தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

தெ 06 யாழ்ப்பாணத்து தம்புரா இசை வல்லான்... (05ஆம் பக்கத் தொடர்ச்சி) இதன் பலனாக கோயில்களில் வாரந்தோறும் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பிக்கப்பட்டு வெள்ளி வார உற்சவம், திருவிழா காலங்களில் தேவாரப் பாடல்களை திறம்பட அனைவரும் பாடி சுவாமியுடன் வலம் வரும் சூழ்நிலை ஏற்படுத்தியது. பத்தர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோளறுபதிகம், திருநீற்றுப்பதிகம், சிவபுராணம் போன்றவற்றை இடைவிடாது பாடும் பழக்கத்தினை கூட்டுப்பிரார்த்தனை மூலம் எல்லோரிடமும் அறிமுகப் படுத்தினார். சண்முகலிங்கம் தேவாரப்பதிகங்களை பாடும் நற்பணியை வாழ்த்திய பலர் அவரை தலைமை ஓதுவா மூர்த்தி என்று அவரது பணிக்கு மகுடம் வைத்தனர். வண்ணை அருள்மிகு குளங்கரை மருதடி காமாட்சி அம்மன் ஆலய தலைமை ஓதுவாராக தனது இறுதிக்காலம் வரை பணியாற்றினார் என்றால் மிகையாகாது. இவர் தேவாரப் பதிகங்களை ஐம்புராணம் ஓதும் போது இவரது குரல் ஒலி ஆலயம் எங்கும் ஒலிக்கும், பத்தர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்யும் குரலையும் இசை நுட்பமாக மெருகூட்டி பாடும் திறனும் அவரை பல ஆலயங்களில் சிறப்பு ஓதுவராக அழைப்பு விடுத்தார்கள். நாச்சிமார் கோயில் தவிர அரசடி விநாயகர் ஆலயம், முருகமூர்த்தி ஆலயம், சொர்ணவடலி பிள்ளையார் ஆலயம், கேசாவில் பிள்ளையார் கோயில், கலட்டி அம்மன் கோயில் என பல யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் தவிர பல ஏனைய ஊர்களில் உள்ள ஆலயங்களிலும் இவரது குரல் தேவாரப்பதிகங்களாக ஒலித்தது. வண்ணை காமாட்சி அம்மன் ஆலயத்தின் திருப்பள்ளி எழுச்சி திருப்பாடலை செவ்வனே சீர் அமைத்து அதனை தினமும் அதிகாலை 4 மணிக்கு ஆலயம் சென்று பாடி வந்தார். அம்பாளிற்கே, பள்ளி எழுச்சியை தனது வாழ்நாள் பூராவும் பாடும் பேறு பெற்ற ஓர் அற்புத மனிதராக அவர் திகழ்ந்தார். இப்பேறு கிடைக்க அவரும் அவர்தம் பெற்றோரும் என்ன பாக்கியம் செய்தனரோ. இவரது பண்ணிசை கச்சேரிகளுக்கு பக்கபலமாக இருந்த மிக முக்கியமான இசை வல்லுநர்களின் பங்களிப்பை கூறாமல் இருந்து விட முடியாது. சிறந்த பக்கவாத்தியமே ஓர் இசையினை பூரணமடையச் செய்கின்றது என்பதில் ஐயமில்லை. இவர் செய்த புண்ணியம் மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் நாச்சிமார் கோயிலடியிலேயே வாழ்ந்துள்ளார்கள். அவர்களே இவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். குறிப்பாக ஆர்மோனியம் கலைஞர் சக்கரபாணியர் என்று அழைக்கப் படுகின்ற முத்துக்குமாரு (இலங்கையின் மூத்த இசையமைப் பாளர் கலா பூசணம் கோபாலகிருஷணன் - கண்ணன் மாஸ்டர் அவர்களின் தந்தை), மிருதங்க மேதை திரு. அம்பலவாணர் (தற்போதுள்ள திரு. ஜெயராமன் வயலின் இசைக்கலைஞர், திரு. ரகுநாதன் மிருதங்கக் கலைஞர் அவர்களின் தந்தை), திரு. சர்வேஸ்வர சர்மா வயலின் இசைக்கலைஞர் இப்படி இவருக்கு உறுதுணையாக இருந்த பல கலைஞர்களை சொல்லிக் கொண்டே போகலாம். 