தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

தெ 10 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி 2000 வருடங்களுக்கு முற்பட்ட நாகரின் தொல்பொருட். சின்னங்களைத் தாங்கி நிற்கும் அம்பாறை காரைதீவுச் சிவன் கோயில் O RECHLAD Coகல் அம்பாறை ஈழத்தின் வரலாற்றிலே பண்டைய காலம் தொட்டு தமிழர் வாழ்ந்து வந்த தனித்துவமான நிலப்பரப்பில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு, திருக்கோயில், சங்கமன் கண்டி, உகந்தை ஆகிய இடங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்விடங்களில் அமைந்துள்ள பிள்ளையார், முருகன், சிவன், கண்ணகி கோயில்கள் மிகப் புராதனமானவை. இக்கோயில்கள் வரலாற்று ஏடுகள், பட்டயங்கள், சாசனங்கள், போன்ற தொல்லியல் சான்றாதாரங்கள் மூலமாக ஆதாரப் படுத்தப்பட்டவைகளாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஈழத்தில் பழமைக் குடிகளாக வாழ்ந்த நாகர்களின் இருப்பிடத்திற்குரிய தேசமாகவும், சோழ மன்னர்களின், குறுமன்னர்களின் இராசதானியாகவும், இராமாணய காவியத்தோடு தொடர்புடைய மாவட்டமாகவும் அம்பாறை விளங்கியுள்ளதை தெரிந்து கொள்ள முடிகின்றது. திருத்தலவூரின் வரலாறு பண்டைய காலந்தொட்டு வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வடமேற்கில் புத்தளத்திலும், கிழக்கில் அம்பாறையிலும் காரைதீவு எனும் ஊர் அமைந்துள்ளது. அவை தமிழர்களின் தாயகமாகவே திகழ்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் காரைதீவாகும். முத்தமிழ் வித்தகர் என்று பார் போற்றும் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணும், சுவாமி சித்தானைக்குட்டிச் சித்தர் வாழ்ந்து சமாதியடைந்த புண்ணியப் பேறும் வாய்க்கப் பெற்ற சிறப்பும், இக் கிராமத்திற்கு உண்டு. மட்டக்களப்பு மான்மிய நூலில் ருப்பதாகவும், அதுவும் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி வரிவடிவங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். காரைதீவு கண்ணகி அம்மனின் கோயில்மரமான வேப்பமரத்தடியில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு செங்கல் காணப்படுகின்றது. இது 10 அங்குல உயரமும், 8 அங்குல அகலமும் கொண்டது. ஒரு வீரன் முகத்தைச் சரித்துக் கொண்டு, ஒரு கையில் வில்லையும், மறுகையில் அம்பையும் பிடித்து நின்றவாறு, இவ் நடுகல் சிற்பம் காணப்படுகின்றது. இன்றும் அதை இவ்வூர் மக்கள் பயபத்தியுடன் வழிபட்டும் வருகின்றனர். இவ் நடுகல், இவ்வூரில் தமிழர் சமுதாயம் பண்டைய காலம் தொட்டு நிலவி வந்திருப்பதற்கு முக்கிய ஆதாரம் என்று எவரும் முன்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குரிய ஆய்வுகளும் இவ்விடத்தில் நடைபெறவில்லை. இருப்பினும், இதை முதன் முதலில் 2014 இல் கண்டுபிடித்து 'தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்து சமய வரலாறு' என்ற நூ லினுடாகக் குறிப்பிட்டவர், வரலாற்று ஆய்வாளர் என். கே. ஏஸ் திருச்செல்வம் ஆவார். இவரைத் தொடர்ந்து, இந்நடுகல் பற்றிய ஆய்வினைச் சரிவரச் செய்து 'இலங்கைத் தமிழர் வரலாறு' என்ற நூலில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். பண்டைய சிவன் கோயில் எச்சங்கள் காரைதீவு கண்ணகி அம்மன் கோயிலில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன “இந்த