இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பன்னிரு திருமுறை
சித்தாந்த இரத்தினம் தே.ச. குருநாதன்
சென்னை
'முறை' என்னும் சொல், நூல் என்னும் பொரு
ளையுடையது. திருமுறை என்பது மாறாத செல் வத்தை
மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல்
என்பதைக் குறிக்கும். இந்நூல் பகுதிகளாகத் தொகுக்கப்
பெற்று இருப்பதால், இது பன்னிரு திருமுறை என்று
போற்றப் பெறுகின்றது. பன்னிரு திருமுறை, சித்தாந்த
சைவர்களின் வேதம் ஆகும். இது தமிழர்களின் வேதம்.
இதனைத்
"திருத் தோணிமிசை மேவினார்கள் தங்கள்
திருமுன்பு தாழ்ந்து எழுந்து நின்று,
தமிழ்வேதம் பாடினார்; தாளம் பெற்றார்.
என்னும் சேக்கிழார் வாக்கு தெளிவுறுத்துகின்றது.
சைவர்களுக்கே உரித்தான திருநீற்றின் பெரு
மையையும் திருவைந்தெழுத்தின் அருமையையும்,
பன்னிரு திருமுறையில் காணலாம். வினைப் பயன்
ஆகிய விதியின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது
என்பதைத் திருமுறை தெளிவுறுத்துகிறது. திருமு
றைப்படனம் செய்பவர்களை 'எமன் நெருங்கமாட்
டான்' என்பதற்குப் பிரமாணம் வருமாறு:
"தொழுது நமனும் தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில் சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பக்தர்களைக் கண்டால், பணிந்து அகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று
நக்கீரதேவ நாயனார்; "கயிலை பாதி காளத்தி பாதி"
அந்தாதி.
திருமுறை, தமிழர்களின் தனிச்சொத்து. அத
னைப் பேணிப் பற்றிப் பயன்கொள்ள வேண்டுவது
நமது கடமை என்பது கூறத் தேவையில்லை.
பத்துப் பாடல்களைக் கொண்ட பனுவல் பதிகம்
ஆகும். பெரும்பாலான தேவாரப் பதிகங்கள் பத்துப்
பாடல்களைக் கொண்டனவாக இருப்பதால், இவை
பதிகங்கள் எனப்படுகின்றன. இவையனைத்தும் தெய்
வத் தமிழ்ப் பாடல்களாக உள்ளமையால் திருப்பதிகம்
எனப்படுகின்றன.
'ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி' என்னும்
பதினோராம் திருமுறையில்,
"பதிகப்பெருவழி காட்டப் பருப்பதக்கோன் பயத்த
மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்த எங்கள் நிதி"
என்று நம்பியாண்டார் நம்பி, 'பதிகப் பெருவழி' என்னும்
சொல்லாட்சியைக் கையாளுகிறார். பதிகப் பெருவழி
என்பது பதிகம் பாடிப் பரவும் திருநெறியைக் குறிக்கும்.
தமது முதல் பதிகத்தின் திருக் கடைக் காப்பில்,
திருமுறையை 'திரு நெறிய தமிழ்' என்று சம்பந்தர்
அருளிச் செய்துள்ளமையும் இங்கு நினை வில் கொள்க.
முறைப்பட இயற்றப் பெற்றமையின், 'முறை' என்பது
இந்நூற்குப் பெயர் ஆயிற்று. இதுவே இறைவனைப்
பாடிப் பணியும் தோத்திர நூலாகவும் உள்ளமையால்
'தோத்திரம்' எனவும் போற்றப்படுகிறது. இவ்வுண்
மையை,
132
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி,
வேடம் படிதம் விரும்பும் வெண்தாமரை
பாடும் "திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் "தோத்திரம்" சொல்லுமே.
என்னும் திருமந்திரப் பாடலால் அறியலாம்.
இறைவன் அருளிய எழுது மறைகள்
இறைவன் கல்லாலின் புடை அமர்ந்து அரு
ளிச்செய்த வேதங்கள் எழுதாக் கிளவி எனப்படும்.
