தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

தெ 04 தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 தென்னாடு தப்பிளாள் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் காந்தமிழாய்வருப்பர்ளார். செந்தமிழில் மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org thdடமாறு மார்கழிப் பெருவிழா! தமிழ் இலக்கிய வரலாற்றின் மணிமகுடமாய் திகழும் சிலப்பதி காரம், பழந்தமிழர்கள் வருடம் முழுவதும் விழாக்களை கொண்டாடி மகிழ்ததாகச் சொல்கின்றது. அந்நியர் ஆட்சியாலும் காலமாற்றங்களாலும் அவை குறைந்து சுருங்கி திங்கள் ஒரு விழாவாகி, அதுவும் அற்றுப்போய், வருடத்தில் ஓர் இரு விழாக்களோடு எமது விழாப்பண்பாடு கவலைக்கிடமாக குறுகிப்போனது தான் பெரும் சோகம்! பனியும் குளிருமாக, உடலளவில் சோம்பலை ஏற்படுத்தும் காலப்பகுதி யான மார்கழி, தைத் திங்கள்களில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாடு செய்து, புத்துணர்வை உடலுக்குள் ஏற்படுத்துவதற்காக அதிக விரதங்களை முன்னவர்கள் அப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தினர். ஆனால் பின் வந்தவர்கள், மார்கழித் திங்களை பீடைத்திங்கள் என்றனர்! உடலுக்கு காலநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் குறித்த திங்கள் கொடுப்பதாலும் கடும் குளிரினாலும் இந்த அவப் பெயர் மார்கழிக்கு ஏற்பட்டது! ஆனால் மார்கழியை பழந்தமிழர்கள் பீடு உடைய திங்கள் என்றே அழைத்தனர். அதாவது உயர்வுடைய திங்கள் என்பது அதன் பொருள்! சிவனுக்குரிய திருவாதிரை நன்னாள் உற்சவம் கொள்வதும், திருமாலுக்குரிய சுவர்க்க வாசல் திறக்கும் பதிற்றொருமை (ஏகாதசி) பிறைநன்னாள் வருவதும், மாணிவாசகரும் ஆண்டாளும் பாடிப்பரவியதும் இந்த மார்கழியில் தான். இந்த மார்கழியைத் தான்! சிவபூமி என்று சிறப்பிக்கப்படும் எங்கள் நிலத்தில், 'நாம் இந்த மார்கழிக்கு என்ன முக்கியத்துவத்தை கொடுத்தோம்.?' என்ற கேள்வி எம்மில் பலருக்கு இருக்கலாம். நவீனம் வளர்ச்சி பெற முதலும், கையடக்கப் பேசிகள் எம் கைகால்களுக்கு விலங்கிட முதலும், திருவாதிரை நாளுக்கு, திருவெம்பாவை விரதம் இருந்து, அதிகாலை எழுந்து சங்கு முழங்கி, சேமக்கலம் அடித்து, சிறுவர்களாய் வீதிகளெங்கும் திருவெம்பாவை பாடல்களைப் பாடி, மற்றவர்களையும் துயிலெழுப்பி, புத்துணர்வும் இறைசிந்தனை உணர்வும் சிறக்கவே இந்த மண்ணில் வாழ்ந்தோம்! காலமாற்றம் தந்த கோலமாற்றத்தால், எங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்தப் புதையல்களை எல்லாம் கையளிக்க முடியாதவர்களாய் ஆனோம். இந்த நிலை மாறவேண்டும், சைவத்தின் சாரமும், வாழ்வியல் கோலமும் இந்த மண்ணில் மீண்டும் மீள வேண்டும் என்பதற்காகவே தென்னாடு செந்தமிழாகம சிவமடம் இந்த வருடம் தொடங்கியுள்ள மார்கழிப் பெருவிழா, வருடவருடமாய் தொடர வேண்டும். தேவர்களும் வந்து தொழும் சிவனின் ஆதிரை நன்னாளை அடிப்படையாக கொண்டு, "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்” என்று சேந்தனார் திருப்பல்லாண்டில் பாடிய வண்ணம், இந்த சிவபூமியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து, பாரார் தொல்புகழ் பாடி ஆட வேண்டும் என்பதே எம் பெருங்கனவு! அது நனவாக அவன் அருள்பொலியும் பார்வை கிடைக்க வேண்டி