தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10
கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021
தென்னாடு
சைவத்தின் தலைமைப்பீடமான இலங்கையின் முதலாவது இந்துக் கல்லூரி
(04ஆம் பக்கத் தொடர்ச்சி)
1888
அவருக்குப் பின்னர் 1914-24 காலத்தில் அருணாசலம்
சபாபதி அவர்கள் முகாமையாளராகப் பணியாற்றினார்.
நாகலிங்கம், பசுபதி, சபாபதி, காசிப்பிள்ளை ஆகியோர்
1890இல் பாடசாலையைச் சைவ பரிபாலன சபை
பொறுப்பேற்ற போது இருந்த முகாமைத்துவக் குழுவில்
இருந்தவர்கள். இவர்களுடன் முதலாவது அதிபராகி முக்கிய
பணியாற்றிய செல்லத்துரையையும் இணைத்து இந்த ஐவர்
பெயரிலேயே கல்லூரியின் விளையாட்டு இல்லங்கள் பெயர்
சூட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லையில் வரம் வேண்டிப் பெற்ற பெரியவர்
முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை
யின் மகன் செல்லத்துரை, மற்றும் சின்னத்துரை நாகலிங்கம்,
விசுவலிங்கம் காசிப்பிள்ளை, அருணாசலம் சபாபதி என்று
எல்லாம் சிவபெயர்களாகவே இருக்கின்றமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
1892 முதல் 1909 வரையும் பின்னர், 1914 முதல் 1926
வரையுமாக சுமார் 30 ஆண்டுகள் செல்லத்துரை
பாடசாலையின் அதிபராகப் பணியாற்றினார். 1933 முதல்
1952 வரையான 20 ஆண்டுகள் குமாரசுவாமி அவர்கள்
அதிபராகப் பணியாற்றினார். அவ்வகையில் இவ்விரு
அதிபர்களும் எமது கல்லூரி தனிப்பெருங் கழகமாக வளரப்
பெரும் பங்களிப்புச் செய்தனர். குமாரசுவாமி பாடசாலையின்
அதிபரான முதலாவது பழைய மாணவன் என்பதும்
பெண்களையும் பாடசாலைக்கு இணைத்துப் பின்னர் இந்து
மகளிர் கல்லூரி உருவாகக் காரணமான இருந்தவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது. இவரது பெயரே எம் கல்லூரியின்
பிரதான மண்டபத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.
1902 இல் “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இயக்குனர்
சபை” (Board of Directors of Jaffna Hindu College)
எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு நிர்வாகத்தைப்
பொறுப்பேற்றது. அந்த வருடத்திலேயே, இப்போதும்
பயன்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
(The Jaffna Hindu College) எனும் பெயர் பயன்பாட்டுக்கு
வந்தது.
இந்த இயக்குனர் சபையால் மேலும் பல கிளைப்
பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும். இக்கிளைகளும் இப்போது பெரும்
பாடசாலைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. கொக்குவில்
இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, உரும்பிராய்
இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து
மகளிர் கல்லூரி போன்றவை அத்தகைய பாடசாலைகள்
ஆகும்.
1960 டிசம்பரில் அரசாங்கம் பாடசாலைகளைப்
பொறுப்பேற்ற காலம் வரை இந்த இயக்குனர் சபையே
கல்லூரியை நிர்வகித்தது. அரசாங்கம் பாடசாலையைப்
பொறுப்பேற்றபோது இயக்குனர் சபை ஆரம்பத்தில்
திட்டமிட்ட வகையில், ஆரம்பித்த தேவை மற்றும்
நோக்கங்களுடன் கல்லூரி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்
என இணக்கம் காணப்பட்டது.
1903இல் இந்து இளைஞர் கழகம் தொடங்கப்பட்டது.
