தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09
தென்னாடு
ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021
தவத்தினாற் பெறும் பயன்
என்ற பாடல் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை தெளித்துப்
போகின்றது. ஆழவிளங்கிப் புரிந்தால் இந்தப்பாடலை
விட சிறந்த விளக்கம் இல்லை எனலாம். இறைவனுக்கு
வெள்ளை நிற மல்லிகையும் வேண்டாம், வேறெந்த மாமலரும்
வேண்டாம். அவன் வேண்டுவது உள்ளத்தையே என்று
உறுதி பட உரைக்கின்றார். அந்த உள்ளம் எனும் இறைவன்
விரும்பி உறையும் இடத்தை தூய்மைப்படுத்தும்
பொருட்களே நற்குணங்கள், தூய்மையில்லாத இடத்தில்
இறைவன் உறைய மாட்டான். ஆகவே உன் உள்ளத்தை
தூய்மைப்படுத்து என்கிறார் விபுலானந்தர். அந்த தூய்மைப்
படுத்தலே தவம் என்கின்றார் வள்ளுவர்.
SPOMENCKICE
மங்களநாதர் - உத்தரகோசமங்கை
தவம் என்ற ஒற்றை வார்த்தை சைவத்தமிழ் உலகின்
மாபெரும் ஆன்மீக அலை எனலாம். இத்தகு தவம் என்றால்
என்ன என்று வினவும் போது உலகிடை ஒரே ஒரு விடை
மட்டும் பரந்து ஒலிக்கின்றது. காவி பூண்டு, கமண்டலம்
தூக்கி காட்டிற்கு செல்லுதலே தவம் என்று உலகு
இயம்புகின்றது. ஆனால் அஃது இல்லை தவம். மந்திரம்
கூறலே தவம் என்று இன்னோர் பகுதி கூறுகின்றது. ஆனால்
அதுவும் இல்லை தவம். அப்படி என்றால் அந்த தவம்
யாது? தவம் என்று கூறுவதன் பொருள் யாது என்று வினவின்
அதற்கான அர்த்தத்தை அன்று வள்ளுவரே கூறி விட்டார்.
''உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
எமக்கு வரும் துன்பங்களை தாங்கிக்கொள்ளல் என்று
முதலாவதாக அறுதியிடுகின்றார். அது என்ன எமக்கு வரும்
துன்பங்களை தாங்கிக்கொள்ளல் என்று ஓர் கேள்வி
எழுப்பின், பின்வருமாறு ஒரு பதில் அமைகின்றது. துன்பங்கள்
பலவகை பசி ஓர் துன்பம், பணம் ஓர் துன்பம், நோய் ஓர்
துன்பம், தோல்வி ஓர் துன்பம். இவ்வாறு சொல்லிவிட்டு
அடுத்த வரியை, பிற உயிர்களுக்கு தீமை செய்யாமை என்று
சொல்லுகின்றார். இதைத்தான்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
என்று அன்பில் ஈசனை அறுதியிடுகின்றார் திருமூலர்.
இதைத்தான் வள்ளுவனும் சொன்னான், பிற உயிர்களுக்கு
தீங்கு பயக்காமை என்ற வடிவில். இந்த இரண்டுமே தவத்திற்கு
உரு என்கிறான் மூத்த முதல்வன் வள்ளுவன். சரி தவத்திற்கு
உரு கூறியாயிற்று தவத்தை யார் செய்யலாம்? இந்த
கேள்விக்கும் வள்ளுவன் சொல்லிச்செல்கின்றான்.
''தவம் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது"
நற்குணங்கள் உடையவற்கே தவம் செய்வது இலகுவாகும்.
அல்லாதவர்கள் தவம் செய்வது வீண் வேலை என்கிறார்.
இது ஞானவெடிப்பின் முதிர்வு என்றும் கொள்ளலாம்.
சரி நற்குணங்கள் என்றால் எவை? அறம், உண்மை, நேர்மை,
கொடை என்று அந்தப்பட்டியல் நீண்டு செல்கின்றது.
இதைக்குறித்து தான் விபுலானந்தர் சில வரிகளை
இயம்பிப்போகின்றார்.
