தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

தெ 10 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி மட்டுநகர் எருவில் சிவன் கோயில் ஈழத்தின் பழமையான சிவன் கோயில்களை பழமை மாறாமல் திருத்தி வடிவமைக்க சிவபூமி சிவனடியார்கள் முன்வரவேண்டும். திருமூலனார் இலங்கையைச் சிவபூமி என்று ஒப்புவித்தமைக்கு ஏற்றால் போல் ஈழத்தின் பல பாகங்களிலும் சிவ வழிபாட்டின் எச்சமிச்சங்கள் முழுமையான சிவாலயங் களாகவும், இறந்த நிலைக்குட்பட்ட சிவாலயங்களாகவும் அருளாட்சியும் காட்சியும் தந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், தென்னாட்டு பத்திரிகையின் சிவபூமியில் சிவனைத்தேடி என்ற கட்டுரையின் வாயிலாக, ஈழத்தில் முற்றாகத் தன் இருப்பை இழந்து, மீண்டும் புத்துயிர் பெற்று வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலயமாக மட்டுநகர் எருவில் சிவனார் ஆலயம் விளங்குகிறது. தலவூரின் வரலாறு மட்டக்களப்பின் எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் ஓர் சில ஊர்களில் எருவிலும் ஒன்று.ஆம்பல், அல்லி, தாமரை போன்ற நீர்மலர்கள் நிறைந்த குளம், இத்தி, மருதம், வம்மி, கொக்கட்டி முதலிய அரிய மரங்கள், நாணற்புற்கள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்த சூழலாலும், கமத்தொழிலாலும், கிராமியக்கலை களாலும், தமிழர் பண்பாட்டு சடங்குகளையும், நம்பிக்கை களையும் பண்டு தொட்டு பயில் நிலையில், வளம் பெற்று வரும் கிராமமாக எருவில் விளங்குகிறது. இவ்வூரின் சரித்திரம் பற்றிய குறிப்புக்கு மகாவம்சம், அதன் உரை நூலான வம்சத்தப்பகாசினி எனும் பாளி இலக்கியத்திலும், மட்டக்களப்பு ஒல்லாந்தர், பிரித்தானியரின் காகித ஆவணங்களிலும், கண்ணகிவழக்குரை, மட்டக் களப்பின் வரலாறு பற்றி எழுதப்பட்ட அனேக சரித்திர நூல்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மகாவம்ச குறிப்பின் படி இவ்வூர் ‘ஏரகாவில்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவ்வூரின் பெருமையை தற்காலத்தில் வாழும் கவிஞரொருவரும் " ஏரகாவில் ஈசுவரனார் எங்கள் எருவில் சிவனாராம் " என்று பாடிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பை ஒல்லாந்தர் கைப்பற்றிய காலத்தில், மட்டக்கப்பின் ஏழு வன்னிமைப் பகுதியில் மிகச்சிறிய அலகாக எருவில் பகுதி விளங்கியுள்ளது. ஒல்லாந்தர் மட்டக்களப்பை கல்லாறு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று என்று மூன்று திசாவைப் பிரிவுகளாக பிரித்து, தங்களுக்கு சார்பான பண்ராட வன்னியர்களை நியமித்தனர். அவற்றுள் கல்லாறு திசாவையில் ஏறாவூர், மண்முனை, எருவில், போரதீவு என்று நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. அக்காலத்தில் இப்பகுதிகளில் புகழ் பெற்ற சிவாலயங்களும், கந்தன், கணபதி, கண்ணகி, காளி முதலிய தெய்வங்களுக்கும் கோயில்கள் அமைந்திருந்தன. போரதீவில் சிவனுக்கு கோயில் இருந்தமையால் அவ்வூர் 'கோயில்போரதீவு' என்று அழைக்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் அத்தகைய கோயிலை கண்டுகொள்ள முடியாதுள்ளது. இதேபோல் எருவிலிலும் பண்டைய காலத்தில் ஒரு சிவன் கோயில் அமைந்திருந்தது. அவ் ஆலயத்தை மகாசேனன் எனும் பௌத்த மன்னன் அழித்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இதற்கேற்றால் போல் இவ்வூரில் அதன் எச்சம் சிவனார் மடுவாக