தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 07 ஈழத்து சித்தர்கள் : தவத்திரு அருளம்பலம் சுவாமிகள் ஈழத்து சித்தர் கடையிற் சுவாமிகளின் சித்தர் குருபரம்பரையில் நான்காவது சித்தர் யாழ் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவர் யப்பட்டார். அதைக்கண்டு மனம் வெதும்பி, அங்கு சமாதியாகி ஆறுமுகசுவாமி என அறி செல்வந்தராக இருந்த கே.வி மார்கண்டு என்பவரின் உதவியை பெற்று, பல சைவப் பாடசாலைகளை நிறுவினார். தவத்திரு.அருளம்பலம் சுவாமிகள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வண்பண்ணை சிவலிங்கப் புளியடியில் இராமநாதர், சின்னாச்சிப்பிள்ளை என்ற சைவத்தமிழ் தம்பதியினர் வசித்து வந்தனர். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.” என்ற திருக்குறள் நெறிக்கு ஏற்ப சைவசமயத்தில் நிறைந்த பற்று உள்ளவர்களாகவும், சமய நெறிகளை கடைப்பிடித்தும், சிவபத்தி நிறைந்த அடியார்களை வரவேற்று, அமுது செய்து, மகிழ்வார்கள். இவர்கள் இருவருக்கும் கி.பி 1866ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் (அட்சய வருடம்) 2ம் திகதி கடைசிப்பிள்ளை யாக அருளம்பலம் அவர்கள் பிறந்தார். இன்றைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருக்கும் இடத்தில் அந்நாளில் யாழ்ப்பாண அகேடமி என்ற பெயரில் ஒரு பாடசாலை இருந்தது. இயற்கை விவேகமும், முயற்சித்திறனும் உடையவரான அருளம்பலம் விரைவில் கற்றுத்தேறி, சென்னை மெற்றிக் குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து, இளம் வயதிலேயே அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். அந்நாளில் வைரமுத்து செட்டியார் என்று ஒருவர் இருந்தார். இவர் இந்தியாவிற்கு யாத்திரை செல்லும் வழக்கமுடையவர். சிறிது காலத்தின் பின், செட்டியார் வீட்டிற்கு ஒரு சுவாமிகள் வந்திருந்தார். அவர் தான் கடையிற்சுவாமி என்றும், யாழ் மண்ணில் கால்வைத்த முதல் செய்தி என்றும், அறியப்பட்டது. கடையிற்சுவாமிகள் உணவு அருந்தும் இடங்களில் ஒன்று, இராமநாதர், சின்னாச்சிப்பிள்ளை இல்லம். அங்கே அருளம்பலம் 3 வயது பாலகனாய் இருந்தார். சின்னாச்சிப்பிள்ளை அமுது படைக்கும் போது, அருளம்பலவர் கடையிற்சுவாமிகளின் அருகில் இருப்பார். அருளம்பலத்தின் முதுகைத் தடவிக்கொண்டே, சோறு ஊட்டி தானும் உண்பர். சிறிது காலத்தின் பின், அருளம்பலம் அவர்கள் யாழ்ப்பாணக் கச்சேரியில் பிரதம லிகிதராக மாகாண பதிவுப்பகுதியில் உத்தியோகம் பார்த்து வந்தார். இக்காலத்தில் கடையிற்சுவாமிகளின் சீடரான குழந்தைவேல் சுவாமிகளின் பால் ஈர்க்கப்பட்டார். பின் மட்டக்களப்பில் கச்சேரியில் காணிப்பதிவு காரராய் மாற்றம் பெற்று சேவையாற்றினார். இவருக்கு மேலதிகாரியாக சேர்.