தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் பாண்டி நாட்டில் சைவம் உய்ய வைத்த தெய்வப்பாவை மங்கையர்க்கரசியார் ஒரு தாயானவள் தன் குழந்தை நோயவாய்ப்படும் போது, எப்படியாயினும் மருந்து தேடி அதனைத் தீர்ப்பாளோ, அதுபோலவே கூன்பாண்டியனைக் கரம்பற்றியதால், பாண்டிய நாட்டைப் பெற்றவராயினர் மானியார். எனவே அதன் நிலை தாழ்ந்திருந்தது. அதனை நிமிர்ந்து நிலைபெறச் செய்யவே, காழிப்பிள்ளையார் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள் கன்னி நாடாள் திருமறைக்காட்டிற்கு சென்று தாமரை போன்றத் திருவடிகளையுடைய சிவபெருமானுக்கு அடியவராய் இருப்பது பெருமை. சைவநெறியில் ஒழுகி, அன்புடை நெஞ்சகராய் நிலைப்பது பிறவிப்பயனையடைய வழிவகுக்கும். அப்படிப்பட்ட சைவநெறியின் சிறந்த நாடாகவும், அங்கயற்கண்ணி அம்மையுடன், ஆலவாய்ச் செந்தமிழ் சொக்கநாதப் பெருமானே, ஆட்சி செய்த பெருஞ்சிறப்புடையது பாண்டிய நாடாகும். இறைவனுக்கு பழம்பதியாவது பாண்டியநாடு என்பதை மணிவாசகரும், ''மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும்” என்கின்றார். சிவத்திரு. பா.சிவமாதவன் புதுக்கோட்டை அப்பேற்பட்ட சைவநாடு, திருநீற்று ஒளி வீசும் தென்பாண்டி நாடு, சமண இருள் சூழ்ந்து மங்கிப் போயிருந்தது. சைவவழியில் வந்த பாண்டியனோ சமண குழியில் வீழ்ந்திருந்தான். மன்னன் “எவ்வழியோ மக்களும் அவ்வழியே” என்ற வாக்கினைப் போல் நாட்டு மக்களும் சிவவழிபாடற்று இருந்தனர். இருப்பினும் தென்னாடு செய்த தவமும், பாண்டிய அரசின் முழுப்பயனும் மங்கையர்க்கரசியார் என்னும் வடிவம் தாங்கி, கன்னி நாட்டைக் காப்பாற்ற கூன்பாண்டியனை கரம்பற்றியது. ஆம்! தென்னவன் தம் குலத்திற்கு மாபெரும் பழியை வினையின் காரணமாகத் தேடி வைத்திருந்தான். அப்பழி பாண்டிய நாட்டை சூழ்ந்திருந்தது. அப்பழியை நீக்க வந்தமையால் அம்மையாரை அவ்வாறு சிறப்பித்து மகிழ்கின்றேன். ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய இயலும். எப்பேற்பட்ட நன்மைகளையும் செய்துவிட முடியும் என்பதற்கு அம்மையார் மிகப்பெரிய சான்றாவார். மானியார் வளவர் குலத்தில் தோன்றியவர். பெருமானை நாளும் போற்றிப் பரவும் திறமுடையவர். ஆனால் திருமணமாகி வந்ததோ பாண்டிய நாடு, சைவ நாடுதான் இருப்பினும் சமண சூழ்ச்சியால் வீழ்ச்சியில் இருந்தது. ஆட்சியில் இருந்த மன்னனும் அதற்கு சாட்சியாய் இருந்தான். மன்னன் என்னதான் சமணில் பிறழ்ந்து இருந்தாலும், மானியார் நடவடிக்கைகளில் தலையிடாமல் அன்புடன் இருந்தான். அதுவே அவனின் செய்தவமாகும். மழுவிடைக்கன்றை, பாண்டிய நாட்டிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. பிள்ளையாரும் மலர்ந்த முகம் தந்து, பாண்டிய நாட்டிற்கு நீற்று ஒளி மிளிர அடியார்கள் புடைசூழ எழுந்தருள்கின்றார். பாண்டிய நாடு செய்த தவம், ஆலவாயை அலங்கரித்துக் கொண்டு வந்தது முத்துச் சிவிகை. குலச்சிறையார் வீழ்ந்து வணங்கி வரவேற்றார். பிள்ளையார் ஆலவாய் பெருமானின் அடி வணங்க ஆலயம் சென்று, பதிகம் பாடி வலம் வருகின்றார். அவ்வேளையில் தான் மானியாரைச் சந்திக்கிறார் ஞானமாமுனிவர் சம்பந்தர். அந்தக் காட்சியைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுகையில்,“ஒரு மருங்கு ஒதுங்கும் தெள்ளுநீர் விழித் ஒரு