தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 உலகத்திலே கால தொன்மையும் சாலப் பெருமையும் உடைய தன்மையன் என்று அறிய வெளிவந்த, இறை அருளிய முடிந்த முடிவே சிவநெறி. அந்நெறியினைப் போற்றி விளங்குபவர்கள், திருவருளின் ஞான அருள் பெற்று, காலந்தோறும் நிலவுலகிற்கு இறைவனால் அனுப்பப் பெறுவர். அவ்வகை உணர்வு பெற்ற ஒருவராய் வந்து தோன்றியவரே! சிவனடியார் திருக்கூட்டத் தலைவர், சிவத்திரு. பவானி தியாகராசர் ஐயா அவர்கள். கொங்கு நாட்டில் வாணியாறு, காவிரி ஆறு, அமிர்த்த ஊற்று எனும் நதிகள் கூடும், கூடுதுறையிலே முன்னை தவத்தால் நல்வினைப் பயனால் மூத்த பிள்ளையாய் சிவத்திரு. அய்யாவு அவர்களுக்கும், தெய்வத்திருமதி. கண்ணம்மாள் அவர்களுக்கும் தோன்றினார். அவருக்கு பெற்றோர் சூட்டிய திருப்பெயர் தியாகராசன். பிள்ளைப் பருவம் தொட்டு விடலைப் பருவம் வரை, பண்ணார் மொழியம்மை உடனாய் திருநணாவுடையார் திருக்கோயிலிலே தந்தையாருடன் இணைந்து, சரியை திருப்பணியில் ஆழ்ந்திணைந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி செல்லும் போது உலகியல் கல்வியின் நற்பயன் அரிதென உணர்ந்து, மெஞ்ஞானக் கல்வியிலே நாட்டம் கொண்டு, பேராசிரியர் முனைவர், சிவத்திரு. வையாபுரியார், யர் முனைவர். சிவத்திரு. சென்னியப்பனார் போன்ற சான்றோர் பெருமக்களிடத்து சமய மெஞ்ஞானம் பெற்றார். திருமதி. கீதா என்னும் சேரநாட்டு மங்கையினை மணங்கொண்டார். வழுவாது திருநணா அறுபத்து மூவர்க்கும், திருவிளக்கிடும் திருப்பணியை தினந்தோறும் செய்து வருபவர். பெருமான், இருவருக்கும் நமசிவாயம் என்னும் திருமகவு அருளினார். அருட்குருநாதர் ஒளியகம் சிவத்திரு. ஆடலரசுஐயா அவர்களிடம் சமயதீக்கையும், ஒளியகம் சிவத்திரு. ஒளியரசு ஐயா அவர்களிடம் விசேடம், நிர்வாண தீக்கை, ஆசாரிய அபிடேகமும் பெற்று, அன்றாடம் சிவ பூசையினை முறைப்படி ஆற்றி வருபவர். யான் பெற்ற பேறு இவ்வையகமும் பெறவேண்டுமென எண்ணி, வகுப்புகளையும், திருவாசகம், திருமுறைகளையும் கற்றுக் கொடுத்து வந்தார். ஐயாவிடம் திருமுறை கற்றோர் சித்தாந்த வகுப்பு நடத்தியும், திருமுறை கல்வியை கற்றுக் கொடுத்தும் வருகின்றனர். “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவன் சொல்லுக்கிணங்க, மாற்று கருத்துடையவர்களின் கருத்துகளையும் தென்னாடு குறையாக கூறாமல், எம் சமய கொள்கைகளின் கருத்துக்களின் பெருமையை மட்டும் கூறும் நற்குணம் கொண்டவர். "திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையை வென்றேற அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துரை வெல்ல” என்ற சேக்கிழார் சுவாமிகளின் வாக்கினை ஏற்று, தீந்தமிழ் மரபே தலைசிறந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், எமது மரபு வழிபாட்டினை வலியுறுத்துவது மட்டுமல்ல, திருக்கூட்ட அன்பர்களோடும் இணைந்து ஆற்றி திருவாய்பாடி திருக்கோயில் திருப்பணிகள் சிவ அரன்பணி எனும் அரும்பணியில் அடியார் விழுதுகளை பரப்பி நிற்கும் அரன்பணி அறக்கட்டளை வருகின்றார். தமிழகம் முழுவதுமன்றி, கடல் கடந்து தமிழர் வாழும் நாடுகள் தோறும் 2019களில் இராசஇராச சோழசன் அவர்களின் சமாதி உள்ள