தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14
தெ 04
தென்னாடு
தென்னாடு வள்ளிகாந்தன் நிகரிலரசு ஐயாவிற்கு
சிவத்திரு உமையொருசிவம்
மசந்தமிழாசியம்க்குரியாழ்ப்பாளம். www.lhennadu.org
செந்தமிழில் ஆசிரியத் திருமுழுக்கு
சிவத்திரு. சிவ செந்தமிழாதன்,
தலைவர் - சைவ மாணவர் சபை,
(பதிவு-HA/4/JA/343)
0715588737, aathan@thennadu.org
தண்டியடிகள் வழி நடப்போம்!
ஐப்பசி எம்மை அரவணைக்கின்றது. மாரி தொடங்கி மண்ணில் மழை
எங்கும் பொழிகின்றது. ஊரெல்லாம் வெள்ளம் ஓடி வழிய இடமின்றி முட்டி
மோதி நிற்கிறது. வானம் தரும் அமுதத் துளிகளை முறைப்படி சேர்த்து
வைக்க, தக்க வழியின்றி பொறியியலாளர்கள் என்று தம்மை சொல்லிக்
கொள்பவர்களும், பொறுப்பான அதிகாரத்தில் உள்ளோரும் திணறி
நிற்கின்றனர். மழையின்றிப் போனால் பயிர்கள் வாடும், உயிர்கள் சாகும்!
அதே மழை வரம்பின்றி பொழிந்தாலும் இதே விளைவைத்தான் நாம்
அனுபவிக்க நேரும். முளைவிட்டெழும் நெல் வயல் எல்லாம் தலைமுட்ட
வெள்ளம் தேங்கி அழுகிப்போகும். பிற பயிர்களும் பயன் தரமுன்
பழுது படும். உயர்ந்த நீர் மேலாண்மை இல்லாது போனால், வானம்
வழங்கினும் பசும் புல் தலைகாண்பது அரிதேயாகும்.
குட்டை நிறைந்து, குளம் நிறைந்து, ஊரணி முட்டி, ஏந்தல் நிரம்பி,
தாங்கல் அடைந்து, கரணை, கண்மாய் வழியே ஏரி பெருகி நீர் ஆற்றை
அடைய வேண்டும் என்பதே பழந்தமிழரின் நீர் நிறைப்பு ஒழுங்காகும்.
ஈழத்தவர்களை பொறுத்தவரையில் எல்லா நீர்த்தேக்கங்களையும்
குளம் என்றே அழைத்து பழக்கப்பட்டவர்களானோம். எனவே நீர் ஏந்தும்
அளவை வைத்து நீர் நிலைகளை மேற்கண்டவாறு வகைப்படுத்தும் திறம்
அறிந்திலோம். எனினும் நம் பழந்தமிழ் இலக்கிய செய்திகளின் வழியே
அவற்றை நம்மில் சிலர் தெரிந்து வைத்துள்ளோம். 'அறையும் பொறையும்
மணந்த தாய எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரை தென்நீர்ச்
சிறுகுளம்..' என்று கபிலர் சங்கப்பாடலில் எட்டாம் பிறையைப்போல ஏரி
அமைய வேண்டும் என்று கருத்துப் பகிர்ந்திருக்கிறார். ஒரு தமிழ் கற்ற
புலவர் கூட நீர் மேலாண்மை பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு
பழந்தமிழர் நீர் மேலாண்மை, சிறந்தும் பரந்தும் இருந்தது! ஆனால்
இன்றைய நிலைதான் என்ன?
குளங்களை நிரவி குடியிருப்புக்களையும், வணிகத் தொகுதிகளையும்
அமைத்தோம். நீரோடும் நிலங்களுக்கு குறுக்காக சீமந்து சுவர்களை
எழுப்பினோம். விரும்பியபடி வீதிகளை உயர்த்தி அமைத்தோம்! குளங்களின்
பெயர்களாலேயே குறிப்பிடப்படும் ஊர்களில், குறித்த குளத்தையே காணாமல்
போகச் செய்தோம்! பிளாத்திக்கழிவுகளாலும், சாக்கடை நீராலும் குளங்களை
நிறைத்துக் கண்ணிருந்தும் குருடர்களானோம். தமிழ் எங்களுக்கு தந்ததையும்
இழந்தோம்! சைவம் எங்களுக்கு சொன்னதையும் மறந்தோம்!
ஒரு நீர் தேக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை சைவத்தமிழ்
தொன்குடிகள் அறிந்திருந்தார்கள். அதனாலே தான் திருக்கோயில்கள்
தோறும் தெப்பக் குளங்களையும் கேணிகளையும் அமைத்து நீரை
சேமிக்கும் அவசியத்தை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தினார்கள்.
