இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது
சைவ மாநாடு இலண்டன் 2004
பஞ்சபுராணம்
அன்றும் இன்றும்
செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, வழக்கறிஞர் B.Sc; LL.M
சிவவழிபாட்டினரின் இறைவனாகிய சிவன்
ஐந்தெழுத்துக்கு உரியவன்; ஐந்தொழில் புரிகின்றவன்;
ஐம்புலன்களை அடக்க உதவுகின்றவன். அப்படிப்பட்ட
சிவனுக்கு ஆற்றுகின்ற வழிபாடும், ஐந்து என்ற
எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது
காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நியதி. அந்த
அடிப்படையிலேதான், சிவ வழிபாட்டின் போது, ஐந்து
திருமுறைப் பாடல்களைப் பாட வேண்டும் என்ற நியதி
தோற்றுவிக்கப்பட்டது என்று எண்ண இடமுண்டு.
யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் கலாசாரம் பஞ்ச
புராணக் கலாசாரமென்றும், (அதாவது திருமுறைக்
கலாசாரம் என்றும்) கந்தபுராணக் கலாசாரம் என்றும்
சொல்லப்படுவதுண்டு. கோயில்களில் பூச்செய்தல் என்ற
பூசை வழிபாடு நிறைவுறும்போது, பஞ்சபுராணம்
பாடுகின்ற கலாசாரம் ஈழத்தமிழராலும், புலம் பெயர்ந்து
வாழ்கின்ற ஈழத்தமிழர்களாலும், இன்றும் போற்றி
அனுசரிக்கப்படுகின்ற சமயப் பண்பாடு ஆகும்.
பஞ்சபுராணம் என்றால் என்ன? இந்தச்
சொற்றொடரைத் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில்
எங்கே காண்கின்றோம் என்ற வினா ஆராய்ச்சிக் குரியது.
"பலகோயில்களில், பதினாறு வகையான வழி
பாடுகள் முடிவடைந்ததும் பஞ்சபுராணம் பாடுவது என்ற
மரபுண்டு. ஏழு திருமுறைகளிலிருந்தும் ஏதேனும் ஒரு
தேவாரம், பின்னர் திருவாசகம், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு, பெரியபுராணப் பாடல்கள் ஆகிய
வற்றிலிருந்து ஒவ்வொரு பாடலைப்பாடி மகுடம்
இடுவதே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படும்" என்று
எழுதுகிறார் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் அவர்கள்.
ஆக, பஞ்சபுராணம் பாடும் முறை, வாழையடி
வாழை எனத் தென் தமிழகத்திலும் இடம் பெற்று
வருகின்ற மரபு என்பது போதரும்.
ஆனாலும் "பஞ்சபுராணம் பாடுதல்" உம்;
"பஞ்சமந்திரம் ஓதுதல்" உம் ஒன்றா வேறா என்று
ஐயுற்றுச் சிந்திக்கவும் வேண்டியுள்ளது.
நாவுக்கரசரின் பாடலொன்று இங்கே நினைவுக்கு
வருகின்றது.
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்தமை யுடையார் இளங்கோயிலே" (5334)
மேற்படி பாடலில், பரமன் (சிவன்) பஞ்சமந்திரம்
ஓதுகின்றவராகக் குறிக்கப்படுகின்றார். அவர் ஓதுகின்ற
பஞ்சமந்திரம் எது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
பஞ்சமந்திரம் என்றால், ஈசானம், தற்புருசம், அகோரம்,
வாம தேவம், சத்தியோயாதம் என்பன என்று கூறுவது
சரியா? நாவுக்கரசரின் வேறுமொரு பாடல்
நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது.
"மருந்தானை மந்திரிப்பார் மனத்துளானை
வளர்மதியஞ்சடையானை மகிழ்ந் தென்னுள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பிலானை
இமையவர்தம் பெருமானை உமையாள் அஞ்சக்
கருந்தான மதகளிற்றின் உரிபோர்த்தானை
கனமழுவாட் படையானைப் பலிகொண்டூரூர்
திருந்தானைத் திருவானைக் காவுளானைச்
செழுநீர்த்திரளைச் சென்றாடினேனே" (6874)
மேலே சொன்ன பாடலில் "மந்திரிப்பார்" என்ற சொல்
லில் அடங்கியுள்ள "மந்திரம்” எது? சிவாயநம என்ற
அஞ்செழுத்தா பிறிதொன்றா? இவையும் ஆராயப்பட
வேண்டியவையே.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஆனாய நாயனார்
புராணத்தில் வருகின்ற ஒரு பாடல் மனம் கொள்ளத்
தக்கது.