விரும்பிப் பணிகின்றோம். "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும பெற்றியனே” என்கிறார் மாணிக்கவாசகர். பழமையும் புதுமையுமாக நின்று அருளும் இறைவன் பெருங்கருணை வாய்த்ததாலேயே, இந்தப் புதுமைகள் மிளிரும் ஆண்டிலும், இந்த மார்கழிப் பெருவிழா சாத்தியமானது என்பதே சத்தியம்! "இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும்" ஈசன் பெரும்புகழை எமை அடுத்து வரும் சந்ததிக்கும் சொல்லிக் கொடுத்தும், தமிழ்வழிப்பாட்டு நடைமுறைகளை பயிற்றுவித்தும், இந்த மண்மேல் அவர்கள் நல்ல வண்ணம் வாழ்ந்த படியே இறைபணி இயற்ற, தென்னாடு செந்தமிழாகம சிவமடம் எடுக்கும் முயற்சிகளுக்கு முத்தாய்பாய், இந்த மார்கழி பெருவிழா முத்திரை கொடுக்கும் என்பதே எம் அனைவரதும் பெரும் எதிர்பார்ப்பாகும். பரவியுள்ள தீநுண்மிப் பெருந்தொற்றிலிருந்து எம்மை தற்காக்கும் முன்னாய்த்த சுகாதார நடைமுறைகளோடு டிசம்பர் 25, 26 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெறப்போகும், இந்த மார்கழிப் பெருவிழாவிற்கு மெய்யன்பர்களையும், சைவத்தமிழ் நல்லுறவுகளையும் இருகரம் நீட்டி வரவேற்று நிற்கின்றோம்!. தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீகப் பேச்சாளர் போற்றுதற்குரிய சொ. சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் வருகையும் ஆன்மீகப் பேருரைகளும் திருமுறைத்த தீந்தமிழ் இசையோடு இசை அரங்கமும் நிகழ்வைச் சிறப்புச் செய்யக் காத்திருக்கின்றன! சைவ நன்னெறி தாம் தழைத்து ஓங்க நாடு நலம் பெற்றுச் சிறக்க இந்த மார்கழிப் பெருவிழா முதற்கல்லாய் அமைய வேண்டி அடியார் தம்மையும், அடியார் உள்ளத்துள் ஒளியாகி நின்று அருளும் இறையனார் பெருங்கருணையையும் மீண்டும் மீண்டும் அகத் திலிருத்தி சைவர்கள் எல்லோரும் இவ்விழாச் சிறக்க வணங்குவோமாக! "வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலேரெம்பாவாய்” திருச்சிற்றம்பலம் ''திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை." கொரோனாத் தொற்று முற்றுமுழுதாக நீங்கி நாட்டு மக்கள் அனைவரும் நலம்பெற, இறையருள் வேண்டி,யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில், கொக்குவில் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் அர்ச்சகர்களினால் செந்தமிழாகம முறையில், மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி (கணபதி வேள்வி), D Jyov சென்ற கார்த்திகைத் திங்கள் 23ம் நாள் (09.12.2021) செம்மைமிகு முறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வானது காலை 08 மணியளவில் பிள்ளையார் பெருங்கதை விரத இறுதிநாளை முன்னிட்டுப் பெருங்கதைப் படிப்புப் பூர்த்தி நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து செந்தமிழ் ஆகம மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வியும் இடம்பெற்றது. கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் குருமார்களான சிவத்திரு. குருநாதர் உமையொருசிவம் நிகரிலரசு, சிவத்திரு. உயிரொளிசிவம் சிவநாதன்,சிவத்திரு. அவிரொளிசிவம் உமைகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு செந்தமிழ் ஆகம மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வியை குப்பிளான் மண்ணிலே முதன்முதலில் சிறப்புற நிகழ்த்தினர். நல்லை ஆதீன