தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

தென்னாடு கல்வியில் சிறந்து விளங்க, கல்வியில் மேலோங்க ஓதவேண்டிய திருக்கருப்பறியலூர் திருப்பதிகம் (7) ஆதிஅடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதிஒளி நல்புகை வளர்க்குவடுபுக்குத் தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறிய லூரே. கல்வியில் சிறந்து விளங்க, கல்வி மேலோங்க திருக்கருப்பறியலூரில் உள்ள கோல்வளைநாயகி அம்பாளுடனுறை குற்றம் பொறுத்தநாதப் பெருமானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை (பதிகம் 2-31, திருக்கருப்பறியலூர்) "சுற்றமொடு பற்றுஅவை என்ற பதிகத்தினை, காலை, மாலை இருவேளையும் திருக்கருப்பறியலூர் அப்பனின் திருவடியை நீள நினைந்து உளமுருகி மெய்யன்போடு பாடுவது, வினைகளை நீக்கி கல்வியில் மேன்மையைத் தரும். உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும். இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற்றோரோ, உறவினர்களோ பாடுதலும் பலன்தரும். தெ 08 இறைவன்: குற்றம் பொறுத்தநாதர் இறைவி பெயர் : கோல்வளைநாயகி பண்: இந்தளம் (2-31) இராகம்: நாதநாமக்கிரியை திருச்சிற்றம்பலம் (1) சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக் குற்றம்இல் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே. (2) வண்டு அணைசெய் கொன்றை அது வார்சடைகள் மேலே கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால் கண்டவன் இருப்பது கருப்பறி லூரே. (3) வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப் போதினொடு போதுமலர் கொண்டு புனைக்கின்ற நாதன்என நாள்இருள்முன் ஆடுகுழை தாழும் காதவன் இருப்பது கருப்பறிய லூரே. அரன்பணி எனும் அரும்பணியில்... (07ஆம் பக்கத் தொடர்ச்சி) "யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க் கின்னுரை தானே." எனும் திருமூலர் வாக்கிக்கிணங்க, உண்ணப்புகும் பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்கு வாயுறை புல் குடுத்தலும், வறியர்க்குச் சிறிது சோறிடுதலும், மற்றவரிடம் இன்சொல் பகர்தலும் எல்லார்க்கும் இயல்வனவே! இதுவே தமிழரின் பண்பாடு. தமிழரின், பண்பாடும், மொழியும் ஆலயம் சார்ந்தே இருக்கின்றது. எம் பெருமக்கள் ஆலயம் சார்ந்து இரு என்றும், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம், என்றும் கூறியுள்ளனர். திருக்கோயிலை மையமாகக் கொண்டுதான் நமது வாழ்க்கை முறையும், வளமும் சிறக்கும். இவையெல்லாம் இடைப்பட்ட காலத்தில் மறந்து நிற்பதனால், பல கோயில்கள் பேணுவார் இன்றி வெட்ட வெளியிலும், ஏரி ஓரங்களிலும், சிவலிங்கத் திருமேனிகள் மழையிலும் வெயிலிலும் பழுதடைந்து வந்துள்ளன. பழுதடைந்த ஆலயங்களை திருப்பணி செய்து எம் மரபு மாறாமல் காத்து மீண்டும் புதுக்க வேண்டும். இது ஒவ்வொரு சைவத்தவனினதும் கடமை. "ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பில் தானே" 19 நாள் பூசைகள், திருவிழாக்கள் முதலியன எந்தவித முட்டுப்பாடுமின்றி தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும். எமது திருக்கோயில்களில் பன்னிரு திருமுறைகள் ஓயாது ஒலித்தல் வேண்டும். ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைதவறி நடப்பின், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப் போகும், அரசருக்கு கேடு உண்டாகும். ஆகவே, எமது கோயில்களை பாதுகாப்பது எம்முடைய G கடமை. (4) மடம்படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனதை தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால் கடந்தவன் இருப்பத கருப்பறிய லூரே. (5) ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய நிருத்தன் அவன் நீதஅவன் நித்தன் நெறிஆய விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதும் கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே. (6) விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும் கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே. சைவ சித்தாந்தம் எதை