இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அவர் போன்ற ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு சமய அறிவூட்ட தோன்ற வேண்டும் என்பதற்காக சுவாமி விவேகானந்தர் இளை ஞர்களுக்கு செய்த போதனைகளை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பழமையும் சக்தியும் மிக்க பிரம்மாண்டமான நாடு இடிந்து ஒடிந்து பாழாக் கிடப்பது போல் தன் நாட்டின் சீர்குலைவைக் கண்டு துடித்தெழுந்த தீரம் மிக்க இவ் வீரர் சுவாமி விவேகானந்தர் நவீன இந்தியாவைக் கட்டி யெழுப்புவதற்கு உற்சாகத்துடன் உழைக்க மக்களைத் தட்டியெழுப்பினார். "என் அருமைக் குழந்தைகளே! சமய வாழ்வின் உட்பொருள் கொள்கைகளில் இல்லை. நடைமுறை யில் தான் உள்ளது. நல்லவனாக இரு! நல்லதைச் செய். தூய்மையுடன் இரு; தன்னலமற்று இரு.' பன்னூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கான அவருடைய கோட்பாடு களில் மிக எளியதும், இலகுவானதுமான சிறிய சிறிய வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை இந்தியக் குழந்தைகளுக்கு மாத்திரம் தான் உரியனவா? இல்லவே இல்லை! இங்கிலாந்து, ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா, மொரிசியஸ், ஏன் உலகின் எங்கெல்லாம் மனிதக் குழந்தைகள் வாழ்கின்றனரோ அவர்கள் யாருக்குமே பொருத்தமான ஏற்ற நடைமுறைப் படுத்தக்கூடிய மென்மையான இலகுவான பண்புகள் அல்லவா? நல்லவனாக, தூய்மையுடன், தன்னலமற்ற சிந்தனையுடன் மக்களுக்காகத் தொண்டாற்றிய காந்தி மகானின் சரித்திரம், தனது பதவிக்கோ பட்டத்திற்கோ முக்கியம் கொடுக்காமல், பல்வேறு பிரச்சனைகள் முட்டி வந்தபோதும் உள்ளத் தூய்மையுடன் தன்னையே தியாகம் செய்து நாட்டின் நலனைப் பேணிய தூயவனின் சரித்திரம் உள்ள மெல்லாம் நிறைகிறது. "நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடு வாய்”. என சிறுவர்களின் சிந்தனைக்கு வளமும் வலிமை யும் ஊட்டுகின்றார். "குழந்தாய்! நான் வேண்டுவதென்ன? பயன் என்பதையே அறியாத இரும்பினாலான உள்ளமும் இதயமுமே". "உண்மையில் நீங்கள் என் குழந்தைகளானால் எதற்கும் அஞ்சமாட்டீர்கள். எதைக் கண்டும் தயங்கி நிற்கமாட்டீர்கள். சிங்கக் குட்டிகளைத் தந்திருப்பீர்கள். இந்தியாவை மட்டுமன்றி உலகம் முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும்" என உறக்க நிலையில் தயங்கி நிற்கும் குழந்தைகளை உலகக் குழந்தைகளையுமே உசாராக்கும்படி அறைகூவல் விடுகிறார். - "எந்தக் கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை உரு வாக்க வல்லதோ, மன ஆற்றலை வளர்க்க வல்லதோ, அறிவுத் திறனை விரிவடையச் செய்யக் கூடியதோ அத்தகைய கல்வி தான் நமக்கு இப்போது தேவை. மனிதன் தன்னைத் தானே தாங்குபவனாக தன் சொந்தக் கால்களில் தலை நிமிர்ந்து நிற்பவனாகச் செய்யவல்ல. கல்வியே நமக்கு வேண்டப்படுவது". "இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கட வுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டே யாம்' ஆறுமுகநாவலர் அவர்கள் மானிடப் பிறவியின் நோக்கத்தை எடுத்து விளக்குகிறார். மனித உடலைக் கொண்ட இளைஞர்களே நாட் டின் ஜீவநாடி. தேசத்தின் முதுகெலும்பு என முழங்கு கிறார் சுவாமி விவேகானந்தர். இளையோர்களே! உங்களை என்றும் கொடுப் போன் நிலையில் இருத்துவீர்களாக! பிறர்க்கு என்றும் உதவுங்கள்! உலகிற்குத் தொண்டாற்றுங்கள் உங்க ளிடம் இருப்பது அற்புதமே ஆயினும் அதை வழங்கி விடுங்கள். அங்ஙனம் வழங்குகையில் நிபந்தனைகள் வேண்டாம். இறைவன் நமக்கு வழங்கியிருப்பதைப் போன்று நாமும் எவ்விதமான கைம்மாறும் கருதாது வழங்குவோம்". சமயத் தேவைகளைப் பெற்ற இளைஞர்களுக்கே இந்த மனநிலை உருவாகும். இளைஞர்களின் மகத் தான சக்தியை சுவாமி விவேகானந்தர் நன்கு மதிப்பீடு