அதிலும் ஒரு படி உயர்வாக, திருவாருரிலே பிறவியிலே பார்வை இழந்து,
குளம் எப்படி இருக்கும், நீர் எப்படி இருக்கும் என்று கூட தெரியாத
திருத்தண்டியடிகள் குளத்தைப் புனரமைத்து இறைவனின் பேரன்பைப்
பெற்று அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆனார். சமணர்கள்
தமிழகத்தில் தலைதூக்கியிருந்த காலமது! சிவ திருத்தலங்கள் கூட சமண
பள்ளிகளாக மாறிப்போய் இருந்தன. இதனால் திருவாரூர் கோயில் குளம்
தூர்ந்துபோய்க் கிடந்தது. இதை மற்றவர்கள் வாயிலாக அறிந்த தண்டியடிகள்
குளத்தின் நடுவிலும் கரையிலும் கோல்களை நட்டு அவற்றினை ஒரு
கயிற்றால் இணைத்தார். பார்வையில்லாது போனாலும் தானே குளத்தை
வெட்டி அக்கயிறினை தன் இடையால் வருடியபடியே கரையில் சென்று
தான் வெட்டிய மண்ணைக் கொட்டிப் பணி செய்தார்! குளம் நிறைந்தால்
தான் நிலத்தடி நீர் மாசு படாது நன்னீராய் பெருகும் என்று, தன்
ஞானக்கண்ணால் உணர்ந்து, செய்த அந்த மக்கள் பணியே மகேசன்
பணியானது! அதனால் சமணர்களை எதிர்த்து இறைவன் அருளால்
பார்வையும் பெற்றார். தம் பார்வையிழந்த சமணரோ அவ்வூரைவிட்டு
அகன்றும் போயினர்!
கண்ணிருந்தும் நாம் செய்யத்துணியாத பணியை கண்களில்
ஒளியிழந்தும் தண்டியடிகள் செய்த மாண்பு அவரை நாம் எல்லோரும்
வணங்கும் நிலைக்கு உயர்த்தியது. திருவைந்தெழுத்தை ஓதியே
திருக்குளப்பணி செய்த தண்டியடிகள் தான் எம் எல்லோருக்கும் வழிகாட்டி,
இறைவனை வணங்குவது மட்டுமல்ல, இயற்கை தரும் மழை நீரை
உரியவாறு மேலாண்மை செய்து சேமிப்பதும் சிறந்த வழிபாடு என்றே
உணர்த்தி, முத்தியின்பம் பெற்ற தண்டியடிகளின் வாழ்வு எமக்கு பெரும்பாடம்!
குளங்களை விழுங்கிக் குடியிருப்புக்களை இன்று நாம் அமைக்கிறோம்.
ஆனால் குடியிருப்புக்களை அகற்றிக்கூட குளங்களை அமைத்தனர்
என்று வரலாறு சொல்கிறது.
நெகிழிப் பாவனையாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நீரோடும்
பாதைகளை அடைத்து, குளங்களின் மகத்துவத்தை அறியாமல் அவற்றை
அழித்து குடியிருப்புக்களை அமைத்து, விளைநிலங்களை எல்லாம் விலை
நிலங்களாக்கி விற்று ஏப்பமிட்ட எம்மை இன்று இயற்கை தண்டிப்பதாகவே
ஏற்றுக்கொள்வோம். இனியேனும் திருத்தொண்டின் வழியிலாவது இயற்கை
சத்தியாகிய இறைசத்தியை எமக்கு இயையும் சத்தியாக மாற்ற இளையவர்
கள் ஒன்றிணைவோம்.
"மண் வாழத் தன்னை வருத்தி தொண்டு செய்த,
தொண்டியடிகள் திருத்தாள் போற்றி"
திருச்சிற்றம்பலம்
How was
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021
போட்டிகளிற்கு சென்று பரிசில்களும் பெற்றும்
வந்தார்.
விட்ணுராசா வள்ளிகாந்தனின் தவப்புதல்வன் சிறந்த முறையில் மனனம் செய்பவராகவும், பல
சிவத்திரு உமையொருசிவம் நிகரிலரசு அவர்கள்.
சைவமும் தமிழும் சிறந்து மிளிரும்வட்டுக்கோட்டையில்
அவதரித்த, சிவத்திரு. விநாயகர் சின்னட்டி, "பத்தராய்
பணிவார்கள் அடியார்க்கும் அடியேன்" என்ற வாக்கிற்
கிணங்க தினமும் அறுபத்துமூவர் (நாயன்மார்) வழிபாடு
ஆற்றி வந்தார். இவர் வழிவந்த வேலுப்பிள்ளை முத்
தையா வேல்வழிபாடு ஆற்றியதுடன் செல்வச்சந்நிதி
சென்ற போது, அடியவர் துயர் கண்டு, மனம் கலங்கி,
மடாலயம் அமைக்க எண்ணி வேலுமுத்தையா என்னும்
பெயரில், 1932ஆம் வருடம் ஜப்பசித் திங்கள் மடாலயம்
அமைத்தார்.
