தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

தெ 04 தென்னாடு செந்தமிழாசும சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org ஆணை பிறந்தது! பரந்து விரிந்து செந்தமிழின் காப்பரணாய் நிற்கும் தமிழகம். அதன் வரலாற்றில் ஏராளம் அரசியல் மாற்றங்களைத் தாங்கிப் பயணித்திருக்கிறது. தடைகளும் தடங்கல்களும் வந்த போதெல்லாம், தமிழைத் தன் கருவில் வைத்துக் காத்திருக்கின்றது. வடநாட்டவரும், பிறநாட்டவரும் ஆண்ட போதும் தன் மொழிக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்ட அந்த மண், அதற்காகச் சில இழப்புக்களையும் தாங்கியிருக்கின்றது. உயிர்ப்பு நிலையிலேனும் தமிழை வைத்திருக்கும் பொருட்டு, சிலவிட்டுக் கொடுப்புக்களை சகித்தபடியே தாரைவார்த்தது! அல்லது திணிப்புக்களை வேறுவழியின்றித் தன் தலையில் சுமந்தது! அந்தத் திணிப்புக்களில் முக்கியமானது, கருவறைக்குள் வடமொழியைத் திணித்ததும், தமிழின் வழிபாட்டுத் தகுதியைத் தடுத்ததுமேயாகும்! வடமொழியே “தேவபாஷை" என்றும், அதில் வணங்கினாலே இறைவனுக்கு விளங்கும் என்றும், கதைசொல்ல, அருள் மொழியாகிய தமிழை கருவறைகளில் இருந்து தள்ளிவைக்க எந்த அதிகாரம் துணை நின்றதோ அந்த அதிகாரமே, இன்று தமிழை அர்ச்சுனை மொழியாக அறிவித்திருக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி, தமிழகத்தின் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்! முகமதியர்களின் அதிகாரம், கி.பி 1363 இல் அதாவது ஏறத்தாழ முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மதுரைச் சிற்றரசர்கள் நாயக்க மன்னனான, விஜயநகர வேந்தன் குமாரதம்பண்ணனின் உதவியை நாடியதால் தமிழகத்தில் இருந்து இல்லாமல் போனது! ஆனால் விஜயநகரப் பிரதிநிதிகளின் அதிகாரம் தலைதூக்கியது! தெலுங்கர்களான விஐநயநரகப் பேரரசின் பிரதிநிதிகள், தம் கலப்பினத்தன் அதிமொழியாகிய வடமொழியை வழிபாட்டு மொழியாக்கி, தெலுங்குப் பிராமணர்களையும் தமிழகம் எங்கும் குடியமர்த்தினர்! இவ்வாறு, பல்லவர் காலத்தில் மெல்ல நுழைந்த வடமொழி, விஜயநகரப் பேரரசின் காலத்தில் தலைதூக்கி நிமிர்ந்து நின்றது! கோயில்களில் எல்லாம் தமிழை மறைத்து, வடமொழியே ஒலித்தது! செந்தமிழ் குமரன் நின்று அருள்புரியும் பழனியில், ராமயைன் என்கிற விஐயநகர மன்னனின் பிரதிநிதி வழிபாட்டுக்காகக் கலந்து கொண்டதாகவும், அங்கு நடைபெற்ற தமிழ்மறை மந்திர வழிபாட்டை நிறுத்தி, வடமொழி வழிபாட்டை ஆரம்பித்து வைத்ததாகவும், செப்பு பட்டயம் ஒன்று செய்தி சொல்கிறது! அதிகாரத்தை பெற அழைத்தவர்களால் தாம் அடிமைப்பட்டதை உணர்ந்தும், உணராது சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர்! கோயில்களில் இருந்த ஏராளம் தேவாரக் கல்வெட்டுக்களும், தமிழ் மந்திர ஏடுகளும், ‘குகையிடிகலகத்தை' சாட்டாக வைத்து இடித்தும் ஏரித்தும் அழிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வார்கள்! என்ன துயரம் வந்த போதும், தில்லையில் தேவாரங்கள் ஏடுகளில் ஊறிக்கிடந்தன! நம்பியாண்டார் நம்பியையும், இராராஐசோழனையும் எதிர்பார்த்துக் கிடந்தன! காலம் கறையானிடம் கொடுத்தது