986), பெருமன்ற செயலாளர் (1987 துணை 1992), சைதைத் தேவார சபையில் தணிக்கையாளர், சைவச் சித்தாந்தப் பெருமன்றத்தின் 'சித்தாந்தம்' இதழின் துணை ஆசிரியர், மீண்டும் செயற்குழு உறுப்பினர் (1995 -2003), விழுப்புரம் "தெய்வீக பேரவை"யில் (1975 - 79) நிறுவன - செயலர், தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தின் தலைவர், அப்பர் தொண்டரணி துணைத்தலைவர், அப்பர் விழா அறக் கட்டளை மற்றும் சுந்தர விழா அறக்கட் டளை செயலாளர், தொகுப்பாசிரியர், பதிப் பாசிரியர், நூலாசிரியர், கட்டுரையாசிரியர் என்று பல பரிணாமங்களில் செயலாற்றி வருகின்றார்கள். பெருமன்ற பணிகள்:- அறிவுக்கடல் மறைமலை அடிகளாரால் திருப்பாதிரிப்புலியூர் அருட்டிரு ஞானியார் அடிகள் திருமடத்தில் 7.7.1905இல் தொடங்கப் பெற்ற சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் செயலராக தொண்டாற்றிய காலகட்டத்தில் இவர்களாற்றிய பணிகள் அளப்பரியன. 1942இல் மன்றத்தில் வெளியிட்ட திருவாசகம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய திருவாசகம் மறு பதிப்பு வெளியீடு, திருமுறைக்காவலர் திரு. அ. சோமசுந்தரம் செட்டியார் வெளியிட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் கூடிய ஏழாம் திருமுறை பதிப்பு வெளியீடு, பதினோராம் திருமுறை நூல் அச்சிட்டு தஞ்சை மாநாட்டில் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் அவர்களைக் கொண்டு வெளியீடு, முனைவர் திரு. கு. சுந்தரமூர்த்தி அவர்களைக் கொண்டு நால்வர் முத்திப் பதிகங்களும் உரை எழுதச்செய்து, சென்னை செனாய் நகர் திரு.வி. சம்பந்தம் அவர்கள் நிதி உதவியில் "வீடு பேறளிக்கும் விழுமிய பதிகங்கள்” நுல் வெளியீடு போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. மலேசியா கோலாலம்பூர் சித்தாந்த கலாநிதி, சைவ பூஷணம் திரு.ஆர்.வி. கந்தையா அவர்கள் 1987 இல் தமிழகம் வந்தபோது சைவ சித்தாந்தப் பெருமன்றச் செயலர் என்ற நிலையில் அவரைச் சென்னை விமான நிலையத்திதல வரவேற்று, தியாகராய நகர், டாக்டர் நாயர் சாலையில் அவர் தங்கியிருந்த இல்லத்துக்குச் சில முறை சென்று அவரிடம் பேசி ஒரு இலட்சம் ரூபாய் நிதி பெற்று "மலேசியா கந்தையா அறக்கட்டளை" என்று அன்னாரின் பெயரில் அறக்கட்டளை அமைத்து அதன் செயலராய் இருந்து அந்நிதியிலிருந்து முதல் வெளியீடாக தூத்துக்குடி திரு. பொ. முத்தையா பிள்ளை விளக்கத்துடன் கூடிய “சிவஞானபோதச் சிற்றுரை விளக்கம்” என்ற நூலை 1989இல் வெள்ளக்கோயில் மாநாட்டில் வெளி யிட்டார். (08ஆம் பக்கம் பார்க்க)
விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 MA KIDS செங்கல்பட்டைத் தாண்டி சென்னையை நோக்கி மகிழுந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது . பின்னிருக்கை 70 அகவையினார் உடனலக் குறைவால் படுத்துக்கொண்டு வருகிறார் . ஓட்டுநருக்கு முன்னிருக்கையில் ஒருவரமரும் இருக்கையில் இருவர் அமர்ந்து வருகிறார் . முதியவர் படுத்து ஓய்வாக பயணிக்க வேண்டும் என்றே இந்த ஏற்பாடு . பரனூர் பகுதியைத் தாண்டியிருப்பர் வண்டியை நிறுத்தி விட்டு அம் முதுமகனார் வாந்தி எடுத்துவிட்டார் . உடல் உண்மையில் மிகவும் சரியில்லாத நிலைதான் . எனினும் ஏதோ காரணம் பற்றிப் பயணிக்கின்றனர் . மகிழுந்து மெதுவாக குரோம்பேட்டை பகுதியை அடைந்தது . அப்பெரியவர் முன்பமர்ந்திருப்பவரை பல்லாவரம் வந்துவிட்டதா ? என்று வினவினார் . இல்லை குரோம்பேட்டையிலுள்ளோம் சாமி என்று சொல்ல அவர்கள் முடியாமல் படுத்திருக்கும் தன்னை அமர வைக்கச் சொன்னார் . பல்லாவரம் பகுதி கடந்த பின் ஒரு சில மணித்துளிகளில் மீண்டும் மகிழுந்தை நிறுத்தி தன்னை முன்புபோல் படுக்க வைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்கள் . உடன் வந்த அன்பர்களும் அவ்வாறே செய்தனர் . இந்நிகழ்வு 1980 களில் நிகழ்ந்தது . வாசகர்களே இந்நிகழ்வு இயல்பான நிகழ்வுபோல இருக்கலாம் . ஆனால் அம்மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த ஒருவருக்கு இந்நிகழ்வின் சொல்லொணா மேன்மை சில பல ஆண்டுகள் கழித்தே தெரியவந்தது . மகிழுந்தில் படுத்து வந்தவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை முனைந்த நல்கொள்கை வீரர் மும்மொழிப் புலமை வேந்தர் மனித்தருள் தெய்வம் போன்ற அருட் குருநாதர் மறைத்திரு . மறைமலை அடி களாரின் தலைமை மாணாக்கரும் திருக்குறள் பீடம் குருபழநி ஆதீனத்தின் முதற்குரவர் அருட்குருநாதர் தவத்திரு . அழகரடிகளார் ஆவார்கள் . பல்லாவரம் மறைமலையடிகள் வாழ்ந்த பகுதி ஆகையால் அவரை வணங்கும் பொருட்டு தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்தமர விழைந்த அடிகளாரின் குருபத்திமையை நாம் என்னென்று சொல்வது ! என்று அடிகளாரின் மாணவர் ஒளியகம் ந.ரா. ஆடலரசு ( அருள்நெறி தீக்கை அம்பலவாண தேசிகர் ) சொன்னபொழுது தான் மகிழுந்தில் முன்னிருக்கையில் அடிகளாரோடு வந்தவருக்கு அந்நிகழ்வின் மேன்மை விளங்கலாயிற்று . அவர்தாம் வாழையடி வாழை என வந்த தமிழ்ச்சைவ ஞான மரபின் ஐந்தாம் அருட்குரவர் . சிவத்திரு . ஞான வொளியடிகளார் ( ஒளியகம் . ஒளியரசு ஐயா அவர்கள் ) . 1846 ம் ஆண்டு சைவ சித்தாந்த சண்டமாருதம் அருட்குருநாதர் சூளை சோமசுந்தர நாயகரை முதற்குரவராக கொண்டு சைவத்தமிழ் மரபும் அதன் மாணாக்கர் திரளும் பேரியக்கமாக இயங்கினர் . அன்னாரையடுத்து அருட்குருநாதர் மறைமலையடிகளாரும் அவருடைய மாணவர் திருக்குறள்பீடம் குருகுலம் குருபழநி ஆதீனம் தவத்திரு . அழகரடிகளாரும் அவரை அடுத்து நான்காம் குரவராக திருக்கேதாரச் செல்வர் சிவநெறிச்செம்மல் அருள்நெறித்தீக்கை அம்பலவாண தேசகிர் சிவத்திரு ஒளியகம் ந.ரா. ஆடலரசு ஐயா அவர்களும் வழிவழி இவ்வருந்தமிழ் ஞானமரபை தலைமையேற்று நடத்தினார்கள் . இவ்வருள்மரபில் ஐந்தாம் தென்னாடு அருட்குரவராக விளங்கி வருபவர் ஒளியகம் ந.