இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதங்கள் அனைத்தும் பிரணவத்துள் அடங்கும். அவ்வாறே நமது பன்னிரு திருமுறையின் முதல் பாடல் ''தோடு" என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் "உலகெலாம்" என்ற சொல்லுடன் முடிகிறது. 'தோடு' என்பதில் எழுத்து 'ஓ', உலகெலாம் என்பதில் உள்ள ஈற்றெழுத்து 'ம்' ஆகும். இதிலிருந்து பன்னிரு திருமுறை முழுவதும் சைவர்களின் வேதம் என்பது தெளிவாயிற்று. திருமுறைகள் தற்சமயம் திருக்கோயில்களில் முறையாக ஓதப்பெறாமையாலேயே பல்வகை இயற் கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள் அமைதியான வாழ்வு வாழ விரும்பும் பொறுப்பில் இருப்பவர்கள், இனியாவது திருக்கோயில்களில் மீண்டும் திருமுறைகள் "மந்திர நல் மா மறை* (3-80-7) என்பது சம்பந்தப் பெருமான் அருள்வாக்கு: திருமுறை முழங்கப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இறைவனின் வடிவம். இறைவன் மந்திர வடிவமாக உள்ளான். திரு முறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற் றலை உடையது. திருமுறைகள் மந்திரங்களே என் னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில் மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர், இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து பந்த முறும் மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்த முறை நான்கினோடு முறை பதினொன்று ஆக்கினார்" (28) என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார். திருக்கோயில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும், மந்திர நியாசத்தின் அடிப் படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட் டுள்ளான். (நியாசம் - வைப்பு; பிரதிட்டை -நிலைபெறுத்துவித்தல்) திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கி லும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளி யுள்ளான். இவ்வுண்மைகளை, சொல்லினும், சொல்லின் முடிவிலும், வேதச் சுருதியிலும் அல்லினும், ஆக அற்ற ஆகாயம் தன்னிலும், ஆய்ந்து விட்டோர் இல்லினும், அன்பர் இடத்திலும், ஈசன் இருப்பதல்லால், கல்லினும் செம்பிலுமோ இருப்பன் எங்கள் கண்ணுதலே" என்று ஒருபழம் பாடல் எடுத்து இயம்புகிறது. சிவன் கோயில்களில் திருமுறைப் பாடல்களை விண்ணப்பிப்பதே அருச்சனை ஆகும். 'அருச்சனை' என்ற வடசொற் பொருள் வழிபாடு என்பதே ஆகும். இவ்வுண்மையை, என்று இறைவன், சுந்தரரிடம் அருளியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். எனவே திருக்கோயில் களில் திருமுறைகள் ஓதப்பெறுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான் என்பது பெறப்படுகிறது. நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின்மிக்க அர்ச்சனை, பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழால் பாடுக திருமுறையின் அருமை பெருமைகள் திருமுறைப் பாடலில் உள்ள சொற்கள் சிவபெரு மானின் திருவாக்குகளே ஆகும். எனவே, அவை இறந் தாரையும் எழுப்பும் தகைமை வாய்ந்தன; ஊழ்வினையை மாற்றும் பெற்றிமை பெற்றுள்ளன; வீடு பேற்றை வழங்கும் திறன் திருமுறைகளுக்கு உண்டு. சிவச்சின்னங்களின் தலையாயது ஆகிய திரு நீற்றின் பெருமையைத் திருமுறை பேசுகிறது. சிவ பெருமான் ஒருவனே கடவுள்; பிற எல்லாம் உயிர்கள். எனவே, திருமுறை சிவபரத்துவம் பேசுகின்றது. சைவர்கள் என்றும் எந்நேரமும் நினைவில் கொண் டிருக்க வேண்டிய திருவைந்தெழுத்தின் பெருமை யைப் பெரிதும் சிறப்பாகத் திருமுறைகள் முழக்கு கின்றன. பன்னிரு திருமுறைகளைச் சமய தீக்கை பெறாதவர்களும், பெண்களும் ஓதலாம். திருமுறை கள் ஓதுவதற்கு வயதில் ஏற்றத் தாழ்வோ, சாதி மத வேறுபாடோ கருதாமல் யாவரும் ஓதலாம். வடமொழி வேதங்களால் அடைக்கப்பட்ட திருக் கோயில் கதவைத் திறக்கும் திறன் படைத்தது தமிழ் வேதம் ஆகிய திருமுறை, பாடுபவர் உள்ளத்தையும் கேட்பவர் நெஞ் சத்தையும் உருக்க வல்லது. நெருப்பில் அழியாதது. ஆற்றுநீரை எதிர்த்துச் செல்ல வல்லது. இசைக்குள் எளிதில் அடங்காதது. கொடியவர்களும், கொலை காரர்களும் கூடத் திருமுறை ஓதி நல்லவராக மாறுவது திண்ணம். சிவ சம்பந்தத்தைத் தருவது. திருமுறையில் அருமை பெருமைகளுக்கு அளவே இல்லை. 133
