தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12
தெ 04
தென்னாடு
செந்தமிழாகம் சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.lhennadu.org
சிவத்திரு. சிவ செந்தமிழாதன்,
தலைவர் - சைவ மாணவர் சபை,
(பதிவு-HA/4/JA/343)
0715588737, aathan@thennadu.org
இது வரலாற்றுத் தடம்!
ஒரு பொறுப்பு வாய்ந்த நீண்ட பயணத்தின், முதல் தளத்தை "தென்னாடு
திங்கள் இதழ்" அடைந்திருக்கிறது. ஓராண்டைக் கடந்து வந்திருக்கின்ற
இந்த பயணம், தூய தமிழ் வழிபாட்டையும், தமிழ் மந்திரங்களின் உன்னத்
ஆற்றலையும், உலகம் முழுவதும் பரப்பும் வகையில் மின் இதழாகவும்,
இலவச அச்சு இதழாகவும். பன்னிரண்டு இதழை அடைந்து, தனக்கான
அங்கீகாரத்தைப் பெற்றும் உள்ளது என்பதே தென்னாடு ஆசிரியர்
திண்ணை பெருமைப்படும் விடயமாகும்! இறைமொழியாகிய தமிழ் மொழி,
கருவறைகளுக்கு வெளியே காலம் காலமாகத் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு
வந்ததைக் கருதியும், எம் மொழியின் இறைதத்துவத்தை. இளைய
பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய காலத்தின் பெரும்
பணியைக்கருதியும் 'தென்னாடு செந்தமிழாக்கம் சிவ மடத்தின்' திங்கள்
இதழாகிய இப் பத்திரிகைப் பணி ஆரம்பமானது! ஓவ்வொரு திங்களும்
முழு நிறைமதி நாளில், தென்னாடு செந்தமிழாகம் சிவமடத்தில்
வெ செய்யப்படும் இப் பத்திரிகை, நிகழ் உலகில் மேலான சைவத்தின்
பெரும்புகழை எடுத்துச்சொல்லும் ஒரே ஒரு இலவச இதழ் என்பது இதன்
தனித்துவம்!
இணைய வெளியிலும், ஈழத்தில் பொது வெளியிலும் பகிரங்கப்படுத்தப்படும்
இப்பத்திரிகை உங்கள் கைகளில் கிடைக்கிறது என்றால் அது, சங்கம்
கண்ட எம் கடவுளர்களின் அருள் என்றே எண்ணிக்கொள்க!
பதிப்புத்துறையையும், வாசிப்பு ஆற்றலையும் நவீன விஞ்ஞான உலகம்
பகுதியளவில் விழுங்கிவிட்டாலும் கூட, இளைய எழுத்தாளர்களுக்கும்
'இல்லை' என்று மறுக்காது இடம் கொடுத்து, இறையருளே வருவாய்
என்று கருதி முன்னெடுக்கும் இப்பணி தடைகளைத் தாண்டி,
எதிர்ப்புக்குரல்களுக்கு மேலாயும் எழுந்து நிற்கின்றது!
சீர் வளர்சீர் ஆறுமுகநாவலர் ஆற்றிய அச்சுப்பணி மகத்தானது! அவர்
பின்னும், பல பெரியோர் அப்பணியை சீர்மிகவே செய்தனர்! ஆனாலும்,
அருந்தமிழைக் கலப்பின்றி, தனித்தமிழில் இயன்றவரை, இதழொன்றை
வெளியிடும் எண்ணம் எவரும் கொண்டார்களா என்று, எம்மிடம் குறிப்புக்கள்
ஏதும் இல்லை!
"செய்யத்தக்க அல்ல செய்யக்கெடும் செய்யத்தக்க
செய்யாமையானுங் கெடும்" என்பது வள்ளுவர் வாக்கு! கால ஓட்டத்தில்
நாமும் ஒட்டி ஓடுவோம். என்ற வழமைச் சிந்தனையோடு நாமும் பயணித்தால்
எம் பழமைகளை இழக்க நேரிடும்! செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய
வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் கேடு தரும்! அத்தகு கேடு அன்னைத்
தமிழிற்கு நேர்ந்திடக்கூடாது என்பதும், அதன் அருளாற்றலும்
துய்மைத்தன்மையும் காலம் கடந்து பயணிக்க வேண்டும் என்று, தனித்
தமிழ்க் கொள்கை நிலைநாட்டலும் செய்யத்தக்க செயல் என்றே கொள்க!
