இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 இங்கு வியாசரைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. இவர் துவாபர யுகத்தின் இறுதியில் வாழ்ந்தவர். பராசர முனிவருக்கும் மச்சகந்தி என்ற சத்யவதிக்கும் பிறந்தவர். வேதத்தை வகுத்தவர். புராணங்களைத் தொகுத்தவர். மகாபாரதத்தையும், பாகவதத்தையும் எழு தியவர். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன், சுகப்பிரம்ம ரிஷி ஆகியோரின் தந்தை. சுமந்து, ஜைமினி, பைலர், வைசம்பாயனர் ஆகிய மாணவர்களை உருவாக்கியவர். வேத சம்பிரதாயத்தில் மிகவும் முக்கிய இடத்தை வகிப் பவர். ஆனால் இவர் செய்த தவறும் ஒன்று உண்டு. வேதாந்தத்தின் சாரம் என்று கூறித் தான் "பிரம்ம சூத்திரம்” என்ற புதிய நூலைப் படைத்தார். 4 அத்தி யாயங்கள், 156 அதிகரணங்கள், 555 சூத்திரங்கள் இந்த நூலின் அடக்கம். இந்த நூல் தெளிவு இன்மையும் குழப்பமும் நிறைந்த நூலாக இருந்ததால் கடவுளைத் தவிர வேறு பொருள்களே இல்லை என்ற "ஏகான்மவாதக் கொள்கை" உருவாக இது வித்திட்டது. இந்திய நாட்டில் தோன்றிய மிகப் பெரிய பாடியகாரர்கள் (Commentators) என்று போற்றப்பட்ட நீலகண்ட சிவாசாரியார், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்துவர், சாயனர் என்ற வடமொழி அறிஞர்கள் இந்த நூலைப் பிரமாணமாகக் கொண்டதால் அதிகமான குழப்பங்கள் தோன்றி, பாடியகாரர்கள் ஐவரும் அந்த நூலுக்கு வேறு வேறு விளக்கங்கள் கூறியதால் சில புதிய மதக் கொள்கைகள் தோன்றின. தங்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்த அவர்கள் வேறு வேறு வாதங்களை முன்மொழிந்து, வேறு வேறு சம்பிரதாயங்களும் (doctrinal traditions) தோன்றுவ தற்குக் காரண புருஷர்களாக அவர்கள் இருந்தனர். வேதச் சொற்களான மாயா, ஜீவாத்மா, பரமாத்மா, சத்து, சித்து, ஆனந்தம், அத்துவிதம், நிர்க்குணம் என்பவைகளுக்கு விபரீதமான அர்த்தங்கள் கூறப்பட்ட தற்கு இந்த பிரம்ம சூத்திரமே மூல விளங்கியது. காரணமாக பிரம்மசூத்திரத்திற்கு உண்மை விளக்கம் கூறுவோம் என்று சூள் உரைத்துத் தோன்றிய இந்த பாடியகாரர்களால் நான்கு வகையான மதங்களும் கடவுட் கொள்கைகளும் தோன்றி இன்றளவும் இந்து மதத்தில் குழப்பங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆகவே இந்தியத் தத்துவ உலகத்தில் இரு வகையான வேதாந்தங்கள் தோன்றின. வேதத்தையும் பிரம்மசூத்திரத்தையும் பிரமாணமாகக் கொண்ட வேதாந்தம். இதற்கு "ரிஷிப் பெயர்" வேதாந்தம் என்று பெயர் இடப்பட்டது. வேதத்தையும், சிவாகமங்களையும் பிரமாணமாகக் கொண்ட வேதாந்தம். இதற்கு "யோகப் பெயர்" வேதாந்தம் என்று பெயர் இடப்பட்டது. இவ் வேறுபாடு வியாசர் காலத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. அதற்கு முன் இவ்வேறுபாடு எழவில்லை. சைவ மெய்ஞ்ஞானிகள் இரண்டாவது வகை. அஃதாவது