தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13
தென்னாடு
துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021
காலத்தால் மூத்த செந்நெறி!
மரண வீட்டில் திருமுறைகள் ஓதல்
சிவநெறியும் திருமுறைமரபுகளும்!
மரண வீட்டில் திருமுறைகளை ஓதக்கூடாது எனப்
பிரம்ம ஸ்ரீ கா. கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறிய
கூற்றுச் சைவ சித்தாந்தத்தின் அடித்தளத்தை உடைக்க
முயல்கிறது. அவர் கூற்று முற்றிலும் பொருத்தமற்றது
என்பதைத் திருவாளர்கள் வ. கந்தசுவாமி, த. சண்முகசுந்தரம்,
நா. செல்லப்பா, க. கணபதிப்பிள்ளை, செ.கனகசபாபதி,
க.தியாகராசா முதலிய சைவப் பெரியார்கள் வீரகேசரி வார
இதழ் மூலம் சைவத் தமிழுலகிற்கு விளக்கியுள்ளனர். நாவலர்
பெருமானும் சைவப் பெரியார் சிவபாத சுந்தரனாரும் பிறந்து
அறிவொளி பரப்பிய எங்கள் ஈழவள நாட்டிலே இன்று
ஆயிரமாயிரம் சைவப் பெரியார்கள் சைவப் பயிரை வளர்த்து
வருவது மகிழ்ச்சிக்குரியது.
தெ 08
முப்பது ஆண்டுகளாகச் சைவ சமயத்தையும், சித்தாந்த
தத்துவத்தையும் பல்கலைக் கழக மாணவர்களுக்குப்
போதித்துவரும் ஆசிரியர் என்ற முறையில்யான் சில
விளக்கங்கள் கூறுவது பொருத்தம் என உணர்கிறேன்.
ஆன்மாக்களுக்குத் தனி நிலையுண்டு என்பதை வற்புறுத்துஞ்
சைவ சித்தாந்தம் பிறவியெடுப்பதற்கு முன் அவற்றின் நிலை
சிவத்தின் நிலையை ஒத்தது எனவும், வீடுபேறு என்பது
ஆன்மா மீண்டும் தன் சுயநிலையை அடைதலே எனவும்
சைவ சித்தாந்தங் கூறுகின்றது. பிறவியெடுத்த ஆன்மா
முதலில் ஆணவ மலத்துடனுங் ஈற்றில் சிவத்துடனும்
பந்தப்பட்டு நிற்றலின் “கண்டது காட்டும் பளிங்கு போன்றது”
என வருணிக்கப்படுகிறது பந்தப்பட்ட ஆன்மா இரண்டு
வித சரீரங்களைப் பெறுகிறது. ஒன்று சூக்கும சரீரம்.
மற்றையது தூல சரீரம். முன்னையது கண்ணுக்குப்
புலனாகாதது. பின்னையது கண்ணுக்குப் புலனானது.
பிறப்பு, இறப்பு என்பன போக்கு வரவு புரியும் ஆன்மாவின்
செயல்கள். எனவே மரணம் என்பது பிறவியெடுத்த
ஆன்மாவின் சூக்கும சரீரம் கெடாது நிற்பத் தூல சரீரம்
கெட்டுத் தோன்றும் நிகழ்ச்சியாகும். இதனைச்
சிவஞானபாடியும் தெளிவாக விளக்குகிறது. எனவே ஒரு
சைவ சித்தாந்தியின் மரண வீட்டிலும், அவன் உடலைச்
சாம்பலாக்கிய பின்பும் செய்யப்படும் கிரியைகள் போக்கு
வரவு புரியும் சூக்கும சரீரயாகிய அவனைச் சென்றடையும்
என்பது சைவ சித்தாந்தியின் கோட்பாடு. இக்கோட்பாட்டின்
படியே கிணற்றுள் விழுதல், தூங்கிச் சாதல், நஞ்சு குடித்தல்,
முதலிய செயல்கள் மூலம் வலிந்து இறப்பைத் தழுவிக்
கொண்ட மனிதர்களின் ஆன்மாக்களை, அவற்றின் சூக்கும்
சரீர நிலையில் சாந்தப்படுத்தும் நோக்குடனேயே வேறுபட்ட
கிரியைகள் செய்யப்படு கின்றன அக்கிரியைகளுள்
முக்கியமானது இறந்தவரின் இடத்தில் உணவுகளைப்
படைத்தல். சூக்கும் சரீரியாகிய ஆன்மா எப்போ மறுபடியும்
தூல சரீரத்தை பெறுகிறது என்பதை யாரும் அறியார்.
எனவே மரணம் என்பது போக்கு வரவு புரியும்
ஆன்மாவின் ஒரு புனிதமான செயல். மரண வீட்டில்
அசுத்தத்தையோ, ஆசௌசத்தையோ காண்பதும்,
கற்பிப்பதும் சைவ சித்தாந்திகளின் கோட்பாடுகளுக்கு
முரணானது. இக்காரணங்களால் திருமுறை ஒதுதல் மூலமே
இறைவனை வேண்டி ஆன்ம ஈடேற்றம் பெறுகின்றனர்.
சைவ சித்தாந்திகள் இலங்கையில் வாழும் இருபது
இலட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட சைவ
சித்தாந்திகளாகிய நாம் லிங்காயதர்களும் அல்ல் வீர
சைவர்களும் அல்ல.
திருமுறைகள் வேதசாரம் என்றும், வேதங்கள் போல்
புனிதமானவையென்றும் குருக்கள் அவர்கள் இரண்டையும்
ஒப்பிட வேண்டிய தேவை இன்று வேண்டியதில்லை.