போக, மிகுதியை எம் கைகளில் கொடுத்த போதும், களப்பிரரும், பல்லவரும், விஜயநகரப் பேரரசும் ஏற்படுத்திய வழிபாட்டு முறையில் இருந்து முற்றாக எம்மால் வெளியே வரமுடியவேயில்லை! தமிழ் இரண்டாம் நிலையே பெற்று கருவறைகளுக்கு வெளியே ஒலித்தது! ஓதுவார்களும், ஆய்வளர்களும், பதிப்பாசிரியர்களும் காலத்துக்கு காலம் தம் உயிரையும், வாழும் நாளையும் உருக்கி தமிழ் மந்திரங்களைத் தலைமுறை தாண்டியும் கடத்தி வந்தனர்! ஒரு பகுதியினருக்கு மட்டுமே மந்திரம் ஓதும் தகுதி உண்டு என்ற இடைவந்த இழிநிலையைத் தலைநிலையெனக் கருதியும் ஒருசிலர் தம்பட்டம் அடித்து வணங்கியதை, சேக்கிழார் தன் தேடலின் தெளிவால், பெரியபுராணம் என்கிற தெய்வநூலைத் தந்து தகர்த்தெறிந்தார்! இறைவனை அடைய சாதியும், தொழிலும் தடையில்லை என்றதை இச்சமூகம் அறிந்தது ஆயினும், தெளிவு பெற மிக நீண்டகாலம் தேவைப்பட்டது! வடமொழி ஓதுவது அதிகாரம் என்றும் அது பிராமணர் அல்லாதவர்க்கு இல்லை என்றும் காலாகாலமாக நிலவிய ஆதிக்கம் கடந்த ஆண்டுகளில் இளகியே போனது! எந்த அதிகாரம் தமிழைத் தள்ளிவைத்ததோ, அந்த அதிகாரம், இறைத் தமிழைத் திருத்தலக் கருவறைகளில் ஒலிக்க ஆணை பிறப்பித்திருக்கிறது! அண்மைய செய்திகளின்படி, ஆரியப் பிராமணர் சிலர், 'இதனால் தாம் மன உளைச்சல்' அடைவதாகப் பொதுவெளியில் பகிர்ந்திருந்தாலும், கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்கள் இனிப் புரியும் மொழியில் இறைமொழி கேட்கத் தம் செவிகளில் தேன்தமிழ் பாயத் தென்னாடுடைய சிவனை போற்றி வணங்குவார்! திருச்சிற்றம்பலம் AY தென்னாடு அன்றும் இன்றும் மானிப்பாயில் மதமாற்றத்தினை தடுக்கும் காப்பு அரண் மானிப்பாய் இந்துக் கல்லூரி MAUL MAHAS _______L மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 மானிப்பாய் இந்துக் கல்லூரி COLLEGE திங்கள் ஒரு பள்ளி திரு. வே. சங்கரப்பிள்ளை அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்தில் அவரால் பாடசாலைக்கான அத்திவாரக் கல் பிரதம நீதியரசர் ஜோசப். ஹட்சின்சன் (Joseph Hutchinson) அவர்களால் 1910 ஆடி மாதம் 4ஆம் திகதி நாட்டப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப் பட்டது. அதற்கிணங்க 1910ஆம் வருடம் ஆடி மாதம் 4ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜோசப். ஹட்சின்சன் அவர்களால் இக்கல்லூரியின் அத்திவாரக் கல் நாட்டப்பட்டது. கட்டிடம் பூர்த்தியானதும், அவ்வளவு காலமும் மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் இயங்கிய இப்பாடசாலை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அன்று தொட்டு ஆடி மாதம் நான்காம் திகதியிலேயே கல்லூரி விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் கட்சிசன் மண்டபமும் அதனுடன் இருந்த 6 வகுப்புக்களுமே காணப்பட்டன. மேல் மாடியுடன் கட்டத் தொடங்கிய இம் மண்டபம் திரு. வே. சங்கரப்பிள்ளை அவர்களின் மறைவினால் தனிக்கட்டிட மாகவே அமைந்துவிட்டது. அன்று அவர் விதைத்த விதைதான் இன்று முளைத் துப்பெருமரமாகிபூத்துக்காய்த்து கனித்து பெரும் பயனளித்துவருகின்றது. இவ்வாறு எழுச்சி பெற்ற எமது கல்லூரியின் முதல் அதிபர் (1910ல்) திரு. எஸ்.