தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

60 நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 07 ஈழத்து சித்தர்கள்: சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் (அற்புத சத்தியால் ஆகாயத்தில் தாவிச் சென்று, கடல் கடந்த கோவிந்தசாமி என்றழைக்கப்பட்ட சித்தானைக்குட்டி சுவாமிகள்) ஓம் சித்தானைக்குட்டி குருவே நம: 11 (பெரியானைக் குட்டி சுவாமிகள் சென்ற திங்கள்த் தொடர்ச்சி) இராமநாதபுரம் என்பது தென்னிந்தியாவிலே திரு நெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கிடையில் அமைந்துள்ள மாவட்டத்தின் பெயர். இதிலுள்ள இராமேசுவரம், பேர் பெற்ற சிவத்தலம். இராமபிரான் சிவபூசை புரிந்த தலம். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதி மன்னர்கள் என அழைக்கப்பட்டனர். சேது என்பது இராமபிரான் கடல்மேலிட்ட அணை. இங்குள்ள தீர்த்தம் சேது தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரி முதல் தொடங்குகிறதென்பதைக் “குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை” என மணிமேகலை கூறுகின்றது. இச்சேதுவைச் சார்ந்த நாடு சேதுநாடென வழங்கப் பெறுகிறது. இராமநாதபுர மாவட்டம் சேது நாடாகும். இராமபிரான் சேது கட்டிய காலத்தில் தம்மை வழிபட்ட நிஷாதத் தலைவன் ஒருவனைத் தாம் கட்டிய சேதுவைக் காத்துவரும்படி தென்னாடு ஆணையிட்டார் என்று சேதுபதிகளின் மரபைப் பற்றிக் கூறுவர். இவர்கள் பாண்டிய மன்னர்க்குப் படைத் தலைவர்களாகவும் இருந்தவர்கள். நல்லந்தையார், நன்முல்லையார், ஒக்கூர்மாசாத்தியார் போன்ற சங்கப் புலவர்கள் இப்பிரதேசத்திலே பிறந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனருள் பெற்ற திருப்பெருந்துறை இராமநாதபுரத்தைச் சேர்ந்ததாகும். நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு நிலையமான நாட்டரசன் கோட்டை என்பது சேதுமன்னரின் கோட்டை என்று பொருளாகும். தாயுமானவர் சமாதி அடைந்த முகவையும், மணவாளமா முனிவர் வளர்ந்த சிக்கற் கடாரமும் இம்மாவட்டத்தில் உள்ளவையாகும். 'பெருநாளி' என்பது இராமநாதபுரத்துச் சிற்றரசர் ஒருவருடைய இராச்சியம். இந்த நாட்டுச் சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன். அவருடைய பெயர் கோவிந்தசாமி என்பதாகும். கோவிந்தசாமி அரச குடும்பத்திலே பிறந்து வாழ்ந்தும், அவருக்கு அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை. உள்ளம் துறவை நாடியது. இந்தக் கோவிந்தசாமியே இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரைதீவில் சமாதி அடைந்த சித்தானைக்குட்டி சுவாமிகளாவார். மூவர் சந்திப்பு 'பெருநாளி’ இராச்சியத்தில் ஒருமுறை பெரியவொரு தொற்றுநோய் கண்டிருந்தது. இருந்திருந்தாற்போல் பலர் மாண்டனர். சில வீடுகளில் குடும்பத்தோடேயே மாண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இரு சாதுக்கள் தெருவீதிகளில் உலாவினர். அவ்வூர் மக்கள் அவர்களை இன்னார் என்று பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் அவ்வூர் மக்களை நோயின் கோரப்பிடியினின்றும் மீட்க வந்த பேரருளாளர் ஆவார்கள். யாரும் போக அஞ்சும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குச் சென்று தமக்கு உணவு தருமாறு வற்புறுத்தினர். தமது