இடமாகக் கருதப்படும் பட்டீஸ்வரம் உடையாளாரில் திருமுறைச் சிந்தனைகளை விதைத்தும், சித்தாந்த உண்மைகளை வகுப்பு வழி உரைத்தும் வருகிறார். பல்காலும் தஞ்சைப் பெரியகோயிலின் மாதிரிக் கோயிலை கட்டுவதற்கு பதியப்பட்ட அமைப்பே அரன்பணி அறக்கட்டளை. வரதரெட்டியில் மழை வெள்ளத்தில் நனைந்த இறைவன் அரன்பணிக்கு ஆணையிடுதல் திருக்கோயிலுக்கு வரும் சிறார்களில் ஆர்வலர்களுக்கும், ஆர்வம் மிக்கோர்க்கும், சற்றொப்ப ஏழு கோடியைக் கடந்து திருவாக்கில் அருட்குருநாதர் சிவத்திரு. சமய சாத்திர வகுப்புகளையும், சித்தாந்த சிறந்தடியார் பங்குடன் இனிதே நடந்து ஒளியரசு ஐயா அவர்களின் ஆசியில் மற்றும் தலைமையில், பவானி தியாகராசர் ஐயா அவர்கள் ஆலமரமாக நிற்க, அதில் விழுதுகளாக அமைப்பாளர்களை அமைத்து, அரன்பணி அறக்கட்டளையை வருகின்றது. பல இன்னல்கள் இடர்பாடுகளை திருவருள் முன்னிற்க வெற்றி கொண்டு, நம்பியாரூரர் திருக்கோயில் கடவுள் மங்கல நன்நீராட்டினை தீந்தமிழ் மந்திரங்கள் ஓதி தடை வந்த போதும் முன்னவனே! முன் நிற்க, அறங்கூறும் அவையத்து அறவரசர் நீதி விளம்ப, அருட்குருநாதர் சிவத்திரு. ஒளியரசு ஐயா அவர்கள், முனைவர் சிவத்திரு. சென்னியப்பனார் மேலும் பல சைவ சமயச் சான்றோர் பலர் முன்னிலையிலே குடமுழுக்கு பல்லாயிர அடியார் பெருமக்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது. ஞானப்பிள்ளையாரும், வாக்கின் மன்னரும் (அப்பரும்) சந்தித்த இடமாகிய தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் சம்பந்தர் மேடு எனும் திருவிடத்தின் வரலாற்றுப் பேறினைப் போற்றும் வண்ணம் கற்கோயில் ஒன்றை அமைத்து திருப்பணி புரிந்த ஐயா! அவர் ஆற்றிய திருப்பணிகள் என நீளுகிறது ஐயாவின் திருப்பணிகள். சுந்தரர் கோயில் Ug H 07 எம்பிரான் நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்) ha தெ சமயத்தொண்டிலே தோய்ந்தமையால், அவருக்கு திருக்கோயில் திருப்பணியாற்றும் திருவருள் நல்கி உள்ளார். தம்பிரான் தோழர் அவதாரம் புரிந்த திருவிடத்தை கற்றளியாக அமைக்கும் நற்பேறு அமையப் பெற்றார். சற்றொப்ப இருபது நூறாயிரத்திலே தொடங்கி நிறைவு எனினும் கோயில் கட்டுவதற்கு தடங்கல்கள் இருந்துவந்ததால் இயங்குநிலையை இழந்திருந்தது. ஐயாவின் பயணத்தின்போது, வழுதரெட்டி எனும் ஊரில் மழை நீரினுள் நனைந்து இருக்க கண்ட சிவலிங்கத் திருமேனியே மீண்டும் அரன்பணி செய்ய நினைத்த திருப்பணிகள், இன்று அறக்கட்டளையை சிவனுக்கு கோயில்கள் கட்டுதல், திருப்பணி வேலைகள் செய்தல் எனும் கருத்திற்கு உரமூட்டி தளிர்விடச்செய்தது. நிறைய இடங்களில் திருமேனிகளுக்கு தகரக்கூடம் அமைத்து பழம்பெரும் சிவலிங்கத் திருமேனிகள் வெட்ட வெளியிலும், மழையிலும், வெயிலிலும் இருப்பது முகநூலிலும், புலனக் குழுமத்திலும் பதிவுகளாக வந்ததை கண்ணுற்று வருந்தியபோது, திருவருள் கொடுக்கப்பட்டுள்ளது. கருவறையும் ஒருநிலை விமானமும் அமைக்கும் திருப்பணியில் பொன்மான் வேய்ந்த நல்லூ ர், காக்கா கோட்டூர், கோடுகிழி, பூதூர், நறுவெளி போன்ற தலங்களில் திருப்பணிகள் திறத்தினால் இச்சிவலிங்கத் திருமேனிகளுக்கு மேற்கூரை