வீரசுவாமிப்பிள்ளை (B.A) ஆவர். இவர் மாணவரின் ஒழுங்கு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியவராவார். பிற்காலத்தில் இராமநாதன் கல்லூரி அதிபராகவும் தர்ம அசோகக் கல்லூரியின் கணிதப் பேராசிரியராகவும் கடமையாற்றியவர். அவரைத் தொடர்ந்து 1911ல் திரு.பி. சபாபதிப்பிள்ளை (B.ALT) அவர்கள் மூன்று ஆண்டுகள் இரண்டாவது அதிபராகப் பணியாற்றினார். 1911இல் திரு.ஜி.சிவராவ் (B.ALT) அவர்கள் அதிபரானார். இவர் சிறந்த கல்வி நிர்வாகியாவார். 1914இல் திரு. பி. சபாபதிப்பிள்ளை B.A, திரு. ஆ. சபாரட்ணசிங்கி B.A ஆகியோர்கல்லூரியின் அதிபர் பதவியை வகித்தனர். திரு. சபாரத்தின சிங்கி அவர்கள் இணைப் பாடவிதான செயற் பாடுகளுக்கு முக்கியம் கொடுத்தார். (05ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். அதிபர்கள் தங்கள் பெயரை வைக்காமல் சமயக்குரவர் களின் பெயரை இல்லங்களின் பெயர்களாக அலங் கரித்து மகிழ்ந்த பெருமை மானிப்பாய் இந்துவையே சாரும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மிசனறிமார்களால் மேற்கொள்ளப்பட்ட சமயப் பிரச்சாரம் காரணமாகப் பெருந்தொகையான இந்து, பௌத்த மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவிக் கொண்டனர். இக்கால கட்டத்தில் ஆங்கிலக் கல்விக்கும், கிறித்தவ சமயத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நோக்குடன் இந்து, பௌத்த சமயத்தவர்கள் மிசனறிப் பாடசாலையில் கல்வி கற்பதில் நாட்டம் கொண்டனர். இக்கால வேளையில் "தோன்றிற்புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற்தோன்றாமை நன்று” என்ற பொய்யாமொழிக்கிணங்க அவதரித்த நாவலர் பெருமான் இம்மத மாற்றத்திற்கு எதிரான சைவ சமய ஆதரவு நடவடிக்கையினை மேற்கொண்டார். இக்கால கட்டத்தில் மானிப்பாய் இந்து சமயச் சூழலில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்க ஏற்ற பாடசாலை இல்லாக்குறை, மானிப்பாய் வாசிகளால் உணரப்பட்டது. இவ்வுணர்வு 1910ம் வருடம் மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் திரு. மைரோன் பிலிப்ஸ் (Myron Phelps) என்பவரால் ஆற்றப் பட்ட உரையினால் ஊக்குவிக்கப்பட் டது. இதனால் மானிப்பாயில் உள்ள வசதிமிக்க சிலர் எஸ். கே. லௌடன் (Lowdan) அவர்கள் தலைமையில் ஒன்றுகூடிப் பாடசாலை கட்ட பணம் சேர்க்கத் தொடங்கினர். இக்குழு முதலாவதாகச் சந்தித்த நபர் திரு. வே. சங்கரப்பிள்ளை அவர்களாவார். மானிப்பாயின் முன்னணி வதிவிடராகத் திகழ்ந்த திரு. வே. சங்கரப்பிள்ளை அவர்கள் கட்டிடங்களுக்குத் தேவை யான காணியையும் பெருந்தொகைப் பணத்தையும் அளித்து இம்முயற்சிக்குப் பெரும் ஊக்கம த்தார். இதன் பின்னர் சமூகப் பெரியோர் களால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு VERNSNEIDHAL KONNAS ON BLOCK நிறுவுனர் சிவத்திரு. வ.சங்கரப்பிள்ளை தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org
