இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு துறை அமைச்சர் பதவியை இழந்த பிரிட்டிஷ் அமைச்சர்; இசைத் திறமையால் துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்த லண்டன் தமிழ் இசை இளவல், திருமணமான ஒரு நாட்டிய ஆசிரியையுடன் மையல் கொண்டு தன் எதிர் காலத்தை இழந்து நாட்டை விட்டே ஓடி மறைந்த பரிதாபம். இப்படி ஆசிரியர்கள், அறிஞர்கள் பிரிட்டிஷ் இளவரசர்கள் இளவரசிகள் லண்டன் அந்தணர்கள் சிலர் கூட இதற்கு விதி விலக்கல்ல. எதை எப்படித் தேடுவது? → ஜனனம் என்பது ஒரு கதை. மரணம் என்பது மறு கதை இரண்டு கரைகளுக்கும் நடுவில் ஓடிக்கொண்டிருப்பது ஒரு நதி! அதன் பெயர்தான் தலைவிதி! என்கிறார் கவிப்பேரரசு. இந்த நதியில் நானும் நீங்களும் அவனும் அவளும் இவரும் இவளும் எல்லோருமே பயணம் செய்து கொண் டிருக்கிறோம். நான் சாகும் வரை சிற்றின்பத்தையேதான் தேடிக்கொண்டிருக்கப் போகிறேன் அது என் தலைவிதி!" - என்று சலித்துக் கொள்வது சோம்பேறித்தனம்! முட்டாள்தனம்! "சிறிய" இன்பம் என்று ஒன்று இருக்கிறது என் றால் 'பெரிய' இன்பம்; நீண்ட இன்பம் என்றும் ஒன்று இருக்கத்தானே வேண்டும். இதை நான் பெறவிரும்புகி றேன் என்று யாராவது முனைகிறார்களா? தேடுகி றார்களா? இல்லை."எங்கட வயசு போன காலத்தில் அதைத் தேடலாம்" என்று சிலர் ஒத்திவைக்கிறார்கள். முடிவற்ற பேரின்ப அமுதைச் சுவைக்க வயது இல்லை. அப்படி எல்லை இருந்திருந்தால் எங்கள் சைவ சமயத்தில் நாயன்மார்கள் பலர் தோன்றி யிருக்க முடியாது. மடங்கள் பல நிறுவி, எங்கள் மதத்திற்கு உரை எழுதி குருமார்க் கெல்லாம் குருவாக விளங்கும் கேரளத்து ஆதிசங்கரர் தாயைப் பிரிந்து பேரின்பத்தை நாடிப் புறப்பட்டபோது 10 வயதுப் பள்ளிமாணவன். இமாலயத்து கேதாரநாத் தில் அப்பெருமான் சமாதியாகும் போது வய 32. வெறும் 22 ஆண்டுகள்! முதிர்ச்சிக்கு முன்னர் ஆன்மீக முதிர்ச்சி மகாத்மா காந்திஜியின் சத்திய சோதனை கூட சின்ன வயதிலேயே ஆரம்பித்தது. எமக்கு உடலை வழங்கி, உயிரை இணைத்து வாழ்க்கைப் பாதையில் நடக்க விடுகிறான் இறைவன். அவனைத் தேடி அடைந்து வயது முதிர முன்பு ஆன்மீக முதிர்ச்சி பெற நாம் விழைய வேண்டும். அதற்காக நாம் நாளையே இமாலயத்தில் கைலாய யாத்திரை புறப்பட டிக்கட் வாங்கத் தேவையில்லை! 118 இலண்டன் 2004 அயலில் உள்ள எமது வழக்கமான கோயிலுக் குச் சென்று அவனை வணங்குவோம். மனதார வணங்கு வோம்.எம் சித்தத்தில் அவனை நிறுத்தி வணங்குவோம். உள்ளத்திலே அன்பை நிறைத்து வணங்குவோம். கோயிலில் மற்றவர்களுடன் பேசும் போது இந்தியாவில் நீங்கள் வாங்கிய லேட்டஸ்ட் டிசைன் காஞ்சிபுரம் பற்றி பேசற்க... "சாமி" - படத்தில் "நடிகை த்ரிஷா" அணிந்தி ருந்த அட்டியல் பற்றி பேசற்க! சிதம்பரம் சென்று தரிசித்த அப்பர் பெருமான் அரியானை, அந்தணர் தம் சிந்தையானை' என்ற பாடலில் சொல்கிறார். ..... பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாளே!' எமக்கு கிடைத்த வாய், நாக்கு ஆகியன இறை வனைப் பற்றிப் பேசவே தரப்பட்டவை; கைகள் இரண் டும் தரப்பட்ட காரணம் தலை மேல் குவித்து அவனை