பொன் அருணாசலம் இருந்தார். அக்காலத்தில் மட்டக்களப்பில் சைவமும், தமிழும் கல்வி நிலையில் குறைவாக இருந்த படியால், மட்டக்களப்பில் ‘சுத்தாத்வைத் அச்சு இயந்திர சாலை' என்னும் பெயரில் ஒரு அச்சு கூடம் ஒன்றை நிறுவினார். தனது குரு குழந்தைவேல் சுவாமிகளின் மேல் பத்தியோடு பாடிய அகராதிச் சரணமாலை எனும் நூ ல் 1920இல் இந்த அச்சுக்கூடத்தில் பதிக்கப்பெற்றுள்ளது. கொழும்பு தேசிய நூலகத்தில் இன்றும் இந்த நூல் உள்ளது. தான் கண்ட கனவில் பிரகாரம் மட்டக்களப்பில் ஆரையம்பதிக்கு வந்து, ஊர்ப்பிரமுகர்களைச் சந்தித்து, குறித்த இடத்தை தோண்டிப்பார்த்த போது, ஒரு சித்தரின் சமாதி பிள்ளையார் உருவில் இருந்ததை கண்டு, பத்தியோடு ஒரு பந்தல் அமைத்து, அதில் பூசகர் ஆகவும் இருந்துள்ளார். 1916 ஆம் வருடம் உருவான இந்தக்கோயில் சமாதடிப்பிள்ளையார் கோயில் என இன்றும் உள்ளது. தனது 49 ஆவது வயதில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஒரு முறை குழந்தை வேல் சுவாமிகளும், அருளம்பலம் அவர்களும், வேறு சில அடியார்களுடன் மண்டைதீவு பக்கமிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அருளம்பலம் அவர்களின் நண்பன் ஆறுமுகம் புகையிலைச் சிப்பங்களை ஏற்றிக்கோண்டு, வந்ததை கண்டார்கள். கடையிற்சுவாமி ஒடுங்கிக்கொண்டு இருப்பதான தகவலை அறிவித்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டார்கள். நீராவியடியில் இரு கால்களையும் இரு கைகளையும் தியான கோல வடிவில் மடியில் வைத்தவாறு நிலத்தில் எதுவித ஆதாரமும் இன்றி சமாதியாகி இருந்தார் கள். சமாதிக்காரியங்களை ஆறுமுகம் அவர்களும் அருளம்பலம்அவர்களும், குழந்தைவேல் சுவாமிகளும் வேறு பல சீடர்களும் நிறைவேற்றினார்கள். பின்னாளில் அருளம்பலம் அவர்களின் நண்பன் ஆறுமுகம் அவர்கள் இந்தியாவில் வில்லிபுத்தூரில் அருளம்பலம் அவர்கள், சுத்ததர்ம மண்டலம் எனும் அமைப்பில் சேர்ந்து இலங்கைக்கான பிரதிநிதியாக இருந்துள்ளார் கள். இவரின் திரு உருவப்படம் அவர்களால் தான் எடுக்கப்பட்டது. கனடாவின் மொன்றியல் நகரிலும், தென் அமெரிக்காவின் சிலியிலும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவியரான சிவத்திரு. சிதம்பரம்பிள்ளை ஆரம்பத்தில் யாழ்ப்பாண மத்திய கல்லூ ரியில் (அகேடமி) தலைமை ஆசியராக இருந்துள்ளார். அவரிடம் மாணாக்கராக இருந்தவர்கள் தான் பின்னாளில் யாழ்ப்பா ணம் இந்துக் கல்லூரி ஆரம்பகால உறுப்பினர் களாகவும் இருந்துள்ளார்கள். அருளம்பல சுவாமிகள் ஆரம்பகாலக் கல்வியை ஆறு முகநாவலரின் சைவப்பிரகாச வித்தியாசாலை யிலும் உயர் கல்வியை யாழ்ப்பாண அகேடமியிலும் கற்றுள்ளார்கள். இந்தியாவில் தமிழ் நாட்டில் அடையார் என்னும் ஊரின் நூலகத்திலிருந்து "தியோசொவி” என்ற பத்திரிகையைத் தருவித்து, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் நூலகத்திற்கு அளித்துள்ளார். அக்காலத்தில் ‘இந்திரா சபா' என்ற பெயர் கொண்ட நாடகக்குழு, நாடகங்கள் நடாத்தி வந்தது. அதன் ஒரு நாள் வருமான பணத்தை இந்துக் கல்லூரிக்கு கிடைக்கும் படி செய்தார்கள். இதன் மூலம் ரூபா 225 கிடைத்தது. கல்லூரி நிர்வாக சபைக்கு சுவாமிகளின் அண்னர்களான ஆராட்சியார் இ.