தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 சிவபூமியில் சிவனைத் தேடி கி.மு 2ம் நூற்றாண்டுச் சான்றுகளுடன் உள்ள அம்பாறை சங்கமன் கண்டியில் ஆதிகாலச் சிவன் கோயில் தெ) 10 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் போன்று, அம்பாறை மாவட்டமும் ஆதி காலம் தொட்டு தமிழர் பண்பாடு, அவர்களின் பாராம்பரியங்கள், சைவப்பண்பாடு அதன் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு மரபுகள், செழுமையான வாழ்க்கைக் கோலங்களைக் கொண்ட பெருநிலப் பரப்பாகும். பண்டைய காலம் தொட்டு வாழ்ந்த இப்பிரதேச தமிழ் மக்களிடத்தில் சிவ வழிபாடும், முருக வழிபாடும், பிள்ளையார் வழிபாடும், கண்ணகி வழிபாடும் காலூன்றியிருந்தமையை, அங்கு பல இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள், தொல்லியல் சின்னங்கள், பண்டைய ஓலைச்சுவடிகள், மற்றும் இலக்கியங்கள் என்பன சான்றுரைக்கின்றன. சங்குமன் எனும் நாகர் குலத்து சிற்றரசனால் ஆட்சி புரிந்த தலை நகரமாதலால் சங்குமன் கண்டி என்ற பெயரைப் பெற்றது என்பர். இங்கு கிடைத்துள்ள ஈமக் கல்லறை மூடி ஒன்றின் மேல் "வேள் நாகன் மகன் வேள் கண்ணன்" எனப் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமிச் சாசனம் இங்கு மூன்று தலை முறைகளைச் சேர்ந்த வேளிரைப் பற்றிய குறிப்பைத் தருவதனால் கிழக்கு மாகாணத்திலே ஆதி வரலாற்றுடன் தொடர்புடைய தமிழர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதை ஐயமின்றி அறிய முடிகின்றது. yoreeay இவ் வனப்பகுதியிலும், மலைப் பகுதிகளிலும் பல கட்டடச் சிதைவுகளும், செங்கற் கட்டுமான அழிபாடுகளும், கற்தூண்களும், மண்டப அமைப்புக்களும், நீர்த்தடாகம் (கேணி), கற்குளியல் தொட்டிகள், கற்படுக்கைகள், நடுகல் கல்லறைகள், பானை ஓடுகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் பலவற்றை ஆய்வு செய்த சரித்திரவியலாளர்கள் சில Y தொல்பொருட் சின்னங்களின் காலம் கி.மு 2 ஆம் நூற் றாண்டுக்குரியவை என்றும், இன்னும் சில சின்னங்கள் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்று முடிவு கூறுகின்றனர். இது பற்றி இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலில் 315 ஆம் பக்கத்தில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சங்கமன் கண்டி "இரண்டாவது இடம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்டது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்திலிருந்து சுமார் 12 மைல் தூரத்திலும், உகந்தையிலிருந்து சுமார் 55 மைல் தூரத்திலும் சங்கமன் கண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இவ் இடம் மலைப் பிரதேசமாகவும், போலத் தெரிகின்றது. அங்கு இரு வேறு காலங்களுக்குரிய அடர்ந்த காட்டுப் பிரதேசமாகவும் காட்சியளிக்கின்றது. காட்டின் மத்தியில் ஒரு பழமையான பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைக் காட்டுப் பிள்ளையார் கோயில் என்று அழைப்பர். இக்கோயிலிற்குச் சற்றுத் தொலை தூரத்தில், ஒரு பழம் பெரும் சிவாலயம் இருந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. தற்போது அங்குள்ள மலையொன்றில் முருகன் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. கதிர்காம யாத்திரை செல்பவர்களுக்கு ஓர் புனித இடமாக இப்பிரதேசம் அமைந்திருக்கின்றது. தலயாத்திரை செல்பவர்கள் இப்பிள்ளையார் கோயிலைத் தரிசித்து, மலையில் அருவமாகவும் உருவமாகவும் நிறைந்து அருளாட்சி புரியும் இலிங்கப் பெருமானின் அருளாசியும் பெற்றே தமது பயணத்தைத் தொடரும் பண்டைய பூர்வீக இடமாகவும் விளங்கி வருகின்றது. செவிவழிமரபுக் கதைகளின் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஆதியானவை. நாகரோடு தொடர்புடையவை. அங்கு கி.