தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன்... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) தம்முடைய அன்பு மகள் காமாட்சி அம்பாளின் பாதம் சேர்ந்த காரணத்தால், இவரும் இவர் மனைவியும் மாறாத துன்பசாகரத்தில் மூழ்கித் தவித்தனர். ஏனெனில் குவலயா ஒரு சங்கீத ஞானம் நிறைந்த நல்ல சாரீரம் உள்ளவராவார். மகள் குவலயா பாட, மகன் நிதர்சன் மிருதங்கள் வாசிக்க, தாய் சத்தியபாமா வயலின் இசைக்க, தந்தையார் ஸ்ரீதரன் தாளம் போடக், குடும்பமே கச்சேரி செய்து மகிழ்ந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை மகளை காலன் பறித்துச் சென்றுவிட்டான். அன்பு மகளைப் பிரிந்த துயரத்தால், இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக | உதயன் பத்திரிகையில் வேலை செய்த போது பல சமயக் கட்டுரைகளையும், தமிழ்க் கவிதைகளையும் தம்மை மறந்த நிலையில் எழுதத் தொடங்கினார். மேலும் விழாக்கள் பற்றியும், பண்டிகைகள் பற்றியும், நோன்புகள் பற்றியும், நாட்டில் நிகழும் கோயில் விழாக்கள், குடமுழுக்குகள் பற்றியும் இவரது விரிவான ஆக்கங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. அத்துடன் உதயன், தினக்குரல், வலம்புரி, தினமுரசு ஆகிய நாளிதழ்களில் இவரது ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவந்தன. மேலும் கொழும்புப் பத்திரிகையான வீரகேசரி, தினபதி, தினகரன், சிந்தாமணி முதலானவற்றிலும் சைவநீதி, இந்து ஒளி முதலான சஞ்சிகைகளிலும், இவரது கட்டுரைகளும் கவிதைகளும் அழகாகப் பிரசுரமாகி வாசகரிகளிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் யாழ்ப்பாணத்தில் தொண்டமானாறு செல்வச் சந்நிதி, சந்நிதியான் ஆச்சிரமம் வெளியிடும் ஞானச்சுடர் சஞ்சிகையிலும், தெல்லிப்பழை துர்க்காதேவி திருக்கோயில் வெளியிடும் அருள் ஒளி சஞ்சிகையிலும் இவருடைய கட்டுரைகள் வெளிவரவத் தொடங்கின. இவரது எழுத்தாற்றல் சிறப்பைக் கண்ட சந்நிதியான் ஆச்சிரமம் இவருக்குப் விருதுகள் பல வழங்கிச் சிறப்பித்தது. இதனிடையே இவர் தமது சைவசமய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி ஆலயங்களிலும், விழாக்களிலும் சமயம் சார்ந்த பேச்சுக்களையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி, சமூகத்தில் நற்பெயரை ஏற்படுத்தத் தவறவில்லை. அதுமாத்திரமன்றி கோயில்களில் பூசையின் போது ஐம்புராணம் (பஞ்சபுராணம்) மற்றும் திருமுறைகள் ஓதுவதிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று விளங்கினார். அதுமட்டுமன்றி சமயவிழாக்கள் ஆரம்பமாகும் போது, இறைவணக்கம் பாடித் தொடக்கி வைக்கும் பணியையும் செய்து வந்தார். அத்துடன் 1967 ஆம் வருடம் தமது முதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் செய்ய ஆரம்பித்தார். அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் தட்டாதெருவுக்கு அண்மையிலுள்ள அருள்மிகு அரசடி விநாயகர் கோயிலில் பெருஞ்சிவனிரவு அன்று, முதன் |முதலாக ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக அமைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது. அதன் பயனாக