சிவன் எங்கே உறைகிறான் என்ற கேள்விக்குத் திருஞானசம்பந்தர்,
"தமிழின் நீர்வை பேசித் தாளம், வீணை பண்ணி நல்ல,
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்."
என்று பதில் தருகிறார்! ஞானப்பால் அருந்திய ஞானக்குழந்தையின்
இறைவாக்கல்லவா இது! எனவே, தமிழ் தூய்மையாய் எங்கு துலங்குகிறதோ
அங்கே இறைவன் இருப்பான் என்றால், உங்கள் கைகளில் உள்ள
தென்னாடு திங்கள் இதழிலும் இறைவன் விரும்பி உறைகிறான்! படியுங்கள்,
பரப்புங்கள், வழிபாடும் செய்யுங்கள்! தென்னாட்டின் பதிப்புப் பணியில்
எதிர்வரும் நாட்களில் 'விதி மாற்றும் விரிசடையான்' என்கிற நூலும் ஓவிய
காட்சிகளுடன் கூடிய திருவாசக நூலும் அச்சேறி வர இறையருள் கூடியுள்ளது.
என்கின்ற கூடுதல் செய்தியையும் உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்கிறோம்!
பதிப்புப் பணியில் தென்னாடு ஓராண்டை எட்டியிருக்கிறது என்றால்,
சங்கத்தை காத்த எமது முன்னவர்களின் அருவ ஆற்றல் எம்மை
வழிநடத்துகின்றது என்பதே உண்மை! "தமிழில் அர்ச்சுனை செய்வது
மன அழுத்தத்தை தருகின்றது" என்று தமிழ் தெரியாத தமிழ் மறை அறியாத
சிலர் வெளிப்படையாகவே சொல்லக்கூடிய இக்காலத்தில், தெய்வத்தமிழில்
வழிபாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும், நம்மை உந்தும் ஆற்றலைக்
கொடுப்பது நம் கடவுளரே என்பது உண்மை!
தமிழ் மறைகள் ஆகிய, திருமுறைகள் எம் எல்லார் வீடுகளிலும் ஓதும்
நிலமை உருவாக வேண்டும். ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள
திருக்கோயில்கள் தோறும், ஓதுவார்கள் முறைப்படி இறைபணிக்கு
சேர்த்துக்கொள்ள வேண்டும்! ஆலயங்களை பெருப்பிப்பதும் அழகு
சேர்ப்பதும் அரும்பணிதான்! அதேபோல் திருக்கோயில்களில் திருமுறை
ஓதுவார்களை நியமிப்பதும் பெரும்பணி என்பதையும், அச்சுப்பணி
போலவே, ஆதி அந்தம் இல்லா இறைவனை ஓதும் பணியும்
இன்றியமையாதது என்பதையும் ஈழத்து மற்றும் புலம்பெயர் கோயில்களின்
அறங்காவலர்கள் அறிந்து செயற்படுத்த வேண்டிய காலக்கடமையை
தென்னாடு சார்பில் முன்வைத்து அமைகிறோம்! ஓராண்டை அடைந்த
எங்கள் திங்கள் இதழ் பல்லாண்டுகள் கடந்து பயணிக்க இறைவன் துணை
நிற்க வேண்டும்! இன் தமிழ் உறவுகள் இணை நிற்க வேண்டும்!
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தனன்-நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்!