வடிவம் பழந்தமிழகத்து நடுகற்கள், வீரக்கற்கள் என்பனவற்றை நினைவுறுத்துகின்றது. பழந்தமிழ் நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் அவற்றைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆயினும் அங்கு நடைபெற்ற அகழ்வாராய்வுகளில் காரைதீவிற் கிடைப்பதைப் போன்ற காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் 'காளிதேசம்' என்றும் காரைதீவை வழங்கி வந்த செய்தியும் போர்வீரனின் வடிவம் இதுவரை காணப்படவில்லை. உள்ளது. கண்ணகி வழக்குரை எனும் ஏட்டில் “பட்டிநகர் தமிழகத்து முதுமைத் தொல்வியலாளர்களில் ஒருவரான தம்பிலுவில், காரைநகர் வீரமுனை” என்ற பாடல் வரும் கலாநிதி சு. இராசகோபால் காரைதீவிலுள்ள செங்கல்லிற் ஊர் சுற்றுக் காவியத்தில், காரைதீவு 'காரைநகர்' என்று காணப்படும் வடிவம் போர்வீரன் ஒருவனின் வடிவம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த முன்னோர், இவ்வூரில் கருத்துக்கு முத்திரையிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது" சிறு நீர்த் தேக்கங்களும் அதனையொட்டி வளர்ந்த காரை மரங்கள் அதிகமாக இருந்தமையாலும், நீர் சூழ்ந்த இவ்வூர் தீவு போன்று இருந்தமையாலும் காரைதீவு என்று வழங்கப்பட்டு வந்தது என்று கூறுகின்றனர். "இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்" என்னும் நூலில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள், காரைதீவில் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்து தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள், தற்போது பிரதான வீதியில் அமைந்துள்ள கிழக்கிலங்கையில் புகழ் பூத்த கண்ணகி அம்மன் கோயிலில் தரிசிக்கக் கிடைத்ததாகக் குறிப்பிடுகின்றார். பெரும்பாலும் இது வரை எங்கும் காணப்படாத மிகவும் அரிய புராதன சின்னங்கள் என்றும், அவை நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும், அவை எல்லாவற்றிலும் தமிழ்ப்பெயர்களே பொறிக்கப்பட்டி எனவே காரைதீவில் கிடைத்துள்ள இச்சிற்பக்கல் மிகவும் புராதனமானதும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். மற்றும் கோயில் வளவின் தென்கிழக்கு மூலையில் கவனிப்பின்றி கிடக்கும் கல் ஒன்றிலே இருபக்கங்களும் யானைகள் நின்று கொண்டு, மணிநாகனை நீரால் நீராட்டும் காட்சி அழகான கோலத்தில் தெளிவான சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கிடக்கும் வட்டவடிமான, சதுரவடிவமான கற்களிலும் பெயர்ச் சொற்கள் எழுதப்பட்டுள்ளது. மற்றும் கோயில் உள்வீதி மண்டபத்தின் அருகிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்தூண் காணப்படுகின்றது. இதே போல் கோயிலின் வேறொரு இடத்தில் மூன்று கல் உரல்களும் காணப்படுகின்றது. இக்கோயிலிற்குத் தேவையான அரிசி இவற்றிலே இன்றளவும் குற்றப்படும் வகையில் பாவனையில் உள்ளன. இவ் உரலில் 'மணிநாகன் பள்ளி' என்று எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட தொல்பொருட்களை ஆராய்ந்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள். இவ்விடம் நாகரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்றும் அவர்கள் உருவாக்கிய வழிபாட்டுக்கு, கோயிலின் தேவைக்களுக்காக இவற்றை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும், இது நாகரின் தொழில்நுட்பத் திறனையும் காட்டி