தெ 04 தென்னாடு செந்தமிழாசும சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org ஆணை பிறந்தது ! பரந்து விரிந்து செந்தமிழின் காப்பரணாய் நிற்கும் தமிழகம் . அதன் வரலாற்றில் ஏராளம் அரசியல் மாற்றங்களைத் தாங்கிப் பயணித்திருக்கிறது . தடைகளும் தடங்கல்களும் வந்த போதெல்லாம் தமிழைத் தன் கருவில் வைத்துக் காத்திருக்கின்றது . வடநாட்டவரும் பிறநாட்டவரும் ஆண்ட போதும் தன் மொழிக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்ட அந்த மண் அதற்காகச் சில இழப்புக்களையும் தாங்கியிருக்கின்றது . உயிர்ப்பு நிலையிலேனும் தமிழை வைத்திருக்கும் பொருட்டு சிலவிட்டுக் கொடுப்புக்களை சகித்தபடியே தாரைவார்த்தது ! அல்லது திணிப்புக்களை வேறுவழியின்றித் தன் தலையில் சுமந்தது ! அந்தத் திணிப்புக்களில் முக்கியமானது கருவறைக்குள் வடமொழியைத் திணித்ததும் தமிழின் வழிபாட்டுத் தகுதியைத் தடுத்ததுமேயாகும் ! வடமொழியே தேவபாஷை என்றும் அதில் வணங்கினாலே இறைவனுக்கு விளங்கும் என்றும் கதைசொல்ல அருள் மொழியாகிய தமிழை கருவறைகளில் இருந்து தள்ளிவைக்க எந்த அதிகாரம் துணை நின்றதோ அந்த அதிகாரமே இன்று தமிழை அர்ச்சுனை மொழியாக அறிவித்திருக்கின்றது . கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி தமிழகத்தின் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ! முகமதியர்களின் அதிகாரம் கி.பி 1363 இல் அதாவது ஏறத்தாழ முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரைச் சிற்றரசர்கள் நாயக்க மன்னனான விஜயநகர வேந்தன் குமாரதம்பண்ணனின் உதவியை நாடியதால் தமிழகத்தில் இருந்து இல்லாமல் போனது ! ஆனால் விஜயநகரப் பிரதிநிதிகளின் அதிகாரம் தலைதூக்கியது ! தெலுங்கர்களான விஐநயநரகப் பேரரசின் பிரதிநிதிகள் தம் கலப்பினத்தன் அதிமொழியாகிய வடமொழியை வழிபாட்டு மொழியாக்கி தெலுங்குப் பிராமணர்களையும் தமிழகம் எங்கும் குடியமர்த்தினர் ! இவ்வாறு பல்லவர் காலத்தில் மெல்ல நுழைந்த வடமொழி விஜயநகரப் பேரரசின் காலத்தில் தலைதூக்கி நிமிர்ந்து நின்றது ! கோயில்களில் எல்லாம் தமிழை மறைத்து வடமொழியே ஒலித்தது ! செந்தமிழ் குமரன் நின்று அருள்புரியும் பழனியில் ராமயைன் என்கிற விஐயநகர மன்னனின் பிரதிநிதி வழிபாட்டுக்காகக் கலந்து கொண்டதாகவும் அங்கு நடைபெற்ற தமிழ்மறை மந்திர வழிபாட்டை நிறுத்தி வடமொழி வழிபாட்டை ஆரம்பித்து வைத்ததாகவும் செப்பு பட்டயம் ஒன்று செய்தி சொல்கிறது ! அதிகாரத்தை பெற அழைத்தவர்களால் தாம் அடிமைப்பட்டதை உணர்ந்தும் உணராது சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர் ! கோயில்களில் இருந்த ஏராளம் தேவாரக் கல்வெட்டுக்களும் தமிழ் மந்திர ஏடுகளும் குகையிடிகலகத்தை ' சாட்டாக வைத்து இடித்தும் ஏரித்தும் அழிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வார்கள் ! என்ன துயரம் வந்த போதும் தில்லையில் தேவாரங்கள் ஏடுகளில் ஊறிக்கிடந்தன ! நம்பியாண்டார் நம்பியையும் இராராஐசோழனையும் எதிர்பார்த்துக் கிடந்தன ! காலம் கறையானிடம் கொடுத்தது போக மிகுதியை எம் கைகளில் கொடுத்த போதும் களப்பிரரும் பல்லவரும் விஜயநகரப் பேரரசும் ஏற்படுத்திய