பெண் திருமணமாகி சென்றவுடன் நல்ல கணவன், குடும்பம், செல்வ செழிப்பான வாழ்வு என இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பது இயல்புதான். அம்மையார் பாண்டிய நாட்டிற்கே பேரரசியாக இருந்த போதிலும் பதைத்துக் கொண்டுதான் இருந்தார். எப்படி மீண்டும் நம்நாடு ஒளி பெறும் சைவம் வலுப்பெறும் என்று. அந்த வேளையில்தான் சைவமும், தமிழும், செய்த தவப்பயனும், மிகுசைவத்துறை விளங்கவும், திசையனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையே வென்றேறவும், அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும், நஞ்சணி கண்டனின் திருமகனாக வந்து தோன்றி பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார் சிவக்கன்றான காழிப்பிள்ளையார். இதனைக் கேள்வியுற்ற மானியார், தனக்கு பக்கபலமாக சைவநெறியில் நின்ற அமைச்சரான குலச்சிறையாரிடம் கூறி, அவரை பாண்டிய நாட்டிற்கு எழுந்தருள வேண்டுகின்றார். தெரிவையார்” எனக் கூறுகின்றார். சென்று முன்பு அம்மையாரை, குலச்சிறையார், சம்பந்தரிடம் அடையாளப்படுத்துகின்றார். உடனே பிள்ளையார் பெரும் களிப்புடன் விரைந்து அம்மையாருடன் செல்கின்றார். இருக்கும் தானே சம்பந்தர் பிறப்பதற்கு இவரின் தவமும் காரணமல்லவோ, ஆம் சைவம் வாழ பலரின் தவமே சம்பந்தரை அவதரிக்கச் செய்தது, அதில் மானியாரும் ஒருவர். TELE அம்மையார், சம்பந்தரை வீழ்ந்து, வணங்கி கண்களில் நீர் அருவி பொழிய, உரோமம் சிலிர்த்து உரை தடுமாறிக் கூறுகின்றார். சேக்கிழார் வாக்கில் காண்போம். "யானும் என் பதியும் செய்த தவம் என்கொல் என்றார்" அதற்கு காழி வாழ வந்தருளிய, கவணியர் பிரான் மறுமொழி கூறுகின்றார். "சூழும் ஆகிய பர சமயத்தினர் தொண்டு வாழும் நீர்மையீர் உமைக் காண வந்தனம்" என்றார். சிவ! சிவ! எப்பேற்பட்ட பதில் அம்மையாரை, எந்த அளவிற்கு சம்பந்தர் போற்றி மதிக்கின்றார். என்பதற்கு சான்றான வரிகள். மேலும் சம்பந்தர், அம்மையாரைப் பற்றி, பதிகமே பாடியது இன்னும் பெரும் சிறப்பாகும். அப்பதிகம், "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே" 09 திருமடத்தில் தங்கிய நேரத்தில், சமணர்கள் அங்கு மன்னனிடம் ஆணை பெற்று தீ வைக்கின்றனர். அவ்வேளையில், மன்னன் கவலையில் இருக்கின்றான். அம்மையார் கனிவுடன் சென்று, வினவ மன்னனும் காழி நகரிலிருந்து வந்த குழந்தையால் அடிகள்மார்கள் (சமணர்கள்) "கண்டு முட்டு கேட்டு முட்டு" என திகைக்கின்றார்கள் "செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே அஞ்சல் என்றருள் செய்யென பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற் காகவே" என்றான். அம்மையார் பொதுவாகவே சொல்கின்றார். வாதில் யார் வெல்கின்றார்களோ, அவர் பக்கம் சேர்வதே உறுதி என்கிறார். இனி அம்மையாருக்கு பயமில்லை, ஏனெனில் வந்தது சிவக்கன்றாயிற்றே. சமணர் இட்டத் தீயை அடியவர்கள் அணைத்தனர். சம்பந்தர் ஆலவாய்ப் பெருமானின் விண்ணப்பிக்கின்றார். அப்பாடல், தெ இதில் சிறப்பு என்னவென்றால் ‘பையவே சென்று‘ என்பதுதான். ஏன் இப்படி பாடினார் என்பதை