தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 தவத்தினாற் பெறும் பயன் வாழ்க்கைக்கும் உறவுக் கும் பிறப்புக்குமான தொடர்பை அறுப்பதே முத்தி அதன் வழிகாட் டியே தவம். தவம் என்பது ஓர் உணர்ச்சி, உணர்ச்சிப் பேரலை. அன்பின் அடுத்த நிலை பாசம் பாசத்தின் அடுத்த நிலை காதல் காதலின் அடுத்த நிலை பத்தி அந்தப்பத்தியின் அடுத்த நிலையே தவம். எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்தில் இருத்தி உணர்ச்சி அலைகளால் வணங்கி காதலால் புகழும் பேர் உணர்ச்சிய தவம். பத்தி என்பது உணரப்படுவது. முத்தி என்பது ஆற்றப் படுவது.உணரப்படும் பத்திக்கும் ஆற்றப்படும் முத்திக்கும் இடையிலே இருக்கின்ற உணர்ச்சிப் பெரும் கூறே தவம் எனலாம். சரி இப்போது பற வைக்கு வருவோம். கூண்டிலே அடைபட்ட பத்தி எனும் நுண்ணிய உணர்வை முத்தி எனும் அளவிட முடியாத செயற்பாட்டுக்கு வழிகாட்டும் ஒரு சிறந்த வழிகாட்டியே தவம் என்றும் இன்னொரு முறையில் சொல்லலாம். தவம் என்றவுடன் உறவு, உணர்ச்சி, உடமை, கடமை, எல்லாவற்றையும் துறந்து விட்டு கோவணத்துடனும் கமண்டலத்துடனும் காட்டிற்கு செல்வதை தான் பலர் நினைக்கின் றார்கள். உண்மையில் அது தவமே இல்லை. அது ஓர் துறவு நிலை தான். அப்படி என்றால் உண்மைத்தவம் எது? அந்த தவத்தின் இயல்பு என்ன என்று தேடினால் அதற்கு ஒரு பதில் தான் அமைகின்றது பத்தி நிலையின் உச்ச வளர்ச்சிக் கட்டம் தவம். "ஆன்கன்று தேடி அழைக்கும் அதுபோல் நான்கன்றாய் நாடி அழைத்தன் என்நாதனை வான்கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றால் நாடிவந்து உள் புகுந்தானே" சரி கன்றின் பார்வையில் இருந்து இவற்றை திருமூலர் சொல்லி விட்டு இனி தாயின் பார்வைக்கு வருகின்றார். தேவர்களுக்கு எல்லாம் மேலான, தேவர்களாலும் உணர முடியாத அந்த நுண்ணிய மறைபொருள் ஆகிய ஈசன் தசைகளாலும் என்புகளாலும் நரம்புகளாலும் ஆக்கப்பட்ட இந்த ஊன் உடலில் அடைந்து இருந்த என்னையும் விரும்பி எனக்கும் அருளும் பொருட்டு என்னை நாடி வந்து என் உள்ளத்தில் எழுந்தானே என்று கூறுகின்றார். இறைவன் கண்ணெதிரே தோன்றினான் என்று கூட திருமூலர் சொல்லவில்லை. என் உள்ளத்து உணர்ச்சிகளில் நிறைந்தான் என்றே சொல்கின்றார். இதன் பெயர் தான் பத்தி. தென்னாடு Hace.co 'முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ அத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவம் செய்கை வினை விட்ட மெய் உண்மையைப் பத்தியில் உற்றோர் பரானாந்த போதரே” தேடி தவத்தின் மூலம் உயிர் முயற்சிக்கும் போது, அவற்றுக்கு இடைஞ்சல் தரும் விதமாக மனம், வாக்கு போன்ற நாற்காரணங்கள் வருகின்றன என்று கூற விரும்பிய திருமூலன், அழைக்கப்படும் தேவர்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட, ஒளியைப்பார்த்து அதிலேப் போதையுற்று