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
"தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத்
தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே"
எனும் திரு மூலனின் வார்த்தை உதிர்ப்புக்களும்
இவற்றையே சொல்லிப்போகின்றன. இறைவனை உள்ளத்தில்
தேடு, அவன் உறைவதற்கு நற்குணங்களால் உள்ளத்தை
தூய்மைப்படுத்து, அதன் பெயரே தவம். சரி தவத்தின்
பயன் என்ன என்றால் அதற்கும் வள்ளுவனே பதில்
உரைக்கின்றார்.
"ஓன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்"
கெடுதல் செய்யும் பகைவரை தண்டித்தலும், நல்ல
நண்பர்களை காத்தலும் தவத்தின் வலிமை என்றே வள்ளுவர்
உரைக்கின்றார். அது என்ன தீயவர்களை அழித்து
நண்பர்களை காத்தல், எண்ணிப்பார்த்தால் ஆழப்பொருள்
தரும் வார்த்தை அது. உள்ளத்தை நல்ல குணங்களால் தூ
ய்மைப்படுத்தி விட்டோம், அதில் இறைவன் உறைந்து
விட்டான். சரி இறைவன் உறைந்தால் என்ன நடக்கும்?
அவனே எம்மை காப்பான். தேவையற்றவற்றில் இருந்து
எம்மை நீக்கி எமக்கு நல்லருள் புரிவான். இதனால் தான்
தவம் நண்பர்களை காக்கும் பகைவர்களை அழிக்கும்
என்றான் வள்ளுவன்.
“ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே"
என்று திருவாசகம் சொல்லிய மாணிக்கவாசகரும்
இதையே சொல்லிப்போகின்றார். உன்னை நினைக்காத
என்னை ஆண்டு அருளிய என் இறைவனே என்று
புலம்புகின்றார். ஆக தவம் என்பது செய்தலின் சிறப்பு,
ஒழுக்கத்தின் உருவம், இறைவனை அடைய தவம் ஒன்றே
போதும் அந்தத் தவத்தை ஒழுக்கத்தால் அடையலாம்
என்பது தெளிந்த சிறப்பு. சரி அவ்வாறு இறைவனை தவத்தின்
மூலம் பற்றி வைத்தலின் சிறப்பு என்ன? அதற்கும் வள்ளுவர்
பதில் வழங்கிப்போகின்றார்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"
பிறவி எனும் பெருங்கடலை அடைய இறைவனின்
அடியை பற்ற வேண்டும். இறைவனின் அடியைப்பற்ற
உள்ளம் சுத்தமாக வேண்டும். உள்ளம் சுத்தமாக நற்குணங்களை
வளர்க்க வேண்டும். நற்குணங்களை வளர்ப்பதன் பெயர்
தவம். ஆக முத்தியின் இலக்கு வழிகாட்டி தவமே என்று
சைவம் உரைக்கின்றது.
"ஓர் பிடி நீறும் இல்லா வாழ்வை நம்பும் அடியேனை இனி ஆளுமே”
என்பது பட்டினத்தார் வார்த்தை. நிலையாப்பொருள்களில்
வாழ்வை வெறுத்த சைவத்தமிழன் கண்டு பிடித்த நிலைத்த
பொருளே இறைவன் அவனை அடையும் இலகுவான
நிலைத்த வழியே தவம்.
"செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த
விரும்பியதை எய்தலாம் - வையக்கத்தில் அன்பிற் சிறந்த
தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு"
என்று தமிழ்ப்புலவோன் பாரதியும் இதையே சொன்னான்.
தன் நெஞ்சாகிய ஆழ்மனதிடம் சொன்னான், 'நெஞ்சே
செய் தவத்தை, தவம் செய்தால் விரும்பிய எதனையும்
11
தெ
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
அடையலாம்.' என்று சொல்லிவிட்டு சொன்னான், இந்த
வையகத்தில் அன்பில் சிறந்த தவம் ஏதுமில்லை. அத்தகு
சிறந்த தவமாகிய அன்பினை உடையவர்கள் இன்புற்று
வாழ்வது இயல்பானது. இது பாரதி கண்ட தவநெறி. சரி
தவத்தின் சிறப்பு எனும் கேள்விக்கு பின்வரும் பாடல்
பதிலறைந்து போகின்றது.