1907இல் இலக்கியச் சங்கம் தொடங்கப்பட்டு வாராந்த
PA
கூட்டங்கள் நடைபெறத் தொடங்கியது. 1916இல் சாரணர்
துருப்பு உருவாக்கப்பட்டது. 1943இல் மாணவர் முதல்வர்
சபை தொடங்கப்பட்டது. 1965இல் தமிழ்ப் பேரவையும்,
1975இல் சதுரங்கக் கழகமும் உருவாகின. தமிழ்ச் சங்கம்
1989இல் தொடங்கப்பட்டது. 1981இல் பரியோவான்
முதலுதவிப் படையும், 1989இல் செஞ்சிலுவைச் சங்கமும்
உருவாகின. 1991 இல் இன்ரறக்ற் கழகம், லியோ கழகம்
ஆகியனவும் 1992இல் சேவைக்கழகமும் தொடங்கப்பட்டன.
இத்தகைய கழகங்கள், சங்கங்களில் சேர்ந்து இணைப்
பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள்
கல்வியிலும் தலைமைத்துவத்திலும் பாடசாலைக்கு
வெளியேயும் மிளிர்பவர்களாக உள்ளனர்.
1899இல் துடுப்பாட்டக் கழகமும் (cricket club) 1904இல்
உதைபந்தாட்டக் கழகமும் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில்
பாடசாலைக்கெனத் தனியான மைதானம் இருக்கவில்லை.
காக்கைவெளி போன்ற இடங்களில் விளையாட்டுப்
போட்டிகள் நடந்துள்ளன. குத்தகைக்குப் பெற்று முற்றவெளி
மைதானத்தை மாணவர் பயன்படுத்தி வந்தனர். 1933இல்
இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன.
1938-06-25 அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானம்
சிறிய அளவில் திறக்கப்பட்டது. 1954 இல் இந்து ஆரம்ப
பாடசாலை புதிய இடத்துக்கு நகர்த்தப்பட்ட பின்
அக்காணியையும் இணைத்து மைதானம் விரிவாகியது.
இதன் பின்னர் 1992 முதல் அயற் காணிகளை இணைத்து
மைதானத்தை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2001இல் குமாரசுவாமி மண்டபத்துக்கு அருகே கூடைப்
பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டது.
கல்லூரியின் நூலக வரலாறு 1887இல் தொடங்குகிறது.
05
கொ
1887இல் நாகலிங்கத்தால் விக்ரோறியா வாசிகசாலை எனும்
நூலகம் தொடங்கப்பட்டது. இது 1895இல் கல்லூரிக்கு
மாற்றப்பட்டது. 1910இல் இவ்வாசிகசாலை சைவ பரிபாலன
சபையால் பொறுப்பேற்கப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம்
இந்துக் கல்லூரி வாசிகசாலை ஆனது. 1950இல் முழுநேர
நூலகர் நியமிக்கப்பட்டார். பஞ்சலிங்கம் அதிபர் காலத்தில்
உயர்தர மாணவருக்குத் தனியான நூலகமும் ஏனைய
மாணவர்களுக்கு இரண்டு நூலகங்களும் என நூலகம்
மூன்று பிரிவுகளாக்கப்பட்டது. பின்னர் இளநிலை நூ
லகங்கள் ஒன்றாக்கப்பட்டன. இந்த நூலகம் 2015இல்
ஐக்கிய இராச்சியப் பழைய மாணவர் சங்கத்தினால்
விரிவாக்கப்பட்டுச் சிவராமலிங்கம் நினைவு நூலகமாகத்
திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி தொடங்கப்பட முன்னரே கல்லூரிக்கென
வாங்கப்பட்ட காணியில் வைரவ சூலம் அமைத்து, வழிபாடு
நடைபெற்று வந்தது. 1895 அளவில் ஒரு கொட்டில் அமைத்து
பூசைசெய்யும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டன. 1903இல்
அதிபர் செல்லத்துரையின் முயற்சியால் இந்து இளைஞர்
கழகம் தொடங்கப்பட்டது. 1923 அளவில் சிவஞான
வைரவருக்கென கோயில் அமைக்கப்பட்டது. 1945 இன்