மந்திரங்கள் என்ற வகையில் வேதங்களை ஓதும் தகுதி
உயர்ந்த வகுப்பினர் எனத் தம்மைக் கற்பித்துக் கொண்ட
பிராமணருக்கே உரியது. வேதங்களைக் கேட்டல் உயர்ந்த
மேல் வகுப்பினராகிய மூவருக்கும் உரியதாம். வேதங்களை
ஓதும் உரிமையும் கேட்கும் உரிமையும் நான்காவது
வருணத்தராகிய சூத்திரருக்கு விலக்கப்பட்டுள்ளது.
எம்போன்றோரின் ஆன்ம ஈடேற்றத்துக்குச் சைவத்
திருமுறைகள் உள்ளன. இச்சைவத் திருமுறைகளைளே
எமது தத்துவ சமய முதல் நூல்கள்!
இந்திய சமுதாய வளர்ச்சியின் சாபக் கேடாகவும்
மனிதரிடையே ஏற்றத் தாழ்வுகள் அமைவதற்குக்
காரணமாகவும் அமைந்த சில விதிகள் வேதாகமங்களில்
உள்ளன. அவை எழுந்த காலத்துக்குப் பொருத்தமெனக்
கொண்டாலுங் கூட வளர்ந்துவரும் சமுதாயாத்துக்கு
முற்றிலும் பொருத்தமற்றவை. எமக்குப் புறம்பானவை.
விருப்பமான மறையவர்கள் வேதங்களை ஓதட்டும். சைவ
உலகம் எவர் மீதும் எக்காலத்திலும் அதிகாரத்தைச் செலுத்த
முற்படாது.
வேதங்கள் தோன்றுவதற்குப் பல்லாயிரம்
ஆண்டுகட்கு முற்பட்டகாலத்துப்பண்பாட்டை
யுடையது எமது சிவநெறி, கி.மு. 4000 ஆண்டு
வரை ஏற்பட்ட பிரளயத்தின் பின் குமரிக்
கண்டத்திலிருந்து பாரசீகக் குடா நாடுகளிற்
குடியேறி உலகத்தின் முதலாவது பேரரசினை
அமைத்துப் புகழ்பெற்ற சுமேரி (குமரியர்)
எனப்படும் தமிழர்கள் கி.மு. 2700வரை
பொறித்து விட்டுச் சென்ற கல்வெட்டுக்களில்
“சிவ” என்ற சொல்லும் அதன் பொருள் “எல்லா
உயிர்களினதும் இறைவன்” என்றுங் காணப்
படுகிறது. அதே காலத்தில் சிந்து வெளியிற்
பொறிக்கப்பட்ட முத்திரைகளில் "நான்கு
மிருகங்களின் நடுவே வீற்றிருக்கும் வடிவம்” பசுபதி நிலை
யிலுள்ள சிவன் என்றும், அங்கு அகப்பட்ட சிவலிங்க முத்திரை
களின் அடிப்படையில் விளக்கங் கூறுவர் சேர். யோன்மார்
சல். சிவன் ஒரு காத்தற் கடவுளாகவே கருதப்பட்டு வந்தான்.
பேராசிரியர்
கலாநிதி சதாசிவம்
வேதகாலத்தின் பின் ஆரியர் தம் அழித்தற் கடவுளாகிய
உருத்திரனைச் சிவனுடன் இணைத்து அவனின் திருநாமங்களில்
ஒன்று எனக் கூறிச் சிவநெறியைத் தழுவலாயினர். யாகங்களைச்
செய்வதன் மூலம் தமக்குக் கீழ்ப்பட்ட வருணத்தினரிடமிருந்து
பொருள் பெற்றுக் கடவுளைக் காட்டிக் கொடுக்க முற்பட்ட
பிராமணர்களின் செய்கையைப் புத்தர் பெருமானே கடிந்து
கூறிப் பிறிதொரு மதத்தையே தோற்றுவித்தார். பகுத்தறிவும்
அறிவு வளர்ச்சியும் ஏறஏறச் சமுதாயப் புரட்சிகள்
தொடரலாயின. வழக்காறற்றுப் போன வேதியர்களின்
வைதீக மரபுகளைச் சைவ மரபுகளுடன் இணைப்பதன்
மூலம் பிராமணர்கள் யாகசாலைகளுக்குப் பதிலாக முற்றிலும்
மாறுபட்ட பண்பாடுடைய பயன்தரும் சைவக் கோயில்களுட்
புகுந்து கடவுளைக் காட்ட முற்பட்டனர்.
பல்லவர்கள் காலத்தில் எழுந்த பக்திப் பாடல்களில்
நாயன்மார்கள் சைவ மரபின் அடிப்படைகளை மீண்டும்
வற்புறுத்துவதன் மூலம் சாதி வருணப் பாகுபாடற்ற மனித
குலத்தின் ஒருமைப்பாட்டை விளக்கியுள்ளனர். இவர்களிற்
பெரும்பாலோர் பிறப்பினால் அந்தணர்களாயினும்
சுப்பிரமணிய பாரதியார் போன்று சாதிகளில்லையடி பாப்பா
என்ற கருத்தை வற்புறுத்திச் சைவ உலகின் ஆன்மீக
மரபுகளுக்கு விளக்கங் கூறி விட்டுச் சென்றனர். சாதி
வகுப்புக்களற்ற சமுதாயத்தை உருவாக்கும் பண்பினை
அடிப்படையாகக் கொண்ட சைவத் திருமுறைகள்
ஆன்மாக்களின் தனிநிலையை வற்புறுத்துவதன் மூலம்
வேதாகம மரபுகளின் அடித்தளத்தையே உடைத்து விட்டன.