முதல்வர் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அருளாசியுரை வழங்கியமை சிறப்பம்சமாகும். கணபதி வேள்வியைத் தொடர்ந்து, தெய்வத் தமிழிலே விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சனப் பூசை வழிபாடும், திருத்தாண்டாகப் போற்றி அர்ச்சனையுடன் சிறப்பு பூசையும் நடைபெற்றது. சிவலிங்கப் பெருமானுக்கும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அடியார் களுக்கு அமுதும் செய்விக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. இதேவேளை, மேற்படி நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர், கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் குருமார்கள், தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் மேலாளர் தென்னாடு நிலவன், குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் பொறுப்பாளர் எஸ்.சிறீதரன், குப்பிழான் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத் தலைவரும், குப்பிழான் தெற்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவையாளருமான சோ.பரமநாதன் மற்றும் கிராமத்து அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இது, சைவமும் தமிழும் தளைத்தோங்கச் செய்யவதற்கு, தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியின் முதல்படியாகும். இதுபோல் பலபடிகள் ஏறி, சிவபூமியாம் இலங்கைத் திருநாட்டில், மீண்டும் தெய்வத்தமிழ் மரபு தனித்துவம் பெற்று விளங்க, கொக்குவில் பதியில் உறைகின்ற ஐம்பூதநாதாப் பெருமான் திருவருள் கைகூடட்டும். தென்னாடுடைய சிவனேப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ஆக்கம் - சிவத்திரு செ. ரவிசாந் - Jaffna vision தொகுப்பு - சிவத்திரு தென்னாடு நிலவன்
தெ 04 தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 தென்னாடு தப்பிளாள் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் காந்தமிழாய்வருப்பர்ளார் . செந்தமிழில் மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org thd டமாறு மார்கழிப் பெருவிழா ! தமிழ் இலக்கிய வரலாற்றின் மணிமகுடமாய் திகழும் சிலப்பதி காரம் பழந்தமிழர்கள் வருடம் முழுவதும் விழாக்களை கொண்டாடி மகிழ்ததாகச் சொல்கின்றது . அந்நியர் ஆட்சியாலும் காலமாற்றங்களாலும் அவை குறைந்து சுருங்கி திங்கள் ஒரு விழாவாகி அதுவும் அற்றுப்போய் வருடத்தில் ஓர் இரு விழாக்களோடு எமது விழாப்பண்பாடு கவலைக்கிடமாக குறுகிப்போனது தான் பெரும் சோகம் ! பனியும் குளிருமாக உடலளவில் சோம்பலை ஏற்படுத்தும் காலப்பகுதி யான மார்கழி தைத் திங்கள்களில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாடு செய்து புத்துணர்வை உடலுக்குள் ஏற்படுத்துவதற்காக அதிக விரதங்களை முன்னவர்கள் அப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தினர் . ஆனால் பின் வந்தவர்கள் மார்கழித் திங்களை பீடைத்திங்கள் என்றனர் ! உடலுக்கு காலநிலை மாற்றத்தால் சளி காய்ச்சல் போன்ற நோய்களைக் குறித்த திங்கள் கொடுப்பதாலும் கடும் குளிரினாலும் இந்த அவப் பெயர் மார்கழிக்கு ஏற்பட்டது ! ஆனால் மார்கழியை பழந்தமிழர்கள் பீடு உடைய திங்கள் என்றே அழைத்தனர் . அதாவது உயர்வுடைய திங்கள் என்பது அதன் பொருள் ! சிவனுக்குரிய திருவாதிரை நன்னாள் உற்சவம் கொள்வதும் திருமாலுக்குரிய சுவர்க்க