பின்னரான காலத்தில் அக்கோயில் மாற்றப்பட்டு
இன்னோரிடத்தில் கோயில் அமைக்கப்பட்டது. அக்கோயில்
மேற்குநோக்கி அமைந்திருந்தமையால் 1963இல் அது
கிழக்கு நோக்கியதாகத் திருத்தியமைக்கப்பட்டது. பின்னர்
மீண்டும் பழைய இடத்தில் கோயில் அமைக்கும் முயற்சிகள்
எடுக்கப்பட்டு இப்போதுள்ள கோயில் 1989-03-10 அன்று
முதன்முதலில் குடமுழுக்குக் கண்டது. 2018இல் கல்லூ
ரியில் ஞானலிங்கேச்சரர் பீடம், பல அருளாளர்களும்
முழங்கிய மிகவும் பழமை வாய்ந்த பிரார்த்தனை மண்டபத்தின்
முன்னிருக்கும் மேடையில் அமைக்கப்பட்டு, அங்கே தமிழ்க்
கடவுளான சிவன், சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளப்பட்டு
அட்டி வருடம் துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 5ம்
நாள், கழுவாய் வழிபாட்டு நாளான (பிரதோஷம்)
பதின்மும்மைப் பிறைநாள் அன்று திங்கட்கிழமை (22-
10-2018) கடவுள்மங்கல நன்னீராட்டு செய்யப்பட்டு,
பின்னர் தமிழ் பூசை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு
மாணவர்களே தாமாக வழிபடும் பண்பாடு
புதுப்பிக்கப்பட்டது.
பழைய மாணவர் சங்க அனுசரணையில் “Jaffna Hindu
College Calendar, 1910” எனும் ஆண்டுமலர் முதன்முதலாக
1910இல் வெளியானது. கல்லூரியின் ஆரம்ப வரலாறு
தொடர்பான பல தகவல்களை இது கொண்டிருக்கிறது.
1911இல் The Jaffna Hindu College Magazine எனும்
கல்லூரிச் சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. 1937 இல்
இந்து இளைஞன் (Young Hindu) சஞ்சிகை
தொடங்கப்பட்டது. இச்சஞ்சிகையே இப்பொழுதும்
ஆண்டுமலராகத் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
எமது கல்லூரியின் முதலாவது நிரந்தர கட்டிடத்துக்கான
அடிக்கல் 1891இல் நாட்டப்பட்டு 1895இல் திறக்கப்பட்டது.
1903இல் இலங்கையிலும் மலேசியாவிலும் நிதி
திரட்டப்பட்டுக் கட்டிடங்கள் பூர்த்திசெய்யப்பட்டன.
1928இல் புதிய விடுதிக் கட்டிடம் திறக்கப்பட்டது.
(06ஆம் பக்கம் பார்க்க)
கடக
நல்லோரை
ஆடித்
திங்கள்
2021
தென்னாடு
சைவத்தின்
தலைமைப்பீடமான
இலங்கையின்
முதலாவது
இந்துக்
கல்லூரி
(
04
ஆம்
பக்கத்
தொடர்ச்சி
)
1888
அவருக்குப்
பின்னர்
1914-24
காலத்தில்
அருணாசலம்
சபாபதி
அவர்கள்
முகாமையாளராகப்
பணியாற்றினார்
.
நாகலிங்கம்
பசுபதி
சபாபதி
காசிப்பிள்ளை
ஆகியோர்
1890
இல்
பாடசாலையைச்
சைவ
பரிபாலன
சபை
பொறுப்பேற்ற
போது
இருந்த
முகாமைத்துவக்
குழுவில்
இருந்தவர்கள்
.
இவர்களுடன்
முதலாவது
அதிபராகி
முக்கிய
பணியாற்றிய
செல்லத்துரையையும்
இணைத்து
இந்த
ஐவர்
பெயரிலேயே
கல்லூரியின்
விளையாட்டு
இல்லங்கள்
பெயர்
சூட்டப்பட்டன
என்பது
குறிப்பிடத்தக்கது
.
தில்லையில்
வரம்
வேண்டிப்
பெற்ற
பெரியவர்
முத்துக்குமாரர்
சிதம்பரப்பிள்ளை
சிதம்பரப்பிள்ளை
யின்
மகன்
செல்லத்துரை
மற்றும்
சின்னத்துரை
நாகலிங்கம்
விசுவலிங்கம்
காசிப்பிள்ளை
அருணாசலம்
சபாபதி
என்று
எல்லாம்
சிவபெயர்களாகவே
இருக்கின்றமை
இங்கு
குறிப்பிடத்தக்கது
.