யோகப் பெயர் வேதாந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முன்னர் மேற்கோள் காட்டப் பட்ட சைவ மெய்ஞ்ஞானிகளின் வாக்குகள் அவ்வாறு அக்கருத்தில் தான் அருளப்பட்டன என்பதை நாம் உணரலாம். "வேதாந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை." என்று அவர்கள் கூறவில்லை. பிரம்ம சூத்திரத்தையும், அதற்கு மாபாடியகாரர்கள் கூறிய இடர்ப்பாடான விளக்கங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கூறினார்கள். இந்த உண்மைகளை சிவஞானசித்தியார் பரபக்கத்தையும், சங்கற்ப நிராகரணத்தையும் கூர்ந்து படித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். வேதாந்தங்களை விளக்கியவர்கள் உலகாயதர்களும் (Atheists) பௌத்தர்களும், சமணர்களும் வேதத்தையே ஏற்கவில்லையாதலால், வியாசரைப் பற்றிய விவாதம் அவர்களுக்குத் தேவை யற்றது. ஆகவே வேதாந்தம் என்ற சொல்லையே அவர் கள் நூல்களில் பயன்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருவகை வேதாந்தங்களையும் தெளிவாகக் கூறி பிற்காலத்தில் நமக்கு உண்மையை விளக்கிவர்கள் இருவர். 1. திருவாவடுதுறை ஆதீனப் பரம்பரையில் வந்த சிவஞான முனிவர் அருளிய 'சிவஞானபோத மாபாடியத்தில்' இவ்வேறுபாடு விளக்கப்பட்டது. 2. இலங்கையில் குப்பிழான் என்ற ஊரில் பிறந்தவரும், நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவருமாகிய காசி வாசி செந்திநாதய்யர் செய்த "சைவ வேதாந்தம்" என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது. 107
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 இங்கு வியாசரைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது . இவர் துவாபர யுகத்தின் இறுதியில் வாழ்ந்தவர் . பராசர முனிவருக்கும் மச்சகந்தி என்ற சத்யவதிக்கும் பிறந்தவர் . வேதத்தை வகுத்தவர் . புராணங்களைத் தொகுத்தவர் . மகாபாரதத்தையும் பாகவதத்தையும் எழு தியவர் . திருதராஷ்டிரன் பாண்டு விதுரன் சுகப்பிரம்ம ரிஷி ஆகியோரின் தந்தை . சுமந்து ஜைமினி பைலர் வைசம்பாயனர் ஆகிய மாணவர்களை உருவாக்கியவர் . வேத சம்பிரதாயத்தில் மிகவும் முக்கிய இடத்தை வகிப் பவர் . ஆனால் இவர் செய்த தவறும் ஒன்று உண்டு . வேதாந்தத்தின் சாரம் என்று கூறித் தான் பிரம்ம சூத்திரம் என்ற புதிய நூலைப் படைத்தார் . 4 அத்தி யாயங்கள் 156 அதிகரணங்கள் 555 சூத்திரங்கள் இந்த நூலின் அடக்கம் . இந்த நூல் தெளிவு இன்மையும் குழப்பமும் நிறைந்த நூலாக இருந்ததால் கடவுளைத் தவிர வேறு பொருள்களே இல்லை என்ற ஏகான்மவாதக் கொள்கை உருவாக இது வித்திட்டது . இந்திய நாட்டில் தோன்றிய மிகப் பெரிய பாடியகாரர்கள் ( Commentators ) என்று போற்றப்பட்ட நீலகண்ட சிவாசாரியார் ஆதிசங்கரர் இராமானுஜர் மத்துவர் சாயனர் என்ற வடமொழி அறிஞர்கள் இந்த நூலைப் பிரமாணமாகக் கொண்டதால் அதிகமான குழப்பங்கள் தோன்றி பாடியகாரர்கள் ஐவரும் அந்த நூலுக்கு வேறு வேறு விளக்கங்கள் கூறியதால் சில