1956-ம் ஆண்டு கொக்குவிலைச் சேர்ந்த செல்வநாயகப் பத்தர் அவர்களின் புதல்வி விமலேஸ்வரியை கரம் பற்றி தனது இல்வாழ்வை ஆரம்பித்தார். இவரது கலை நுட்பம் சார்ந்த அறிவு இசை நாடகம் மட்டும் இன்றி பொற்தொழில் மேலும் நாட்டம் இருந்தது. அதை இவர் தமது குலத்தொழி லாகவும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஓவியங்கள் வரைவதில் சண்முகலிங்கம் மிகவும் கைதேர்ந்தவராகவும் விளங்கினார். பல இசை கலைஞர்களின் உருவங்களை வரைவதில் நாட்டம் கொண்டார் அதே போல் ஆபரண வடிவமைப்புகள் இவருக்கு நிகர் இவரே பலரும் இவரது இவ்வாற்றலை மெச்சி அதனை பயன்படுத்தி பேறுபெற்றனர். மோதிரம், வளையல், பதக்கம், தோடு, தாலி இப்படி பல பல ஆபரணங்களிற்கு புதிய பல வடிவங்களை இவர் உருவாக்கினார் கோயில் விக்கிரகங்களிற்கும் ஆபரணங்கள் செய்யும் பலனையும் அவர் பெற்றிருந்தார் இவரை சண்முகலிங்கப் பத்தர் என அன்பாக இத்துறை சார்ந்தோர் அழைக்கலாகினர். இல்லற வாழ்விலே இவரது இனிய பயணத்தின் நற்பேறாக தென்னாடு ஐந்து ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளைகளையும் இறை ஆசியுடன் பெற்றார். “புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்ற வாக்கியத்திற்கேற்ப அவரது பிள்ளைகள் இசைசார் துறையில் அன்றும் இன்றும் இறை குரு ஆசிகளுடன் சிறப்பாக உள்ளார்கள். பிள்ளைகளில் கலாபூசணம் ஞானகுருபரன் ஓவியக் கலைஞராகவும், குமரகுருபரன் நாடக தொழில் நுட்ப கலைஞகராகவும், தேவகுருபரன் மிருதங்கம் தபேலா கலைஞகராகவும், உமாகுருபரன் கர்நாடக பாட்டு கலைஞகராகவும், மகள் சாருமதி வீணைக் கலைஞகராகவும், நாகராஜன் மிருதங்கக் கலைஞகராக உள்ளனர். தாயார் விமலேஸ்வரியின் இசை ஆர்வத்தினால் தமது குடும்ப சூழ்நிலைகள் பல இக்கட்டான நிலைகளை சந்தித்த வேலையிலும் மனம் தளராது தமது அயராத கடும் முயர்ச்சியினாலும் ஒத்துழைப்பினாலும் சண்முகலிங்கத்தினையும் குழந்தைகளையும் மேல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அந்த தாய்க்கு உரித்தான பெருமை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த ஓதுவார் பணி தொடர்ந்து கொண்டு இருந்த காலத்தில், இந்தியாவில் இருந்து வருகை தரும் முக்கியமான கலைஞர்களுக்கு எல்லாம் தம்புரா என்ற சுருதி வாத்தியங்களை மீட்டுவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தார். சங்கீத பூசணம் கே. ஆர். நடராஜா அவர்களிடம் தம்புராவை இசைக்க கற்றுக் கொண்டார். இவரது தம்புரா மீட்டும் பாங்கு பல இந்திய கலைஞர்களை கவர்நதது என்றால் உள்நாட்டு இசை கலைஞர்களை மட்டும் கவராதா என்ன? ஆம் பல பல இசை கலைஞர்களுக்கு இவர் தம்புரா மீட்டி தலைமை வித்தகராக காட்சியளித்தார். இவரது பணிவு, தன்னடக்கம், தனக்கு இத்தனை கலைகள் தெரிந்தும் கர்வமில்லாத சாதாரண நிலை, "எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம்” எனும் யோகர் சுவாமிகள் வாக்கும், "ஓம் சக்தி" என்று தனது தாயை என்னேரமும் அழைப்பதையும் இடைவிடாது கூறிக்கொண்டே, அவர் காரியங்களில் ஈடுபடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. உள்நாட்டுக் கலைஞர்கள் என்ற வரிசையில் திரு. பொன் சுந்தரலிங்கம், திரு.