"திசைமுழுதும் கணநாதர் தேவர்கட்கு முன்னெருங்கி
மிசைமிடைந்து வரும் பொழுது வேற்றொலிகள் விரவாமே
அசைய எழும் குழல்நாதத்து அஞ்செழுத்தால் தமைப்பரவும்
இசைவிரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார்.”
மேற்காட்டிய பாடலில் பேசப்படுகின்ற அஞ்செழுத்தும்,
நாவுக்கரசர் தமது தேவாரத்தில் பஞ்சமந்திரம் என்று
குறிப்பிடுவதும் ஒன்றா வேறா என்பதும் ஆராய்ச்சிக்
குரியது.
பஞ்சமந்திரமும் அஞ்செழுத்து மந்திரமும் ஒன்றா
வேறா என்பது எப்படி இருப்பினும், இறைவன் இசை
விரும்பி என்பது சிவவழிபாட்டினரின் நம்பிக்கையாக
இருந்து வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இறைவனை நாதத்துக்குரியவனாக, நாதனாக,
இசைவிரும்பியாகக் கண்ட தமிழ் முன்னோர்கள்,
இசையற்ற இறைவழிபாடு உள்ளத்தை உருக்கிக்
கள்ளத்தை வெளியேற்றி உளத்தைத் தூய்மைப் படுத்த
முடியாது; அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல்
என்ற உளமாசுகளைப் போக்க முடியாது என்று
112
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பஞ்சபுராணம்
அன்றும்
இன்றும்
செல்லத்தம்பி
சிறீக்கந்தராசா
வழக்கறிஞர்
B.Sc
;
LL.M
சிவவழிபாட்டினரின்
இறைவனாகிய
சிவன்
ஐந்தெழுத்துக்கு
உரியவன்
;
ஐந்தொழில்
புரிகின்றவன்
;
ஐம்புலன்களை
அடக்க
உதவுகின்றவன்
.
அப்படிப்பட்ட
சிவனுக்கு
ஆற்றுகின்ற
வழிபாடும்
ஐந்து
என்ற
எண்ணிக்கை
கொண்டதாக
இருக்க
வேண்டும்
என்பது
காலம்
காலமாகப்
பின்பற்றப்பட்டு
வரும்
நியதி
.
அந்த
அடிப்படையிலேதான்
சிவ
வழிபாட்டின்
போது
ஐந்து
திருமுறைப்
பாடல்களைப்
பாட
வேண்டும்
என்ற
நியதி
தோற்றுவிக்கப்பட்டது
என்று
எண்ண
இடமுண்டு
.
யாழ்ப்பாணத்தமிழ்
மக்களின்
கலாசாரம்
பஞ்ச
புராணக்
கலாசாரமென்றும்
(
அதாவது
திருமுறைக்
கலாசாரம்
என்றும்
)
கந்தபுராணக்
கலாசாரம்
என்றும்
சொல்லப்படுவதுண்டு
.
கோயில்களில்
பூச்செய்தல்
என்ற
பூசை
வழிபாடு
நிறைவுறும்போது
பஞ்சபுராணம்
பாடுகின்ற
கலாசாரம்
ஈழத்தமிழராலும்
புலம்
பெயர்ந்து
வாழ்கின்ற
ஈழத்தமிழர்களாலும்
இன்றும்
போற்றி
அனுசரிக்கப்படுகின்ற
சமயப்
பண்பாடு
ஆகும்
.
பஞ்சபுராணம்
என்றால்
என்ன
?
இந்தச்
சொற்றொடரைத்
தமிழ்
இலக்கியத்தில்
முதன்முதலில்
எங்கே
காண்கின்றோம்
என்ற
வினா
ஆராய்ச்சிக்
குரியது
.
பலகோயில்களில்
பதினாறு
வகையான
வழி
பாடுகள்
முடிவடைந்ததும்
பஞ்சபுராணம்
பாடுவது
என்ற
மரபுண்டு
.
ஏழு
திருமுறைகளிலிருந்தும்
ஏதேனும்
ஒரு
தேவாரம்
பின்னர்
திருவாசகம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
பெரியபுராணப்
பாடல்கள்
ஆகிய
வற்றிலிருந்து
ஒவ்வொரு
பாடலைப்பாடி
மகுடம்
இடுவதே
பஞ்சபுராணம்
பாடுதல்
எனப்படும்
என்று
எழுதுகிறார்
தஞ்சாவூர்
பி.எம்
.
சுந்தரம்
அவர்கள்
.