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
சிங்கப்பூரில் சைவமும் தமிழும்
தழைத்தோங்கச் செய்த
காரைநகர் அம்பலவாணர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021
சிங்கப்பூர் நாட்டில் சைவமும் தமிழும்
தழைத்தோங்கச் செய்தவர் திருவாளர். அம்பலவாணர்
அவர்கள். அவர்களது தமிழ் பணிகளில் பெரும்பங்கு
பத்தி இலக்கியமான திருமுறைகளைப் பரப்புவதிலும்,
ஆய்வதிலும் இருந்ததெனலாம். அவரேசிங்கப்பூரில்
திருமுறை மாநாட்டினைத் தொடங்கி பல ஆண்டுகள்
நடத்தினார். ஈழ நாட்டிலிருந்து சிங்கப்பூரிற்கு
பதியெழுந்த அம்பலவாணர், அக்கால கட்டத்தில்
இலங்கையில் வாழ்ந்த திருமுறைக் கலாநிதி
இராஜசேகரன் ஓதுவாரின் துணை கொண்டு, 1980ம்
ஆண்டு திருமுறை முற்றோதலை நிகழ்த்தினார். அதே
ஆண்டு சிங்கப்பூர் வீரகாளி அம்மன் கோயிலில் நால்வர்
குருபூசையை நிகழ்த்தினார். இவையே சிங்கை திருமுறை
மாநாட்டிற்கு முன்னோடி நிகழ்வாக அமைந்தன.
1981ம் ஆண்டு முதல் முறை திருமுறை மாநாட்டினை
சிங்கப்பூரில் மூன்று நாட்கள் நிகழ்த்தினார். அதன்
பின் பன்னிரண்டு ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்குப்
பெரும்பணியாற்றினார். இந்தியா, இலங்கை, மலேசியா
முதலிய நாடுகளில் உள்ள சைவத் தமிழ்த்தொண்டாற்றும்
பெருமக்களை அழைத்துச் சொற்பொழிவுகளை
நிகழ்த்தினார். இத்திருப்பணிகள் தோய்வின்றி நிகழ்த்தற்
பொருட்டு அதற்கான வைப்பு நிதியையும் தொடங்கி
வைத்தார்.
சிங்கப்பூரில் தமிழ்மக்களிடம் திருமுறைகளைப்
பரப்புவதில், அம்பலவாணர் ஐயா பெரிதும் ஆர்வம்
காட்டினார். சிங்கப்பூர்க் கோயில்களில் ஓதுவார்களைப்
பணிக்கு அமர்த்தி, ஐம்புராணம் பாடும் வழக்கத்தினை
ஏற்படுத்தினார். அத்துடன் திருமுறைகளை பண்ணோடு,
இளையோர் பாட, பயில வேண்டும் எனும் எண்ணத்தில்,
ஓதுவார்களைக் கொண்டு திருமுறை வகுப்புக்களை
நடாத்தினார். அத்துடன் திருமுறைகள் தொடர்பான
பேச்சுப்போட்டி, திருமுறை ஓதற்ப் போட்டி,
முதலியனவற்றை மாணவர்களிடத்தே நடாத்தி,
திருமுறைகளைப் பரவலாக்கம் செய்யமுயன்றார்.
அவரது அரும்பணிகளிற்கு பக்கபலமாக விளங்கியவர்
அவரது மனைவியான கண்மணி அம்மையாரும்,
அம்மையாரின் சகோதரிமாரான பேபியும்,
சிவமணியுமே ஆகும். ஒரு விபத்தால் அம்பலவாணர்
அவர்களது கண்பார்வையானது பாதிப்படைந்தது.
அத்தகைய நிலையிலையும் அவர் தொடர்ந்து
தமிழ்ப்பணியையும் சைவப்பணியையும் மேற்கொண்டு
வந்தார்.
சைவப்பணியும் திருமுறை மாநாடும் தடையின்றி
சிறப்பாக நடைபெறுதற்கு, சைவத்திலும் தமிழிலும்
மிகுந்த ஈடுபாடுடைய அடியார்களையும் பெரியார்
களையும் கொண்டமைத்த குழுவே காரணமாகும்.
ஈழத்துக் காரைநகரிலிருந்து சிங்கப்பூர் சென்ற
அம்பலவாணர், தமிழிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும்
சைவத்திற்கும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை
அவற்றின் சிறு குறிப்பே இதுவாகும். இந்த திருமுறை
மாநாடு இன்றும் சிறப்பாக 41 வருடகாலமாக நடந்து
வருகிறது.
