தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு அரும்பன்ன வனமுலை அம்மை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோயில் - திருத்துருத்தி [குத்தாலம்] தேவாரப் பாடல்பெற்ற சிவபுரங்களில் 100வது திருக்கோயில் வழிபட்டால் காசியில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்," என்று கூறினார். திருத்துருத்தி இறை ன வழிபட்டால் முற்பிறவி அனுபவங்களை வெளிப்படுத்துவார் மற்றும் திருமணத் தடையை நீக்குவார். மயிலாடுதுறை அமைவிடம்: (மயிலாடுதுறை மாவட்டம் - தமிழ்நாடு கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள், இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன. திருத்தலச் சிறப்பு சுந்தரர் பாடிய பதிகங்கள் இத்தல இறைவன் தான்தோன்றி இலிங்கமாக காட்சி தருகிறார். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால், இத்தலத்தில் வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். இத்தலத்தை வணங்கினால் காசியில் மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அக்கினி தேவர் தன் பழி தீர சுவாமியை வழிபட்டது இத்தலத்திலே ஆகும். தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் வெடிப்படக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 100வது தேவாரத்தலம் ஆகும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டது. பரத மாமுனிவர் தமக்கு குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றிய அரும்பன்ன வனமுலை அம்மை இத்தலத்தில் வழிபட்டு சிவபெருமானை திருமணம் செய்தால், திருமணத் திருத்தலம் எனப்படுகின்றது. தல திருமரமாக உத்தால மரம் இருக்கிறது. இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்ட இத்தலம் மருவி குத்தாலம் ஆயிற்று. திருமணத் திருத்தலம் என்பதால், அரும்பன்ன வனமுலை அம்மையை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இறைவன் திருப்பெயர் : சொன்னவாறு அறிவார் (உத்தவேதீசுவரர்), வீங்கு நீர் துருத்தி உடையார் இறைவியார் திருப்பெயர் : அரும்பன்ன வளமுலையாள் (பரிமள சுகந்த நாயகி) கோயில்மரம் : உத்தால மரம் (ஆத்தியில் ஒரு வகை) திருக்குளம் : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், தாமரைத் தீர்த்தம், வடகுளம் வழிபட்டோர் : அம்பாள், காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர், கதிரவன், பரத முனிவர் பாமாலை: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற் தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள் பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ் வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. அப்பர் பாடிய பதிகம் பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து மின்கள் ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையில் வைத்த துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே. சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற் காப்பது வேள்விக் குடிதண் துருத்தியெங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. திருத்தல வரலாறு திருவாவடுதுறை தலத்தில் உமையம்மை பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும், சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்மைக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி, அம்மை, வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி, ஒரு பெண்ணாகப் பிறந்தார். இறைவனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். 8ம் நாள் இறைவன் அங்கு இலிங்க வடிவில் தோன்றி, இலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, அம்மையின் கரம் பற்றினார். அம்மை நாணம் கொண்டு, "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள படி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினார். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற, அம்மை முனிவரின் ஆச்சிரமம் அடைந்தார். சில காலம் கழித்து நந்தியை, பரத மாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவபெருமான். முனிவரும் சம்மதிக்க மணநாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக, இடப வாகனத்தில் சிவபெருமான் வர, விநாயகர் முன்னே செல்ல, “உத்தாலம்” என்னும் மரமும் சிவபெருமானுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் இறைவியாரை இறைவன் திருமணம் செய்து கொண்டார். சிவபெருமான் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் (ஒரு வகை ஆத்தி மரம்) விட்டு சென்றார். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி "குத்தாலம் " என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் “துருத்தி" என்றும் வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள்படும். இறைவன் தாமே சொல்லிய விதியின்படி, தான் திருமணம் செய்து கொள்வதாக இறைவிக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால், இறைவன் திருப்பெயர் சொன்ன வாரறிவார் என்றாயிற்று. உருத்திரசன் என்ற சிவபத்தன் முத்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவபெருமான், குண்டோதரனை அழைத்து "நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு" என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவபெருமான் என்பதை அறிந்து அவன் வணங்க, "இத்தலத்தை 03 தெ தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால், வருத்தமடைந்த அக்கினி தேவர் இங்கு வந்துதான் தன் குறையை போக்கி, அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனார். அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. காளி, கதிரவன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது இத்தலத்தில் ஆகும். சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபத்தனின் காச நோயை போக்கியது போன்ற பல பெருமைகளை உடையது. சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும், நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி, தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். 