நோய் அவர்களுக்கும் தொற்றிவிடுமே என்ற கவலையினால் சிலர் மறுத்தனர். அவர்களை வற்புறுத்தி அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு உணவுப் பொருள் பெற்று, அவர்கள் முன்னிலையிலேயே இருவரும் உண்டனர். யார் உணவு அளித்தார்களோ அந்தக் குடும்பத்திலுள்ளார் எல்லாரும் நோயினின்றும் விடுதலை பெற்றனர். இச்செய்தி எங்கும் பரவியது. இவ்விரு சாதுக்களும் மக்களின் நோயைத் தாமே பெற்று அனுபவித்தனர். இச்செய்தியைப் பெருநாளி' இராச்சியத்துச் சிற்றரசர் கேள்வியுற்றார். அவ்விரு சாதுக்களையும் தமது இராச்சியத்திற்கு அழைத்து உபசரிக்க எண்ணம் கொண்டார். சாதுக்களை அழைத்து வருமாறு தனது மகன் கோவிந்த சாமியை அனுப்பி வைத்தார் அரசர். கோவிந்தசாமிக்கு இப்படிப்பட்ட விடயங்களில் ஈடுபடுவதென்றால் தனி ஒரு மகிழ்வு. தந்தையாரின் கட்டளைப்படி சாதுக்களைத் தேடி கோவிந்தசாமி புறப்பட்டார். கோவிந்தசாமி அடியார்கள் இருவரையும் ஒரு குடிசையிலே சந்தித்தார். இருவரது பாதங்களையும் தமது உச்சிமேற் சூடினார். கோவிந்தசாமியைப் பார்த்ததும் இருவரது உள்ளங்களுமே நெகிழ்ந்தன. கோவிந்தசாமியை வாரி எடுத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். அந்த இரு அடியார்களும் யார் என்பதை அறிய வாசகர்கள் ஆவலாயிருப்பார்கள் அல்லவா? அவர்களில் ஒருவர் கொழும்பு முகத்துவாரத்தில் சமாதி கொண்டிருக்கும் பெரியானைக்குட்டி சுவாமிகள். இந்தச் சுவாமிகளைப் பற்றிய கட்டுரை போன தென்னாடு பதிப்பில் வெளிவந்திருந்தது. அடுத்தவர் தெ நாவலப்பிட்டி -குயீன்ஸ்பரித் தோட்டத்தில் சமாதி கொண்டிருக்கும் நவநாத சித்தர் ஆவார். நவநாதச்சித்தரின் வரலாறும் தென்னாடு முன்னைய பதிப்புகளில் வெளிவந்திருந்தது. அடியார்களுக்கு அடியார் ஆனார் கோவிந்தசாமி அரச உடையில் கோமகனாக இருந்த கோவிந்தசாமி அக்கணமே கோவணாண்டி ஆனார். இருவருக்கும் சீடர் ஆனார். வீடு திரும்பவே இல்லை. இருவரையும் பின்தொடர்ந்து நோயாளருக்கு வேண்டிய உதவிகள் செய்தார். 'ஒருவர் இருவரானார் இருவர் மூவராயினர்' என்று சொல்லும் அளவுக்கு மூவரும் இணைபிரியாது இந்தியா எங்கும் யாத்திரை செய்தனர். காலம்தொட்டத் தொடர்பு போலும் மூவரும் யாத்திரையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு ஈழ நாட்டுக்குப் புறப்பட்டனர். ஈழநாடு சாதுக்கள் பரம்பரை ஒன்று தோன்ற வேண்டும் என எதிர்பார்த்திருந்த காலம். பெரிய புராணமும், கந்தபுராணமும் கோயில் தோறும் படித்தும் கேட்டும் மக்களுடைய உள்ளம் சாதுக்களை எதிர்நோக்கியிருந்த காலம். சங்கம வழிபாட்டில் சிறந்து குருநாதனின் வருகையை எதிர்பார்த்திருந்த காலம். இத்தகையதொரு சூழ் நிலையிலேதான் இரு குருநாதர்களும் ஒரு சீடனும் சேர்ந்து மூன்று சாதுக்களாகி ஈழம் வர எண்ணங் கொண்டனர். இன்றைய காலத்திலும் ஈழத்திற்கு சாதுக்கள் தேவைப்படுகின்றனர். மக்கள் பெரியபுராணம் கந்தபுராணம் சிவ வழிபாடு எனத் தம்மைத் தயார் செய்தால் சாதுக்கள் ஈழத்தில் தோன்றுவார்கள். கோவிந்தசாமி ஈழத்திற்கு வந்தது எப்படி? இந்தக் காலத்தைப்போல் அந்தக் காலத்தில் போக்குவரவு வசதி இருக்கவில்லை. ஆனால் இந்தக்காலத்தைப் போல்கடவுச்சீட்டை, விசாக்கெடுபிடியும் அந்தக் காலத்தில் இல்லை. தூத்துக்குடியில் இருந்து மூவரும் கப்பல் ஏறிப் புறப்படத் தீர்மானித்தனர். கப்பலில் ரிக்கெற் பெற்றுக் கொள்வதற்காக