இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடியேன்" என ஓருலக ஒருமையை வலியுறுத்துகிறார். இறைவன் பெரும்பொருளாகிய அருட்செல்வத்தை வழங்குகிறார். யாவராயினும் வருக, முந்துங்கள் என அழைக்கும் அழைப்பு, வழிவழியாக வருவதாகும். திருவருட்பிரகாச வள்ளலாராகிய வடலூர் அடிகள் "அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் அரூயிர்க் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்றே எந்தை நின் அருட்புகழை இயம்பிடவேண்டும்.' என்று அனைத்துலகிலும் சிவன் புகழை பரப்பும் அருள் தருக என வேண்டுகிறார். 39 இத்தகைய நமது தொன்மைநெறி அன்புநெறி. அன்பே சிவம் என்பதை அறிவிப்பது எனவே நமது தமிழ் மரபினர் கடல் கடந்து கண்டங்கள் கடந்து சிவத்தைச் செந்தமிழைப் பேணி வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் முதன்மைக்குரியதும் பழமைச் சிறப்புடையதுமாகிய இலண்டனின் தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவத்தைப் பேணி வருகின்றனர். உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களுக்கு சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை வழங்க! சிவநெறி மரபு காக்க வருக! என அழைக்கின்றனர். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தத்தைப் பெற நினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் ஆனந்தத் தேன்சொரியும் அம்பலவாணரைத் திருமுறைத் தமிழால் போற்றலாம். நமது வாழ்வியல் நெறிகள் அனைத்தும் தமிழால் நடத்தலாம் அதுவே நமது மரபு. வருங்காலத் தலைமுறைக்கு வழங்கும் பெருநெறி என்பதை உள்ளுணர்வுடன் கொண்டு மாநாடுகளை நடத்துகின்றனர். இதுவே சிவநெறி மரபு. அதனை வரவேற்போம்! வளர்ப்போம்! அலகில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லச் சேக்கிழார் காட்டிய நெறியில் வளர்க்க வாரீர்! பிரித்தானிய சைவத்திருக்கோயில்களின் இணைப்பாக சைவ ஒன்றியத்தை அமைத்துள்ளனர். மேற்குலகில் சைவம் பற்றிய மாநாடுகள் பல நடத்தப்பெற்றன. கருவறையில் திருமுறை என்ற தலைப்பினை கருப்பொருளாகக் கொண்டு முதல் மாநாடு நடைபெற்றது. இளைய தலைமுறைக்கு நமது மரபும் வழிபாடும் என ஆய்ந்து குழந்தைகட்குத் திருமுறைப்பாடல்களின் வகுப்புகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வழிகாட்டி வருகிறது. வாழ்வியல் நெறிகளில் தமிழ் இடம்பெற வழிவகுத்துச் செயலுக்குக் கொண்டுவந்துள்ளனர். அருளியல் நெறியில் திருக்கோயில் வழிபாட்டுமுறைகளையும் அயல்நாடுகளில் உருவாக்கிய பெருமை பிரித்தானிய சைவ உலகத்திற்கு உரியதாகும். மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு சிவனந்தி அடிகள் வழிகாட்டுதலுடன் செந்தமிழ்ச் செம்மலாகிய சிவத்திரு சச்சிதானந்தம் தொடர்ந்து அனைவரையும் இணைத்து வருகிறார். இப்பணிகள் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்டுகிறது. சிவநெறியில் வழிவழியாக வரும் மரபுகளைக் காக்க வாரீர் என்ற கருப்பொருளை முதன்மைப் படுத்தி நடக்கும் மாநாடு, மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர்தமிழும் திருவாசகத் தேனும் அருளமுதப் பாடல்களும் உள்ளொளிக்கு உள்ளொளியாய் தமிழ் மரபு தழைக்க வழிகாட்டுவதாகுக. ''திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே" '"மேன்மைகொள் சைவநீதி வினங்குக உலகமெல்லாம்". வேண்டுந்தங்களன்பு 13 தங்களன்புள்ள Vாயலி (சாந்தலிங்க இராமசாமி அடிகளார்).