சொல்கிறதென்றால், நீங்கள் எதை செய்கிறீர்களோ, அவையே உங்களை நோக்கி வரும். நேற்று என்ன செய்திறீர்களோ, அது இன்று கிடைத்திருக்கிறது. இன்று செய்வது நாளை நிச்சயம் வரும். நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, விண்ணைத்தொடும் அளவிற்கு கோபுரம் அமைத்து, கற்கோயில்கள் அமைத்து, பாதுகாத்து வந்தனர். எமது பண்பாட்டையும் மொழியையும் மீட்டெடுக்கும் பொருட்டு, சிதலமடைந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் சிவப்பணி செய்து, திருவருள் கூட்ட அரன்பணி அறக்கட்டளை உருவானது. ஊராரையும் ஊக்குவித்து, உடையவர் திருக்கோயில் மேம்பட வழி வகுப்பதே "அரன்பணி அறக்கட்டளை"யின் நோக்கமாகும். சிவ பணியில் நாமும் பங்களித்து, பிறவிப்பிணி நீங்கி, திருவடிப்பேறு பெறுவோம்! சிவாய நம. இத்திருப்பணியில் நீங்களும் இணைத்துகொண்டு ஈசனுக்கு கோயில் அமைக்க விரும்பின் தொடர்பு கொள்ளவேண்டிய விபரம். (ஒரு அடியாரிடம் ரூபா 100.00 மட்டுமே) ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 அரன்பணி அறக்கட்டளை +91- 81 22 33 89 89 aranpanitrust@gmail.com (8) வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே. (9) பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்து ஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே. ஈழத்து சித்தர்கள்... (06ஆம் பக்கத் தொடர்ச்சி) அப்பெருமகனார் டிக்கட்டை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். யாழ்ப்பாணத் திலிருந்து சென்னை செல்வதற்கு என் பெயரிலும், அப்பணியாளர் பெயரிலும் இரண்டு டிக்கட்டுகள் இருந்தன. ஒன்றும் புரியாமல் திகைக்கும் என்னைப் பார்த்து பின்வருமாறு பேசினார். "அ. ச. ஐயா! இங்கு செய்த சோதனையி லேயே தாங்கள் எழுதிக் காட்டியது உண்மை இருத்திரகோசுரர் திருக்கோயில் திருப்பணிகள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கு இதுவரை மருத்துவ உலகம் ஒன்றும் செய்யமுடியவில்லை. கோடிக்கு ஒருவருக்கு இது வரலாம். வந்து விட்டால்! அதுதான் உங்களிடம் சொல்லாமல் உங்களை சென் னைக்கு அனுப்ப முடிவு செய்தேன். பேச முடியாத தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஆதலால் இந்த அன்பரையும் உங்களோடு அனுப்ப முடிவு செய்தேன். காரில் உங்களை ஏற்றுகின்றவரை எனக்கும் சுவாமிகளின் நினைவுவரவில்லை. எப்படி உங்களை ஊருக்கனுப்புவது என்ற எண்ணம்தான் என் (10) அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர் சொற்றம் அறியாவதர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்று என இருப்பது கருப்பறிய லூரே. திருக்கடைக் காப்பு நலம்தரு புனல்புகலி ஞான சம்பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேய கடவு(ள்) ளைப் பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று வலம்தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே. திருக்கருப்பறியலூர் செல்லுங்கள் : உங்களின் அல்லது பிள்ளைகளின் கல்வி மேலோங்கப் பெற்றவர்கள், இயலுமாயின் திருக்கருப்பறியலூர் சென்று, குற்றம் பொறுத்தநாதர் மற்றும் கோல்வளைநாயகி அம்மனை வழிபட்டு, வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல பரம்பொருளின் திருவருள் கைகூடட்டும். மனத்தில் மேலோங்கி நின்றது. தாங்கள் வண்டியில் ஏறிய பிறகு வண்டிக் கதவைத் தொட்டுக் கொண்டு, 'நீங்கள் சென்று வாருங்கள்' என்று விடை கொடுக்க முயலும்போதுதான் சுவாமிகளின் எண்ணம் திடீரென்று மனத்தில் தோன்றிற்று. நாற்பது வருடங்களுக்குமேல் காது,மூக்கு மற்றும் தொண்டை நிபுண மருத்துவராக கொழும்பில் பணி செய்த எனக்கு அந்த விநாடி ஓர் எண்ணம் தோன்றிற்று. மருத்துவ உலகம் உதவ முடியாத தங்களுக்கு இறைவனின் அருள் ஒன்றுதான் உதவமுடியும். அப்படியா னால் அந்த அருளை வழங்கக் கூடிய இறைநேசர் சுவாமிகள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதனாற்தான் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை என்று தெரிந்திருந்தும் தங்களைப் போகுமாறு பணித்தேன். சுவாமிகளே