அவர் சிவபதம் அடைய இவரது சகோதரராலும்
(சின்னையாசாமி), பின் மகன் முத்தையா விட்ணு
ராசாவாலும் மடாலயம் சிறப்புற பராமரிக்கப்பட்டு,
அடியவர்கள் வந்து தங்குவதுடன் “யாவர்க்குமாம்
உண்ணும் போது ஒரு கைப்பிடி” என்ற கூற்றிற்கு
அமைய மகேசுவர பூசையும் சிறப்பாக நடைபெற்று,
வரும் வேளையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண
சூழ்நிலைகளால் மடம் சிதைவடைந்த நிலையில்,
மீண்டும் விட்ணுராசாவினாலும், நல்லை குருமுதல்வ
ராலும் அடிக்கல் நாட்டப்பட்டு மடாலயமானது
அதேபாணியில் கட்டிடம் நிறைவேற்றப்பட்ட
வேளையில் விட்ணுராசா சிவபதம் அடைய, இடை
யூறுகள் காரணமாக இத்திருப்பணி தொடர்ந்து
செயற்படமுடியாத நிலையில் உள்ளது வருந்ததக்கது.
சிவத்திரு. உமையொருசிவம் நிகரிலரசு ஐயாவுக்கு
சிறுவயதிலேயே சைவத்தில் ஈர்ப்பை உருவாக்கியது,
அவரது தந்தைவழி என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
இந்நிலையில் விட்ணுராசாவின் மகனான
வள்ளிகாந்தன் அவர்களால் 1969ஆம் வருடம் முதல்
வவுனியா மாநகரில் குடி கொண்டு, எழுந்தருளியிருக்கும்
கருமாரி அம்மன் என்று அழைக்கப்படும், அருள்மிகு
பத்தினி அம்மன் திருக்கோயிலின் தொடக்கத்திற்கு
வித்திட்டவராகவும், கோயில் பூசகராகவும்
திருத்தொண்டினை செய்து வந்தார். 1985ஆம் வருடம்
அவ்வூர் மக்களின் உதவியுடனும், விட்ணுராசா
வள்ளிகாந்தனின் முயற்சியாலும் திருக்கோயில்
அமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு நடாத்தப்பட்டது.
(வவுனியா மாநகரின் முதல் இராசகோபுரமும்
திருத்தேரும் அமையப் பெற்ற முதல் திருக்கோயில்
இதுவாகும்.) தற்போது இக்கோயிலில் மூன்று
காலப்பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது
சிறப்பம்சமாகும். இதிலிருந்து, நிகரிலரசு ஐயா,
தெய்வத்தமிழ் பாதையில் தொடர்வதற்கு, பெரிதும்
உறுதுணையாக, அவருடைய தந்தை இருந்திருப்பர்
என்பதை பறைசாற்றிப் போகலாம்.
இவ் வழித்தோன்றல்களில் வாரிசான சிவத்திரு.
உமையொருசிவம் நிகரிலரசு இலங்கைத் திருநாட்டின்
சீர்மிகு வட்டுக்கோட்டையில், சிவத்திரு. வள்ளிகாந்தன்
கமலவேணி தம்பதிகளின் தவபுதல்வனாக ரிசபன்
என்ற இயற்பெயருடன் பிறந்தார். கொழும்பு விவேகா
னந்தாக் கல்லூரியில் கல்விகற்று, குஞ்சரா நிமலன்
அம்மையார் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும்
வழிகாட்ட கொட்டாஞ்சேனை விநாயகர் கோயிலில்
அறநெறிப் பாடசாலையில் சைவசமய ஒழுக்க
விழுமியங்களை கற்று, நுழைவு தீக்கையினைப் பெற்று,
வருடந்தோறும் நடக்கும் சிவனிரவு விழாவில் பல
கதாபாத்திரங்களை (சேக்கிழார், கண்ணப்பநாயனார்,
சண்டிகேசுவரர்) ஏற்று நடித்தும் வந்தார். சிறு வயது
முதல் வீட்டில் உள்ள விநாயகர் திருமுன்னுக்கு
திருமஞ்சனம் ஆற்றி பாடல்களும் பாடி வணங்கி
வந்தார். குலதெய்வமான ஆறுமுகச்சிவனையும்
வணங்கி வந்தார். 2010 ஆம் வருடம் மேற்படிப்பை
இலண்டனில் கற்று, உறவுமுறைப் பெண்ணான தனுஜா
எனும் நல்லாளை, 2016 ஆம் வருடம் வைகாசி திங்கள்
நன்னாளிலே இல்லாள் ஆக்கி, இரு குழந்தைகளின்
தந்தையாகவும் உள்ளார்.
2018 ஆம் வருடம் ஈழத்திருநாட்டிற்கு திரும்பியிருந்த
வேளையில், அருள்மிகு தென்னாடு ஐம்பூத நாதரின்
அருளினால் தென்னாட்டின் நிறுவுனரான சிவத்திரு.
