தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

தென்னாடு மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 07 ஈழத்து சித்தர்கள்: தவத்திரு நவநாத சித்தர் சுவாமிகள் கொல்லிமலையில் இருந்து இலங்கை குயீன்ஸ்பரி வந்த நவநாதச் சித்தர் குயீன்ஸ்பரிக் குகையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆகாயவழி சென்று வந்தார். சொல்லரிய சித்தர்குழாம் நிறைகொல்லிச் சிகரமதிற் சுருதிமுடி வானஒளி வெளியை நாடி அல்லலறுத் தானந்தப் பேரமுதம் அநுதினமும் அருந்தியடி பணிந்தவரை அன்பாற் போற்றி வெல்லரிய சித்திகளோ ரெட்டினையும் சிறுமகவு போலியற்றிப் பித்தரைப்போல் வெனிவந் திந்நாள் மல்லல்வளம் கரிகாலி நாகன்மனைக் கான்முளைகள் வழுத்துநவ நாதனடி வணக்கஞ் செய்வாம். சி.குருசாமி நாவலப்பிட்டிப் பட்டினத்திலிருந்து நுவரெலியா செல்லும் கொத்மலை வீதியில் பதின்மூன்றாவது மைல் தூரத்தில் உள்ளது குயீன்ஸ்பரி என்ற தேயிலைத் தோட்டம். அத்தோட்டத்தில் கொல்லிமலையடி கரிகாலியிலிருந்து வந்து குடியேறிய நாகன் குடும்பத்தினர் பெரியகங்காணியாக இருந்து வந்தனர். நாகனுடைய அன்பு மனைவியார் பெருமாள் அம்மையார் பத்தியிற் சிறந்தவர். வீட்டிற்கு வரும் அடியார்கள் அனைவரையும் சிவமாகவே பாவிப்பவர். பெருமாள் அம்மையார் அடியார் பத்தியிற் சிறந்து விளங்கியதோடு நிர்வாகத் திறமையிலும் வல்லவர். அம்மையார் வருடத்தில் பாதி நாட்கள் கரிகாலியிலும் பாதி நாட்கள் குயீன்ஸ்பரியிலும் காலம் கழித்து வந்தார். கொல்லிமலை, தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் நாமக்கல், ஆத்தூர்த் தாலுக்காக்களில் உள்ள குன்றுத்தொடர். இதற்குக் கொல்லி அறப்பள்ளி என்ற பெயரும் உண்டு. அம்மலை உச்சியில் உயிர்களுக்கு ஆன்ம ஞானமாகிய அகிம்சை தர்மத்தை அருள்செய்து, அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானவல்லியும், அறக்கடவுளும் விளங்கும் அறப்பள்ளிநாதர் சந்நிதி ஒன்று உண்டு. அறப்பள்ளிநாதர் சந்நிதி முன் முருகக் கடவுள் நிலைபெற்றுள்ளார். அம்மலையில் பல பெரிய குகைகள் இருக்கின்றன. அவற்றில் பல சித்தர் குழாங்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒருவரே நவநாதசித்தர் என்ற பெயருடையவர். நீண்டகாலத் தவத்தினால் சித்தி பெற்றவர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தோற்றம் அளித்தவர். கொல்லிமலைச் சித்தர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்பட்டவர். அயல் கிராமங்களிலுள்ள மக்கள் இவரை மானம்பாக்கி சுவாமிகள் என அழைத்து வந்தார்கள். சுவாமிகள் குகையில் மோனத்தவம் புரிந்த காலங்களில் பசித்தால் அடி வாரத்திலுள்ள கிராமங்களுக்கு வருவார்கள், அத்தகைய கிராமங்களில் கரிகாலியும் ஒன்று. பெருமாள் அம்மையாரின் அடியார் பத்தியால் கவரப்பட்ட நவநாதசித்தர் அடிக்கடி அம்மையாரிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார். சித்தர் அம்மையாரைச் செல்லமாக 'ஆயா' என்று அழைப்பார். கோவணத்தோடு மலையிலிருந்து வரும் சித்தர் நேராக அம்மையாரின் வீட்டு முற்றத்திற்குச் சென்று 'ஆயா' என்று குரல் கொடுப்பார். அம்மையார் எங்கிருந்தாலும் எத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஓடோடியும் வந்து சுவாமிகளுடைய திருப்பாதங்களை விளக்கி பூப்போட்டு வணங்கியபின் தயாராக இருக்கும் உணவினைக் கொண்டு வந்து இருகைகளையும் ஏந்தி நிற்கும் சுவாமிகளின் கைகளில் இடுவார்கள். சுவாமிகள் நின்ற நிலையிலேயே உணவை உண்டு, கையில் நீரூற்ற அதனையும் வாங்கி அருந்தியவுடன் தவத்தை நோக்கிச் சென்று விடுவார்கள். அம்மையார் ஒருநாள் சுவாமிகளுக்கு உணவு இடும்போது, "சுவாமி, சிலோனில் நாங்கள் ஒரு சுப்பிரமணியர் கோயில் கட்டுகின்றோம், கெதியில் குடமுழுக்கு நடத்த இருக்கின்றோம், சுவாமிகள் தவறாது