மயங்கி அதை அதற்கும் ஓர் உவமை வைத்தான். விளக்கிலே எரியும் வான்கன்று, வானவர், உம்பர், அமரர் என்று எல்லாம் அடைந்து பொசுங்கி இறக்கும் வீட்டில் பூச்சிகளைப் போல என் மனம் இவற்றால் அலை பாய்கின்றது என்று கூறுகின்றார். தவத்தை விளக்க வந்த மூலர் முத்தியை பழத்துக்கும், உயிரை பறவைக்கும் ஒப்பிட்ட ஒப்பீடே பெரும் செம்மை வாய்ந்தது எனத் தெளிந்துபோகலாம். ஒரு மரத்தை எடுத்துக்கொள்வோம். அந்த மரம் எடுத்தவுடன் ஒரு நொடியில் காய்த்துக்கனியாது. உரிய காலம் வரத்தான் அம்மரம் பூக்கும். பூத்ததும் கொட்டிப்போகும் பூக்கள் நிறைய, அவ்வாறு கொட்டாமல் மரத்திலே நிற்கும் பூவானது மகரந்தச் செயற்கைக்கு உட்பட்டு சூல் கொண்டு பிஞ்சாதல் வேண்டும். இவ்வாறு வந்த பிஞ்சு முற்றி காயாக வேண்டும். காய், காலம் வந்த பின்பு கனிய வேண்டும். இது தான் பழத்தின் செயன்முறை. மலராகிய உயிர் அன்பினால் பிஞ்சாகி பத்தியால் காயாகி தவத்தினாலே கனியாகும். கனியாக முதல் அந்தக்காயை மரமும் விடாது மரத்தை காயும் விடாது. இழுத்துப்பற்றி பிடுங்கினால் தான் இரண்டும் தனியாகும் அதுவும் முழுமையாக நடைபெறாது இரண்டு பகுதியிலும் சேதமுற்று நீரை வெளியேற்றித்தான் பிரியும். ஆனால் பழம் அவ்வாறில்லை. அது கனிந்த நிலை. எந்தவொரு சேதாரமும் இல்லாமல் மரத்திலிருந்து அதுவாகவே கழன்று விடும். மரமும் அதைப்பற்றிப்பிடித்து வைத்திருக்காது. மற்றைய நிலைகளில் உயிர் போவது காய், பிஞ்சு போன்றவற்றை பிடுங்குவது போல சற்றுக்கடினமானது. ஆனால் தவத்தின் மூலம் அடைந்த முத்தி நிலையில் பழம் போல அதுவாகவே இலகுவாகப் பிரிந்து விடும். இதே தமிழ்ச் சித்தன் தன் இன்னோர் பாடலில் சிலவற்றை தெளித்துப் போகின்றான். மேலே குறிப்பிட்ட பத்தி எனும் உணர்ச்சியில் மூழ்கி மூழ்கித் திளைத்தவர்கள், முத்தி நிலைக்கு மெல்ல மெல்ல செல்வார்களாம். இவ்வாறு செல்லும் பாதையில் தம் செருக்கு, தீயகுணம், மலங்கள் போன்ற தேவை அற்ற அறிவுகளை நினைவில் இருந்து அகற்றி சிவம் எனும் ஒருவித போதை அல்லது இன்பமய உணர்வில் மூழ்கி இருப்பார்களாம். இதன் பெயர் தான் மெய்த்தவம் என்று உறுதிபட அறுதியிட்டுப் போகின்றார் பெருமூலர். இவ்வாறான உண்மைப்பத்தி நிலையில் இருப்பவர்கள் தான் முத்தியும் பத்தியும் சித்தியும் கூடியவர்கள் என்று இது சைவத்தமிழ் ஆகமப்பெருஞ்சித்தர் என்று புகழப்படும் திருமூலனின் வார்த்தைகள். பத்தியின் தவ முதிர்ச்சியை இந்த வாக்கியங்கள் சுட்டி நிற்கின்றன. பத்தியை தாய்மையோடு ஒப்பிட்டு நோக்க நினைத்த திருமூலர் தாய்மைக்கு சிறந்த உதாரணம் எதுவாக இருக்கும் என்று நினைத்தார். நினைத்த மாத்திரத்தில் அவரின் நினைவில் ஓர் உவமை தோன்றியது. அந்த உவமையை உருவேற்றிப் பின்வருமாறு வருணிக்கின்றார். ஒரு தாய்ப்பசுவும் சேய்ப்பசுவும் இருக்கின்றது. இப்போது அந்த சேய்ப்பசுவை