தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி - அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோயில் தெ 10 பெலனி "பாசுபதேசுவரர் ஈழத்திருநாட்டில் தெற்கு பக்கமாக உள்ள அம்பாறை பரிபாரத் தெய்வங்களுக்கான கோட்டங்கள், கொடிமரம், மாவட்டத்தின் அக்கரைப்பற்று நகரிலிருந்து சுமார் 2 யாகசாலை, மடைப்பள்ளி போன்ற அம்சங்கள் மைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு எனும் மெருகேற்றப்பட்டு விசாலமாகி விரிவுபட்டு இருக்கின்றது பழம் பெரும் பதியூர் அமைந்துள்ளது. இவ்வூரில் அற்புத சக்திகளோடு அடியவர்களுக்கு அருளாட்சி புரிந்து வரும் திருத்தலமாக பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில் விளங்குகின்றது. முதன் முதலில் 1963 ஆம் ஆண்டு முதற் குடமுழுக்கு கண்ட இச்சிவாலயம் 1988, 2004, 2000 என ஆகிய ஆண்டுகளிலும் புதுப்பொலிவுடன் குடமுழுக்கு விழா கண்டுள்ளது. சித்தர் சுவாமியின் சித்தத்தினால் உருவாகிய சிவாலயத்தில், நாள்தோறும் நித்திய வழிபாடுகள், வருடாந்த பெருந்திருவிழா என்பன ஊர் குடிவழக்கின் படி நடைபெறுவது சிறப்புப் பெற்றது. திருவிழா காலங்களில் மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, தெப்பத் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பனவும் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. மற்றும் சிவனிரவு, கழுவாய் வழிபாடு (பிரதோசம்), கேதார கௌரி போன்ற விரத வழிபாடுகளும் பண்டிகை விழாக்களும் சிறப்புப் பூசைகளும் வருடந்தோறும் இடம் பெற்று வருகின்றன. திருத்தலவூரின் வரலாறு கிழக்கு மாகணத்தின் பண்டையத் தொன்மங்களையும் வரலாறுகளையும் தாங்கி நிற்கும் கிராமங்களுள் பனங்காடும் ஒன்று. இயற்கையாகவே ஆறு, குளம், கடல் ஆகிய நீர்நிலைகள் இயைந்த உயிர்ச்சக்தி நிறைந்த செந்நெல் விளையும் பூமியும் இவ்வூரின் அழகிற்கு மகுடம் சூட்டுகிறது. கி.பி 2ம் நூற்றாண்டு காலாப்பகுதியில் 'தாடகிரி' எனும் குறுநில இராசதானி அரசாட்சியில் முக்கிய கேந்திர நிலையமாக பனங்காடு நிலவியிருக்கின்றது. இவ்வூரின் தொன்மைக்கு, சங்காலத்தில் நிலவிய 'நடுகல் வணக்கம்’, இங்கும் நிலவியதற்கான எச்சங்கள் காணப்பட்டதாகவும், போர்த்துகீசரின் ஆதிக்கத்தின் போது நடுகல் வணக்கம் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை சான்றாகும். பின்பு 15ம் நூற்றாண்டுப் பகுதியில் வியாபார நோக்கம் கருதி தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த செட்டியார் குலத்தவர்கள் இவ்வூர்ப் பெண்களைத் திருமணம் முடித்து, வாழ்விடத்திற்காக, அவர்கள், சுற்றியிருந்த காடுகளைத் துப்பரவு செய்யும் போது, ஆங்காங்கு கிடைத்த நடுகல் எச்சங்களை ஒன்றாகத் திரட்டி 'மாவிலங்கை' மரத்தடியில் அவற்றை வைத்து, அவ்விடத்தில் வணி தெய்வமான ஐயனாருக்கு சிலையும் சிறிய கோயிலையும் நிறுவி, அவரை ஊர்க்காவல் தெய்வமாகப் போற்றிப்பரவினர். இவற்றின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ‘ஐயனார் அகவல்’ எனும் காவியத்தில் பதியப்பட்டுள்ளது. இக்காவியத்தில் இவ்வூரின் பண்டைய பெயராக 'பனங்காமணச்சோலை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த சிந்தானைக்குட்டிச் சித்தரின் அருள்வாக்கால் அவ்விடத்தில் சிவன் கோயில் எழுப்பப்பட்டது. இதனால் ஐயனார் கோயில், அருள்மிகு பாசுபதேசுவரர் சிவன் கோயிலாக மடை மாற்றம் செய்யப்பட்டது. திருத்தல வரலாறு தொன்மைக் காலத்தில் ஐயனார் கோயிலாக விளங்கிய இவ்விடத்தின் மகிமையை உணர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த சித்தானைக் குட்டி சித்தரும், பனங்காட்டிற்குச் சென்று அங்கு பல மாதங்கள் தங்கியிருந்த போது, ஒரு நாள் ஐயனார் கோயிலின் அருகில் உள்ள இடத்தினை தனது கால் பெருவிரலினால் கோடிட்டுக் காட்டி அவ்விடத்தில் ஒர் சிவாலயம் அமைக்குமாறு அருள்வாக்கு உரைத்தார். சித்தர் சுவாமியின் அருளுரையின் படி ஊர் மக்கள் ஒன்றுகூடி, ஆச்சாரி ஒருவரை வரவழைத்து, சிவாலயத்திற்கென நிலையம் எடுக்க பணிப்புரை விடுத்த போது, ஆச்சாரி குறித்த இடமும், சித்தர் குறித்த இடமும் ஒன்றாக இருக்கக் கண்டு ஊரவர் அதிசயித்து, அன்றிலிருந்து ஊரில் உள்ள தனவந்தர்களின் பொருள் உதவியுடன் உதயமான இச்சிவாலயம், தற்போது சிற்பாக விதியின் படி இரு தளங்களைக் கொண்ட விமானம், மண்டபங்கள், உள்வீதி, அ மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 மாதுமை அம்மை சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முகலைமாணி, பிரான் வருகின்றார். இங்குள்ள மூர்த்தியின் பெயரைத் தாங்கிய வேறு எந்த ஒரு சிவன் கோயிலையும், ஈழத்தில் காண முடியாது. அதுவும் ஈழத்தின் தெற்குப் பகுதியில் பாசுபதமூர்த்தியாக எழுந்தருளி அருளாட்சி பரிவது இங்குள்ள மூர்த்தியின் தனிச் சிறப்பாகும். மகாபாரதத்தில் சிறந்த வில்லாளியான பார்த்தனன், கௌரவர்களை வெற்றி கொள்ள சிவனை நோக்கி காட்டில் பல வருடங்கள் கடுந்தவம் புரிந்ததன் பேறாய், சிவனும் பார்த்தனனை ஆட்கொள்ள வேடர் கோலம் (கிராதர்) பூண்டு, அவனுக்குக் காட்சி கொடுத்து, கௌரவர்களை வெல்வதற்கு 'பாசுபதம்' எனும் அம்பினை கொடுத்தருளினார். இதனால் சிவன் 'பாசபதமூர்த்தி' என்ற பெயரால் போற்றப் படலானார். இவ்வரலாற்றை “அருச்சுனருக்கு அருள் செயக் கருதும் வேடத்தார்” என்று சம்பந்தப் பெருமானும், "ஞான வேடன் விசயற் கருள் செயும் கான வேடன்" என்று அப்பர் பெருமானும் தேவாரப்பாடல்களில் போற்றிப் பரவியுள்ளனர். இத்தகைய பாசுபத மூர்த்தியை தென்னிந்தியாவில் திருவேட்டகுடி, திருவலம்புரம் ஆகிய தலங்களில் சிறப்பு மூர்த்தியாகக் கண்டு இன்புறலாம். இதனைத் தொடர்ந்து இலங்கையில் பனங்காட்டில் உறைந்துள்ள அருள்மிகு பாசுபதேசுவரர் சிவாலயத்தில் இம்மூர்த்தியின் அருளாசிகளைக் கண்டு உய்வு பெறலாம். இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிய உதவும் மூலாதாரங்களுள் பனங்காட்டு ஐயனார் அகவல் என்னும் பாடல் முதன்மை பெறுகின்றது. மற்றும் 2020 இல் வெளியிடப்பட்ட குடமுழுக்கு