அதற்கு வரவேண்டும்" என்று மனம் உருகிக் கேட்டார்கள். சுவாமிகள் புன்முறுவல் பூத்தவராய், “ஆயா நினைச்சா அடிமை வரும்” என்று கூறினார்கள். அம்மையார் குயீன்ஸ்பரி வந்து மாதக் கணக்காகிவிட்டன. கோயில் கட்டும் வேலை முடிவடைந்து குடமுழுக்கிற்கான நாளும் குறித்தாகிவிட்டது. குடமுழுக்கிற்கான ஆயத்தங்கள் எல்லாம் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருத்தன. நவநாத சித்தர் குயீன்ஸ்பரி வருகை - 1901ம் ஆண்டு குயீன்ஸ்பரி முருகன் கோயிலின் குடமுழுக்கிற்கு முதல் நாள் தான் அம்மையார், தான் சுவாமிகளுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்ந்தார். மூத்த மகனை அழைத்துத் தான் சுவாமிகளிடம் கூறியதையும் சுவாமிகள் அதற்குக் கொடுத்த விடையையுங் கூறிச் சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தார். “இன்று தந்தி அடித்தாலும் சுவாமிகள் வந்து சேர வாரம் ஒன்றாகும், நாளைக்குத் தான் குடமுழுக்கு முடிந்துவிடுமே! இன்று சுவாமிக்கு அறிவித்து என்ன பயன்?" என்று மகனார் கூறவும், "நினைவுக்கு வந்த உடனே அறிவிக்கவேண்டியது எங்கள் சுடமை." என்றார் அம்மையார். அன்றே தபால் எழுதித் தபால் நிலையத்தில் சேர்க்கப்பட்டது. தனது கடமை ஒன்று நிறைவேறி விட்டதாக அம்மையாரின் மனதில் ஒரு நிறைவு. சுவாமிகளின் அருட்சத்தியை நன்கு உணர்ந்தவராகையினால் சுவாமிகள் வரக்கூடும் என்றொரு நம்பிக்கை அம்மையாருக்கு இருந்தது. மறுநாள் அதிகாலை, வீட்டிலிருந்து குடமுழுக்கிற்கு வேண்டிய பொருட்களுடன் கோயிலுக்கு வந்தார் அம்மையார். அந்த நேரம் சுவாமிகள் எதிரே வந்து கொண்டிருந்தார். அம்மையாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஓடிச்சென்று சுவாமிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். சுவாமிகளும் அம்மையாரை ஆசி கூறி எழுந்திருக்கச் செய்தார். "சுவாமி! நேற்றைக்குத்தானே கடிதம் எழுதினேன்! எப்படிச் சுவாமி வந்தீர்கள்!?” என்று அதிசயம் மிகக் கேட்டார் அம்மையார். “ஆயா நினைச்சுது நவநாத சித்தர் தென்னாட்டில் சித்தர் சிலை சிறுமி வரைந்த சித்தர் படம். அடிமை வந்திட்டுது” என்று சுவாமிகள் கூறினார்கள். நவநாத சித்தருடன் பெரியனைக் குட்டி சித்தர் அவர்களும் இலங்கை வந்ததாக வரலாறு கூறுகிறது. அத்துடன் நவநாத சித்தரின் சீடரான சித்தனைக் குட்டி சித்தர் பின் வருகை தந்ததாக கூறுகிறார்கள். கோயிலுக்கு முன்னாக வலது பக்கத்தில் கோணத்திசையாக உள்ள ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, "ஆயா இந்த இடத்தில்தான் அடிமையைச் சமாதி வைக்க வேண்டும்" எனச் சுவாமிகள் கூறினார்கள். அதைப்பற்றி எல்லாம் எதற்காகச் சுவாமிகள் இப்பொழுதே கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று செல்லமாகக் கடிந்தார் அம்மையார். நாட்கள் சில உருண்டோடின. குயீன்ஸ்பரிக்கு வந்திருக்கும் சாமியாரைப்பற்றித்தான் மலையகமெங்கும் பேச்சு அடிபட்டது. மலையகத்திலுள்ள ஆயிரக்கணக்கான தோட்டங்களிலிருந்தும் பத்தர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர். குயீன்ஸ்பரி ஒரு யாத்திரைத் தலமாக விளங்கியது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் உயர்ந்த உத்தியோகத்தர்கள், ஆன்மீகவாதிகள் வந்து சென்றனர். சுவாமிகளைத் தரிசிக்க இந்தியாவிலிருந்தும் பத்தர்கள் வந்தனர். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சுவாமிகளைத் தரிசித்தவுடன், இவர் அந்த ஊரில் சமாதியானவர் இந்த ஊரில் சமாதியானவர் என்று பேசத் தலைப்பட்டனர். சுவாமிகளைத் தரிசிக்க வந்த சேலம்வாசி ஒருவர் ஒருவருடத்திற்கு முன்புதான் இச்சுவாமியைத் தாங்கள் சேலம் பக்கத்தில் சமாதி செய்ததாகத் தெரிவித்தார். அதனைச் சுவாமிகளிடம் விசாரித்தபோது சுவாமிகள் புன்சிரிப்புடன் “இருக்கும் அப்பா” என்றார். இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறுமாத காலம் தான் இலங்கையில் இருந்தார். சித்தரின் படம் ஒருவரிடமும் இல்லை. சிறுமி ஒருவர் சித்தரை வரைந்து எடுக்கவேண்டும் என்று செண்பக மரத்தடியில் மயில்கள் சூழ தியானத்தில் இருக்கும் சித்தரை பார்த்து வரைந்த படமே இங்கு இணைக்கப்பட்டுள்ள படமாகும். அவரின் சிலை யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாடு சிவமடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நவநாத சித்தரின் சித்துக்கள் சித்தர்களுக்கு அவர்கள் செயல் எல்லாம் இயற்கை. சாமானியராகிய எங்களுக்கு அவைகள் அற்புதங்கள். தோட்டத் தொழிலாளருடன் சுவாமிகள் இயல்பாகப் பழகினார். தொழிலாளரும் சுவாமிகள்மேல் அன்பும் மரியாதையும் உடையவராகப் பழகினர். பக்கத்தில் உள்ள தோட்டங்கள் தோறும் சுவாமிகள் தாமாகவே உலாவி வருவார். குயீன்ஸ்பரித் தோட்டத் தொழிலாளரிடையே சுவாமிகள் பல சித்துக்கள் விளையாடினார்கள். ஒரு நாள் சுவாமிகள் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள கங்காணியார் ஒருவரைச் சந்திக்கத் தனிமையில் சென்று கொண்டிருந்தார்கள். தேயிலைச் செடி மறைவில் கஞ்சாப் புகை குடிப்பதற்காக மூவர் மறைந்திருந்தனர். சுவாமியைக் கண்டதும், சுவாமி! கஞ்சாப்புகை குடித்து விட்டுத் தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினர். சுவாமிகள் மறுத்தார். அவர்கள் விடவில்லை. சுவாமியும் இணங்கினார். சுவாமியை வற்புறுத்தியவர்கள் நச்சுத் தன்மையுள்ள சருகுகளும் வைத்து கஞ்சாதயாரித்தனர். கபட நோக்கில் முதலில் சுவாமிகள்தான் குடிக்க வேண்டும் எனக் கூறினர். சுவாமி மறுத்து, "நீங்களே முதலில் குடியுங்கள். நீங்கள் குடித்து முடிந்தபின் நான் கடைசியாகக் குடிக்கின்றேன்" என்றார். அவர்கள் சுவாமிகளை விடவில்லை, வற்புறுத்தினார்கள். சுவாமிகள் ஒரு முறை புகையை இழுத்து முன்னாக ஊதினார். மூவர் முகத்திலும் புகை பிடித்த உடனே மயங்கி வீழ்ந்தனர். சுவாமிகள் தாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றுவிட்டார்கள். புகை குடித்த மூவரையுந்தேடி அந்தந்த வீட்டில் உள்ளவர்கள் தோட்டம் முழுவதும் அலைந்தனர். ஈற்றில் மூவரும் மயங்கிய நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கும் தெளிவு ஏற்படாமையால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாமிகளுடன் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்கள் என்ற செய்தி எப்படியோ தெரிந்துவிட்டது. தொழிலாளர் மூவரினதும் உற்றார், உறவினர் சுவாமிகள் இருந்த இடஞ் சென்று, பிழையை மன்னிக்குமாறு கண்ணீர் வர வேண்டினர். சுவாமிகள் தமக்கும் அதற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென அனுப்பிவிட்டார். நான்கு ஐந்து நாட்களாகியும் அவர்கள் மயக்கம் தெளியவில்லை. சுவாமிகளிடம் மீண்டும் சென்று உயிர்ப்பிச்சை இடுமாறு மன்றாடினார்கள், சுவாமிகள் ஒரு சிகறெற் வாங்கிப் பற்றவைத்து ஒரு முறை புகையை இழுத்து ஊதினார். புகை சுழன்று சுழன்று சென்றது. நீங்கள் கவலையில்லாமல் செல்லுங்கள், நோய் சுகமாய்விடும் என்று வந்தவர்களை தெ சித்தர் சமாதி சித்தர் தவம் இருந்த குகை அனுப்பினார். சுவாமி சிகறெற் புகையை இழுத்து வெளியே ஊதிய அதே நேரத்தில் மூவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். இச்செய்தி நிகழ்ந்தபின் தோட்டத் தொழிலாளர் மத்தியிலே சுவாமிமீது பெருமதிப்பும் பயபத்தியும் ஏற்பட்டன. சுவாமிகளைத் தரிசிப்பதற்காக எங்கிருந்து பத்தர்கள் வந்தாலும் தங்குமிட வசதி, சாப்பாட்டு வசதியாவும் கங்காணியார் குடும்பத்தினர், அன்போடு மனப்பூர்வமாகச் செய்து, ஆதரித்து வந்தனர். சுவாமிகளுடைய வருகைக்குப் பின்னர் கங்காணியார் வீடு ஓர் அன்ன சத்திரமாக மாறியதென்றே