40 திருக்கோயில் அமைப்பு கோயில் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராசகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு வீதிகள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் தல மரமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் திருமுன் மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் திருமுன் உள்ளது. இவ்விரு வீதிகளோடு அமைந்துள்ளன. இறைவியை மணந்து கொள்ள கோயில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனித்தனி வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் இறைவி திருமுன்னுக்கு செல்லும் வழியில் வெளி வீதியில் தென்மேற்கு மூலையில் திருச்சிற்றம்பலம் கோயில் கொண்டிருக்கிறார். உள்வீதியில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்கு வீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். வீதியின் கிழக்குப் புறத்தில் ஒன்பான்கோள்கள் (நவக்கிரகங்கள்), எழுவார் கண்ட நாதர் (சப்தரிஷீஸ்வரர்), சனைச்சரன், பைரவர் மற்றும் ஐந்து இலிங்கங்கள் ஆகிய திருமுன்கள் உள்ளன. சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படு கின்றன. அக்கினி தேவர் மற்றும் காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர் ஆகிய எழுவரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். கதிரவன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர். நாமும் பாவங்கள் பிணிகள் நீங்க, சொன்னவாரறிவாரரை நினைந்து, திருமணத்தடைகள் நீங்கி, சீரும் சிறப்புமாய் தந்தை தாய் விருப்பத்தோடு திருமணம் நடந்தேறி வையகத்துள் வாழ்வாங்கு வாழ, எல்லாம் வல்ல, அருள்மிகு அரும்பன்ன வனமுலை அம்மை உடனுறை சொன்னவாறு அறிவார் திருவருள் கைகூடட்டும். சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in.
தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு அரும்பன்ன வனமுலை அம்மை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோயில் - திருத்துருத்தி [ குத்தாலம் ] தேவாரப் பாடல்பெற்ற சிவபுரங்களில் 100 வது திருக்கோயில் வழிபட்டால் காசியில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார் . திருத்துருத்தி இறை வழிபட்டால் முற்பிறவி அனுபவங்களை வெளிப்படுத்துவார் மற்றும் திருமணத் தடையை நீக்குவார் . மயிலாடுதுறை அமைவிடம் : ( மயிலாடுதுறை மாவட்டம் - தமிழ்நாடு கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது . திருவேள்விக்குடி திருஎதிர்கொள்பாடி திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன . திருத்தலச் சிறப்பு சுந்தரர் பாடிய பதிகங்கள் இத்தல இறைவன் தான்தோன்றி இலிங்கமாக காட்சி தருகிறார் . இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் இத்தலத்தில் வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும் . இத்தலத்தை வணங்கினால் காசியில் மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் . அக்கினி தேவர் தன் பழி தீர சுவாமியை வழிபட்டது இத்தலத்திலே ஆகும் . தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் வெடிப்படக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு . சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும் . ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டது . பரத மாமுனிவர் தமக்கு குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றிய அரும்பன்ன வனமுலை அம்மை இத்தலத்தில் வழிபட்டு சிவபெருமானை திருமணம் செய்தால் திருமணத் திருத்தலம் எனப்படுகின்றது . தல திருமரமாக உத்தால மரம் இருக்கிறது . இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்ட இத்தலம் மருவி குத்தாலம் ஆயிற்று . திருமணத் திருத்தலம் என்பதால் அரும்பன்ன வனமுலை அம்மையை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை . இறைவன் திருப்பெயர் : சொன்னவாறு அறிவார் ( உத்தவேதீசுவரர் ) வீங்கு நீர் துருத்தி உடையார் இறைவியார் திருப்பெயர் : அரும்பன்ன வளமுலையாள் ( பரிமள சுகந்த நாயகி ) கோயில்மரம் : உத்தால மரம் ( ஆத்தியில் ஒரு வகை ) திருக்குளம் : காவிரி தீர்த்தம் சுந்தர தீர்த்தம் தாமரைத் தீர்த்தம் வடகுளம் வழிபட்டோர் : அம்பாள் காசிபன் ஆங்கிரசன் கௌதமன் மார்க்கண்டேயர் வசிட்டர் புலத்தியர் அகத்தியர் கதிரவன் பரத முனிவர் பாமாலை : அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற் தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள் பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ் வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே . அப்பர் பாடிய பதிகம் பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து மின்கள் ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையில் வைத்த துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே . சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற் காப்பது வேள்விக் குடிதண் துருத்தியெங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே . திருத்தல வரலாறு திருவாவடுதுறை தலத்தில் உமையம்மை பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார் . ஆனால் திருமணம் நடைபெறவில்லை . அம்மைக்கு இன்னொரு பணி காத்திருந்தது . அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்மை வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தார் . இறைவனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார் . 