நிற்கின்றது என்றும் பின்வருமாறு தனது முன்னைய நூலில் குறிப்பிட்டுள்ளார். நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 - சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாணி, பிரான்சு உரல்களும் மிகவும் அகலமான மாவரைக்கும் கற்களும் காணப்படுகின்றன. அவற்றையும் நாகரே உருவாக்கினார்கள். ஆயினும் காரைதீவிலுள்ள உரல்களின் செதுக்குத்திறன் அவற்றில் உள்ளதைக் காட்டிலும் மேலானது. இன்று வரை புழக்கத்திலுள்ள மரஉரல்களின் வடிவமைப்பு நாகரால் உருவாக்கப்பட்ட முறையில் அமைந்ததாகும். மேலும் காரைதீவில் இன்று வரை புழக்கத்திலுள்ள கல் உரல்கள் அங்குள்ள சமுதாயம் 2000 வருடங்களை உள்ளடக்கிய இடையறாத தொடர்ச்சியினைக் கொண்டுள்ளமையின் சின்னங்களாகும்.” காலத்து திருக்கோயில் வரலாறு நாகரின் வழிபாட்டு எச்சத்தோடும் வரலாற்றோடும் உற்பத்தியான சிவன் கோயிலாகவே இக் கோயிலைப் பார்க்க முடிகின்றது. வரலாற்று அறிஞர்களின் ஆய்வின் கருத்துப்படி, நாகரின் தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, இப்பிரதேசத்தில் நாகரின் வழிபாட்டுத் தலம் ஒன்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றார்கள். அதற்கேற்றால் போல், இவ்வூர் சிவனடியார் ஒருவரின் கனவில் ஓர் சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோயில் உருவாக்கம் பற்றி இப்பிரதேசவாசிகளிடம் ஒரு செவிவழி மரபுக் கதை நீண்ட காலம் தொட்டு நிலவி வருகின்றது. அக்கதையின் படி, வெட்டுவாய்க்கால் ஆற்றிற்கு அருகாமையில் வாழ்ந்த சிவபத்தரான முருகேசு என்பவருக்கு கனவில் ஒரு சாது தோன்றி, ஆற்றின் கரையோரமாக சிவலிங்கம் ஒன்று புதைந்திருப்பதாகவும், அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் நோக்குடன் வழிபாடு செய்யும்படி கூறியதனால், மறுநாள் முருகேசு அவர்களும் வில்வ மரத்தடியின் கீழ் புதையுண்டிருந்த இலிங்கத்தைக் கண்டு அதிசயித்துப் போற்றி வணங்கினார். இதுவே பின்னாளில் சிவன் கோயிலாக உருவாகி, 2000 ஆம் வருடம் (27.03.2000) குடமுழுக்கு விழாவும் கண்டது. இங்குள்ள மூர்த்தி சிவலிங்கமாகவும், கோயில்மரமாக வில்வமரமும், தீர்த்தமாக இயற்கையான ஆறும் அமைந்து, தலச்சிறப்பும் பெற்றுள்ளது. இக்கோயிலில் மாசிமகத்தைச் தீர்த்த திருவிழாவாகக் கொண்டு பத்து நாட்கள் பெருந்திருவிழாக் கிரியைகளும், பூசைகளும் நடைபெறும். மற்றும் சிவனிரவு, திருவாதிரை, திருவாசகம் முற்றோதல், கழுவாய் வழிபாடு (பிரதோஷம்) ஆகியனவும் வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இத்திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு, செழுமையான கோயிலாக உருமாறி வருகின்றது. "நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் குறி யொன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை யெனக்கு தேவைக்கேற்ப அவற்றைச் செதுக்கி உரல்களாக உருவாக்கி அறியும் வண்ணம் அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே" பருஞ் "அவற்றின் வேலைப்பாடு நுட்பமானது. பெருங்கற் பாளங்களை வலிய இரும்புக் கருவிகளினால் வெட்டி, யமை நாகரின் தொழில் நுட்பத்திறனுக்குத் தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். வேறு சில இடங்களில் கல்லிலமைந்த (திருவாசகம் அச்சோப்பதிகம்) திருச்சிற்றம்பலம்.