சைவ சமயப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் அதிகாரம்
வேதாகமப் பண்பாட்டை வற்புறுத்தும் இந்து சமயப்
பேராசிரியராகிய பிரம்மஸ்ரீ. கா. கைலாசநாதக் குருக்களுக்கே
உண்டு என வாதிடும் பெரியார் வே. சின்னத்துரையவர்கள்
உரிமைகளை வலிந்து பெற முயல்வது விந்தையாக
இருக்கிறது.
இக்காரணங்களை முன்னிட்டே இலங்கையிலுள்ள
சைவ சமயத்தவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டும்
சைவ சித்தாந்தப் பேராசிரியர் ஒருவரை நியமிக்க
வேண்டுமென்றும் அதற்காகிய பணத்தைப் பொதுமக்கள்
நிறுவனங்களும் பெரிய கோயில்களின் ஆட்சிக் குழுக்களும்
சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்றும்
தீர்மானித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்
குழுவுக்கு மனுச் செய்துள்ளனரெனவும் அறிகிறோம். இது
கைகூடும் போது பெரியார் சிவபாதசுந்தரனார் விட்டுச்
சென்ற சைவ சித்தாந்த மரபுநெறி எம் ஈழவள நாட்டில்
துலக்கம் பெறுமென நம்புகிறோம்.
வேதங்களும் அவற்றின் மரபுகளும்
தோன்றுவதற்கு மிக முற்பட்ட காலத்திலிருந்தே
சிவநெறி வளர்ந்து வருகின்றது என்பது மேலே
காட்டிய வரலாற்றிலிருந்து தெரிகிறது. தமிழ்
மொழியிற் பூசை செய்தலே வேத காலத்துக்கு
முற்பட்ட சிவநெறி மரபுமாகும். மக்கள்
மொழியாகிய தமிழில் பூசை நடைபெறுங்காலம்
மிகத்தொலைவில் இல்லை. தமிழ் நாட்டில்
அரசே முன் நின்று நடத்தும் இப்பாரிய தொண்டு
அளப்பரியது. இலங்கையில் நடைபெற்ற உலக
இந்து
மகாநாட்டிலும் இக்கருத்து
வற்புறுத்தப்பட்டது. இலங்கையிலுள்ள
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைவக் கோயில்களில்
சிவாசாரியார்கள் தமிழிலேயே பூசை செய்கின்றனர். சில
பெரிய கோயில்களில் மட்டுமே வைதீக மரபு இன்னமும்
காணப்படுகின்றது. மரணக் கிரியைகளில் மறையோர்
பங்குபற்ற மாட்டார்கள். தூரத்தில் நின்று கல்லெறிவதே
அவர்கள் வழக்கம் போலும்.
பெரியார் இராமசாமி நாயக்கரும், அறிஞர் அண்ணாவும்
கட்டியெழுப்பிய பகுத்தறிவு படைத்த தமிழ்ச்சமுதாயம்
பண்டைய ஆரிய வேதங்களிலும் ஆகமங்களிலும் கூறப்பட்ட
காலத்தோடொவ்வாச் சமுதாய வழக்க விதிகளை ஆதாரங்
காட்டித்தமது நிலையைப் பாதுகாக்க முயலும் மக்களை
உயிரில்லாப் பாவைகளாக்கிவிடும் என நம்புகிறோம்.
இடைக்காலத்தில் சைவ நெறியிற் புகுத்தப்பட்ட வைதீக
மரபுகளைக் களைந்தெறிவதே ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என வழிபடும் சிவநெறியாளர்களின் முழுமுதற்
கடவுளாகிய சிவனும் விரும்புவர். சிவன் தமிழ் மொழியை
நேசிப்பவர். தமிழாற் சொன்மாலைகள் தொடுத்தும் பாடி
வழிபட்ட நாயன்மார்களின் வேண்டுகோள்களைச்
செவிமடுத்த இறைவன் எத்தனை அற்புதச் செயல்களைச்
செய்து காட்டியுள்ளார். தெய்வ மொழியாகிய வடமொழியில்
பூசை செய்தாற்றான் இறைவன் செவி சாய்த்துக் கேட்பார்
என்ற போலிவாதம் இடைக்காலத்தில் ஏற்பட்டது.
இத்தனை சர்ச்சைக்கும் காரணம் சைவத் திருமுறைகள்
என்று மிலா அளவுக்கு இன்று சைவ மக்களின் அன்றாட
வாழ்க்கை நெறிகளுடன் பின்னிப் பிணைந்து நிற்பதே.
சைவ மக்களுள் தீண்டாதவர் என மேல் வருணத்தாரால்
தள்ளி விடப்பட்ட மக்கள் இன்று இலவசக் கல்வியின்
பயனாய் பாடசாலைகளில் தாம் கட்டாயமாகப் படிக்கும்
"சைவநெறி” மூலம் சிவனைக் கானுகின்றனர். ஆகம்
முறைப்படி கட்டப்பட்ட கோயில்களில் கடவுளாற்
படைக்கப்பட்ட குழந்தைகள் செல்லக் கூடாது என
விதிக்கப்பட்ட சட்டங்கள் உதறித் தள்ளியெறியப்பட்டன.