மலரும் இக்கோயிலைப் பற்றி அறிய உதவும் சான்றாகும். இன்னும் பல அப்பிரதேச ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளும், பிரதேச கவிஞர்களால் பாடப்பட்டுள்ள பத்தி சிற்றிலக்கியங்களும் இத்தல வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப்படுகின்றன. மற்றும் கலாபூஷணம் சிவத்திரு (சிவஸ்ரீ) லோகநாதக் குருக்கள் ஆக்கியருளிய பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில் வரலாற்றுக் காவியம், திருஊஞ்சற்பாடல் என்பனவும் இத்திருத்தல வரலாற்றையும், சிறப்பையும் அறிய உதவுவனவாகும். “ஐயனும் அம்மை யோடருள் புரிந்து பின் வெய்ய பொற்றூணியும் வில்லுமந்தரமும் துய்ய பாசுபத மெய்த் தொடையுமுட்டியு மொய்யென நிலையுடன் உதவினானரே” மூர்த்தியின் பெருமை ஓர் சிவாலயம் கொண்டிருக்க வேண்டிய மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புக்களை பனங்காட்டில் அருளாட்சி புரியும் அருள்மிகு பாசுபதேசுவரர் கோயிலும் கொண்டிருக்கின்றது. இங்குள்ள மூர்த்தியாக பாசுபதேசுவரரோடு மாதுமை அம்பாளும் உடனுறைந்து அடியவர்களுக்கு அருள்பாலித்து வில்லிபாரதம் - ஆரணியபருவம். அருச்சுனன் தவநிலைச் சுருக்கம்) திருச்சிற்றம்பலம் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆடி மறைமதி நாளில் அப்பர் கயிலைக் காட்சி TO A VI திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் திருக்கோயிலில், அப்பர் பெருமானுக்கு இறைவன் ஆடி மறைமதி (அமாவாசை) அன்று கயிலைக் காட்சியை கொடுத்தருளினார்.
தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி - அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோயில் தெ 10 பெலனி பாசுபதேசுவரர் ஈழத்திருநாட்டில் தெற்கு பக்கமாக உள்ள அம்பாறை பரிபாரத் தெய்வங்களுக்கான கோட்டங்கள் கொடிமரம் மாவட்டத்தின் அக்கரைப்பற்று நகரிலிருந்து சுமார் 2 யாகசாலை மடைப்பள்ளி போன்ற அம்சங்கள் மைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு எனும் மெருகேற்றப்பட்டு விசாலமாகி விரிவுபட்டு இருக்கின்றது பழம் பெரும் பதியூர் அமைந்துள்ளது . இவ்வூரில் அற்புத சக்திகளோடு அடியவர்களுக்கு அருளாட்சி புரிந்து வரும் திருத்தலமாக பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில் விளங்குகின்றது . முதன் முதலில் 1963 ஆம் ஆண்டு முதற் குடமுழுக்கு கண்ட இச்சிவாலயம் 1988 2004 2000 என ஆகிய ஆண்டுகளிலும் புதுப்பொலிவுடன் குடமுழுக்கு விழா கண்டுள்ளது . சித்தர் சுவாமியின் சித்தத்தினால் உருவாகிய சிவாலயத்தில் நாள்தோறும் நித்திய வழிபாடுகள் வருடாந்த பெருந்திருவிழா என்பன ஊர் குடிவழக்கின் படி நடைபெறுவது சிறப்புப் பெற்றது . திருவிழா காலங்களில் மாம்பழத் திருவிழா வேட்டைத் திருவிழா தெப்பத் திருவிழா தீர்த்தத் திருவிழா என்பனவும் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன . மற்றும் சிவனிரவு கழுவாய் வழிபாடு ( பிரதோசம் ) கேதார கௌரி போன்ற விரத வழிபாடுகளும் பண்டிகை விழாக்களும் சிறப்புப் பூசைகளும் வருடந்தோறும் இடம் பெற்று வருகின்றன . திருத்தலவூரின் வரலாறு கிழக்கு மாகணத்தின் பண்டையத் தொன்மங்களையும் வரலாறுகளையும் தாங்கி நிற்கும் கிராமங்களுள் பனங்காடும் ஒன்று . இயற்கையாகவே ஆறு குளம் கடல் ஆகிய நீர்நிலைகள் இயைந்த உயிர்ச்சக்தி நிறைந்த செந்நெல் விளையும் பூமியும் இவ்வூரின் அழகிற்கு மகுடம் சூட்டுகிறது . கி.