இன்றய காலகட்டத்தில் ஈழத்திலும் பார்க்க அதிக
தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளில் சைவத்தினையும்
தமிழினையும் நிலைநிறுத்த, திருமுறைகள் மற்றும்
சைவ சித்தாந்தம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு
ஊடுகத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் வகிபாகம்
என்ன என்ற வினா எழுந்த நிற்கிறது.
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பாகாகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்
திருச்சிற்றம்பலம்
தெ
04
தென்னாடு
செந்தமிழாகம்
சிவமடம்
.
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
www.lhennadu.org
சிவத்திரு
.
சிவ
செந்தமிழாதன்
தலைவர்
-
சைவ
மாணவர்
சபை
(
பதிவு-
HA
/
4
/
JA
/
343
)
0715588737
aathan@thennadu.org
இது
வரலாற்றுத்
தடம்
!
ஒரு
பொறுப்பு
வாய்ந்த
நீண்ட
பயணத்தின்
முதல்
தளத்தை
தென்னாடு
திங்கள்
இதழ்
அடைந்திருக்கிறது
.
ஓராண்டைக்
கடந்து
வந்திருக்கின்ற
இந்த
பயணம்
தூய
தமிழ்
வழிபாட்டையும்
தமிழ்
மந்திரங்களின்
உன்னத்
ஆற்றலையும்
உலகம்
முழுவதும்
பரப்பும்
வகையில்
மின்
இதழாகவும்
இலவச
அச்சு
இதழாகவும்
.
பன்னிரண்டு
இதழை
அடைந்து
தனக்கான
அங்கீகாரத்தைப்
பெற்றும்
உள்ளது
என்பதே
தென்னாடு
ஆசிரியர்
திண்ணை
பெருமைப்படும்
விடயமாகும்
!
இறைமொழியாகிய
தமிழ்
மொழி
கருவறைகளுக்கு
வெளியே
காலம்
காலமாகத்
திட்டமிட்டு
புறக்கணிக்கப்பட்டு
வந்ததைக்
கருதியும்
எம்
மொழியின்
இறைதத்துவத்தை
.
இளைய
பிள்ளைகளின்
மனதில்
விதைக்க
வேண்டிய
காலத்தின்
பெரும்
பணியைக்கருதியும்
'
தென்னாடு
செந்தமிழாக்கம்
சிவ
மடத்தின்
'
திங்கள்
இதழாகிய
இப்
பத்திரிகைப்
பணி
ஆரம்பமானது
!
ஓவ்வொரு
திங்களும்
முழு
நிறைமதி
நாளில்
தென்னாடு
செந்தமிழாகம்
சிவமடத்தில்
வெ
செய்யப்படும்
இப்
பத்திரிகை
நிகழ்
உலகில்
மேலான
சைவத்தின்
பெரும்புகழை
எடுத்துச்சொல்லும்
ஒரே
ஒரு
இலவச
இதழ்
என்பது
இதன்
தனித்துவம்
!
இணைய
வெளியிலும்
ஈழத்தில்
பொது
வெளியிலும்
பகிரங்கப்படுத்தப்படும்
இப்பத்திரிகை
உங்கள்
கைகளில்
கிடைக்கிறது
என்றால்
அது
சங்கம்
கண்ட
எம்
கடவுளர்களின்
அருள்
என்றே
எண்ணிக்கொள்க
!
பதிப்புத்துறையையும்
வாசிப்பு
ஆற்றலையும்
நவீன
விஞ்ஞான
உலகம்
பகுதியளவில்
விழுங்கிவிட்டாலும்
கூட
இளைய
எழுத்தாளர்களுக்கும்
'
இல்லை
'
என்று
மறுக்காது
இடம்
கொடுத்து
இறையருளே
வருவாய்
என்று
கருதி
முன்னெடுக்கும்
இப்பணி
தடைகளைத்
தாண்டி
எதிர்ப்புக்குரல்களுக்கு
மேலாயும்
எழுந்து
நிற்கின்றது
!
சீர்
வளர்சீர்
ஆறுமுகநாவலர்
ஆற்றிய
அச்சுப்பணி
மகத்தானது
!
அவர்
பின்னும்
பல
பெரியோர்
அப்பணியை
சீர்மிகவே
செய்தனர்
!
