தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 ANTAL ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு உண்ணாமுலை அம்மை உடனுறை திருஅண்ணாமலையார் [அருணாச்சலேசுவரர்] திருக்கோயில் - திருவண்ணாமலை (தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 233வது திருக்கோயில் திருவண்ணாமலை எல்லா யுகங்களிலும் அழியாமல், கயிலை மலைக்கு ஒப்பான, சைவர்களால் சிவபெருமானே மலையுரு கொண்டுள்ளார், என நம்பப்படும் திருவண்ணாமலை திருஅண்ணாமலையார் (அருணாச்சலேசுவரர்) திருக்கோயில், நினைத்தாலே முத்தி தரும் பேரருள் மிக்க தலமாகும். அபி சர் அமைவிடம் : திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு இந்நகரம், புதுச்சேரி - பெங்களுாரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66ம், விழுப்புரம் - வேலூர் - பெங்களுாரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234ம் மற்றும் சேலம் - திருவண்ணாமலை - ஆரணி -சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 39ம், இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இறைவர் திருப்பெயர்: அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர் இறைவியார் திருப்பெயர் : உண்ணாமுலை அம்மை கோயில் மரம் : மகிழ மரம் தீர்த்தம் : பிரம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் வழிபட்டோர் : விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரணதேவ நாயனார், சேக்கிழார், அருணகிரிநாதர், ரமண மாமுனிவர். பாமாலை : சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரணதேவ நாயனார், சேக்கிழார், அருணகிரிநாதர். நாயன்மார்களால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே." "பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே." திருநாவுக்கரசரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் "ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்டோ ள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே." "வட்ட னைம்மதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ." '" பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.'' தென்னாடு மாணிக்கவாசகரால் அருளப்பட்டவை "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்." "செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.'' திருத்தலச் சிறப்பு இலிங்கமே மலையாக அமைந்த தலம். தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவத்தலங்களுக்குள் ஒன்று. ஐம்பூதத் தலங்களில் முக்கியமான நெருப்புத்தலம் இதுவாகும். "நினைத்தாலே முத்தி தரும் திருஅண்ணாமலை" என சிறப்பு பெற்ற தலம். நான் என்ற அகந்தை அழித்த தலம். உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற, கிரிவலம் வந்து தவம் செய்த தலம். உமையம்மைக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து சோதி வடிவமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, முத்திபேறு அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது, முருகனே வந்து காப்பாற்றி, திருப்புகழ் பாட உத்தரவிட்டு, ஆட்கொண்ட தலம். எல்லா சிவத்தலத்திலும் மூலவர் பின்புறமுள்ள இலிங்கோற்பவர் தோன்றிய தலம். ஒன்பது கோபுரம், ஏழு வீதிகளுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். தென்னிந்தியா விலேயே 2வது உயரமான கோபுரம் (217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். தமிழகத்தின் திருப்பதி என்று AALITO போற்றப்படுமளவுக்கு பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சத்தி வாய்ந்த சிவத்தலம். 6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், சேர, சோழ, பாண்டிய, வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில். ஏராளமான சித்தர்கள், ஞானிகள் வாழ்ந்த, தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. 