பி 2 ம் நூற்றாண்டு காலாப்பகுதியில் ' தாடகிரி ' எனும் குறுநில இராசதானி அரசாட்சியில் முக்கிய கேந்திர நிலையமாக பனங்காடு நிலவியிருக்கின்றது . இவ்வூரின் தொன்மைக்கு சங்காலத்தில் நிலவிய ' நடுகல் வணக்கம் இங்கும் நிலவியதற்கான எச்சங்கள் காணப்பட்டதாகவும் போர்த்துகீசரின் ஆதிக்கத்தின் போது நடுகல் வணக்கம் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை சான்றாகும் . பின்பு 15 ம் நூற்றாண்டுப் பகுதியில் வியாபார நோக்கம் கருதி தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த செட்டியார் குலத்தவர்கள் இவ்வூர்ப் பெண்களைத் திருமணம் முடித்து வாழ்விடத்திற்காக அவர்கள் சுற்றியிருந்த காடுகளைத் துப்பரவு செய்யும் போது ஆங்காங்கு கிடைத்த நடுகல் எச்சங்களை ஒன்றாகத் திரட்டி ' மாவிலங்கை ' மரத்தடியில் அவற்றை வைத்து அவ்விடத்தில் வணி தெய்வமான ஐயனாருக்கு சிலையும் சிறிய கோயிலையும் நிறுவி அவரை ஊர்க்காவல் தெய்வமாகப் போற்றிப்பரவினர் . இவற்றின் வரலாறு 17 ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஐயனார் அகவல் எனும் காவியத்தில் பதியப்பட்டுள்ளது . இக்காவியத்தில் இவ்வூரின் பண்டைய பெயராக ' பனங்காமணச்சோலை ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த சிந்தானைக்குட்டிச் சித்தரின் அருள்வாக்கால் அவ்விடத்தில் சிவன் கோயில் எழுப்பப்பட்டது . இதனால் ஐயனார் கோயில் அருள்மிகு பாசுபதேசுவரர் சிவன் கோயிலாக மடை மாற்றம் செய்யப்பட்டது . திருத்தல வரலாறு தொன்மைக் காலத்தில் ஐயனார் கோயிலாக விளங்கிய இவ்விடத்தின் மகிமையை உணர்ந்து தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த சித்தானைக் குட்டி சித்தரும் பனங்காட்டிற்குச் சென்று அங்கு பல மாதங்கள் தங்கியிருந்த போது ஒரு நாள் ஐயனார் கோயிலின் அருகில் உள்ள இடத்தினை தனது கால் பெருவிரலினால் கோடிட்டுக் காட்டி அவ்விடத்தில் ஒர் சிவாலயம் அமைக்குமாறு அருள்வாக்கு உரைத்தார் . சித்தர் சுவாமியின் அருளுரையின் படி ஊர் மக்கள் ஒன்றுகூடி ஆச்சாரி ஒருவரை வரவழைத்து சிவாலயத்திற்கென நிலையம் எடுக்க பணிப்புரை விடுத்த போது ஆச்சாரி குறித்த இடமும் சித்தர் குறித்த இடமும் ஒன்றாக இருக்கக் கண்டு ஊரவர் அதிசயித்து அன்றிலிருந்து ஊரில் உள்ள தனவந்தர்களின் பொருள் உதவியுடன் உதயமான இச்சிவாலயம் தற்போது சிற்பாக விதியின் படி இரு தளங்களைக் கொண்ட விமானம் மண்டபங்கள் உள்வீதி மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 மாதுமை அம்மை சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முகலைமாணி