திருவம்பலம் தென்னவனின் தொடர்பு கிடைக்கப்
பெற்று, சைவத்தின் மீதும், தமிழின் மீதும் கொண்ட
பத்தியால், ஐயா சத்தியவேல் முருகனாரை மனதில்
குருவாககொண்டு, அவர்களின் ஆகம புத்தகங்களை
ஆதாரமாகக் கொண்டு, செந்தமிழ் ஆகமத்தினைக்
கற்று, யாழ்ப்பாணம் தென்னாடு மடத்தினால் செந்தமிழ்
ஆகமமுறையில், சிவத்திரு. பிரகதி குருக்களால்
நோன்மை தீக்கையும், சிவத்திரு. உருத்திரபுரிசுவரர்
குருக்களால் ஐப்பசித் திங்கள் இருபத்தெட்டாம் நாள்
(2021-11-14) அன்று ஆசிரியத் திருமுழுக்கு
செய்யப்பட்டு குருப்பட்டமும் கொடுக்கப்பெற்றார்.
அதேவேளை தமிழ்நாட்டின் மறைமலை அடிகளாரின்
வழிவந்த அருட்குருநாதர் சிவத்திரு. அருட்குருநாதன்
ஒளியரசு ஜயாவினால் ‘நிகரிலரசு’ என்னும் திருப்பெயர்
சூட்டப்பெற்றார். அன்று முதல் சிவத்திரு உமை
யொருசிவம் நிகரிலரசு (அரசு ஐயா) என அழைக்
கப்பட்டார்.
தென்னாடு மடத்தினால் ஒழுங்கமைக்கபட்ட
சிவத்திரு. லக்சன் மௌலி தம்பதியினரின் மங்கள்
நாண் பூட்டும் விழா மற்றும் பல திருகுடமுழுக்கு
விழாக்களும் இவரினால் சிறப்பாகச் செய்யப்பட்
டுள்ளது. அத்துடன் பல நுழைவு தீக்கைகளும் (சமய
தீக்கை) இவரினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்
பிடத்தக்கதாகும்.
இவர், வருகின்ற மார்கழி முடிவுப் பகுதியில்
இலண்டன் மாநகரம் திரும்ப உள்ள நிலையில், அங்கு
சென்று, புலம்பெயர் சூழலில் சைவசமயம் எதிர்
கொள்கின்ற சவால்களை நிறைவாக்கும் முகமாக, பல
சைவத்தமிழர்களுக்கு, குறிப்பாக சிறுவர்கள் மற்றும்
இளையோர்களுக்கு செந்தமிழ் தீக்கை வழங்கல்,
வாழ்வியல் சடங்குகளை செந்தமிழில் ஆற்றல்,
திருக்குடமுழுக்குகளைச் செய்தல் போன்ற
கைங்கரியங்களினுடாக சைவத்தையும் தமிழையும்
தழைக்கச் செய்ய அரும்பணியாற்றுவார் என்பதில்
எந்த ஐயமும் இல்லை. இவரின் திருப்பணி
மென்மேலும், பார் எங்கும் தொடர, யாழ். கொக்குவில்
பதியினில் வீற்றிருக்கின்ற மனோன்மணியம்மை
உடனுறை ஐம்பூதநாதப் பெருமான் திருவருள்
கிடைக்கட்டும்.
''சிவசிவ என்றிட சிவகதி தானே"
திருச்சிற்றம்பலம்
தெ
04
தென்னாடு
தென்னாடு
வள்ளிகாந்தன்
நிகரிலரசு
ஐயாவிற்கு
சிவத்திரு
உமையொருசிவம்
மசந்தமிழாசியம்க்குரியாழ்ப்பாளம்
.
www.lhennadu.org
செந்தமிழில்
ஆசிரியத்
திருமுழுக்கு
சிவத்திரு
.
சிவ
செந்தமிழாதன்
தலைவர்
-
சைவ
மாணவர்
சபை
(
பதிவு-
HA
/
4
/
JA
/
343
)
0715588737
aathan@thennadu.org
தண்டியடிகள்
வழி
நடப்போம்
!
ஐப்பசி
எம்மை
அரவணைக்கின்றது
.
மாரி
தொடங்கி
மண்ணில்
மழை
எங்கும்
பொழிகின்றது
.
ஊரெல்லாம்
வெள்ளம்
ஓடி
வழிய
இடமின்றி
முட்டி
மோதி
நிற்கிறது
.
வானம்
தரும்
அமுதத்
துளிகளை
முறைப்படி
சேர்த்து
வைக்க
தக்க
வழியின்றி
பொறியியலாளர்கள்
என்று
தம்மை
சொல்லிக்
கொள்பவர்களும்
பொறுப்பான
அதிகாரத்தில்
உள்ளோரும்
திணறி
நிற்கின்றனர்
.