பி காணப்படுகின்றன. அவை தமிழ்ப் பிராமி வடிவங்களில் 400 வரையான காலத்திற்குரிய தமிழ்க் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவை. பிற்பட்ட காலத்தில் அங்கு குறிப்பிடத்தக்களவு சமூக பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டது போலத் தெரிகின்றது. கி.பி ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல கல்வெட்டுக்கள் காணப்படுகன்றன. அவை மொழிமாற்றம், சமயமாற்றம், வரிவடிவமுறையில் மாற்றம் என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன." படி இங்கு பல முனிவர்களும், மகான்களும் தவம் புரிந்து சிவனருள் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது. வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது, தென் கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளான நாகர் குலத்தவர்களது இராசதானியாக சங்கமன் கண்டி விளங்கியுள்ளது. இவ் இடம் பற்றிய தகவல்களை அறிவதற்கு, பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் என்ற நூலிலும், ஆய்வாளர் எஸ். திருச்செல்வம் எழுதிய தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்து சமய வரலாறு என்ற நூ லிலும் கண்டு கொள்ளலாம். “கிழக்கு மாகாணத்திலே ஆதி வரலாற்றுக் காலத் தமிழர் குடியிருப்புக்கள் தொடர்பான பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களில் சங்கமன் கண்டி ஒரு முக்கியமான தலமாகும். அங்கு இரு வேறு இடங்களிலே தொல்பொருட் சின்னங்கள் செறிந்து காணப்படுகின்றன. அவற்றிலொன்று நான்காம் நூற்றாண்டு வரை குடியிருப்பு பகுதியாக விளங்கியது. அதற்குப் பிற்பட்ட தொல்பொருட் சின்னங்கள் காணப்படவில்லை. அங்குள்ள கல்வெட்டுக்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அவை தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன." எனவே தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் தங்களது சமய சமூக நம்பிக்கை மரபுகளோடு இயைந்து வாழ்ந்த பிரதேசமாக சங்கமன் கண்டி விளங்கியுள்ளது. தற்போது இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பிரதேசமாகவும் விளங்குகின்றது. திருத்தல வரலாறு கிழக்கிலங்கையில் 'கண்டி' என்னும் பெயரோடு அழைக்கப்படும் சங்கமன் கண்டியில் வேளிர் குல பெருங்கற்காலப் பண்பாடோடு மிக நெருங்கிய தொடர்புடைய நாகர்குல வம்சம் வாழ்ந்ததாகவும், உறுதியான நிலையில், பூர்வீக காலத்தில் மாடங்கள் பல கொண்ட கோபுரங்களை உடைய மூன்று கோயில்கள் இப்பிரதேசத்தில் இருந்ததாகவும், பின்பு அக்கோயில்கள் போர்த்துக்கீச தளபதி அசுவிடோவினால் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அவை திருக்கோவில் சித்திர வேலாயுதர் மற்றவை சங்கமன் கண்டி சிவாலயம் மற்றும் கோயில், பிள்ளையார் கோயில் என்பனவாகும். கி.