இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 ஆலயங்களும் எதிர்காலமும் சைவப் புலவர் சிவஸ்ரீ பா. வசந்தக்குருக்கள் (B.A. Hons) ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோயில், இலண்டன் மனித வாழ்வை வளம்படுத்தும் ஒரு புனித நிலையமாக ஆலயங்கள் கருதப்படுகின்றன. சமய வர லாற்றின் ஆரம்ப காலக்கட்டங்களில் ஆலயக் கட்டி டங்கள் இல்லை. இன்றைக்கு ஐயாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் தெய்வீக சக்திகளை நேரடியாக உள்வாங்கக் கூடிய அனுபூதி மான்கள் முனிவர்கள் சித்தர்கள் இருந் துள்ளனர் என்பது உண்மை. வேதங்கள் கூட எழுதாமல் காதினால் கேட்கப் பட்டு வந்த ஒரு ஞான நூல். இதிலிருந்து அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் ஞாபக சக்தியும், உள்வாங்கும் வலி மையும் படைத்திருந்தனர் என்பதையும் யாம் உணர முடியும். உலகியல் விடயங்களில் தங்களை அதிகம் ஈடு படுத்தாமல் ஆன்மீக தொடர்புடனே அவர்கள் இருந்த காரணத்தால் அவர்களுக்கும், தெய்வீக ஆற்றலுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது அத்தொடர்பைப் பயன் படுத்தி பல அதீதச் சக்திகளை முனிவர்கள் உலகிற்கு வழங்கினார்கள். ஆனால் இன்று உலக வாழ்க்கை தான் முதல் நிலையாக எம்மைப் பிடித்துள்ளது. ஆன்மீக வாழ்வு என்பது இரண்டாவது நிலை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வார்கள். உலகியல் வாழ்விலே தொண்ணூறு வீதம் வாழும் எமக்கு பத்து வீதமாவது தெய்வீகத் தொடர்பை ஏற்படுத் தும் சாதனங்களாக ஆலயங்களும், திருவுருவங்களும், வழிபாட்டு மரபுகளும் உதவிபுரிகின்றன. ஆதிகால முனிவர்கள் சித்தர்கள் போல் நேரடியான இறைத் தொடர்பு எமக்குக் கிடைக்காத நிலையில் திருக் கோயில்கள் ஆன்ம ஊடகங்களாக எம்மை வழிப்படுத்து கின்றன. தினமும் சிறிது சிறிதாக ஆலய வழிபாட்டில் எம்மை ஈடுபடுத்தும் போது எம்மையறியாத ஒரு உணர்வு ஆன்மாவையும், இறைவனையும் இணைக் கின்றது. இதனையே "உணர்வு சூழ் கடந்த ஓர் உணர்வே எனத் திருவிசைப்பா கூறுகிறது. ஆண்டவனிடத்து அன்பு, மரியாதை, பக்தி என்பன படிப்படியாக எம்மிடம் குடிகொள்கின்றன. உடற்பசி வருவது போல் எம்மை அறியாமல் ஆன்மீகப் பசி ஒன்று தோன்றும். இறை வழிபாட்டில் எம்மை ஈடுபடுத்துவது, ஆலயங்களுக்கு நாள் தவறாமல் செல்வது, அவன் 110 புகழைப் பாடுவது, சமய நூல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டுதல், திருவுருவத்திற்கு முன்னால் நின்று மனதை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்வது, தேவாரங் களைப் பாராயணம் செய்வது போன்ற நிலைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றோம். கடவுள் வழிபாடு உள்ளத்தைத் தூய்மைப்படுத்து கின்றது என்ற உண்மையினை யாம் உணர்கின்றோம். ஆலய