"இந்து சமயம்” என்ற போர்வையில் ஊடுருவலானவைதீகக்
கருத்துக்கள் இலங்கை முழுவதிலும் வழக்கிலிருக்கும் “சைவ
நெறி”யினால் களைந் தெறியப்பட்டு விட்டன.
எனவே இந்த நூற்றாண்டு முடிவதற்கிடையில் சிவநெறி
மரபுகளும் சித்தாந்தக் கோட்பாடுகளும் இலங்கை வாழ்
இருபது இலட்சம் சைவ மக்கள் மத்தியில் வேரூன்றிவிடும்.
அவர்கள் ஒவ்வொருவரும் சமயத் தலைமை பெறும்
மக்களாகும் தகைமை பெறுவர். எனவே மனிதனின் ஆன்மீகப்
பண்பாட்டுக்குக் கோயிற் கிரியைகளிலும் மிக முக்கியத்துவம்
வாய்ந்த மரணக் கிரியைகளில் திருமுறைகள் ஓதப்பட்டு
மனிதனை நல்வழியில் நடத்தும். இதனைத் தடுக்க எவராலும்
முடியாது. நாமெல்லோரும் கூலிக்காகவே உழைக்கிறோம்.
அரசாங்க சேவையிலுள்ளவர்கள் கூலி பெறாவிட்டால்
எவருமே வேலைக்குச் செல்ல மாட்டார்கள். திருமுறைகளில்
நாட்டிலே கோயில்களில் ஓதுவாரைக் கொண்டு ஓதுவித்த
சோழப் பெருமன்னர் அவர்களின் வாழ்க்கைக்குக் கூலியாக
மானிய நிலங்களை வழங்கினர். கோயிற் பூசகர் கூடக்
கோயில்களில் கூலிக்காகவே மந்திரம் ஓதுகின்றனர். பலன்
கருதாது சேவை செய்யும் மக்கள் மிகச் சிலரே. மந்திரங்கள்
மிகச் சிலரே நிலைமை இப்படியிருக்க, சைவத் திருவாளர்
திரு. வே. சின்னத்துரை அவர்கள் மரண வீட்டில் கூலிக்காகப்
பாடுகின்றனர் எனக் கேலி செய்வது கண்டிக்கப்பட
வேண்டியது. மரண வீட்டில் மனங்கலங்கிய நிலையில்
இருக்கும் சைவ மக்களின் மனதைச் சாந்தப்படுத்தவே
உருக்கமான முறையில் வல்லாராற் பாடப்படுகின்றன.
பாடல்களை ஓதும் ஓதுவார்கள் சிறந்த மெய்யடியார்களே.
மண்ணுலகத்தினிற் பிறந்த எம் எல்லோரதும் வாழ்க்கை
புனிதமானது இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
என்பது எமக்குத் தெரியாது. காலையெழுந்தவுடன்
முகங்கழுவித் திருநீற்றை நெற்றியில் சாத்திச் சிவ, சிவ என்று
ஓதும் பத்திலட்சம் சைவத் தமிழ் மக்கள் இன்று மலையகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணமடைந்தவரை
நீராற் குளிப்பாட்டித் திருநீறு சாத்திச் சிவ, சிவ என்றோதிப்
பெட்டியில் அடைத்துக் குளியிற் புதைத்துவிடும் எமது
சைவ மக்கள் வேதங்களை அறியார், ஆகமங்களை அறியார்
சில திருமுறைப் பாடல்களை மட்டும் அறிந்த ஓதுவர் இது
ஒரு புனிதமான மரணக் கிரியையல்லவா? "முன்பிருந்ததோர்
காரணத்தாலே மூடரே பொய்யை மெய்யெனலாகுமோ” என்ற
பாரதியாரின் நூற்றாண்டில் வாழும் நாம் இனிமேலாவது
பொருத்தமற்றவிடத்து நூலாதாரங்களைக் காட்டி எம்மையே
ஏமாற்றிக்கொள்ள முற்படாதிருப்போமாக.
திருச்சிற்றம்பலம்
மறைந்த பேராசிரியர்.ஆ.சதாசிவம்
நவம்பர் 1982
வீரசேகரி வாரவெளியீடு
07.11.1982 இலும் வெளியிடப்பட்டது
தென்னாடு
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
2021
காலத்தால்
மூத்த
செந்நெறி
!
மரண
வீட்டில்
திருமுறைகள்
ஓதல்
சிவநெறியும்
திருமுறைமரபுகளும்
!
மரண
வீட்டில்
திருமுறைகளை
ஓதக்கூடாது
எனப்
பிரம்ம
ஸ்ரீ
கா
.
கைலாசநாதக்
குருக்கள்
அவர்கள்
கூறிய
கூற்றுச்
சைவ
சித்தாந்தத்தின்
அடித்தளத்தை
உடைக்க
முயல்கிறது
.
அவர்
கூற்று
முற்றிலும்
பொருத்தமற்றது
என்பதைத்
திருவாளர்கள்
வ
.
கந்தசுவாமி
த
.
சண்முகசுந்தரம்
நா
.
செல்லப்பா
க
.
கணபதிப்பிள்ளை
செ.கனகசபாபதி
க.தியாகராசா
முதலிய
சைவப்
பெரியார்கள்
வீரகேசரி
வார
இதழ்
மூலம்
சைவத்
தமிழுலகிற்கு
விளக்கியுள்ளனர்
.
நாவலர்
பெருமானும்
சைவப்
பெரியார்
சிவபாத
சுந்தரனாரும்
பிறந்து
அறிவொளி
பரப்பிய
எங்கள்
ஈழவள
நாட்டிலே
இன்று
ஆயிரமாயிரம்
சைவப்
பெரியார்கள்
சைவப்
பயிரை
வளர்த்து
வருவது
மகிழ்ச்சிக்குரியது
.