தெ 10 தென்னாடு சிவபூமியில் சிவனைத் தேடி 2000 வருடங்களுக்கு முற்பட்ட நாகரின் தொல்பொருட் . சின்னங்களைத் தாங்கி நிற்கும் அம்பாறை காரைதீவுச் சிவன் கோயில் O RECHLAD Co கல் அம்பாறை ஈழத்தின் வரலாற்றிலே பண்டைய காலம் தொட்டு தமிழர் வாழ்ந்து வந்த தனித்துவமான நிலப்பரப்பில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும் . இம்மாவட்டத்தில் வீரமுனை சம்மாந்துறை காரைதீவு திருக்கோயில் சங்கமன் கண்டி உகந்தை ஆகிய இடங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை . இவ்விடங்களில் அமைந்துள்ள பிள்ளையார் முருகன் சிவன் கண்ணகி கோயில்கள் மிகப் புராதனமானவை . இக்கோயில்கள் வரலாற்று ஏடுகள் பட்டயங்கள் சாசனங்கள் போன்ற தொல்லியல் சான்றாதாரங்கள் மூலமாக ஆதாரப் படுத்தப்பட்டவைகளாகும் . வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி ஈழத்தில் பழமைக் குடிகளாக வாழ்ந்த நாகர்களின் இருப்பிடத்திற்குரிய தேசமாகவும் சோழ மன்னர்களின் குறுமன்னர்களின் இராசதானியாகவும் இராமாணய காவியத்தோடு தொடர்புடைய மாவட்டமாகவும் அம்பாறை விளங்கியுள்ளதை தெரிந்து கொள்ள முடிகின்றது . திருத்தலவூரின் வரலாறு பண்டைய காலந்தொட்டு வடக்கில் யாழ்ப்பாணத்திலும் வடமேற்கில் புத்தளத்திலும் கிழக்கில் அம்பாறையிலும் காரைதீவு எனும் ஊர் அமைந்துள்ளது . அவை தமிழர்களின் தாயகமாகவே திகழ்ந்துள்ளது . அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் காரைதீவாகும் . முத்தமிழ் வித்தகர் என்று பார் போற்றும் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணும் சுவாமி சித்தானைக்குட்டிச் சித்தர் வாழ்ந்து சமாதியடைந்த புண்ணியப் பேறும் வாய்க்கப் பெற்ற சிறப்பும் இக் கிராமத்திற்கு உண்டு . மட்டக்களப்பு மான்மிய நூலில் ருப்பதாகவும் அதுவும் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி வரிவடிவங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார் . காரைதீவு கண்ணகி அம்மனின் கோயில்மரமான வேப்பமரத்தடியில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு செங்கல் காணப்படுகின்றது . இது 10 அங்குல உயரமும் 8 அங்குல அகலமும் கொண்டது . ஒரு வீரன் முகத்தைச் சரித்துக் கொண்டு ஒரு கையில் வில்லையும் மறுகையில் அம்பையும் பிடித்து நின்றவாறு இவ் நடுகல் சிற்பம் காணப்படுகின்றது . இன்றும் அதை இவ்வூர் மக்கள் பயபத்தியுடன் வழிபட்டும் வருகின்றனர் . இவ் நடுகல் இவ்வூரில் தமிழர் சமுதாயம் பண்டைய காலம் தொட்டு நிலவி வந்திருப்பதற்கு முக்கிய ஆதாரம் என்று எவரும் முன்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை . அதற்குரிய ஆய்வுகளும் இவ்விடத்தில் நடைபெறவில்லை . இருப்பினும் இதை முதன் முதலில் 2014 இல் கண்டுபிடித்து ' தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்து சமய வரலாறு ' என்ற நூ லினுடாகக் குறிப்பிட்டவர் வரலாற்று ஆய்வாளர் என் . கே . ஏஸ் திருச்செல்வம் ஆவார் . இவரைத் தொடர்ந்து இந்நடுகல் பற்றிய ஆய்வினைச் சரிவரச் செய்து ' இலங்கைத் தமிழர் வரலாறு ' என்ற நூலில் பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார் . பண்டைய சிவன் கோயில் எச்சங்கள் காரைதீவு கண்ணகி அம்மன் கோயிலில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன இந்த வடிவம் பழந்தமிழகத்து