ஆக
பஞ்சபுராணம்
பாடும்
முறை
வாழையடி
வாழை
எனத்
தென்
தமிழகத்திலும்
இடம்
பெற்று
வருகின்ற
மரபு
என்பது
போதரும்
.
ஆனாலும்
பஞ்சபுராணம்
பாடுதல்
உம்
;
பஞ்சமந்திரம்
ஓதுதல்
உம்
ஒன்றா
வேறா
என்று
ஐயுற்றுச்
சிந்திக்கவும்
வேண்டியுள்ளது
.
நாவுக்கரசரின்
பாடலொன்று
இங்கே
நினைவுக்கு
வருகின்றது
.
பஞ்சமந்திரம்
ஓதும்
பரமனார்
அஞ்ச
ஆனை
உரித்தன
லாடுவார்
நெஞ்சம்
வாழி
நினைந்திரு
மீயச்சூர்
எந்தமை
யுடையார்
இளங்கோயிலே
(
5334
)
மேற்படி
பாடலில்
பரமன்
(
சிவன்
)
பஞ்சமந்திரம்
ஓதுகின்றவராகக்
குறிக்கப்படுகின்றார்
.
அவர்
ஓதுகின்ற
பஞ்சமந்திரம்
எது
என்பது
ஆராயப்பட
வேண்டிய
ஒன்று
.
பஞ்சமந்திரம்
என்றால்
ஈசானம்
தற்புருசம்
அகோரம்
வாம
தேவம்
சத்தியோயாதம்
என்பன
என்று
கூறுவது
சரியா
?
நாவுக்கரசரின்
வேறுமொரு
பாடல்
நம்மையெல்லாம்
சிந்திக்க
வைக்கிறது
.
மருந்தானை
மந்திரிப்பார்
மனத்துளானை
வளர்மதியஞ்சடையானை
மகிழ்ந்
தென்னுள்ளத்
திருந்தானை
இறப்பிலியைப்
பிறப்பிலானை
இமையவர்தம்
பெருமானை
உமையாள்
அஞ்சக்
கருந்தான
மதகளிற்றின்
உரிபோர்த்தானை
கனமழுவாட்
படையானைப்
பலிகொண்டூரூர்
திருந்தானைத்
திருவானைக்
காவுளானைச்
செழுநீர்த்திரளைச்
சென்றாடினேனே
(
6874
)
மேலே
சொன்ன
பாடலில்
மந்திரிப்பார்
என்ற
சொல்
லில்
அடங்கியுள்ள
மந்திரம்
”
எது
?
சிவாயநம
என்ற
அஞ்செழுத்தா
பிறிதொன்றா
?
இவையும்
ஆராயப்பட
வேண்டியவையே
.
சேக்கிழாரின்
பெரியபுராணத்தில்
ஆனாய
நாயனார்
புராணத்தில்
வருகின்ற
ஒரு
பாடல்
மனம்
கொள்ளத்
தக்கது
.
திசைமுழுதும்
கணநாதர்
தேவர்கட்கு
முன்னெருங்கி
மிசைமிடைந்து
வரும்
பொழுது
வேற்றொலிகள்
விரவாமே
அசைய
எழும்
குழல்நாதத்து
அஞ்செழுத்தால்
தமைப்பரவும்
இசைவிரும்பும்
கூத்தனார்
எழுந்தருளி
எதிர்நின்றார்
.
”
மேற்காட்டிய
பாடலில்
பேசப்படுகின்ற
அஞ்செழுத்தும்
நாவுக்கரசர்
தமது
தேவாரத்தில்
பஞ்சமந்திரம்
என்று
குறிப்பிடுவதும்
ஒன்றா
வேறா
என்பதும்
ஆராய்ச்சிக்
குரியது
.
பஞ்சமந்திரமும்
அஞ்செழுத்து
மந்திரமும்
ஒன்றா
வேறா
என்பது
எப்படி
இருப்பினும்
இறைவன்
இசை
விரும்பி
என்பது
சிவவழிபாட்டினரின்
நம்பிக்கையாக
இருந்து
வந்திருக்கிறது
என்பதை
மறுக்க
முடியாது
.
இறைவனை
நாதத்துக்குரியவனாக
நாதனாக
இசைவிரும்பியாகக்
கண்ட
தமிழ்
முன்னோர்கள்
இசையற்ற
இறைவழிபாடு
உள்ளத்தை
உருக்கிக்
கள்ளத்தை
வெளியேற்றி
உளத்தைத்
தூய்மைப்
படுத்த
முடியாது
;
அழுக்காறு
அவா
வெகுளி
இன்னாச்
சொல்
என்ற
உளமாசுகளைப்
போக்க
முடியாது
என்று
112