தெ
08
முப்பது
ஆண்டுகளாகச்
சைவ
சமயத்தையும்
சித்தாந்த
தத்துவத்தையும்
பல்கலைக்
கழக
மாணவர்களுக்குப்
போதித்துவரும்
ஆசிரியர்
என்ற
முறையில்யான்
சில
விளக்கங்கள்
கூறுவது
பொருத்தம்
என
உணர்கிறேன்
.
ஆன்மாக்களுக்குத்
தனி
நிலையுண்டு
என்பதை
வற்புறுத்துஞ்
சைவ
சித்தாந்தம்
பிறவியெடுப்பதற்கு
முன்
அவற்றின்
நிலை
சிவத்தின்
நிலையை
ஒத்தது
எனவும்
வீடுபேறு
என்பது
ஆன்மா
மீண்டும்
தன்
சுயநிலையை
அடைதலே
எனவும்
சைவ
சித்தாந்தங்
கூறுகின்றது
.
பிறவியெடுத்த
ஆன்மா
முதலில்
ஆணவ
மலத்துடனுங்
ஈற்றில்
சிவத்துடனும்
பந்தப்பட்டு
நிற்றலின்
“
கண்டது
காட்டும்
பளிங்கு
போன்றது
”
என
வருணிக்கப்படுகிறது
பந்தப்பட்ட
ஆன்மா
இரண்டு
வித
சரீரங்களைப்
பெறுகிறது
.
ஒன்று
சூக்கும
சரீரம்
.
மற்றையது
தூல
சரீரம்
.
முன்னையது
கண்ணுக்குப்
புலனாகாதது
.
பின்னையது
கண்ணுக்குப்
புலனானது
.
பிறப்பு
இறப்பு
என்பன
போக்கு
வரவு
புரியும்
ஆன்மாவின்
செயல்கள்
.
எனவே
மரணம்
என்பது
பிறவியெடுத்த
ஆன்மாவின்
சூக்கும
சரீரம்
கெடாது
நிற்பத்
தூல
சரீரம்
கெட்டுத்
தோன்றும்
நிகழ்ச்சியாகும்
.
இதனைச்
சிவஞானபாடியும்
தெளிவாக
விளக்குகிறது
.
எனவே
ஒரு
சைவ
சித்தாந்தியின்
மரண
வீட்டிலும்
அவன்
உடலைச்
சாம்பலாக்கிய
பின்பும்
செய்யப்படும்
கிரியைகள்
போக்கு
வரவு
புரியும்
சூக்கும
சரீரயாகிய
அவனைச்
சென்றடையும்
என்பது
சைவ
சித்தாந்தியின்
கோட்பாடு
.
இக்கோட்பாட்டின்
படியே
கிணற்றுள்
விழுதல்
தூங்கிச்
சாதல்
நஞ்சு
குடித்தல்
முதலிய
செயல்கள்
மூலம்
வலிந்து
இறப்பைத்
தழுவிக்
கொண்ட
மனிதர்களின்
ஆன்மாக்களை
அவற்றின்
சூக்கும்
சரீர
நிலையில்
சாந்தப்படுத்தும்
நோக்குடனேயே
வேறுபட்ட
கிரியைகள்
செய்யப்படு
கின்றன
அக்கிரியைகளுள்
முக்கியமானது
இறந்தவரின்
இடத்தில்
உணவுகளைப்
படைத்தல்
.
சூக்கும்
சரீரியாகிய
ஆன்மா
எப்போ
மறுபடியும்
தூல
சரீரத்தை
பெறுகிறது
என்பதை
யாரும்
அறியார்
.
எனவே
மரணம்
என்பது
போக்கு
வரவு
புரியும்
ஆன்மாவின்
ஒரு
புனிதமான
செயல்
.
மரண
வீட்டில்
அசுத்தத்தையோ
ஆசௌசத்தையோ
காண்பதும்
கற்பிப்பதும்
சைவ
சித்தாந்திகளின்
கோட்பாடுகளுக்கு
முரணானது
.
இக்காரணங்களால்
திருமுறை
ஒதுதல்
மூலமே
இறைவனை
வேண்டி
ஆன்ம
ஈடேற்றம்
பெறுகின்றனர்
.
சைவ
சித்தாந்திகள்
இலங்கையில்
வாழும்
இருபது
இலட்சத்துக்கும்
அதிகமான
எண்ணிக்கை
கொண்ட
சைவ
சித்தாந்திகளாகிய
நாம்
லிங்காயதர்களும்
அல்ல்
வீர
சைவர்களும்
அல்ல
.
திருமுறைகள்
வேதசாரம்
என்றும்
வேதங்கள்
போல்
புனிதமானவையென்றும்
குருக்கள்
அவர்கள்
இரண்டையும்
ஒப்பிட
வேண்டிய
தேவை
இன்று
வேண்டியதில்லை
.
மந்திரங்கள்
என்ற
வகையில்
வேதங்களை
ஓதும்
தகுதி
உயர்ந்த
வகுப்பினர்
எனத்
தம்மைக்
கற்பித்துக்
கொண்ட
பிராமணருக்கே
உரியது
.
வேதங்களைக்
கேட்டல்
உயர்ந்த
மேல்
வகுப்பினராகிய
மூவருக்கும்
உரியதாம்
.
வேதங்களை
ஓதும்
உரிமையும்
கேட்கும்
உரிமையும்
நான்காவது
வருணத்தராகிய
சூத்திரருக்கு
விலக்கப்பட்டுள்ளது
.