வேய்ந்து, கூடம் அமைத்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் பவானி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழமையான ஆலயத்தை, அப்பழமை மாறாமல் புதுப்பித்தல் என்ற நோக்கத்தில் தியாகராசன் ஐயாவின் மனதில் தோன்றியது. இதுகாறும் நடந்த திருப்பணிகளுக்கு நிதியளித்தவரே, மீண்டும் மீண்டும் பொருள் கொடுக்க நினைத்து, தொகை அதிகம் கொடுத்து, திருப்பணிகள் செய்ய பலர் இருப்பினும், எவ்வகையினரும் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, ஒரு சிறு தொகையை, ஒரு நபருக்கு ரூபாய் 100 என தீர்மானித்து, " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அப்பர் சுவாமிகள் திருவாரூர் உருத்திரகோடீசுவரர் ஆலயம் முழுமையும் புதுப்பித்தல் பணி நடந்து வருகின்றது. திருக்கோயிலை பராமரித்தல் என்ற திட்டத்தில் சண்டேசநாயனார் முத்தி தலமான திருவாப்படி தலத்தில் அவர்கள் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க பரவச்செய்தார். அவர் எதிர்பார்த்தது, ஆயிரம் பேர் இணைவார்கள் மாதம் ஒரு நூறாயிரம் ரூபாய் சேர்த்து, மேற்கூடம் அமைத்துக் கொடுக்கலாம் என்று. ஆனால், திருவருள் முன்னிற்க தைத்திங்கள் மட்டும் இத்திருப்பணியில் இணைந்தவர்கள் 6500 அன்பர்கள். சிறுதுளி பெருவெள்ளமாவது போல இது மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்து, அரன்பணி அறக்கட்டளையை சற்று விரிவுப்படுத்த இறைவன் திருவருள் கூட்டியது. அருட்குருநாதர் அவர்களின் அறிவுரையின் கீழ் அரன்பணி அறக்கட்டளையின் பணிகளாக நான்கு திட்டங்கள் தொடுக்கப்பட்டது. 1. வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளுக்கு தகரக்கூடம் அமைத்துக் கொடுத்தல். 2.வழிபாடுகள் நடக்கும் மற்றும் ஊர் மக்களின் ஆர்வத்தைப் பொறுத்து பெருமான் மற்றும் அம்மைக்கு கருவறை, ஒருநிலை அர்த்தமண்டபம் அமைத்தல். 3. பழமையான சிவாலயங்களுக்கு அந்த பழமையை மாறாமல் கோயிலை அவ்வாரே புதுப்பித்தல். 4.கோயில்களை பராமரிப் மற்றும் கோயில்களை சுத்தமாக வைத்திருப்பது, மின்சார பணிகள் மற்றும் தண்ணீர் வசதி செய்வது, மண்டபங்கள் பாழடைந்த நிலையில் தோன்றாமல் இருக்க அதற்கு தேவையான வர்ணம் பூசி பாதுகாத்தல், சாமிக்கு ஆடைகள் சாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து தர திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது. பல அன்பர்கள் விரும்பி இணைய வைகாசித்திங்கள் சுமார் 10,500 அன்பர்கள் இணைந்தார்கள். திருவருள் துணைகொண்டு, திருப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கூரை அமைக்கும் திட்டத்தில் அயன்வேலூர், அத்தியூர், கீழக்குப்பம் வேலூர் மற்றும் மோட்டத்தூர் ஏரிக்கரை சிவலிங்க திருமேனிகள், தஞ்சை கொடியாலம், இடைஇருப்பு, திருவையாத்துக்குடி சிவலிங்க திருப்பணிகள் நடத்திக்கொடுக்கப்பட்டது. "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஒளவையின் பொன்மொழி, "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது மாணிக்கவாசகர் வாக்கு, "மாதவம் செய்த தென்திசை" என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் வாக்கு, தமிழகம் தெய்வத் தன்மையோடு சேர்ந்து இருக்கின்ற பூமி, இங்கு, (08ஆம் பக்கம் பார்க்க) 2021/4/
ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 உலகத்திலே கால தொன்மையும் சாலப் பெருமையும் உடைய தன்மையன் என்று அறிய வெளிவந்த இறை அருளிய முடிந்த முடிவே சிவநெறி . அந்நெறியினைப் போற்றி விளங்குபவர்கள் திருவருளின் ஞான அருள் பெற்று காலந்தோறும் நிலவுலகிற்கு இறைவனால் அனுப்பப் பெறுவர் . அவ்வகை உணர்வு பெற்ற ஒருவராய் வந்து தோன்றியவரே ! சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவத்திரு . பவானி தியாகராசர் ஐயா அவர்கள் . கொங்கு நாட்டில் வாணியாறு காவிரி ஆறு அமிர்த்த ஊற்று எனும் நதிகள் கூடும் கூடுதுறையிலே முன்னை தவத்தால் நல்வினைப் பயனால் மூத்த பிள்ளையாய் சிவத்திரு . அய்யாவு அவர்களுக்கும் தெய்வத்திருமதி . கண்ணம்மாள் அவர்களுக்கும் தோன்றினார் . அவருக்கு பெற்றோர் சூட்டிய திருப்பெயர் தியாகராசன் . பிள்ளைப் பருவம் தொட்டு விடலைப் பருவம் வரை பண்ணார் மொழியம்மை உடனாய் திருநணாவுடையார் திருக்கோயிலிலே தந்தையாருடன் இணைந்து சரியை திருப்பணியில் ஆழ்ந்திணைந்தார் . பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி செல்லும் போது உலகியல் கல்வியின் நற்பயன் அரிதென உணர்ந்து மெஞ்ஞானக் கல்வியிலே நாட்டம் கொண்டு பேராசிரியர் முனைவர் சிவத்திரு . வையாபுரியார் யர் முனைவர் . சிவத்திரு . சென்னியப்பனார் போன்ற சான்றோர் பெருமக்களிடத்து சமய மெஞ்ஞானம் பெற்றார் . திருமதி . கீதா என்னும் சேரநாட்டு மங்கையினை மணங்கொண்டார் . வழுவாது திருநணா அறுபத்து மூவர்க்கும் திருவிளக்கிடும் திருப்பணியை தினந்தோறும் செய்து வருபவர் . பெருமான் இருவருக்கும் நமசிவாயம் என்னும் திருமகவு அருளினார் . அருட்குருநாதர் ஒளியகம் சிவத்திரு . ஆடலரசுஐயா அவர்களிடம் சமயதீக்கையும் ஒளியகம் சிவத்திரு . ஒளியரசு ஐயா அவர்களிடம் விசேடம் நிர்வாண தீக்கை ஆசாரிய அபிடேகமும் பெற்று அன்றாடம் சிவ பூசையினை முறைப்படி ஆற்றி வருபவர் . யான் பெற்ற பேறு இவ்வையகமும் பெறவேண்டுமென எண்ணி வகுப்புகளையும் திருவாசகம் திருமுறைகளையும் கற்றுக் கொடுத்து வந்தார் . ஐயாவிடம் திருமுறை கற்றோர் சித்தாந்த வகுப்பு நடத்தியும் திருமுறை கல்வியை கற்றுக் கொடுத்தும் வருகின்றனர் . உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவன் சொல்லுக்கிணங்க மாற்று கருத்துடையவர்களின் கருத்துகளையும் தென்னாடு குறையாக கூறாமல் எம் சமய கொள்கைகளின் கருத்துக்களின் பெருமையை மட்டும் கூறும் நற்குணம் கொண்டவர் . திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையை வென்றேற அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துரை வெல்ல என்ற சேக்கிழார் சுவாமிகளின் வாக்கினை ஏற்று தீந்தமிழ் மரபே தலைசிறந்தது என்பதை உணர்த்தும் வண்ணம் எமது மரபு வழிபாட்டினை வலியுறுத்துவது மட்டுமல்ல திருக்கூட்ட அன்பர்களோடும் இணைந்து ஆற்றி திருவாய்பாடி திருக்கோயில் திருப்பணிகள் சிவ அரன்பணி எனும் அரும்பணியில் அடியார் விழுதுகளை பரப்பி நிற்கும் அரன்பணி அறக்கட்டளை வருகின்றார் . தமிழகம் முழுவதுமன்றி கடல் கடந்து தமிழர் வாழும் நாடுகள் தோறும் 2019 