பாலசிங்கம், திரு.வால்நடராஜா, திரு. பத்மலிங்கம், திரு.திலகநாயகம்போல, திரு.சர்வேஸ்வர சர்மா, திரு.ராதாகிருஷ்ணன் (வயலின்), திரு.ந.மு.பத்மநாபன் (நாதஸ்வரம்), திரு.ந.சண்முகசுந்தரம், பரம தில்லை ராசா, திரு.யு.மு.கருணாகரன் ஆகியோருக்கு தம்புரா கலைஞராக பணியாற்றினார். இந்தியாவில் இருந்து வருகை தந்த சீர்காழி கோவிந்தராஜன், கே.பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் சந்தானம், பால முரளி கிருஷ்ணா, குன்னக்குடி வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் வி. எஸ். கிருஷ்ணமூர்த்திராவ, சந்தியா வந்தணம் ஸ்ரீநீவாசராவ், எம். எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், எம்.கே.கோவிந்தராஜ பாகவதா, கும்பகோணம் டீ.வி.மைதிலி, டீ.என். இராஜரத்தினம் பிள்ளை, புதுக்கோட்டை உலகநாதன், பிரம்மஸ்ரீ கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 கே.ராமநாதன் போன்ற இந்திய கலைஞர்களுக்கும் தம்புரா மீட்டி அவர்களது நன்மதிப்பை நாட்டுக்கும் இசைத் துறைக்கும் பெற்றுக் கொடுத்தார். இவரது திறமைக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 'தம்புரா இசை வல்லான்' எனும் பட்டத்தினைக் கொடுத்து கௌரவித்தமை பெருமைக்குரியது. இவரது ஓதுவார் பணி, தம்புரா இசைப்பணி மனதிற்கு அமைதியை கொடுத்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் யோகாசன கலையில் மிகவும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். தினமும் யோகாசனம் செய்வதை தமது தலையாய செயலாக கொண்டிருந்தார். மிகவும் கடினமாக பல ஆசனங்களை தமது பயிற்சியினால் இலகுவாகச் செய்தார். இந்த யோகாசனம் இவரை பல இக்கட்டான காலகட்டங்களில் உயிர் காப்பாக அமைந்தது உண்மையே. யோகாசனம் செய்பவர்கள் இசையுடன் தொடர்புடையவர்கள் மிகுந்த மன வலிமையும் பொறுமையும் வெற்றிகளையும் கொண்டு வாழ்வார்கள் என்பதற்கு ஓதுவார் மூர்த்தி தம்புராகலைஞர் பத்தர் சண்முகலிங்கம் அவர்களே ஓர் நல் உதாரணம். நாட்டுக் குழப்பங்கள் காரணத்தினால் தமது கனவுகளை நினைவாக்க இந்தியா வந்தார் சண்முகலிங்கம். அங்கு தனது இளைய புதல்வனுடன் இனிதே இறை வழிபாட்டுடன் காலம் கழித்தார். பல தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டு, அங்கு இறைவனை நேரிலே பார்த்தது போல் மனம் நெகிழ்ந்து தேவாரப் பதிகங்களைப் பாடினார். ஆனந்தத்தில் திகழ்ந்தார். சீர்காழி, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவில், திருவண்ணாமலை, தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி கோயில், காஞ்சி காமாட்சி உட்பட பல தமிழ்நாட்டு திருத்தலங்களை நேரில் சென்று தரிசித்தார். அவரது மனம் பேரானந்தம் அடைந்தது. திருவான்மியூர் மருந்தீசுவரன் முன் தினமும் பாடி தொழுதார். 