ஸ்ரீதரன் அவர்கள் கலையுலகில் பிரவேசித்து, ‘ஸ்ரீதர் வில்லிசைக் குழு ‘என்று ஒரு குழுவை அமைத்து, யாழ் குடாநாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலும், மண்டபங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நிகழ்த்தி வந்தார். இவருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு இவரது மகன் ஸ்ரீ நிதர்சன் மிருதங்கம் வாசித்து, நற்புகழைப் பெற்றுக் கொடுத்தார். அது மட்டுமன்றி மகன் நிதர்சன் வில்லிசை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நகைச் சுவையாகப் பேசி மக்களைக் கவர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆரம்பித்த இவருடைய கலைப்பயணம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக மேடையேற்றியதுடன் கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, நயினாதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு முதலான இடங்களுக்கும் பரந்து விரிந்து, தொடர்ந்தமை சிறப்பம்ச மாகும். தற்போது நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் இவருடைய பாரம்பரிய வில்லிசைக் கருவியும், சுருதிப் பெட்டியும் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களுடைய வேண்டுகோளிற்கிணங்க, நாவற்குழி சிவபூமி அரும்பெரும் காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது சிவநெறிக் கலாநிதி ஸ்ரீதரன் அவர்கள் யாழ்ப்பாணம் வண்னை அருள்மிகு வேங்கடேச வரதராசப் பெருமாள் கோயிலில் முதன்மை ஓதவராகக் கடமை புரிந்து வருகின்றார். சீர்வளர்சீர் ஆறுமுகநாவலர் பிரசங்கம் செய்த யாழ். வண்ணை அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வைத்தீசுவரன் கோயிலிலும் சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக நித்திய ஓதவராகவும் இருந்திருக்கிறார். இவர் 1965 இல் வண்ணை அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனைச் சபையில் அங்கம் வகித்ததோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயில் மண்டப வழிபாடுகளில் பாடல்களைப் பாடி வந்துள்ளார். இவருடைய தந்தையார் அம்பிகையைத் துயிலெழுப்பும் வகையில் திருப்பள்ளியெழுச்சி பாடி வந்ததைப் பார்த்த ஸ்ரீதரனும், அதிகாலை 5 மணிக்கு நித்திரை விட்டெழுந்து சுத்தி செய்து தாமும் அவருடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கின்றார், என்பதை எண்ணும் போது இளமை யிலேயே அவருக்கிருந்த இறை ஆர்வம் வியக்கவைக்கிறது. அத்துடன் நல்லூர் தேர்த்திருவிழா நாளில், இவரது தந்தையாரும், நாச்சிமார் கோயிலில் ஓதுவாராக இருந்த சண்முகலிங்கம் அவர்களும் நடைக்குழு இறைப்பாடல் வழிபாடு (நடை பஜனை) செய்தமையும் குறிப்பிடத்தக்கது. தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி என்ற வகையில் மேலும் ஸ்ரீதரன் அவர்களும் அவரைப் பின்பற்றி வந்ததில் ஆச்சரியம் இல்லை. 