களில் இராசஇராச சோழசன் அவர்களின் சமாதி உள்ள இடமாகக் கருதப்படும் பட்டீஸ்வரம் உடையாளாரில் திருமுறைச் சிந்தனைகளை விதைத்தும் சித்தாந்த உண்மைகளை வகுப்பு வழி உரைத்தும் வருகிறார் . பல்காலும் தஞ்சைப் பெரியகோயிலின் மாதிரிக் கோயிலை கட்டுவதற்கு பதியப்பட்ட அமைப்பே அரன்பணி அறக்கட்டளை . வரதரெட்டியில் மழை வெள்ளத்தில் நனைந்த இறைவன் அரன்பணிக்கு ஆணையிடுதல் திருக்கோயிலுக்கு வரும் சிறார்களில் ஆர்வலர்களுக்கும் ஆர்வம் மிக்கோர்க்கும் சற்றொப்ப ஏழு கோடியைக் கடந்து திருவாக்கில் அருட்குருநாதர் சிவத்திரு . சமய சாத்திர வகுப்புகளையும் சித்தாந்த சிறந்தடியார் பங்குடன் இனிதே நடந்து ஒளியரசு ஐயா அவர்களின் ஆசியில் மற்றும் தலைமையில் பவானி தியாகராசர் ஐயா அவர்கள் ஆலமரமாக நிற்க அதில் விழுதுகளாக அமைப்பாளர்களை அமைத்து அரன்பணி அறக்கட்டளையை வருகின்றது . பல இன்னல்கள் இடர்பாடுகளை திருவருள் முன்னிற்க வெற்றி கொண்டு நம்பியாரூரர் திருக்கோயில் கடவுள் மங்கல நன்நீராட்டினை தீந்தமிழ் மந்திரங்கள் ஓதி தடை வந்த போதும் முன்னவனே ! முன் நிற்க அறங்கூறும் அவையத்து அறவரசர் நீதி விளம்ப அருட்குருநாதர் சிவத்திரு . ஒளியரசு ஐயா அவர்கள் முனைவர் சிவத்திரு . சென்னியப்பனார் மேலும் பல சைவ சமயச் சான்றோர் பலர் முன்னிலையிலே குடமுழுக்கு பல்லாயிர அடியார் பெருமக்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது . ஞானப்பிள்ளையாரும் வாக்கின் மன்னரும் ( அப்பரும் ) சந்தித்த இடமாகிய தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் சம்பந்தர் மேடு எனும் திருவிடத்தின் வரலாற்றுப் பேறினைப் போற்றும் வண்ணம் கற்கோயில் ஒன்றை அமைத்து திருப்பணி புரிந்த ஐயா ! அவர் ஆற்றிய திருப்பணிகள் என நீளுகிறது ஐயாவின் திருப்பணிகள் . சுந்தரர் கோயில் Ug H 07 எம்பிரான் நம்பியாரூரர் ( சுந்தரமூர்த்தி சுவாமிகள் ) ha தெ சமயத்தொண்டிலே தோய்ந்தமையால் அவருக்கு திருக்கோயில் திருப்பணியாற்றும் திருவருள் நல்கி உள்ளார் . தம்பிரான் தோழர் அவதாரம் புரிந்த திருவிடத்தை கற்றளியாக அமைக்கும் நற்பேறு அமையப் பெற்றார் . சற்றொப்ப இருபது நூறாயிரத்திலே தொடங்கி நிறைவு எனினும் கோயில் கட்டுவதற்கு தடங்கல்கள் இருந்துவந்ததால் இயங்குநிலையை இழந்திருந்தது . ஐயாவின் பயணத்தின்போது வழுதரெட்டி எனும் ஊரில் மழை நீரினுள் நனைந்து இருக்க கண்ட சிவலிங்கத் திருமேனியே மீண்டும் அரன்பணி செய்ய நினைத்த திருப்பணிகள் இன்று அறக்கட்டளையை சிவனுக்கு கோயில்கள் கட்டுதல் திருப்பணி வேலைகள் செய்தல் எனும் கருத்திற்கு உரமூட்டி தளிர்விடச்செய்தது . நிறைய இடங்களில் திருமேனிகளுக்கு தகரக்கூடம் அமைத்து பழம்பெரும் சிவலிங்கத் திருமேனிகள் வெட்ட வெளியிலும் மழையிலும் வெயிலிலும் இருப்பது முகநூலிலும் புலனக் குழுமத்திலும் பதிவுகளாக வந்ததை கண்ணுற்று வருந்தியபோது திருவருள் கொடுக்கப்பட்டுள்ளது . கருவறையும் ஒருநிலை விமானமும் அமைக்கும் திருப்பணியில் பொன்மான் வேய்ந்த நல்லூ ர் காக்கா கோட்டூர் கோடுகிழி பூதூர் நறுவெளி போன்ற தலங்களில் திருப்பணிகள் திறத்தினால் இச்சிவலிங்கத் திருமேனிகளுக்கு மேற்கூரை வேய்ந்து