ரா. ஆடலரசு ஐயா அவர்களின் திருமகனார் சிவத்திரு . ஞானவொளியடிகளார் ( ஒளியகம் ந.ஒளியரசு ஐயா ) அவர்கள் ஆவார்கள் . நம் காலத்து வாழும் இத்தமிழ்நெறி வேள்விச் செம்மலின் வரலாற்று மாட்சி ஈண்டு கட்டுரைக்கலாவோம் . சிமசிவி 01.12.1952 கார்த்திகை திங்கள் சகடு ( ரோகிணி ) நாண்மீனன்று சிவத்திரு ஒளியகம் ந.ரா. ஆடலரசு - திருவாட்டி சரசுவதி இணையருக்கு நான்காம் மகவாக செங்குந்த மரபில் தோன்றினார் ஒளியரசு அவர்கள் . தமிழகம் எங்கும் ஞானவிழுதுகளை பரப்பி நிற்கும் ஆலமரம் சிவத்திரு . ஞானவொளியடிகள் [ ஒளியகம் ௩. ஒளியரசு ] அவர்களின் வரலாற்று மாட்சி பிறவியில் வருவோர் எல்லார்க்கும் பிறப்பின் நிகழ்ச்சிகளாக வரலாறுகள் உண்டு . குழந்தையாகத் தோன்றுவது பெற்றோர் உடன் பிறந்தார் இன்னார் என்பது பொருள் இயற்கையாக அமையும் பிறவி நிகழ்ச்சிகளில் வாழ்க்கை செய்கையாக அங்ஙனம் மாட்சிகள் நிகழ்வதானால் எழுதுவதற்கும் அவை சிறப்பாக உதவும் என்று மறைமலையடிகள் வரலாற்று மாட்சி முன்னுரையில் அழ கரடிகளார் அருளியுள்ளார்கள் . சேர்த்து எளிதாக வாழ்ந்து வரும் உலகியல் முறைகள் மறைவு முதலியன யார்க்கு இல்லை ? வரும் காலத்திலேயே எதிர் பாராமல் ஒரு சிவனிரா நாளில் ( மாசி மகாசிவராத்திரி ) திருக் குறள் பீடம் அருட்குருநாதர் சிவத்திரு . அழகரடிகள் அவர் கள் அவராகவே எழுந்தருளி சமய தீக்கை அளித்தார்கள் . வாழ்க்கைத் துணைநலம் : அவற்றைத் தெரிவித்தல் வரலாறு ஆகாது . அவை எல்லார்க்கும் பொது . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புகள் எவையேனும் வாழ்க்கை யில் அமையுமானால் அத் தனிச் சிறப்புகளே 1978 ஆம் ஆண்டு அருட் குருநாதர் அழகரடிகளாரே திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயில் குடமுழுக்கு சிவத்திரு . வரலாறு என்று குறிப்ப கோதின் மொழிக் கொற்றவன் விழாவில் முவில் மானாம்பதி தற்கு வாய்ப்புடையவை ! திருக்கழுக்குன்றம் திருவாளர் . டி . தனபால் முதலி யார் திருவாட்டி பாலாமணி அம்மை ஆகியோரின் மகள் . மல்லிகா அம்மையாரை திருமணம் செய்து வைக்கும் பேறு பெற்றவர் . பணி : அவ்வகையில் வாழ்க்கையே தனிச் சிறப்பாக அமைந்தள்ளது ஐந்தாம் குரவர்க்கு ! பெரிய தந்தையார் வித்துவான் புலவர் 07 ந.ரா. தேவராசனார் சிறிய தந்தையார் புலவரேறு திருக்கோயிலிதழாசிரியர் ந.ரா. முருகவேளனார் தமிழும் சைவமும் தம்மிரு கண்ணென பேணும் நற்குடும்பத்தில் பிறந்த பெருமகனார் அருளுடன் பெருட்டிற முமறிய இளங்கலைப் பொருளாதாரமும் ( பி.ஏ. ) இளவணிகவியலும் ( பி.