பொன்னம்பலம்,இ. கந்தையா முதலியார் போன்றவர்களும் பணம் சேகரித்து அளித்துள்ளார்கள். இந்நிகழ்வு 1899 ஆம் வருடம் முதல் நடந்து வந்தது. சொல்லும் பொருளும் படிப்போர் உள்ளத்திலே உறுத்திச் செல்லுமாறு சொல்லும் தன்மை நாவலர் பெருமானுக்கு கைவந்த ஒன்று. இது அருளம்பலம் சுவாமிகளுக்கும் கைவந்துள்ளமை அவர் எழுதிய வசன நடையில் அவதானிக்கலாம். சுவாமிகள் பிறந்த வீடு வண்பண்ணை தெ குழந்தைவேல் சுவாமிகளின் பேரில் பாடிய அகராதிச் சரணமாலை எனும் நூலில் முப்பது பாடல்கள் உள்ளன. தியான அனுபவத்தில் தாம் பெற்றுள்ள தத்துவக் காட்சி உண்மை களையும், இறைவனுடைய அருள் நடன மாகிய நடராசர் நடனத்தை ஐந்து எழுதி யுண்மையில் அடக்கிகாட்டுவதும், ஆன்மத் தரிசனமும், சிவதரிசனமும் நிழல்தற்கிடமாகிய அத்துவித அனுபவ நிலையில் ஆன்மா நிற்குமாறு உணர்த்தி, தான் பெற்றிருந்த சுத்தாத்துவ சித்தாந்த தெளிவை நன்கு புலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்ப கால நிர்வாக சபையின் உறுப்பி னராகவும், இந்துக் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தின் அடிக்கல் வைத்தவர்களில் அருளம்பலம் சுவாமிகளும் ஒருவர். 1895 ஆம் வருடம் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், இந்து சாசனம் பத்திரிகைக்காகவும் பெரிதும் உழைத்தார். கடையிற் சுவாமிகள், குழந்தைகள்வேல் சுவாமிகள், அருளம்பல சுவாமிகள் மூவரும் பெரும்பாலும் சஞ்சாரம் செய்த இடம், வண்பண்ணை ஆகும். இப்பிரதேசத்தில் சிவன் கோயிலடியில் இருந்து சிவலிங்கப் புளியடிவரை உள்ள பகுதியிற் சைவவாழ் விற்கான நற்பண்புகள் இன்றும் திகழக் காண்கின்றோம். நாவலர் பள்ளிக்கூடம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, நாவலர் மணிமண்டபம், சிவத்தொண்டன் நிலையம் என்ற நான்கு சிறந்த சைவ அமைப்புக்கள் உள்ளன. நாவலர் பெருமானின் அச்சு இயந்திர சாலையும் இவ்விடத்தில் தான் இருந்தது. ஆங்கில அறிவும், செந்தமிழ் ஞானமும், கூர்ந்த மதியும், விடா முயற்சியும், சமயா பிமானமும் உடையவரான அருளம்பலம் சுவாமிகள் 1925ம் வருடம் (குரோதன்) ஆனி மாதம் 28ம் நாள் அந்த நாளில், காலை 11 மணியளவில் தமது இல்லத்தில் தேகவியோக மானார். இறைவன் அடிசேரும் போது அவருக்கு வயது 59. கீரிமலையில் சுவாமிகளின் தேகம் அதற்கென முற்கூட்டியே அமைக்கப் பட்ட இடத்தில் சமாதி இருத்தப்பட்டது. குழந்தைவேல் சுவாமிகளின் ஞானவாரிசான அருளம்பலம் சுவாமிகள், அவரின் சமாதிக் கோயிலின்கிழக்குப்புறமாக வைக்கப்பட்டார். அருளம்பலம் சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான நவாலியூர் இ.வைத்திங்கம் அவர்களால் பாடப்பெற்ற பாடல்களில் ஒன்று, (08ஆம் பக்கம் பார்க்க)
தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 07 ஈழத்து சித்தர்கள் : தவத்திரு அருளம்பலம் சுவாமிகள் ஈழத்து சித்தர் கடையிற் சுவாமிகளின் சித்தர் குருபரம்பரையில் நான்காவது சித்தர் யாழ் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவர் யப்பட்டார் . அதைக்கண்டு மனம் வெதும்பி அங்கு சமாதியாகி ஆறுமுகசுவாமி என அறி செல்வந்தராக இருந்த கே.வி மார்கண்டு என்பவரின் உதவியை பெற்று பல சைவப் பாடசாலைகளை நிறுவினார் . தவத்திரு.அருளம்பலம் சுவாமிகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வண்பண்ணை சிவலிங்கப் புளியடியில் இராமநாதர் சின்னாச்சிப்பிள்ளை என்ற சைவத்தமிழ் தம்பதியினர் வசித்து வந்தனர் . வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் . என்ற திருக்குறள் நெறிக்கு ஏற்ப சைவசமயத்தில் நிறைந்த பற்று உள்ளவர்களாகவும் சமய நெறிகளை கடைப்பிடித்தும் சிவபத்தி நிறைந்த அடியார்களை வரவேற்று அமுது செய்து மகிழ்வார்கள் . இவர்கள் இருவருக்கும் கி.பி 1866 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ( அட்சய வருடம் ) 2 ம் திகதி கடைசிப்பிள்ளை யாக அருளம்பலம் அவர்கள் பிறந்தார் . இன்றைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருக்கும் இடத்தில் அந்நாளில் யாழ்ப்பாண அகேடமி என்ற பெயரில் ஒரு பாடசாலை இருந்தது . இயற்கை விவேகமும் முயற்சித்திறனும் உடையவரான அருளம்பலம் விரைவில் கற்றுத்தேறி சென்னை மெற்றிக் குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து இளம் வயதிலேயே அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார் . அந்நாளில் வைரமுத்து செட்டியார் என்று ஒருவர் இருந்தார் . இவர் இந்தியாவிற்கு யாத்திரை செல்லும் வழக்கமுடையவர் . சிறிது காலத்தின் பின் செட்டியார் வீட்டிற்கு ஒரு சுவாமிகள் வந்திருந்தார் . அவர் தான் கடையிற்சுவாமி என்றும் யாழ் மண்ணில் கால்வைத்த முதல் செய்தி என்றும் அறியப்பட்டது . கடையிற்சுவாமிகள் உணவு அருந்தும் இடங்களில் ஒன்று இராமநாதர் சின்னாச்சிப்பிள்ளை இல்லம் . அங்கே அருளம்பலம் 3 வயது பாலகனாய் இருந்தார் . சின்னாச்சிப்பிள்ளை அமுது படைக்கும் போது அருளம்பலவர் கடையிற்சுவாமிகளின் அருகில் இருப்பார் . அருளம்பலத்தின் முதுகைத் தடவிக்கொண்டே சோறு ஊட்டி தானும் உண்பர் . சிறிது காலத்தின் பின் அருளம்பலம் அவர்கள் யாழ்ப்பாணக் கச்சேரியில் பிரதம லிகிதராக மாகாண பதிவுப்பகுதியில் உத்தியோகம் பார்த்து வந்தார் . இக்காலத்தில் கடையிற்சுவாமிகளின் சீடரான குழந்தைவேல் சுவாமிகளின் பால் ஈர்க்கப்பட்டார் . பின் மட்டக்களப்பில் கச்சேரியில் காணிப்பதிவு காரராய் மாற்றம் பெற்று சேவையாற்றினார் . இவருக்கு மேலதிகாரியாக சேர்.