புதிய மதக் கொள்கைகள் தோன்றின . தங்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்த அவர்கள் வேறு வேறு வாதங்களை முன்மொழிந்து வேறு வேறு சம்பிரதாயங்களும் ( doctrinal traditions ) தோன்றுவ தற்குக் காரண புருஷர்களாக அவர்கள் இருந்தனர் . வேதச் சொற்களான மாயா ஜீவாத்மா பரமாத்மா சத்து சித்து ஆனந்தம் அத்துவிதம் நிர்க்குணம் என்பவைகளுக்கு விபரீதமான அர்த்தங்கள் கூறப்பட்ட தற்கு இந்த பிரம்ம சூத்திரமே மூல விளங்கியது . காரணமாக பிரம்மசூத்திரத்திற்கு உண்மை விளக்கம் கூறுவோம் என்று சூள் உரைத்துத் தோன்றிய இந்த பாடியகாரர்களால் நான்கு வகையான மதங்களும் கடவுட் கொள்கைகளும் தோன்றி இன்றளவும் இந்து மதத்தில் குழப்பங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் . ஆகவே இந்தியத் தத்துவ உலகத்தில் இரு வகையான வேதாந்தங்கள் தோன்றின . வேதத்தையும் பிரம்மசூத்திரத்தையும் பிரமாணமாகக் கொண்ட வேதாந்தம் . இதற்கு ரிஷிப் பெயர் வேதாந்தம் என்று பெயர் இடப்பட்டது . வேதத்தையும் சிவாகமங்களையும் பிரமாணமாகக் கொண்ட வேதாந்தம் . இதற்கு யோகப் பெயர் வேதாந்தம் என்று பெயர் இடப்பட்டது . இவ் வேறுபாடு வியாசர் காலத்திற்குப் பின்னரே ஏற்பட்டது . அதற்கு முன் இவ்வேறுபாடு எழவில்லை . சைவ மெய்ஞ்ஞானிகள் இரண்டாவது வகை . அஃதாவது யோகப் பெயர் வேதாந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் . முன்னர் மேற்கோள் காட்டப் பட்ட சைவ மெய்ஞ்ஞானிகளின் வாக்குகள் அவ்வாறு அக்கருத்தில் தான் அருளப்பட்டன என்பதை நாம் உணரலாம் . வேதாந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை . என்று அவர்கள் கூறவில்லை . பிரம்ம சூத்திரத்தையும் அதற்கு மாபாடியகாரர்கள் கூறிய இடர்ப்பாடான விளக்கங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கூறினார்கள் . இந்த உண்மைகளை சிவஞானசித்தியார் பரபக்கத்தையும் சங்கற்ப நிராகரணத்தையும் கூர்ந்து படித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும் . வேதாந்தங்களை விளக்கியவர்கள் உலகாயதர்களும் ( Atheists ) பௌத்தர்களும் சமணர்களும் வேதத்தையே ஏற்கவில்லையாதலால் வியாசரைப் பற்றிய விவாதம் அவர்களுக்குத் தேவை யற்றது . ஆகவே வேதாந்தம் என்ற சொல்லையே அவர் கள் நூல்களில் பயன்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் . இருவகை வேதாந்தங்களையும் தெளிவாகக் கூறி பிற்காலத்தில் நமக்கு உண்மையை விளக்கிவர்கள் இருவர் . 1. திருவாவடுதுறை ஆதீனப் பரம்பரையில் வந்த சிவஞான முனிவர் அருளிய ' சிவஞானபோத மாபாடியத்தில் ' இவ்வேறுபாடு விளக்கப்பட்டது . 2. இலங்கையில் குப்பிழான் என்ற ஊரில் பிறந்தவரும் நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவருமாகிய காசி வாசி செந்திநாதய்யர் செய்த சைவ வேதாந்தம் என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது . 107