ஆனாலும்
அருந்தமிழைக்
கலப்பின்றி
தனித்தமிழில்
இயன்றவரை
இதழொன்றை
வெளியிடும்
எண்ணம்
எவரும்
கொண்டார்களா
என்று
எம்மிடம்
குறிப்புக்கள்
ஏதும்
இல்லை
!
செய்யத்தக்க
அல்ல
செய்யக்கெடும்
செய்யத்தக்க
செய்யாமையானுங்
கெடும்
என்பது
வள்ளுவர்
வாக்கு
!
கால
ஓட்டத்தில்
நாமும்
ஒட்டி
ஓடுவோம்
.
என்ற
வழமைச்
சிந்தனையோடு
நாமும்
பயணித்தால்
எம்
பழமைகளை
இழக்க
நேரிடும்
!
செய்ய
வேண்டிய
நேரத்தில்
செய்ய
வேண்டியதைச்
செய்யாமல்
இருப்பதும்
கேடு
தரும்
!
அத்தகு
கேடு
அன்னைத்
தமிழிற்கு
நேர்ந்திடக்கூடாது
என்பதும்
அதன்
அருளாற்றலும்
துய்மைத்தன்மையும்
காலம்
கடந்து
பயணிக்க
வேண்டும்
என்று
தனித்
தமிழ்க்
கொள்கை
நிலைநாட்டலும்
செய்யத்தக்க
செயல்
என்றே
கொள்க
!
சிவன்
எங்கே
உறைகிறான்
என்ற
கேள்விக்குத்
திருஞானசம்பந்தர்
தமிழின்
நீர்வை
பேசித்
தாளம்
வீணை
பண்ணி
நல்ல
முழவம்
மொந்தை
மல்கு
பாடல்
செய்கை
இடம்
ஓவார்
.
என்று
பதில்
தருகிறார்
!
ஞானப்பால்
அருந்திய
ஞானக்குழந்தையின்
இறைவாக்கல்லவா
இது
!
எனவே
தமிழ்
தூய்மையாய்
எங்கு
துலங்குகிறதோ
அங்கே
இறைவன்
இருப்பான்
என்றால்
உங்கள்
கைகளில்
உள்ள
தென்னாடு
திங்கள்
இதழிலும்
இறைவன்
விரும்பி
உறைகிறான்
!
படியுங்கள்
பரப்புங்கள்
வழிபாடும்
செய்யுங்கள்
!
தென்னாட்டின்
பதிப்புப்
பணியில்
எதிர்வரும்
நாட்களில்
'
விதி
மாற்றும்
விரிசடையான்
'
என்கிற
நூலும்
ஓவிய
காட்சிகளுடன்
கூடிய
திருவாசக
நூலும்
அச்சேறி
வர
இறையருள்
கூடியுள்ளது
.
என்கின்ற
கூடுதல்
செய்தியையும்
உங்களுக்கு
அறிவிப்பதில்
மகிழ்கிறோம்
!
பதிப்புப்
பணியில்
தென்னாடு
ஓராண்டை
எட்டியிருக்கிறது
என்றால்
சங்கத்தை
காத்த
எமது
முன்னவர்களின்
அருவ
ஆற்றல்
எம்மை
வழிநடத்துகின்றது
என்பதே
உண்மை
!
தமிழில்
அர்ச்சுனை
செய்வது
மன
அழுத்தத்தை
தருகின்றது
என்று
தமிழ்
தெரியாத
தமிழ்
மறை
அறியாத
சிலர்
வெளிப்படையாகவே
சொல்லக்கூடிய
இக்காலத்தில்
தெய்வத்தமிழில்
வழிபாட்டை
முன்னெடுத்துச்
செல்வதற்கும்
நம்மை
உந்தும்
ஆற்றலைக்
கொடுப்பது
நம்
கடவுளரே
என்பது
உண்மை
!
தமிழ்
மறைகள்
ஆகிய
திருமுறைகள்
எம்
எல்லார்
வீடுகளிலும்
ஓதும்
நிலமை
உருவாக
வேண்டும்
.