பி1498 இல் வாஸ் கொடகாமா என்னும் போர்த்துக்கேய மாலுமி தனது கடற்பிரயாணத்தின் போது கண்ட, சங்கமன் கண்டி மலையையும் அதன் அருகாமையில் தென்பட்ட கோயில்களையும் தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்றால் போல் தற்போதைய சங்கமன் கண்டி பிள்ளையார் கோயிலின் வடமேற்கில் சிறிது தொலைவில் மலைப்பாறைத் தொடரின் வடக் கெல்லையில், இன்றும் ஆலயச் சிதைவுகளை அவதானிக்க முடிகின்றது. அச் சிதைவுகளின் எச்சங்களைக் கொண்டு, அங்கு ஓர் சிவாலய இருப்புக்கான ஊகங்கள் பல ஆய்வாளர்களால் முன் - வைக்கப்பட்டும் வருகின்றது. தற்போது மலையில் ஆவுடையார் அற்ற மூன்று சிவலிங்கங்கள் காணப்படுகின்றது. அவை அவ்வப்போது காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மலையில் இருந்து உருட்டி விடப்படுவதாகவும், பின்பு அங்கு வழிபாட்டிற்குச் செல்லும் பத்தர்கள் அவ் இலிங்கங்களை மலையில் வைத்து வழிபாடு இயற்றப்பட்டும் வருவதாகவும், இப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர். தற்போது உள்ள காட்டுப் பிள்ளையார் கோயிலிலும், ஆவுடையார் அற்ற இலிங்கம் பூசைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து, சங்கமன் கண்டி சிவ வழிபாட்டின் எச்சங்களாக இவற்றை நோக்க முடிகின்றது. கோணேசர் கல்வெட்டின் படி குளக்கோட்டு மகாராசா காலத்தில் கோண மலையாரின் எல்லைப் பூமியாக மேற்கே முனீசுவரத்திலும், வடக்கே கரம்பகத்திலும், கிழக்கே வங்கக் கடலோரத்திலும், தெற்கே சங்கமன் கண்டியிலும் சூலங்கள் நடப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. இந்த அடிப்படையில் சூலம் நாட்டப்பட்ட எல்லைச் சிவன் கோயில் ஒன்று சங்கமன் கண்டியில் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கின்றது. சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைபாணி சதுகலைமாணி, பிரான்சு இன்று உள்ளவர்கள் அனைவராலும் அறியப்பட்ட சிவாலயமாக சங்கமன் கண்டி விளங்கியிருந்தாலும், அவற்றின் எச்சங்களைக் காப்பதற்கும், அவ்விடத்தில் மீள ஓர் சிவாலயம் சங்கமன் கண்டி சிவவழிபாட்டு எச்சங்கள் எழுப்பப்படுவதற்கும் இன்னும் முயற்சிகள் கைகூடவில்லை என்பது மன வேதனைக்குரியது. பண்டைய சைவமரபை தழைக்கச் செய்யும் நோக்கோடும், இளம் சமுதாயத்தினரி டையே சைவத்தமிழ் பற்றினை வித்திடும் நோக்குடனும், வரலாறுகளை விழுமியங்களை தக்கவைக்கும் நோக்குடன் இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் கூடிய கவனம் எடுக்கவேண்டுமென்பது பலரது அவாவாகும். பண்டைய சைவ மரபை புலப்படுத்தும் முகமாக, அன்று, விருப்பாக்கன் என்பவரால் வாரிவனத்தில் உருவாக்கப்பட்டு, சோழர்காலத்தில் பெரிதாக்கப்பட்டு, பின் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட தான்தோன்றி சிவன் கோயிலின் இலிங்கத்தை சாவகச்சேரியில் மத்திய போக்கு வரத்து நடுவத்திற்கு அண்மித்த இடத்தில் புதிய கோயிலமைத்து, சோழர்கால வாரிவனலிங்கத்தினை வைத்து, மக்கள் வழிபட்டு வந்தனர். மீண்டும் இறைவன் திருவருளால், சைவ மாணவர் சபையின் ஏற்பட்டில் வாரிவனத்தின் நடுவிலே நீதிமன்ற வளாகத்தின் முன் புதுப்பொலிவுடன் கருங்கல் கருவூலமாகவும் புதிய இலிங்கமாக வாரியப்பர் எழுந்தருளி செந்தமிழில் வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சங்கமன் கண்டியிலும் இவ்வாறு சிவாலயம் அமைக்க புலம்பெயர் தேசத்தவர்கள் மற்றும் பற்றாளர்கள் முன்வர வேண்டும். எதிர்வரும் காலங்களில், இம் முயற்சிகள் நிறைவேருவதற்கு சங்கமன் கண்டி சிவனின் திருவருள் கைகூடட்டும். "புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கள் தாளே புந்திவைத் திட்டு இகழ்மின் எல்லா வல்லலையும் இனியோ ரிடையூ றடையாமே திகழஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி நாம் நிகழுமடியார் முன் சென்று நெஞ்ச முருகி நிற்போமே." மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் திருச்சிற்றம்பலம்.
தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 சிவபூமியில் சிவனைத் தேடி கி.மு 2 ம் நூற்றாண்டுச் சான்றுகளுடன் உள்ள அம்பாறை சங்கமன் கண்டியில் ஆதிகாலச் சிவன் கோயில் தெ ) 10 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் போன்று அம்பாறை மாவட்டமும் ஆதி காலம் தொட்டு தமிழர் பண்பாடு அவர்களின் பாராம்பரியங்கள் சைவப்பண்பாடு அதன் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு மரபுகள் செழுமையான வாழ்க்கைக் கோலங்களைக் கொண்ட பெருநிலப் பரப்பாகும் . பண்டைய காலம் தொட்டு வாழ்ந்த இப்பிரதேச தமிழ் மக்களிடத்தில் சிவ வழிபாடும் முருக வழிபாடும் பிள்ளையார் வழிபாடும் கண்ணகி வழிபாடும் காலூன்றியிருந்தமையை அங்கு பல இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் தொல்லியல் சின்னங்கள் பண்டைய ஓலைச்சுவடிகள் மற்றும் இலக்கியங்கள் என்பன சான்றுரைக்கின்றன . சங்குமன் எனும் நாகர் குலத்து சிற்றரசனால் ஆட்சி புரிந்த தலை நகரமாதலால் சங்குமன் கண்டி என்ற பெயரைப் பெற்றது என்பர் . இங்கு கிடைத்துள்ள ஈமக் கல்லறை மூடி ஒன்றின் மேல் வேள் நாகன் மகன் வேள் கண்ணன் எனப் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமிச் சாசனம் இங்கு மூன்று தலை முறைகளைச் சேர்ந்த வேளிரைப் பற்றிய குறிப்பைத் தருவதனால் கிழக்கு மாகாணத்திலே ஆதி வரலாற்றுடன் தொடர்புடைய தமிழர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதை ஐயமின்றி அறிய முடிகின்றது . yoreeay இவ் வனப்பகுதியிலும் மலைப் பகுதிகளிலும் பல கட்டடச் சிதைவுகளும் செங்கற் கட்டுமான அழிபாடுகளும் கற்தூண்களும் மண்டப அமைப்புக்களும் நீர்த்தடாகம் ( கேணி ) கற்குளியல் தொட்டிகள் கற்படுக்கைகள் நடுகல் கல்லறைகள் பானை ஓடுகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் பலவற்றை ஆய்வு செய்த சரித்திரவியலாளர்கள் சில Y தொல்பொருட் சின்னங்களின் காலம் கி.மு 2 ஆம் நூற் றாண்டுக்குரியவை என்றும் இன்னும் சில சின்னங்கள் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்று முடிவு கூறுகின்றனர் . இது பற்றி இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலில் 315 ஆம் பக்கத்தில் பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் . சங்கமன் கண்டி இரண்டாவது இடம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்டது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்திலிருந்து சுமார் 12 மைல் தூரத்திலும் உகந்தையிலிருந்து சுமார் 55 மைல் தூரத்திலும் சங்கமன் கண்டி எனும் இடம் அமைந்துள்ளது . இவ் இடம் மலைப் பிரதேசமாகவும் போலத் தெரிகின்றது . அங்கு இரு வேறு காலங்களுக்குரிய அடர்ந்த காட்டுப் பிரதேசமாகவும் காட்சியளிக்கின்றது . காட்டின் மத்தியில் ஒரு பழமையான பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலைக் காட்டுப் பிள்ளையார் கோயில் என்று அழைப்பர் . இக்கோயிலிற்குச் சற்றுத் தொலை தூரத்தில் ஒரு பழம் பெரும் சிவாலயம் இருந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன . தற்போது அங்குள்ள மலையொன்றில் முருகன் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன . கதிர்காம யாத்திரை செல்பவர்களுக்கு ஓர் புனித இடமாக இப்பிரதேசம் அமைந்திருக்கின்றது . தலயாத்திரை செல்பவர்கள் இப்பிள்ளையார் கோயிலைத் தரிசித்து மலையில் அருவமாகவும் உருவமாகவும் நிறைந்து அருளாட்சி புரியும் இலிங்கப் பெருமானின் அருளாசியும் பெற்றே தமது பயணத்தைத் தொடரும் பண்டைய பூர்வீக இடமாகவும் விளங்கி வருகின்றது . செவிவழிமரபுக் கதைகளின் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன . அவற்றுள் ஆதியானவை . நாகரோடு தொடர்புடையவை . அங்கு கி.