1980 களில் ஓதுவார் சண்முகலிங்கம் அவர்களும், ஸ்ரீதரனின் தந்தையார் இராசையா அவர்களும் நாச்சிமார் கோயிலில் கூட்டுப் வழிபாடுகளில் பாடும் போதும் மற்றும் மார்கழி திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலை வீதிக்குழு இறைப்பாடல் (வீதி பஜனை) வழிபாட்டில் ஈடுபடும் போதும் அந்த நிகழ்வுகளிலும் கலைஞர் ஸ்ரீதரனும் சேர்ந்து கொள்ளத் தவறவில்லை. இவர் பல தேவாரப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசுகள் பல பெற்றமையும குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஓதுவார் ஸ்ரீதரன் அவர்கள் பல திருமுறை முற்றோதல்களையும் செய்திருக்கின்றார். ஆர்மோனிய வித்துவான் அருணாவின் ஒத்துழைப்போடு, சதா வேல்மாறன் மற்றும் கபிலன், இசையமைப்பாளர் கண்ணன், அளவெட்டி முருகையா, ஆர்மோனியச் சக்கரவர்த்தி யோன் சுபாஸ், கேசவராஜா, தவனேஸ் முதலானோரும் பக்கவாத்தியம் இசைக்க திருமுறை ஒலிப்பேழைகளும் (இறுவட்டு) வெளியீடு செய்துள்ளார். அது மாத்திரமன்றி திருமுறை தந்த பெருமகனார், வாக்குக்கு அருணகிரி, வள்ளி திருமணம் முதலான வில்லுப்பாட்டு இறுவட்டுகளும் வெளியிட்டுள்ளார். தாம் இல்லாத காலத்தில் வில்லுப்பாட்டு அழிந்து விடாமல் இருக்க, இரண்டு பல்கலைக்கழக மாணவியர்க்கு வில்லிசையையும் பழக்கி விட்டிருக்கின்றார். கோப்பாயில் இயங்கி வந்த, அருள்நெறி மனதத்துவ மண்டபத்தில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் சமயபாட வகுப்புக்களும், தேவாரப் பண்ணிசை வகுப்புக்களும் நடத்தி, மாணவ சமுதாயம் நன்கு பயன்பெற தம்மாலியன்றவரை பாடுபட்டு உழைத்தமை, இவரது பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. 05 கெ நல்லூர் முருகன் பள்ளி அறைக்குச் செல்லும் போது தேரின் முன்னே திருப்புகழ் பாடுகின்ற, பத்தி பூர்வமான பாடும் பணியிலும் இவர் ஈடுபட்டு வந்திருக்கின்றார் என்பது இவருடைய இறைநெறி நாட்டத்துக்கு உரைகல்லாக உள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை முனீசுவரர் கோயிலிலும் தற்போது ஓதுவார் பணி செய்து வருகின்றார். - இவருக்கு கிடைக்கப் பெற்ற பட்டங்களாக, சைவப்புலவர் 1972 ஆம் வருடம் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், யாழ்ப்பாணம். கவிமணி - 2000 ஆம் வருடம் - இந்துசமயப் பேரவை - யாழ்ப்பாணம், சிவநெறித் தொண்டர் - 2001 ஆம் வருடம் - வடபிராந்திய இந்துப் பேரவை, யாழ்ப்பாணம். சைவநெறிப்புலவர் - 2002 ஆம் வருடம் - ஸ்ரீதேவி குருகுல பீடம், கொழும்பு. சிவநெறிக் கலாநிதி - 2002 ஆம் வருடம் - சர்வதேச இந்துமதக் குருபீடம் கொழும்பு, மரபுக்கலைச் சுடர் - 2004 ம் வருடம் -பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம். ஆன்மீகச் செம்மல் - 2004 ஆம் வருடம் - ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம் - கொழும்பு, கலைஞானச் சுடர் - 2005 ஆம் வருடம் - கலாசாரப்பேரவை -நல்லூர், யாழ்ப்பாணம், வில்லிசைச் செல்வர் - 2008 ஆம் வருடம் - அத்தியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபை - யாழ்ப்பாணம், வில்லிசை வேந்தன் - 2013 ஆம் வருடம் நாகேஸ்வரன் மணிவழாக்குழு யாழ்ப்பாணம், இசைக்கலைமாணி - 2013 ஆம் வருடம் - சப்பிரமுவ பல்கலைக்கழகம் - இலங்கை, கலாபூஷணம் - 2011 