ஈழத்திலும்
புலம்பெயர்
நாடுகளிலும்
உள்ள
திருக்கோயில்கள்
தோறும்
ஓதுவார்கள்
முறைப்படி
இறைபணிக்கு
சேர்த்துக்கொள்ள
வேண்டும்
!
ஆலயங்களை
பெருப்பிப்பதும்
அழகு
சேர்ப்பதும்
அரும்பணிதான்
!
அதேபோல்
திருக்கோயில்களில்
திருமுறை
ஓதுவார்களை
நியமிப்பதும்
பெரும்பணி
என்பதையும்
அச்சுப்பணி
போலவே
ஆதி
அந்தம்
இல்லா
இறைவனை
ஓதும்
பணியும்
இன்றியமையாதது
என்பதையும்
ஈழத்து
மற்றும்
புலம்பெயர்
கோயில்களின்
அறங்காவலர்கள்
அறிந்து
செயற்படுத்த
வேண்டிய
காலக்கடமையை
தென்னாடு
சார்பில்
முன்வைத்து
அமைகிறோம்
!
ஓராண்டை
அடைந்த
எங்கள்
திங்கள்
இதழ்
பல்லாண்டுகள்
கடந்து
பயணிக்க
இறைவன்
துணை
நிற்க
வேண்டும்
!
இன்
தமிழ்
உறவுகள்
இணை
நிற்க
வேண்டும்
!
பிறந்து
மொழி
பயின்ற
பின்னெல்லாம்
காதல்
சிறந்து
நின்
சேவடியே
சேர்ந்தனன்
-
நிறந்திகழும்
மைஞ்ஞான்ற
கண்டத்து
வானோர்
பெருமானே
எஞ்ஞான்று
தீர்ப்பது
இடர்
!
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
சிங்கப்பூரில்
சைவமும்
தமிழும்
தழைத்தோங்கச்
செய்த
காரைநகர்
அம்பலவாணர்
வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்பவன்
வான்உறையும்
தெய்வத்துள்
வைக்கப்படும்
கன்னி
நல்லோரை
புரட்டாசித்
திங்கள்
2021
சிங்கப்பூர்
நாட்டில்
சைவமும்
தமிழும்
தழைத்தோங்கச்
செய்தவர்
திருவாளர்
.
அம்பலவாணர்
அவர்கள்
.
அவர்களது
தமிழ்
பணிகளில்
பெரும்பங்கு
பத்தி
இலக்கியமான
திருமுறைகளைப்
பரப்புவதிலும்
ஆய்வதிலும்
இருந்ததெனலாம்
.
அவரேசிங்கப்பூரில்
திருமுறை
மாநாட்டினைத்
தொடங்கி
பல
ஆண்டுகள்
நடத்தினார்
.
ஈழ
நாட்டிலிருந்து
சிங்கப்பூரிற்கு
பதியெழுந்த
அம்பலவாணர்
அக்கால
கட்டத்தில்
இலங்கையில்
வாழ்ந்த
திருமுறைக்
கலாநிதி
இராஜசேகரன்
ஓதுவாரின்
துணை
கொண்டு
1980
ம்
ஆண்டு
திருமுறை
முற்றோதலை
நிகழ்த்தினார்
.
அதே
ஆண்டு
சிங்கப்பூர்
வீரகாளி
அம்மன்
கோயிலில்
நால்வர்
குருபூசையை
நிகழ்த்தினார்
.
இவையே
சிங்கை
திருமுறை
மாநாட்டிற்கு
முன்னோடி
நிகழ்வாக
அமைந்தன
.
1981
ம்
ஆண்டு
முதல்
முறை
திருமுறை
மாநாட்டினை
சிங்கப்பூரில்
மூன்று
நாட்கள்
நிகழ்த்தினார்
.
அதன்
பின்
பன்னிரண்டு
ஆண்டுகள்
அதன்
வளர்ச்சிக்குப்
பெரும்பணியாற்றினார்
.
இந்தியா
இலங்கை
மலேசியா
முதலிய
நாடுகளில்
உள்ள
சைவத்
தமிழ்த்தொண்டாற்றும்
பெருமக்களை
அழைத்துச்
சொற்பொழிவுகளை
நிகழ்த்தினார்
.