"வான்முகில் வளாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்”
இந்த சைவப்பெரும் வாழ்த்து, தவநிலையை ஒரே
சொல்லில் அடக்கிப்போகின்றது. வானத்திலுள்ள முகில்கள்
காலம் தவறாது மழையாய் பொழிய வேண்டும். இவ்வாறு
பெய்து, விவசாயம் உட்பட அனைத்து வளங்களும்
சிறந்தொங்க வேண்டும். மன்னன் அறக்கோல் தவறாது
கோன் முறையில் அரசாள வேண்டும். இந்த உலகில் உள்ள
அனைத்து உயிர்களும் நெகிழ்த்து, எந்தவொரு குறையும்
இல்லாது வாழ வேண்டும். நான்மறைகள் மற்றும் தீந்தமிழில்
அமைந்த திருமுறைகள் எனும் அறங்கள் ஓங்குதல் வேண்டும்
என்று சொல்லிவிட்டு, நற்றவம் மற்றும் வேள்வி என்பன
சிறக்க இவற்றை எல்லாம் கொண்ட மேன்மை மிகு சைவ
நீதி இந்த உலகெங்கும் ஒலிக்க என்று இப்பாடல் நிறைகின்றது.
அது என்ன நற்றவம் மற்றும் வேள்வி என்று தெளிந்தால்,
சைவ முறையில் மனதை இறைநிலைப்படுத்துவது தவம்.
உடலை இறைநிலைப்படுத்துவது வேள்வி. இத்தகு இரண்டும்
சிறந்தோங்கல் வேண்டும் என்று விழிக்கின்றது
இந்தத்தீந்தமிழ்ப்பா! உணர்ந்து மனதால் அடைவதே
செந்தவம். இத்தகு தவச்சிறப்பை தன் ஊன் உருக்கும்
செழுந்தமிழால் உலகிற்கு உரைத்துப்போகின்றார்
வாதவூரடிகள் என்று அழையப்பெற்ற எம் மாணிக்கவாசகர்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே'
முத்தி எனும் பெருந்தவநெறி அறியாத மத
மூர்க்கர்களோடு, அவர்கள் வழி நடக்கவிருந்த எனக்கு
உண்மையான பத்தி நெறியை அறிவித்து, என்னுடைய
வினைகள், தவறுகள் எல்லாம் தகரும் வண்ணம் செய்து,
என்னுடைய மலங்களை அழித்து, என்னையும் சிவம் ஆக்கிய
என் தந்தையே நீ எனக்கு அருளிய இந்த தவநெறியை யார்
பெறுவார். யாரால் பெற முடியும் என்று வியக்கின்றார்.
இசை சேர இந்தப்பாடலை நோக்கின், இது ஓர் சிறந்த
பாடல். செழித்த பாடல். என்று இயம்பலாம். ஆனால்
அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன்
ஆழம் புரியும். உனது கடவுள், எனது கடவுள், அவன்
கடவுள், இவன் கடவுள், கடவுள் உண்டு, கடவுள் இல்லை
என்று எல்லாரும் மூர்க்கர்கள் போல் சண்டை
இடுக்கின்றார்களே தவிர, உண்மையில் யாரும் முத்தி தரும்
தவநெறியை நோக்கி செல்கின்றார்கள் இல்லை. நானும்
அவர்களை போல் செல்ல நினைத்தேன். ஆனால் நீ அத்தகு
தவநெறியை அறிவித்து, என்னுடைய வினைகள்
எல்லாவற்றையும் அழித்துவிட்டாய். என்னுடைய மலங்களை
அழித்து, என்னை சிவமாக்கிய ஈசனே. இப்படி ஒரு வரத்தை
வேறு யாரும் பெற்றனரோ என்று வியக்கின்றார். இது
தான் தவத்தின் நெறி, ஆகவே மணிவாசகரின் வார்த்தைக்கு
இணங்க நாமும் எம்மனதை தவத்துடன் ஆழப்பின்னி
இறைவனை அடைவோம்!
'நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
ஆடவை
நல்லோரை
ஆனித்
திங்கள்
2021
தவத்தினாற்
பெறும்
பயன்
என்ற
பாடல்
அதன்
உள்ளார்ந்த
அர்த்தங்களை
தெளித்துப்
போகின்றது
.