கூடம் அமைத்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் பவானி தொடங்கி நடைபெற்று வருகின்றது . பழமையான ஆலயத்தை அப்பழமை மாறாமல் புதுப்பித்தல் என்ற நோக்கத்தில் தியாகராசன் ஐயாவின் மனதில் தோன்றியது . இதுகாறும் நடந்த திருப்பணிகளுக்கு நிதியளித்தவரே மீண்டும் மீண்டும் பொருள் கொடுக்க நினைத்து தொகை அதிகம் கொடுத்து திருப்பணிகள் செய்ய பலர் இருப்பினும் எவ்வகையினரும் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டுமென்று எண்ணி ஒரு சிறு தொகையை ஒரு நபருக்கு ரூபாய் 100 என தீர்மானித்து என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள் திருவாரூர் உருத்திரகோடீசுவரர் ஆலயம் முழுமையும் புதுப்பித்தல் பணி நடந்து வருகின்றது . திருக்கோயிலை பராமரித்தல் என்ற திட்டத்தில் சண்டேசநாயனார் முத்தி தலமான திருவாப்படி தலத்தில் அவர்கள் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க பரவச்செய்தார் . அவர் எதிர்பார்த்தது ஆயிரம் பேர் இணைவார்கள் மாதம் ஒரு நூறாயிரம் ரூபாய் சேர்த்து மேற்கூடம் அமைத்துக் கொடுக்கலாம் என்று . ஆனால் திருவருள் முன்னிற்க தைத்திங்கள் மட்டும் இத்திருப்பணியில் இணைந்தவர்கள் 6500 அன்பர்கள் . சிறுதுளி பெருவெள்ளமாவது போல இது மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்து அரன்பணி அறக்கட்டளையை சற்று விரிவுப்படுத்த இறைவன் திருவருள் கூட்டியது . அருட்குருநாதர் அவர்களின் அறிவுரையின் கீழ் அரன்பணி அறக்கட்டளையின் பணிகளாக நான்கு திட்டங்கள் தொடுக்கப்பட்டது . 1. வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளுக்கு தகரக்கூடம் அமைத்துக் கொடுத்தல் . 2.வழிபாடுகள் நடக்கும் மற்றும் ஊர் மக்களின் ஆர்வத்தைப் பொறுத்து பெருமான் மற்றும் அம்மைக்கு கருவறை ஒருநிலை அர்த்தமண்டபம் அமைத்தல் . 3. பழமையான சிவாலயங்களுக்கு அந்த பழமையை மாறாமல் கோயிலை அவ்வாரே புதுப்பித்தல் . 4.கோயில்களை பராமரிப் மற்றும் கோயில்களை சுத்தமாக வைத்திருப்பது மின்சார பணிகள் மற்றும் தண்ணீர் வசதி செய்வது மண்டபங்கள் பாழடைந்த நிலையில் தோன்றாமல் இருக்க அதற்கு தேவையான வர்ணம் பூசி பாதுகாத்தல் சாமிக்கு ஆடைகள் சாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து தர திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது . பல அன்பர்கள் விரும்பி இணைய வைகாசித்திங்கள் சுமார் 10 அன்பர்கள் இணைந்தார்கள் . திருவருள் துணைகொண்டு திருப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன . கூரை அமைக்கும் திட்டத்தில் அயன்வேலூர் அத்தியூர் கீழக்குப்பம் வேலூர் மற்றும் மோட்டத்தூர் ஏரிக்கரை சிவலிங்க திருமேனிகள் தஞ்சை கொடியாலம் இடைஇருப்பு திருவையாத்துக்குடி சிவலிங்க திருப்பணிகள் நடத்திக்கொடுக்கப்பட்டது . ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஒளவையின் பொன்மொழி தென்னாடுடைய சிவனே போற்றி என்பது மாணிக்கவாசகர் வாக்கு மாதவம் செய்த தென்திசை என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் வாக்கு தமிழகம் தெய்வத் தன்மையோடு சேர்ந்து இருக்கின்ற பூமி இங்கு ( 08 ஆம் பக்கம் பார்க்க ) 2021 / 4 /