சொல்லவேண்டும். அடியார் ஒருவர் திருவண்ணாமலைக்கு செய்ய அவாக்கொண்டதால் அவரை குகைக்கு வரவழைத்து குகையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆகாயவழி சென்று வந்தார். அத்துடன் அடியார் ஒருவரின் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர்கள் உணவு கொடுக்கும் போது ஒருகறியை மறைத்து கொடுத்தார்கள். அது மீன் குழம்பு என்பதால் மறைத்தார்கள். சித்தர் அதை கொண்டுவர சொல்ல மீன் கறி கத்தரிக்காய் கறியாக மாறியிருந்தது. அதனை அவர் ஒரு போட்டலம் கட்டி அங்கே அவர்களிடம் கொடுத்து நான் வரும்வரை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அது இன்றும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. ஒருநாள் பெருமாள் அம்மையார் சிதம்பரம் செல்ல வேண்டுமென்று சுவாமிகளிடம் உத்தரவு கேட்டார். சுவாமிகள் ஆசியுடன் அனுப்பிவைத்தார்கள். அம்மையார் சிதம்பரம் சென்று ஞானப்பிரகாசத்தில் தீர்த்தம் ஆடி வழிபாடு செய்வதற்காகச் சுவாமிகளால் கொடுக்கப்பெற்ற உருத்திராக்க மாலையைத் தேடினார், காணவில்லை. வீட்டில் மறந்துபோய் வைத்துவிட்டு வந்துவிட்டார். கண்கள் மூடியபடி கைகள் கூப்பிய வண்ணம் நவநாத சித்தரை நினைத்து உருகினார். உருத்திராக்க மாலை கைகளில் புறந்திரிந்து கருணை பாலிப்பதை உணர்ந்து அம்மையார் விழுந்திருக்கக் கண்டார். நவநாதப் பெருமாள் புறம் உள்ளம் நெக்குருகினார். சுவாமிகளுடைய மிக நெருங்கிய பத்தர்களுள் திருக்கடம்பத்துறை அன்பர் சி.குருசாமியும் ஒருவர். குருசாமி அவர்களுக்குச் சுவாமிகளுடைய தொடர்பு ஏற்பட்டதன் பின்பு கொல்லிமலைச் சித்தர்களைப் பார்க்கவேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. அந்த ஆசையைச் சுவாமிகளிடம் கூறினார். அமாவாசைத் தினத்தன்று ஒரு நாள் இரவு 2 மணிக்குக் கொல்லிமலை வருமாறு சுவாமிகள் குருசாமியை அழைத்தார்கள். இந்த அமாவாசை இருட்டில் எப்படிச் செல்வதென்று குருசாமி தயங்கினாராயினும் சுவாமிகள் மீது கொண்ட நம்பிக்கையில் சுவாமியைப் பின்தொடர்ந்தார். குருசாமியின் தயக்கத்தை உணர்ந்த சுவாமிகள் குருசாமியின் வலது கையைத் தமது இடது கையால் பற்றிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொள்ளும்படியும் திறக்கச் சொல்லும்போது திறக்கவேண்டும் என்றும் அருளினார். 2, 3 நிமிடங்களுக்குள் கண்களைத் திறக்கச் சொன்னார் சுவாமி. குருசாமி கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! கொல்லிமலை உச்சியில் தாம் இருப்பதை உணர்ந்தார். சுவாமிகள் பெரியதொரு பாறாங்கல்லை இலகுவாகக் கையால் அகற்றி உள்ளே அழைத்துச் சென்றார். ஏழு சித்தர்கள் ஆழ்ந்த சமாதியில் இருப்பதைக் கண்டு தரிசித்தார். சித்தர் ஊரைக்கரை, கோம்பை முதலிய இடங்களில் பத்தர்களின் வழிபாட்டுக்காளானார். அங்குள்ள மக்கள் முழுக்காட்டிப் ஆலயத்துடையான்பட்டி இராமசாமி ரெட்டியார் திருப்பணி பூசைகள் செய்தே சித்தரை உபசரித்தார்கள். வெட்டியும் நீரின்மையைச் சித்தரிடம் தெரிவிக்க சித்தர் செய்துள்ள பெருமாள் கோயில் கிணற்றில் அதிக ஆழத்திற்கு ஒரு சக்கரத்தைத் தகட்டில் வரைந்து கிணற்றில் இடச் கிணற்றில் நிரம்ப நீர் ஊறி வந்தமையை ரெட்டியார் ஒரு செய்தார். இவ்வாறே இராமசாமி இரெட்டியார் செய்யக் சுவாமிகளை விழாவாகக் கொண்டாடினார் வைத்துக்கொண்டே குடமுழுக்கை வெகுவிமரிசையாக நடத்தினார். இவ்வாறு எம் சித்தர்களின் சித்தி வல்லமையை கூற வார்த்தைகளே இல்லை. அவர்களை இனங்கண்டு கொள்வதும், காண்பதும், அவர்களுடைய அருளாசிகளைப் பெறுவதும், பல பிறப்புக்களிலும் நாம் செய்த புண்ணியத்தின் பயனே ஆகும். அப்பெருமானின் அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று அவருடைய திருவடிகளில் வணங்கி நிற்கின்றேன். திருச்சிற்றம்பலம் தொகுப்பு - சிவத்திரு.வடிவேலு கங்காளன் தகவல்கள், படங்கள்: சிவத்திரு.யோகி. தங்கவேல் கோபிநாத்