ஆழவிளங்கிப்
புரிந்தால்
இந்தப்பாடலை
விட
சிறந்த
விளக்கம்
இல்லை
எனலாம்
.
இறைவனுக்கு
வெள்ளை
நிற
மல்லிகையும்
வேண்டாம்
வேறெந்த
மாமலரும்
வேண்டாம்
.
அவன்
வேண்டுவது
உள்ளத்தையே
என்று
உறுதி
பட
உரைக்கின்றார்
.
அந்த
உள்ளம்
எனும்
இறைவன்
விரும்பி
உறையும்
இடத்தை
தூய்மைப்படுத்தும்
பொருட்களே
நற்குணங்கள்
தூய்மையில்லாத
இடத்தில்
இறைவன்
உறைய
மாட்டான்
.
ஆகவே
உன்
உள்ளத்தை
தூய்மைப்படுத்து
என்கிறார்
விபுலானந்தர்
.
அந்த
தூய்மைப்
படுத்தலே
தவம்
என்கின்றார்
வள்ளுவர்
.
SPOMENCKICE
மங்களநாதர்
-
உத்தரகோசமங்கை
தவம்
என்ற
ஒற்றை
வார்த்தை
சைவத்தமிழ்
உலகின்
மாபெரும்
ஆன்மீக
அலை
எனலாம்
.
இத்தகு
தவம்
என்றால்
என்ன
என்று
வினவும்
போது
உலகிடை
ஒரே
ஒரு
விடை
மட்டும்
பரந்து
ஒலிக்கின்றது
.
காவி
பூண்டு
கமண்டலம்
தூக்கி
காட்டிற்கு
செல்லுதலே
தவம்
என்று
உலகு
இயம்புகின்றது
.
ஆனால்
அஃது
இல்லை
தவம்
.
மந்திரம்
கூறலே
தவம்
என்று
இன்னோர்
பகுதி
கூறுகின்றது
.
ஆனால்
அதுவும்
இல்லை
தவம்
.
அப்படி
என்றால்
அந்த
தவம்
யாது
?
தவம்
என்று
கூறுவதன்
பொருள்
யாது
என்று
வினவின்
அதற்கான
அர்த்தத்தை
அன்று
வள்ளுவரே
கூறி
விட்டார்
.
'
'
உற்றநோய்
நோன்றல்
உயிர்க்குஉறுகண்
செய்யாமை
அற்றே
தவத்திற்கு
உரு
எமக்கு
வரும்
துன்பங்களை
தாங்கிக்கொள்ளல்
என்று
முதலாவதாக
அறுதியிடுகின்றார்
.
அது
என்ன
எமக்கு
வரும்
துன்பங்களை
தாங்கிக்கொள்ளல்
என்று
ஓர்
கேள்வி
எழுப்பின்
பின்வருமாறு
ஒரு
பதில்
அமைகின்றது
.
துன்பங்கள்
பலவகை
பசி
ஓர்
துன்பம்
பணம்
ஓர்
துன்பம்
நோய்
ஓர்
துன்பம்
தோல்வி
ஓர்
துன்பம்
.
இவ்வாறு
சொல்லிவிட்டு
அடுத்த
வரியை
பிற
உயிர்களுக்கு
தீமை
செய்யாமை
என்று
சொல்லுகின்றார்
.
இதைத்தான்
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிகிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிந்தபின்
அன்பே
சிவமாய்
அமர்ந்திருந்தாரே
என்று
அன்பில்
ஈசனை
அறுதியிடுகின்றார்
திருமூலர்
.
இதைத்தான்
வள்ளுவனும்
சொன்னான்
பிற
உயிர்களுக்கு
தீங்கு
பயக்காமை
என்ற
வடிவில்
.
இந்த
இரண்டுமே
தவத்திற்கு
உரு
என்கிறான்
மூத்த
முதல்வன்
வள்ளுவன்
.
சரி
தவத்திற்கு
உரு
கூறியாயிற்று
தவத்தை
யார்
செய்யலாம்
?
இந்த
கேள்விக்கும்
வள்ளுவன்
சொல்லிச்செல்கின்றான்
.