இன்றும் இப்பிரதேசத்தவரால் அழைக்கப்பட்டு வருகின்றது. அவ்விடம் தீர்த்த கேணியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்கம் ஈழத்தில் நடைமுறைக்கு வந்த காலம் முதல் அப்பஞ்சாங்கத்தில் எருவில் நகர் 'சிவனார்மடு சிவன் தேர்' என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்தும், இக்கோயிலின் பண்டைய இருப்பை தெளிவுபடுத்திக் கொள்ளமுடிகின்றது. தற்போது இவ்விடத்தில் விநாயகர் ஆலயம் ஒன்று அமைந்திருக்கின்றது. அவ்வாலயமும் ஏறத்தாழ 300 வருடங்கள் பழமையானது என்கின்றனர். இலங்கையின் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஐந்தாம் செகராசசேகரனுடைய காலத்தில் இயற்றப்பட்ட கண்ணகிவழக்குரை என்ற நூலில் எருவிலில் இருப்புக்கொண்ட கண்ணகிக் கோயிலைப் பற்றிய குறிப்புள்ளது. இக் கோயிலுக்கு மூத்த கோயிலாகவே எருவில் சிவன் கோயில் இருப்பு கொண்டது என்பது தெளிவாகின்றது. திருத்தல வரலாறு இத்தலத்தின் வரலாறு பற்றிய குறிப்புக்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய ஈழத்து இந்து சமய வரலாறு என்ற நூலிலும், பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய இலங்கையின் இந்து சமயம் என்ற நூலிலும் காணக்கூடியதாக உள்ளது. ஈழத்து இந்து சமய வரலாறு எனும் நூலில் "சிவவணக்த்துக்குரிய தலங்களான திருக்கோணேச்சரம், பூசகர் கலந்தன் ஊரிலுள்ள ஆலயம், ஏரகாவில்லவில் உள்ள ஆலயம் ஆகியவற்றை மகாசேனன் அழித்தது பற்றி மகாவம்சத்தின் உரை நூலாகிய வம்சத்தப்பகாசியினியில் தகவல் உண்டு" என்ற செய்தியின் படி, எருவிலில் இருப்புக்கொண்ட சிவாலயமே ஏரகாவில்லவில் உள்ள ஆலயம் என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இந்து சமயம் என்ற நூலின் "அரசன் 'மணிகீரம்' என்னும் விகாரையைக் கட்டினான். தேவாலயங்களை அழித்து விட்டு மூன்று விகாரைகளை அமைப்பித்தான். கர்ணத்தில் 'கோகர்ண' விகாரை யினையும், ஏரகாவில்ல என்னுமிடத்தில் ‘மிககாம' விகாரை யையும், கலந்த என்னும் பூசகருடைய ஊரிலே 'கங்காசேன பர்வதம்' என்னும் விகாரையையும் அமைப்பித்தான்." என்று குறிப்பிடுவதிலிருந்தும், ஈழத்தின் கிழக்குகரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த குடிகளில் பெருமளவானோர் சைவராக இருந்துள்ளனர். கிழக்குக் கரையில் மகாசேனன் அழிப்பதற்கு முன்பு மூன்று சிவாலயங்கள் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது. மகாசேனனின் காலம் 277 முதல் 304 வரையானது. எனவே இவனுடைய காலத்திற்கு முந்திய சிவாலயங்களாகவே அவை விளங்கியுள்ளன. அத்தகைய சிவாலயங்களுள் ஏரகாவில்ல என்னுமிடத்தில் உள்ள சிவாலயமும் ஒன்றாகும். இங்கு 'ஏரகாவில்ல' என்பது எருவில் என்ற பெயரில் பாளி வடிவம் போல் உள்ளது, என பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், அவ்வாறாயின் அது மட்டக்களப்பிலுள்ள எருவில் போரதீவு என்னும் பகுதியைச் சேர்ந்த தலமென்று கொள்ளலாம். அங்குள்ள கிராமம் ஒன்று பூசகர் ஒருவரின் உடைமையாக இருந்தமையையும், அக்கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்திருந்தமையும் குறிப்பிடக்குரியது என்று கூறுகின்றார். இருப்பினும் இதுவரைக்கும் இச்சிவாலயத்தின் தொல்பொருட் சின்னங்களோ, வரலாற்று ரீதியான அணுகுமுறை தழுவிய ஆய்வுகளோ கிட்டவுமில்லை, நடைபெறவும் இல்லை. ஆனால் இப்பிரதேச மக்களிடையே இச்சிவாலயம் பற்றிய ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலையாணி, பிரான்சு வரலாற்றுக்கதைகளும், மூர்த்தியின் அற்புதக்கதைகளும் வாழையடி வாழையாக வாய்மொழிக்கதைகளாக, இன்று வரை பேசப்பட்டு வருகின்றதை செவிமடுக்க முடிகின்றது. கோயில் பூசைகளும் சிறப்புகளும் ஏரகாவில் சிவன் ஆலயத்தின் எச்சமாக எருவில் பாரதிபுரத்தில் தொடக்க காலத்தில் சுடலையின் அருகாமையில் பைரவர் வழிபாடு, சூலவழிபாடு இயற்றி வந்ததாக இத்தலைமுறையின் மூதாதையர்கள் செப்புகின்றனர். தற்போது அவ்விடத்தில் சிவலிங்கத்தை மூர்த்தியாகக் கொண்டும் மகாளயபட்ச மறைமதி நாளினை (அமா வாசையை) தீர்த்த நாளாக கொண்டு ஒரு சிவாலயம் உற்பத்தியாகியுள்ளது. அச் சிவாலயத்தில் நித்திய பூசை, சுக்கிரவாரப்பூகை, வருடாந்த திருவிழா, ஆடி மறைமதி (அமாவாசை), சிவனிரவு, திருவாதிரை, திருவெம்பாவை பாடுதல், தமிழர் பண்டிகைகள் என்பனவும் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றன. மற்றும்,மட்டுதேசத் திற்குரிய வீரசைவ மரபு நம்பிக்கைகளும், தேசத்துக்கோயில் மரபுகளையும் இக்கோயில் வழமைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இச்சிவன்கோயில் பூசை மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கும் உரித்துடையது என்ற தேசத்து கோயில் சட்டம் இக்கோயில் யாப்பிலும் வரையப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் மூர்த்தியின் அருளாற்றலால் அற்புதங்கள் நடைபெற்று வருவதாக இப்பிரதேச மக்கள் பத்தி கொண்ட உணர்வால் கூறுகின்றனர். இப்பிரதேச கவிஞர்கள் பலராலும் இக்கோயிலின் சிறப்பு, பத்தி பாமாலையாகக் புனையப் பட்டுள்ளது. "சிவனெனும் நாமம் தனக்கேயுரிய செம்மேனி எம்மான்" அப்பர் தேவாரம்
தெ 10 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி மட்டுநகர் எருவில் சிவன் கோயில் ஈழத்தின் பழமையான சிவன் கோயில்களை பழமை மாறாமல் திருத்தி வடிவமைக்க சிவபூமி சிவனடியார்கள் முன்வரவேண்டும் . திருமூலனார் இலங்கையைச் சிவபூமி என்று ஒப்புவித்தமைக்கு ஏற்றால் போல் ஈழத்தின் பல பாகங்களிலும் சிவ வழிபாட்டின் எச்சமிச்சங்கள் முழுமையான சிவாலயங் களாகவும் இறந்த நிலைக்குட்பட்ட சிவாலயங்களாகவும் அருளாட்சியும் காட்சியும் தந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் தென்னாட்டு பத்திரிகையின் சிவபூமியில் சிவனைத்தேடி என்ற கட்டுரையின் வாயிலாக ஈழத்தில் முற்றாகத் தன் இருப்பை இழந்து மீண்டும் புத்துயிர் பெற்று வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலயமாக மட்டுநகர் எருவில் சிவனார் ஆலயம் விளங்குகிறது . தலவூரின் வரலாறு மட்டக்களப்பின் எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் ஓர் சில ஊர்களில் எருவிலும் ஒன்று.ஆம்பல் அல்லி தாமரை போன்ற நீர்மலர்கள் நிறைந்த குளம் இத்தி மருதம் வம்மி கொக்கட்டி முதலிய அரிய மரங்கள் நாணற்புற்கள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்த சூழலாலும் கமத்தொழிலாலும் கிராமியக்கலை களாலும் தமிழர் பண்பாட்டு சடங்குகளையும் நம்பிக்கை களையும் பண்டு தொட்டு பயில் நிலையில் வளம் பெற்று வரும் கிராமமாக எருவில் விளங்குகிறது . இவ்வூரின் சரித்திரம் பற்றிய குறிப்புக்கு மகாவம்சம் அதன் உரை நூலான வம்சத்தப்பகாசினி எனும் பாளி இலக்கியத்திலும் மட்டக்களப்பு ஒல்லாந்தர் பிரித்தானியரின் காகித