இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயலை நம் சிவன் செய்தது தமிழ் மொழியில் மட்டுமே. ஆகவேதான் மணிவாசகர் "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை" (திருவா சகம்-திருஅம் மானை -10) என்று பாடினார். "தண் ணார் தமிழ்” என்றால் காதலைப்பற்றிக் கூறிய தமிழ் என்று பொருள்படும். 5.சிவனே எழுதிய இரண்டு தமிழ்சீட்டுக்கவி (Introduction letter) நமக்குக் கிடைத்திருப்பது தமிழுக் குக்கிடைத்த பேறு ஆகும். ஒன்று பதினொராம் திரு முறையிலும் மற்றொன்று உமாபதி சிவல றிலும் இடம்பெற்றுள்ளது. நக்கீரன் உரை நல்ல உரை 6. மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64ல் ஒன்று "தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்". இந்தத் திருவிளையாடல் மூலம் சிவனே எழுதிய அகத் துறைப்பாடல் ஒன்று நமக்கு கிடைத் தது. தலைவியின் நலம் புனைந்துரைத்தல் என்ற துறையில் அமைந்த அப்பாடல் மிகவும் நுட்பமானது. தலைவன் தலைவியின் காதற் சிறப்பை நன்றாக விளக்கும் இப்பாடல் சங்க இலக்கியம் எட்டுத் தொகை - குறுந்தொகை என்ற நூலில் இரண்டாம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத்தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே. 7. இறையனார் களவியலுக்கு சங்கத்திலிருந்த 49 புலவர்களும் உரைசெய்தனர். ஆனால் அதற்குச் சிறந்த உரை நக்கீரர் உரையே எனத் தீர்ப்பு அளித் தவர் உருத்திரசன்மன். அவர் பூர்வ சென்மத்தில் முருகன் சாரூபம் பெற்ற அடியவர் என்று வரலாறு நமக்குக் கூறுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சியை அருணகிரிநாத சுவாமிகள் இவ்வாறு பாடினார். "சீரான கோல கால நவமணி.. ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால் வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர குருநாதா! - திருப்புகழ் - விராலிமலை. 8. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் புகழ்ந்த தொகையடியாரில் ஒருவர் "பொய் யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" என்பது. இவர் கள் யார் என்பதை நம்பியாண்டர்நம்பி இவ்வாறு பாடினார். "தரணியின் பொய்மையிலாத் தமிழ்ச்சங்க மதிற் கபிலர் பரணர்நக் கீரர் முதல் நாற்பத்தொன்பது பல்புலவோர் அருள் நமக்கு ஈயும் திருவால வாய் அரன் சேவடிக்கே பொருள் அமைத்து இன்பக்கவிபல பாடும் புலவர்களே" திருத்தொண்டர் திருவந்தாதி - 49 9. உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்ன னுடைய அவையில் கி.மு. 31ம் ஆண்டு திருக்குறள் அரங்கேற்ற ஏற்பாடுகள் நடந்தபோது சங்கப் புலவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். அப்போது அசரீரி வாக்காக சோமசுந்தரக் கடவுள், "உருத்திரசன்மனையும் திருவள் ளுவரையும் ஆசனத்தில் அமர்த்தி, திருவள்ளுவர் அரங்கேற்ற 49 புலவர்களும் கீழே இருந்து கேட்கக்கட வீர்கள்" என்று ஆணைதந்தார். இந்த உண்மை திருவள் ளுவ மாலையில் உள்ள முதற் பாடலால் நமக்கு உணர்த்தப்படுகிறது. அப்பாடல், "திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க உருத்திரசன்மர் என உரைத்து வானில் ஒருக்க ஓ என்றது ஓர் சொல்" 10.திருக்குறளுக்குச் சாற்றுக்கவி கொடுத்தவர் சிவனே என்ற உண்மையை உறுதிப்படுத்துவதாகக் கல்லாடம் என்ற நூலும் இவ்வாறு கூறியது. "உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவன் தனக்கு வளர் கவிப் புலவர் முன் முதற் கவி பாடிய முக்கட் பெருமான்.'' தமிழ்த்தாய் நமக்குத் தாய். அவளுக்குத் தந்தை யும் தாயும் யாவர்? சிவனும் சக்தியுமே அவளுக்குத் தாய் தந்தையர் ஆவார். தமிழ்த்தாய்க்கு ஆசான் யார்? அகத்திய மகா முனிவரே. இக்கருத்தினை வலியுறுத்தும் பாரதியார் பாடல்கள். 105 "ஆனந்தக் களிப்புச் சந்தம்" ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கண மட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் தமிழ் மொழிக்கும், சைவத்திற்கும் பின்னிப் பிணைந்த இந்த உறவு உலகத் தமிழ் மக்களுக்கு வளத்தையும் வலிமையையும் தரவேண்டும் என்று சிவபெருமான் திருவடியைப் போற்றுவோம். 'தென்னாடு உடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!'