'
'
தவம்
தவமுடையார்க்கு
ஆகும்
அவம்அதனை
அஃதிலார்
மேற்கொள்
வது
நற்குணங்கள்
உடையவற்கே
தவம்
செய்வது
இலகுவாகும்
.
அல்லாதவர்கள்
தவம்
செய்வது
வீண்
வேலை
என்கிறார்
.
இது
ஞானவெடிப்பின்
முதிர்வு
என்றும்
கொள்ளலாம்
.
சரி
நற்குணங்கள்
என்றால்
எவை
?
அறம்
உண்மை
நேர்மை
கொடை
என்று
அந்தப்பட்டியல்
நீண்டு
செல்கின்றது
.
இதைக்குறித்து
தான்
விபுலானந்தர்
சில
வரிகளை
இயம்பிப்போகின்றார்
.
வெள்ளை
நிற
மல்லிகையோ
வேறெந்த
மாமலரோ
வள்ளல்
அடியிணைக்கு
வாய்த்த
மலரெதுவோ
வெள்ளை
நிறப்
பூவுமல்ல
வேறெந்த
மலருமல்ல
உள்ளக்
கமலமடி
உத்தமனார்
வேண்டுவது
தேனுக்குள்
இன்பம்
சிவப்போ
கறுப்போ
வானுக்குள்
ஈசனைத்
தேடும்
மதியிலீர்
!
தேனுக்குள்
இன்பம்
செறிந்திருந்
தாற்போல்
ஊனுக்குள்
ஈசன்
ஒளிந்திருந்தானே
எனும்
திரு
மூலனின்
வார்த்தை
உதிர்ப்புக்களும்
இவற்றையே
சொல்லிப்போகின்றன
.
இறைவனை
உள்ளத்தில்
தேடு
அவன்
உறைவதற்கு
நற்குணங்களால்
உள்ளத்தை
தூய்மைப்படுத்து
அதன்
பெயரே
தவம்
.
சரி
தவத்தின்
பயன்
என்ன
என்றால்
அதற்கும்
வள்ளுவனே
பதில்
உரைக்கின்றார்
.
ஓன்னார்த்
தெறலும்
உவந்தாரை
ஆக்கலும்
எண்ணின்
தவத்தான்
வரும்
கெடுதல்
செய்யும்
பகைவரை
தண்டித்தலும்
நல்ல
நண்பர்களை
காத்தலும்
தவத்தின்
வலிமை
என்றே
வள்ளுவர்
உரைக்கின்றார்
.
அது
என்ன
தீயவர்களை
அழித்து
நண்பர்களை
காத்தல்
எண்ணிப்பார்த்தால்
ஆழப்பொருள்
தரும்
வார்த்தை
அது
.
உள்ளத்தை
நல்ல
குணங்களால்
தூ
ய்மைப்படுத்தி
விட்டோம்
அதில்
இறைவன்
உறைந்து
விட்டான்
.
சரி
இறைவன்
உறைந்தால்
என்ன
நடக்கும்
?
அவனே
எம்மை
காப்பான்
.
தேவையற்றவற்றில்
இருந்து
எம்மை
நீக்கி
எமக்கு
நல்லருள்
புரிவான்
.
இதனால்
தான்
தவம்
நண்பர்களை
காக்கும்
பகைவர்களை
அழிக்கும்
என்றான்
வள்ளுவன்
.
“
ஈசனே
என்
எம்மானே
எந்தை
பெருமான்
என்பிறவி
நாசனே
நான்
யாதுமொன்று
அல்லாப்
பொல்லா
நாயான
நீச
னேனை
ஆண்டாய்க்கு
நினைக்க
மாட்டேன்
கண்டாயே
தேச
னேஅம்
பலவனே
செய்வ
தொன்றும்
அறியேனே
என்று
திருவாசகம்
சொல்லிய
மாணிக்கவாசகரும்
இதையே
சொல்லிப்போகின்றார்
.
உன்னை
நினைக்காத
என்னை
ஆண்டு
அருளிய
என்
இறைவனே
என்று
புலம்புகின்றார்
.
ஆக
தவம்
என்பது
செய்தலின்
சிறப்பு
ஒழுக்கத்தின்
உருவம்
இறைவனை
அடைய
தவம்
ஒன்றே
போதும்
அந்தத்
தவத்தை
ஒழுக்கத்தால்
அடையலாம்
என்பது
தெளிந்த
சிறப்பு
.