வாசல் திறக்கும் பதிற்றொருமை ( ஏகாதசி ) பிறைநன்னாள் வருவதும் மாணிவாசகரும் ஆண்டாளும் பாடிப்பரவியதும் இந்த மார்கழியில் தான் . இந்த மார்கழியைத் தான் ! சிவபூமி என்று சிறப்பிக்கப்படும் எங்கள் நிலத்தில் ' நாம் இந்த மார்கழிக்கு என்ன முக்கியத்துவத்தை கொடுத்தோம் . ? ' என்ற கேள்வி எம்மில் பலருக்கு இருக்கலாம் . நவீனம் வளர்ச்சி பெற முதலும் கையடக்கப் பேசிகள் எம் கைகால்களுக்கு விலங்கிட முதலும் திருவாதிரை நாளுக்கு திருவெம்பாவை விரதம் இருந்து அதிகாலை எழுந்து சங்கு முழங்கி சேமக்கலம் அடித்து சிறுவர்களாய் வீதிகளெங்கும் திருவெம்பாவை பாடல்களைப் பாடி மற்றவர்களையும் துயிலெழுப்பி புத்துணர்வும் இறைசிந்தனை உணர்வும் சிறக்கவே இந்த மண்ணில் வாழ்ந்தோம் ! காலமாற்றம் தந்த கோலமாற்றத்தால் எங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்தப் புதையல்களை எல்லாம் கையளிக்க முடியாதவர்களாய் ஆனோம் . இந்த நிலை மாறவேண்டும் சைவத்தின் சாரமும் வாழ்வியல் கோலமும் இந்த மண்ணில் மீண்டும் மீள வேண்டும் என்பதற்காகவே தென்னாடு செந்தமிழாகம சிவமடம் இந்த வருடம் தொடங்கியுள்ள மார்கழிப் பெருவிழா வருடவருடமாய் தொடர வேண்டும் . தேவர்களும் வந்து தொழும் சிவனின் ஆதிரை நன்னாளை அடிப்படையாக கொண்டு ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் என்று சேந்தனார் திருப்பல்லாண்டில் பாடிய வண்ணம் இந்த சிவபூமியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடி ஆட வேண்டும் என்பதே எம் பெருங்கனவு ! அது நனவாக அவன் அருள்பொலியும் பார்வை கிடைக்க வேண்டி விரும்பிப் பணிகின்றோம் . முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும பெற்றியனே என்கிறார் மாணிக்கவாசகர் . பழமையும் புதுமையுமாக நின்று அருளும் இறைவன் பெருங்கருணை வாய்த்ததாலேயே இந்தப் புதுமைகள் மிளிரும் ஆண்டிலும் இந்த மார்கழிப் பெருவிழா சாத்தியமானது என்பதே சத்தியம் ! இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் ஈசன் பெரும்புகழை எமை அடுத்து வரும் சந்ததிக்கும் சொல்லிக் கொடுத்தும் தமிழ்வழிப்பாட்டு நடைமுறைகளை பயிற்றுவித்தும் இந்த மண்மேல் அவர்கள் நல்ல வண்ணம் வாழ்ந்த படியே இறைபணி இயற்ற தென்னாடு செந்தமிழாகம சிவமடம் எடுக்கும் முயற்சிகளுக்கு முத்தாய்பாய் இந்த மார்கழி பெருவிழா முத்திரை கொடுக்கும் என்பதே எம் அனைவரதும் பெரும் எதிர்பார்ப்பாகும் . பரவியுள்ள தீநுண்மிப் பெருந்தொற்றிலிருந்து எம்மை தற்காக்கும் முன்னாய்த்த சுகாதார நடைமுறைகளோடு டிசம்பர் 25 26 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெறப்போகும் இந்த மார்கழிப் பெருவிழாவிற்கு மெய்யன்பர்களையும் சைவத்தமிழ் நல்லுறவுகளையும் இருகரம் நீட்டி வரவேற்று நிற்கின்றோம் !. தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீகப் பேச்சாளர் போற்றுதற்குரிய சொ . சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் வருகையும் ஆன்மீகப் பேருரைகளும் திருமுறைத்த தீந்தமிழ் இசையோடு இசை அரங்கமும் நிகழ்வைச் சிறப்புச் செய்யக் காத்திருக்கின்றன ! சைவ நன்னெறி தாம் தழைத்து ஓங்க நாடு நலம் பெற்றுச் சிறக்க இந்த மார்கழிப் பெருவிழா முதற்கல்லாய் அமைய வேண்டி அடியார் தம்மையும் அடியார் உள்ளத்துள் ஒளியாகி நின்று