என் மனத்தில் அந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இத்தகைய அற்புதங்கள் பலவற்றை பிறர் அறியாமல் ஒரு சிலருக்கு சுவாமிகள் செய்கிறார்கள் என்பதை தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, என்னை அங்கேயே தங்கி மதிய உணவு உட்கொண்ட பிறகு போகலாம் என்றும் பணித்தார்கள். அன்று மாலை வழக்கம்போல் பேசினேன். பின்னர் சுவாமிகளிடம் சென்று அருள் பெற்றேன். ஏனைய ஒன்பது நாட்களும் இதே முறையில் சுவாமிகளிடம் சென்று வணங்கி வந்தேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் கம்பனைப் பற்றி “இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்" என்ற நூலையும், "நாடும் மன்னனும்” என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தேன். அதன் பிறகு ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளேன். என்றாலும் சுவாமிகளின் வாக்குப் பொய்க்கவில்லை. இந்நூல்களில் முக்கால் பங்கிற்கு மேல் கம்பனையும் சேக்கிழாரையும் பற்றிய நூல் களே ஆகும். இவற்றோடு இல்லாமல், எஸ். ராஜம் அவர்கள் வெளியிட்ட கம்பராமாயண மூலத்திற்கு ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தேன். அடுத்து சென்னைக் கம்பன் கழகம் வெளியிட்ட “கம்ப இராமாயணம்” பதிப்பிற்கு பல்கலைச் செல்வர் வைத்தியர். தெ.பொ. மீ அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி னேன். சென்ற நான்காண்டுகளாகக் கோவைக் கம்பன் கழகம் வெளியிடும் இராமாயண நூலுக்கும் முதன்மைப் பணிப்பாசிரியனாக இருந்து வருகின்றேன். தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்த வி. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை அழைத்து சேக்கிழாரைப் பற்றிய விரிவான நூலொன்றை எழுதுமாறு பணித்தார்கள். மூன்று ஆண்டுகள் பல்கலைக் கழகத்தின் ஏற்புப் பணியாக "பெரியபுராணம் ஓர் ஆய்வு” என்ற பெரியதொரு நூலை எழுதி முடித்தேன். திருச்சிற்றம்பலம் ஆக்கம் - பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தொகுப்பு - சிவத்திரு. வடிவேலு கங்காளன்
தென்னாடு கல்வியில் சிறந்து விளங்க கல்வியில் மேலோங்க ஓதவேண்டிய திருக்கருப்பறியலூர் திருப்பதிகம் ( 7 ) ஆதிஅடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதிஒளி நல்புகை வளர்க்குவடுபுக்குத் தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறிய லூரே . கல்வியில் சிறந்து விளங்க கல்வி மேலோங்க திருக்கருப்பறியலூரில் உள்ள கோல்வளைநாயகி அம்பாளுடனுறை குற்றம் பொறுத்தநாதப் பெருமானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை ( பதிகம் 2-31 திருக்கருப்பறியலூர் ) சுற்றமொடு பற்றுஅவை என்ற பதிகத்தினை காலை மாலை இருவேளையும் திருக்கருப்பறியலூர் அப்பனின் திருவடியை நீள நினைந்து உளமுருகி மெய்யன்போடு பாடுவது வினைகளை நீக்கி கல்வியில் மேன்மையைத் தரும் . உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும் . இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற்றோரோ உறவினர்களோ பாடுதலும் பலன்தரும் . தெ 08 இறைவன் : குற்றம் பொறுத்தநாதர் இறைவி பெயர் : கோல்வளைநாயகி பண் : இந்தளம் ( 2-31 ) இராகம் : நாதநாமக்கிரியை திருச்சிற்றம்பலம் ( 1 ) சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக் குற்றம்இல் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே . ( 2 ) வண்டு அணைசெய் கொன்றை அது வார்சடைகள் மேலே கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால் கண்டவன் இருப்பது கருப்பறி லூரே . ( 3 ) வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப் போதினொடு போதுமலர் கொண்டு புனைக்கின்ற நாதன்என நாள்இருள்முன் ஆடுகுழை தாழும் காதவன் இருப்பது கருப்பறிய லூரே . அரன்பணி எனும் அரும்பணியில் ... ( 07 ஆம் பக்கத் தொடர்ச்சி ) யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க் கின்னுரை தானே . எனும் திருமூலர் வாக்கிக்கிணங்க உண்ணப்புகும் பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும் பசுவிற்கு வாயுறை