சரி
அவ்வாறு
இறைவனை
தவத்தின்
மூலம்
பற்றி
வைத்தலின்
சிறப்பு
என்ன
?
அதற்கும்
வள்ளுவர்
பதில்
வழங்கிப்போகின்றார்
.
பிறவிப்
பெருங்கடல்
நீந்துவார்
நீந்தார்
இறைவன்
அடிசேரா
தார்
பிறவி
எனும்
பெருங்கடலை
அடைய
இறைவனின்
அடியை
பற்ற
வேண்டும்
.
இறைவனின்
அடியைப்பற்ற
உள்ளம்
சுத்தமாக
வேண்டும்
.
உள்ளம்
சுத்தமாக
நற்குணங்களை
வளர்க்க
வேண்டும்
.
நற்குணங்களை
வளர்ப்பதன்
பெயர்
தவம்
.
ஆக
முத்தியின்
இலக்கு
வழிகாட்டி
தவமே
என்று
சைவம்
உரைக்கின்றது
.
ஓர்
பிடி
நீறும்
இல்லா
வாழ்வை
நம்பும்
அடியேனை
இனி
ஆளுமே
”
என்பது
பட்டினத்தார்
வார்த்தை
.
நிலையாப்பொருள்களில்
வாழ்வை
வெறுத்த
சைவத்தமிழன்
கண்டு
பிடித்த
நிலைத்த
பொருளே
இறைவன்
அவனை
அடையும்
இலகுவான
நிலைத்த
வழியே
தவம்
.
செய்க
தவம்
!
செய்க
தவம்
!
நெஞ்சே
!
தவம்
செய்தால்
எய்த
விரும்பியதை
எய்தலாம்
-
வையக்கத்தில்
அன்பிற்
சிறந்த
தவமில்லை
அன்புடையார்
இன்புற்று
வாழ்தல்
இயல்பு
என்று
தமிழ்ப்புலவோன்
பாரதியும்
இதையே
சொன்னான்
.
தன்
நெஞ்சாகிய
ஆழ்மனதிடம்
சொன்னான்
'
நெஞ்சே
செய்
தவத்தை
தவம்
செய்தால்
விரும்பிய
எதனையும்
11
தெ
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
அடையலாம்
.
'
என்று
சொல்லிவிட்டு
சொன்னான்
இந்த
வையகத்தில்
அன்பில்
சிறந்த
தவம்
ஏதுமில்லை
.
அத்தகு
சிறந்த
தவமாகிய
அன்பினை
உடையவர்கள்
இன்புற்று
வாழ்வது
இயல்பானது
.
இது
பாரதி
கண்ட
தவநெறி
.
சரி
தவத்தின்
சிறப்பு
எனும்
கேள்விக்கு
பின்வரும்
பாடல்
பதிலறைந்து
போகின்றது
.
வான்முகில்
வளாது
பெய்க
மலிவளம்
சுரக்க
மன்னன்
கோன்முறை
அரசு
செய்க
குறைவிலாது
உயிர்கள்
வாழ்க
நான்மறை
அறங்கள்
ஓங்க
நற்றவம்
வேள்வி
மல்க
மேன்மைகொள்
சைவ
நீதி
விளங்குக
உலக
மெல்லாம்
”
இந்த
சைவப்பெரும்
வாழ்த்து
தவநிலையை
ஒரே
சொல்லில்
அடக்கிப்போகின்றது
.
வானத்திலுள்ள
முகில்கள்
காலம்
தவறாது
மழையாய்
பொழிய
வேண்டும்
.
இவ்வாறு
பெய்து
விவசாயம்
உட்பட
அனைத்து
வளங்களும்
சிறந்தொங்க
வேண்டும்
.
மன்னன்
அறக்கோல்
தவறாது
கோன்
முறையில்
அரசாள
வேண்டும்
.
இந்த
உலகில்
உள்ள
அனைத்து
உயிர்களும்
நெகிழ்த்து
எந்தவொரு
குறையும்
இல்லாது
வாழ
வேண்டும்
.