தரிசிப்பதற்கே! வஞ்சகம் செய்து பிறரை ஏமாற்றுபவர்கள் தூய் மையான இறைவழிபாட்டுக்குத் தகுதி இல்லாத வர்கள் என்கிறார் திருநாவுக்கரசு நாயனார். "வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்; வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற" குருவாய் வரும் இறைவன் பேரின்பத்தைத் தேடி நாம் நடக்கும் போது நல்லதோர் ஞானகுரு எமக்குத் தேவை. அந்தக் குருவை உரிய காலத்தில் இறைவனே எம்மிடம் அனுப்பி வைக்கிறார். குருவின் அருளால் எமது வினைகள் விலகு கின்றன. எமது முன்னைய வினைகளால் வரும் தீமைகள் கூட எம்மை அணுகமாட்டா! அதிகம் சொல் வானேன். எம தூதர்களைத் தடுத்து நிறுத்தி சில சமயங்களில் எங்கள் தலைவிதியையே மாற்றி எழுதுபவன் குருநாதன், குருவின் அருள் இல்லாதவர்கள் திருவருளை அடைய முடியாது; பேரின்பம் தேட முடியாது. அவ னைத்தேடி அவன் தாள்களில் பணிந்து வணங்குவ தற்குக் கூட அந்த இறைவனே அருள் தரவேண்டும் "அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி..." (சிவபுராணம் மாணிக்கவாசகர்) சிறந்த குருவினை ஏற்று அவருக்கே எமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து அவரது உபதேசங்களின்படி நடந்தால் பேரின்பம் எமக்குக் கிட் டும் என்று திருமந்திரத்தில் கூறியிருக்கிறார் திருமூல நாயனார். கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க; உள்ள பொருள் உடல்,ஆவியுடன் ஈக; எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று தெள்ளி அறியச் சிவ பதந்தானே..."
7 வது சைவ மாநாடு துறை அமைச்சர் பதவியை இழந்த பிரிட்டிஷ் அமைச்சர் ; இசைத் திறமையால் துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்த லண்டன் தமிழ் இசை இளவல் திருமணமான ஒரு நாட்டிய ஆசிரியையுடன் மையல் கொண்டு தன் எதிர் காலத்தை இழந்து நாட்டை விட்டே ஓடி மறைந்த பரிதாபம் . இப்படி ஆசிரியர்கள் அறிஞர்கள் பிரிட்டிஷ் இளவரசர்கள் இளவரசிகள் லண்டன் அந்தணர்கள் சிலர் கூட இதற்கு விதி விலக்கல்ல . எதை எப்படித் தேடுவது ? ஜனனம் என்பது ஒரு கதை . மரணம் என்பது மறு கதை இரண்டு கரைகளுக்கும் நடுவில் ஓடிக்கொண்டிருப்பது ஒரு நதி ! அதன் பெயர்தான் தலைவிதி ! என்கிறார் கவிப்பேரரசு . இந்த நதியில் நானும் நீங்களும் அவனும் அவளும் இவரும் இவளும் எல்லோருமே பயணம் செய்து கொண் டிருக்கிறோம் . நான் சாகும் வரை சிற்றின்பத்தையேதான் தேடிக்கொண்டிருக்கப் போகிறேன் அது என் தலைவிதி ! - என்று சலித்துக் கொள்வது சோம்பேறித்தனம் ! முட்டாள்தனம் ! சிறிய இன்பம் என்று ஒன்று இருக்கிறது என் றால் ' பெரிய ' இன்பம் ; நீண்ட இன்பம் என்றும் ஒன்று இருக்கத்தானே வேண்டும் . இதை நான் பெறவிரும்புகி றேன் என்று யாராவது முனைகிறார்களா ? தேடுகி றார்களா ? இல்லை . எங்கட வயசு போன காலத்தில் அதைத் தேடலாம் என்று சிலர் ஒத்திவைக்கிறார்கள் . முடிவற்ற பேரின்ப அமுதைச் சுவைக்க வயது இல்லை . அப்படி எல்லை இருந்திருந்தால் எங்கள் சைவ சமயத்தில் நாயன்மார்கள் பலர் தோன்றி யிருக்க முடியாது . மடங்கள் பல நிறுவி எங்கள் மதத்திற்கு உரை எழுதி