புல் குடுத்தலும் வறியர்க்குச் சிறிது சோறிடுதலும் மற்றவரிடம் இன்சொல் பகர்தலும் எல்லார்க்கும் இயல்வனவே ! இதுவே தமிழரின் பண்பாடு . தமிழரின் பண்பாடும் மொழியும் ஆலயம் சார்ந்தே இருக்கின்றது . எம் பெருமக்கள் ஆலயம் சார்ந்து இரு என்றும் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர் . திருக்கோயிலை மையமாகக் கொண்டுதான் நமது வாழ்க்கை முறையும் வளமும் சிறக்கும் . இவையெல்லாம் இடைப்பட்ட காலத்தில் மறந்து நிற்பதனால் பல கோயில்கள் பேணுவார் இன்றி வெட்ட வெளியிலும் ஏரி ஓரங்களிலும் சிவலிங்கத் திருமேனிகள் மழையிலும் வெயிலிலும் பழுதடைந்து வந்துள்ளன . பழுதடைந்த ஆலயங்களை திருப்பணி செய்து எம் மரபு மாறாமல் காத்து மீண்டும் புதுக்க வேண்டும் . இது ஒவ்வொரு சைவத்தவனினதும் கடமை . ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பில் தானே 19 நாள் பூசைகள் திருவிழாக்கள் முதலியன எந்தவித முட்டுப்பாடுமின்றி தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும் . எமது திருக்கோயில்களில் பன்னிரு திருமுறைகள் ஓயாது ஒலித்தல் வேண்டும் . ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைதவறி நடப்பின் நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி மழையும் பொய்த்துப் போகும் அரசருக்கு கேடு உண்டாகும் . ஆகவே எமது கோயில்களை பாதுகாப்பது எம்முடைய G கடமை . ( 4 ) மடம்படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனதை தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால் கடந்தவன் இருப்பத கருப்பறிய லூரே . ( 5 ) ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய நிருத்தன் அவன் நீதஅவன் நித்தன் நெறிஆய விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதும் கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே . ( 6 ) விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும் கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே . சைவ சித்தாந்தம் எதை சொல்கிறதென்றால் நீங்கள் எதை செய்கிறீர்களோ அவையே உங்களை நோக்கி வரும் . நேற்று என்ன செய்திறீர்களோ அது இன்று கிடைத்திருக்கிறது . இன்று செய்வது நாளை நிச்சயம் வரும் . நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விண்ணைத்தொடும் அளவிற்கு கோபுரம் அமைத்து கற்கோயில்கள் அமைத்து பாதுகாத்து வந்தனர் . எமது பண்பாட்டையும் மொழியையும் மீட்டெடுக்கும் பொருட்டு சிதலமடைந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் சிவப்பணி செய்து திருவருள் கூட்ட அரன்பணி அறக்கட்டளை உருவானது . ஊராரையும் ஊக்குவித்து உடையவர் திருக்கோயில் மேம்பட வழி வகுப்பதே அரன்பணி அறக்கட்டளை யின் நோக்கமாகும் . சிவ பணியில் நாமும் பங்களித்து பிறவிப்பிணி நீங்கி திருவடிப்பேறு பெறுவோம் ! சிவாய நம . இத்திருப்பணியில் நீங்களும் இணைத்துகொண்டு ஈசனுக்கு கோயில் அமைக்க விரும்பின் தொடர்பு கொள்ளவேண்டிய விபரம் . ( ஒரு அடியாரிடம் ரூபா 100.00 மட்டுமே ) ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 அரன்பணி அறக்கட்டளை + 91- 81 22 33 89 89 aranpanitrust@gmail.com ( 8 ) வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே . ( 9 ) பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்து ஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே . ஈழத்து சித்தர்கள் ... ( 06 ஆம் பக்கத் தொடர்ச்சி ) அப்பெருமகனார் டிக்கட்டை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார் . யாழ்ப்பாணத் திலிருந்து சென்னை செல்வதற்கு என் பெயரிலும் அப்பணியாளர் பெயரிலும் இரண்டு டிக்கட்டுகள் இருந்தன . ஒன்றும் புரியாமல் திகைக்கும் என்னைப் பார்த்து பின்வருமாறு பேசினார் . . . ஐயா ! இங்கு செய்த சோதனையி லேயே தாங்கள் எழுதிக் காட்டியது உண்மை இருத்திரகோசுரர் திருக்கோயில் திருப்பணிகள் என்பதைத் தெரிந்து கொண்டேன் . இதற்கு இதுவரை மருத்துவ உலகம் ஒன்றும் செய்யமுடியவில்லை . கோடிக்கு ஒருவருக்கு இது வரலாம் . வந்து