1999-ம் வருடம் இறைவன் சண்முகலிங்கத்தினை தன் அடிகளின் கீழ் அமர திண்ணம் கொண்டானோ என்னவோ திடீரென ஏற்பட்டநோயினால் அவர் உயிர் இறையடி கலந்தது. இறக்கும் போது அவரது இளைய மகனின் மடிகளில் தனக்கு விபூதி பூச வேண்டும் என்று சைகை செய்ய அதை உணர்ந்த அவரும், நெற்றியில் விபூதியை அணிந்து வாயிலும் போட்டார். அவ்வளவு தான் அவர் கண்களை மூடி 13-04-1999 அன்று சிவபுரம் ஏகினார். இறைவனைக் கண்டார். இவ்வுலகை விட்டு இறையுலகை அடைந்தார் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று அவர் எத்தனை முறை பாடித் தொழுதேத்தி இருப்பார், அந்த திருவாலவாயானை. இறைவனே அவரது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி ஆசி வழங்கிவிட்டார். இன்று அவரது இப்பணியை தொடர்ச்சியாக அவரது பிள்ளைகள், பேரபிள்ளைகள் என அனைவரும் இசையுடன் இறை அருளுடனும் இனிதே இவர் வழியில் வாழ்கின்றனர் என்பதே சிறப்பான விடயமாகும். நிச்சயம் பிள்ளைகளின் இப்பணி அவரின் உயிரை எங்கிருந்தாலும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் அனைவருக்கும் அவர் இன்றும், என்றும் குருவாக இருந்து ஆசி வளங்குகிறார் என்பதுதான் உண்மை. ஓதுவார் மூர்த்தியாக வாழ்ந்து இசையில் காதல் கொண்டு இந்திய மண்ணிலே தமது இன்னுயிரை இறையுடன் இரண்டாகக் கலந்த திருவாளர். சண்முகலிங்கம் ஓதுவார் அவர்கள் பணிகள் என்றும் போற்றுதலுக்குரியன. அவர் செய்த சிவப்பணிகள் அவர்தம் வழிவந்தவர்களூடு தொடர எல்லாம்வல்ல ஆடல்வல்லான் அருளாசிகள் கிடைக்கட்டும். திருச்சிற்றம்பலம்
தெ 06 யாழ்ப்பாணத்து தம்புரா இசை வல்லான் ... ( 05 ஆம் பக்கத் தொடர்ச்சி ) இதன் பலனாக கோயில்களில் வாரந்தோறும் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பிக்கப்பட்டு வெள்ளி வார உற்சவம் திருவிழா காலங்களில் தேவாரப் பாடல்களை திறம்பட அனைவரும் பாடி சுவாமியுடன் வலம் வரும் சூழ்நிலை ஏற்படுத்தியது . பத்தர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது . கோளறுபதிகம் திருநீற்றுப்பதிகம் சிவபுராணம் போன்றவற்றை இடைவிடாது பாடும் பழக்கத்தினை கூட்டுப்பிரார்த்தனை மூலம் எல்லோரிடமும் அறிமுகப் படுத்தினார் . சண்முகலிங்கம் தேவாரப்பதிகங்களை பாடும் நற்பணியை வாழ்த்திய பலர் அவரை தலைமை ஓதுவா மூர்த்தி என்று அவரது பணிக்கு மகுடம் வைத்தனர் . வண்ணை அருள்மிகு குளங்கரை மருதடி காமாட்சி அம்மன் ஆலய தலைமை ஓதுவாராக தனது இறுதிக்காலம் வரை பணியாற்றினார் என்றால் மிகையாகாது . இவர் தேவாரப் பதிகங்களை ஐம்புராணம் ஓதும் போது இவரது குரல் ஒலி ஆலயம் எங்கும் ஒலிக்கும் பத்தர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்யும் குரலையும் இசை நுட்பமாக மெருகூட்டி பாடும் திறனும் அவரை பல ஆலயங்களில் சிறப்பு ஓதுவராக அழைப்பு விடுத்தார்கள் . நாச்சிமார் கோயில் தவிர அரசடி விநாயகர் ஆலயம் முருகமூர்த்தி ஆலயம் சொர்ணவடலி பிள்ளையார் ஆலயம் கேசாவில் பிள்ளையார் கோயில் கலட்டி