நடுகற்கள் வீரக்கற்கள் என்பனவற்றை நினைவுறுத்துகின்றது . பழந்தமிழ் நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்பனவற்றில் அவற்றைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன . ஆயினும் அங்கு நடைபெற்ற அகழ்வாராய்வுகளில் காரைதீவிற் கிடைப்பதைப் போன்ற காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் ' காளிதேசம் ' என்றும் காரைதீவை வழங்கி வந்த செய்தியும் போர்வீரனின் வடிவம் இதுவரை காணப்படவில்லை . உள்ளது . கண்ணகி வழக்குரை எனும் ஏட்டில் பட்டிநகர் தமிழகத்து முதுமைத் தொல்வியலாளர்களில் ஒருவரான தம்பிலுவில் காரைநகர் வீரமுனை என்ற பாடல் வரும் கலாநிதி சு . இராசகோபால் காரைதீவிலுள்ள செங்கல்லிற் ஊர் சுற்றுக் காவியத்தில் காரைதீவு ' காரைநகர் ' என்று காணப்படும் வடிவம் போர்வீரன் ஒருவனின் வடிவம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது . இங்கு வாழ்ந்த முன்னோர் இவ்வூரில் கருத்துக்கு முத்திரையிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது சிறு நீர்த் தேக்கங்களும் அதனையொட்டி வளர்ந்த காரை மரங்கள் அதிகமாக இருந்தமையாலும் நீர் சூழ்ந்த இவ்வூர் தீவு போன்று இருந்தமையாலும் காரைதீவு என்று வழங்கப்பட்டு வந்தது என்று கூறுகின்றனர் . இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் என்னும் நூலில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் காரைதீவில் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்து தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் தற்போது பிரதான வீதியில் அமைந்துள்ள கிழக்கிலங்கையில் புகழ் பூத்த கண்ணகி அம்மன் கோயிலில் தரிசிக்கக் கிடைத்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரும்பாலும் இது வரை எங்கும் காணப்படாத மிகவும் அரிய புராதன சின்னங்கள் என்றும் அவை நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும் அவை எல்லாவற்றிலும் தமிழ்ப்பெயர்களே பொறிக்கப்பட்டி எனவே காரைதீவில் கிடைத்துள்ள இச்சிற்பக்கல் மிகவும் புராதனமானதும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும் . மற்றும் கோயில் வளவின் தென்கிழக்கு மூலையில் கவனிப்பின்றி கிடக்கும் கல் ஒன்றிலே இருபக்கங்களும் யானைகள் நின்று கொண்டு மணிநாகனை நீரால் நீராட்டும் காட்சி அழகான கோலத்தில் தெளிவான சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது . அதன் அருகில் கிடக்கும் வட்டவடிமான சதுரவடிவமான கற்களிலும் பெயர்ச் சொற்கள் எழுதப்பட்டுள்ளது . மற்றும் கோயில் உள்வீதி மண்டபத்தின் அருகிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்தூண் காணப்படுகின்றது . இதே போல் கோயிலின் வேறொரு இடத்தில் மூன்று கல் உரல்களும் காணப்படுகின்றது . இக்கோயிலிற்குத் தேவையான அரிசி இவற்றிலே இன்றளவும் குற்றப்படும் வகையில் பாவனையில் உள்ளன . இவ் உரலில் ' மணிநாகன் பள்ளி ' என்று எழுதப்பட்டுள்ளது . மேற்குறிப்பிடப்பட்ட தொல்பொருட்களை ஆராய்ந்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் . இவ்விடம் நாகரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்றும் அவர்கள் உருவாக்கிய வழிபாட்டுக்கு கோயிலின் தேவைக்களுக்காக இவற்றை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் இது