காம் ) பயின்றார் . இவர் சைதாப்பேட்டை சென்னை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயின்று தெ விழுப்புரம் உஷா குழந்தைகள் பள்ளியில் ( நர்சரி பள்ளி ) மேலாளராகி தன் பணியைத் தொடங்கியவர் . கெல் கம்பொனெண்ட்ஸ் நிறுவனத்தில் காசாளர் தமிழக அரசின் புள்ளியியல் துறையில் உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் என பல பரிணாமங்களுடன் 2010 இல் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாளராய் இருந்து ஓய்வு பெற்றார்கள் . தொழில்சார்ந்த இப்பணிகளேயன்றி தொண்டாக சைவ சித்தாந்த பெருமன்றத்தில் மாத தணிக்கையாளர் செயற்குழு உறுப்பினர் ( 1985-1986 ) பெருமன்ற செயலாளர் ( 1987 துணை 1992 ) சைதைத் தேவார சபையில் தணிக்கையாளர் சைவச் சித்தாந்தப் பெருமன்றத்தின் ' சித்தாந்தம் ' இதழின் துணை ஆசிரியர் மீண்டும் செயற்குழு உறுப்பினர் ( 1995 -2003 ) விழுப்புரம் தெய்வீக பேரவை யில் ( 1975 - 79 ) நிறுவன - செயலர் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தின் தலைவர் அப்பர் தொண்டரணி துணைத்தலைவர் அப்பர் விழா அறக் கட்டளை மற்றும் சுந்தர விழா அறக்கட் டளை செயலாளர் தொகுப்பாசிரியர் பதிப் பாசிரியர் நூலாசிரியர் கட்டுரையாசிரியர் என்று பல பரிணாமங்களில் செயலாற்றி வருகின்றார்கள் . பெருமன்ற பணிகள் : அறிவுக்கடல் மறைமலை அடிகளாரால் திருப்பாதிரிப்புலியூர் அருட்டிரு ஞானியார் அடிகள் திருமடத்தில் 7.7.1905 இல் தொடங்கப் பெற்ற சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் செயலராக தொண்டாற்றிய காலகட்டத்தில் இவர்களாற்றிய பணிகள் அளப்பரியன . 1942 இல் மன்றத்தில் வெளியிட்ட திருவாசகம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய திருவாசகம் மறு பதிப்பு வெளியீடு திருமுறைக்காவலர் திரு . . சோமசுந்தரம் செட்டியார் வெளியிட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் கூடிய ஏழாம் திருமுறை பதிப்பு வெளியீடு பதினோராம் திருமுறை நூல் அச்சிட்டு தஞ்சை மாநாட்டில் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் அவர்களைக் கொண்டு வெளியீடு முனைவர் திரு . கு . சுந்தரமூர்த்தி அவர்களைக் கொண்டு நால்வர் முத்திப் பதிகங்களும் உரை எழுதச்செய்து சென்னை செனாய் நகர் திரு.வி. சம்பந்தம் அவர்கள் நிதி உதவியில் வீடு பேறளிக்கும் விழுமிய பதிகங்கள் நுல் வெளியீடு போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை . மலேசியா கோலாலம்பூர் சித்தாந்த கலாநிதி சைவ பூஷணம் திரு.ஆர்.வி. கந்தையா அவர்கள் 1987 இல் தமிழகம் வந்தபோது சைவ சித்தாந்தப் பெருமன்றச் செயலர் என்ற நிலையில் அவரைச் சென்னை விமான நிலையத்திதல வரவேற்று தியாகராய நகர் டாக்டர் நாயர் சாலையில் அவர் தங்கியிருந்த இல்லத்துக்குச் சில முறை சென்று அவரிடம் பேசி ஒரு இலட்சம் ரூபாய் நிதி பெற்று மலேசியா கந்தையா அறக்கட்டளை என்று அன்னாரின் பெயரில் அறக்கட்டளை அமைத்து அதன் செயலராய் இருந்து அந்நிதியிலிருந்து முதல் வெளியீடாக தூத்துக்குடி திரு . பொ . முத்தையா பிள்ளை விளக்கத்துடன் கூடிய சிவஞானபோதச் சிற்றுரை விளக்கம் என்ற நூலை 1989 இல் வெள்ளக்கோயில் மாநாட்டில் வெளி யிட்டார் . ( 08 ஆம் பக்கம் பார்க்க )