மழையின்றிப்
போனால்
பயிர்கள்
வாடும்
உயிர்கள்
சாகும்
!
அதே
மழை
வரம்பின்றி
பொழிந்தாலும்
இதே
விளைவைத்தான்
நாம்
அனுபவிக்க
நேரும்
.
முளைவிட்டெழும்
நெல்
வயல்
எல்லாம்
தலைமுட்ட
வெள்ளம்
தேங்கி
அழுகிப்போகும்
.
பிற
பயிர்களும்
பயன்
தரமுன்
பழுது
படும்
.
உயர்ந்த
நீர்
மேலாண்மை
இல்லாது
போனால்
வானம்
வழங்கினும்
பசும்
புல்
தலைகாண்பது
அரிதேயாகும்
.
குட்டை
நிறைந்து
குளம்
நிறைந்து
ஊரணி
முட்டி
ஏந்தல்
நிரம்பி
தாங்கல்
அடைந்து
கரணை
கண்மாய்
வழியே
ஏரி
பெருகி
நீர்
ஆற்றை
அடைய
வேண்டும்
என்பதே
பழந்தமிழரின்
நீர்
நிறைப்பு
ஒழுங்காகும்
.
ஈழத்தவர்களை
பொறுத்தவரையில்
எல்லா
நீர்த்தேக்கங்களையும்
குளம்
என்றே
அழைத்து
பழக்கப்பட்டவர்களானோம்
.
எனவே
நீர்
ஏந்தும்
அளவை
வைத்து
நீர்
நிலைகளை
மேற்கண்டவாறு
வகைப்படுத்தும்
திறம்
அறிந்திலோம்
.
எனினும்
நம்
பழந்தமிழ்
இலக்கிய
செய்திகளின்
வழியே
அவற்றை
நம்மில்
சிலர்
தெரிந்து
வைத்துள்ளோம்
.
'
அறையும்
பொறையும்
மணந்த
தாய
எண்நாள்
திங்கள்
அணைய
கொடுங்கரை
தென்நீர்ச்
சிறுகுளம்
..
'
என்று
கபிலர்
சங்கப்பாடலில்
எட்டாம்
பிறையைப்போல
ஏரி
அமைய
வேண்டும்
என்று
கருத்துப்
பகிர்ந்திருக்கிறார்
.
ஒரு
தமிழ்
கற்ற
புலவர்
கூட
நீர்
மேலாண்மை
பற்றி
அறிந்து
வைத்திருக்கும்
அளவுக்கு
பழந்தமிழர்
நீர்
மேலாண்மை
சிறந்தும்
பரந்தும்
இருந்தது
!
ஆனால்
இன்றைய
நிலைதான்
என்ன
?
குளங்களை
நிரவி
குடியிருப்புக்களையும்
வணிகத்
தொகுதிகளையும்
அமைத்தோம்
.
நீரோடும்
நிலங்களுக்கு
குறுக்காக
சீமந்து
சுவர்களை
எழுப்பினோம்
.
விரும்பியபடி
வீதிகளை
உயர்த்தி
அமைத்தோம்
!
குளங்களின்
பெயர்களாலேயே
குறிப்பிடப்படும்
ஊர்களில்
குறித்த
குளத்தையே
காணாமல்
போகச்
செய்தோம்
!
பிளாத்திக்கழிவுகளாலும்
சாக்கடை
நீராலும்
குளங்களை
நிறைத்துக்
கண்ணிருந்தும்
குருடர்களானோம்
.
தமிழ்
எங்களுக்கு
தந்ததையும்
இழந்தோம்
!
சைவம்
எங்களுக்கு
சொன்னதையும்
மறந்தோம்
!
ஒரு
நீர்
தேக்கம்
எவ்வளவு
முக்கியமானது
என்பதை
சைவத்தமிழ்
தொன்குடிகள்
அறிந்திருந்தார்கள்
.
அதனாலே
தான்
திருக்கோயில்கள்
தோறும்
தெப்பக்
குளங்களையும்
கேணிகளையும்
அமைத்து
நீரை
சேமிக்கும்
அவசியத்தை
இந்த
சமூகத்திற்கு
வெளிப்படுத்தினார்கள்
.
அதிலும்
ஒரு
படி
உயர்வாக
திருவாருரிலே
பிறவியிலே
பார்வை
இழந்து
குளம்
எப்படி
இருக்கும்
நீர்
எப்படி
இருக்கும்
என்று
கூட
தெரியாத
திருத்தண்டியடிகள்
குளத்தைப்
புனரமைத்து
இறைவனின்
பேரன்பைப்
பெற்று
அறுபத்துமூன்று
நாயன்மார்களில்
ஒருவர்
ஆனார்
.
சமணர்கள்
தமிழகத்தில்
தலைதூக்கியிருந்த
காலமது
!
சிவ
திருத்தலங்கள்
கூட
சமண
பள்ளிகளாக
மாறிப்போய்
இருந்தன
.