ஆம் வருடம் - இலங்கை அரசாங்கம் - கொழும்பு, கலைமாமணி 2020 ஆம் வருடம் - இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு, போன்ற இருபதிற்கு மேற்பட்ட விருதுகளை தன்னகத்தே கொண்டவர். கலைப்பயணம் மட்டுமன்றி படைப்பாற்றல் செயற் பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அந்தவகையில் வாக்குண்டாம் (உரையுடன்), வில்லிசைக்கலை, பாலர் தோத்திரத் திரட்டு, குழந்தைகளுக்கான மழலைச் செல்வம், சைவசமய தரிசனம், பாலர் மணிவாசகம், சிறுவர் கதைக் கொத்து, மழலை தமிழ் அமுதம், தெய்வீகத் திருமுறைத் தேனமுதம், நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம், பஞ்சகம்மாளர், கிருஷ்ணாமிர்தம், அத்தியடிப் பதியுறையும் நர்த்தன விநாயகர், ஸ்ரீ காமாட்சி கவசம், பன்னிரு ஆழ்வார் பக்தி நெறி போன்ற சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஏற்ற விதத்தில் நூல்களை ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை யாழ். வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ் தானத்தில் அண்மையில் நடைபெற்ற சுவர்க்கவாயில் ஏகாதசிப் பெரு விழாவில் யாழ். நாச்சிமார் கோயிலடி ஸ்ரீதர் வில்லிசைக் குழுவினர் நிகழ்த்திய "சூடிக்கொடுத்த சுடர் கொடி" வில்லிசை நிகழ்வைப் படத்தில் காணலாம். வானொலியில் 1980 - 1989 ஆம் ஆண்டு வரை திங்களுக்கு நான்கு முறை சைவ சமய நற்சிந்தனை வழங்கல் நிகழ்ச்சியிலும் பணியாற்றி வந்தார். இராசையா ஸ்ரீதரன் அவர்கள் ஓதுவராகவும், வில்லிசைக் கலைஞராகவும், இறைநெறி எழுத்தாளராக விளங்கும் இவர்கள், எந்நேரமும் புன்சிரிப்புத் தவழும் முகத்துடன் காணப்படும் இவர், நெற்றியில் திருநீறு துலங்க, உருத்திராக்கமும் அணிந்து திருமுறையை ஓதுவதே தனது இடையறா பணியாக கொண்டு இன்றளவும் பணியாற்றி வருகின்றார். யாழ் வண்ணை நாச்சிமார் கோயில் சுக்கிரவாரத் திருவிழாவுக்கென, தனது சொந்தச் செலவில் ஓர் அழகிய தங்கத்தேர் செய்து கொடுத்த பெருமையும் இவரையே சாரும். யாழ் அத்தியடிப் பிள்ளையார் கோயிலில் ஒரு திருவாசியும், பெருமாள் கோயிலில் இரண்டு புத்தக வெளியீடும் செய்துள்ளமை, இவரது பத்தி பூர்வமான பாங்குக்கு அணிசேர்க்கின்றதன. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன சமயப்பிரசாரகராகவும் அகில இலங்கை சைவப்புலவர் சங்க உறுப்பினராகவும் பணியாற்றும், ஓதுவாரும், எழுத்தாளரும், இறைநெறிச் சொற்பொழிவாளரும், வில்லிசைக் கலைஞருமாகிய இராசையா ஸ்ரீதரன் அவர்கள் வாழுங் தெய்வங்கள். இவர் பணி மேலும் தொடர எல்லாம் வல்ல காலத்திலேயே அறப்பணிகள் செய்து வருவது அவருடைய திறமைக்கு மகுடம் சூட்டினாற் போல அமைந்துள்ளதெனில் மிகையாகாது. இப்படி வாழும்போது வாழ்வாங்கு வாழ்பவர்கள் வாழும் யாழ்ப்பாணம் தென்னாடு ஐம்பூதநாதப் பெருமான் என்றென்றும் அருள்மழை பொழிவாராக. திருச்சிற்றம்பலம் இப்படியான கலைகளை, பண்பாட்டுப் பாரம்பரியங்களை அடுத்த தலைலைமுறைக்கு எடுத்துச் செல்ல இளம் சமுதாயத்தினர் முன்வரவேண்டும். இல்லையேல் தமிழர் கலைகள் பண்பாடுகள் காலப்போக்கில் அழியும் வாய்ப்புகள் வெகுதூரமில்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) தம்முடைய