முன்கூட்டியே செட்டியார் ஒருவரை அனுப்பி வைத்தனர். இருவருக்கு மாத்திரமே ரிக்கெற் கிடைத்தது. அதனால் கோவிந்தசாமியை தமிழ் நாட்டுக் கரையிலேயே விட்டுக் கப்பல் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் வந்தவர்களை வரவேற்கப் பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர். அவர்களுக்குள்ளே கோவிந்தசாமியும் காணப்பட்டார். கோவிந்தசாமியைக் கண்ட குருநாதர் இருவரும் எவ்வித ஆச்சரியத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. கோவிந்தசாமியின் பக்குவ நிலையைப் பற்றி இருவரும் முன்னமே உணர்ந்திருந்தார்கள். 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்று சொல்வார்களே, அதற்கு இலக்கியமாக விளங்கினார் கோவிந்தசாமி. கோவிந்தசாமி தங்களுடைய சீடன்தான் என்றாலும் அவரிடம் அற்புத சாதனைகள் மலிந்து கிடக்கின்றன என்பதும் அவர்கள் தெரிந்த விடயமே. கப்பலில் இடம் இல்லாவிட்டாலும் ஆகாயத்தில் மனோவலிமையினால் தாவிச் செல்லும் அற்புத சத்தி அவரிடம் இருந்ததைக் குருநாதர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்தனர். எந்த இராமநாமத்தின் உதவி கொண்டு அனுமார் கடலைக் கடந்து இலங்கை வந்தாரோ, அந்த இராமர் கடலைக் கடப்பதற்கு அணைகட்டி வரவேண்டியிருந்தது. அதேபோன்று குருமார் இருவரும் கப்பலில் வர கோவிந்தசாமியாகிய சீடர் ஆகாயமார்க்கமாக இங்கு வந்து சேர்ந்து விட்டார். (சித்தரின் சித்துக்கள் தொடரும்) திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு-சிவத்திரு.வடிவேலு கங்காளன்
60 நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2021 07 ஈழத்து சித்தர்கள் : சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் ( அற்புத சத்தியால் ஆகாயத்தில் தாவிச் சென்று கடல் கடந்த கோவிந்தசாமி என்றழைக்கப்பட்ட சித்தானைக்குட்டி சுவாமிகள் ) ஓம் சித்தானைக்குட்டி குருவே நம : 11 ( பெரியானைக் குட்டி சுவாமிகள் சென்ற திங்கள்த் தொடர்ச்சி ) இராமநாதபுரம் என்பது தென்னிந்தியாவிலே திரு நெல்வேலி மதுரை திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கிடையில் அமைந்துள்ள மாவட்டத்தின் பெயர் . இதிலுள்ள இராமேசுவரம் பேர் பெற்ற சிவத்தலம் . இராமபிரான் சிவபூசை புரிந்த தலம் . இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதி மன்னர்கள் என அழைக்கப்பட்டனர் . சேது என்பது இராமபிரான் கடல்மேலிட்ட அணை . இங்குள்ள தீர்த்தம் சேது தீர்த்தம் என அழைக்கப்படுகிறது . இது கன்னியாகுமரி முதல் தொடங்குகிறதென்பதைக் குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை என மணிமேகலை கூறுகின்றது . இச்சேதுவைச் சார்ந்த நாடு சேதுநாடென வழங்கப் பெறுகிறது . இராமநாதபுர மாவட்டம் சேது நாடாகும் . இராமபிரான் சேது கட்டிய காலத்தில் தம்மை வழிபட்ட நிஷாதத் தலைவன் ஒருவனைத் தாம் கட்டிய சேதுவைக் காத்துவரும்படி தென்னாடு ஆணையிட்டார் என்று சேதுபதிகளின் மரபைப் பற்றிக் கூறுவர் . இவர்கள் பாண்டிய மன்னர்க்குப் படைத் தலைவர்களாகவும் இருந்தவர்கள் . நல்லந்தையார் நன்முல்லையார் ஒக்கூர்மாசாத்தியார் போன்ற சங்கப் புலவர்கள் இப்பிரதேசத்திலே பிறந்தவர்கள் . மாணிக்கவாசகர் இறைவனருள் பெற்ற திருப்பெருந்துறை