நான்மறைகள்
மற்றும்
தீந்தமிழில்
அமைந்த
திருமுறைகள்
எனும்
அறங்கள்
ஓங்குதல்
வேண்டும்
என்று
சொல்லிவிட்டு
நற்றவம்
மற்றும்
வேள்வி
என்பன
சிறக்க
இவற்றை
எல்லாம்
கொண்ட
மேன்மை
மிகு
சைவ
நீதி
இந்த
உலகெங்கும்
ஒலிக்க
என்று
இப்பாடல்
நிறைகின்றது
.
அது
என்ன
நற்றவம்
மற்றும்
வேள்வி
என்று
தெளிந்தால்
சைவ
முறையில்
மனதை
இறைநிலைப்படுத்துவது
தவம்
.
உடலை
இறைநிலைப்படுத்துவது
வேள்வி
.
இத்தகு
இரண்டும்
சிறந்தோங்கல்
வேண்டும்
என்று
விழிக்கின்றது
இந்தத்தீந்தமிழ்ப்பா
!
உணர்ந்து
மனதால்
அடைவதே
செந்தவம்
.
இத்தகு
தவச்சிறப்பை
தன்
ஊன்
உருக்கும்
செழுந்தமிழால்
உலகிற்கு
உரைத்துப்போகின்றார்
வாதவூரடிகள்
என்று
அழையப்பெற்ற
எம்
மாணிக்கவாசகர்
.
முத்திநெறி
அறியாத
மூர்க்கரொடு
முயல்வேனைப்
பத்திநெறி
அறிவித்துப்
பழவினைகள்
பாறும்வண்ணஞ்
சித்தமலம்
அறுவித்துச்
சிவமாக்கி
எனை
ஆண்ட
அத்தன்எனக்
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே
'
முத்தி
எனும்
பெருந்தவநெறி
அறியாத
மத
மூர்க்கர்களோடு
அவர்கள்
வழி
நடக்கவிருந்த
எனக்கு
உண்மையான
பத்தி
நெறியை
அறிவித்து
என்னுடைய
வினைகள்
தவறுகள்
எல்லாம்
தகரும்
வண்ணம்
செய்து
என்னுடைய
மலங்களை
அழித்து
என்னையும்
சிவம்
ஆக்கிய
என்
தந்தையே
நீ
எனக்கு
அருளிய
இந்த
தவநெறியை
யார்
பெறுவார்
.
யாரால்
பெற
முடியும்
என்று
வியக்கின்றார்
.
இசை
சேர
இந்தப்பாடலை
நோக்கின்
இது
ஓர்
சிறந்த
பாடல்
.
செழித்த
பாடல்
.
என்று
இயம்பலாம்
.
ஆனால்
அதன்
பொருள்
உணர்ந்து
பார்க்கும்
போது
தான்
அதன்
ஆழம்
புரியும்
.
உனது
கடவுள்
எனது
கடவுள்
அவன்
கடவுள்
இவன்
கடவுள்
கடவுள்
உண்டு
கடவுள்
இல்லை
என்று
எல்லாரும்
மூர்க்கர்கள்
போல்
சண்டை
இடுக்கின்றார்களே
தவிர
உண்மையில்
யாரும்
முத்தி
தரும்
தவநெறியை
நோக்கி
செல்கின்றார்கள்
இல்லை
.
நானும்
அவர்களை
போல்
செல்ல
நினைத்தேன்
.
ஆனால்
நீ
அத்தகு
தவநெறியை
அறிவித்து
என்னுடைய
வினைகள்
எல்லாவற்றையும்
அழித்துவிட்டாய்
.
என்னுடைய
மலங்களை
அழித்து
என்னை
சிவமாக்கிய
ஈசனே
.
இப்படி
ஒரு
வரத்தை
வேறு
யாரும்
பெற்றனரோ
என்று
வியக்கின்றார்
.
இது
தான்
தவத்தின்
நெறி
ஆகவே
மணிவாசகரின்
வார்த்தைக்கு
இணங்க
நாமும்
எம்மனதை
தவத்துடன்
ஆழப்பின்னி
இறைவனை
அடைவோம்
!
'
நற்றவம்
வேள்வி
மல்க
மேன்மை
கொள்
சைவ
நீதி
விளங்குக
உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்