03 அம்மனின் ஐம்பத்தொரு சத்தி பீடங்களில் இது அருணை சத்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி, விநாயகரின் முதல் படை வீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபுரங்களில் இது 233வது தேவாரத்தலம் ஆகும். தெ கிரிவல சிறப்பு: கார்த்திகைத் திங்கள் சகடு (கார்த்திகை) விண்மீன் கூடிய நாளில் தான் உமையம்மைக்கு எம்பெருமான் இடப்பாகம் அளித்தார் என்பதால், அன்றைய நாளில் இலிங்கமாக விளங்கும் திருவண்னாமலையை சுற்றுவது சிறப்பு. இதுவே 'கிரிவலம்' எனப்படுகின்றது. முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ்த் திங்கள் உதிப்பின் (மாதப்பிறப்பு) போதும், கழுவாய் காலத்திலும் மலையை வலம் வந்து அருள் பெற்றார்களாம். எனவே அந்த நாட்களில் கிரிவலம் வருவதும் சிறப்பு. விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அண்ணாமலை என பெயர் வர காரணம்: 'அண்ணல்' என்றால் நெருங்குதல் எனப் பொருள். 'அண்ணா' என்றால் நெருங்காமை எனப் பொருள். அதாவது, நான்முகனுக்கும் திருமாலுக்கும் அவர்களில் யார் பெரியவர் என்ற மோதல் வந்தபோது, பரம்பொருளே இந்த மலையில் பெரிய தீப்பிழம்பாய் தோன்றினார். உடனே இருவரும் இதன் அடி / முடியை யார் காண்கிறார்களோ அவரே பெரியவர் என நான்முகன் அன்னமாக மாறி முடியையும், திருமால் பன்றியாக மாறி அடியையும் தேடி சென்ற போது, எம்பெருமான் தலையிலிருந்து தாழம்பூவொன்று விழுந்துகொண்டிருந்தது. அதை சந்தித்த நான்முகன் “எங்கு இருந்து வருகிறாய் என வினவ", தாழம்பூ “நான் எம்பெருமானின் தலையிலிருந்து விழுகிறேன்." என கூறியது. முடியை காண்பது அரிது என உணர்ந்த நான்முகன், தான் முடியயை கண்டுவிட்டதாக பொய் கூறுகிறார். அதற்கு தாழம்பூவும் துணை நின்றது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், நான்முகனுக்கு கோயில் அமைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை சிவபூசைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் தண்டனை அளித்தார். எனவே முடிவாக மலையில் தீப்பிழம்பாக எழுந்த எம்பெருமானின் அடிமுடியை நெருங்கவே முடியவில்லை. எனவேதான் அண்ணாமலை என பெயர் பெற்றது. திருக்கோயில் அமைப்பு கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. தென்னிந் தியாவிலேயே 2வது உயரமான கோபுரம் (217அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம் இதுவாகும். இக்கோயிலில் உள்ளே ஆறு வீதிகள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள இலிங்கம் பாலரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில், கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்களையும் கொண்டது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 வருடங்கள் ஆகி இருப்பது, கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், சேர, சோழ, பாண்டிய, வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயிலாகும். தீபக்காட்சி மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபக்காட்சி மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர், இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு, ஐம்மூர்த்திகளும் எழுந்தருளுவர். அதாவது, கார்த்திகைத் திங்கள் சகடு (கார்த்திகை) நாண்மீனும் கூடிய நாளில், அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில், ஒரு தீபம் ஏற்றி, பின் அதன் மூலம் ஐந்து தீபங்கள் ஏற்றி, அவை ஐந்தையும் ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து, பூசை செய்வார். இது "ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்" எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. பின் மாலையில் தீபக்காட்சி மண்டபத்தில் ஐம்மூர்த்திகள் எழுந்தருளப்பட்டு, அகண்ட தீபம் ஏற்றப்பட, மலையில் பெரிய கொப்பரையில், மகாதீபம் எனப்படும் பெருந்தீபம் ஏற்றப்படும். இப்பெருந்தீபச் சோதியே திருமால், நான்முக னுக்கிடையே தோன்றிய, பரம்பொருள் சோதி என நம்பப்படு கின்றது. இந்த தீபச்சோதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தெரியும். இச்சோதியை காண, மாபெரும் கூட்டம் திரளும். திருவண்ணாமலையில் தீபத்திருநாள் ஓர் சிறப்பான திருவிழாவாக நடைபெறுவது முக்கியம்சமாகும். எனவே நாமும், எம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வமும், தீரா ஆயுளும் பெற்று, மண்ணில் நல்லவண்ணம் வாழ, நினைத்தாலே முத்தி தரும் உண்ணாமுலை அம்மை உடனுறை அண்ணாமலையானை நினைத்து, இயலுமானவர்கள் சென்று கிரிவலப்பேறையும் பெற்று, போற்றிப் பரவிடுவோமாக. "தீயிடை மூன்றாய் திகழ்ந்த அண்ணாமலையானே போற்றி" திருச்சிற்றம்பலம் சிவத்திரு . தென்னாடு நிலவன் தென்னாடு - செந்தமிழாகம சிவமடம் nilavan@thennadu.org
சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 ANTAL ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு உண்ணாமுலை அம்மை உடனுறை திருஅண்ணாமலையார் [ அருணாச்சலேசுவரர் ] திருக்கோயில் - திருவண்ணாமலை ( தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 233 வது திருக்கோயில் திருவண்ணாமலை எல்லா யுகங்களிலும் அழியாமல் கயிலை மலைக்கு ஒப்பான சைவர்களால் சிவபெருமானே மலையுரு கொண்டுள்ளார் என நம்பப்படும் திருவண்ணாமலை திருஅண்ணாமலையார் ( அருணாச்சலேசுவரர் ) திருக்கோயில் நினைத்தாலே முத்தி தரும் பேரருள் மிக்க தலமாகும் . அபி சர் அமைவிடம் : திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு இந்நகரம் புதுச்சேரி - பெங்களுாரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 ம் விழுப்புரம் - வேலூர் - பெங்களுாரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234 ம் மற்றும் சேலம் - திருவண்ணாமலை - ஆரணி -சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 39 ம் இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது . இறைவர் திருப்பெயர் : அண்ணாமலையார் அருணாச்சலேசுவரர் இறைவியார் திருப்பெயர் : உண்ணாமுலை அம்மை கோயில் மரம் : மகிழ மரம் தீர்த்தம் : பிரம தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் வழிபட்டோர் : விசுவாமித்திரர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகத்தியர் சனந்தனர் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் பரணதேவ நாயனார் சேக்கிழார் அருணகிரிநாதர் ரமண மாமுனிவர் . பாமாலை : சம்பந்தர் அப்பர் மாணிக்கவாசகர் பரணதேவ நாயனார் சேக்கிழார் அருணகிரிநாதர் . நாயன்மார்களால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே . பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே . திருநாவுக்கரசரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்டோ ள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே . வட்ட னைம்மதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ . ' பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே . ' ' தென்னாடு மாணிக்கவாசகரால் அருளப்பட்டவை ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய் . செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய் . ' ' திருத்தலச் சிறப்பு இலிங்கமே மலையாக அமைந்த தலம் . தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவத்தலங்களுக்குள் ஒன்று . ஐம்பூதத் தலங்களில் முக்கியமான நெருப்புத்தலம் இதுவாகும் . நினைத்தாலே முத்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம் . நான் என்ற அகந்தை அழித்த தலம் . உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் . உமையம்மைக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து சோதி வடிவமாய் காட்சி தந்த தலம் . அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முத்திபேறு அடைந்த தலம் . அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டு ஆட்கொண்ட தலம் . எல்லா சிவத்தலத்திலும் மூலவர் பின்புறமுள்ள இலிங்கோற்பவர் தோன்றிய தலம் . ஒன்பது கோபுரம் ஏழு வீதிகளுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் . தென்னிந்தியா விலேயே 2 வது உயரமான கோபுரம் ( 217 அடி ) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம் . தமிழகத்தின் திருப்பதி என்று AALITO போற்றப்படுமளவுக்கு பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சத்தி வாய்ந்த சிவத்தலம் . 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் . ஏராளமான சித்தர்கள் ஞானிகள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை . 03 அம்மனின் ஐம்பத்தொரு சத்தி பீடங்களில் இது அருணை சத்தி பீடம் ஆகும் . முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும் . இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது . இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும் . சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபுரங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும் . தெ கிரிவல சிறப்பு : கார்த்திகைத் திங்கள் சகடு ( கார்த்திகை ) விண்மீன் கூடிய நாளில் தான் உமையம்மைக்கு எம்பெருமான் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய நாளில் இலிங்கமாக விளங்கும் திருவண்னாமலையை சுற்றுவது சிறப்பு . இதுவே ' கிரிவலம் ' எனப்படுகின்றது . முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ்த் திங்கள் உதிப்பின் ( மாதப்பிறப்பு ) போதும் கழுவாய் காலத்திலும் மலையை வலம் வந்து அருள் பெற்றார்களாம் . எனவே அந்த நாட்களில் கிரிவலம் வருவதும் சிறப்பு . விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை . அண்ணாமலை என பெயர் வர காரணம் : ' அண்ணல் ' என்றால் நெருங்குதல் எனப் பொருள் . ' அண்ணா ' என்றால் நெருங்காமை எனப் பொருள் . அதாவது நான்முகனுக்கும் திருமாலுக்கும் அவர்களில் யார் பெரியவர் என்ற மோதல் வந்தபோது பரம்பொருளே இந்த மலையில் பெரிய தீப்பிழம்பாய் தோன்றினார் . உடனே இருவரும் இதன் அடி / முடியை யார் காண்கிறார்களோ அவரே பெரியவர் என நான்முகன் அன்னமாக மாறி முடியையும் திருமால் பன்றியாக மாறி அடியையும் தேடி சென்ற போது எம்பெருமான் தலையிலிருந்து தாழம்பூவொன்று விழுந்துகொண்டிருந்தது . அதை சந்தித்த நான்முகன் எங்கு இருந்து வருகிறாய் என வினவ தாழம்பூ நான் எம்பெருமானின் தலையிலிருந்து விழுகிறேன் . என கூறியது . முடியை காண்பது அரிது என உணர்ந்த நான்முகன் தான் முடியயை கண்டுவிட்டதாக பொய் கூறுகிறார் . அதற்கு தாழம்பூவும் துணை நின்றது . இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நான்முகனுக்கு கோயில் அமைக்கக்கூடாது என்றும் தாழம்பூவை சிவபூசைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் தண்டனை அளித்தார் . எனவே முடிவாக மலையில் தீப்பிழம்பாக எழுந்த எம்பெருமானின் அடிமுடியை நெருங்கவே முடியவில்லை . எனவேதான் அண்ணாமலை என பெயர் பெற்றது . திருக்கோயில் அமைப்பு கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன . தென்னிந் தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம் ( 217 அடி ) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம் இதுவாகும் . இக்கோயிலில் உள்ளே ஆறு வீதிகள் உள்ளன . 142 சன்னதிகள் 22 பிள்ளையார்கள் 306 மண்டபங்கள் 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் அதனடியில் பாதாள இலிங்கம் பாலரமணர் தவம் செய்த இடம் ) 43 செப்புச் சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்களையும் கொண்டது . திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 வருடங்கள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயிலாகும் . தீபக்காட்சி மண்டபம் : அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபக்காட்சி மண்டபம் உள்ளது . மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202 ல் எழுப்பினார் . இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர் . இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு ஐம்மூர்த்திகளும் எழுந்தருளுவர் . அதாவது கார்த்திகைத் திங்கள் சகடு ( கார்த்திகை ) நாண்மீனும் கூடிய நாளில் அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பின் அதன் மூலம் ஐந்து தீபங்கள் ஏற்றி அவை ஐந்தையும் ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து பூசை செய்வார் . இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது . பின் மாலையில் தீபக்காட்சி மண்டபத்தில் ஐம்மூர்த்திகள் எழுந்தருளப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்பட மலையில் பெரிய கொப்பரையில் மகாதீபம் எனப்படும் பெருந்தீபம் ஏற்றப்படும் . இப்பெருந்தீபச் சோதியே திருமால் நான்முக னுக்கிடையே தோன்றிய பரம்பொருள் சோதி என நம்பப்படு கின்றது . இந்த தீபச்சோதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தெரியும் . இச்சோதியை காண மாபெரும் கூட்டம் திரளும் . திருவண்ணாமலையில் தீபத்திருநாள் ஓர் சிறப்பான திருவிழாவாக நடைபெறுவது முக்கியம்சமாகும் . எனவே நாமும் எம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் தீரா ஆயுளும் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ நினைத்தாலே முத்தி தரும் உண்ணாமுலை அம்மை உடனுறை அண்ணாமலையானை நினைத்து இயலுமானவர்கள் சென்று கிரிவலப்பேறையும் பெற்று போற்றிப் பரவிடுவோமாக . தீயிடை மூன்றாய் திகழ்ந்த அண்ணாமலையானே போற்றி திருச்சிற்றம்பலம் சிவத்திரு . தென்னாடு நிலவன் தென்னாடு - செந்தமிழாகம சிவமடம் nilavan@thennadu.org