1892
முதல்
1909
வரையும்
பின்னர்
1914
முதல்
1926
வரையுமாக
சுமார்
30
ஆண்டுகள்
செல்லத்துரை
பாடசாலையின்
அதிபராகப்
பணியாற்றினார்
.
1933
முதல்
1952
வரையான
20
ஆண்டுகள்
குமாரசுவாமி
அவர்கள்
அதிபராகப்
பணியாற்றினார்
.
அவ்வகையில்
இவ்விரு
அதிபர்களும்
எமது
கல்லூரி
தனிப்பெருங்
கழகமாக
வளரப்
பெரும்
பங்களிப்புச்
செய்தனர்
.
குமாரசுவாமி
பாடசாலையின்
அதிபரான
முதலாவது
பழைய
மாணவன்
என்பதும்
பெண்களையும்
பாடசாலைக்கு
இணைத்துப்
பின்னர்
இந்து
மகளிர்
கல்லூரி
உருவாகக்
காரணமான
இருந்தவர்
என்பதும்
குறிப்பிடத்தக்கது
.
இவரது
பெயரே
எம்
கல்லூரியின்
பிரதான
மண்டபத்துக்குச்
சூட்டப்பட்டுள்ளது
.
1902
இல்
“
யாழ்ப்பாணம்
இந்துக்
கல்லூரியின்
இயக்குனர்
சபை
”
(
Board
of
Directors
of
Jaffna
Hindu
College
)
எனும்
அமைப்பு
உருவாக்கப்பட்டு
நிர்வாகத்தைப்
பொறுப்பேற்றது
.
அந்த
வருடத்திலேயே
இப்போதும்
பயன்பாட்டில்
இருக்கும்
யாழ்ப்பாணம்
இந்துக்
கல்லூரி
(
The
Jaffna
Hindu
College
)
எனும்
பெயர்
பயன்பாட்டுக்கு
வந்தது
.
இந்த
இயக்குனர்
சபையால்
மேலும்
பல
கிளைப்
பாடசாலைகள்
உருவாக்கப்பட்டு
நிர்வகிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்
.
இக்கிளைகளும்
இப்போது
பெரும்
பாடசாலைகளாக
வளர்ச்சியடைந்துள்ளன
.
கொக்குவில்
இந்துக்
கல்லூரி
சாவகச்சேரி
இந்துக்
கல்லூரி
உரும்பிராய்
இந்துக்
கல்லூரி
காரைநகர்
இந்துக்
கல்லூரி
வட்டுக்கோட்டை
இந்துக்
கல்லூரி
யாழ்ப்பாணம்
இந்து
மகளிர்
கல்லூரி
போன்றவை
அத்தகைய
பாடசாலைகள்
ஆகும்
.
1960
டிசம்பரில்
அரசாங்கம்
பாடசாலைகளைப்
பொறுப்பேற்ற
காலம்
வரை
இந்த
இயக்குனர்
சபையே
கல்லூரியை
நிர்வகித்தது
.
அரசாங்கம்
பாடசாலையைப்
பொறுப்பேற்றபோது
இயக்குனர்
சபை
ஆரம்பத்தில்
திட்டமிட்ட
வகையில்
ஆரம்பித்த
தேவை
மற்றும்
நோக்கங்களுடன்
கல்லூரி
தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படும்
என
இணக்கம்
காணப்பட்டது
.
1903
இல்
இந்து
இளைஞர்
கழகம்
தொடங்கப்பட்டது
.
1907
இல்
இலக்கியச்
சங்கம்
தொடங்கப்பட்டு
வாராந்த
PA
கூட்டங்கள்
நடைபெறத்
தொடங்கியது
.
1916
இல்
சாரணர்
துருப்பு
உருவாக்கப்பட்டது
.
1943
இல்
மாணவர்
முதல்வர்
சபை
தொடங்கப்பட்டது
.