தெய்வச் சேக்கிழார் பெருமான் விவரிக்கின்றார். ''பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் ஆண் தகையார் குலச்சிறையார் அன்பினாலும். அரசன்பால் அபராதம் உறுதலாலும் மீண்டும் சிவநெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலிவேந்தர் தீண்டியிடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார். எவ்வளவு அற்புதமான பாடல் அல்லவா. அப்படியென்றால் மன்னனையும் காத்து, நாட்டையும் காத்து, சம்பந்தப் பெருமானின் குருவருளைப் பெற்ற சிறப்புடையவர், மங்கையர்க்கரசியார் ஆவார். அதன் பிறகு அனல் வாதம், புனல்வாதம் செய்து சைவத்தை மீண்டும் பாண்டிய நாட்டில் ஓங்கச் செய்தனர். இத்தகைய பெரும் செயலுக்காய் வந்து தோன்றியவர், மானியார். பாண்டியனுக்கு வாழ்க்கைத் துணையாய் வந்து, சைவவழித் துணையாய் இருந்தவர் அம்மையார். பாண்டிய நாடு உற்ற பழியை நீக்கி, மீண்டும் வாழச் செய்தார். தன் குலத்தை காப்பது குலதெய்வம் அம்மையாரும், பாண்டியக் குலத்திற்கு ஏற்பட்ட பழியைத் தீர்த்ததால், தெய்வச் சேக்கிழார் பெருமாள், "மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மாறி செய்கமலத் திருமடந்ஜ்த கன்னி நாடான் தென்னர் குலம் பழிதீர்த்த தெய்வப்பாலை எங்கள்பிரான் சண்பையர் கோனருளினாலே இருந்தமிழ் நாடுற்றவிடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல்எம்மால் போற்றலாமே" என்று சிறப்பித்து பாடுகின்றார். இங்கு எங்கள் தெய்வம் என்பது சைவர்களாகிய நமக்குக் குலதெய்வம் என்பதாகும். எனவே குல தெய்வமாகிய மங்கையர்க்கரசியார் மலரடியைப் போற்றுவோம். சைவ நல் நெறியில் நின்று, நீறு பூசிய மேனியராய் திருமுறை பாடும் வாயினராய், வாழல், வாழ்வின் முதலாய அரனை நினைந்து வாழ்வோம் ! உய்வோம்! திருச்சிற்றம்பலம்
தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் பாண்டி நாட்டில் சைவம் உய்ய வைத்த தெய்வப்பாவை மங்கையர்க்கரசியார் ஒரு தாயானவள் தன் குழந்தை நோயவாய்ப்படும் போது எப்படியாயினும் மருந்து தேடி அதனைத் தீர்ப்பாளோ அதுபோலவே கூன்பாண்டியனைக் கரம்பற்றியதால் பாண்டிய நாட்டைப் பெற்றவராயினர் மானியார் . எனவே அதன் நிலை தாழ்ந்திருந்தது . அதனை நிமிர்ந்து நிலைபெறச் செய்யவே காழிப்பிள்ளையார் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள் கன்னி நாடாள் திருமறைக்காட்டிற்கு சென்று தாமரை போன்றத் திருவடிகளையுடைய சிவபெருமானுக்கு அடியவராய் இருப்பது பெருமை . சைவநெறியில் ஒழுகி அன்புடை நெஞ்சகராய் நிலைப்பது பிறவிப்பயனையடைய வழிவகுக்கும் . அப்படிப்பட்ட சைவநெறியின் சிறந்த நாடாகவும் அங்கயற்கண்ணி அம்மையுடன் ஆலவாய்ச் செந்தமிழ் சொக்கநாதப் பெருமானே ஆட்சி செய்த பெருஞ்சிறப்புடையது பாண்டிய நாடாகும் . இறைவனுக்கு பழம்பதியாவது பாண்டியநாடு என்பதை மணிவாசகரும் ' ' மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் என்கின்றார் . சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை அப்பேற்பட்ட சைவநாடு திருநீற்று ஒளி வீசும் தென்பாண்டி நாடு சமண இருள் சூழ்ந்து மங்கிப் போயிருந்தது . சைவவழியில் வந்த பாண்டியனோ சமண குழியில் வீழ்ந்திருந்தான் . மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்ற வாக்கினைப் போல் நாட்டு மக்களும் சிவவழிபாடற்று இருந்தனர் . இருப்பினும் தென்னாடு செய்த தவமும் பாண்டிய அரசின் முழுப்பயனும் மங்கையர்க்கரசியார் என்னும் வடிவம் தாங்கி கன்னி நாட்டைக் காப்பாற்ற கூன்பாண்டியனை கரம்பற்றியது . ஆம் ! தென்னவன் தம் குலத்திற்கு மாபெரும் பழியை வினையின் காரணமாகத் தேடி வைத்திருந்தான் . அப்பழி பாண்டிய நாட்டை சூழ்ந்திருந்தது . அப்பழியை நீக்க வந்தமையால் அம்மையாரை அவ்வாறு சிறப்பித்து மகிழ்கின்றேன் . ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய இயலும் . எப்பேற்பட்ட நன்மைகளையும் செய்துவிட முடியும் என்பதற்கு அம்மையார் மிகப்பெரிய சான்றாவார் . மானியார் வளவர் குலத்தில் தோன்றியவர் . பெருமானை நாளும் போற்றிப் பரவும் திறமுடையவர் . ஆனால் திருமணமாகி வந்ததோ பாண்டிய நாடு சைவ நாடுதான் இருப்பினும் சமண சூழ்ச்சியால் வீழ்ச்சியில் இருந்தது . ஆட்சியில் இருந்த மன்னனும் அதற்கு சாட்சியாய் இருந்தான் . மன்னன் என்னதான் சமணில் பிறழ்ந்து இருந்தாலும் மானியார் நடவடிக்கைகளில் தலையிடாமல் அன்புடன் இருந்தான் . அதுவே அவனின் செய்தவமாகும் . மழுவிடைக்கன்றை பாண்டிய நாட்டிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது . பிள்ளையாரும் மலர்ந்த முகம் தந்து பாண்டிய நாட்டிற்கு நீற்று ஒளி மிளிர அடியார்கள் புடைசூழ எழுந்தருள்கின்றார் . பாண்டிய நாடு செய்த தவம் ஆலவாயை அலங்கரித்துக் கொண்டு வந்தது முத்துச் சிவிகை . குலச்சிறையார் வீழ்ந்து வணங்கி வரவேற்றார் . பிள்ளையார் ஆலவாய் பெருமானின் அடி வணங்க ஆலயம் சென்று பதிகம் பாடி வலம் வருகின்றார் . அவ்வேளையில் தான் மானியாரைச் சந்திக்கிறார் ஞானமாமுனிவர் சம்பந்தர் . அந்தக் காட்சியைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுகையில் ஒரு மருங்கு ஒதுங்கும் தெள்ளுநீர் விழித் ஒரு பெண் திருமணமாகி சென்றவுடன் நல்ல கணவன் குடும்பம் செல்வ செழிப்பான வாழ்வு என இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பது இயல்புதான் . அம்மையார் பாண்டிய நாட்டிற்கே பேரரசியாக இருந்த போதிலும் பதைத்துக் கொண்டுதான் இருந்தார் . எப்படி மீண்டும் நம்நாடு ஒளி பெறும் சைவம் வலுப்பெறும் என்று . அந்த வேளையில்தான் சைவமும் தமிழும் செய்த தவப்பயனும் மிகுசைவத்துறை விளங்கவும் திசையனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையே வென்றேறவும் அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும் நஞ்சணி கண்டனின் திருமகனாக வந்து தோன்றி பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார் சிவக்கன்றான காழிப்பிள்ளையார் . இதனைக் கேள்வியுற்ற மானியார் தனக்கு பக்கபலமாக சைவநெறியில் நின்ற அமைச்சரான குலச்சிறையாரிடம் கூறி அவரை பாண்டிய நாட்டிற்கு எழுந்தருள வேண்டுகின்றார் . தெரிவையார் எனக் கூறுகின்றார் . சென்று முன்பு அம்மையாரை குலச்சிறையார் சம்பந்தரிடம் அடையாளப்படுத்துகின்றார் . உடனே பிள்ளையார் பெரும் களிப்புடன் விரைந்து அம்மையாருடன் செல்கின்றார் . இருக்கும் தானே சம்பந்தர் பிறப்பதற்கு இவரின் தவமும் காரணமல்லவோ ஆம் சைவம் வாழ பலரின் தவமே சம்பந்தரை அவதரிக்கச் செய்தது அதில் மானியாரும் ஒருவர் . TELE அம்மையார் சம்பந்தரை வீழ்ந்து வணங்கி கண்களில் நீர் அருவி பொழிய உரோமம் சிலிர்த்து உரை தடுமாறிக் கூறுகின்றார் . சேக்கிழார் வாக்கில் காண்போம் . யானும் என் பதியும் செய்த தவம் என்கொல் என்றார் அதற்கு