தென்னாடு மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 07 ஈழத்து சித்தர்கள் : தவத்திரு நவநாத சித்தர் சுவாமிகள் கொல்லிமலையில் இருந்து இலங்கை குயீன்ஸ்பரி வந்த நவநாதச் சித்தர் குயீன்ஸ்பரிக் குகையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆகாயவழி சென்று வந்தார் . சொல்லரிய சித்தர்குழாம் நிறைகொல்லிச் சிகரமதிற் சுருதிமுடி வானஒளி வெளியை நாடி அல்லலறுத் தானந்தப் பேரமுதம் அநுதினமும் அருந்தியடி பணிந்தவரை அன்பாற் போற்றி வெல்லரிய சித்திகளோ ரெட்டினையும் சிறுமகவு போலியற்றிப் பித்தரைப்போல் வெனிவந் திந்நாள் மல்லல்வளம் கரிகாலி நாகன்மனைக் கான்முளைகள் வழுத்துநவ நாதனடி வணக்கஞ் செய்வாம் . சி.குருசாமி நாவலப்பிட்டிப் பட்டினத்திலிருந்து நுவரெலியா செல்லும் கொத்மலை வீதியில் பதின்மூன்றாவது மைல் தூரத்தில் உள்ளது குயீன்ஸ்பரி என்ற தேயிலைத் தோட்டம் . அத்தோட்டத்தில் கொல்லிமலையடி கரிகாலியிலிருந்து வந்து குடியேறிய நாகன் குடும்பத்தினர் பெரியகங்காணியாக இருந்து வந்தனர் . நாகனுடைய அன்பு மனைவியார் பெருமாள் அம்மையார் பத்தியிற் சிறந்தவர் . வீட்டிற்கு வரும் அடியார்கள் அனைவரையும் சிவமாகவே பாவிப்பவர் . பெருமாள் அம்மையார் அடியார் பத்தியிற் சிறந்து விளங்கியதோடு நிர்வாகத் திறமையிலும் வல்லவர் . அம்மையார் வருடத்தில் பாதி நாட்கள் கரிகாலியிலும் பாதி நாட்கள் குயீன்ஸ்பரியிலும் காலம் கழித்து வந்தார் . கொல்லிமலை தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் நாமக்கல் ஆத்தூர்த் தாலுக்காக்களில் உள்ள குன்றுத்தொடர் . இதற்குக் கொல்லி அறப்பள்ளி என்ற பெயரும் உண்டு . அம்மலை உச்சியில் உயிர்களுக்கு ஆன்ம ஞானமாகிய அகிம்சை தர்மத்தை அருள்செய்து அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானவல்லியும் அறக்கடவுளும் விளங்கும் அறப்பள்ளிநாதர் சந்நிதி ஒன்று உண்டு . அறப்பள்ளிநாதர் சந்நிதி முன் முருகக் கடவுள் நிலைபெற்றுள்ளார் . அம்மலையில் பல பெரிய குகைகள் இருக்கின்றன . அவற்றில் பல சித்தர் குழாங்கள் வசிக்கின்றனர் . இவர்களில் ஒருவரே நவநாதசித்தர் என்ற பெயருடையவர் . நீண்டகாலத் தவத்தினால் சித்தி பெற்றவர் . ஒரே நேரத்தில் பல இடங்களில் தோற்றம் அளித்தவர் . கொல்லிமலைச் சித்தர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்பட்டவர் . அயல் கிராமங்களிலுள்ள மக்கள் இவரை மானம்பாக்கி சுவாமிகள் என அழைத்து வந்தார்கள் . சுவாமிகள் குகையில் மோனத்தவம் புரிந்த காலங்களில் பசித்தால் அடி வாரத்திலுள்ள கிராமங்களுக்கு வருவார்கள் அத்தகைய கிராமங்களில் கரிகாலியும் ஒன்று . பெருமாள் அம்மையாரின் அடியார் பத்தியால் கவரப்பட்ட நவநாதசித்தர் அடிக்கடி அம்மையாரிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார் . சித்தர் அம்மையாரைச் செல்லமாக ' ஆயா ' என்று அழைப்பார் . கோவணத்தோடு மலையிலிருந்து வரும் சித்தர் நேராக அம்மையாரின் வீட்டு முற்றத்திற்குச் சென்று ' ஆயா ' என்று குரல் கொடுப்பார் . அம்மையார் எங்கிருந்தாலும் எத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஓடோடியும் வந்து சுவாமிகளுடைய திருப்பாதங்களை விளக்கி பூப்போட்டு வணங்கியபின் தயாராக இருக்கும் உணவினைக் கொண்டு வந்து இருகைகளையும் ஏந்தி நிற்கும் சுவாமிகளின் கைகளில் இடுவார்கள் . சுவாமிகள் நின்ற நிலையிலேயே உணவை உண்டு கையில் நீரூற்ற அதனையும் வாங்கி அருந்தியவுடன் தவத்தை நோக்கிச் சென்று விடுவார்கள் . அம்மையார் ஒருநாள் சுவாமிகளுக்கு உணவு இடும்போது சுவாமி சிலோனில் நாங்கள் ஒரு சுப்பிரமணியர் கோயில் கட்டுகின்றோம் கெதியில் குடமுழுக்கு நடத்த இருக்கின்றோம் சுவாமிகள் தவறாது அதற்கு வரவேண்டும் என்று