இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 தேனை மிஞ்சும் தேவாரம் நீதியரசர் ச. மோகன், சென்னை, தமிழ்நாடு "போற்றி என்பார் புனிதன் அடி போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி போற்றி என்பார் மனித புனிதன் அடி போற்றி என் அன்புள் பொலியவைத் தேனே". திருமந்திரம். தேன் சுவையை மிஞ்சும் தேவாரப் பதிகங்கள் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான். திருமுறைகளின் அடிப்படையே 'அன்பே கட வுள்'. இறைவன் அன்பே வடிவானவன். அன்பு பேணு தல்தான் திருமுறையின் நெறி. பரம்பொருளை அடைய அன்பே வழி, திருமுறை ‘திருமுறை’ என்ற சொல், திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று. 'திரு' என்பது சிவம். 'சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்பது மணிவாசகர் திருவாக்கு. அவர் சிவத்தைத் 'திரு' என்றே குறிப்பிடு கிறார். 'திரு' என்ற சொல்லுக்கு உண்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்று பொருள்கள். சிவபரம் பொருளைச் சச்சிதானந்த வடிவமாகக் காட்டுகின்றன ஞான நூல்கள். சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் 'திரு' எனப்படும். 'சத்' என்பது சிவம். 'சித்' உமாதேவி.ஆனந்தம்' என்பது முருகன். எனவே உண்மை, அறிவு, இன்பம் இம்மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும். இப் பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை. ‘முறை’ என்ற சொல், 'நூல்' பொருளில் கந்தபுராணம் அருமையாகக் கூ றுகிறது. "இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவர வேன்என முயல்வது ஒக்குமால்" என்பது கந்தபுராண அவையடக்கப் பாடல் பகுதி. தேவாரம் இத் திருமுறைகளுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைத் 'தேவாரம்' என்று அழைக்கிறோம். சங்க காலத்திற்குப் பிற்பட்ட நாயன்மார் காலத்தே. பக்தி என்னும் பெருவெள்ளம் இத் தமிழகமெங்கணும் பாய்ந்தது. இன்பத் தமிழை, தெய்வீக வீறுடைய நற்றமிழாக. அறமலி செந்தமிழாக தெய்வமாத் தமிழாக மாற்றி, 97 மூவர் தமிழ், தமிழகமெங்கணும், திருக்கோவில் களிலும், திருவீதிகளிலும் முழங்கிற்று; இதனால் சமண, பெளத்த சமயங்களின் செல்வாக்கு மங்கிற்று. தமிழ் மக்கள் வாழ்வில் சூழ்ந்திருந்த இருள் நீங்கி, இவர்கள் ஏற்றிவைத்த ஒளி படர்ந்தது. அந்த ஒளியின் நெறியில், தமிழ் மாந்தர் வாழ்வு தழைத்தது; செழித்தது; சிவநெறி பேணும் அன்புமனம் பெருகிற்று. இதுவே, தெய்வத்திற்கு மாலை போன்றது தேவார ஒளிநெறி தேவாரத் திருநெறி தேவாரப் பெருநெறி தேவார ஒரு நெறி. தேவ ஆரம்' என்று இதனைப் பிரிக்கலாம். தெய்வத்திற்கு மாலை போன்றது. மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல், சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை. 'தே - வாரம்' எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளைவிப்பது எனப் பொருள்படும். வாரம் அன்பு. "வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே" என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. மேலும், வாரம் உரிமை, இறைவனுக்கும் உயிர் கட்கும் உள்ள தொடர்பை - உரிமையைத் தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்று பொருள்படும். தேவாரப் பாடல்களைப் பாடப் பாட நா மணக்கி றது. சிந்தை குளிர்கின்றது; இசையும் நடனமும் ஒவ் வொரு பாடலிலும் எழுந்து விண்ணையும், மண்ணை யும் தழுவுகின்றன. அவர்கள் பாடல்களை எவ்வாறு பாடினார்கள்? "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு 9 ய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" இவ்வாறு மனிதனையும் நல்வழிப்படுத்து வதற்கு, மனம் உருகி, கண்களில் நீர் வடிய நமச்சிவாய