ஆவணங்களிலும் கண்ணகிவழக்குரை மட்டக் களப்பின் வரலாறு பற்றி எழுதப்பட்ட அனேக சரித்திர நூல்களிலும் காணக்கூடியதாக உள்ளது . மகாவம்ச குறிப்பின் படி இவ்வூர் ஏரகாவில்ல ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதனால் இவ்வூரின் பெருமையை தற்காலத்தில் வாழும் கவிஞரொருவரும் ஏரகாவில் ஈசுவரனார் எங்கள் எருவில் சிவனாராம் என்று பாடிருப்பதும் குறிப்பிடத்தக்கது . மட்டக்களப்பை ஒல்லாந்தர் கைப்பற்றிய காலத்தில் மட்டக்கப்பின் ஏழு வன்னிமைப் பகுதியில் மிகச்சிறிய அலகாக எருவில் பகுதி விளங்கியுள்ளது . ஒல்லாந்தர் மட்டக்களப்பை கல்லாறு சம்மாந்துறை அக்கரைப்பற்று என்று மூன்று திசாவைப் பிரிவுகளாக பிரித்து தங்களுக்கு சார்பான பண்ராட வன்னியர்களை நியமித்தனர் . அவற்றுள் கல்லாறு திசாவையில் ஏறாவூர் மண்முனை எருவில் போரதீவு என்று நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது . அக்காலத்தில் இப்பகுதிகளில் புகழ் பெற்ற சிவாலயங்களும் கந்தன் கணபதி கண்ணகி காளி முதலிய தெய்வங்களுக்கும் கோயில்கள் அமைந்திருந்தன . போரதீவில் சிவனுக்கு கோயில் இருந்தமையால் அவ்வூர் ' கோயில்போரதீவு ' என்று அழைக்கப்பட்டிருந்தது . தற்காலத்தில் அத்தகைய கோயிலை கண்டுகொள்ள முடியாதுள்ளது . இதேபோல் எருவிலிலும் பண்டைய காலத்தில் ஒரு சிவன் கோயில் அமைந்திருந்தது . அவ் ஆலயத்தை மகாசேனன் எனும் பௌத்த மன்னன் அழித்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது . இதற்கேற்றால் போல் இவ்வூரில் அதன் எச்சம் சிவனார் மடுவாக இன்றும் இப்பிரதேசத்தவரால் அழைக்கப்பட்டு வருகின்றது . அவ்விடம் தீர்த்த கேணியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது . வாக்கிய பஞ்சாங்கம் ஈழத்தில் நடைமுறைக்கு வந்த காலம் முதல் அப்பஞ்சாங்கத்தில் எருவில் நகர் ' சிவனார்மடு சிவன் தேர் ' என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்தும் இக்கோயிலின் பண்டைய இருப்பை தெளிவுபடுத்திக் கொள்ளமுடிகின்றது . தற்போது இவ்விடத்தில் விநாயகர் ஆலயம் ஒன்று அமைந்திருக்கின்றது . அவ்வாலயமும் ஏறத்தாழ 300 வருடங்கள் பழமையானது என்கின்றனர் . இலங்கையின் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஐந்தாம் செகராசசேகரனுடைய காலத்தில் இயற்றப்பட்ட கண்ணகிவழக்குரை என்ற நூலில் எருவிலில் இருப்புக்கொண்ட கண்ணகிக் கோயிலைப் பற்றிய குறிப்புள்ளது . இக் கோயிலுக்கு மூத்த கோயிலாகவே எருவில் சிவன் கோயில் இருப்பு கொண்டது என்பது தெளிவாகின்றது . திருத்தல வரலாறு இத்தலத்தின் வரலாறு பற்றிய குறிப்புக்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய ஈழத்து இந்து சமய வரலாறு என்ற நூலிலும் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய இலங்கையின் இந்து சமயம் என்ற நூலிலும் காணக்கூடியதாக உள்ளது . ஈழத்து இந்து சமய வரலாறு எனும் நூலில் சிவவணக்த்துக்குரிய தலங்களான திருக்கோணேச்சரம் பூசகர் கலந்தன் ஊரிலுள்ள ஆலயம் ஏரகாவில்லவில் உள்ள ஆலயம் ஆகியவற்றை மகாசேனன் அழித்தது பற்றி மகாவம்சத்தின் உரை நூலாகிய வம்சத்தப்பகாசியினியில் தகவல் உண்டு என்ற செய்தியின் படி எருவிலில் இருப்புக்கொண்ட சிவாலயமே ஏரகாவில்லவில் உள்ள ஆலயம் என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது . இலங்கையில் இந்து சமயம் என்ற நூலின் அரசன் ' மணிகீரம் ' என்னும் விகாரையைக் கட்டினான் . தேவாலயங்களை