அம்மன் கோயில் என பல யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் தவிர பல ஏனைய ஊர்களில் உள்ள ஆலயங்களிலும் இவரது குரல் தேவாரப்பதிகங்களாக ஒலித்தது . வண்ணை காமாட்சி அம்மன் ஆலயத்தின் திருப்பள்ளி எழுச்சி திருப்பாடலை செவ்வனே சீர் அமைத்து அதனை தினமும் அதிகாலை 4 மணிக்கு ஆலயம் சென்று பாடி வந்தார் . அம்பாளிற்கே பள்ளி எழுச்சியை தனது வாழ்நாள் பூராவும் பாடும் பேறு பெற்ற ஓர் அற்புத மனிதராக அவர் திகழ்ந்தார் . இப்பேறு கிடைக்க அவரும் அவர்தம் பெற்றோரும் என்ன பாக்கியம் செய்தனரோ . இவரது பண்ணிசை கச்சேரிகளுக்கு பக்கபலமாக இருந்த மிக முக்கியமான இசை வல்லுநர்களின் பங்களிப்பை கூறாமல் இருந்து விட முடியாது . சிறந்த பக்கவாத்தியமே ஓர் இசையினை பூரணமடையச் செய்கின்றது என்பதில் ஐயமில்லை . இவர் செய்த புண்ணியம் மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் நாச்சிமார் கோயிலடியிலேயே வாழ்ந்துள்ளார்கள் . அவர்களே இவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள் . குறிப்பாக ஆர்மோனியம் கலைஞர் சக்கரபாணியர் என்று அழைக்கப் படுகின்ற முத்துக்குமாரு ( இலங்கையின் மூத்த இசையமைப் பாளர் கலா பூசணம் கோபாலகிருஷணன் - கண்ணன் மாஸ்டர் அவர்களின் தந்தை ) மிருதங்க மேதை திரு . அம்பலவாணர் ( தற்போதுள்ள திரு . ஜெயராமன் வயலின் இசைக்கலைஞர் திரு . ரகுநாதன் மிருதங்கக் கலைஞர் அவர்களின் தந்தை ) திரு . சர்வேஸ்வர சர்மா வயலின் இசைக்கலைஞர் இப்படி இவருக்கு உறுதுணையாக இருந்த பல கலைஞர்களை சொல்லிக் கொண்டே போகலாம் . 1956 - ம் ஆண்டு கொக்குவிலைச் சேர்ந்த செல்வநாயகப் பத்தர் அவர்களின் புதல்வி விமலேஸ்வரியை கரம் பற்றி தனது இல்வாழ்வை ஆரம்பித்தார் . இவரது கலை நுட்பம் சார்ந்த அறிவு இசை நாடகம் மட்டும் இன்றி பொற்தொழில் மேலும் நாட்டம் இருந்தது . அதை இவர் தமது குலத்தொழி லாகவும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . ஓவியங்கள் வரைவதில் சண்முகலிங்கம் மிகவும் கைதேர்ந்தவராகவும் விளங்கினார் . பல இசை கலைஞர்களின் உருவங்களை வரைவதில் நாட்டம் கொண்டார் அதே போல் ஆபரண வடிவமைப்புகள் இவருக்கு நிகர் இவரே பலரும் இவரது இவ்வாற்றலை மெச்சி அதனை பயன்படுத்தி பேறுபெற்றனர் . மோதிரம் வளையல் பதக்கம் தோடு தாலி இப்படி பல பல ஆபரணங்களிற்கு புதிய பல வடிவங்களை இவர் உருவாக்கினார் கோயில் விக்கிரகங்களிற்கும் ஆபரணங்கள் செய்யும் பலனையும் அவர் பெற்றிருந்தார் இவரை சண்முகலிங்கப் பத்தர் என அன்பாக இத்துறை சார்ந்தோர் அழைக்கலாகினர் . இல்லற வாழ்விலே இவரது இனிய பயணத்தின் நற்பேறாக தென்னாடு ஐந்து ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளைகளையும் இறை ஆசியுடன் பெற்றார் . புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற வாக்கியத்திற்கேற்ப அவரது பிள்ளைகள் இசைசார் துறையில் அன்றும் இன்றும் இறை குரு ஆசிகளுடன் சிறப்பாக உள்ளார்கள் . பிள்ளைகளில் கலாபூசணம் ஞானகுருபரன் ஓவியக் கலைஞராகவும் குமரகுருபரன் நாடக