மந்திரத் தைத் துணைகொள்ளல் வேண்டும்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 தேனை மிஞ்சும் தேவாரம் நீதியரசர் . மோகன் சென்னை தமிழ்நாடு போற்றி என்பார் புனிதன் அடி போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி போற்றி என்பார் மனித புனிதன் அடி போற்றி என் அன்புள் பொலியவைத் தேனே . திருமந்திரம் . தேன் சுவையை மிஞ்சும் தேவாரப் பதிகங்கள் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான் . திருமுறைகளின் அடிப்படையே ' அன்பே கட வுள் ' . இறைவன் அன்பே வடிவானவன் . அன்பு பேணு தல்தான் திருமுறையின் நெறி . பரம்பொருளை அடைய அன்பே வழி திருமுறை திருமுறை என்ற சொல் திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று . ' திரு ' என்பது சிவம் . ' சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் ' என்பது மணிவாசகர் திருவாக்கு . அவர் சிவத்தைத் ' திரு ' என்றே குறிப்பிடு கிறார் . ' திரு ' என்ற சொல்லுக்கு உண்மை அறிவு ஆனந்தம் என்ற மூன்று பொருள்கள் . சிவபரம் பொருளைச் சச்சிதானந்த வடிவமாகக் காட்டுகின்றன ஞான நூல்கள் . சத் - உள்ளது சித் - அறிவு ஆனந்தம் - இன்பம் . இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் ' திரு ' எனப்படும் . ' சத் ' என்பது சிவம் . ' சித் ' உமாதேவி.ஆனந்தம் ' என்பது முருகன் . எனவே உண்மை அறிவு இன்பம் இம்மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும் . இப் பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை . முறை என்ற சொல் ' நூல் ' பொருளில் கந்தபுராணம் அருமையாகக் கூ றுகிறது . இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவர வேன்என முயல்வது ஒக்குமால் என்பது கந்தபுராண அவையடக்கப் பாடல் பகுதி . தேவாரம் இத் திருமுறைகளுள் சம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடல்களைத் ' தேவாரம் ' என்று அழைக்கிறோம் . சங்க காலத்திற்குப் பிற்பட்ட நாயன்மார் காலத்தே . பக்தி என்னும் பெருவெள்ளம் இத் தமிழகமெங்கணும் பாய்ந்தது . இன்பத் தமிழை தெய்வீக வீறுடைய நற்றமிழாக . அறமலி செந்தமிழாக தெய்வமாத் தமிழாக மாற்றி 97 மூவர் தமிழ் தமிழகமெங்கணும் திருக்கோவில் களிலும் திருவீதிகளிலும் முழங்கிற்று ; இதனால் சமண பெளத்த சமயங்களின் செல்வாக்கு மங்கிற்று . தமிழ் மக்கள் வாழ்வில் சூழ்ந்திருந்த இருள் நீங்கி இவர்கள் ஏற்றிவைத்த ஒளி படர்ந்தது . அந்த ஒளியின் நெறியில் தமிழ் மாந்தர் வாழ்வு தழைத்தது ; செழித்தது ; சிவநெறி பேணும் அன்புமனம் பெருகிற்று . இதுவே தெய்வத்திற்கு மாலை போன்றது தேவார ஒளிநெறி தேவாரத் திருநெறி தேவாரப் பெருநெறி தேவார ஒரு நெறி . தேவ ஆரம் ' என்று இதனைப் பிரிக்கலாம் . தெய்வத்திற்கு மாலை போன்றது . மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல் சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை . ' தே - வாரம் ' எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளைவிப்பது எனப் பொருள்படும் . வாரம் அன்பு . வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு . மேலும் வாரம் உரிமை இறைவனுக்கும் உயிர் கட்கும் உள்ள தொடர்பை - உரிமையைத் தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்று பொருள்படும் . தேவாரப் பாடல்களைப் பாடப் பாட நா மணக்கி றது . சிந்தை குளிர்கின்றது ; இசையும் நடனமும் ஒவ் வொரு பாடலிலும் எழுந்து விண்ணையும் மண்ணை யும் தழுவுகின்றன . அவர்கள் பாடல்களை எவ்வாறு பாடினார்கள் ? காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு 9 ய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே இவ்வாறு மனிதனையும் நல்வழிப்படுத்து வதற்கு மனம் உருகி கண்களில் நீர் வடிய நமச்சிவாய மந்திரத் தைத் துணைகொள்ளல் வேண்டும் .