விட்டால் ! அதுதான் உங்களிடம் சொல்லாமல் உங்களை சென் னைக்கு அனுப்ப முடிவு செய்தேன் . பேச முடியாத தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஆதலால் இந்த அன்பரையும் உங்களோடு அனுப்ப முடிவு செய்தேன் . காரில் உங்களை ஏற்றுகின்றவரை எனக்கும் சுவாமிகளின் நினைவுவரவில்லை . எப்படி உங்களை ஊருக்கனுப்புவது என்ற எண்ணம்தான் என் ( 10 ) அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர் சொற்றம் அறியாவதர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்று என இருப்பது கருப்பறிய லூரே . திருக்கடைக் காப்பு நலம்தரு புனல்புகலி ஞான சம்பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேய கடவு ( ள் ) ளைப் பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று வலம்தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே . திருக்கருப்பறியலூர் செல்லுங்கள் : உங்களின் அல்லது பிள்ளைகளின் கல்வி மேலோங்கப் பெற்றவர்கள் இயலுமாயின் திருக்கருப்பறியலூர் சென்று குற்றம் பொறுத்தநாதர் மற்றும் கோல்வளைநாயகி அம்மனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல பரம்பொருளின் திருவருள் கைகூடட்டும் . மனத்தில் மேலோங்கி நின்றது . தாங்கள் வண்டியில் ஏறிய பிறகு வண்டிக் கதவைத் தொட்டுக் கொண்டு ' நீங்கள் சென்று வாருங்கள் ' என்று விடை கொடுக்க முயலும்போதுதான் சுவாமிகளின் எண்ணம் திடீரென்று மனத்தில் தோன்றிற்று . நாற்பது வருடங்களுக்குமேல் காது மூக்கு மற்றும் தொண்டை நிபுண மருத்துவராக கொழும்பில் பணி செய்த எனக்கு அந்த விநாடி ஓர் எண்ணம் தோன்றிற்று . மருத்துவ உலகம் உதவ முடியாத தங்களுக்கு இறைவனின் அருள் ஒன்றுதான் உதவமுடியும் . அப்படியா னால் அந்த அருளை வழங்கக் கூடிய இறைநேசர் சுவாமிகள் ஒருவராகத்தான் இருக்க முடியும் . அதனாற்தான் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை என்று தெரிந்திருந்தும் தங்களைப் போகுமாறு பணித்தேன் . சுவாமிகளே என் மனத்தில் அந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும் . இத்தகைய அற்புதங்கள் பலவற்றை பிறர் அறியாமல் ஒரு சிலருக்கு சுவாமிகள் செய்கிறார்கள் என்பதை தழுதழுத்த குரலில் கூறிவிட்டு என்னை அங்கேயே தங்கி மதிய உணவு உட்கொண்ட பிறகு போகலாம் என்றும் பணித்தார்கள் . அன்று மாலை வழக்கம்போல் பேசினேன் . பின்னர் சுவாமிகளிடம் சென்று அருள் பெற்றேன் . ஏனைய ஒன்பது நாட்களும் இதே முறையில் சுவாமிகளிடம் சென்று வணங்கி வந்தேன் . இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் கம்பனைப் பற்றி இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற நூலையும் நாடும் மன்னனும் என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தேன் . அதன் பிறகு ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளேன் . என்றாலும் சுவாமிகளின் வாக்குப் பொய்க்கவில்லை . இந்நூல்களில் முக்கால் பங்கிற்கு மேல் கம்பனையும் சேக்கிழாரையும் பற்றிய நூல் களே ஆகும் . இவற்றோடு இல்லாமல் எஸ் . ராஜம் அவர்கள் வெளியிட்ட கம்பராமாயண மூலத்திற்கு ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தேன் . அடுத்து சென்னைக் கம்பன் கழகம் வெளியிட்ட கம்ப இராமாயணம் பதிப்பிற்கு பல்கலைச் செல்வர் வைத்தியர் . தெ.பொ. மீ அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி னேன் . சென்ற நான்காண்டுகளாகக் கோவைக் கம்பன் கழகம் வெளியிடும் இராமாயண நூலுக்கும் முதன்மைப் பணிப்பாசிரியனாக இருந்து வருகின்றேன் . தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்த வி . . சுப்பிரமணியம் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை அழைத்து சேக்கிழாரைப் பற்றிய விரிவான நூலொன்றை எழுதுமாறு பணித்தார்கள் . மூன்று ஆண்டுகள் பல்கலைக் கழகத்தின் ஏற்புப் பணியாக பெரியபுராணம் ஓர் ஆய்வு என்ற பெரியதொரு நூலை எழுதி முடித்தேன் . திருச்சிற்றம்பலம் ஆக்கம் - பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தொகுப்பு - சிவத்திரு . வடிவேலு கங்காளன்