எம்போன்றோரின்
ஆன்ம
ஈடேற்றத்துக்குச்
சைவத்
திருமுறைகள்
உள்ளன
.
இச்சைவத்
திருமுறைகளைளே
எமது
தத்துவ
சமய
முதல்
நூல்கள்
!
இந்திய
சமுதாய
வளர்ச்சியின்
சாபக்
கேடாகவும்
மனிதரிடையே
ஏற்றத்
தாழ்வுகள்
அமைவதற்குக்
காரணமாகவும்
அமைந்த
சில
விதிகள்
வேதாகமங்களில்
உள்ளன
.
அவை
எழுந்த
காலத்துக்குப்
பொருத்தமெனக்
கொண்டாலுங்
கூட
வளர்ந்துவரும்
சமுதாயாத்துக்கு
முற்றிலும்
பொருத்தமற்றவை
.
எமக்குப்
புறம்பானவை
.
விருப்பமான
மறையவர்கள்
வேதங்களை
ஓதட்டும்
.
சைவ
உலகம்
எவர்
மீதும்
எக்காலத்திலும்
அதிகாரத்தைச்
செலுத்த
முற்படாது
.
வேதங்கள்
தோன்றுவதற்குப்
பல்லாயிரம்
ஆண்டுகட்கு
முற்பட்டகாலத்துப்பண்பாட்டை
யுடையது
எமது
சிவநெறி
கி.மு.
4000
ஆண்டு
வரை
ஏற்பட்ட
பிரளயத்தின்
பின்
குமரிக்
கண்டத்திலிருந்து
பாரசீகக்
குடா
நாடுகளிற்
குடியேறி
உலகத்தின்
முதலாவது
பேரரசினை
அமைத்துப்
புகழ்பெற்ற
சுமேரி
(
குமரியர்
)
எனப்படும்
தமிழர்கள்
கி.மு.
2700
வரை
பொறித்து
விட்டுச்
சென்ற
கல்வெட்டுக்களில்
“
சிவ
”
என்ற
சொல்லும்
அதன்
பொருள்
“
எல்லா
உயிர்களினதும்
இறைவன்
”
என்றுங்
காணப்
படுகிறது
.
அதே
காலத்தில்
சிந்து
வெளியிற்
பொறிக்கப்பட்ட
முத்திரைகளில்
நான்கு
மிருகங்களின்
நடுவே
வீற்றிருக்கும்
வடிவம்
”
பசுபதி
நிலை
யிலுள்ள
சிவன்
என்றும்
அங்கு
அகப்பட்ட
சிவலிங்க
முத்திரை
களின்
அடிப்படையில்
விளக்கங்
கூறுவர்
சேர்
.
யோன்மார்
சல்
.
சிவன்
ஒரு
காத்தற்
கடவுளாகவே
கருதப்பட்டு
வந்தான்
.
பேராசிரியர்
கலாநிதி
சதாசிவம்
வேதகாலத்தின்
பின்
ஆரியர்
தம்
அழித்தற்
கடவுளாகிய
உருத்திரனைச்
சிவனுடன்
இணைத்து
அவனின்
திருநாமங்களில்
ஒன்று
எனக்
கூறிச்
சிவநெறியைத்
தழுவலாயினர்
.
யாகங்களைச்
செய்வதன்
மூலம்
தமக்குக்
கீழ்ப்பட்ட
வருணத்தினரிடமிருந்து
பொருள்
பெற்றுக்
கடவுளைக்
காட்டிக்
கொடுக்க
முற்பட்ட
பிராமணர்களின்
செய்கையைப்
புத்தர்
பெருமானே
கடிந்து
கூறிப்
பிறிதொரு
மதத்தையே
தோற்றுவித்தார்
.
பகுத்தறிவும்
அறிவு
வளர்ச்சியும்
ஏறஏறச்
சமுதாயப்
புரட்சிகள்
தொடரலாயின
.
வழக்காறற்றுப்
போன
வேதியர்களின்
வைதீக
மரபுகளைச்
சைவ
மரபுகளுடன்
இணைப்பதன்
மூலம்
பிராமணர்கள்
யாகசாலைகளுக்குப்
பதிலாக
முற்றிலும்
மாறுபட்ட
பண்பாடுடைய
பயன்தரும்
சைவக்
கோயில்களுட்
புகுந்து
கடவுளைக்
காட்ட
முற்பட்டனர்
.
பல்லவர்கள்
காலத்தில்
எழுந்த
பக்திப்
பாடல்களில்
நாயன்மார்கள்
சைவ
மரபின்
அடிப்படைகளை
மீண்டும்
வற்புறுத்துவதன்
மூலம்
சாதி
வருணப்
பாகுபாடற்ற
மனித
குலத்தின்
ஒருமைப்பாட்டை
விளக்கியுள்ளனர்
.
இவர்களிற்
பெரும்பாலோர்
பிறப்பினால்
அந்தணர்களாயினும்
சுப்பிரமணிய
பாரதியார்
போன்று
சாதிகளில்லையடி
பாப்பா
என்ற
கருத்தை
வற்புறுத்திச்
சைவ
உலகின்
ஆன்மீக
மரபுகளுக்கு
விளக்கங்
கூறி
விட்டுச்
சென்றனர்
.