தாயிடம் இருந்து பிரிக்கின்றோம். அந்த சேய்ப்பசு தாயைப்பிரிந்து கதறி கதறி தாய்ப்பசுவை அழைக்கும். சரி இந்த உதாரணத்தை சொல்லி விட்டு திருமூலப்பெருஞ்சித்தன் அடுத்த வரிகளில் தேனாக ஒன்றை தவத்தின் மூலம் முத்தியை நாடி உயிர் செல்கின்றது. சொல்லிப்போகின்றார். அந்தப்பசுவிடம் இருந்து அக்கன்றை பிரித்த போது அந்தக்கன்றுக்கு எவ்வளவு வலித்திருக்கும் எவ்வளவு கதறி இருக்கும். அதைப்போல என்னை சிவத்திடம் இருந்து இந்த வினை பிரித்துவிட்டது. ஆகவே என் தாயாகிய, இதற்கு எதை உவமானமாக கூறலாம் என்று நினைத்த மூலன் யோசனையின் பின் கூறினான். ஒரு நன்றாகப் பழுத்த பழத்தை நாடிப் பறவை செல்வதைப் போல உயிராகிய பறவையானது பழமாகிய முத்தியை நோக்கி செல்கின்றது நாதனாகிய ஈசனைத்தேடி அந்தக்கன்றைப்போல கதறிக்கதறி என்று உவமிக்கின்றான் பெருமூலன். இவ்வாறு முத்தியை அடுத்த வரியில் பதில் அறைகின்றான். வானத்துக்குள் அழுகின்றேன் என்று இயம்புகின்றார். கடவுள் உண்டு என்று தேடுபவர்களே. தேனில் எப்படி இன்பம் நிறம் அற்று உள்ளதோ அது போல் உனக்குள் உருவு அற்று உணர்ச்சியாய் இறைந்தவனே ஈசன் என்று இயம்பிப்போகின்றார். இந்த உணர்வுப்பெரும்பொருளின் உணர்ச்சி வழிகாட்டியே தவம். அறுதியிடுகின்றார். இதுவே பத்தி தவமாகும் பெருநிலை என்று கூறலாம். இவ்வளவும் சென்ன பெருஞ்சித்தன் தவத்திற்கு நேரும் இடைஞ்சலைப்பற்றி சொல்லாமல் போவானா. அதையும் கீழ்க்கண்ட பாடலில் விளக்குகின்றான். "வளங்கனி தேடிய வன்தாள் பறவை உளங்கனி தேடி வழி தரும் போது களங்கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடு கின்றாரே" பறவை போன்றது தான் இந்த உயிர். உடல் எனும் கூண்டிலே அடைக்கப்பட்ட பறவை. இதிலிருந்து வெளியே வரும் விடுதலைதான் முத்தி. அந்த விடுதலைக்கான திறப்பே தவம். கூண்டிலே இருக்கும் பறவைக்கு உணவு, நீர் போன்ற சிறு இன்பங்கள் கிடைக்கும். ஆனால் சுதந்திரம் எனும் பேரின்பத்தை முடக்கும் துன்பமும் அதில் உண்டு. ஆனால் சுதந்திரப் பறவைக்கு நீர், உணவு போன்றன இலகுவில் கிடைக்க மாட்டாது. இருப்பினும் சுதந்திரம் எனும் உன்னத நிலை அவற்றிடம் உண்டு. அஃதை ஒத்தது தான் உயிர். உடலோடு ஒட்டி வாழும் எம் உயிருக்கு எத்தனையோ இன்பங்கள் உண்டு.காமம், மகிழ்ச்சி, போதை என அப்பட்டியல் நீளு கின்றது. ஆனால் அதே அளவுக்கு துன்பங் களும் உண்டு. கூட்டிலே அடைப்பட்டு துன்பமுறும் பறவை கூட்டை விட்டு பறப்பது போல உண்மையான முத்தியை நாம் பெற்றால் அதே மகிழ்ச்சியுடன் எம்முடலை விட்டு உயிர் பிரியும். சுதந்திரம் பெற்ற பறவையைப் போல உயிரும் பிரியும். இதுவல்லோ தவத்தின் சிறப்பு, சிவானந்தத்தின் பேர் அருள், சிந்தையில் ஊறும் தேன். விட்டில்ப் பூச்சியைப்போல எம்மை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் மனத்தை கட்டுப்படுத்தி