அருளும் இறையனார் பெருங்கருணையையும் மீண்டும் மீண்டும் அகத் திலிருத்தி சைவர்கள் எல்லோரும் இவ்விழாச் சிறக்க வணங்குவோமாக ! வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலேரெம்பாவாய் திருச்சிற்றம்பலம் ' ' திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை . கொரோனாத் தொற்று முற்றுமுழுதாக நீங்கி நாட்டு மக்கள் அனைவரும் நலம்பெற இறையருள் வேண்டி யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கொக்குவில் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் அர்ச்சகர்களினால் செந்தமிழாகம முறையில் மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி ( கணபதி வேள்வி ) D Jyov சென்ற கார்த்திகைத் திங்கள் 23 ம் நாள் ( 09.12.2021 ) செம்மைமிகு முறையில் நடைபெற்று முடிந்தது . இந்நிகழ்வானது காலை 08 மணியளவில் பிள்ளையார் பெருங்கதை விரத இறுதிநாளை முன்னிட்டுப் பெருங்கதைப் படிப்புப் பூர்த்தி நிகழ்வு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து செந்தமிழ் ஆகம மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வியும் இடம்பெற்றது . கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் குருமார்களான சிவத்திரு . குருநாதர் உமையொருசிவம் நிகரிலரசு சிவத்திரு . உயிரொளிசிவம் சிவநாதன் சிவத்திரு . அவிரொளிசிவம் உமைகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு செந்தமிழ் ஆகம மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வியை குப்பிளான் மண்ணிலே முதன்முதலில் சிறப்புற நிகழ்த்தினர் . நல்லை ஆதீன முதல்வர் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அருளாசியுரை வழங்கியமை சிறப்பம்சமாகும் . கணபதி வேள்வியைத் தொடர்ந்து தெய்வத் தமிழிலே விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சனப் பூசை வழிபாடும் திருத்தாண்டாகப் போற்றி அர்ச்சனையுடன் சிறப்பு பூசையும் நடைபெற்றது . சிவலிங்கப் பெருமானுக்கும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது . இதனைத் தொடர்ந்து அடியார் களுக்கு அமுதும் செய்விக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது . இதேவேளை மேற்படி நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் குருமார்கள் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் மேலாளர் தென்னாடு நிலவன் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் பொறுப்பாளர் எஸ்.சிறீதரன் குப்பிழான் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத் தலைவரும் குப்பிழான் தெற்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவையாளருமான சோ.பரமநாதன் மற்றும் கிராமத்து அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் . இது சைவமும் தமிழும் தளைத்தோங்கச் செய்யவதற்கு தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியின் முதல்படியாகும் . இதுபோல் பலபடிகள் ஏறி சிவபூமியாம் இலங்கைத் திருநாட்டில் மீண்டும் தெய்வத்தமிழ் மரபு தனித்துவம் பெற்று விளங்க கொக்குவில் பதியில் உறைகின்ற ஐம்பூதநாதாப் பெருமான் திருவருள் கைகூடட்டும் . தென்னாடுடைய சிவனேப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ஆக்கம் - சிவத்திரு செ . ரவிசாந் - Jaffna vision தொகுப்பு - சிவத்திரு தென்னாடு நிலவன்