சாதி
வகுப்புக்களற்ற
சமுதாயத்தை
உருவாக்கும்
பண்பினை
அடிப்படையாகக்
கொண்ட
சைவத்
திருமுறைகள்
ஆன்மாக்களின்
தனிநிலையை
வற்புறுத்துவதன்
மூலம்
வேதாகம
மரபுகளின்
அடித்தளத்தையே
உடைத்து
விட்டன
.
சைவ
சமயப்
பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாணும்
அதிகாரம்
வேதாகமப்
பண்பாட்டை
வற்புறுத்தும்
இந்து
சமயப்
பேராசிரியராகிய
பிரம்மஸ்ரீ
.
கா
.
கைலாசநாதக்
குருக்களுக்கே
உண்டு
என
வாதிடும்
பெரியார்
வே
.
சின்னத்துரையவர்கள்
உரிமைகளை
வலிந்து
பெற
முயல்வது
விந்தையாக
இருக்கிறது
.
இக்காரணங்களை
முன்னிட்டே
இலங்கையிலுள்ள
சைவ
சமயத்தவர்களின்
ஆன்மீக
வளர்ச்சிக்கு
வழிகாட்டும்
சைவ
சித்தாந்தப்
பேராசிரியர்
ஒருவரை
நியமிக்க
வேண்டுமென்றும்
அதற்காகிய
பணத்தைப்
பொதுமக்கள்
நிறுவனங்களும்
பெரிய
கோயில்களின்
ஆட்சிக்
குழுக்களும்
சேர்ந்து
நடவடிக்கைகளில்
இறங்க
வேண்டுமென்றும்
தீர்மானித்து
யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தின்
ஆட்சிக்
குழுவுக்கு
மனுச்
செய்துள்ளனரெனவும்
அறிகிறோம்
.
இது
கைகூடும்
போது
பெரியார்
சிவபாதசுந்தரனார்
விட்டுச்
சென்ற
சைவ
சித்தாந்த
மரபுநெறி
எம்
ஈழவள
நாட்டில்
துலக்கம்
பெறுமென
நம்புகிறோம்
.
வேதங்களும்
அவற்றின்
மரபுகளும்
தோன்றுவதற்கு
மிக
முற்பட்ட
காலத்திலிருந்தே
சிவநெறி
வளர்ந்து
வருகின்றது
என்பது
மேலே
காட்டிய
வரலாற்றிலிருந்து
தெரிகிறது
.
தமிழ்
மொழியிற்
பூசை
செய்தலே
வேத
காலத்துக்கு
முற்பட்ட
சிவநெறி
மரபுமாகும்
.
மக்கள்
மொழியாகிய
தமிழில்
பூசை
நடைபெறுங்காலம்
மிகத்தொலைவில்
இல்லை
.
தமிழ்
நாட்டில்
அரசே
முன்
நின்று
நடத்தும்
இப்பாரிய
தொண்டு
அளப்பரியது
.
இலங்கையில்
நடைபெற்ற
உலக
இந்து
மகாநாட்டிலும்
இக்கருத்து
வற்புறுத்தப்பட்டது
.
இலங்கையிலுள்ள
ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
சைவக்
கோயில்களில்
சிவாசாரியார்கள்
தமிழிலேயே
பூசை
செய்கின்றனர்
.
சில
பெரிய
கோயில்களில்
மட்டுமே
வைதீக
மரபு
இன்னமும்
காணப்படுகின்றது
.
மரணக்
கிரியைகளில்
மறையோர்
பங்குபற்ற
மாட்டார்கள்
.
தூரத்தில்
நின்று
கல்லெறிவதே
அவர்கள்
வழக்கம்
போலும்
.
பெரியார்
இராமசாமி
நாயக்கரும்
அறிஞர்
அண்ணாவும்
கட்டியெழுப்பிய
பகுத்தறிவு
படைத்த
தமிழ்ச்சமுதாயம்
பண்டைய
ஆரிய
வேதங்களிலும்
ஆகமங்களிலும்
கூறப்பட்ட
காலத்தோடொவ்வாச்
சமுதாய
வழக்க
விதிகளை
ஆதாரங்
காட்டித்தமது
நிலையைப்
பாதுகாக்க
முயலும்
மக்களை
உயிரில்லாப்
பாவைகளாக்கிவிடும்
என
நம்புகிறோம்
.
இடைக்காலத்தில்
சைவ
நெறியிற்
புகுத்தப்பட்ட
வைதீக
மரபுகளைக்
களைந்தெறிவதே
ஒன்றே
குலம்
ஒருவனே
தேவன்
என
வழிபடும்
சிவநெறியாளர்களின்
முழுமுதற்
கடவுளாகிய
சிவனும்
விரும்புவர்
.
சிவன்
தமிழ்
மொழியை
நேசிப்பவர்
.
தமிழாற்
சொன்மாலைகள்
தொடுத்தும்
பாடி
வழிபட்ட
நாயன்மார்களின்
வேண்டுகோள்களைச்
செவிமடுத்த
இறைவன்
எத்தனை
அற்புதச்
செயல்களைச்
செய்து
காட்டியுள்ளார்
.
தெய்வ
மொழியாகிய
வடமொழியில்
பூசை
செய்தாற்றான்
இறைவன்
செவி
சாய்த்துக்
கேட்பார்
என்ற
போலிவாதம்
இடைக்காலத்தில்
ஏற்பட்டது
.
இத்தனை
சர்ச்சைக்கும்
காரணம்
சைவத்
திருமுறைகள்
என்று
மிலா
அளவுக்கு
இன்று
சைவ
மக்களின்
அன்றாட
வாழ்க்கை
நெறிகளுடன்
பின்னிப்
பிணைந்து
நிற்பதே
.