செய்கிறார். "சகோதரா! நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல் மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு, விழித்துக் கொள், மனம் தளராதே, நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி." உலக ஓட்டத்தில் இளைஞருடைய பங்கு மிகப்பொறுப்பு வாய்ந்ததும் முக்கியமானதும் என்ப தைச் சுட்டிக்காட்டி நவீன உலகைப் படைக்க சீல மும் சிறப்புக் கொண்ட புத்துலகைக் காணவரும்படி இளைஞர்களைக் கூவி அழைக்கின்றார். இளைஞர்கள் உறுதியுடனும் தியாகநோக்குடனும் எதையும் சாதிக்க முன்வந்தால் பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும் என்று இளைஞர்களின் ஆற்றலைக் குறித்துக் கருத்துத் தெரி விக்கிறார் சுவாமி விவேகானந்தர். 'தனிமரம் தோப்பாகாது' என்பதுபோல் இளை ஞர்கள் யாவரும் ஒன்றிணைய வேண்டும். புலம் பெயர் நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆற்றல் மிக்க இளை ஞர்கள் வாழ்கின்றார்கள். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் அவர்களுடைய ஆத்மிக சக்தியை வளர்ப்பதன் மூலம் பாழ்மண்டபமாகக் காட்சிதரும் தாயகத்தைப் புதுப்புதுமெருகேற்ற அவர்களது ஆத்மிக பாடம் வழி வகுக்கும். காலத்தின் தேவையை உணர்ந்து திறமையை அற்பணிக்க முன்வரும் இளம் சமுதாயத்திற்கு நல்வழி யைக் காட்ட சமய நெறியை வளர்க்க சமய நிறுவனங்கள் முன்வரவேண்டும். உ அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்திய தந்தை செல்வா 'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' எனக் கூறினார். தமிழ் இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் வலிமை பெற்றவர்கள். இந்த மகத்தான சக்தி வாய்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இளை ஞர்களிடையே ஆத்மிக சக்தியை வளர்க்க அனைவரும் முயல்வோமா 131
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அவர் போன்ற ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு சமய அறிவூட்ட தோன்ற வேண்டும் என்பதற்காக சுவாமி விவேகானந்தர் இளை ஞர்களுக்கு செய்த போதனைகளை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன் . பழமையும் சக்தியும் மிக்க பிரம்மாண்டமான நாடு இடிந்து ஒடிந்து பாழாக் கிடப்பது போல் தன் நாட்டின் சீர்குலைவைக் கண்டு துடித்தெழுந்த தீரம் மிக்க இவ் வீரர் சுவாமி விவேகானந்தர் நவீன இந்தியாவைக் கட்டி யெழுப்புவதற்கு உற்சாகத்துடன் உழைக்க மக்களைத் தட்டியெழுப்பினார் . என் அருமைக் குழந்தைகளே ! சமய வாழ்வின் உட்பொருள் கொள்கைகளில் இல்லை . நடைமுறை யில் தான் உள்ளது . நல்லவனாக இரு ! நல்லதைச் செய் . தூய்மையுடன் இரு ; தன்னலமற்று இரு . ' பன்னூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கான அவருடைய கோட்பாடு களில் மிக எளியதும் இலகுவானதுமான சிறிய சிறிய வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன . இவை இந்தியக் குழந்தைகளுக்கு மாத்திரம் தான் உரியனவா ? இல்லவே இல்லை ! இங்கிலாந்து ரஷ்யா அவுஸ்திரேலியா கனடா மொரிசியஸ் ஏன் உலகின் எங்கெல்லாம் மனிதக் குழந்தைகள் வாழ்கின்றனரோ அவர்கள் யாருக்குமே பொருத்தமான ஏற்ற நடைமுறைப் படுத்தக்கூடிய மென்மையான இலகுவான பண்புகள் அல்லவா ? நல்லவனாக தூய்மையுடன் தன்னலமற்ற சிந்தனையுடன் மக்களுக்காகத் தொண்டாற்றிய காந்தி மகானின் சரித்திரம் தனது பதவிக்கோ பட்டத்திற்கோ முக்கியம் கொடுக்காமல் பல்வேறு பிரச்சனைகள் முட்டி வந்தபோதும் உள்ளத் தூய்மையுடன் தன்னையே தியாகம் செய்து நாட்டின் நலனைப் பேணிய தூயவனின் சரித்திரம் உள்ள மெல்லாம் நிறைகிறது . நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் . நீ உன்னை பலவீனன் என நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய் . நீ உன்னை வலிமையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடு வாய் . என சிறுவர்களின் சிந்தனைக்கு வளமும் வலிமை யும் ஊட்டுகின்றார் . குழந்தாய் ! நான் வேண்டுவதென்ன ? பயன் என்பதையே அறியாத இரும்பினாலான உள்ளமும் இதயமுமே . உண்மையில் நீங்கள் என் குழந்தைகளானால் எதற்கும் அஞ்சமாட்டீர்கள் . எதைக் கண்டும் தயங்கி நிற்கமாட்டீர்கள் . சிங்கக் குட்டிகளைத் தந்திருப்பீர்கள் . இந்தியாவை மட்டுமன்றி உலகம் முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும் என உறக்க நிலையில் தயங்கி நிற்கும் குழந்தைகளை உலகக் குழந்தைகளையுமே உசாராக்கும்படி அறைகூவல் விடுகிறார் . - எந்தக் கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை உரு வாக்க வல்லதோ மன ஆற்றலை வளர்க்க வல்லதோ அறிவுத் திறனை விரிவடையச் செய்யக் கூடியதோ அத்தகைய கல்வி தான் நமக்கு இப்போது தேவை . மனிதன் தன்னைத் தானே தாங்குபவனாக தன் சொந்தக் கால்களில் தலை நிமிர்ந்து நிற்பவனாகச் செய்யவல்ல . கல்வியே நமக்கு வேண்டப்படுவது . இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கட வுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டே யாம் ' ஆறுமுகநாவலர் அவர்கள் மானிடப் பிறவியின் நோக்கத்தை எடுத்து விளக்குகிறார் . மனித உடலைக் கொண்ட இளைஞர்களே நாட் டின் ஜீவநாடி . தேசத்தின் முதுகெலும்பு என முழங்கு கிறார் சுவாமி விவேகானந்தர் . இளையோர்களே ! உங்களை என்றும் கொடுப் போன் நிலையில் இருத்துவீர்களாக ! பிறர்க்கு என்றும் உதவுங்கள் ! உலகிற்குத் தொண்டாற்றுங்கள் உங்க ளிடம் இருப்பது அற்புதமே ஆயினும் அதை வழங்கி விடுங்கள் . அங்ஙனம் வழங்குகையில் நிபந்தனைகள் வேண்டாம் . இறைவன் நமக்கு வழங்கியிருப்பதைப் போன்று நாமும் எவ்விதமான கைம்மாறும் கருதாது வழங்குவோம் . சமயத் தேவைகளைப் பெற்ற இளைஞர்களுக்கே இந்த மனநிலை உருவாகும் . இளைஞர்களின் மகத் தான சக்தியை சுவாமி விவேகானந்தர் நன்கு மதிப்பீடு செய்கிறார் . சகோதரா ! நம்பிக்கையை இழந்துவிடாதே . பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல் மிகவும் கடினமானது தான் . எனினும் எழுந்திரு விழித்துக் கொள் மனம் தளராதே நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி . உலக ஓட்டத்தில் இளைஞருடைய பங்கு மிகப்பொறுப்பு வாய்ந்ததும் முக்கியமானதும் என்ப தைச் சுட்டிக்காட்டி நவீன உலகைப் படைக்க சீல மும் சிறப்புக் கொண்ட புத்துலகைக் காணவரும்படி இளைஞர்களைக் கூவி அழைக்கின்றார் . இளைஞர்கள் உறுதியுடனும் தியாகநோக்குடனும் எதையும் சாதிக்க முன்வந்தால் பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும் என்று இளைஞர்களின் ஆற்றலைக் குறித்துக் கருத்துத் தெரி விக்கிறார் சுவாமி விவேகானந்தர் . ' தனிமரம் தோப்பாகாது ' என்பதுபோல் இளை ஞர்கள் யாவரும் ஒன்றிணைய வேண்டும் . புலம் பெயர் நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆற்றல் மிக்க இளை ஞர்கள் வாழ்கின்றார்கள் . சுவாமி விவேகானந்தர் கூறியது போல் அவர்களுடைய ஆத்மிக சக்தியை வளர்ப்பதன் மூலம் பாழ்மண்டபமாகக் காட்சிதரும் தாயகத்தைப் புதுப்புதுமெருகேற்ற அவர்களது ஆத்மிக பாடம் வழி வகுக்கும் . காலத்தின் தேவையை உணர்ந்து திறமையை அற்பணிக்க முன்வரும் இளம் சமுதாயத்திற்கு நல்வழி யைக் காட்ட சமய நெறியை வளர்க்க சமய நிறுவனங்கள் முன்வரவேண்டும் . அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்திய தந்தை செல்வா ' தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' எனக் கூறினார் . தமிழ் இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் வலிமை பெற்றவர்கள் . இந்த மகத்தான சக்தி வாய்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இளை ஞர்களிடையே ஆத்மிக சக்தியை வளர்க்க அனைவரும் முயல்வோமா 131