அன்பு மகள் காமாட்சி அம்பாளின் பாதம் சேர்ந்த காரணத்தால் இவரும் இவர் மனைவியும் மாறாத துன்பசாகரத்தில் மூழ்கித் தவித்தனர் . ஏனெனில் குவலயா ஒரு சங்கீத ஞானம் நிறைந்த நல்ல சாரீரம் உள்ளவராவார் . மகள் குவலயா பாட மகன் நிதர்சன் மிருதங்கள் வாசிக்க தாய் சத்தியபாமா வயலின் இசைக்க தந்தையார் ஸ்ரீதரன் தாளம் போடக் குடும்பமே கச்சேரி செய்து மகிழ்ந்தது . யார் கண்பட்டதோ தெரியவில்லை மகளை காலன் பறித்துச் சென்றுவிட்டான் . அன்பு மகளைப் பிரிந்த துயரத்தால் இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது . இதன் காரணமாக | உதயன் பத்திரிகையில் வேலை செய்த போது பல சமயக் கட்டுரைகளையும் தமிழ்க் கவிதைகளையும் தம்மை மறந்த நிலையில் எழுதத் தொடங்கினார் . மேலும் விழாக்கள் பற்றியும் பண்டிகைகள் பற்றியும் நோன்புகள் பற்றியும் நாட்டில் நிகழும் கோயில் விழாக்கள் குடமுழுக்குகள் பற்றியும் இவரது விரிவான ஆக்கங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின . அத்துடன் உதயன் தினக்குரல் வலம்புரி தினமுரசு ஆகிய நாளிதழ்களில் இவரது ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவந்தன . மேலும் கொழும்புப் பத்திரிகையான வீரகேசரி தினபதி தினகரன் சிந்தாமணி முதலானவற்றிலும் சைவநீதி இந்து ஒளி முதலான சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகளும் கவிதைகளும் அழகாகப் பிரசுரமாகி வாசகரிகளிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது . மேலும் யாழ்ப்பாணத்தில் தொண்டமானாறு செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமம் வெளியிடும் ஞானச்சுடர் சஞ்சிகையிலும் தெல்லிப்பழை துர்க்காதேவி திருக்கோயில் வெளியிடும் அருள் ஒளி சஞ்சிகையிலும் இவருடைய கட்டுரைகள் வெளிவரவத் தொடங்கின . இவரது எழுத்தாற்றல் சிறப்பைக் கண்ட சந்நிதியான் ஆச்சிரமம் இவருக்குப் விருதுகள் பல வழங்கிச் சிறப்பித்தது . இதனிடையே இவர் தமது சைவசமய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி ஆலயங்களிலும் விழாக்களிலும் சமயம் சார்ந்த பேச்சுக்களையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி சமூகத்தில் நற்பெயரை ஏற்படுத்தத் தவறவில்லை . அதுமாத்திரமன்றி கோயில்களில் பூசையின் போது ஐம்புராணம் ( பஞ்சபுராணம் ) மற்றும் திருமுறைகள் ஓதுவதிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று விளங்கினார் . அதுமட்டுமன்றி சமயவிழாக்கள் ஆரம்பமாகும் போது இறைவணக்கம் பாடித் தொடக்கி வைக்கும் பணியையும் செய்து வந்தார் . அத்துடன் 1967 ஆம் வருடம் தமது முதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் செய்ய ஆரம்பித்தார் . அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் தட்டாதெருவுக்கு அண்மையிலுள்ள அருள்மிகு அரசடி விநாயகர் கோயிலில் பெருஞ்சிவனிரவு அன்று முதன் | முதலாக ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நிகழ்த்தினார் . அந்த நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக அமைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது . அதன் பயனாக ஸ்ரீதரன் அவர்கள் கலையுலகில் பிரவேசித்து ஸ்ரீதர் வில்லிசைக் குழு என்று ஒரு குழுவை அமைத்து யாழ் குடாநாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலும் மண்டபங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நிகழ்த்தி வந்தார் . இவருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு இவரது மகன் ஸ்ரீ நிதர்சன் மிருதங்கம் வாசித்து நற்புகழைப் பெற்றுக் கொடுத்தார் . அது மட்டுமன்றி மகன் நிதர்சன் வில்லிசை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நகைச் சுவையாகப் பேசி மக்களைக் கவர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது . இவ்வாறு ஆரம்பித்த இவருடைய கலைப்பயணம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக மேடையேற்றியதுடன் கொழும்பு கண்டி நாவலப்பிட்டி நயினாதீவு நெடுந்தீவு எழுவைதீவு முதலான இடங்களுக்கும் பரந்து விரிந்து தொடர்ந்தமை சிறப்பம்ச மாகும் . தற்போது நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் இவருடைய பாரம்பரிய வில்லிசைக் கருவியும் சுருதிப் பெட்டியும் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களுடைய வேண்டுகோளிற்கிணங்க நாவற்குழி சிவபூமி அரும்பெரும் காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன . தற்பொழுது சிவநெறிக் கலாநிதி ஸ்ரீதரன் அவர்கள் யாழ்ப்பாணம் வண்னை அருள்மிகு வேங்கடேச வரதராசப் பெருமாள் கோயிலில் முதன்மை ஓதவராகக் கடமை புரிந்து வருகின்றார் . சீர்வளர்சீர் ஆறுமுகநாவலர் பிரசங்கம் செய்த யாழ் . வண்ணை அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வைத்தீசுவரன் கோயிலிலும் சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக நித்திய ஓதவராகவும் இருந்திருக்கிறார் . இவர் 1965 இல் வண்ணை அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனைச் சபையில் அங்கம் வகித்ததோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயில் மண்டப வழிபாடுகளில் பாடல்களைப் பாடி வந்துள்ளார் . இவருடைய தந்தையார் அம்பிகையைத் துயிலெழுப்பும் வகையில் திருப்பள்ளியெழுச்சி பாடி வந்ததைப் பார்த்த ஸ்ரீதரனும் அதிகாலை 5 மணிக்கு நித்திரை விட்டெழுந்து சுத்தி செய்து தாமும் அவருடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கின்றார் என்பதை எண்ணும் போது இளமை யிலேயே அவருக்கிருந்த இறை ஆர்வம் வியக்கவைக்கிறது . அத்துடன் நல்லூர் தேர்த்திருவிழா நாளில் இவரது தந்தையாரும் நாச்சிமார் கோயிலில் ஓதுவாராக இருந்த சண்முகலிங்கம் அவர்களும் நடைக்குழு இறைப்பாடல் வழிபாடு ( நடை பஜனை ) செய்தமையும் குறிப்பிடத்தக்கது . தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி என்ற வகையில் மேலும் ஸ்ரீதரன் அவர்களும் அவரைப் பின்பற்றி வந்ததில் ஆச்சரியம் இல்லை . 