இதனால்
திருவாரூர்
கோயில்
குளம்
தூர்ந்துபோய்க்
கிடந்தது
.
இதை
மற்றவர்கள்
வாயிலாக
அறிந்த
தண்டியடிகள்
குளத்தின்
நடுவிலும்
கரையிலும்
கோல்களை
நட்டு
அவற்றினை
ஒரு
கயிற்றால்
இணைத்தார்
.
பார்வையில்லாது
போனாலும்
தானே
குளத்தை
வெட்டி
அக்கயிறினை
தன்
இடையால்
வருடியபடியே
கரையில்
சென்று
தான்
வெட்டிய
மண்ணைக்
கொட்டிப்
பணி
செய்தார்
!
குளம்
நிறைந்தால்
தான்
நிலத்தடி
நீர்
மாசு
படாது
நன்னீராய்
பெருகும்
என்று
தன்
ஞானக்கண்ணால்
உணர்ந்து
செய்த
அந்த
மக்கள்
பணியே
மகேசன்
பணியானது
!
அதனால்
சமணர்களை
எதிர்த்து
இறைவன்
அருளால்
பார்வையும்
பெற்றார்
.
தம்
பார்வையிழந்த
சமணரோ
அவ்வூரைவிட்டு
அகன்றும்
போயினர்
!
கண்ணிருந்தும்
நாம்
செய்யத்துணியாத
பணியை
கண்களில்
ஒளியிழந்தும்
தண்டியடிகள்
செய்த
மாண்பு
அவரை
நாம்
எல்லோரும்
வணங்கும்
நிலைக்கு
உயர்த்தியது
.
திருவைந்தெழுத்தை
ஓதியே
திருக்குளப்பணி
செய்த
தண்டியடிகள்
தான்
எம்
எல்லோருக்கும்
வழிகாட்டி
இறைவனை
வணங்குவது
மட்டுமல்ல
இயற்கை
தரும்
மழை
நீரை
உரியவாறு
மேலாண்மை
செய்து
சேமிப்பதும்
சிறந்த
வழிபாடு
என்றே
உணர்த்தி
முத்தியின்பம்
பெற்ற
தண்டியடிகளின்
வாழ்வு
எமக்கு
பெரும்பாடம்
!
குளங்களை
விழுங்கிக்
குடியிருப்புக்களை
இன்று
நாம்
அமைக்கிறோம்
.
ஆனால்
குடியிருப்புக்களை
அகற்றிக்கூட
குளங்களை
அமைத்தனர்
என்று
வரலாறு
சொல்கிறது
.
நெகிழிப்
பாவனையாலும்
முறையற்ற
கழிவகற்றலாலும்
நீரோடும்
பாதைகளை
அடைத்து
குளங்களின்
மகத்துவத்தை
அறியாமல்
அவற்றை
அழித்து
குடியிருப்புக்களை
அமைத்து
விளைநிலங்களை
எல்லாம்
விலை
நிலங்களாக்கி
விற்று
ஏப்பமிட்ட
எம்மை
இன்று
இயற்கை
தண்டிப்பதாகவே
ஏற்றுக்கொள்வோம்
.
இனியேனும்
திருத்தொண்டின்
வழியிலாவது
இயற்கை
சத்தியாகிய
இறைசத்தியை
எமக்கு
இயையும்
சத்தியாக
மாற்ற
இளையவர்
கள்
ஒன்றிணைவோம்
.
மண்
வாழத்
தன்னை
வருத்தி
தொண்டு
செய்த
தொண்டியடிகள்
திருத்தாள்
போற்றி
திருச்சிற்றம்பலம்
How
was
நளி
நல்லோரை
கார்த்திகைத்
திங்கள்
2021
போட்டிகளிற்கு
சென்று
பரிசில்களும்
பெற்றும்
வந்தார்
.
விட்ணுராசா
வள்ளிகாந்தனின்
தவப்புதல்வன்
சிறந்த
முறையில்
மனனம்
செய்பவராகவும்
பல
சிவத்திரு
உமையொருசிவம்
நிகரிலரசு
அவர்கள்
.
சைவமும்
தமிழும்
சிறந்து
மிளிரும்வட்டுக்கோட்டையில்
அவதரித்த
சிவத்திரு
.
விநாயகர்
சின்னட்டி
பத்தராய்
பணிவார்கள்
அடியார்க்கும்
அடியேன்
என்ற
வாக்கிற்
கிணங்க
தினமும்
அறுபத்துமூவர்
(
நாயன்மார்
)
வழிபாடு
ஆற்றி
வந்தார்
.
இவர்
வழிவந்த
வேலுப்பிள்ளை
முத்
தையா
வேல்வழிபாடு
ஆற்றியதுடன்
செல்வச்சந்நிதி
சென்ற
போது
அடியவர்
துயர்
கண்டு
மனம்
கலங்கி
மடாலயம்
அமைக்க
எண்ணி
வேலுமுத்தையா
என்னும்
பெயரில்
1932
ஆம்
வருடம்
ஜப்பசித்
திங்கள்
மடாலயம்
அமைத்தார்
.