மனம் உருகிக் கேட்டார்கள் . சுவாமிகள் புன்முறுவல் பூத்தவராய் ஆயா நினைச்சா அடிமை வரும் என்று கூறினார்கள் . அம்மையார் குயீன்ஸ்பரி வந்து மாதக் கணக்காகிவிட்டன . கோயில் கட்டும் வேலை முடிவடைந்து குடமுழுக்கிற்கான நாளும் குறித்தாகிவிட்டது . குடமுழுக்கிற்கான ஆயத்தங்கள் எல்லாம் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருத்தன . நவநாத சித்தர் குயீன்ஸ்பரி வருகை - 1901 ம் ஆண்டு குயீன்ஸ்பரி முருகன் கோயிலின் குடமுழுக்கிற்கு முதல் நாள் தான் அம்மையார் தான் சுவாமிகளுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்ந்தார் . மூத்த மகனை அழைத்துத் தான் சுவாமிகளிடம் கூறியதையும் சுவாமிகள் அதற்குக் கொடுத்த விடையையுங் கூறிச் சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தார் . இன்று தந்தி அடித்தாலும் சுவாமிகள் வந்து சேர வாரம் ஒன்றாகும் நாளைக்குத் தான் குடமுழுக்கு முடிந்துவிடுமே ! இன்று சுவாமிக்கு அறிவித்து என்ன பயன் ? என்று மகனார் கூறவும் நினைவுக்கு வந்த உடனே அறிவிக்கவேண்டியது எங்கள் சுடமை . என்றார் அம்மையார் . அன்றே தபால் எழுதித் தபால் நிலையத்தில் சேர்க்கப்பட்டது . தனது கடமை ஒன்று நிறைவேறி விட்டதாக அம்மையாரின் மனதில் ஒரு நிறைவு . சுவாமிகளின் அருட்சத்தியை நன்கு உணர்ந்தவராகையினால் சுவாமிகள் வரக்கூடும் என்றொரு நம்பிக்கை அம்மையாருக்கு இருந்தது . மறுநாள் அதிகாலை வீட்டிலிருந்து குடமுழுக்கிற்கு வேண்டிய பொருட்களுடன் கோயிலுக்கு வந்தார் அம்மையார் . அந்த நேரம் சுவாமிகள் எதிரே வந்து கொண்டிருந்தார் . அம்மையாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை . ஓடிச்சென்று சுவாமிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . சுவாமிகளும் அம்மையாரை ஆசி கூறி எழுந்திருக்கச் செய்தார் . சுவாமி ! நேற்றைக்குத்தானே கடிதம் எழுதினேன் ! எப்படிச் சுவாமி வந்தீர்கள் !? என்று அதிசயம் மிகக் கேட்டார் அம்மையார் . ஆயா நினைச்சுது நவநாத சித்தர் தென்னாட்டில் சித்தர் சிலை சிறுமி வரைந்த சித்தர் படம் . அடிமை வந்திட்டுது என்று சுவாமிகள் கூறினார்கள் . நவநாத சித்தருடன் பெரியனைக் குட்டி சித்தர் அவர்களும் இலங்கை வந்ததாக வரலாறு கூறுகிறது . அத்துடன் நவநாத சித்தரின் சீடரான சித்தனைக் குட்டி சித்தர் பின் வருகை தந்ததாக கூறுகிறார்கள் . கோயிலுக்கு முன்னாக வலது பக்கத்தில் கோணத்திசையாக உள்ள ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி ஆயா இந்த இடத்தில்தான் அடிமையைச் சமாதி வைக்க வேண்டும் எனச் சுவாமிகள் கூறினார்கள் . அதைப்பற்றி எல்லாம் எதற்காகச் சுவாமிகள் இப்பொழுதே கூறிக் கொண்டிருக்கிறீர்கள் ? என்று செல்லமாகக் கடிந்தார் அம்மையார் . நாட்கள் சில உருண்டோடின . குயீன்ஸ்பரிக்கு வந்திருக்கும் சாமியாரைப்பற்றித்தான் மலையகமெங்கும் பேச்சு அடிபட்டது . மலையகத்திலுள்ள ஆயிரக்கணக்கான தோட்டங்களிலிருந்தும் பத்தர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர் . குயீன்ஸ்பரி ஒரு யாத்திரைத் தலமாக விளங்கியது . இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் உயர்ந்த உத்தியோகத்தர்கள் ஆன்மீகவாதிகள் வந்து சென்றனர் . சுவாமிகளைத் தரிசிக்க இந்தியாவிலிருந்தும் பத்தர்கள் வந்தனர் . இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சுவாமிகளைத் தரிசித்தவுடன் இவர் அந்த ஊரில் சமாதியானவர் இந்த ஊரில் சமாதியானவர் என்று பேசத் தலைப்பட்டனர் . சுவாமிகளைத் தரிசிக்க வந்த சேலம்வாசி ஒருவர் ஒருவருடத்திற்கு முன்புதான் இச்சுவாமியைத் தாங்கள் சேலம் பக்கத்தில் சமாதி செய்ததாகத் தெரிவித்தார் . அதனைச் சுவாமிகளிடம் விசாரித்தபோது சுவாமிகள் புன்சிரிப்புடன் இருக்கும் அப்பா