பிரான் வருகின்றார் . இங்குள்ள மூர்த்தியின் பெயரைத் தாங்கிய வேறு எந்த ஒரு சிவன் கோயிலையும் ஈழத்தில் காண முடியாது . அதுவும் ஈழத்தின் தெற்குப் பகுதியில் பாசுபதமூர்த்தியாக எழுந்தருளி அருளாட்சி பரிவது இங்குள்ள மூர்த்தியின் தனிச் சிறப்பாகும் . மகாபாரதத்தில் சிறந்த வில்லாளியான பார்த்தனன் கௌரவர்களை வெற்றி கொள்ள சிவனை நோக்கி காட்டில் பல வருடங்கள் கடுந்தவம் புரிந்ததன் பேறாய் சிவனும் பார்த்தனனை ஆட்கொள்ள வேடர் கோலம் ( கிராதர் ) பூண்டு அவனுக்குக் காட்சி கொடுத்து கௌரவர்களை வெல்வதற்கு ' பாசுபதம் ' எனும் அம்பினை கொடுத்தருளினார் . இதனால் சிவன் ' பாசபதமூர்த்தி ' என்ற பெயரால் போற்றப் படலானார் . இவ்வரலாற்றை அருச்சுனருக்கு அருள் செயக் கருதும் வேடத்தார் என்று சம்பந்தப் பெருமானும் ஞான வேடன் விசயற் கருள் செயும் கான வேடன் என்று அப்பர் பெருமானும் தேவாரப்பாடல்களில் போற்றிப் பரவியுள்ளனர் . இத்தகைய பாசுபத மூர்த்தியை தென்னிந்தியாவில் திருவேட்டகுடி திருவலம்புரம் ஆகிய தலங்களில் சிறப்பு மூர்த்தியாகக் கண்டு இன்புறலாம் . இதனைத் தொடர்ந்து இலங்கையில் பனங்காட்டில் உறைந்துள்ள அருள்மிகு பாசுபதேசுவரர் சிவாலயத்தில் இம்மூர்த்தியின் அருளாசிகளைக் கண்டு உய்வு பெறலாம் . இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிய உதவும் மூலாதாரங்களுள் பனங்காட்டு ஐயனார் அகவல் என்னும் பாடல் முதன்மை பெறுகின்றது . மற்றும் 2020 இல் வெளியிடப்பட்ட குடமுழுக்கு மலரும் இக்கோயிலைப் பற்றி அறிய உதவும் சான்றாகும் . இன்னும் பல அப்பிரதேச ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளும் பிரதேச கவிஞர்களால் பாடப்பட்டுள்ள பத்தி சிற்றிலக்கியங்களும் இத்தல வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப்படுகின்றன . மற்றும் கலாபூஷணம் சிவத்திரு ( சிவஸ்ரீ ) லோகநாதக் குருக்கள் ஆக்கியருளிய பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில் வரலாற்றுக் காவியம் திருஊஞ்சற்பாடல் என்பனவும் இத்திருத்தல வரலாற்றையும் சிறப்பையும் அறிய உதவுவனவாகும் . ஐயனும் அம்மை யோடருள் புரிந்து பின் வெய்ய பொற்றூணியும் வில்லுமந்தரமும் துய்ய பாசுபத மெய்த் தொடையுமுட்டியு மொய்யென நிலையுடன் உதவினானரே மூர்த்தியின் பெருமை ஓர் சிவாலயம் கொண்டிருக்க வேண்டிய மூர்த்தி தல தீர்த்தச் சிறப்புக்களை பனங்காட்டில் அருளாட்சி புரியும் அருள்மிகு பாசுபதேசுவரர் கோயிலும் கொண்டிருக்கின்றது . இங்குள்ள மூர்த்தியாக பாசுபதேசுவரரோடு மாதுமை அம்பாளும் உடனுறைந்து அடியவர்களுக்கு அருள்பாலித்து வில்லிபாரதம் - ஆரணியபருவம் . அருச்சுனன் தவநிலைச் சுருக்கம் ) திருச்சிற்றம்பலம் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆடி மறைமதி நாளில் அப்பர் கயிலைக் காட்சி TO A VI திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்கு இறைவன் ஆடி மறைமதி ( அமாவாசை ) அன்று கயிலைக் காட்சியை கொடுத்தருளினார் .