1965
இல்
தமிழ்ப்
பேரவையும்
1975
இல்
சதுரங்கக்
கழகமும்
உருவாகின
.
தமிழ்ச்
சங்கம்
1989
இல்
தொடங்கப்பட்டது
.
1981
இல்
பரியோவான்
முதலுதவிப்
படையும்
1989
இல்
செஞ்சிலுவைச்
சங்கமும்
உருவாகின
.
1991
இல்
இன்ரறக்ற்
கழகம்
லியோ
கழகம்
ஆகியனவும்
1992
இல்
சேவைக்கழகமும்
தொடங்கப்பட்டன
.
இத்தகைய
கழகங்கள்
சங்கங்களில்
சேர்ந்து
இணைப்
பாடவிதானச்
செயற்பாடுகளில்
ஈடுபடும்
மாணவர்கள்
கல்வியிலும்
தலைமைத்துவத்திலும்
பாடசாலைக்கு
வெளியேயும்
மிளிர்பவர்களாக
உள்ளனர்
.
1899
இல்
துடுப்பாட்டக்
கழகமும்
(
cricket
club
)
1904
இல்
உதைபந்தாட்டக்
கழகமும்
தொடங்கப்பட்டன
.
ஆரம்பத்தில்
பாடசாலைக்கெனத்
தனியான
மைதானம்
இருக்கவில்லை
.
காக்கைவெளி
போன்ற
இடங்களில்
விளையாட்டுப்
போட்டிகள்
நடந்துள்ளன
.
குத்தகைக்குப்
பெற்று
முற்றவெளி
மைதானத்தை
மாணவர்
பயன்படுத்தி
வந்தனர்
.
1933
இல்
இல்ல
விளையாட்டுப்
போட்டிகள்
தொடங்கப்பட்டன
.
1938-06-25
அன்று
கல்லூரியின்
விளையாட்டு
மைதானம்
சிறிய
அளவில்
திறக்கப்பட்டது
.
1954
இல்
இந்து
ஆரம்ப
பாடசாலை
புதிய
இடத்துக்கு
நகர்த்தப்பட்ட
பின்
அக்காணியையும்
இணைத்து
மைதானம்
விரிவாகியது
.
இதன்
பின்னர்
1992
முதல்
அயற்
காணிகளை
இணைத்து
மைதானத்தை
விரிவாக்கும்
பணிகள்
நடைபெற்று
வருகின்றன
.
2001
இல்
குமாரசுவாமி
மண்டபத்துக்கு
அருகே
கூடைப்
பந்தாட்ட
மைதானம்
அமைக்கப்பட்டது
.
கல்லூரியின்
நூலக
வரலாறு
1887
இல்
தொடங்குகிறது
.
05
கொ
1887
இல்
நாகலிங்கத்தால்
விக்ரோறியா
வாசிகசாலை
எனும்
நூலகம்
தொடங்கப்பட்டது
.
இது
1895
இல்
கல்லூரிக்கு
மாற்றப்பட்டது
.
1910
இல்
இவ்வாசிகசாலை
சைவ
பரிபாலன
சபையால்
பொறுப்பேற்கப்பட்டுப்
பின்னர்
யாழ்ப்பாணம்
இந்துக்
கல்லூரி
வாசிகசாலை
ஆனது
.
1950
இல்
முழுநேர
நூலகர்
நியமிக்கப்பட்டார்
.
பஞ்சலிங்கம்
அதிபர்
காலத்தில்
உயர்தர
மாணவருக்குத்
தனியான
நூலகமும்
ஏனைய
மாணவர்களுக்கு
இரண்டு
நூலகங்களும்
என
நூலகம்
மூன்று
பிரிவுகளாக்கப்பட்டது
.
பின்னர்
இளநிலை
நூ
லகங்கள்
ஒன்றாக்கப்பட்டன
.
இந்த
நூலகம்
2015
இல்
ஐக்கிய
இராச்சியப்
பழைய
மாணவர்
சங்கத்தினால்
விரிவாக்கப்பட்டுச்
சிவராமலிங்கம்
நினைவு
நூலகமாகத்
திறந்து
வைக்கப்பட்டது
.