1980 களில் ஓதுவார் சண்முகலிங்கம் அவர்களும் ஸ்ரீதரனின் தந்தையார் இராசையா அவர்களும் நாச்சிமார் கோயிலில் கூட்டுப் வழிபாடுகளில் பாடும் போதும் மற்றும் மார்கழி திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலை வீதிக்குழு இறைப்பாடல் ( வீதி பஜனை ) வழிபாட்டில் ஈடுபடும் போதும் அந்த நிகழ்வுகளிலும் கலைஞர் ஸ்ரீதரனும் சேர்ந்து கொள்ளத் தவறவில்லை . இவர் பல தேவாரப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசுகள் பல பெற்றமையும குறிப்பிடத்தக்கது . அத்துடன் ஓதுவார் ஸ்ரீதரன் அவர்கள் பல திருமுறை முற்றோதல்களையும் செய்திருக்கின்றார் . ஆர்மோனிய வித்துவான் அருணாவின் ஒத்துழைப்போடு சதா வேல்மாறன் மற்றும் கபிலன் இசையமைப்பாளர் கண்ணன் அளவெட்டி முருகையா ஆர்மோனியச் சக்கரவர்த்தி யோன் சுபாஸ் கேசவராஜா தவனேஸ் முதலானோரும் பக்கவாத்தியம் இசைக்க திருமுறை ஒலிப்பேழைகளும் ( இறுவட்டு ) வெளியீடு செய்துள்ளார் . அது மாத்திரமன்றி திருமுறை தந்த பெருமகனார் வாக்குக்கு அருணகிரி வள்ளி திருமணம் முதலான வில்லுப்பாட்டு இறுவட்டுகளும் வெளியிட்டுள்ளார் . தாம் இல்லாத காலத்தில் வில்லுப்பாட்டு அழிந்து விடாமல் இருக்க இரண்டு பல்கலைக்கழக மாணவியர்க்கு வில்லிசையையும் பழக்கி விட்டிருக்கின்றார் . கோப்பாயில் இயங்கி வந்த அருள்நெறி மனதத்துவ மண்டபத்தில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் சமயபாட வகுப்புக்களும் தேவாரப் பண்ணிசை வகுப்புக்களும் நடத்தி மாணவ சமுதாயம் நன்கு பயன்பெற தம்மாலியன்றவரை பாடுபட்டு உழைத்தமை இவரது பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது . 05 கெ நல்லூர் முருகன் பள்ளி அறைக்குச் செல்லும் போது தேரின் முன்னே திருப்புகழ் பாடுகின்ற பத்தி பூர்வமான பாடும் பணியிலும் இவர் ஈடுபட்டு வந்திருக்கின்றார் என்பது இவருடைய இறைநெறி நாட்டத்துக்கு உரைகல்லாக உள்ளது . யாழ்ப்பாணம் கோட்டை முனீசுவரர் கோயிலிலும் தற்போது ஓதுவார் பணி செய்து வருகின்றார் . - இவருக்கு கிடைக்கப் பெற்ற பட்டங்களாக சைவப்புலவர் 1972 ஆம் வருடம் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் யாழ்ப்பாணம் . கவிமணி - 2000 ஆம் வருடம் - இந்துசமயப் பேரவை - யாழ்ப்பாணம் சிவநெறித் தொண்டர் - 2001 ஆம் வருடம் - வடபிராந்திய இந்துப் பேரவை யாழ்ப்பாணம் . சைவநெறிப்புலவர் - 2002 ஆம் வருடம் - ஸ்ரீதேவி குருகுல பீடம் கொழும்பு . சிவநெறிக் கலாநிதி - 2002 ஆம் வருடம் - சர்வதேச இந்துமதக் குருபீடம் கொழும்பு மரபுக்கலைச் சுடர் - 2004 ம் வருடம் -பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் . ஆன்மீகச் செம்மல் - 2004 ஆம் வருடம் - ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம் - கொழும்பு கலைஞானச் சுடர் - 2005 ஆம் வருடம் - கலாசாரப்பேரவை -நல்லூர் யாழ்ப்பாணம் வில்லிசைச் செல்வர் - 2008 ஆம் வருடம் - அத்தியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபை - யாழ்ப்பாணம் வில்லிசை வேந்தன் - 2013 ஆம் வருடம் நாகேஸ்வரன் மணிவழாக்குழு யாழ்ப்பாணம் இசைக்கலைமாணி - 2013 ஆம் வருடம் - சப்பிரமுவ பல்கலைக்கழகம் - இலங்கை கலாபூஷணம் - 2011 ஆம் வருடம் - இலங்கை அரசாங்கம் - கொழும்பு கலைமாமணி 2020 