அவர்
சிவபதம்
அடைய
இவரது
சகோதரராலும்
(
சின்னையாசாமி
)
பின்
மகன்
முத்தையா
விட்ணு
ராசாவாலும்
மடாலயம்
சிறப்புற
பராமரிக்கப்பட்டு
அடியவர்கள்
வந்து
தங்குவதுடன்
“
யாவர்க்குமாம்
உண்ணும்
போது
ஒரு
கைப்பிடி
”
என்ற
கூற்றிற்கு
அமைய
மகேசுவர
பூசையும்
சிறப்பாக
நடைபெற்று
வரும்
வேளையில்
நாட்டில்
ஏற்பட்ட
அசாதாரண
சூழ்நிலைகளால்
மடம்
சிதைவடைந்த
நிலையில்
மீண்டும்
விட்ணுராசாவினாலும்
நல்லை
குருமுதல்வ
ராலும்
அடிக்கல்
நாட்டப்பட்டு
மடாலயமானது
அதேபாணியில்
கட்டிடம்
நிறைவேற்றப்பட்ட
வேளையில்
விட்ணுராசா
சிவபதம்
அடைய
இடை
யூறுகள்
காரணமாக
இத்திருப்பணி
தொடர்ந்து
செயற்படமுடியாத
நிலையில்
உள்ளது
வருந்ததக்கது
.
சிவத்திரு
.
உமையொருசிவம்
நிகரிலரசு
ஐயாவுக்கு
சிறுவயதிலேயே
சைவத்தில்
ஈர்ப்பை
உருவாக்கியது
அவரது
தந்தைவழி
என்பது
இதிலிருந்து
புலப்படுகிறது
.
இந்நிலையில்
விட்ணுராசாவின்
மகனான
வள்ளிகாந்தன்
அவர்களால்
1969
ஆம்
வருடம்
முதல்
வவுனியா
மாநகரில்
குடி
கொண்டு
எழுந்தருளியிருக்கும்
கருமாரி
அம்மன்
என்று
அழைக்கப்படும்
அருள்மிகு
பத்தினி
அம்மன்
திருக்கோயிலின்
தொடக்கத்திற்கு
வித்திட்டவராகவும்
கோயில்
பூசகராகவும்
திருத்தொண்டினை
செய்து
வந்தார்
.
1985
ஆம்
வருடம்
அவ்வூர்
மக்களின்
உதவியுடனும்
விட்ணுராசா
வள்ளிகாந்தனின்
முயற்சியாலும்
திருக்கோயில்
அமைக்கப்பட்டு
திருக்குடமுழுக்கு
நடாத்தப்பட்டது
.
(
வவுனியா
மாநகரின்
முதல்
இராசகோபுரமும்
திருத்தேரும்
அமையப்
பெற்ற
முதல்
திருக்கோயில்
இதுவாகும்
.
)
தற்போது
இக்கோயிலில்
மூன்று
காலப்பூசைகளும்
சிறப்பாக
நடைபெற்று
வருகின்றது
சிறப்பம்சமாகும்
.
இதிலிருந்து
நிகரிலரசு
ஐயா
தெய்வத்தமிழ்
பாதையில்
தொடர்வதற்கு
பெரிதும்
உறுதுணையாக
அவருடைய
தந்தை
இருந்திருப்பர்
என்பதை
பறைசாற்றிப்
போகலாம்
.
இவ்
வழித்தோன்றல்களில்
வாரிசான
சிவத்திரு
.
உமையொருசிவம்
நிகரிலரசு
இலங்கைத்
திருநாட்டின்
சீர்மிகு
வட்டுக்கோட்டையில்
சிவத்திரு
.
வள்ளிகாந்தன்
கமலவேணி
தம்பதிகளின்
தவபுதல்வனாக
ரிசபன்
என்ற
இயற்பெயருடன்
பிறந்தார்
.
கொழும்பு
விவேகா
னந்தாக்
கல்லூரியில்
கல்விகற்று
குஞ்சரா
நிமலன்
அம்மையார்
ஆசிரியராகவும்
வழிகாட்டியாகவும்
வழிகாட்ட
கொட்டாஞ்சேனை
விநாயகர்
கோயிலில்
அறநெறிப்
பாடசாலையில்
சைவசமய
ஒழுக்க
விழுமியங்களை
கற்று
நுழைவு
தீக்கையினைப்
பெற்று
வருடந்தோறும்
நடக்கும்
சிவனிரவு
விழாவில்
பல
கதாபாத்திரங்களை
(
சேக்கிழார்
கண்ணப்பநாயனார்
சண்டிகேசுவரர்
)
ஏற்று
நடித்தும்
வந்தார்
.