இராமநாதபுரத்தைச் சேர்ந்ததாகும் . நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு நிலையமான நாட்டரசன் கோட்டை என்பது சேதுமன்னரின் கோட்டை என்று பொருளாகும் . தாயுமானவர் சமாதி அடைந்த முகவையும் மணவாளமா முனிவர் வளர்ந்த சிக்கற் கடாரமும் இம்மாவட்டத்தில் உள்ளவையாகும் . ' பெருநாளி ' என்பது இராமநாதபுரத்துச் சிற்றரசர் ஒருவருடைய இராச்சியம் . இந்த நாட்டுச் சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன் . அவருடைய பெயர் கோவிந்தசாமி என்பதாகும் . கோவிந்தசாமி அரச குடும்பத்திலே பிறந்து வாழ்ந்தும் அவருக்கு அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை . உள்ளம் துறவை நாடியது . இந்தக் கோவிந்தசாமியே இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரைதீவில் சமாதி அடைந்த சித்தானைக்குட்டி சுவாமிகளாவார் . மூவர் சந்திப்பு ' பெருநாளி இராச்சியத்தில் ஒருமுறை பெரியவொரு தொற்றுநோய் கண்டிருந்தது . இருந்திருந்தாற்போல் பலர் மாண்டனர் . சில வீடுகளில் குடும்பத்தோடேயே மாண்டனர் . இச்சந்தர்ப்பத்தில் இரு சாதுக்கள் தெருவீதிகளில் உலாவினர் . அவ்வூர் மக்கள் அவர்களை இன்னார் என்று பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை . அவ்விருவரும் அவ்வூர் மக்களை நோயின் கோரப்பிடியினின்றும் மீட்க வந்த பேரருளாளர் ஆவார்கள் . யாரும் போக அஞ்சும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குச் சென்று தமக்கு உணவு தருமாறு வற்புறுத்தினர் . தமது நோய் அவர்களுக்கும் தொற்றிவிடுமே என்ற கவலையினால் சிலர் மறுத்தனர் . அவர்களை வற்புறுத்தி அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு உணவுப் பொருள் பெற்று அவர்கள் முன்னிலையிலேயே இருவரும் உண்டனர் . யார் உணவு அளித்தார்களோ அந்தக் குடும்பத்திலுள்ளார் எல்லாரும் நோயினின்றும் விடுதலை பெற்றனர் . இச்செய்தி எங்கும் பரவியது . இவ்விரு சாதுக்களும் மக்களின் நோயைத் தாமே பெற்று அனுபவித்தனர் . இச்செய்தியைப் பெருநாளி ' இராச்சியத்துச் சிற்றரசர் கேள்வியுற்றார் . அவ்விரு சாதுக்களையும் தமது இராச்சியத்திற்கு அழைத்து உபசரிக்க எண்ணம் கொண்டார் . சாதுக்களை அழைத்து வருமாறு தனது மகன் கோவிந்த சாமியை அனுப்பி வைத்தார் அரசர் . கோவிந்தசாமிக்கு இப்படிப்பட்ட விடயங்களில் ஈடுபடுவதென்றால் தனி ஒரு மகிழ்வு . தந்தையாரின் கட்டளைப்படி சாதுக்களைத் தேடி கோவிந்தசாமி புறப்பட்டார் . கோவிந்தசாமி அடியார்கள் இருவரையும் ஒரு குடிசையிலே சந்தித்தார் . இருவரது பாதங்களையும் தமது உச்சிமேற் சூடினார் . கோவிந்தசாமியைப் பார்த்ததும் இருவரது உள்ளங்களுமே நெகிழ்ந்தன . கோவிந்தசாமியை வாரி எடுத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் . அந்த இரு அடியார்களும் யார் என்பதை அறிய வாசகர்கள் ஆவலாயிருப்பார்கள் அல்லவா ? அவர்களில் ஒருவர் கொழும்பு முகத்துவாரத்தில் சமாதி கொண்டிருக்கும் பெரியானைக்குட்டி சுவாமிகள் . இந்தச் சுவாமிகளைப் பற்றிய கட்டுரை போன தென்னாடு பதிப்பில் வெளிவந்திருந்தது . அடுத்தவர் தெ நாவலப்பிட்டி -குயீன்ஸ்பரித் தோட்டத்தில் சமாதி கொண்டிருக்கும் நவநாத சித்தர் ஆவார் . நவநாதச்சித்தரின் வரலாறும் தென்னாடு முன்னைய பதிப்புகளில் வெளிவந்திருந்தது . அடியார்களுக்கு அடியார் ஆனார் கோவிந்தசாமி அரச உடையில் கோமகனாக இருந்த கோவிந்தசாமி அக்கணமே கோவணாண்டி ஆனார் . இருவருக்கும் சீடர் ஆனார் . வீடு திரும்பவே இல்லை . இருவரையும் பின்தொடர்ந்து நோயாளருக்கு வேண்டிய உதவிகள் செய்தார் . ' ஒருவர் இருவரானார் இருவர் மூவராயினர் ' என்று சொல்லும் அளவுக்கு மூவரும் இணைபிரியாது இந்தியா எங்கும் யாத்திரை செய்தனர் . காலம்தொட்டத் தொடர்பு போலும் மூவரும் யாத்திரையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு ஈழ நாட்டுக்குப் புறப்பட்டனர் . ஈழநாடு சாதுக்கள் பரம்பரை ஒன்று தோன்ற வேண்டும் என எதிர்பார்த்திருந்த காலம் . பெரிய புராணமும் கந்தபுராணமும் கோயில் தோறும் படித்தும் கேட்டும் மக்களுடைய உள்ளம் சாதுக்களை எதிர்நோக்கியிருந்த காலம் . சங்கம வழிபாட்டில் சிறந்து குருநாதனின் வருகையை எதிர்பார்த்திருந்த காலம் . இத்தகையதொரு சூழ் நிலையிலேதான் இரு குருநாதர்களும் ஒரு சீடனும் சேர்ந்து மூன்று சாதுக்களாகி ஈழம் வர எண்ணங் கொண்டனர் . இன்றைய காலத்திலும் ஈழத்திற்கு சாதுக்கள் தேவைப்படுகின்றனர் . மக்கள் பெரியபுராணம் கந்தபுராணம் சிவ வழிபாடு எனத் தம்மைத் தயார் செய்தால் சாதுக்கள் ஈழத்தில் தோன்றுவார்கள் . கோவிந்தசாமி ஈழத்திற்கு வந்தது எப்படி ? இந்தக் காலத்தைப்போல் அந்தக் காலத்தில் போக்குவரவு வசதி இருக்கவில்லை . ஆனால் இந்தக்காலத்தைப் போல்கடவுச்சீட்டை விசாக்கெடுபிடியும் அந்தக் காலத்தில் இல்லை . தூத்துக்குடியில் இருந்து மூவரும் கப்பல் ஏறிப் புறப்படத் தீர்மானித்தனர் . கப்பலில் ரிக்கெற் பெற்றுக் கொள்வதற்காக முன்கூட்டியே செட்டியார் ஒருவரை அனுப்பி வைத்தனர் . இருவருக்கு மாத்திரமே ரிக்கெற் கிடைத்தது . அதனால் கோவிந்தசாமியை தமிழ் நாட்டுக் கரையிலேயே விட்டுக் கப்பல் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது . கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது . கப்பலில் வந்தவர்களை வரவேற்கப் பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர் . அவர்களுக்குள்ளே கோவிந்தசாமியும் காணப்பட்டார் . கோவிந்தசாமியைக் கண்ட குருநாதர் இருவரும் எவ்வித ஆச்சரியத்தையும் காட்டிக் கொள்ளவில்லை . கோவிந்தசாமியின் பக்குவ நிலையைப் பற்றி இருவரும் முன்னமே உணர்ந்திருந்தார்கள் . ' மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது ' என்று சொல்வார்களே அதற்கு இலக்கியமாக விளங்கினார் கோவிந்தசாமி . கோவிந்தசாமி தங்களுடைய சீடன்தான் என்றாலும் அவரிடம் அற்புத சாதனைகள் மலிந்து கிடக்கின்றன என்பதும் அவர்கள் தெரிந்த விடயமே . கப்பலில் இடம் இல்லாவிட்டாலும் ஆகாயத்தில் மனோவலிமையினால் தாவிச் செல்லும் அற்புத சத்தி அவரிடம் இருந்ததைக் குருநாதர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்தனர் . எந்த இராமநாமத்தின் உதவி கொண்டு அனுமார் கடலைக் கடந்து இலங்கை வந்தாரோ அந்த இராமர் கடலைக் கடப்பதற்கு அணைகட்டி வரவேண்டியிருந்தது . அதேபோன்று குருமார் இருவரும் கப்பலில் வர கோவிந்தசாமியாகிய சீடர் ஆகாயமார்க்கமாக இங்கு வந்து சேர்ந்து விட்டார் . ( சித்தரின் சித்துக்கள் தொடரும் ) திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு - சிவத்திரு.வடிவேலு கங்காளன்