வழிபாட்டு முறையில் இருந்து முற்றாக எம்மால் வெளியே வரமுடியவேயில்லை ! தமிழ் இரண்டாம் நிலையே பெற்று கருவறைகளுக்கு வெளியே ஒலித்தது ! ஓதுவார்களும் ஆய்வளர்களும் பதிப்பாசிரியர்களும் காலத்துக்கு காலம் தம் உயிரையும் வாழும் நாளையும் உருக்கி தமிழ் மந்திரங்களைத் தலைமுறை தாண்டியும் கடத்தி வந்தனர் ! ஒரு பகுதியினருக்கு மட்டுமே மந்திரம் ஓதும் தகுதி உண்டு என்ற இடைவந்த இழிநிலையைத் தலைநிலையெனக் கருதியும் ஒருசிலர் தம்பட்டம் அடித்து வணங்கியதை சேக்கிழார் தன் தேடலின் தெளிவால் பெரியபுராணம் என்கிற தெய்வநூலைத் தந்து தகர்த்தெறிந்தார் ! இறைவனை அடைய சாதியும் தொழிலும் தடையில்லை என்றதை இச்சமூகம் அறிந்தது ஆயினும் தெளிவு பெற மிக நீண்டகாலம் தேவைப்பட்டது ! வடமொழி ஓதுவது அதிகாரம் என்றும் அது பிராமணர் அல்லாதவர்க்கு இல்லை என்றும் காலாகாலமாக நிலவிய ஆதிக்கம் கடந்த ஆண்டுகளில் இளகியே போனது ! எந்த அதிகாரம் தமிழைத் தள்ளிவைத்ததோ அந்த அதிகாரம் இறைத் தமிழைத் திருத்தலக் கருவறைகளில் ஒலிக்க ஆணை பிறப்பித்திருக்கிறது ! அண்மைய செய்திகளின்படி ஆரியப் பிராமணர் சிலர் ' இதனால் தாம் மன உளைச்சல் ' அடைவதாகப் பொதுவெளியில் பகிர்ந்திருந்தாலும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்கள் இனிப் புரியும் மொழியில் இறைமொழி கேட்கத் தம் செவிகளில் தேன்தமிழ் பாயத் தென்னாடுடைய சிவனை போற்றி வணங்குவார் ! திருச்சிற்றம்பலம் AY தென்னாடு அன்றும் இன்றும் மானிப்பாயில் மதமாற்றத்தினை தடுக்கும் காப்பு அரண் மானிப்பாய் இந்துக் கல்லூரி MAUL MAHAS _______L மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 மானிப்பாய் இந்துக் கல்லூரி COLLEGE திங்கள் ஒரு பள்ளி திரு . வே . சங்கரப்பிள்ளை அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் . அன்றைய கூட்டத்தில் அவரால் பாடசாலைக்கான அத்திவாரக் கல் பிரதம நீதியரசர் ஜோசப் . ஹட்சின்சன் ( Joseph Hutchinson ) அவர்களால் 1910 ஆடி மாதம் 4 ஆம் திகதி நாட்டப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப் பட்டது . அதற்கிணங்க 1910 ஆம் வருடம் ஆடி மாதம் 4 ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜோசப் . ஹட்சின்சன் அவர்களால் இக்கல்லூரியின் அத்திவாரக் கல் நாட்டப்பட்டது . கட்டிடம் பூர்த்தியானதும் அவ்வளவு காலமும் மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் இயங்கிய இப்பாடசாலை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது . அன்று தொட்டு ஆடி மாதம் நான்காம் திகதியிலேயே கல்லூரி விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது . ஆரம்பத்தில் கட்சிசன் மண்டபமும் அதனுடன் இருந்த 6 வகுப்புக்களுமே காணப்பட்டன . மேல் மாடியுடன் கட்டத் தொடங்கிய இம் மண்டபம் திரு . வே . சங்கரப்பிள்ளை அவர்களின் மறைவினால் தனிக்கட்டிட மாகவே அமைந்துவிட்டது . அன்று அவர் விதைத்த விதைதான் இன்று முளைத் துப்பெருமரமாகிபூத்துக்காய்த்து கனித்து பெரும் பயனளித்துவருகின்றது . இவ்வாறு எழுச்சி பெற்ற எமது கல்லூரியின் முதல் அதிபர் ( 1910 ல் ) திரு . எஸ்.