குருமார்க் கெல்லாம் குருவாக விளங்கும் கேரளத்து ஆதிசங்கரர் தாயைப் பிரிந்து பேரின்பத்தை நாடிப் புறப்பட்டபோது 10 வயதுப் பள்ளிமாணவன் . இமாலயத்து கேதாரநாத் தில் அப்பெருமான் சமாதியாகும் போது வய 32 . வெறும் 22 ஆண்டுகள் ! முதிர்ச்சிக்கு முன்னர் ஆன்மீக முதிர்ச்சி மகாத்மா காந்திஜியின் சத்திய சோதனை கூட சின்ன வயதிலேயே ஆரம்பித்தது . எமக்கு உடலை வழங்கி உயிரை இணைத்து வாழ்க்கைப் பாதையில் நடக்க விடுகிறான் இறைவன் . அவனைத் தேடி அடைந்து வயது முதிர முன்பு ஆன்மீக முதிர்ச்சி பெற நாம் விழைய வேண்டும் . அதற்காக நாம் நாளையே இமாலயத்தில் கைலாய யாத்திரை புறப்பட டிக்கட் வாங்கத் தேவையில்லை ! 118 இலண்டன் 2004 அயலில் உள்ள எமது வழக்கமான கோயிலுக் குச் சென்று அவனை வணங்குவோம் . மனதார வணங்கு வோம்.எம் சித்தத்தில் அவனை நிறுத்தி வணங்குவோம் . உள்ளத்திலே அன்பை நிறைத்து வணங்குவோம் . கோயிலில் மற்றவர்களுடன் பேசும் போது இந்தியாவில் நீங்கள் வாங்கிய லேட்டஸ்ட் டிசைன் காஞ்சிபுரம் பற்றி பேசற்க ... சாமி - படத்தில் நடிகை த்ரிஷா அணிந்தி ருந்த அட்டியல் பற்றி பேசற்க ! சிதம்பரம் சென்று தரிசித்த அப்பர் பெருமான் அரியானை அந்தணர் தம் சிந்தையானை ' என்ற பாடலில் சொல்கிறார் . ..... பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாளே ! ' எமக்கு கிடைத்த வாய் நாக்கு ஆகியன இறை வனைப் பற்றிப் பேசவே தரப்பட்டவை ; கைகள் இரண் டும் தரப்பட்ட காரணம் தலை மேல் குவித்து அவனை தரிசிப்பதற்கே ! வஞ்சகம் செய்து பிறரை ஏமாற்றுபவர்கள் தூய் மையான இறைவழிபாட்டுக்குத் தகுதி இல்லாத வர்கள் என்கிறார் திருநாவுக்கரசு நாயனார் . வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும் ; வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற குருவாய் வரும் இறைவன் பேரின்பத்தைத் தேடி நாம் நடக்கும் போது நல்லதோர் ஞானகுரு எமக்குத் தேவை . அந்தக் குருவை உரிய காலத்தில் இறைவனே எம்மிடம் அனுப்பி வைக்கிறார் . குருவின் அருளால் எமது வினைகள் விலகு கின்றன . எமது முன்னைய வினைகளால் வரும் தீமைகள் கூட எம்மை அணுகமாட்டா ! அதிகம் சொல் வானேன் . எம தூதர்களைத் தடுத்து நிறுத்தி சில சமயங்களில் எங்கள் தலைவிதியையே மாற்றி எழுதுபவன் குருநாதன் குருவின் அருள் இல்லாதவர்கள் திருவருளை அடைய முடியாது ; பேரின்பம் தேட முடியாது . அவ னைத்தேடி அவன் தாள்களில் பணிந்து வணங்குவ தற்குக் கூட அந்த இறைவனே அருள் தரவேண்டும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ... ( சிவபுராணம் மாணிக்கவாசகர் ) சிறந்த குருவினை ஏற்று அவருக்கே எமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து அவரது உபதேசங்களின்படி நடந்தால் பேரின்பம் எமக்குக் கிட் டும் என்று திருமந்திரத்தில் கூறியிருக்கிறார் திருமூல நாயனார் . கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க ; உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக ; எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று தெள்ளி அறியச் சிவ பதந்தானே ...