ஆம் வருடம் - இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு போன்ற இருபதிற்கு மேற்பட்ட விருதுகளை தன்னகத்தே கொண்டவர் . கலைப்பயணம் மட்டுமன்றி படைப்பாற்றல் செயற் பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் . அந்தவகையில் வாக்குண்டாம் ( உரையுடன் ) வில்லிசைக்கலை பாலர் தோத்திரத் திரட்டு குழந்தைகளுக்கான மழலைச் செல்வம் சைவசமய தரிசனம் பாலர் மணிவாசகம் சிறுவர் கதைக் கொத்து மழலை தமிழ் அமுதம் தெய்வீகத் திருமுறைத் தேனமுதம் நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம் பஞ்சகம்மாளர் கிருஷ்ணாமிர்தம் அத்தியடிப் பதியுறையும் நர்த்தன விநாயகர் ஸ்ரீ காமாட்சி கவசம் பன்னிரு ஆழ்வார் பக்தி நெறி போன்ற சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஏற்ற விதத்தில் நூல்களை ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது . அத்துடன் இலங்கை யாழ் . வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ் தானத்தில் அண்மையில் நடைபெற்ற சுவர்க்கவாயில் ஏகாதசிப் பெரு விழாவில் யாழ் . நாச்சிமார் கோயிலடி ஸ்ரீதர் வில்லிசைக் குழுவினர் நிகழ்த்திய சூடிக்கொடுத்த சுடர் கொடி வில்லிசை நிகழ்வைப் படத்தில் காணலாம் . வானொலியில் 1980 - 1989 ஆம் ஆண்டு வரை திங்களுக்கு நான்கு முறை சைவ சமய நற்சிந்தனை வழங்கல் நிகழ்ச்சியிலும் பணியாற்றி வந்தார் . இராசையா ஸ்ரீதரன் அவர்கள் ஓதுவராகவும் வில்லிசைக் கலைஞராகவும் இறைநெறி எழுத்தாளராக விளங்கும் இவர்கள் எந்நேரமும் புன்சிரிப்புத் தவழும் முகத்துடன் காணப்படும் இவர் நெற்றியில் திருநீறு துலங்க உருத்திராக்கமும் அணிந்து திருமுறையை ஓதுவதே தனது இடையறா பணியாக கொண்டு இன்றளவும் பணியாற்றி வருகின்றார் . யாழ் வண்ணை நாச்சிமார் கோயில் சுக்கிரவாரத் திருவிழாவுக்கென தனது சொந்தச் செலவில் ஓர் அழகிய தங்கத்தேர் செய்து கொடுத்த பெருமையும் இவரையே சாரும் . யாழ் அத்தியடிப் பிள்ளையார் கோயிலில் ஒரு திருவாசியும் பெருமாள் கோயிலில் இரண்டு புத்தக வெளியீடும் செய்துள்ளமை இவரது பத்தி பூர்வமான பாங்குக்கு அணிசேர்க்கின்றதன . நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன சமயப்பிரசாரகராகவும் அகில இலங்கை சைவப்புலவர் சங்க உறுப்பினராகவும் பணியாற்றும் ஓதுவாரும் எழுத்தாளரும் இறைநெறிச் சொற்பொழிவாளரும் வில்லிசைக் கலைஞருமாகிய இராசையா ஸ்ரீதரன் அவர்கள் வாழுங் தெய்வங்கள் . இவர் பணி மேலும் தொடர எல்லாம் வல்ல காலத்திலேயே அறப்பணிகள் செய்து வருவது அவருடைய திறமைக்கு மகுடம் சூட்டினாற் போல அமைந்துள்ளதெனில் மிகையாகாது . இப்படி வாழும்போது வாழ்வாங்கு வாழ்பவர்கள் வாழும் யாழ்ப்பாணம் தென்னாடு ஐம்பூதநாதப் பெருமான் என்றென்றும் அருள்மழை பொழிவாராக . திருச்சிற்றம்பலம் இப்படியான கலைகளை பண்பாட்டுப் பாரம்பரியங்களை அடுத்த தலைலைமுறைக்கு எடுத்துச் செல்ல இளம் சமுதாயத்தினர் முன்வரவேண்டும் . இல்லையேல் தமிழர் கலைகள் பண்பாடுகள் காலப்போக்கில் அழியும் வாய்ப்புகள் வெகுதூரமில்லை . வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்