தொழில் நுட்ப கலைஞகராகவும் தேவகுருபரன் மிருதங்கம் தபேலா கலைஞகராகவும் உமாகுருபரன் கர்நாடக பாட்டு கலைஞகராகவும் மகள் சாருமதி வீணைக் கலைஞகராகவும் நாகராஜன் மிருதங்கக் கலைஞகராக உள்ளனர் . தாயார் விமலேஸ்வரியின் இசை ஆர்வத்தினால் தமது குடும்ப சூழ்நிலைகள் பல இக்கட்டான நிலைகளை சந்தித்த வேலையிலும் மனம் தளராது தமது அயராத கடும் முயர்ச்சியினாலும் ஒத்துழைப்பினாலும் சண்முகலிங்கத்தினையும் குழந்தைகளையும் மேல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அந்த தாய்க்கு உரித்தான பெருமை என்பது குறிப்பிடத்தக்கது . இவரது இந்த ஓதுவார் பணி தொடர்ந்து கொண்டு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வருகை தரும் முக்கியமான கலைஞர்களுக்கு எல்லாம் தம்புரா என்ற சுருதி வாத்தியங்களை மீட்டுவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தார் . சங்கீத பூசணம் கே . ஆர் . நடராஜா அவர்களிடம் தம்புராவை இசைக்க கற்றுக் கொண்டார் . இவரது தம்புரா மீட்டும் பாங்கு பல இந்திய கலைஞர்களை கவர்நதது என்றால் உள்நாட்டு இசை கலைஞர்களை மட்டும் கவராதா என்ன ? ஆம் பல பல இசை கலைஞர்களுக்கு இவர் தம்புரா மீட்டி தலைமை வித்தகராக காட்சியளித்தார் . இவரது பணிவு தன்னடக்கம் தனக்கு இத்தனை கலைகள் தெரிந்தும் கர்வமில்லாத சாதாரண நிலை எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம் எனும் யோகர் சுவாமிகள் வாக்கும் ஓம் சக்தி என்று தனது தாயை என்னேரமும் அழைப்பதையும் இடைவிடாது கூறிக்கொண்டே அவர் காரியங்களில் ஈடுபடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது . உள்நாட்டுக் கலைஞர்கள் என்ற வரிசையில் திரு . பொன் சுந்தரலிங்கம் திரு.பாலசிங்கம் திரு.வால்நடராஜா திரு . பத்மலிங்கம் திரு.திலகநாயகம்போல திரு.சர்வேஸ்வர சர்மா திரு.ராதாகிருஷ்ணன் ( வயலின் ) திரு.ந.மு.பத்மநாபன் ( நாதஸ்வரம் ) திரு.ந.சண்முகசுந்தரம் பரம தில்லை ராசா திரு.யு.மு.கருணாகரன் ஆகியோருக்கு தம்புரா கலைஞராக பணியாற்றினார் . இந்தியாவில் இருந்து வருகை தந்த சீர்காழி கோவிந்தராஜன் கே.பி. சுந்தராம்பாள் மகாராஜபுரம் சந்தானம் பால முரளி கிருஷ்ணா குன்னக்குடி வைத்தியநாதன் ஸ்ரீரங்கம் வி . எஸ் . கிருஷ்ணமூர்த்திராவ சந்தியா வந்தணம் ஸ்ரீநீவாசராவ் எம் . எம்.மாரியப்பா திருச்சி லோகநாதன் எம்.கே.கோவிந்தராஜ பாகவதா கும்பகோணம் டீ.வி.மைதிலி டீ.என் . இராஜரத்தினம் பிள்ளை புதுக்கோட்டை உலகநாதன் பிரம்மஸ்ரீ கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 கே.