என்றார் . இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறுமாத காலம் தான் இலங்கையில் இருந்தார் . சித்தரின் படம் ஒருவரிடமும் இல்லை . சிறுமி ஒருவர் சித்தரை வரைந்து எடுக்கவேண்டும் என்று செண்பக மரத்தடியில் மயில்கள் சூழ தியானத்தில் இருக்கும் சித்தரை பார்த்து வரைந்த படமே இங்கு இணைக்கப்பட்டுள்ள படமாகும் . அவரின் சிலை யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாடு சிவமடத்தில் வைக்கப்பட்டுள்ளது . நவநாத சித்தரின் சித்துக்கள் சித்தர்களுக்கு அவர்கள் செயல் எல்லாம் இயற்கை . சாமானியராகிய எங்களுக்கு அவைகள் அற்புதங்கள் . தோட்டத் தொழிலாளருடன் சுவாமிகள் இயல்பாகப் பழகினார் . தொழிலாளரும் சுவாமிகள்மேல் அன்பும் மரியாதையும் உடையவராகப் பழகினர் . பக்கத்தில் உள்ள தோட்டங்கள் தோறும் சுவாமிகள் தாமாகவே உலாவி வருவார் . குயீன்ஸ்பரித் தோட்டத் தொழிலாளரிடையே சுவாமிகள் பல சித்துக்கள் விளையாடினார்கள் . ஒரு நாள் சுவாமிகள் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள கங்காணியார் ஒருவரைச் சந்திக்கத் தனிமையில் சென்று கொண்டிருந்தார்கள் . தேயிலைச் செடி மறைவில் கஞ்சாப் புகை குடிப்பதற்காக மூவர் மறைந்திருந்தனர் . சுவாமியைக் கண்டதும் சுவாமி ! கஞ்சாப்புகை குடித்து விட்டுத் தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினர் . சுவாமிகள் மறுத்தார் . அவர்கள் விடவில்லை . சுவாமியும் இணங்கினார் . சுவாமியை வற்புறுத்தியவர்கள் நச்சுத் தன்மையுள்ள சருகுகளும் வைத்து கஞ்சாதயாரித்தனர் . கபட நோக்கில் முதலில் சுவாமிகள்தான் குடிக்க வேண்டும் எனக் கூறினர் . சுவாமி மறுத்து நீங்களே முதலில் குடியுங்கள் . நீங்கள் குடித்து முடிந்தபின் நான் கடைசியாகக் குடிக்கின்றேன் என்றார் . அவர்கள் சுவாமிகளை விடவில்லை வற்புறுத்தினார்கள் . சுவாமிகள் ஒரு முறை புகையை இழுத்து முன்னாக ஊதினார் . மூவர் முகத்திலும் புகை பிடித்த உடனே மயங்கி வீழ்ந்தனர் . சுவாமிகள் தாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றுவிட்டார்கள் . புகை குடித்த மூவரையுந்தேடி அந்தந்த வீட்டில் உள்ளவர்கள் தோட்டம் முழுவதும் அலைந்தனர் . ஈற்றில் மூவரும் மயங்கிய நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் . அங்கும் தெளிவு ஏற்படாமையால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . சுவாமிகளுடன் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்கள் என்ற செய்தி எப்படியோ தெரிந்துவிட்டது . தொழிலாளர் மூவரினதும் உற்றார் உறவினர் சுவாமிகள் இருந்த இடஞ் சென்று பிழையை மன்னிக்குமாறு கண்ணீர் வர வேண்டினர் . சுவாமிகள் தமக்கும் அதற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென அனுப்பிவிட்டார் . நான்கு ஐந்து நாட்களாகியும் அவர்கள் மயக்கம் தெளியவில்லை . சுவாமிகளிடம் மீண்டும் சென்று உயிர்ப்பிச்சை இடுமாறு மன்றாடினார்கள் சுவாமிகள் ஒரு சிகறெற் வாங்கிப் பற்றவைத்து ஒரு முறை புகையை இழுத்து ஊதினார் . புகை சுழன்று சுழன்று சென்றது . நீங்கள் கவலையில்லாமல் செல்லுங்கள் நோய் சுகமாய்விடும் என்று வந்தவர்களை தெ சித்தர் சமாதி சித்தர் தவம் இருந்த குகை அனுப்பினார் . சுவாமி சிகறெற் புகையை இழுத்து வெளியே ஊதிய அதே நேரத்தில் மூவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர் . இச்செய்தி நிகழ்ந்தபின் தோட்டத் தொழிலாளர் மத்தியிலே சுவாமிமீது பெருமதிப்பும் பயபத்தியும் ஏற்பட்டன . சுவாமிகளைத் தரிசிப்பதற்காக எங்கிருந்து பத்தர்கள் வந்தாலும் தங்குமிட வசதி சாப்பாட்டு வசதியாவும் கங்காணியார் குடும்பத்தினர் அன்போடு மனப்பூர்வமாகச் செய்து ஆதரித்து வந்தனர் . சுவாமிகளுடைய வருகைக்குப் பின்னர் கங்காணியார் வீடு ஓர் அன்ன சத்திரமாக மாறியதென்றே