சைவ
மக்களுள்
தீண்டாதவர்
என
மேல்
வருணத்தாரால்
தள்ளி
விடப்பட்ட
மக்கள்
இன்று
இலவசக்
கல்வியின்
பயனாய்
பாடசாலைகளில்
தாம்
கட்டாயமாகப்
படிக்கும்
சைவநெறி
”
மூலம்
சிவனைக்
கானுகின்றனர்
.
ஆகம்
முறைப்படி
கட்டப்பட்ட
கோயில்களில்
கடவுளாற்
படைக்கப்பட்ட
குழந்தைகள்
செல்லக்
கூடாது
என
விதிக்கப்பட்ட
சட்டங்கள்
உதறித்
தள்ளியெறியப்பட்டன
.
இந்து
சமயம்
”
என்ற
போர்வையில்
ஊடுருவலானவைதீகக்
கருத்துக்கள்
இலங்கை
முழுவதிலும்
வழக்கிலிருக்கும்
“
சைவ
நெறி
”
யினால்
களைந்
தெறியப்பட்டு
விட்டன
.
எனவே
இந்த
நூற்றாண்டு
முடிவதற்கிடையில்
சிவநெறி
மரபுகளும்
சித்தாந்தக்
கோட்பாடுகளும்
இலங்கை
வாழ்
இருபது
இலட்சம்
சைவ
மக்கள்
மத்தியில்
வேரூன்றிவிடும்
.
அவர்கள்
ஒவ்வொருவரும்
சமயத்
தலைமை
பெறும்
மக்களாகும்
தகைமை
பெறுவர்
.
எனவே
மனிதனின்
ஆன்மீகப்
பண்பாட்டுக்குக்
கோயிற்
கிரியைகளிலும்
மிக
முக்கியத்துவம்
வாய்ந்த
மரணக்
கிரியைகளில்
திருமுறைகள்
ஓதப்பட்டு
மனிதனை
நல்வழியில்
நடத்தும்
.
இதனைத்
தடுக்க
எவராலும்
முடியாது
.
நாமெல்லோரும்
கூலிக்காகவே
உழைக்கிறோம்
.
அரசாங்க
சேவையிலுள்ளவர்கள்
கூலி
பெறாவிட்டால்
எவருமே
வேலைக்குச்
செல்ல
மாட்டார்கள்
.
திருமுறைகளில்
நாட்டிலே
கோயில்களில்
ஓதுவாரைக்
கொண்டு
ஓதுவித்த
சோழப்
பெருமன்னர்
அவர்களின்
வாழ்க்கைக்குக்
கூலியாக
மானிய
நிலங்களை
வழங்கினர்
.
கோயிற்
பூசகர்
கூடக்
கோயில்களில்
கூலிக்காகவே
மந்திரம்
ஓதுகின்றனர்
.
பலன்
கருதாது
சேவை
செய்யும்
மக்கள்
மிகச்
சிலரே
.
மந்திரங்கள்
மிகச்
சிலரே
நிலைமை
இப்படியிருக்க
சைவத்
திருவாளர்
திரு
.
வே
.
சின்னத்துரை
அவர்கள்
மரண
வீட்டில்
கூலிக்காகப்
பாடுகின்றனர்
எனக்
கேலி
செய்வது
கண்டிக்கப்பட
வேண்டியது
.
மரண
வீட்டில்
மனங்கலங்கிய
நிலையில்
இருக்கும்
சைவ
மக்களின்
மனதைச்
சாந்தப்படுத்தவே
உருக்கமான
முறையில்
வல்லாராற்
பாடப்படுகின்றன
.
பாடல்களை
ஓதும்
ஓதுவார்கள்
சிறந்த
மெய்யடியார்களே
.
மண்ணுலகத்தினிற்
பிறந்த
எம்
எல்லோரதும்
வாழ்க்கை
புனிதமானது
இப்பிறவி
தப்பினால்
எப்பிறவி
வாய்க்குமோ
என்பது
எமக்குத்
தெரியாது
.
காலையெழுந்தவுடன்
முகங்கழுவித்
திருநீற்றை
நெற்றியில்
சாத்திச்
சிவ
சிவ
என்று
ஓதும்
பத்திலட்சம்
சைவத்
தமிழ்
மக்கள்
இன்று
மலையகத்தில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
.
மரணமடைந்தவரை
நீராற்
குளிப்பாட்டித்
திருநீறு
சாத்திச்
சிவ
சிவ
என்றோதிப்
பெட்டியில்
அடைத்துக்
குளியிற்
புதைத்துவிடும்
எமது
சைவ
மக்கள்
வேதங்களை
அறியார்
ஆகமங்களை
அறியார்
சில
திருமுறைப்
பாடல்களை
மட்டும்
அறிந்த
ஓதுவர்
இது
ஒரு
புனிதமான
மரணக்
கிரியையல்லவா
?
முன்பிருந்ததோர்
காரணத்தாலே
மூடரே
பொய்யை
மெய்யெனலாகுமோ
”
என்ற
பாரதியாரின்
நூற்றாண்டில்
வாழும்
நாம்
இனிமேலாவது
பொருத்தமற்றவிடத்து
நூலாதாரங்களைக்
காட்டி
எம்மையே
ஏமாற்றிக்கொள்ள
முற்படாதிருப்போமாக
.
திருச்சிற்றம்பலம்
மறைந்த
பேராசிரியர்.ஆ.சதாசிவம்
நவம்பர்
1982
வீரசேகரி
வாரவெளியீடு
07.11.1982
இலும்
வெளியிடப்பட்டது