அவற்றின் நுண்பொருளை அருளாளர்கள் மட்டுமே
அறிய முடியும். அவற்றின் பொருளைச் சகல வர்க்கத்து
ஆன்மாக்கள் ஆகிய நாமும் அறியும் பொருட்டு, அருளா
ளர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர்
முதலியவர்களை இப்பூலவுகில் அவதரிக்கச் செய்து
அவர்கள் வாயிலாக அவற்றை எழுது மறைகளாக இறை
வன் அருளிச் செய்தான். இவ்வுண்மையைச் சேக்கிழார்
பெருமான், "வண்டமி ழால்" எழுதுமறை "மொழிந்த
பிரான்” என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
எனவே, திருமுறைப் பாடல்கள் அனைத்தும்
இறைவன் வாக்கே ஆகும். சிவபெருமான் திருமுறை
ஆசிரியர்களை அதிட்டித்து நின்று அவற்றை அருளிச்
செய்திருப்பதால், அவை அருள் வாக்கு எனப் பெறு
கின்றன. இவ்வுண்மையினை,
"எனதுரை தனதுரையாக (1-76-1)
என்னும் சம்பந்தர் வாக்கு மெய்ப்படுத்துகின்றது.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பன்னிரு
திருமுறை
சித்தாந்த
இரத்தினம்
தே.ச.
குருநாதன்
சென்னை
'
முறை
'
என்னும்
சொல்
நூல்
என்னும்
பொரு
ளையுடையது
.
திருமுறை
என்பது
மாறாத
செல்
வத்தை
மக்கள்
எளிதாகப்
பெறுவதற்கு
வழிகாட்டும்
நூல்
என்பதைக்
குறிக்கும்
.
இந்நூல்
பகுதிகளாகத்
தொகுக்கப்
பெற்று
இருப்பதால்
இது
பன்னிரு
திருமுறை
என்று
போற்றப்
பெறுகின்றது
.
பன்னிரு
திருமுறை
சித்தாந்த
சைவர்களின்
வேதம்
ஆகும்
.
இது
தமிழர்களின்
வேதம்
.
இதனைத்
திருத்
தோணிமிசை
மேவினார்கள்
தங்கள்
திருமுன்பு
தாழ்ந்து
எழுந்து
நின்று
தமிழ்வேதம்
பாடினார்
;
தாளம்
பெற்றார்
.
என்னும்
சேக்கிழார்
வாக்கு
தெளிவுறுத்துகின்றது
.
சைவர்களுக்கே
உரித்தான
திருநீற்றின்
பெரு
மையையும்
திருவைந்தெழுத்தின்
அருமையையும்
பன்னிரு
திருமுறையில்
காணலாம்
.
வினைப்
பயன்
ஆகிய
விதியின்
பிடியிலிருந்து
எப்படி
விடுபடுவது
என்பதைத்
திருமுறை
தெளிவுறுத்துகிறது
.
திருமு
றைப்படனம்
செய்பவர்களை
'
எமன்
நெருங்கமாட்
டான்
'
என்பதற்குப்
பிரமாணம்
வருமாறு
:
தொழுது
நமனும்
தன்
தூதுவர்க்குச்
சொல்லும்
வழுவில்
சீர்க்
காளத்தி
மன்னன்
-
பழுதிலாப்
பக்தர்களைக்
கண்டால்
பணிந்து
அகலப்
போமின்கள்
எத்தனையும்
சேய்த்தாக
என்று
நக்கீரதேவ
நாயனார்
;
கயிலை
பாதி
காளத்தி
பாதி
அந்தாதி
.
திருமுறை
தமிழர்களின்
தனிச்சொத்து
.
அத
னைப்
பேணிப்
பற்றிப்
பயன்கொள்ள
வேண்டுவது
நமது
கடமை
என்பது
கூறத்
தேவையில்லை
.
பத்துப்
பாடல்களைக்
கொண்ட
பனுவல்
பதிகம்
ஆகும்
.