இத்திருப்பணிகள்
தோய்வின்றி
நிகழ்த்தற்
பொருட்டு
அதற்கான
வைப்பு
நிதியையும்
தொடங்கி
வைத்தார்
.
சிங்கப்பூரில்
தமிழ்மக்களிடம்
திருமுறைகளைப்
பரப்புவதில்
அம்பலவாணர்
ஐயா
பெரிதும்
ஆர்வம்
காட்டினார்
.
சிங்கப்பூர்க்
கோயில்களில்
ஓதுவார்களைப்
பணிக்கு
அமர்த்தி
ஐம்புராணம்
பாடும்
வழக்கத்தினை
ஏற்படுத்தினார்
.
அத்துடன்
திருமுறைகளை
பண்ணோடு
இளையோர்
பாட
பயில
வேண்டும்
எனும்
எண்ணத்தில்
ஓதுவார்களைக்
கொண்டு
திருமுறை
வகுப்புக்களை
நடாத்தினார்
.
அத்துடன்
திருமுறைகள்
தொடர்பான
பேச்சுப்போட்டி
திருமுறை
ஓதற்ப்
போட்டி
முதலியனவற்றை
மாணவர்களிடத்தே
நடாத்தி
திருமுறைகளைப்
பரவலாக்கம்
செய்யமுயன்றார்
.
அவரது
அரும்பணிகளிற்கு
பக்கபலமாக
விளங்கியவர்
அவரது
மனைவியான
கண்மணி
அம்மையாரும்
அம்மையாரின்
சகோதரிமாரான
பேபியும்
சிவமணியுமே
ஆகும்
.
ஒரு
விபத்தால்
அம்பலவாணர்
அவர்களது
கண்பார்வையானது
பாதிப்படைந்தது
.
அத்தகைய
நிலையிலையும்
அவர்
தொடர்ந்து
தமிழ்ப்பணியையும்
சைவப்பணியையும்
மேற்கொண்டு
வந்தார்
.
சைவப்பணியும்
திருமுறை
மாநாடும்
தடையின்றி
சிறப்பாக
நடைபெறுதற்கு
சைவத்திலும்
தமிழிலும்
மிகுந்த
ஈடுபாடுடைய
அடியார்களையும்
பெரியார்
களையும்
கொண்டமைத்த
குழுவே
காரணமாகும்
.
ஈழத்துக்
காரைநகரிலிருந்து
சிங்கப்பூர்
சென்ற
அம்பலவாணர்
தமிழிற்கும்
தமிழ்
சமுதாயத்திற்கும்
சைவத்திற்கும்
ஆற்றிய
பணிகள்
எண்ணிலடங்காதவை
அவற்றின்
சிறு
குறிப்பே
இதுவாகும்
.
இந்த
திருமுறை
மாநாடு
இன்றும்
சிறப்பாக
41
வருடகாலமாக
நடந்து
வருகிறது
.
இன்றய
காலகட்டத்தில்
ஈழத்திலும்
பார்க்க
அதிக
தமிழர்
வாழும்
புலம்பெயர்
நாடுகளில்
சைவத்தினையும்
தமிழினையும்
நிலைநிறுத்த
திருமுறைகள்
மற்றும்
சைவ
சித்தாந்தம்
போன்றவற்றை
அடுத்த
தலைமுறைக்கு
ஊடுகத்த
புலம்பெயர்
தமிழ்
அமைப்புகளின்
வகிபாகம்
என்ன
என்ற
வினா
எழுந்த
நிற்கிறது
.
திருமுறையே
சைவநெறிக்
கருவூலம்
தென்தமிழின்
தேன்பாகாகும்
திருமுறையே
கயிலையின்
கண்
சிவபெருமான்
செவிமடுத்த
செந்தமிழ்
வேதம்
திருமுறையே
நடராசன்
கரம்
வருந்த
எழுதியருள்
தெய்வ
நூலாம்
திருமுறையே
சொக்கேசன்
மதிமலிவாய்
மலர்ந்தருளும்
சிறப்பிற்றாமால்
திருச்சிற்றம்பலம்