சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் ''மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல் விழாப் பொலிவு கண்டார் நல் உண்மையாம் எனில் உலகர்முன் வருகென உரைப்பார்'' என்ற சேக்கிழார் திருவாக்கின் மூலம் "மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் ஒன்றே மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்" என நிலைநாட்டப்பெற்ற ஒன்றைத் தென் தமிழ கத்தில், விக்கிரமசிங்கபுரத்தில், முக்களாலிங்கர் வாழ்க்கையில், பதினெட்டாம் நூற்றாண்டில், நாம் காண முடிகிறது. சிவனடிய வர்கட்கு அமுதளித்தல் என்ற அருந்தவத்துப் பெரும்பேற்றின் அருமையை, அதனால் விளையும் பயனை, நற்பேற்றின் வளமை யைச் சிவஞான முனிவர் தம் வாழ்வியல் வெற்றி என நம்மால் அனுபவித்துணர முடிகிறது. உலகமதில் வாழ்கின்ற உயிரனைத்தினுக்கும் உடல் முதலியவைகளைத் தந்து புரக்கும் உயர்சிவம் ஒன்றேயாதல் போல, தமிழும் சைவமும் எனநின்ற இரண்டோடும் தொடர்புடை யார் யாவரேயாயினும், எந்நிலத்தவரேயாயினும், எந்நூற்றாண் டினரேயாயினும் அவரெலாம் சிவஞான முனிவர் தம் மாணாக்கரே எனக் கொள்ளுமளவிற்கு உலகிறந்த, காலமிறந்த குருமுதன்மை ஏற்று நின்ற மாதவச் சிவஞான சுவாமிகளின் வரலாற்றுப் பின்னணியினை சற்றே உளங்கொளல் வேண்டும். இந்திய நாடே அடிமைத் தளையில் அவதியுற்றிருந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழும் சைவமும் தாழ்மையுற் றிருந்ததை அறியாதார் யார்? வேற்றுமொழிக் கல்வியே விரும்பப்பெற்று, அடிமைத் திறம் போற்றுதற்குரிய ஆரவாரக் கல்வியே போதும் என்ற நிலையில் தமிழர் இருந்த நிலை. அடிமை என்பது வரலாறு தந்த வாய்மையேயாயினும், தமிழுக்கும் சைவத்துக்கும் உரிய தன்னேரில்லா மரபு நெறி உண்டு என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். தொல்காப்பியமே முதலாக வரும் இலக்கண இலக்கிய சமுதாய வாழ்வியல் மரபுகளும், சங்க கால இலக்கியங்கள் அமைத்துத் தந்த தமிழக மக்களின் வாழ்வியல் மரபுகளும் அவை களை ஒட்டிய நிலையில் இரட்டைக் காப்பியங்கள் அமைத்துத்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் ' ' மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல் விழாப் பொலிவு கண்டார் நல் உண்மையாம் எனில் உலகர்முன் வருகென உரைப்பார் ' ' என்ற சேக்கிழார் திருவாக்கின் மூலம் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் ஒன்றே மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் என நிலைநாட்டப்பெற்ற ஒன்றைத் தென் தமிழ கத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் முக்களாலிங்கர் வாழ்க்கையில் பதினெட்டாம் நூற்றாண்டில் நாம் காண முடிகிறது . சிவனடிய வர்கட்கு அமுதளித்தல் என்ற அருந்தவத்துப் பெரும்பேற்றின் அருமையை அதனால் விளையும் பயனை நற்பேற்றின் வளமை யைச் சிவஞான முனிவர் தம் வாழ்வியல் வெற்றி என நம்மால் அனுபவித்துணர முடிகிறது . உலகமதில் வாழ்கின்ற உயிரனைத்தினுக்கும் உடல் முதலியவைகளைத் தந்து புரக்கும் உயர்சிவம் ஒன்றேயாதல் போல தமிழும் சைவமும் எனநின்ற இரண்டோடும் தொடர்புடை யார் யாவரேயாயினும் எந்நிலத்தவரேயாயினும் எந்நூற்றாண் டினரேயாயினும் அவரெலாம் சிவஞான முனிவர் தம் மாணாக்கரே எனக் கொள்ளுமளவிற்கு உலகிறந்த காலமிறந்த குருமுதன்மை ஏற்று நின்ற மாதவச் சிவஞான சுவாமிகளின் வரலாற்றுப் பின்னணியினை சற்றே உளங்கொளல் வேண்டும் . இந்திய நாடே அடிமைத் தளையில் அவதியுற்றிருந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழும் சைவமும் தாழ்மையுற் றிருந்ததை அறியாதார் யார் ? வேற்றுமொழிக் கல்வியே விரும்பப்பெற்று அடிமைத் திறம் போற்றுதற்குரிய ஆரவாரக் கல்வியே போதும் என்ற நிலையில் தமிழர் இருந்த நிலை . அடிமை என்பது வரலாறு தந்த வாய்மையேயாயினும் தமிழுக்கும் சைவத்துக்கும் உரிய தன்னேரில்லா மரபு நெறி உண்டு என்பதையும் நாம் உணர்தல் வேண்டும் . தொல்காப்பியமே முதலாக வரும் இலக்கண இலக்கிய சமுதாய வாழ்வியல் மரபுகளும் சங்க கால இலக்கியங்கள் அமைத்துத் தந்த தமிழக மக்களின் வாழ்வியல் மரபுகளும் அவை களை ஒட்டிய நிலையில் இரட்டைக் காப்பியங்கள் அமைத்துத்