பெரும்பாலான
தேவாரப்
பதிகங்கள்
பத்துப்
பாடல்களைக்
கொண்டனவாக
இருப்பதால்
இவை
பதிகங்கள்
எனப்படுகின்றன
.
இவையனைத்தும்
தெய்
வத்
தமிழ்ப்
பாடல்களாக
உள்ளமையால்
திருப்பதிகம்
எனப்படுகின்றன
.
'
ஆளுடைய
பிள்ளையார்
திருவந்தாதி
'
என்னும்
பதினோராம்
திருமுறையில்
பதிகப்பெருவழி
காட்டப்
பருப்பதக்கோன்
பயத்த
மதியத்
திருநுதல்
பங்கன்
அருள்பெற
வைத்த
எங்கள்
நிதி
என்று
நம்பியாண்டார்
நம்பி
'
பதிகப்
பெருவழி
'
என்னும்
சொல்லாட்சியைக்
கையாளுகிறார்
.
பதிகப்
பெருவழி
என்பது
பதிகம்
பாடிப்
பரவும்
திருநெறியைக்
குறிக்கும்
.
தமது
முதல்
பதிகத்தின்
திருக்
கடைக்
காப்பில்
திருமுறையை
'
திரு
நெறிய
தமிழ்
'
என்று
சம்பந்தர்
அருளிச்
செய்துள்ளமையும்
இங்கு
நினை
வில்
கொள்க
.
முறைப்பட
இயற்றப்
பெற்றமையின்
'
முறை
'
என்பது
இந்நூற்குப்
பெயர்
ஆயிற்று
.
இதுவே
இறைவனைப்
பாடிப்
பணியும்
தோத்திர
நூலாகவும்
உள்ளமையால்
'
தோத்திரம்
'
எனவும்
போற்றப்படுகிறது
.
இவ்வுண்
மையை
132
ஏடங்கை
நங்கை
இறைஎங்கள்
முக்கண்ணி
வேடம்
படிதம்
விரும்பும்
வெண்தாமரை
பாடும்
திருமுறை
பார்ப்பதி
பாதங்கள்
சூடுமின்
சென்னிவாய்த்
தோத்திரம்
சொல்லுமே
.
என்னும்
திருமந்திரப்
பாடலால்
அறியலாம்
.
இறைவன்
அருளிய
எழுது
மறைகள்
இறைவன்
கல்லாலின்
புடை
அமர்ந்து
அரு
ளிச்செய்த
வேதங்கள்
எழுதாக்
கிளவி
எனப்படும்
.
அவற்றின்
நுண்பொருளை
அருளாளர்கள்
மட்டுமே
அறிய
முடியும்
.
அவற்றின்
பொருளைச்
சகல
வர்க்கத்து
ஆன்மாக்கள்
ஆகிய
நாமும்
அறியும்
பொருட்டு
அருளா
ளர்களாகிய
சம்பந்தர்
அப்பர்
சுந்தரர்
மணிவாசகர்
முதலியவர்களை
இப்பூலவுகில்
அவதரிக்கச்
செய்து
அவர்கள்
வாயிலாக
அவற்றை
எழுது
மறைகளாக
இறை
வன்
அருளிச்
செய்தான்
.
இவ்வுண்மையைச்
சேக்கிழார்
பெருமான்
வண்டமி
ழால்
எழுதுமறை
மொழிந்த
பிரான்
”
என்று
குறிப்பிடுவதிலிருந்து
அறியலாம்
.
எனவே
திருமுறைப்
பாடல்கள்
அனைத்தும்
இறைவன்
வாக்கே
ஆகும்
.
சிவபெருமான்
திருமுறை
ஆசிரியர்களை
அதிட்டித்து
நின்று
அவற்றை
அருளிச்
செய்திருப்பதால்
அவை
அருள்
வாக்கு
எனப்
பெறு
கின்றன
.
இவ்வுண்மையினை
எனதுரை
தனதுரையாக
(
1-76-1
)
என்னும்
சம்பந்தர்
வாக்கு
மெய்ப்படுத்துகின்றது
.