பி காணப்படுகின்றன . அவை தமிழ்ப் பிராமி வடிவங்களில் 400 வரையான காலத்திற்குரிய தமிழ்க் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவை . பிற்பட்ட காலத்தில் அங்கு குறிப்பிடத்தக்களவு சமூக பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டது போலத் தெரிகின்றது . கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல கல்வெட்டுக்கள் காணப்படுகன்றன . அவை மொழிமாற்றம் சமயமாற்றம் வரிவடிவமுறையில் மாற்றம் என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன . படி இங்கு பல முனிவர்களும் மகான்களும் தவம் புரிந்து சிவனருள் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது . வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது தென் கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளான நாகர் குலத்தவர்களது இராசதானியாக சங்கமன் கண்டி விளங்கியுள்ளது . இவ் இடம் பற்றிய தகவல்களை அறிவதற்கு பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் என்ற நூலிலும் ஆய்வாளர் எஸ் . திருச்செல்வம் எழுதிய தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்து சமய வரலாறு என்ற நூ லிலும் கண்டு கொள்ளலாம் . கிழக்கு மாகாணத்திலே ஆதி வரலாற்றுக் காலத் தமிழர் குடியிருப்புக்கள் தொடர்பான பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களில் சங்கமன் கண்டி ஒரு முக்கியமான தலமாகும் . அங்கு இரு வேறு இடங்களிலே தொல்பொருட் சின்னங்கள் செறிந்து காணப்படுகின்றன . அவற்றிலொன்று நான்காம் நூற்றாண்டு வரை குடியிருப்பு பகுதியாக விளங்கியது . அதற்குப் பிற்பட்ட தொல்பொருட் சின்னங்கள் காணப்படவில்லை . அங்குள்ள கல்வெட்டுக்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளது . அவை தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன . எனவே தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் தங்களது சமய சமூக நம்பிக்கை மரபுகளோடு இயைந்து வாழ்ந்த பிரதேசமாக சங்கமன் கண்டி விளங்கியுள்ளது . தற்போது இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பிரதேசமாகவும் விளங்குகின்றது . திருத்தல வரலாறு கிழக்கிலங்கையில் ' கண்டி ' என்னும் பெயரோடு அழைக்கப்படும் சங்கமன் கண்டியில் வேளிர் குல பெருங்கற்காலப் பண்பாடோடு மிக நெருங்கிய தொடர்புடைய நாகர்குல வம்சம் வாழ்ந்ததாகவும் உறுதியான நிலையில் பூர்வீக காலத்தில் மாடங்கள் பல கொண்ட கோபுரங்களை உடைய மூன்று கோயில்கள் இப்பிரதேசத்தில் இருந்ததாகவும் பின்பு அக்கோயில்கள் போர்த்துக்கீச தளபதி அசுவிடோவினால் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது . அவை திருக்கோவில் சித்திர வேலாயுதர் மற்றவை சங்கமன் கண்டி சிவாலயம் மற்றும் கோயில் பிள்ளையார் கோயில் என்பனவாகும் . கி.