சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

2. முனிவர் காட்டிய பொதுமை அளவை முன்னுரை மக்கள் நடைமுறை வாழ்வுக்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றும் 'கொள்கை' என நிற்கும் வலிமை பெறாது. தத்துவம் என்றால் பொருளின் தன்மை. எனவே, மெய்ப்பொருள் என்றாலும், தத்துவம் என்றாலும் அது வாழ்வியல் நெறியே. அவ்வகையில் வாழ்வியல் நெறிகளின் தொகுப்பே சைவசித்தாந்தம் என்ற பெயரைப் பெறுகிறது. சங்க இலக்கியங்கள் மேல் கணக்கு, கீழ்க்கணக்கு எனப் பிரிக்கப் பெற்றன. மேல்கணக்கும் பதினெட்டு; கீழ்க்கணக்கும் பதினெட்டே. மேல்கணக்கு என்பன வாழ்வியல் நிகழ்வுகள்; கீழ்க்கணக்குகள் என்பன வாழ்வியற் கோட்பாடுகள். அவ்வாறே சிவஞானபோதம் என்பது வாழ்வியல் நெறியை வளமாக்கித் தெரிவிக்கும் கொள்கை நூல். தனி மனிதனை நான்கு பொருள்களின் கூட்டு எனக் காண்பது சமுதாயக் கோட்பாடு. உடல், மனம்,உயிர், சமுதாயம் என்ற நால்வகைப் பக்கங்களால் இணைக்கப் பெற்றவனே மனிதன் என்பது அதன் விளக்கம். அவ்வாறே உடல், மனம், உயிர், உலகம் என நான்காய் நின்று செயல்படும் தனிமனிதன் இன்னும் எவ்வெப் பொருள்களோடு தொடர்பு கொண்டுள்ளான் என அறிவதும், அவன் வாழ்வியல் அடிப்படை என்ன என்று ஆய்வதும் அவனுடைய கடமைகளே. அத்தகைய ஆய்வினை முழுமை யுறச் செய்தற்கு உறுதுணையாக அமையும் வாழ்வியல் விளக்க நூலே சிவஞானபோதம். அவ்வகையில் அமைந்த சிவஞான போத நூலி அமைப்பு முறையை எடுத்துக் காட்டும் சிறப்புப்பாயிரம்,
2. முனிவர் காட்டிய பொதுமை அளவை முன்னுரை மக்கள் நடைமுறை வாழ்வுக்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றும் ' கொள்கை ' என நிற்கும் வலிமை பெறாது . தத்துவம் என்றால் பொருளின் தன்மை . எனவே மெய்ப்பொருள் என்றாலும் தத்துவம் என்றாலும் அது வாழ்வியல் நெறியே . அவ்வகையில் வாழ்வியல் நெறிகளின் தொகுப்பே சைவசித்தாந்தம் என்ற பெயரைப் பெறுகிறது . சங்க இலக்கியங்கள் மேல் கணக்கு கீழ்க்கணக்கு எனப் பிரிக்கப் பெற்றன . மேல்கணக்கும் பதினெட்டு ; கீழ்க்கணக்கும் பதினெட்டே . மேல்கணக்கு என்பன வாழ்வியல் நிகழ்வுகள் ; கீழ்க்கணக்குகள் என்பன வாழ்வியற் கோட்பாடுகள் . அவ்வாறே சிவஞானபோதம் என்பது வாழ்வியல் நெறியை வளமாக்கித் தெரிவிக்கும் கொள்கை நூல் . தனி மனிதனை நான்கு பொருள்களின் கூட்டு எனக் காண்பது சமுதாயக் கோட்பாடு . உடல் மனம் உயிர் சமுதாயம் என்ற நால்வகைப் பக்கங்களால் இணைக்கப் பெற்றவனே மனிதன் என்பது அதன் விளக்கம் . அவ்வாறே உடல் மனம் உயிர் உலகம் என நான்காய் நின்று செயல்படும் தனிமனிதன் இன்னும் எவ்வெப் பொருள்களோடு தொடர்பு கொண்டுள்ளான் என அறிவதும் அவன் வாழ்வியல் அடிப்படை என்ன என்று ஆய்வதும் அவனுடைய கடமைகளே . அத்தகைய ஆய்வினை முழுமை யுறச் செய்தற்கு உறுதுணையாக அமையும் வாழ்வியல் விளக்க நூலே சிவஞானபோதம் . அவ்வகையில் அமைந்த சிவஞான போத நூலி அமைப்பு முறையை எடுத்துக் காட்டும் சிறப்புப்பாயிரம்