பேர் ஆனந்தத்தைப்பெறும் பெரும் மனநிலை தான் தவம் என்றும் சொல்லலாம். தெ 11 "தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே" "தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ஆம் சிவமே பெறும் திருஎய் திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம் பம்பபரனே” தெ யாழவன் சிவவேதன் இது திருமூலனின் பெருந்தவக்கோட்பாடு. இறைவன் என்ற ஒப்பற்ற கடவுளும் அவன் வழிபாடும் பத்தியும் தவமும் உணர்ச்சியின் சாற்றுப்பிழிவுகள் என்று சாற்றிப்போகின்றான். ஒரு கேள்வியை தொடுக்கின்றான். தேனுடைய சுவை சிவப்பா கறுப்பா?. என்ன கேள்வி இது, என்று உடனே மூளை ஒரு கணம் சிந்தித்திருக்கும். அதற்கு "நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” திருச்சிற்றம்பலம் இது வாதவூரனின் திருவாசகத்தில் ஒரு பாடல். சிவனே உன்னை வணங்கவில்லை. உன்னை நினைத்து தவம் செய்யவில்லை. மலரிட்டு வழிபடவில்லை. உன் அடியார்களோடு நட்பாகவில்லை ஆதலால் இந்தப்பிறவியே எனக்கு வேண்டாம். உன்னை நினைத்து தவம் புரிய வேறு ஓர் பிறவி தா என்ற விதத்தில் இந்தப்பாடல் அமைகின்றது. அஃதே தவம். அது தான் தவம். உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாத இறைவனை உள்ளத்து உணர்ச்சியில் வைத்துப்ப்போவதே தவம். ஆதலால் தவம் எனும் உணர்வு சார்ந்து அருள் எனும் இறைவனாகிய பேர் உணர்வை அடைவோம்.
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 தவத்தினாற் பெறும் பயன் வாழ்க்கைக்கும் உறவுக் கும் பிறப்புக்குமான தொடர்பை அறுப்பதே முத்தி அதன் வழிகாட் டியே தவம் . தவம் என்பது ஓர் உணர்ச்சி உணர்ச்சிப் பேரலை . அன்பின் அடுத்த நிலை பாசம் பாசத்தின் அடுத்த நிலை காதல் காதலின் அடுத்த நிலை பத்தி அந்தப்பத்தியின் அடுத்த நிலையே தவம் . எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்தில் இருத்தி உணர்ச்சி அலைகளால் வணங்கி காதலால் புகழும் பேர் உணர்ச்சிய தவம் . பத்தி என்பது உணரப்படுவது . முத்தி என்பது ஆற்றப் படுவது.உணரப்படும் பத்திக்கும் ஆற்றப்படும் முத்திக்கும் இடையிலே இருக்கின்ற உணர்ச்சிப் பெரும் கூறே தவம் எனலாம் . சரி இப்போது பற வைக்கு வருவோம் . கூண்டிலே அடைபட்ட பத்தி எனும் நுண்ணிய உணர்வை முத்தி எனும் அளவிட முடியாத செயற்பாட்டுக்கு வழிகாட்டும் ஒரு சிறந்த வழிகாட்டியே தவம் என்றும் இன்னொரு முறையில் சொல்லலாம் . தவம் என்றவுடன் உறவு உணர்ச்சி உடமை கடமை எல்லாவற்றையும் துறந்து விட்டு கோவணத்துடனும் கமண்டலத்துடனும் காட்டிற்கு செல்வதை தான் பலர் நினைக்கின் றார்கள் . உண்மையில் அது தவமே இல்லை . அது ஓர் துறவு நிலை தான் . அப்படி என்றால் உண்மைத்தவம் எது ? அந்த தவத்தின் இயல்பு என்ன என்று தேடினால் அதற்கு ஒரு பதில் தான் அமைகின்றது பத்தி நிலையின் உச்ச