வழிபாட்டில் உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்பன அடங்குகின்றன. யோகம், தியானம் என்பன மனத்தோடு சம்பந்தப்படுகின்றன. இதற்கு மனப்பக்குவம் நிறைய வேண்டும். மனப்பக்குவத்திற்கு பூசைகள் ஆலய வழிபாட்டில் செய்யும் பூசை, வழிபாடு என்பன மனத்தைப் பக்குவ நிலைக்கு கொண்டு வரக்கூடியவை, மனப்பக்குவ நிலை சாதாரணமாக இருக்கக்கூடியவர்களுக்கும், யோக தியான நிலைக்கு மனதை உயர்த்துவதற்கு ஆலய வழிபாடுகள் உதவு கின்றன. ஆலய வழிபாடுகள் சரியை, கிரியை, ஆகிய இருநிலைகளுக்கும் இடங்கொடுக்கின்றன. ஆலய வழிபாடுகள் நிறைவேறியவுடன் உடனே ஆலயத்தை விட்டுச் செல்லாமல் ஆலய மண்டபங்களில் சற்று அமர்ந்து செல்வது ஒரு மரபு. காரணம் மனப்பக்குவம் அடைந்த நிலையில் ஒரு இடத்தில் ஆசனமாக இருந்து மூன்றாவது நிலையான யோகத்திற்கு தயார்ப்படுத்தல் என்பதாகும். எம்மை *விக்கிரகம் புதிய சீடனுக்கு ஓர் ஊன்றுகோல் என சுவாமி விவேகானந்தர் கூறினார். தன் ஆன்மீகக் குழந்தைப் பருவத்தில் தாங்கிப் பிடிக்கும் கருவியாக அது அமைகின்றது. இறையு ணர்வை ஆரம்பிக்கும் புறச் சின்னமாக விக்கிரகங்கள் விளங்குகின்றன. எல்லையற்ற பரம் பொருள் மீது எமது மன தைக் குவியவைப்பதற்கு ஆலயங்களும், திருவுரு வங்களும் இன்றியமையாதவை. தற்காலத்தில் திருவுருவ வழிபாடு ஒன்றே கடவு ளைத் தொழுவதற்குரிய சிறந்த முறையாகும். இங்கு திருவுருவ வழிபாடு என்பது பூஜைகளை மாத்திரம்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 ஆலயங்களும் எதிர்காலமும் சைவப் புலவர் சிவஸ்ரீ பா . வசந்தக்குருக்கள் ( B.A. Hons ) ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோயில் இலண்டன் மனித வாழ்வை வளம்படுத்தும் ஒரு புனித நிலையமாக ஆலயங்கள் கருதப்படுகின்றன . சமய வர லாற்றின் ஆரம்ப காலக்கட்டங்களில் ஆலயக் கட்டி டங்கள் இல்லை . இன்றைக்கு ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் தெய்வீக சக்திகளை நேரடியாக உள்வாங்கக் கூடிய அனுபூதி மான்கள் முனிவர்கள் சித்தர்கள் இருந் துள்ளனர் என்பது உண்மை . வேதங்கள் கூட எழுதாமல் காதினால் கேட்கப் பட்டு வந்த ஒரு ஞான நூல் . இதிலிருந்து அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் ஞாபக சக்தியும் உள்வாங்கும் வலி மையும் படைத்திருந்தனர் என்பதையும் யாம் உணர முடியும் . உலகியல் விடயங்களில் தங்களை அதிகம் ஈடு படுத்தாமல் ஆன்மீக தொடர்புடனே அவர்கள் இருந்த காரணத்தால் அவர்களுக்கும் தெய்வீக ஆற்றலுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது அத்தொடர்பைப் பயன் படுத்தி பல அதீதச் சக்திகளை முனிவர்கள் உலகிற்கு வழங்கினார்கள் . ஆனால் இன்று உலக வாழ்க்கை தான் முதல் நிலையாக எம்மைப் பிடித்துள்ளது . ஆன்மீக வாழ்வு என்பது இரண்டாவது