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயலை நம் சிவன் செய்தது தமிழ் மொழியில் மட்டுமே . ஆகவேதான் மணிவாசகர் தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை ( திருவா சகம் - திருஅம் மானை -10 ) என்று பாடினார் . தண் ணார் தமிழ் என்றால் காதலைப்பற்றிக் கூறிய தமிழ் என்று பொருள்படும் . 5.சிவனே எழுதிய இரண்டு தமிழ்சீட்டுக்கவி ( Introduction letter ) நமக்குக் கிடைத்திருப்பது தமிழுக் குக்கிடைத்த பேறு ஆகும் . ஒன்று பதினொராம் திரு முறையிலும் மற்றொன்று உமாபதி சிவல றிலும் இடம்பெற்றுள்ளது . நக்கீரன் உரை நல்ல உரை 6. மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64 ல் ஒன்று தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் . இந்தத் திருவிளையாடல் மூலம் சிவனே எழுதிய அகத் துறைப்பாடல் ஒன்று நமக்கு கிடைத் தது . தலைவியின் நலம் புனைந்துரைத்தல் என்ற துறையில் அமைந்த அப்பாடல் மிகவும் நுட்பமானது . தலைவன் தலைவியின் காதற் சிறப்பை நன்றாக விளக்கும் இப்பாடல் சங்க இலக்கியம் எட்டுத் தொகை - குறுந்தொகை என்ற நூலில் இரண்டாம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது . கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத்தும்பி ! காமம் செப்பாது கண்டது மொழிமோ ! பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே . 7. இறையனார் களவியலுக்கு சங்கத்திலிருந்த 49 புலவர்களும் உரைசெய்தனர் . ஆனால் அதற்குச் சிறந்த உரை நக்கீரர் உரையே எனத் தீர்ப்பு அளித் தவர் உருத்திரசன்மன் . அவர் பூர்வ சென்மத்தில் முருகன் சாரூபம் பெற்ற அடியவர் என்று வரலாறு நமக்குக் கூறுகிறது . இந்த உண்மை நிகழ்ச்சியை அருணகிரிநாத சுவாமிகள் இவ்வாறு பாடினார் . சீரான கோல கால நவமணி .. ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால் வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர குருநாதா ! - திருப்புகழ் - விராலிமலை . 8. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் புகழ்ந்த தொகையடியாரில் ஒருவர் பொய் யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்பது . இவர் கள் யார் என்பதை நம்பியாண்டர்நம்பி இவ்வாறு பாடினார் . தரணியின் பொய்மையிலாத் தமிழ்ச்சங்க மதிற் கபிலர் பரணர்நக் கீரர் முதல் நாற்பத்தொன்பது பல்புலவோர் அருள் நமக்கு ஈயும் திருவால வாய் அரன் சேவடிக்கே பொருள் அமைத்து இன்பக்கவிபல பாடும் புலவர்களே திருத்தொண்டர் திருவந்தாதி - 49 9. உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்ன னுடைய அவையில் கி.மு. 31 ம் ஆண்டு திருக்குறள் அரங்கேற்ற ஏற்பாடுகள் நடந்தபோது சங்கப் புலவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள் . அப்போது அசரீரி வாக்காக சோமசுந்தரக் கடவுள் உருத்திரசன்மனையும் திருவள் ளுவரையும் ஆசனத்தில் அமர்த்தி திருவள்ளுவர் அரங்கேற்ற 49 புலவர்களும் கீழே இருந்து கேட்கக்கட வீர்கள் என்று ஆணைதந்தார் . இந்த உண்மை திருவள் ளுவ மாலையில் உள்ள முதற் பாடலால் நமக்கு உணர்த்தப்படுகிறது . அப்பாடல் திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க உருத்திரசன்மர் என உரைத்து வானில் ஒருக்க என்றது ஓர் சொல் 10.திருக்குறளுக்குச் சாற்றுக்கவி கொடுத்தவர் சிவனே என்ற உண்மையை உறுதிப்படுத்துவதாகக் கல்லாடம் என்ற நூலும் இவ்வாறு கூறியது . உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவன் தனக்கு வளர் கவிப் புலவர் முன் முதற் கவி பாடிய முக்கட் பெருமான் . ' ' தமிழ்த்தாய் நமக்குத் தாய் . அவளுக்குத் தந்தை யும் தாயும் யாவர் ? சிவனும் சக்தியுமே அவளுக்குத் தாய் தந்தையர் ஆவார் . தமிழ்த்தாய்க்கு ஆசான் யார் ? அகத்திய மகா முனிவரே . இக்கருத்தினை வலியுறுத்தும் பாரதியார் பாடல்கள் . 105 ஆனந்தக் களிப்புச் சந்தம் ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கண மட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் பின்னிப் பிணைந்த இந்த உறவு உலகத் தமிழ் மக்களுக்கு வளத்தையும் வலிமையையும் தரவேண்டும் என்று சிவபெருமான் திருவடியைப் போற்றுவோம் . ' தென்னாடு உடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! '