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதங்கள் அனைத்தும் பிரணவத்துள் அடங்கும் . அவ்வாறே நமது பன்னிரு திருமுறையின் முதல் பாடல் ' ' தோடு என்னும் சொல்லுடன் தொடங்கி இறுதிப் பாடலில் உலகெலாம் என்ற சொல்லுடன் முடிகிறது . ' தோடு ' என்பதில் எழுத்து ' ' உலகெலாம் என்பதில் உள்ள ஈற்றெழுத்து ' ம் ' ஆகும் . இதிலிருந்து பன்னிரு திருமுறை முழுவதும் சைவர்களின் வேதம் என்பது தெளிவாயிற்று . திருமுறைகள் தற்சமயம் திருக்கோயில்களில் முறையாக ஓதப்பெறாமையாலேயே பல்வகை இயற் கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன . மக்கள் அமைதியான வாழ்வு வாழ விரும்பும் பொறுப்பில் இருப்பவர்கள் இனியாவது திருக்கோயில்களில் மீண்டும் திருமுறைகள் மந்திர நல் மா மறை * ( 3-80-7 ) என்பது சம்பந்தப் பெருமான் அருள்வாக்கு : திருமுறை முழங்கப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . இறைவனின் வடிவம் . இறைவன் மந்திர வடிவமாக உள்ளான் . திரு முறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற் றலை உடையது . திருமுறைகள் மந்திரங்களே என் னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில் மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர் இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து பந்த முறும் மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்த முறை நான்கினோடு முறை பதினொன்று ஆக்கினார் ( 28 ) என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார் . திருக்கோயில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசத்தின் அடிப் படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட் டுள்ளான் . ( நியாசம் - வைப்பு ; பிரதிட்டை -நிலைபெறுத்துவித்தல் ) திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கி லும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளி யுள்ளான் . இவ்வுண்மைகளை சொல்லினும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லினும் ஆக அற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர் இல்லினும் அன்பர் இடத்திலும் ஈசன் இருப்பதல்லால் கல்லினும் செம்பிலுமோ இருப்பன் எங்கள் கண்ணுதலே என்று ஒருபழம் பாடல் எடுத்து இயம்புகிறது . சிவன் கோயில்களில் திருமுறைப் பாடல்களை விண்ணப்பிப்பதே அருச்சனை ஆகும் . ' அருச்சனை ' என்ற வடசொற் பொருள் வழிபாடு என்பதே ஆகும் . இவ்வுண்மையை என்று இறைவன் சுந்தரரிடம் அருளியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார் . எனவே திருக்கோயில் களில் திருமுறைகள் ஓதப்பெறுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான் என்பது பெறப்படுகிறது . நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின்மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழால் பாடுக திருமுறையின் அருமை பெருமைகள் திருமுறைப் பாடலில் உள்ள சொற்கள் சிவபெரு மானின் திருவாக்குகளே ஆகும் . எனவே அவை இறந் தாரையும் எழுப்பும் தகைமை வாய்ந்தன ; ஊழ்வினையை மாற்றும் பெற்றிமை பெற்றுள்ளன ; வீடு பேற்றை வழங்கும் திறன் திருமுறைகளுக்கு உண்டு . சிவச்சின்னங்களின் தலையாயது ஆகிய திரு நீற்றின் பெருமையைத் திருமுறை பேசுகிறது . சிவ பெருமான் ஒருவனே கடவுள் ; பிற எல்லாம் உயிர்கள் . எனவே திருமுறை சிவபரத்துவம் பேசுகின்றது . சைவர்கள் என்றும் எந்நேரமும் நினைவில் கொண் டிருக்க வேண்டிய திருவைந்தெழுத்தின் பெருமை யைப் பெரிதும் சிறப்பாகத் திருமுறைகள் முழக்கு கின்றன . பன்னிரு திருமுறைகளைச் சமய தீக்கை பெறாதவர்களும் பெண்களும் ஓதலாம் . திருமுறை கள் ஓதுவதற்கு வயதில் ஏற்றத் தாழ்வோ சாதி மத வேறுபாடோ கருதாமல் யாவரும் ஓதலாம் . வடமொழி வேதங்களால் அடைக்கப்பட்ட திருக் கோயில் கதவைத் திறக்கும் திறன் படைத்தது தமிழ் வேதம் ஆகிய திருமுறை பாடுபவர் உள்ளத்தையும் கேட்பவர் நெஞ் சத்தையும் உருக்க வல்லது . நெருப்பில் அழியாதது . ஆற்றுநீரை எதிர்த்துச் செல்ல வல்லது . இசைக்குள் எளிதில் அடங்காதது . கொடியவர்களும் கொலை காரர்களும் கூடத் திருமுறை ஓதி நல்லவராக மாறுவது திண்ணம் . சிவ சம்பந்தத்தைத் தருவது . திருமுறையில் அருமை பெருமைகளுக்கு அளவே இல்லை . 133