வளர்ச்சிக் கட்டம் தவம் . ஆன்கன்று தேடி அழைக்கும் அதுபோல் நான்கன்றாய் நாடி அழைத்தன் என்நாதனை வான்கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றால் நாடிவந்து உள் புகுந்தானே சரி கன்றின் பார்வையில் இருந்து இவற்றை திருமூலர் சொல்லி விட்டு இனி தாயின் பார்வைக்கு வருகின்றார் . தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவர்களாலும் உணர முடியாத அந்த நுண்ணிய மறைபொருள் ஆகிய ஈசன் தசைகளாலும் என்புகளாலும் நரம்புகளாலும் ஆக்கப்பட்ட இந்த ஊன் உடலில் அடைந்து இருந்த என்னையும் விரும்பி எனக்கும் அருளும் பொருட்டு என்னை நாடி வந்து என் உள்ளத்தில் எழுந்தானே என்று கூறுகின்றார் . இறைவன் கண்ணெதிரே தோன்றினான் என்று கூட திருமூலர் சொல்லவில்லை . என் உள்ளத்து உணர்ச்சிகளில் நிறைந்தான் என்றே சொல்கின்றார் . இதன் பெயர் தான் பத்தி . தென்னாடு Hace.co ' முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ அத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவம் செய்கை வினை விட்ட மெய் உண்மையைப் பத்தியில் உற்றோர் பரானாந்த போதரே தேடி தவத்தின் மூலம் உயிர் முயற்சிக்கும் போது அவற்றுக்கு இடைஞ்சல் தரும் விதமாக மனம் வாக்கு போன்ற நாற்காரணங்கள் வருகின்றன என்று கூற விரும்பிய திருமூலன் அழைக்கப்படும் தேவர்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒளியைப்பார்த்து அதிலேப் போதையுற்று மயங்கி அதை அதற்கும் ஓர் உவமை வைத்தான் . விளக்கிலே எரியும் வான்கன்று வானவர் உம்பர் அமரர் என்று எல்லாம் அடைந்து பொசுங்கி இறக்கும் வீட்டில் பூச்சிகளைப் போல என் மனம் இவற்றால் அலை பாய்கின்றது என்று கூறுகின்றார் . தவத்தை விளக்க வந்த மூலர் முத்தியை பழத்துக்கும் உயிரை பறவைக்கும் ஒப்பிட்ட ஒப்பீடே பெரும் செம்மை வாய்ந்தது எனத் தெளிந்துபோகலாம் . ஒரு மரத்தை எடுத்துக்கொள்வோம் . அந்த மரம் எடுத்தவுடன் ஒரு நொடியில் காய்த்துக்கனியாது . உரிய காலம் வரத்தான் அம்மரம் பூக்கும் . பூத்ததும் கொட்டிப்போகும் பூக்கள் நிறைய அவ்வாறு கொட்டாமல் மரத்திலே நிற்கும் பூவானது மகரந்தச் செயற்கைக்கு உட்பட்டு சூல் கொண்டு பிஞ்சாதல் வேண்டும் . இவ்வாறு வந்த பிஞ்சு முற்றி காயாக வேண்டும் . காய் காலம் வந்த பின்பு கனிய வேண்டும் . இது தான் பழத்தின் செயன்முறை . மலராகிய உயிர் அன்பினால் பிஞ்சாகி பத்தியால் காயாகி தவத்தினாலே கனியாகும் . கனியாக முதல் அந்தக்காயை மரமும் விடாது மரத்தை காயும் விடாது . இழுத்துப்பற்றி பிடுங்கினால் தான் இரண்டும் தனியாகும் அதுவும் முழுமையாக நடைபெறாது இரண்டு பகுதியிலும் சேதமுற்று நீரை வெளியேற்றித்தான் பிரியும் . ஆனால் பழம் அவ்வாறில்லை . அது கனிந்த நிலை . எந்தவொரு சேதாரமும் இல்லாமல் மரத்திலிருந்து அதுவாகவே கழன்று விடும் . மரமும் அதைப்பற்றிப்பிடித்து