நிலை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வார்கள் . உலகியல் வாழ்விலே தொண்ணூறு வீதம் வாழும் எமக்கு பத்து வீதமாவது தெய்வீகத் தொடர்பை ஏற்படுத் தும் சாதனங்களாக ஆலயங்களும் திருவுருவங்களும் வழிபாட்டு மரபுகளும் உதவிபுரிகின்றன . ஆதிகால முனிவர்கள் சித்தர்கள் போல் நேரடியான இறைத் தொடர்பு எமக்குக் கிடைக்காத நிலையில் திருக் கோயில்கள் ஆன்ம ஊடகங்களாக எம்மை வழிப்படுத்து கின்றன . தினமும் சிறிது சிறிதாக ஆலய வழிபாட்டில் எம்மை ஈடுபடுத்தும் போது எம்மையறியாத ஒரு உணர்வு ஆன்மாவையும் இறைவனையும் இணைக் கின்றது . இதனையே உணர்வு சூழ் கடந்த ஓர் உணர்வே எனத் திருவிசைப்பா கூறுகிறது . ஆண்டவனிடத்து அன்பு மரியாதை பக்தி என்பன படிப்படியாக எம்மிடம் குடிகொள்கின்றன . உடற்பசி வருவது போல் எம்மை அறியாமல் ஆன்மீகப் பசி ஒன்று தோன்றும் . இறை வழிபாட்டில் எம்மை ஈடுபடுத்துவது ஆலயங்களுக்கு நாள் தவறாமல் செல்வது அவன் 110 புகழைப் பாடுவது சமய நூல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டுதல் திருவுருவத்திற்கு முன்னால் நின்று மனதை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்வது தேவாரங் களைப் பாராயணம் செய்வது போன்ற நிலைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றோம் . கடவுள் வழிபாடு உள்ளத்தைத் தூய்மைப்படுத்து கின்றது என்ற உண்மையினை யாம் உணர்கின்றோம் . ஆலய வழிபாட்டில் உடற்பயிற்சி மனப்பயிற்சி என்பன அடங்குகின்றன . யோகம் தியானம் என்பன மனத்தோடு சம்பந்தப்படுகின்றன . இதற்கு மனப்பக்குவம் நிறைய வேண்டும் . மனப்பக்குவத்திற்கு பூசைகள் ஆலய வழிபாட்டில் செய்யும் பூசை வழிபாடு என்பன மனத்தைப் பக்குவ நிலைக்கு கொண்டு வரக்கூடியவை மனப்பக்குவ நிலை சாதாரணமாக இருக்கக்கூடியவர்களுக்கும் யோக தியான நிலைக்கு மனதை உயர்த்துவதற்கு ஆலய வழிபாடுகள் உதவு கின்றன . ஆலய வழிபாடுகள் சரியை கிரியை ஆகிய இருநிலைகளுக்கும் இடங்கொடுக்கின்றன . ஆலய வழிபாடுகள் நிறைவேறியவுடன் உடனே ஆலயத்தை விட்டுச் செல்லாமல் ஆலய மண்டபங்களில் சற்று அமர்ந்து செல்வது ஒரு மரபு . காரணம் மனப்பக்குவம் அடைந்த நிலையில் ஒரு இடத்தில் ஆசனமாக இருந்து மூன்றாவது நிலையான யோகத்திற்கு தயார்ப்படுத்தல் என்பதாகும் . எம்மை * விக்கிரகம் புதிய சீடனுக்கு ஓர் ஊன்றுகோல் என சுவாமி விவேகானந்தர் கூறினார் . தன் ஆன்மீகக் குழந்தைப் பருவத்தில் தாங்கிப் பிடிக்கும் கருவியாக அது அமைகின்றது . இறையு ணர்வை ஆரம்பிக்கும் புறச் சின்னமாக விக்கிரகங்கள் விளங்குகின்றன . எல்லையற்ற பரம் பொருள் மீது எமது மன தைக் குவியவைப்பதற்கு ஆலயங்களும் திருவுரு வங்களும் இன்றியமையாதவை . தற்காலத்தில் திருவுருவ வழிபாடு ஒன்றே கடவு ளைத் தொழுவதற்குரிய சிறந்த முறையாகும் . இங்கு திருவுருவ வழிபாடு என்பது பூஜைகளை மாத்திரம்