இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 இன்னொரு வேடிக்கையான நிலையை நாம் இப்பொழுது கண்டுவருகிறோம். அது என்னவெனில் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்கள் தற்காலத்தில் அர்த்தமின்றி, பொரு ளின்றி, இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டுகிறார்கள். பல நூற்றாண்டு காலமாக நாம் நல்ல கருத்துக்கள் நிறைந்த பெயர்களை, தெய்வங்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டிவந்தோம். இன்று இவ்வழக்கமின்றிப் புதுப் பழக்கத்தில் பெயர்களை வைத்துத் தடுமாறுகிறோம். இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது? ஏன் தொடங்கியது? அர்த்தமற்ற இந்தச் செயலுக்கு சிவாசாரியார்கள் துணைபோவது வருந்தத்தக்கது. சிலவருடங்களுக்கு முன் எமது மக்கள் இந்நாட்டில் குறைவாக இருந்தபொழுது பல வசதிக்குறைவுகள் பிள்ளைகளுக்கு இருந்தன. தற்போது எம்மக்கள் தொகை அதிகரித் துள்ளன. கோயில்கள், ஊடகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே எமது இன, சமய செயற்பாடுகளைச் சீர்படுத்த வசதிகள் உள்ளன. இதைச் செய்ய வேண்டியது அனைவரது கடமையுமாகும். தவறினால் ஓர் வரலாற்றுத் தவறைச் செய்தவர்களாகி விடுவோம். நிறைவாக, கடந்த 6 ஆண்டுகளாக இடையீடின்றி நடந்த சைவ மாநாட்டுக்கு உதவிய அனைத்து ஆலயங்களுக்கும், அறங்காவலர்களுக்கும், எம் மக்களுக்கும், இந்நாட்டு, தாயக அறிஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, முதல் மாநாட்டைச் சிறப்பாக நடாத்தப் பெருந்துணை புரிந்த பெருமகனார் அமரர் திரு. A.T.S. இரத்தினசிங்கம் அவர்களை இந்த இடத்தில் நன்றியோடு நினைவுகூருகிறேன். மேலும் இம்மாநாடுகள் சிறக்க உதவிய பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், இளையபட்டம் மருதாசல் அடிகளார் இறைவாழ்வில் நிறை நிலை எய்திய சிவத்திரு சிவநந்தி அடிகளாரையும் நன்றியோடு நினைக்கிறேன். இவ்வருட மாநாடும் வழமைபோன்றும், இன்னும் சிறப்பான அம்சங்களோடும் இடம்பெறத் திருவருள் கைகூடியுள்ளது. இம்மாநாடும் தன் நோக்கங்களில் நிறைவுபெறும் என நம்புகிறேன். கோயிலில் அறங்காவலர்களாக, நிர்வாகசபை உறுப்பினர்களாகப் பணிபுரிபவர் களிடையே சமய அறிவு, மாநாடு நடத்தும் ஆற்றல்கள் இல்லாவிடின், பொதுமக்களுடைய ஆதரவினையும், இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகளின் ஆதரவினையும் பெற்று இம்மாநாடு ஆண்டுதோறும் வருங்காலத்தில் நடைபெறவேண்டும். அத்துடன் மாநாடு நடைபெறும் நாட்களில் பாடசாலைகள், கலை ஆசிரியர்கள், ஊடகங்கள் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து சைவத்-தமிழ் எழுச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். இம்மாநாடு சைவப் பெருவிழாவாக உருவாகினால்தான் இந்நாட்டில் சைவத் தமிழ் இனம் ஓங்கும் என எதிர்பார்க்கலாம். "மேன்மைகொள் சைவநீதி! விளங்குக உலகமெலாம்!" 10 அன்பன் நசச்சினந்தூர் ந.சச்சிதானந்தன் செயலாளர், பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 இன்னொரு வேடிக்கையான நிலையை நாம் இப்பொழுது கண்டுவருகிறோம் . அது என்னவெனில் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்கள் தற்காலத்தில் அர்த்தமின்றி பொரு ளின்றி இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டுகிறார்கள் . பல நூற்றாண்டு காலமாக நாம் நல்ல கருத்துக்கள் நிறைந்த பெயர்களை தெய்வங்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டிவந்தோம் . இன்று இவ்வழக்கமின்றிப் புதுப் பழக்கத்தில் பெயர்களை வைத்துத் தடுமாறுகிறோம் . இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது ? ஏன் தொடங்கியது ? அர்த்தமற்ற இந்தச் செயலுக்கு சிவாசாரியார்கள் துணைபோவது வருந்தத்தக்கது . சிலவருடங்களுக்கு முன் எமது மக்கள் இந்நாட்டில் குறைவாக இருந்தபொழுது பல வசதிக்குறைவுகள் பிள்ளைகளுக்கு இருந்தன . தற்போது எம்மக்கள் தொகை அதிகரித் துள்ளன . கோயில்கள் ஊடகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன . எனவே எமது இன சமய செயற்பாடுகளைச் சீர்படுத்த வசதிகள் உள்ளன . இதைச் செய்ய வேண்டியது அனைவரது கடமையுமாகும் . தவறினால் ஓர் வரலாற்றுத் தவறைச் செய்தவர்களாகி விடுவோம் . நிறைவாக கடந்த 6 ஆண்டுகளாக இடையீடின்றி நடந்த சைவ மாநாட்டுக்கு உதவிய அனைத்து ஆலயங்களுக்கும் அறங்காவலர்களுக்கும் எம் மக்களுக்கும் இந்நாட்டு தாயக அறிஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு முதல் மாநாட்டைச் சிறப்பாக நடாத்தப் பெருந்துணை புரிந்த பெருமகனார் அமரர் திரு . A.T.S. இரத்தினசிங்கம் அவர்களை இந்த இடத்தில் நன்றியோடு நினைவுகூருகிறேன் . மேலும் இம்மாநாடுகள் சிறக்க உதவிய பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் இளையபட்டம் மருதாசல் அடிகளார் இறைவாழ்வில் நிறை நிலை எய்திய சிவத்திரு சிவநந்தி அடிகளாரையும் நன்றியோடு நினைக்கிறேன் . இவ்வருட மாநாடும் வழமைபோன்றும் இன்னும் சிறப்பான அம்சங்களோடும் இடம்பெறத் திருவருள் கைகூடியுள்ளது . இம்மாநாடும் தன் நோக்கங்களில் நிறைவுபெறும் என நம்புகிறேன் . கோயிலில் அறங்காவலர்களாக நிர்வாகசபை உறுப்பினர்களாகப் பணிபுரிபவர் களிடையே சமய அறிவு மாநாடு நடத்தும் ஆற்றல்கள் இல்லாவிடின் பொதுமக்களுடைய ஆதரவினையும் இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகளின் ஆதரவினையும் பெற்று இம்மாநாடு ஆண்டுதோறும் வருங்காலத்தில் நடைபெறவேண்டும் . அத்துடன் மாநாடு நடைபெறும் நாட்களில் பாடசாலைகள் கலை ஆசிரியர்கள் ஊடகங்கள் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து சைவத் - தமிழ் எழுச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் . இம்மாநாடு சைவப் பெருவிழாவாக உருவாகினால்தான் இந்நாட்டில் சைவத் தமிழ் இனம் ஓங்கும் என எதிர்பார்க்கலாம் . மேன்மைகொள் சைவநீதி ! விளங்குக உலகமெலாம் ! 10 அன்பன் நசச்சினந்தூர் ந.சச்சிதானந்தன் செயலாளர் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் .