பி 1498 இல் வாஸ் கொடகாமா என்னும் போர்த்துக்கேய மாலுமி தனது கடற்பிரயாணத்தின் போது கண்ட சங்கமன் கண்டி மலையையும் அதன் அருகாமையில் தென்பட்ட கோயில்களையும் தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் . இதற்கேற்றால் போல் தற்போதைய சங்கமன் கண்டி பிள்ளையார் கோயிலின் வடமேற்கில் சிறிது தொலைவில் மலைப்பாறைத் தொடரின் வடக் கெல்லையில் இன்றும் ஆலயச் சிதைவுகளை அவதானிக்க முடிகின்றது . அச் சிதைவுகளின் எச்சங்களைக் கொண்டு அங்கு ஓர் சிவாலய இருப்புக்கான ஊகங்கள் பல ஆய்வாளர்களால் முன் - வைக்கப்பட்டும் வருகின்றது . தற்போது மலையில் ஆவுடையார் அற்ற மூன்று சிவலிங்கங்கள் காணப்படுகின்றது . அவை அவ்வப்போது காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மலையில் இருந்து உருட்டி விடப்படுவதாகவும் பின்பு அங்கு வழிபாட்டிற்குச் செல்லும் பத்தர்கள் அவ் இலிங்கங்களை மலையில் வைத்து வழிபாடு இயற்றப்பட்டும் வருவதாகவும் இப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர் . தற்போது உள்ள காட்டுப் பிள்ளையார் கோயிலிலும் ஆவுடையார் அற்ற இலிங்கம் பூசைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து சங்கமன் கண்டி சிவ வழிபாட்டின் எச்சங்களாக இவற்றை நோக்க முடிகின்றது . கோணேசர் கல்வெட்டின் படி குளக்கோட்டு மகாராசா காலத்தில் கோண மலையாரின் எல்லைப் பூமியாக மேற்கே முனீசுவரத்திலும் வடக்கே கரம்பகத்திலும் கிழக்கே வங்கக் கடலோரத்திலும் தெற்கே சங்கமன் கண்டியிலும் சூலங்கள் நடப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது . இந்த அடிப்படையில் சூலம் நாட்டப்பட்ட எல்லைச் சிவன் கோயில் ஒன்று சங்கமன் கண்டியில் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கின்றது . சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைபாணி சதுகலைமாணி பிரான்சு இன்று உள்ளவர்கள் அனைவராலும் அறியப்பட்ட சிவாலயமாக சங்கமன் கண்டி விளங்கியிருந்தாலும் அவற்றின் எச்சங்களைக் காப்பதற்கும் அவ்விடத்தில் மீள ஓர் சிவாலயம் சங்கமன் கண்டி சிவவழிபாட்டு எச்சங்கள் எழுப்பப்படுவதற்கும் இன்னும் முயற்சிகள் கைகூடவில்லை என்பது மன வேதனைக்குரியது . பண்டைய சைவமரபை தழைக்கச் செய்யும் நோக்கோடும் இளம் சமுதாயத்தினரி டையே சைவத்தமிழ் பற்றினை வித்திடும் நோக்குடனும் வரலாறுகளை விழுமியங்களை தக்கவைக்கும் நோக்குடன் இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் கூடிய கவனம் எடுக்கவேண்டுமென்பது பலரது அவாவாகும் . பண்டைய சைவ மரபை புலப்படுத்தும் முகமாக அன்று விருப்பாக்கன் என்பவரால் வாரிவனத்தில் உருவாக்கப்பட்டு சோழர்காலத்தில் பெரிதாக்கப்பட்டு பின் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட தான்தோன்றி சிவன் கோயிலின் இலிங்கத்தை சாவகச்சேரியில் மத்திய போக்கு வரத்து நடுவத்திற்கு அண்மித்த இடத்தில் புதிய கோயிலமைத்து சோழர்கால வாரிவனலிங்கத்தினை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர் . மீண்டும் இறைவன் திருவருளால் சைவ மாணவர் சபையின் ஏற்பட்டில் வாரிவனத்தின் நடுவிலே நீதிமன்ற வளாகத்தின் முன் புதுப்பொலிவுடன் கருங்கல் கருவூலமாகவும் புதிய இலிங்கமாக வாரியப்பர் எழுந்தருளி செந்தமிழில் வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . சங்கமன் கண்டியிலும் இவ்வாறு சிவாலயம் அமைக்க புலம்பெயர் தேசத்தவர்கள் மற்றும் பற்றாளர்கள் முன்வர வேண்டும் . எதிர்வரும் காலங்களில் இம் முயற்சிகள் நிறைவேருவதற்கு சங்கமன் கண்டி சிவனின் திருவருள் கைகூடட்டும் . புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கள் தாளே புந்திவைத் திட்டு இகழ்மின் எல்லா வல்லலையும் இனியோ ரிடையூ றடையாமே திகழஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி நாம் நிகழுமடியார் முன் சென்று நெஞ்ச முருகி நிற்போமே . மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் திருச்சிற்றம்பலம் .