8 ம் நாள் இறைவன் அங்கு இலிங்க வடிவில் தோன்றி இலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்மையின் கரம் பற்றினார் . அம்மை நாணம் கொண்டு சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள படி தாய் தந்தையர் உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறினார் . உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்மை முனிவரின் ஆச்சிரமம் அடைந்தார் . சில காலம் கழித்து நந்தியை பரத மாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவபெருமான் . முனிவரும் சம்மதிக்க மணநாள் குறிக்கப்பட்டது . கைலாயத்திலிருந்து மணமகனாக இடப வாகனத்தில் சிவபெருமான் வர விநாயகர் முன்னே செல்ல உத்தாலம் என்னும் மரமும் சிவபெருமானுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது . மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் இறைவியாரை இறைவன் திருமணம் செய்து கொண்டார் . சிவபெருமான் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும் கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் ( ஒரு வகை ஆத்தி மரம் ) விட்டு சென்றார் . எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று . தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்றும் வழங்கப்பட்டது . துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள்படும் . இறைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக இறைவிக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் திருப்பெயர் சொன்ன வாரறிவார் என்றாயிற்று . உருத்திரசன் என்ற சிவபத்தன் முத்தி பெற காசிக்கு சென்றான் . இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவபெருமான் குண்டோதரனை அழைத்து நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு என்று கூறினார் . அதன்படி பாம்பு இவனை தடுக்க உருத்திரசன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது . பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார் . பாம்பாட்டியாக வந்திருப்பது சிவபெருமான் என்பதை அறிந்து அவன் வணங்க இத்தலத்தை 03 தெ தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்கினி தேவர் இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனார் . அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது . விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது . காளி கதிரவன் காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது இத்தலத்தில் ஆகும் . சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது . சிவபத்தனின் காச நோயை போக்கியது போன்ற பல பெருமைகளை உடையது . சிவத்திரு குமரேசன் இராஜசிம்மன் சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார் . சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார் . காஞ்சிபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார் . இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார் . சுந்தரரும் அவ்வாறே செய்ய நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார் . 40 திருக்கோயில் அமைப்பு கோயில் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது . 5 நிலை இராசகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது . இரண்டு வீதிகள் கொண்டது . கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் பலிபீடம் உள்ளன . வலதுபுறம் தல மரமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது . மூலவர் திருமுன் மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது . பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் திருமுன் உள்ளது . இவ்விரு வீதிகளோடு அமைந்துள்ளன . இறைவியை மணந்து கொள்ள கோயில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனித்தனி வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் துணைவந்த விநாயகர் என்ற பெயருடன் இறைவி திருமுன்னுக்கு செல்லும் வழியில் வெளி வீதியில் தென்மேற்கு மூலையில் திருச்சிற்றம்பலம் கோயில் கொண்டிருக்கிறார் . உள்வீதியில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம் . கிழக்கு வீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம் . அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார் . வீதியின் கிழக்குப் புறத்தில் ஒன்பான்கோள்கள் ( நவக்கிரகங்கள் ) எழுவார் கண்ட நாதர் ( சப்தரிஷீஸ்வரர் ) சனைச்சரன் பைரவர் மற்றும் ஐந்து இலிங்கங்கள் ஆகிய திருமுன்கள் உள்ளன . சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும் கலையழகோடும் காணப்படு கின்றன . அக்கினி தேவர் மற்றும் காசிபன் ஆங்கிரசன் கௌதமன் மார்க்கண்டேயர் வசிட்டர் புலத்தியர் அகத்தியர் ஆகிய எழுவரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர் . கதிரவன் பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர் . நாமும் பாவங்கள் பிணிகள் நீங்க சொன்னவாரறிவாரரை நினைந்து திருமணத்தடைகள் நீங்கி சீரும் சிறப்புமாய் தந்தை தாய் விருப்பத்தோடு திருமணம் நடந்தேறி வையகத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அருள்மிகு அரும்பன்ன வனமுலை அம்மை உடனுறை சொன்னவாறு அறிவார் திருவருள் கைகூடட்டும் . சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in .