காழி வாழ வந்தருளிய கவணியர் பிரான் மறுமொழி கூறுகின்றார் . சூழும் ஆகிய பர சமயத்தினர் தொண்டு வாழும் நீர்மையீர் உமைக் காண வந்தனம் என்றார் . சிவ ! சிவ ! எப்பேற்பட்ட பதில் அம்மையாரை எந்த அளவிற்கு சம்பந்தர் போற்றி மதிக்கின்றார் . என்பதற்கு சான்றான வரிகள் . மேலும் சம்பந்தர் அம்மையாரைப் பற்றி பதிகமே பாடியது இன்னும் பெரும் சிறப்பாகும் . அப்பதிகம் மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே 09 திருமடத்தில் தங்கிய நேரத்தில் சமணர்கள் அங்கு மன்னனிடம் ஆணை பெற்று தீ வைக்கின்றனர் . அவ்வேளையில் மன்னன் கவலையில் இருக்கின்றான் . அம்மையார் கனிவுடன் சென்று வினவ மன்னனும் காழி நகரிலிருந்து வந்த குழந்தையால் அடிகள்மார்கள் ( சமணர்கள் ) கண்டு முட்டு கேட்டு முட்டு என திகைக்கின்றார்கள் செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே அஞ்சல் என்றருள் செய்யென பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற் காகவே என்றான் . அம்மையார் பொதுவாகவே சொல்கின்றார் . வாதில் யார் வெல்கின்றார்களோ அவர் பக்கம் சேர்வதே உறுதி என்கிறார் . இனி அம்மையாருக்கு பயமில்லை ஏனெனில் வந்தது சிவக்கன்றாயிற்றே . சமணர் இட்டத் தீயை அடியவர்கள் அணைத்தனர் . சம்பந்தர் ஆலவாய்ப் பெருமானின் விண்ணப்பிக்கின்றார் . அப்பாடல் தெ இதில் சிறப்பு என்னவென்றால் பையவே சென்று என்பதுதான் . ஏன் இப்படி பாடினார் என்பதை தெய்வச் சேக்கிழார் பெருமான் விவரிக்கின்றார் . ' ' பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் ஆண் தகையார் குலச்சிறையார் அன்பினாலும் . அரசன்பால் அபராதம் உறுதலாலும் மீண்டும் சிவநெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலிவேந்தர் தீண்டியிடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார் . எவ்வளவு அற்புதமான பாடல் அல்லவா . அப்படியென்றால் மன்னனையும் காத்து நாட்டையும் காத்து சம்பந்தப் பெருமானின் குருவருளைப் பெற்ற சிறப்புடையவர் மங்கையர்க்கரசியார் ஆவார் . அதன் பிறகு அனல் வாதம் புனல்வாதம் செய்து சைவத்தை மீண்டும் பாண்டிய நாட்டில் ஓங்கச் செய்தனர் . இத்தகைய பெரும் செயலுக்காய் வந்து தோன்றியவர் மானியார் . பாண்டியனுக்கு வாழ்க்கைத் துணையாய் வந்து சைவவழித் துணையாய் இருந்தவர் அம்மையார் . பாண்டிய நாடு உற்ற பழியை நீக்கி மீண்டும் வாழச் செய்தார் . தன் குலத்தை காப்பது குலதெய்வம் அம்மையாரும் பாண்டியக் குலத்திற்கு ஏற்பட்ட பழியைத் தீர்த்ததால் தெய்வச் சேக்கிழார் பெருமாள் மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மாறி செய்கமலத் திருமடந்ஜ்த கன்னி நாடான் தென்னர் குலம் பழிதீர்த்த தெய்வப்பாலை எங்கள்பிரான் சண்பையர் கோனருளினாலே இருந்தமிழ் நாடுற்றவிடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல்எம்மால் போற்றலாமே என்று சிறப்பித்து பாடுகின்றார் . இங்கு எங்கள் தெய்வம் என்பது சைவர்களாகிய நமக்குக் குலதெய்வம் என்பதாகும் . எனவே குல தெய்வமாகிய மங்கையர்க்கரசியார் மலரடியைப் போற்றுவோம் . சைவ நல் நெறியில் நின்று நீறு பூசிய மேனியராய் திருமுறை பாடும் வாயினராய் வாழல் வாழ்வின் முதலாய அரனை நினைந்து வாழ்வோம் ! உய்வோம் ! திருச்சிற்றம்பலம்