இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 "தேம்ஸ் நதி மீதூரும் சைவநீதி" ப.வை.ஜெயபாலன் இலண்டன் மேன்மைகொள் சைவநன்நீதி இன்று மேலை நாடெங்கணும் பரவி நன்று ஆலயம் பள்ளி நல் அறப்பணிகள் என்று ஆயிரம் சிறப்பொளிர் நிலைப்படிகள். அன்றாடம் ஆலயம் பலதோற்றம் இன்று ஐரோப்பா அடங்கலும் நிதம் ற்றும் கொண்டாட்டம் கொடி ஏற்றம் தேர் தீர்த்தம் கோயிற் சிறப்பில் சைவம் தமிழ் ஏற்றம். பிரித்தா னியாசைவப் பெருமன்றம் முதல் பிறந்தது அறுபத்து ஆறில் ஈங்கும் அதுமுதல் சைவத்தின் செறிவு நன்கும் ஆரம்பம் கண்டது இலண்டன் எங்கும். சபாபதிப்பிள்ளை பேர் சைவத் தொண்டர் - இங்கு ஸ்தாபித்தார் சைவநற் பெருமன்றை அயராத அவர்பணி கோயில் என்றும் ஆரம்பம் உயர்வாசற் குன்று அன்றும் ஊர் நகர்தோறும் சைவக் கோயில்கள் அவை உருவாக்கும் அறப்பணி செயற்பாடும் தாயக துயர்க் கென்று தாராளம் நிதி தருகின்ற சேவையும் கோயில் எங்கும். அந்நிய மண்ணில் எம் சந்ததிகள் - தமிழ் அருங்கலை கலாசார வழிமுறைகள் தம் நிலைக்கமைந்திட தாம் பயில பள்ளி தாம் அமைத்துள்ளன சில கோயில்கள். வாழ்வினில் சமயம் அமைந்திடவே எங்கள் வாழ்விடம் எங்கணும் திருக்கோயிலே ஆழ்கருத் துடன்உறும் சாத்திரங்கள் ஆண்டவன் மேல் தமிழ் தோத்திரங்கள். நிமலனின் நேசம் நெஞ்சணைய எம்முள் நிலை பெறும் நெறிமுறை நன்கமைய மலரவன் அடிதொழ மன ஒழுக்கம் மது மாது மண் ஆசை மனம் ஒறுக்கும். ஒன்றியமாய் கோயில் ஒன்றிணையின் பணி உருவாக்கும் பலவழி நன்றமையும் நற்திரி நாள்கோள் ஒன்றமையும் நிதம் நடக்கும் நன் மாநாடும் இன்னும் சிறக்கும். 72
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 தேம்ஸ் நதி மீதூரும் சைவநீதி ப.வை.ஜெயபாலன் இலண்டன் மேன்மைகொள் சைவநன்நீதி இன்று மேலை நாடெங்கணும் பரவி நன்று ஆலயம் பள்ளி நல் அறப்பணிகள் என்று ஆயிரம் சிறப்பொளிர் நிலைப்படிகள் . அன்றாடம் ஆலயம் பலதோற்றம் இன்று ஐரோப்பா அடங்கலும் நிதம் ற்றும் கொண்டாட்டம் கொடி ஏற்றம் தேர் தீர்த்தம் கோயிற் சிறப்பில் சைவம் தமிழ் ஏற்றம் . பிரித்தா னியாசைவப் பெருமன்றம் முதல் பிறந்தது அறுபத்து ஆறில் ஈங்கும் அதுமுதல் சைவத்தின் செறிவு நன்கும் ஆரம்பம் கண்டது இலண்டன் எங்கும் . சபாபதிப்பிள்ளை பேர் சைவத் தொண்டர் - இங்கு ஸ்தாபித்தார் சைவநற் பெருமன்றை அயராத அவர்பணி கோயில் என்றும் ஆரம்பம் உயர்வாசற் குன்று அன்றும் ஊர் நகர்தோறும் சைவக் கோயில்கள் அவை உருவாக்கும் அறப்பணி செயற்பாடும் தாயக துயர்க் கென்று தாராளம் நிதி தருகின்ற சேவையும் கோயில் எங்கும் . அந்நிய மண்ணில் எம் சந்ததிகள் - தமிழ் அருங்கலை கலாசார வழிமுறைகள் தம் நிலைக்கமைந்திட தாம் பயில பள்ளி தாம் அமைத்துள்ளன சில கோயில்கள் . வாழ்வினில் சமயம் அமைந்திடவே எங்கள் வாழ்விடம் எங்கணும் திருக்கோயிலே ஆழ்கருத் துடன்உறும் சாத்திரங்கள் ஆண்டவன் மேல் தமிழ் தோத்திரங்கள் . நிமலனின் நேசம் நெஞ்சணைய எம்முள் நிலை பெறும் நெறிமுறை நன்கமைய மலரவன் அடிதொழ மன ஒழுக்கம் மது மாது மண் ஆசை மனம் ஒறுக்கும் . ஒன்றியமாய் கோயில் ஒன்றிணையின் பணி உருவாக்கும் பலவழி நன்றமையும் நற்திரி நாள்கோள் ஒன்றமையும் நிதம் நடக்கும் நன் மாநாடும் இன்னும் சிறக்கும் . 72