பொன் அருணாசலம் இருந்தார் . அக்காலத்தில் மட்டக்களப்பில் சைவமும் தமிழும் கல்வி நிலையில் குறைவாக இருந்த படியால் மட்டக்களப்பில் சுத்தாத்வைத் அச்சு இயந்திர சாலை ' என்னும் பெயரில் ஒரு அச்சு கூடம் ஒன்றை நிறுவினார் . தனது குரு குழந்தைவேல் சுவாமிகளின் மேல் பத்தியோடு பாடிய அகராதிச் சரணமாலை எனும் நூ ல் 1920 இல் இந்த அச்சுக்கூடத்தில் பதிக்கப்பெற்றுள்ளது . கொழும்பு தேசிய நூலகத்தில் இன்றும் இந்த நூல் உள்ளது . தான் கண்ட கனவில் பிரகாரம் மட்டக்களப்பில் ஆரையம்பதிக்கு வந்து ஊர்ப்பிரமுகர்களைச் சந்தித்து குறித்த இடத்தை தோண்டிப்பார்த்த போது ஒரு சித்தரின் சமாதி பிள்ளையார் உருவில் இருந்ததை கண்டு பத்தியோடு ஒரு பந்தல் அமைத்து அதில் பூசகர் ஆகவும் இருந்துள்ளார் . 1916 ஆம் வருடம் உருவான இந்தக்கோயில் சமாதடிப்பிள்ளையார் கோயில் என இன்றும் உள்ளது . தனது 49 ஆவது வயதில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார் . ஒரு முறை குழந்தை வேல் சுவாமிகளும் அருளம்பலம் அவர்களும் வேறு சில அடியார்களுடன் மண்டைதீவு பக்கமிருந்து வந்து கொண்டிருந்தார்கள் . அப்போது அருளம்பலம் அவர்களின் நண்பன் ஆறுமுகம் புகையிலைச் சிப்பங்களை ஏற்றிக்கோண்டு வந்ததை கண்டார்கள் . கடையிற்சுவாமி ஒடுங்கிக்கொண்டு இருப்பதான தகவலை அறிவித்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டார்கள் . நீராவியடியில் இரு கால்களையும் இரு கைகளையும் தியான கோல வடிவில் மடியில் வைத்தவாறு நிலத்தில் எதுவித ஆதாரமும் இன்றி சமாதியாகி இருந்தார் கள் . சமாதிக்காரியங்களை ஆறுமுகம் அவர்களும் அருளம்பலம்அவர்களும் குழந்தைவேல் சுவாமிகளும் வேறு பல சீடர்களும் நிறைவேற்றினார்கள் . பின்னாளில் அருளம்பலம் அவர்களின் நண்பன் ஆறுமுகம் அவர்கள் இந்தியாவில் வில்லிபுத்தூரில் அருளம்பலம் அவர்கள் சுத்ததர்ம மண்டலம் எனும் அமைப்பில் சேர்ந்து இலங்கைக்கான பிரதிநிதியாக இருந்துள்ளார் கள் . இவரின் திரு உருவப்படம் அவர்களால் தான் எடுக்கப்பட்டது . கனடாவின் மொன்றியல் நகரிலும் தென் அமெரிக்காவின் சிலியிலும் இன்றும் உள்ளது . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவியரான சிவத்திரு . சிதம்பரம்பிள்ளை ஆரம்பத்தில் யாழ்ப்பாண மத்திய கல்லூ ரியில் ( அகேடமி ) தலைமை ஆசியராக இருந்துள்ளார் . அவரிடம் மாணாக்கராக இருந்தவர்கள் தான் பின்னாளில் யாழ்ப்பா ணம் இந்துக் கல்லூரி ஆரம்பகால உறுப்பினர் களாகவும் இருந்துள்ளார்கள் . அருளம்பல சுவாமிகள் ஆரம்பகாலக் கல்வியை ஆறு முகநாவலரின் சைவப்பிரகாச வித்தியாசாலை யிலும் உயர் கல்வியை யாழ்ப்பாண அகேடமியிலும் கற்றுள்ளார்கள் . இந்தியாவில் தமிழ் நாட்டில் அடையார் என்னும் ஊரின் நூலகத்திலிருந்து தியோசொவி என்ற பத்திரிகையைத் தருவித்து யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் நூலகத்திற்கு அளித்துள்ளார் . அக்காலத்தில் இந்திரா சபா ' என்ற பெயர் கொண்ட நாடகக்குழு நாடகங்கள் நடாத்தி வந்தது . அதன் ஒரு நாள் வருமான பணத்தை இந்துக் கல்லூரிக்கு கிடைக்கும் படி செய்தார்கள் . இதன் மூலம் ரூபா 225 கிடைத்தது . கல்லூரி நிர்வாக சபைக்கு சுவாமிகளின் அண்னர்களான ஆராட்சியார் இ.