வீரசுவாமிப்பிள்ளை ( B.A ) ஆவர் . இவர் மாணவரின் ஒழுங்கு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியவராவார் . பிற்காலத்தில் இராமநாதன் கல்லூரி அதிபராகவும் தர்ம அசோகக் கல்லூரியின் கணிதப் பேராசிரியராகவும் கடமையாற்றியவர் . அவரைத் தொடர்ந்து 1911 ல் திரு.பி. சபாபதிப்பிள்ளை ( B.ALT ) அவர்கள் மூன்று ஆண்டுகள் இரண்டாவது அதிபராகப் பணியாற்றினார் . 1911 இல் திரு.ஜி.சிவராவ் ( B.ALT ) அவர்கள் அதிபரானார் . இவர் சிறந்த கல்வி நிர்வாகியாவார் . 1914 இல் திரு . பி . சபாபதிப்பிள்ளை B.A திரு . . சபாரட்ணசிங்கி B.A ஆகியோர்கல்லூரியின் அதிபர் பதவியை வகித்தனர் . திரு . சபாரத்தின சிங்கி அவர்கள் இணைப் பாடவிதான செயற் பாடுகளுக்கு முக்கியம் கொடுத்தார் . ( 05 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . அதிபர்கள் தங்கள் பெயரை வைக்காமல் சமயக்குரவர் களின் பெயரை இல்லங்களின் பெயர்களாக அலங் கரித்து மகிழ்ந்த பெருமை மானிப்பாய் இந்துவையே சாரும் . ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மிசனறிமார்களால் மேற்கொள்ளப்பட்ட சமயப் பிரச்சாரம் காரணமாகப் பெருந்தொகையான இந்து பௌத்த மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவிக் கொண்டனர் . இக்கால கட்டத்தில் ஆங்கிலக் கல்விக்கும் கிறித்தவ சமயத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனால் ஆங்கிலக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நோக்குடன் இந்து பௌத்த சமயத்தவர்கள் மிசனறிப் பாடசாலையில் கல்வி கற்பதில் நாட்டம் கொண்டனர் . இக்கால வேளையில் தோன்றிற்புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற்தோன்றாமை நன்று என்ற பொய்யாமொழிக்கிணங்க அவதரித்த நாவலர் பெருமான் இம்மத மாற்றத்திற்கு எதிரான சைவ சமய ஆதரவு நடவடிக்கையினை மேற்கொண்டார் . இக்கால கட்டத்தில் மானிப்பாய் இந்து சமயச் சூழலில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்க ஏற்ற பாடசாலை இல்லாக்குறை மானிப்பாய் வாசிகளால் உணரப்பட்டது . இவ்வுணர்வு 1910 ம் வருடம் மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் திரு . மைரோன் பிலிப்ஸ் ( Myron Phelps ) என்பவரால் ஆற்றப் பட்ட உரையினால் ஊக்குவிக்கப்பட் டது . இதனால் மானிப்பாயில் உள்ள வசதிமிக்க சிலர் எஸ் . கே . லௌடன் ( Lowdan ) அவர்கள் தலைமையில் ஒன்றுகூடிப் பாடசாலை கட்ட பணம் சேர்க்கத் தொடங்கினர் . இக்குழு முதலாவதாகச் சந்தித்த நபர் திரு . வே . சங்கரப்பிள்ளை அவர்களாவார் . மானிப்பாயின் முன்னணி வதிவிடராகத் திகழ்ந்த திரு . வே . சங்கரப்பிள்ளை அவர்கள் கட்டிடங்களுக்குத் தேவை யான காணியையும் பெருந்தொகைப் பணத்தையும் அளித்து இம்முயற்சிக்குப் பெரும் ஊக்கம த்தார் . இதன் பின்னர் சமூகப் பெரியோர் களால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு VERNSNEIDHAL KONNAS ON BLOCK நிறுவுனர் சிவத்திரு . வ.சங்கரப்பிள்ளை தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org