நாகரின் தொழில்நுட்பத் திறனையும் காட்டி நிற்கின்றது என்றும் பின்வருமாறு தனது முன்னைய நூலில் குறிப்பிட்டுள்ளார் . நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2021 - சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாணி பிரான்சு உரல்களும் மிகவும் அகலமான மாவரைக்கும் கற்களும் காணப்படுகின்றன . அவற்றையும் நாகரே உருவாக்கினார்கள் . ஆயினும் காரைதீவிலுள்ள உரல்களின் செதுக்குத்திறன் அவற்றில் உள்ளதைக் காட்டிலும் மேலானது . இன்று வரை புழக்கத்திலுள்ள மரஉரல்களின் வடிவமைப்பு நாகரால் உருவாக்கப்பட்ட முறையில் அமைந்ததாகும் . மேலும் காரைதீவில் இன்று வரை புழக்கத்திலுள்ள கல் உரல்கள் அங்குள்ள சமுதாயம் 2000 வருடங்களை உள்ளடக்கிய இடையறாத தொடர்ச்சியினைக் கொண்டுள்ளமையின் சின்னங்களாகும் . காலத்து திருக்கோயில் வரலாறு நாகரின் வழிபாட்டு எச்சத்தோடும் வரலாற்றோடும் உற்பத்தியான சிவன் கோயிலாகவே இக் கோயிலைப் பார்க்க முடிகின்றது . வரலாற்று அறிஞர்களின் ஆய்வின் கருத்துப்படி நாகரின் தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இப்பிரதேசத்தில் நாகரின் வழிபாட்டுத் தலம் ஒன்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றார்கள் . அதற்கேற்றால் போல் இவ்வூர் சிவனடியார் ஒருவரின் கனவில் ஓர் சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . இக்கோயில் உருவாக்கம் பற்றி இப்பிரதேசவாசிகளிடம் ஒரு செவிவழி மரபுக் கதை நீண்ட காலம் தொட்டு நிலவி வருகின்றது . அக்கதையின் படி வெட்டுவாய்க்கால் ஆற்றிற்கு அருகாமையில் வாழ்ந்த சிவபத்தரான முருகேசு என்பவருக்கு கனவில் ஒரு சாது தோன்றி ஆற்றின் கரையோரமாக சிவலிங்கம் ஒன்று புதைந்திருப்பதாகவும் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் நோக்குடன் வழிபாடு செய்யும்படி கூறியதனால் மறுநாள் முருகேசு அவர்களும் வில்வ மரத்தடியின் கீழ் புதையுண்டிருந்த இலிங்கத்தைக் கண்டு அதிசயித்துப் போற்றி வணங்கினார் . இதுவே பின்னாளில் சிவன் கோயிலாக உருவாகி 2000 ஆம் வருடம் ( 27.03.2000 ) குடமுழுக்கு விழாவும் கண்டது . இங்குள்ள மூர்த்தி சிவலிங்கமாகவும் கோயில்மரமாக வில்வமரமும் தீர்த்தமாக இயற்கையான ஆறும் அமைந்து தலச்சிறப்பும் பெற்றுள்ளது . இக்கோயிலில் மாசிமகத்தைச் தீர்த்த திருவிழாவாகக் கொண்டு பத்து நாட்கள் பெருந்திருவிழாக் கிரியைகளும் பூசைகளும் நடைபெறும் . மற்றும் சிவனிரவு திருவாதிரை திருவாசகம் முற்றோதல் கழுவாய் வழிபாடு ( பிரதோஷம் ) ஆகியனவும் வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . தற்போது இத்திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு செழுமையான கோயிலாக உருமாறி வருகின்றது . நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் குறி யொன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை யெனக்கு தேவைக்கேற்ப அவற்றைச் செதுக்கி உரல்களாக உருவாக்கி அறியும் வண்ணம் அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே பருஞ் அவற்றின் வேலைப்பாடு நுட்பமானது . பெருங்கற் பாளங்களை வலிய இரும்புக் கருவிகளினால் வெட்டி யமை நாகரின் தொழில் நுட்பத்திறனுக்குத் தகுந்த எடுத்துக் காட்டுகளாகும் . வேறு சில இடங்களில் கல்லிலமைந்த ( திருவாசகம் அச்சோப்பதிகம் ) திருச்சிற்றம்பலம் .