பொன்னம்பலம் . கந்தையா முதலியார் போன்றவர்களும் பணம் சேகரித்து அளித்துள்ளார்கள் . இந்நிகழ்வு 1899 ஆம் வருடம் முதல் நடந்து வந்தது . சொல்லும் பொருளும் படிப்போர் உள்ளத்திலே உறுத்திச் செல்லுமாறு சொல்லும் தன்மை நாவலர் பெருமானுக்கு கைவந்த ஒன்று . இது அருளம்பலம் சுவாமிகளுக்கும் கைவந்துள்ளமை அவர் எழுதிய வசன நடையில் அவதானிக்கலாம் . சுவாமிகள் பிறந்த வீடு வண்பண்ணை தெ குழந்தைவேல் சுவாமிகளின் பேரில் பாடிய அகராதிச் சரணமாலை எனும் நூலில் முப்பது பாடல்கள் உள்ளன . தியான அனுபவத்தில் தாம் பெற்றுள்ள தத்துவக் காட்சி உண்மை களையும் இறைவனுடைய அருள் நடன மாகிய நடராசர் நடனத்தை ஐந்து எழுதி யுண்மையில் அடக்கிகாட்டுவதும் ஆன்மத் தரிசனமும் சிவதரிசனமும் நிழல்தற்கிடமாகிய அத்துவித அனுபவ நிலையில் ஆன்மா நிற்குமாறு உணர்த்தி தான் பெற்றிருந்த சுத்தாத்துவ சித்தாந்த தெளிவை நன்கு புலப்படுத்தியுள்ளார் . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்ப கால நிர்வாக சபையின் உறுப்பி னராகவும் இந்துக் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தின் அடிக்கல் வைத்தவர்களில் அருளம்பலம் சுவாமிகளும் ஒருவர் . 1895 ஆம் வருடம் இந்நிகழ்வு நடைபெற்றது . இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் இந்து சாசனம் பத்திரிகைக்காகவும் பெரிதும் உழைத்தார் . கடையிற் சுவாமிகள் குழந்தைகள்வேல் சுவாமிகள் அருளம்பல சுவாமிகள் மூவரும் பெரும்பாலும் சஞ்சாரம் செய்த இடம் வண்பண்ணை ஆகும் . இப்பிரதேசத்தில் சிவன் கோயிலடியில் இருந்து சிவலிங்கப் புளியடிவரை உள்ள பகுதியிற் சைவவாழ் விற்கான நற்பண்புகள் இன்றும் திகழக் காண்கின்றோம் . நாவலர் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நாவலர் மணிமண்டபம் சிவத்தொண்டன் நிலையம் என்ற நான்கு சிறந்த சைவ அமைப்புக்கள் உள்ளன . நாவலர் பெருமானின் அச்சு இயந்திர சாலையும் இவ்விடத்தில் தான் இருந்தது . ஆங்கில அறிவும் செந்தமிழ் ஞானமும் கூர்ந்த மதியும் விடா முயற்சியும் சமயா பிமானமும் உடையவரான அருளம்பலம் சுவாமிகள் 1925 ம் வருடம் ( குரோதன் ) ஆனி மாதம் 28 ம் நாள் அந்த நாளில் காலை 11 மணியளவில் தமது இல்லத்தில் தேகவியோக மானார் . இறைவன் அடிசேரும் போது அவருக்கு வயது 59. கீரிமலையில் சுவாமிகளின் தேகம் அதற்கென முற்கூட்டியே அமைக்கப் பட்ட இடத்தில் சமாதி இருத்தப்பட்டது . குழந்தைவேல் சுவாமிகளின் ஞானவாரிசான அருளம்பலம் சுவாமிகள் அவரின் சமாதிக் கோயிலின்கிழக்குப்புறமாக வைக்கப்பட்டார் . அருளம்பலம் சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான நவாலியூர் இ.வைத்திங்கம் அவர்களால் பாடப்பெற்ற பாடல்களில் ஒன்று ( 08 ஆம் பக்கம் பார்க்க )