சொல்லவேண்டும் . அடியார் ஒருவர் திருவண்ணாமலைக்கு செய்ய அவாக்கொண்டதால் அவரை குகைக்கு வரவழைத்து குகையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆகாயவழி சென்று வந்தார் . அத்துடன் அடியார் ஒருவரின் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர்கள் உணவு கொடுக்கும் போது ஒருகறியை மறைத்து கொடுத்தார்கள் . அது மீன் குழம்பு என்பதால் மறைத்தார்கள் . சித்தர் அதை கொண்டுவர சொல்ல மீன் கறி கத்தரிக்காய் கறியாக மாறியிருந்தது . அதனை அவர் ஒரு போட்டலம் கட்டி அங்கே அவர்களிடம் கொடுத்து நான் வரும்வரை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் . அது இன்றும் இருப்பதாக தகவல்கள் உள்ளன . ஒருநாள் பெருமாள் அம்மையார் சிதம்பரம் செல்ல வேண்டுமென்று சுவாமிகளிடம் உத்தரவு கேட்டார் . சுவாமிகள் ஆசியுடன் அனுப்பிவைத்தார்கள் . அம்மையார் சிதம்பரம் சென்று ஞானப்பிரகாசத்தில் தீர்த்தம் ஆடி வழிபாடு செய்வதற்காகச் சுவாமிகளால் கொடுக்கப்பெற்ற உருத்திராக்க மாலையைத் தேடினார் காணவில்லை . வீட்டில் மறந்துபோய் வைத்துவிட்டு வந்துவிட்டார் . கண்கள் மூடியபடி கைகள் கூப்பிய வண்ணம் நவநாத சித்தரை நினைத்து உருகினார் . உருத்திராக்க மாலை கைகளில் புறந்திரிந்து கருணை பாலிப்பதை உணர்ந்து அம்மையார் விழுந்திருக்கக் கண்டார் . நவநாதப் பெருமாள் புறம் உள்ளம் நெக்குருகினார் . சுவாமிகளுடைய மிக நெருங்கிய பத்தர்களுள் திருக்கடம்பத்துறை அன்பர் சி.குருசாமியும் ஒருவர் . குருசாமி அவர்களுக்குச் சுவாமிகளுடைய தொடர்பு ஏற்பட்டதன் பின்பு கொல்லிமலைச் சித்தர்களைப் பார்க்கவேண்டும் என்றொரு ஆசை எழுந்தது . அந்த ஆசையைச் சுவாமிகளிடம் கூறினார் . அமாவாசைத் தினத்தன்று ஒரு நாள் இரவு 2 மணிக்குக் கொல்லிமலை வருமாறு சுவாமிகள் குருசாமியை அழைத்தார்கள் . இந்த அமாவாசை இருட்டில் எப்படிச் செல்வதென்று குருசாமி தயங்கினாராயினும் சுவாமிகள் மீது கொண்ட நம்பிக்கையில் சுவாமியைப் பின்தொடர்ந்தார் . குருசாமியின் தயக்கத்தை உணர்ந்த சுவாமிகள் குருசாமியின் வலது கையைத் தமது இடது கையால் பற்றிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொள்ளும்படியும் திறக்கச் சொல்லும்போது திறக்கவேண்டும் என்றும் அருளினார் . 2 3 நிமிடங்களுக்குள் கண்களைத் திறக்கச் சொன்னார் சுவாமி . குருசாமி கண்களைத் திறந்தார் . என்ன ஆச்சரியம் ! கொல்லிமலை உச்சியில் தாம் இருப்பதை உணர்ந்தார் . சுவாமிகள் பெரியதொரு பாறாங்கல்லை இலகுவாகக் கையால் அகற்றி உள்ளே அழைத்துச் சென்றார் . ஏழு சித்தர்கள் ஆழ்ந்த சமாதியில் இருப்பதைக் கண்டு தரிசித்தார் . சித்தர் ஊரைக்கரை கோம்பை முதலிய இடங்களில் பத்தர்களின் வழிபாட்டுக்காளானார் . அங்குள்ள மக்கள் முழுக்காட்டிப் ஆலயத்துடையான்பட்டி இராமசாமி ரெட்டியார் திருப்பணி பூசைகள் செய்தே சித்தரை உபசரித்தார்கள் . வெட்டியும் நீரின்மையைச் சித்தரிடம் தெரிவிக்க சித்தர் செய்துள்ள பெருமாள் கோயில் கிணற்றில் அதிக ஆழத்திற்கு ஒரு சக்கரத்தைத் தகட்டில் வரைந்து கிணற்றில் இடச் கிணற்றில் நிரம்ப நீர் ஊறி வந்தமையை ரெட்டியார் ஒரு செய்தார் . இவ்வாறே இராமசாமி இரெட்டியார் செய்யக் சுவாமிகளை விழாவாகக் கொண்டாடினார் வைத்துக்கொண்டே குடமுழுக்கை வெகுவிமரிசையாக நடத்தினார் . இவ்வாறு எம் சித்தர்களின் சித்தி வல்லமையை கூற வார்த்தைகளே இல்லை . அவர்களை இனங்கண்டு கொள்வதும் காண்பதும் அவர்களுடைய அருளாசிகளைப் பெறுவதும் பல பிறப்புக்களிலும் நாம் செய்த புண்ணியத்தின் பயனே ஆகும் . அப்பெருமானின் அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று அவருடைய திருவடிகளில் வணங்கி நிற்கின்றேன் . திருச்சிற்றம்பலம் தொகுப்பு - சிவத்திரு.வடிவேலு கங்காளன் தகவல்கள் படங்கள் : சிவத்திரு.யோகி . தங்கவேல் கோபிநாத்