கல்லூரி
தொடங்கப்பட
முன்னரே
கல்லூரிக்கென
வாங்கப்பட்ட
காணியில்
வைரவ
சூலம்
அமைத்து
வழிபாடு
நடைபெற்று
வந்தது
.
1895
அளவில்
ஒரு
கொட்டில்
அமைத்து
பூசைசெய்யும்
ஒழுங்குகள்
ஏற்படுத்தப்பட்டன
.
1903
இல்
அதிபர்
செல்லத்துரையின்
முயற்சியால்
இந்து
இளைஞர்
கழகம்
தொடங்கப்பட்டது
.
1923
அளவில்
சிவஞான
வைரவருக்கென
கோயில்
அமைக்கப்பட்டது
.
1945
இன்
பின்னரான
காலத்தில்
அக்கோயில்
மாற்றப்பட்டு
இன்னோரிடத்தில்
கோயில்
அமைக்கப்பட்டது
.
அக்கோயில்
மேற்குநோக்கி
அமைந்திருந்தமையால்
1963
இல்
அது
கிழக்கு
நோக்கியதாகத்
திருத்தியமைக்கப்பட்டது
.
பின்னர்
மீண்டும்
பழைய
இடத்தில்
கோயில்
அமைக்கும்
முயற்சிகள்
எடுக்கப்பட்டு
இப்போதுள்ள
கோயில்
1989-03-10
அன்று
முதன்முதலில்
குடமுழுக்குக்
கண்டது
.
2018
இல்
கல்லூ
ரியில்
ஞானலிங்கேச்சரர்
பீடம்
பல
அருளாளர்களும்
முழங்கிய
மிகவும்
பழமை
வாய்ந்த
பிரார்த்தனை
மண்டபத்தின்
முன்னிருக்கும்
மேடையில்
அமைக்கப்பட்டு
அங்கே
தமிழ்க்
கடவுளான
சிவன்
சிவலிங்க
வடிவத்தில்
எழுந்தருளப்பட்டு
அட்டி
வருடம்
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
5
ம்
நாள்
கழுவாய்
வழிபாட்டு
நாளான
(
பிரதோஷம்
)
பதின்மும்மைப்
பிறைநாள்
அன்று
திங்கட்கிழமை
(
22
10-2018
)
கடவுள்மங்கல
நன்னீராட்டு
செய்யப்பட்டு
பின்னர்
தமிழ்
பூசை
முறைகள்
அறிமுகப்படுத்தப்பட்டு
மாணவர்களே
தாமாக
வழிபடும்
பண்பாடு
புதுப்பிக்கப்பட்டது
.
பழைய
மாணவர்
சங்க
அனுசரணையில்
“
Jaffna
Hindu
College
Calendar
1910
”
எனும்
ஆண்டுமலர்
முதன்முதலாக
1910
இல்
வெளியானது
.
கல்லூரியின்
ஆரம்ப
வரலாறு
தொடர்பான
பல
தகவல்களை
இது
கொண்டிருக்கிறது
.
1911
இல்
The
Jaffna
Hindu
College
Magazine
எனும்
கல்லூரிச்
சஞ்சிகையும்
ஆரம்பிக்கப்பட்டது
.
1937
இல்
இந்து
இளைஞன்
(
Young
Hindu
)
சஞ்சிகை
தொடங்கப்பட்டது
.
இச்சஞ்சிகையே
இப்பொழுதும்
ஆண்டுமலராகத்
தொடர்ந்து
வெளியிடப்படுகிறது
.
எமது
கல்லூரியின்
முதலாவது
நிரந்தர
கட்டிடத்துக்கான
அடிக்கல்
1891
இல்
நாட்டப்பட்டு
1895
இல்
திறக்கப்பட்டது
.
1903
இல்
இலங்கையிலும்
மலேசியாவிலும்
நிதி
திரட்டப்பட்டுக்
கட்டிடங்கள்
பூர்த்திசெய்யப்பட்டன
.
1928
இல்
புதிய
விடுதிக்
கட்டிடம்
திறக்கப்பட்டது
.
(
06
ஆம்
பக்கம்
பார்க்க
)