வைத்திருக்காது . மற்றைய நிலைகளில் உயிர் போவது காய் பிஞ்சு போன்றவற்றை பிடுங்குவது போல சற்றுக்கடினமானது . ஆனால் தவத்தின் மூலம் அடைந்த முத்தி நிலையில் பழம் போல அதுவாகவே இலகுவாகப் பிரிந்து விடும் . இதே தமிழ்ச் சித்தன் தன் இன்னோர் பாடலில் சிலவற்றை தெளித்துப் போகின்றான் . மேலே குறிப்பிட்ட பத்தி எனும் உணர்ச்சியில் மூழ்கி மூழ்கித் திளைத்தவர்கள் முத்தி நிலைக்கு மெல்ல மெல்ல செல்வார்களாம் . இவ்வாறு செல்லும் பாதையில் தம் செருக்கு தீயகுணம் மலங்கள் போன்ற தேவை அற்ற அறிவுகளை நினைவில் இருந்து அகற்றி சிவம் எனும் ஒருவித போதை அல்லது இன்பமய உணர்வில் மூழ்கி இருப்பார்களாம் . இதன் பெயர் தான் மெய்த்தவம் என்று உறுதிபட அறுதியிட்டுப் போகின்றார் பெருமூலர் . இவ்வாறான உண்மைப்பத்தி நிலையில் இருப்பவர்கள் தான் முத்தியும் பத்தியும் சித்தியும் கூடியவர்கள் என்று இது சைவத்தமிழ் ஆகமப்பெருஞ்சித்தர் என்று புகழப்படும் திருமூலனின் வார்த்தைகள் . பத்தியின் தவ முதிர்ச்சியை இந்த வாக்கியங்கள் சுட்டி நிற்கின்றன . பத்தியை தாய்மையோடு ஒப்பிட்டு நோக்க நினைத்த திருமூலர் தாய்மைக்கு சிறந்த உதாரணம் எதுவாக இருக்கும் என்று நினைத்தார் . நினைத்த மாத்திரத்தில் அவரின் நினைவில் ஓர் உவமை தோன்றியது . அந்த உவமையை உருவேற்றிப் பின்வருமாறு வருணிக்கின்றார் . ஒரு தாய்ப்பசுவும் சேய்ப்பசுவும் இருக்கின்றது . இப்போது அந்த சேய்ப்பசுவை தாயிடம் இருந்து பிரிக்கின்றோம் . அந்த சேய்ப்பசு தாயைப்பிரிந்து கதறி கதறி தாய்ப்பசுவை அழைக்கும் . சரி இந்த உதாரணத்தை சொல்லி விட்டு திருமூலப்பெருஞ்சித்தன் அடுத்த வரிகளில் தேனாக ஒன்றை தவத்தின் மூலம் முத்தியை நாடி உயிர் செல்கின்றது . சொல்லிப்போகின்றார் . அந்தப்பசுவிடம் இருந்து அக்கன்றை பிரித்த போது அந்தக்கன்றுக்கு எவ்வளவு வலித்திருக்கும் எவ்வளவு கதறி இருக்கும் . அதைப்போல என்னை சிவத்திடம் இருந்து இந்த வினை பிரித்துவிட்டது . ஆகவே என் தாயாகிய இதற்கு எதை உவமானமாக கூறலாம் என்று நினைத்த மூலன் யோசனையின் பின் கூறினான் . ஒரு நன்றாகப் பழுத்த பழத்தை நாடிப் பறவை செல்வதைப் போல உயிராகிய பறவையானது பழமாகிய முத்தியை நோக்கி செல்கின்றது நாதனாகிய ஈசனைத்தேடி அந்தக்கன்றைப்போல கதறிக்கதறி என்று உவமிக்கின்றான் பெருமூலன் . இவ்வாறு முத்தியை அடுத்த வரியில் பதில் அறைகின்றான் . வானத்துக்குள் அழுகின்றேன் என்று இயம்புகின்றார் . கடவுள் உண்டு என்று தேடுபவர்களே . தேனில் எப்படி இன்பம் நிறம் அற்று உள்ளதோ அது போல் உனக்குள் உருவு அற்று உணர்ச்சியாய் இறைந்தவனே ஈசன் என்று இயம்பிப்போகின்றார் . இந்த உணர்வுப்பெரும்பொருளின் உணர்ச்சி வழிகாட்டியே தவம் . அறுதியிடுகின்றார் . இதுவே பத்தி தவமாகும் பெருநிலை என்று கூறலாம் . இவ்வளவும் சென்ன