சிறு
வயது
முதல்
வீட்டில்
உள்ள
விநாயகர்
திருமுன்னுக்கு
திருமஞ்சனம்
ஆற்றி
பாடல்களும்
பாடி
வணங்கி
வந்தார்
.
குலதெய்வமான
ஆறுமுகச்சிவனையும்
வணங்கி
வந்தார்
.
2010
ஆம்
வருடம்
மேற்படிப்பை
இலண்டனில்
கற்று
உறவுமுறைப்
பெண்ணான
தனுஜா
எனும்
நல்லாளை
2016
ஆம்
வருடம்
வைகாசி
திங்கள்
நன்னாளிலே
இல்லாள்
ஆக்கி
இரு
குழந்தைகளின்
தந்தையாகவும்
உள்ளார்
.
2018
ஆம்
வருடம்
ஈழத்திருநாட்டிற்கு
திரும்பியிருந்த
வேளையில்
அருள்மிகு
தென்னாடு
ஐம்பூத
நாதரின்
அருளினால்
தென்னாட்டின்
நிறுவுனரான
சிவத்திரு
.
திருவம்பலம்
தென்னவனின்
தொடர்பு
கிடைக்கப்
பெற்று
சைவத்தின்
மீதும்
தமிழின்
மீதும்
கொண்ட
பத்தியால்
ஐயா
சத்தியவேல்
முருகனாரை
மனதில்
குருவாககொண்டு
அவர்களின்
ஆகம
புத்தகங்களை
ஆதாரமாகக்
கொண்டு
செந்தமிழ்
ஆகமத்தினைக்
கற்று
யாழ்ப்பாணம்
தென்னாடு
மடத்தினால்
செந்தமிழ்
ஆகமமுறையில்
சிவத்திரு
.
பிரகதி
குருக்களால்
நோன்மை
தீக்கையும்
சிவத்திரு
.
உருத்திரபுரிசுவரர்
குருக்களால்
ஐப்பசித்
திங்கள்
இருபத்தெட்டாம்
நாள்
(
2021-11-14
)
அன்று
ஆசிரியத்
திருமுழுக்கு
செய்யப்பட்டு
குருப்பட்டமும்
கொடுக்கப்பெற்றார்
.
அதேவேளை
தமிழ்நாட்டின்
மறைமலை
அடிகளாரின்
வழிவந்த
அருட்குருநாதர்
சிவத்திரு
.
அருட்குருநாதன்
ஒளியரசு
ஜயாவினால்
‘
நிகரிலரசு
’
என்னும்
திருப்பெயர்
சூட்டப்பெற்றார்
.
அன்று
முதல்
சிவத்திரு
உமை
யொருசிவம்
நிகரிலரசு
(
அரசு
ஐயா
)
என
அழைக்
கப்பட்டார்
.
தென்னாடு
மடத்தினால்
ஒழுங்கமைக்கபட்ட
சிவத்திரு
.
லக்சன்
மௌலி
தம்பதியினரின்
மங்கள்
நாண்
பூட்டும்
விழா
மற்றும்
பல
திருகுடமுழுக்கு
விழாக்களும்
இவரினால்
சிறப்பாகச்
செய்யப்பட்
டுள்ளது
.
அத்துடன்
பல
நுழைவு
தீக்கைகளும்
(
சமய
தீக்கை
)
இவரினால்
வழங்கப்பட்டுள்ளமை
குறிப்
பிடத்தக்கதாகும்
.
இவர்
வருகின்ற
மார்கழி
முடிவுப்
பகுதியில்
இலண்டன்
மாநகரம்
திரும்ப
உள்ள
நிலையில்
அங்கு
சென்று
புலம்பெயர்
சூழலில்
சைவசமயம்
எதிர்
கொள்கின்ற
சவால்களை
நிறைவாக்கும்
முகமாக
பல
சைவத்தமிழர்களுக்கு
குறிப்பாக
சிறுவர்கள்
மற்றும்
இளையோர்களுக்கு
செந்தமிழ்
தீக்கை
வழங்கல்
வாழ்வியல்
சடங்குகளை
செந்தமிழில்
ஆற்றல்
திருக்குடமுழுக்குகளைச்
செய்தல்
போன்ற
கைங்கரியங்களினுடாக
சைவத்தையும்
தமிழையும்
தழைக்கச்
செய்ய
அரும்பணியாற்றுவார்
என்பதில்
எந்த
ஐயமும்
இல்லை
.
இவரின்
திருப்பணி
மென்மேலும்
பார்
எங்கும்
தொடர
யாழ்
.
கொக்குவில்
பதியினில்
வீற்றிருக்கின்ற
மனோன்மணியம்மை
உடனுறை
ஐம்பூதநாதப்
பெருமான்
திருவருள்
கிடைக்கட்டும்
.
'
'
சிவசிவ
என்றிட
சிவகதி
தானே
திருச்சிற்றம்பலம்