ராமநாதன் போன்ற இந்திய கலைஞர்களுக்கும் தம்புரா மீட்டி அவர்களது நன்மதிப்பை நாட்டுக்கும் இசைத் துறைக்கும் பெற்றுக் கொடுத்தார் . இவரது திறமைக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ' தம்புரா இசை வல்லான் ' எனும் பட்டத்தினைக் கொடுத்து கௌரவித்தமை பெருமைக்குரியது . இவரது ஓதுவார் பணி தம்புரா இசைப்பணி மனதிற்கு அமைதியை கொடுத்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் யோகாசன கலையில் மிகவும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார் . தினமும் யோகாசனம் செய்வதை தமது தலையாய செயலாக கொண்டிருந்தார் . மிகவும் கடினமாக பல ஆசனங்களை தமது பயிற்சியினால் இலகுவாகச் செய்தார் . இந்த யோகாசனம் இவரை பல இக்கட்டான காலகட்டங்களில் உயிர் காப்பாக அமைந்தது உண்மையே . யோகாசனம் செய்பவர்கள் இசையுடன் தொடர்புடையவர்கள் மிகுந்த மன வலிமையும் பொறுமையும் வெற்றிகளையும் கொண்டு வாழ்வார்கள் என்பதற்கு ஓதுவார் மூர்த்தி தம்புராகலைஞர் பத்தர் சண்முகலிங்கம் அவர்களே ஓர் நல் உதாரணம் . நாட்டுக் குழப்பங்கள் காரணத்தினால் தமது கனவுகளை நினைவாக்க இந்தியா வந்தார் சண்முகலிங்கம் . அங்கு தனது இளைய புதல்வனுடன் இனிதே இறை வழிபாட்டுடன் காலம் கழித்தார் . பல தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டு அங்கு இறைவனை நேரிலே பார்த்தது போல் மனம் நெகிழ்ந்து தேவாரப் பதிகங்களைப் பாடினார் . ஆனந்தத்தில் திகழ்ந்தார் . சீர்காழி சிதம்பரம் திருவாரூர் திருவானைக்காவில் திருவண்ணாமலை தஞ்சை பெரிய கோயில் மதுரை மீனாட்சி கோயில் காஞ்சி காமாட்சி உட்பட பல தமிழ்நாட்டு திருத்தலங்களை நேரில் சென்று தரிசித்தார் . அவரது மனம் பேரானந்தம் அடைந்தது . திருவான்மியூர் மருந்தீசுவரன் முன் தினமும் பாடி தொழுதார் . 1999 - ம் வருடம் இறைவன் சண்முகலிங்கத்தினை தன் அடிகளின் கீழ் அமர திண்ணம் கொண்டானோ என்னவோ திடீரென ஏற்பட்டநோயினால் அவர் உயிர் இறையடி கலந்தது . இறக்கும் போது அவரது இளைய மகனின் மடிகளில் தனக்கு விபூதி பூச வேண்டும் என்று சைகை செய்ய அதை உணர்ந்த அவரும் நெற்றியில் விபூதியை அணிந்து வாயிலும் போட்டார் . அவ்வளவு தான் அவர் கண்களை மூடி 13-04-1999 அன்று சிவபுரம் ஏகினார் . இறைவனைக் கண்டார் . இவ்வுலகை விட்டு இறையுலகை அடைந்தார் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று அவர் எத்தனை முறை பாடித் தொழுதேத்தி இருப்பார் அந்த திருவாலவாயானை . இறைவனே அவரது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி ஆசி வழங்கிவிட்டார் . இன்று அவரது இப்பணியை தொடர்ச்சியாக அவரது பிள்ளைகள் பேரபிள்ளைகள் என அனைவரும் இசையுடன் இறை அருளுடனும் இனிதே இவர் வழியில் வாழ்கின்றனர் என்பதே சிறப்பான விடயமாகும் . நிச்சயம் பிள்ளைகளின் இப்பணி அவரின் உயிரை எங்கிருந்தாலும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை . இவர்கள் அனைவருக்கும் அவர் இன்றும் என்றும் குருவாக இருந்து ஆசி வளங்குகிறார் என்பதுதான் உண்மை . ஓதுவார் மூர்த்தியாக வாழ்ந்து இசையில் காதல் கொண்டு இந்திய மண்ணிலே தமது இன்னுயிரை இறையுடன் இரண்டாகக் கலந்த திருவாளர் . சண்முகலிங்கம் ஓதுவார் அவர்கள் பணிகள் என்றும் போற்றுதலுக்குரியன . அவர் செய்த சிவப்பணிகள் அவர்தம் வழிவந்தவர்களூடு தொடர எல்லாம்வல்ல ஆடல்வல்லான் அருளாசிகள் கிடைக்கட்டும் . திருச்சிற்றம்பலம்