பெருஞ்சித்தன் தவத்திற்கு நேரும் இடைஞ்சலைப்பற்றி சொல்லாமல் போவானா . அதையும் கீழ்க்கண்ட பாடலில் விளக்குகின்றான் . வளங்கனி தேடிய வன்தாள் பறவை உளங்கனி தேடி வழி தரும் போது களங்கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடு கின்றாரே பறவை போன்றது தான் இந்த உயிர் . உடல் எனும் கூண்டிலே அடைக்கப்பட்ட பறவை . இதிலிருந்து வெளியே வரும் விடுதலைதான் முத்தி . அந்த விடுதலைக்கான திறப்பே தவம் . கூண்டிலே இருக்கும் பறவைக்கு உணவு நீர் போன்ற சிறு இன்பங்கள் கிடைக்கும் . ஆனால் சுதந்திரம் எனும் பேரின்பத்தை முடக்கும் துன்பமும் அதில் உண்டு . ஆனால் சுதந்திரப் பறவைக்கு நீர் உணவு போன்றன இலகுவில் கிடைக்க மாட்டாது . இருப்பினும் சுதந்திரம் எனும் உன்னத நிலை அவற்றிடம் உண்டு . அஃதை ஒத்தது தான் உயிர் . உடலோடு ஒட்டி வாழும் எம் உயிருக்கு எத்தனையோ இன்பங்கள் உண்டு.காமம் மகிழ்ச்சி போதை என அப்பட்டியல் நீளு கின்றது . ஆனால் அதே அளவுக்கு துன்பங் களும் உண்டு . கூட்டிலே அடைப்பட்டு துன்பமுறும் பறவை கூட்டை விட்டு பறப்பது போல உண்மையான முத்தியை நாம் பெற்றால் அதே மகிழ்ச்சியுடன் எம்முடலை விட்டு உயிர் பிரியும் . சுதந்திரம் பெற்ற பறவையைப் போல உயிரும் பிரியும் . இதுவல்லோ தவத்தின் சிறப்பு சிவானந்தத்தின் பேர் அருள் சிந்தையில் ஊறும் தேன் . விட்டில்ப் பூச்சியைப்போல எம்மை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் மனத்தை கட்டுப்படுத்தி பேர் ஆனந்தத்தைப்பெறும் பெரும் மனநிலை தான் தவம் என்றும் சொல்லலாம் . தெ 11 தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ஆம் சிவமே பெறும் திருஎய் திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம் பம்பபரனே தெ யாழவன் சிவவேதன் இது திருமூலனின் பெருந்தவக்கோட்பாடு . இறைவன் என்ற ஒப்பற்ற கடவுளும் அவன் வழிபாடும் பத்தியும் தவமும் உணர்ச்சியின் சாற்றுப்பிழிவுகள் என்று சாற்றிப்போகின்றான் . ஒரு கேள்வியை தொடுக்கின்றான் . தேனுடைய சுவை சிவப்பா கறுப்பா ?. என்ன கேள்வி இது என்று உடனே மூளை ஒரு கணம் சிந்தித்திருக்கும் . அதற்கு நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் திருச்சிற்றம்பலம் இது வாதவூரனின் திருவாசகத்தில் ஒரு பாடல் . சிவனே உன்னை வணங்கவில்லை . உன்னை நினைத்து தவம் செய்யவில்லை . மலரிட்டு வழிபடவில்லை . உன் அடியார்களோடு நட்பாகவில்லை ஆதலால் இந்தப்பிறவியே எனக்கு வேண்டாம் . உன்னை நினைத்து தவம் புரிய வேறு ஓர் பிறவி தா என்ற விதத்தில் இந்தப்பாடல் அமைகின்றது . அஃதே தவம் . அது தான் தவம் . உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாத இறைவனை உள்ளத்து உணர்ச்சியில் வைத்துப்ப்போவதே தவம் . ஆதலால் தவம் எனும் உணர்வு சார்ந்து அருள் எனும் இறைவனாகிய பேர் உணர்வை அடைவோம் .