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடியேன் என ஓருலக ஒருமையை வலியுறுத்துகிறார் . இறைவன் பெரும்பொருளாகிய அருட்செல்வத்தை வழங்குகிறார் . யாவராயினும் வருக முந்துங்கள் என அழைக்கும் அழைப்பு வழிவழியாக வருவதாகும் . திருவருட்பிரகாச வள்ளலாராகிய வடலூர் அடிகள் அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் அரூயிர்க் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்றே எந்தை நின் அருட்புகழை இயம்பிடவேண்டும் . ' என்று அனைத்துலகிலும் சிவன் புகழை பரப்பும் அருள் தருக என வேண்டுகிறார் . 39 இத்தகைய நமது தொன்மைநெறி அன்புநெறி . அன்பே சிவம் என்பதை அறிவிப்பது எனவே நமது தமிழ் மரபினர் கடல் கடந்து கண்டங்கள் கடந்து சிவத்தைச் செந்தமிழைப் பேணி வருகின்றனர் . ஐரோப்பியக் கண்டத்தின் முதன்மைக்குரியதும் பழமைச் சிறப்புடையதுமாகிய இலண்டனின் தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவத்தைப் பேணி வருகின்றனர் . உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களுக்கு சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை வழங்க ! சிவநெறி மரபு காக்க வருக ! என அழைக்கின்றனர் . ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தத்தைப் பெற நினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் ஆனந்தத் தேன்சொரியும் அம்பலவாணரைத் திருமுறைத் தமிழால் போற்றலாம் . நமது வாழ்வியல் நெறிகள் அனைத்தும் தமிழால் நடத்தலாம் அதுவே நமது மரபு . வருங்காலத் தலைமுறைக்கு வழங்கும் பெருநெறி என்பதை உள்ளுணர்வுடன் கொண்டு மாநாடுகளை நடத்துகின்றனர் . இதுவே சிவநெறி மரபு . அதனை வரவேற்போம் ! வளர்ப்போம் ! அலகில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லச் சேக்கிழார் காட்டிய நெறியில் வளர்க்க வாரீர் ! பிரித்தானிய சைவத்திருக்கோயில்களின் இணைப்பாக சைவ ஒன்றியத்தை அமைத்துள்ளனர் . மேற்குலகில் சைவம் பற்றிய மாநாடுகள் பல நடத்தப்பெற்றன . கருவறையில் திருமுறை என்ற தலைப்பினை கருப்பொருளாகக் கொண்டு முதல் மாநாடு நடைபெற்றது . இளைய தலைமுறைக்கு நமது மரபும் வழிபாடும் என ஆய்ந்து குழந்தைகட்குத் திருமுறைப்பாடல்களின் வகுப்புகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வழிகாட்டி வருகிறது . வாழ்வியல் நெறிகளில் தமிழ் இடம்பெற வழிவகுத்துச் செயலுக்குக் கொண்டுவந்துள்ளனர் . அருளியல் நெறியில் திருக்கோயில் வழிபாட்டுமுறைகளையும் அயல்நாடுகளில் உருவாக்கிய பெருமை பிரித்தானிய சைவ உலகத்திற்கு உரியதாகும் . மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு சிவனந்தி அடிகள் வழிகாட்டுதலுடன் செந்தமிழ்ச் செம்மலாகிய சிவத்திரு சச்சிதானந்தம் தொடர்ந்து அனைவரையும் இணைத்து வருகிறார் . இப்பணிகள் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்டுகிறது . சிவநெறியில் வழிவழியாக வரும் மரபுகளைக் காக்க வாரீர் என்ற கருப்பொருளை முதன்மைப் படுத்தி நடக்கும் மாநாடு மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர்தமிழும் திருவாசகத் தேனும் அருளமுதப் பாடல்களும் உள்ளொளிக்கு உள்ளொளியாய் தமிழ் மரபு தழைக்க வழிகாட்டுவதாகுக . ' ' திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே ' மேன்மைகொள் சைவநீதி வினங்குக உலகமெல்லாம் . வேண்டுந்தங்களன்பு 13 தங்களன்புள்ள Vாயலி ( சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ) .