அழித்து விட்டு மூன்று விகாரைகளை அமைப்பித்தான் . கர்ணத்தில் ' கோகர்ண ' விகாரை யினையும் ஏரகாவில்ல என்னுமிடத்தில் மிககாம ' விகாரை யையும் கலந்த என்னும் பூசகருடைய ஊரிலே ' கங்காசேன பர்வதம் ' என்னும் விகாரையையும் அமைப்பித்தான் . என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஈழத்தின் கிழக்குகரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த குடிகளில் பெருமளவானோர் சைவராக இருந்துள்ளனர் . கிழக்குக் கரையில் மகாசேனன் அழிப்பதற்கு முன்பு மூன்று சிவாலயங்கள் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது . மகாசேனனின் காலம் 277 முதல் 304 வரையானது . எனவே இவனுடைய காலத்திற்கு முந்திய சிவாலயங்களாகவே அவை விளங்கியுள்ளன . அத்தகைய சிவாலயங்களுள் ஏரகாவில்ல என்னுமிடத்தில் உள்ள சிவாலயமும் ஒன்றாகும் . இங்கு ' ஏரகாவில்ல ' என்பது எருவில் என்ற பெயரில் பாளி வடிவம் போல் உள்ளது என பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகின்றார் . மேலும் அவர் குறிப்பிடுகையில் அவ்வாறாயின் அது மட்டக்களப்பிலுள்ள எருவில் போரதீவு என்னும் பகுதியைச் சேர்ந்த தலமென்று கொள்ளலாம் . அங்குள்ள கிராமம் ஒன்று பூசகர் ஒருவரின் உடைமையாக இருந்தமையையும் அக்கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்திருந்தமையும் குறிப்பிடக்குரியது என்று கூறுகின்றார் . இருப்பினும் இதுவரைக்கும் இச்சிவாலயத்தின் தொல்பொருட் சின்னங்களோ வரலாற்று ரீதியான அணுகுமுறை தழுவிய ஆய்வுகளோ கிட்டவுமில்லை நடைபெறவும் இல்லை . ஆனால் இப்பிரதேச மக்களிடையே இச்சிவாலயம் பற்றிய ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலையாணி பிரான்சு வரலாற்றுக்கதைகளும் மூர்த்தியின் அற்புதக்கதைகளும் வாழையடி வாழையாக வாய்மொழிக்கதைகளாக இன்று வரை பேசப்பட்டு வருகின்றதை செவிமடுக்க முடிகின்றது . கோயில் பூசைகளும் சிறப்புகளும் ஏரகாவில் சிவன் ஆலயத்தின் எச்சமாக எருவில் பாரதிபுரத்தில் தொடக்க காலத்தில் சுடலையின் அருகாமையில் பைரவர் வழிபாடு சூலவழிபாடு இயற்றி வந்ததாக இத்தலைமுறையின் மூதாதையர்கள் செப்புகின்றனர் . தற்போது அவ்விடத்தில் சிவலிங்கத்தை மூர்த்தியாகக் கொண்டும் மகாளயபட்ச மறைமதி நாளினை ( அமா வாசையை ) தீர்த்த நாளாக கொண்டு ஒரு சிவாலயம் உற்பத்தியாகியுள்ளது . அச் சிவாலயத்தில் நித்திய பூசை சுக்கிரவாரப்பூகை வருடாந்த திருவிழா ஆடி மறைமதி ( அமாவாசை ) சிவனிரவு திருவாதிரை திருவெம்பாவை பாடுதல் தமிழர் பண்டிகைகள் என்பனவும் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றன . மற்றும் மட்டுதேசத் திற்குரிய வீரசைவ மரபு நம்பிக்கைகளும் தேசத்துக்கோயில் மரபுகளையும் இக்கோயில் வழமைகளிலும் காணக்கூடியதாக உள்ளது . இச்சிவன்கோயில் பூசை மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கும் உரித்துடையது என்ற தேசத்து கோயில் சட்டம் இக்கோயில் யாப்பிலும் வரையப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது . இக்கோயிலின் மூர்த்தியின் அருளாற்றலால் அற்புதங்கள் நடைபெற்று வருவதாக இப்பிரதேச மக்கள் பத்தி கொண்ட உணர்வால் கூறுகின்றனர் . இப்பிரதேச கவிஞர்கள் பலராலும் இக்கோயிலின் சிறப்பு பத்தி பாமாலையாகக் புனையப் பட்டுள்ளது . சிவனெனும் நாமம் தனக்கேயுரிய செம்மேனி எம்மான் அப்பர் தேவாரம்